♥ நீ -117 ♥

நிலாவினியைப் பற்றின தகவல்கள் அவ்வப்போது என் செவிகளுக்கு வந்து கொண்டேதான் இருந்தது.
இப்போது அவள் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள் என்பது உட்பட..!
அடுத்ததாக.. நித்யா.. கருத்தரித்திருக்கிறாள்..!!
முன்பு ஒரு முறை அவளே என்னிடம் சொன்னாள்..!
”உங்க பிரெண்டுக்கு என் மேல.. பயங்கர கோபம்..”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”ஏன்.. என்ன கோபம்..?”

”குழந்தை.. விசயத்துலதான்..! அதனாலதான்.. அடிக்கடி எங்களுக்குள்ள.. ஃபைட் நடக்குது..” என்று அவள் சிரித்துக் கொண்டு சொன்னாள்.
நான் அவள் மனம் கோணக்கூடாது என்பதற்காக..
”குழந்தை உண்டாகலேன்னா அதுக்கு யாரு பொருப்பு..?” என்றேன்.

”நான்தான் பொருப்பு..” என்று சிரித்தாள்.

”நீயா..?”

”ம்..ம்ம்..”

” அதெப்படி.. உன்னை மட்டும் சொல்ல முடியும்.. ஹாஸ்பிடல் போனீங்களா..?”

”ஹாஸ்பிடல் போகலே… பட்.. நான்தான் இப்ப பேபி பெத்துக்க வேண்டாம்னு தள்ளிப் போட்றுக்கேன்..” என்றாள்.

”ஓ…!” என நான் திகைப்பை வெளியிட..

”யா..!” என்று சிரித்தாள் ”உடனே பேபி பெத்துக்க.. இப்ப எனக்கு இஷ்டமில்ல..! ஒரு சில வருசங்கள் போகனும்..!”

”ஏன்.. நித்தி..?”

”குழந்தை பெத்துகிட்டா.. அதோட பெண்களோட ஜாலி லைஃப்பே ஃபினிஷ்.! பாய்ண்ட் நம்பர் ஒன்… பெண்களோட பியூட்டி டல்லாகிரும்..! நம்பர் டூ… ஹஸ்பெண்டுக்கு.. வொய்ஃப் மேல இருக்கற.. செக்ஸுவல் அஃபெக்ஷன் கொறஞ்சிரும்..! நம்பர் த்ரீ.. இதுதான் முக்கியமான பாய்ண்ட்.. குழந்தை கவனிப்பு.. பராமரிப்பு.. குடும்பம்னு இந்த நாலு சுவத்துக்குள்ளயே எங்க லைஃப் முடிஞ்சு போயிரும்..! அதுக்கப்பறம் எங்களுக்கும் ஒரு பிரைவஸி லைஃப்… ஐ மீன்.. ஜாலி.. என்ஜாய்மெண்ட்னு எல்லாம் இருக்குனு நெனைச்சுக்கூட பாக்க முடியாத அளவுக்கு.. சுருங்கிப் போய்ரும்.. ஸோ…”

” ஸோ….?”

” நான் இப்பால பிரெக்னென்ட் ஆக விரும்பல..!” என்றாள்.

ஆனால் இப்போது அவள் கருத்தரித்திருப்பது.. கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.
மீண்டும் ஒரு வார இடைவெளியில் நித்யாவை அவளது அம்மா வீட்டில் பார்த்தபோது கேட்டேன்.
”நா.. ஒன்னு கேள்விப்பட்டேனே..?”

”என்னது..?”

” நீ.. கன்சீவா இருக்கேனு..?”

”யா..!” அவள் முகத்தில் லேசான வெட்கம் படர்ந்தது.

”வாழ்த்துக்கள்..”

”தேங்க் யூ.. பிரதர்..”

”எத்தனை நாள்..?”

” நாலு.. மாசம்..”

”கேப் விடறதா.. சொன்ன மாதிரி இருந்துச்சு..?” என நான் தாழ்வான குரலில் கேட்க…

”விட்டவரை போதும்.. இட்ஸ் எ ரைட் டைம்..”என்று கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள்.

”ம்..ம்ம்..! குட்..! டேக் கேர்..!!” என்று அவள் கன்னத்தில் தட்டி விட்டு.. வந்தேன்..!!

அன்று இரவு.. நாம் இருவரும் சாப்பிடும் போது நீ கேட்டாய்.
”ஏங்க.. ஒரு மாதிரி இருக்கீங்க..?”

”இல்லடி..” என்றேன்.

”உங்க மூஞ்சியே செரியில்ல.. என்னமோ மாதிரி இருக்கு..” என்று என் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்தாய்.

”அப்படியா.. சொல்ற..?” என்று முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டேன்.

” ஆமாங்க…”என்று தலையாட்டினாய்.

”என் மூஞ்சி இருக்கறதே அப்படித்தான்..விடுடி..” என்றேன்.

”போங்க.. டெய்லி பாக்கற எனக்கு தெரியாதுங்களா..?” என்றாய்.

”சரி.. இருந்துட்டு போகட்டும் விடு..” என்றேன்.

சாப்பிட்டு.. நான் படுக்கையில் சாய்ந்தேன். நீயும் விளக்கணைத்துவிட்டு வந்து படுக்கையில்.. என் பக்கத்தில் படுத்தாய். என் நெஞ்சில் முகம் தாங்கி.. என் கன்னத்தை தடவினாய்.
நான் உன் தலையைத் தடவியபடி உன்னிடம் கேட்டேன்.
”தாமரை…”

”என்னங்க…?”

”நீ.. எப்படீ.. மாசமாவ..?”

நீ சட்டென முகம் நிமிர்ந்து.. என்னைப் பார்த்து..
”ஏங்க..?” என்று கேட்டாய்.

”தோணுச்சு..!” என்க..

”இந்த மாசம் நான் வீட்டுக்கு தூரமே ஆகலீங்க…” என்றாய்.

”அப்படியா..?”

”ஆமாங்க..”

”எத்தனை நாள்..?”

”மூணு வாரம் ஆகுதுங்க..”

”இத ஏன்டி.. நானா கேட்டப்பறம் சொல்ற..?”

”உறுதியா தெரியாம எப்படிங்க சொல்றது..?”

”செக் பண்ணிட்டா போச்சு..”

”சரிங்க..” என்ற நீ.. என் நெஞ்சில் மோவாயை வைத்து என்னைப் பார்த்துக் கொண்டு கேட்டாய் ”ஏங்க இப்படி கேட்டீங்க…?”

”என்னமோ… தோணுச்சுடி…அதான் கேட்டேன்..”

”இன்னும் ஒரு வாரம் பொருத்து பாத்துட்டு.. அப்றம் உங்ககிட்ட சொல்லிக்கலாம்னு இருந்தங்க..!”

”ம்.. சரி..! பாத்துக்கலாம் விடு..!” என்று உன் கூந்தலைத் தடவியவாறு சொன்னேன் ”நித்யா மாசமா இருக்காளா..! அதான் என்னமோ.. அவள பாத்ததும்.. எனக்கு ஒரு மாதிரி கில்ட்டியா.. தோணுச்சு..”

”அப்படின்னாங்க…?” என்றாய்.

”எப்படி..?”

”என்னமோ சொன்னீங்களே.. கிலிட்டினு…?”

”ஓ..! கில்ட்டியா..? ஒரு மாதிரி இதுடி.. நம்மளுக்கு இன்னும் ஆகலையேங்கற மாதிரி..” என்று நான் சொல்ல..
மிகவும் நெகிழ்ந்த குரலில் கேட்டாய்.
”ஐயோ.. கவலை படறீங்களா..?”

”ம்..ம்ம்..! அப்படித்தான்.. நெனைக்கறேன்..!” என்றேன்.

”ஐயோ. .கவலையே படாதிங்க.. சீக்கிரம் பெத்து தரேன்..!!” என்று முத்தம் கொடுத்தாய்.

” தாமரை…” உன்னை என் நெஞ்சில் இருக்கி அணைத்தேன்.

”என்னங்க..?”

”நான் எனக்காக மட்டும் கவலைப்படலடி..”

” அப்பறங்க…?”

” நீயும் ஒரு தாயாகனும்.! உனக்கும் ஒரு குடும்பம் ஆகனும்..!”

”இப்ப.. நான் குடும்பத்தோடதானுங்களே இருக்கேன்..”

”இதுல நாம ரெண்டு பேர் மட்டும்தான்டி இப்ப இருக்கோம்..? அதுலயும் நான் இப்ப சந்தோமான மன நிலைல இல்ல..! என்னை பாத்து நீயும் சந்தோசமா இல்ல..”

”அப்படி இல்லீங்க..! நான் சந்தோசமாத்தாங்க இருக்கேன். நீங்க மனசுல எதையும் நெனச்சுக்காதிங்க..!”

”சரி..! அவ வந்தாளா..? மறுபடி உன்னை பாக்க..?” என்று நான் கேட்டதும் நீ லேலாக தயங்கினாய்.

”சொன்னா.. கோபப்படக்கூடாதுங்க..” என்ற உன் குரலில் மெலிதான ஒரு நடுக்கம் இருந்தது.

” அவ வர்றானு தெரியுது..? வீட்டுக்கா…கடைக்கா..?” உன் பயத்தை நான் பெரிது பண்ணிக்கொள்ளாமல் கேட்டேன்.

”கடைக்குத்தாங்க..” என்றாய்.

”என்ன சொல்றா..?”

” அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதுங்க.. கொஞ்ச நேரம் பாத்து.. பேசிட்டு போகுங்க..!”

” இத.. சொன்னியா..?”

”எதைங்க…?”

” உனக்கு நாள் தள்ளிப் போயிருக்கறத..?”

”இல்லீங்க..! உங்ககிட்ட சொல்லாம.. நான் எப்படிங்க..?” என்றாய்.

அடுத்த நாள் யூரின் டெஸ்ட் செய்தபோது பாசிடிவ் காட்டியது.
நீ மகிழ்ச்சியடைந்தாய்.
ஆனால் என்னால் ஏனோ அந்த மகிழ்ச்சியை உணர முடியவில்லை.
உடனே நிலாவினியின் நினைவுதான் வந்தது. இதற்காகத்தானே அவள் ஆசைப்பட்டாள்..?
என் அணைப்பில் நீ இருந்த போது
”தாமரை..” என்றேன்.

”என்னங்க..?” என் மார்பைத் தடவினாய்

”அவகிட்ட சொல்லிரு..”

”எதைங்க…?”

” நீ கர்ப்பமா இருக்கறத..” என்றதும் சட்டென முகம் தூக்கி என்னைப் பார்த்தாய்.

”சொல்லிர்றதுங்களா..?”

”ம்..ம்ம்.. சொல்லிரு..” என்று கண்களை மூடிக்கொண்டேன்.

இந்த விசயம் கேள்விப்பட்ட நிலாவினியும் அடிக்கடி வீட்டுக்கு வந்து போகத் தொடங்கினாள்..!

என் பெரியம்மாவிடம் நீ கருத்தரித்திருப்பதைச் சொன்னேன். அவள் சநதோசம்தான் பட்டாள்.

அக்கா கேட்டாள் ”ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனியா..?”

” இல்லே.. போகனும்..” என்றேன்.

”சரி.. என்ன முடிவுல இருக்க..?” என்று என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கேட்டாள்.

”முடிவா..? என்ன முடிவு..?”

”நிலா விசயத்துல..?”

நான் நிதானமாகவே சொன்னேன்.
”எந்த முடிவும் பண்ணல..”

”உன் வீட்டுக்கு வந்து போறா இல்ல.?”

”ம்.. ம்ம்..”

”அவகூட பேசறியா..?”

” ம்..ம்ம்..!”

” எப்படி பேசிக்குவ.?”

”எப்படினா..?”

” நல்லா பேசிக்கறீங்களா.. இல்ல கடன்காரன் மாதிரி..?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

அவளை நான் முறைத்தேன்.

அவள் சிரித்து ”ரெண்டு நாள் முன்னாலகூட உன் மாமியார் இங்க வந்திருந்தாங்க..” என்றாள்.

”எதுக்கு..?”

”நிலா விசயமா பேச…”

” ஓ.. என்னவாம்..?”

”அவளோட பியூச்சர் பத்தி பேசினாங்க…”

நான் பேசவில்லை.

”ஒரு பொண்ண பெத்த யாராலயும் கவலைப்படாம இருக்க முடியாது..! அவங்க ரொம்ப கவலைபடறாங்க..” என்றாள்.

நான் மௌனம் காக்க… என் தோளில் கை வைத்தாள்.
”இப்பத்தான் அவ மேல இருந்த கோபமெல்லாம் கொறைஞ்சிருச்சே.. அப்றம் என்ன..? அவள உன்கூடவே வெச்சுக்க வேண்டியதுதான..?”

”ஏய்.. என் கோபம் கொறைஞ்சுருச்சுனு யாரு சொன்னது உனக்கு..?”என்று கடுப்புடன் கேட்டேன்.

”என்னடா.. அவகூட பேசறதான..?”

”பேசினா… கோபமில்லேன்னு அர்த்தமா..?”

”எத்தனை நாளைக்கு இப்படி புடிவாதமா இருக்கப் போற..?” என்றாள்.

நான் அமைதியாகி விட்டேன்.
ஆனால் நிலாவினியை அழைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி நீண்ட நேரம் அறிவுரை வழங்கினாள் அக்கா.
நான் அவள் வீட்டில் இருந்து கிளம்பிய போது… நிலாவினியை மீண்டும் என்னுடன் இருக்க வைத்து விடலாம் என்கிற எண்ணம்.. என் மனதில் மேலோங்கியிருந்தது…!!

-சொல்லுவேன்…..!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments