அன்புள்ள ராட்சசி – பகுதி 56
மெலிதான புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக் அமைதியானான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் எதையோ நினைத்துக்கொண்டு புருவத்தை நெறித்தார். ஒரு திடீர் யோசனை தோன்றியவராய் அசோக்கிடம் திரும்பி சொன்னார்.
“அ..அசோக்.. நான் ஒன்னு சொல்லவா..??”
“என்ன ஸார்..??”
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“உன் ஆள் பத்தி ரெட்ஹில்ஸ் போலீஸ்ட்ட சொல்லலாமா..??” ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கும்போதே, அசோக்கின் உடலில் சுரீர் என்றொரு மின்சாரம் பாய்ந்தது.
“மீ..மீரா பத்தியா..??”
“ம்ம்..!!”
“எ..என்ன சொல்லலாம்னு சொல்றீங்க..??”
“அதான்டா.. இந்த விஜயசாரதி உன் ஆளை லவ் பண்ற மாதிரி நடிச்சது.. அவளை அனுபவிச்சுட்டு அப்புறம் ஏமாத்தினது.. அதனால ஆம்பளைங்கன்னாலே உன் ஆளுக்கு ஒரு வெறுப்பு இருந்தது..” ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக்கொண்டு போக, அசோக் இடையில் புகுந்து அவரை தடுத்தான்.
“ஹையோ ஸார்.. அ..அதுலாம் ஜஸ்ட் என்னோட அஸம்ப்ஷன்தான..?? உ..உண்மையா இருக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே..??”
“ஆமான்டா.. உன்னோட அஸம்ப்ஷன்தான்..!! அதைத்தான் இவங்கட்ட சொல்லலாம்னு சொல்றேன்..!!”
“அதை எதுக்கு இவங்கட்ட..??”
“புரியலையா..?? இந்த கொலையை பண்றதுக்கு உன் ஆளுக்கு ஸ்ட்ராங் மோட்டிவ் இருக்குன்னு இவங்கட்ட சொல்லலாம்.. ஐ மீன்.. அவங்க நம்புற மாதிரி பொய் சொல்லலாம்..!!”
“அ..அதனால என்ன யூஸ்..??”
“ரெட்டை கொலைடா..!! அதுல ஒருத்தன், சென்னைலயே முக்கியமான பிக் ஷாட்டோட பையன்..!! இன்வெஸ்டிகேஷன் ரொம்ப ரொம்ப சீரியஸா இருக்கும்..!! உன் ஆளுக்கு மோட்டிவ் இருக்குன்னு மட்டும் இவங்க நம்பிட்டாங்கன்னு வச்சுக்கோ.. சும்மா விடமாட்டாங்க.. எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடுவாங்க..!!”
“ஓ..!!”
“அவளை கண்டுபிடிச்சுடுறாங்கன்னு வச்சுக்கோ.. அப்புறம் அவகிட்ட என்கொய்ரி பண்றப்போ.. அவளுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தம் இல்லன்னு இவங்களுக்கே தெரிஞ்சிடும்.. விட்டுடுவாங்க..!! அப்புறம் என்ன.. இவங்க மூலமா உனக்கு உன் ஆளு கெடைச்சுடுவா.. எல்லாம் சுபம்..!! சிம்பிளா சொல்லப்போனா.. இந்த மர்டர் சம்பந்தமான இன்வெஸ்டிகேஷனை.. உன் ஆளை தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்றேன்.. இப்போ புரியுதா..??”
“புரியுது ஸார்.. ஆ..ஆனா..”
“என்ன ஆனா..??”
“அ..அந்த மாதிரி பண்ணுனா.. மீரா பத்தின விஷயம் ந்யூஸ்பேப்பர்ல-லாம் வரும்ல..??” அசோக் கேட்க, ஸ்ரீனிவாச பிரசாத் நெற்றியை சுருக்கினார்.
“ஆ..ஆமாம்..!!”
“எ..எல்லாம் என்னோட அஸம்ப்ஷன்தான்.. இருந்தாலும்.. ஒ..ஒருவேளை.. ஒருவேளை அது உண்மையா இருந்தா.. அவ வாழ்க்கைல நடந்த அந்த அசிங்கம்.. அப்புறம் ஊருக்கே தெரிஞ்சு போயிடும்.. இல்ல..??”
“ம்ம்..!!” அசோக் எங்கே வருகிறான் என்று ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு இப்போது தெளிவாக புரிந்தது.
“வேணாம் ஸார்.. எனக்கு அதுல விருப்பம் இல்ல..!!”
“இ..இல்லடா.. கொஞ்சம் யோசி.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு இது ஒரு..”
“அவளை கண்டுபிடிக்கிறது எனக்கு முக்கியந்தான் ஸார்.. ஆனா அதை விட.. அவளுக்கு எந்த களங்கமும் வராம பாத்துக்குறது ரொம்ப ரொம்ப முக்கியம்..!! அவளை என் உயிரைவிட அதிகமா நேசிக்கிறேன்.. என்மூலமா அவளுக்கு ஒரு கெடுதல் நடந்துச்சுனா.. சத்தியமா அதை என்னால தாங்கிக்கவே முடியாது ஸார்..!! அவ எனக்கு கெடைக்காட்டா கூட பரவால.. இந்த மாதிரி ஊருக்கே அந்த விஷயம் தெரிஞ்சு, அவ அசிங்கப்பட கூடாது..!! ப்ளீஸ் ஸார்.. தயவு செஞ்சு மீரா பத்தி எந்த விஷயமும் இவங்கட்ட சொல்லிராதிங்க.. நான் சொன்னதெல்லாம் உங்க மனசோடவே இருக்கட்டும்.. ப்ளீஸ் ஸார்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. ப்ளீஸ்..!!”
அழுதுவிடுகிற குரலில் படபடவென அசோக் கெஞ்சலாக சொல்ல, ஸ்ரீனிவாச பிரசாத் அவனையே திகைப்பாக பார்த்தார். அந்தப்பார்வையில் ‘ஏமாற்றி சென்றவள் மீதுதான் இவனுக்கு எத்தனை காதல்..?’ என்பது மாதிரியான பிரமிப்பும் கலந்திருந்தது. முழுதும் கரைந்துபோன சிகரெட் இப்போது அவருடைய விரலை சுட, கையை உதறி அதனை விசிறினார். தலையை மெலிதாக உலுக்கிக்கொண்டவர், வேறுபக்கமாக பார்வையை வீசினார். தூரத்தில் கேட்டுக்கருகே தெரிந்த மனித கும்பலை வெறித்தவாறே, எதையோ யோசிக்க ஆரம்பித்தார்.
அவ்வளவு நேரம் அவரிடம் அப்பாவியாக, பரிதாபமாக ஒரு முகத்தை காட்டிக்கொண்டிருந்த அசோக்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த முகத்தை மாற்றிக் கொண்டான்..!! அவனுடைய முகம் இப்போது பாறை போல இறுக ஆரம்பித்தது..!! அப்படியே தலையை மெல்ல திருப்பி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான்..!! அவருடைய முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்ததும்.. அசோக்கின் மனதுக்குள் ஒருவித நிம்மதியும், திருப்தியும் ஒருசேர பரவின.. அவனது உதட்டோரத்தில் ஒரு குறும்புன்னகை மெலிதாக கசிந்தது..!!
‘மீரா பற்றிய பேச்சினை இவரே ஆரம்பித்தது, மிக வசதியாக போயிற்று.. இவர் ஆரம்பித்ததை மீராவுக்கு சாதகமாக திருப்பியாயிற்று..!! குற்றத்தை புலனாய்வு செய்யப் போகிறவர்களிடம்.. மீரா பற்றிய விஷயங்களை இவர் சொன்னால்.. நிச்சயம் அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும்..!! அவர்களுடைய சந்தேகப்பார்வை மீரா இருக்கிற திசைக்கே திரும்பக்கூடாது.. அதற்கு.. மீரா பற்றி இவர் அவர்களிடம் வாயை திறக்கவே கூடாது..!! என் மீது இவருக்கு அன்பிருக்கிறது.. என் கெஞ்சலை இவர் நம்பிவிட்டார்.. இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.. சொல்வதா வேண்டாமா என்று..!! இவரை மேலும் குழப்ப வேண்டும்.. இவருக்கு என் மீதிருக்கும் அன்பினை, மீராவுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளவேண்டும்..!!’
மனதில் அந்த மாதிரி எண்ணம் ஓடவும்.. அசோக் இப்போது மீண்டும் தனது முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக் கொண்டான்..!! மேலும் சில சென்டிமன்டான டயலாக்குகளை அவசரமாக யோசித்துக் கொண்டவன்.. அவற்றை ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொல்வதற்காக வாயை திறந்தபோதுதான்..
“என்ன ஸார்.. இங்க வந்து தனியா நின்னுட்டிங்க..??”
அவர்களுக்கு பின்னால் இருந்து அந்த சப்தம் கேட்டது.. உடனே இருவரும் திரும்பி பார்த்தார்கள்..!! தடித்த மீசைமயிர்களுடனும்.. கனத்த கன்னக்கதுப்புகளுடனும்.. இரவு நேரத்திலும் அணிந்த குளிர்கண்ணாடியுமாக.. இன்ஸ்பெக்டர் மலரவன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அவரிடம்,
“ஒன்னுல்ல ஸார்.. உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..!!” என்றார் மெலிதான புன்னகையுடன்.
“அதனால என்ன ஸார்.. பரவால..!!” சொன்ன மலரவன் அவரை நெருங்கி,
“Can I borrow a cigarette..??” என்று கேட்டார் ஆங்கில இளிப்புடன்.
உடனே ஸ்ரீனிவாச பிரசாத் சிறு பதற்றத்துடன், சிகரெட் பாக்கெட் எடுத்து அவசரமாக அவரிடம் நீட்ட.. மலரவன் அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி உதட்டில் பொருத்திக் கொண்டார்..!! ஸ்ரீனிவாச பிரசாத் நெருப்பு பற்றவைக்க.. மலரவன் புகையிழுத்து வெளியே ஊதி, வளிமண்டலத்தை மாசுபடுத்த ஆரம்பித்தார்..!!
“வெப்பன் கெடைச்சதா ஸார்..??” கேட்டார் ஸ்ரீனிவாச பிரசாத்.
“எங்க..??? எவ்வளவு தேடியும் கெடைக்கலை..!! Knife மாதிரி எதோ ஷார்ப்பான வெப்பன்தான் ஸார்.. உடம்பு பூரா அப்படியே பஞ்சர் பண்ணிருக்காங்க..!! அந்த மூர்த்தி ஸார் பையனோட பின்னந்தலைல.. இந்த எடத்துல.. செமத்தியா ஒரு அடி விழுந்திருக்கு.. அனேகமா அந்த கிருஷ்ணன் சிலையை வச்சுத்தான் அடிச்சிருக்கனும்னு தோணுது..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அதுதான் இப்போதைக்கு கெடைச்சிருக்குற ஒரே வெப்பன்..!!” பதில் சொன்னார் மலரவன்.
“ம்ம்.. மூர்த்தி ஸார்க்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா..??”
“பண்ணியாச்சு..!! மனுஷன் மலேசியால இருக்காரு போல.. மேட்டரை சொல்றேன், பெருசா அவர்ட்ட ஷாக்கே இல்ல ஸார்..!! சொன்னதெல்லாம் ‘ம்ம்.. ம்ம்..’ன்னு பொறுமையா கேட்டுக்கிட்டாரு.. உடனே கெளம்புறேன்னு மட்டும் சொன்னாரு.. காலைல இங்க இருப்பாருன்னு நெனைக்கிறேன்..!! ஹ்ம்ம்… அப்புறம்.. இன்னொரு விஷயம் ஸார்..”
“என்ன..??”
“உள்ள எங்களுக்கு நெறைய ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கெடைச்சிருக்கு..!! உங்க ரெண்டு பேரோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் கூட எங்களுக்கு வேணும்.. எலிமினேட் பண்றதுக்கு..!!”
“ஷ்யூர்.. அதனால என்ன.. குடுத்திடலாம்..!!”
“தேங்க்ஸ்..!! இப்போ வேணாம்.. நாளைக்கு பாத்துக்கலாம்.. சரியா..?? ம்ம்ம்ம்ம்ம்.. அப்புறம்.. உங்களை இன்னொன்னு கேக்கனும்னு நெனச்சேன்..”
“கேளுங்க..!!”
“நீ..நீங்க எப்படி.. இ..இந்த நேரத்துக்கு.. கரெக்டா இங்க..??”
நெற்றியை சுருக்கியவாறு மலரவன் அந்தமாதிரி கேட்க.. அத்தனை நேரம் அமைதியாக நின்றிருந்த அசோக்கின் மனதுக்குள்.. இப்போது திடீரென ஒரு கலக்கம்..!! படக்கென பக்கவாட்டில் திரும்பி ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஏறிட்டான்.. அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று.. பதற்றம் அப்பிய முகத்துடன் அவரையே பார்த்தான்..!! அவரும் தனது முகத்தை திருப்பி, அசோக்கை ஒரு சலனமற்ற பார்வை பார்த்தார்.. பிறகு மலரவனிடம் திரும்பி..
“நாங்க.. ஒரு ஃப்ராட் பொண்ணை ட்ரேஸ் பண்ணிட்டு இருக்கோம் ஸார்..!!” என்றார்.
“ஓகே..!!”
“அந்தப்பொண்ணு யூஸ் பண்ணின மொபைல் நம்பர்.. இந்த விஜயசாரதியோட பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருந்தது.. அது சம்பந்தமா விசாரிக்கத்தான் வந்தோம்..!!”
“ஓ..!! ம்ம்… அப்போ அந்தப்பொண்ணுக்கும் இந்த பையனுக்கும்..??” மலரவன் கேள்வியாக பார்க்க,
“இல்ல.. எந்த சம்பந்தமும் இல்ல..!!” ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொன்னார். சொன்னவர் கோர்வையாக மேலும் தொடர்ந்தார்.
“ரெண்டு வாரம் முன்னாடியே.. விஜயசாரதி கூட நான் ஃபோன்ல பேசினேன்.. அப்போவே தெளிவா சொல்லிட்டான்.. இவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு..!! ஆக்சுவலா.. இவன் யூ.எஸ் போறதுக்கு முன்னாடியே.. இவனோட செல்ஃபோனை எங்கயோ தொலைச்சிருக்கான்.. அது அந்தப்பொண்ணு கைல சிக்கிருக்கு.. அவ அதே நம்பரை அவளோட ஃப்ராட் வேலைக்கு யூஸ் பண்ணிருக்கா.. தேட்ஸ் ஆல்..!!”
“ஹ்ஹ.. ஓகே ஓகே..!! ஹ்ம்ம்.. அப்படி என்ன ஃப்ராட் பண்ணினா அந்தப்பொண்ணு..??”
“பேங்க்ல லோன் வாங்கி தர்றதா சொல்லி.. ஒரு நாலஞ்சு பேர்ட்ட, பத்து லட்ச ரூபாக்கு மேல ஆட்டையை போட்டுட்டு.. ஆள் எஸ்கேப் ஆகிட்டா..!! ஒருமாசமா அலையுறோம்.. அவளை ட்ரேஸ் பண்ணவே முடியல..!!”
“ம்ம்ம்… செம கேடியா இருப்பா போல..??”
“சந்தேகமே வேணாம் ஸார்.. பயங்கர கேடி..!!” சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி,
“என்ன அசோக்.. சரிதான..??” என்று சற்றே கிண்டலான குரலில் கேட்டார்.
“ஆ..ஆமாம்..!!” அசோக் தடுமாற்றமாக சொன்னான்.
“ஹ்ம்ம்.. So.. What’s your next move..??” மலரவன் அவ்வாறு கேட்க,
“Next move-னா..?? புரியல..!!” ஸ்ரீனிவாச பிரசாத் புரிந்தும் புரியாதவர் போல திரும்ப கேட்டார்.
“இல்ல.. இ..இப்போ இந்த விஜயசாரதியும் இல்ல.. அந்தப்பொண்ணை எப்படி கண்டு பிடிக்கப் போறீங்கன்னு கேட்டேன்..!!”
“ஹாஹா.. அது என் தலைவலி ஸார்.. உங்களுக்கு எதுக்கு..??”
அந்த விஷயத்தை பற்றி, அதற்கு மேலும் பேச தனக்கு விருப்பம் இல்லை என்பதை.. ஒரு சிரிப்புடன் ஸ்ரீனிவாச பிரசாத் நாசுக்காக சொன்னார்..!! மலரவனுக்கும் அது புரியாமல் இல்லை.. பதிலுக்கு புன்னகைத்தவர்..
“ஹாஹா.. ஆமாமாம்.. உங்க தலைவலி எனக்கெதுக்கு..?? எனக்குத்தான் ஏற்கனவே ரெட்டைத்தலைவலி வந்துடுச்சே.. அதைப்போய் என்னன்னு பாக்குறேன்..!!”
என்று சிரிப்புடனே சொல்லிவிட்டு.. சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்து நசுக்கிவிட்டு.. அங்கிருந்து நகன்றார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி.. ‘என்னடா.. திருப்தியா..?’ என்பது போன்ற பார்வையுடன் புன்னகைத்தார்..!! அசோக்கும்.. அவர் மலரவனிடம் பேசிய விதத்தில் விளைந்திருந்த ஒருவகை நிம்மதியுடன்..
“தேங்க்ஸ் ஸார்..!!” என்றான் மெலிதாக.
அத்தியாயம் 28
அசோக்கிற்கு வந்திருந்த அந்த நிம்மதி.. அதேசமயம் தனது படுக்கையறை மெத்தையில் வீழ்ந்து கிடந்த மீராவிடம்.. துளியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..!! உள்ளம் முழுக்க அழுத்தத்துடன் வீடு நுழைந்தவளுக்கு.. உடைகளை மாற்றிக் கொள்கிற எண்ணம் கூட வரவில்லை..!! மூளைக்குள் குடைச்சலுடன் படுக்கையில் சரிந்தவள்.. முதுகு குலுங்க விம்மி விம்மி அழ ஆரம்பித்திருந்தாள்..!! அவளுடைய கண்களில் இருந்து வழிந்த நீர்த்துளிகள்.. கைக்குள் அகப்பட்டிருந்த அசோக்கின் புகைப்படத்தில் பட்டு தெறித்தன..!! அழுகையினூடே.. அவ்வப்போது அந்த புகைப்படத்துக்கு.. தனது சிவந்த உதடுகளால் முத்தங்களும் வைத்தாள்..!!
விஜயசாரதியின் விருந்தினர் மாளிகையில் வைத்து.. அசோக்கை காணநேரிடும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. அதுவும் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்..!! செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவளுக்கு.. தூரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருடன் நடந்துவந்த அவளது காதலன் காணக்கிடைத்தான்..!! ஒருகணம் என்ன செய்வதென்றே அவளுக்கு எதுவும் புரியவில்லை.. நீண்ட நாட்களுக்கப்புறம் பார்ப்பதற்கு வாய்த்த அந்த ஆசைமுகம்.. அவனுக்கு இணையாக நடந்து வந்த அந்த காவல்துறை அதிகாரி.. குருதியிலே குளித்து முடித்த மாதிரி வீட்டுக்குள்ளே இரட்டைப் பிணங்கள்..!!
தடுமாறினாள்.. மூளை சிந்திக்க மறுத்து சிக்கிக்கொண்டது.. கால்கள் நகர மறுத்து பிண்ணிக்கொண்டன..!! எப்படியோ ஒருவழியாக சமாளித்து சுதாரித்துக் கொண்டாள்.. அவசரமாய் யோசித்து ஒரு முடிவெடுத்தவள்.. அப்படியே பின்னால் நகர்ந்து வீட்டின் பின்புறம் ஓடினாள்..!!
அந்த காவல்துறை அதிகாரியின் கண்ணில் சிக்காமல் தப்பித்து.. கல்லிலும் முள்ளிலும் கால்கள் வதையுற ஓடிக்களைத்து.. சீற்றமாக எதிரே வந்த ஆட்டோவை கையசைத்து நிறுத்தி.. ‘சிந்தாதிரிப்பேட்டை போகணும்’ என்றபடி ஏறியமர்ந்தபோதுதான்.. கையிலிருந்த அந்த செல்ஃபோன் சப்தம் எழுப்பியது..!! பதற்றத்துடனேதான் செல்ஃபோன் டிஸ்ப்ளேயில் பார்வையை வீசினாள்.. பார்த்ததுமே அவளுடைய நெஞ்சுக்குள் ஒரு பனிச்சிதறல்..!!
எத்தனை நாட்கள் அந்த எண்களின் வரிசையை ஏக்கமாக பார்த்திருப்பாள்.. எவ்வளவு ஆசையாக அந்த எண்களை அவளது கட்டை விரல் டயல் செய்யும்..?? கண்ணில் விழுந்ததுமே காதலனின் தொடர்பு எண்கள் என்று பளிச்சென அவளுக்கு தெரிந்து போனது..!! பேசலாமா வேண்டாமா என மிகுந்த மனப் போராட்டத்துக்கு பிறகுதான்.. காலை பிக்கப் செய்து அவனுடன் பேசினாள்..!!
நேரில் அசோக்கின் முகத்தை பார்த்ததிலும், ஃபோனில் அவனது குரலை கேட்டதிலும்.. சிறிது நாட்களாக இறுகிப் போயிருந்த மீராவின் இதயம்.. இப்போது மீண்டும் இளக்கம் கொடுக்க ஆரம்பித்திருந்தது..!! அவளும்.. காதலுக்கும் கழிவிரக்கத்துக்கும் இடையில் சிக்குண்டு.. சிதையுற ஆரம்பித்திருந்தாள்..!!
‘மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!’
அசோக் சற்றுமுன் ஃபோனில் தவிப்புடன் கதறியது.. இப்போது மீராவின் காதுக்குள் மீண்டும் ஒலிக்க.. அவளது அழுகை ஒலியின் டெசிபல் மேலும் அதிகமாகவே செய்தது..!! அழுதவாறே ‘ஸாரிடா அசோக்’ என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.. புகைப்படத்தில் படிந்திருந்த கண்ணீர் துளிகளை, கட்டைவிரலால் துடைத்தெடுத்தாள்..!!
‘நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்கும்..!!’
அவளுக்குள் மீண்டும் அசோக்கின் குரல்..!! உடனே.. ‘அப்படி ஏதாவது ஒரு அதிசயம் நடந்து.. அவனுடன் இணைந்து விடமாட்டோமா..??’ என்றொரு ஏக்கமான உணர்வு.. மீராவின் மனதுக்குள் பரவியது..!! வேதனையில் பொசுங்கிக் கொண்டிருந்த அவளது இதயத்தை.. மெல்லிய மயிலிறகால் வருடிச் சென்றது அந்த உணர்வு..!!
‘உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!!’
‘என்மீதுதான் அவனுக்கு எத்தனை அப்பழுக்கற்ற காதல்..?? விலகிச் சென்றாலும் விட மறுக்கிறானே..?? களங்கம் பொருட்டல்ல கலந்திடலாம் வா என்றழைக்கிறானே..?? கலந்திடலாமா.. காற்றென இப்போதே கிளம்பி சென்று, காதலனின் நெஞ்சில் சாய்ந்து கவலைதீர அழலாமா..??’
ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டு மார்பில் முகம் புதைத்துக் கொள்வது மாதிரி.. அவள் மனதுக்குள் ஒரு கற்பனை ஓட.. அந்த நொடியில்.. அவளுடைய மனதை இறுக்கிக்கொண்டிருந்த அழுத்தம் மொத்தமும்.. இலவம்பஞ்சென மாறிச்சிதறி அவளை விட்டகன்று.. அவளுக்கும் அப்படியே காற்றில் பறப்பது போலொரு இலகுவான உணர்வு..!! ஆனால் அடுத்த நொடியே.. அந்த மாதிரி நினைத்ததற்காக தன்னைத்தானே அவள் கடிந்து கொண்டாள்..!!
– தொடரும்
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :