அன்புள்ள ராட்சசி – பகுதி 58

தானும் விஜயசாரதியும் முதன் முதலாக சந்தித்துக்கொண்ட அந்த சம்பவத்தை.. மீரா இப்போது நினைவுக்கு கொண்டுவந்தாள்..!! அந்த நினைவு எப்போதும் அவளுக்கு வேதனையையே தரும்.. இன்றும் தந்தது..!! ஆனால் அந்த வேதனையை தனது முகத்தில் காட்டிக்கொள்ளாமல்.. சலனமற்ற முகபாவத்துடனே சொன்னாள்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“I’m a nurse..!! வியாசர்பாடில.. மூர்த்தி சார்க்கு சொந்தமான ஒரு ஹாஸ்பிடல் இருக்குது.. அங்கதான் நான் வொர்க் பண்ணினேன்..!! மொதலாளின்ற முறைல விஜய் அந்த ஹாஸ்பிடல்க்கு அப்பப்போ வருவாரு..!! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. ஒருதடவை ஃப்ரண்ட்ஸோட வந்திருந்தாரு.. அவரோட ஃப்ரண்ட் யாருக்கோ மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வேணும்னு வந்திருந்தாரு..!! அன்னைக்குத்தான் நாங்க முதமுதலா மீட் பண்ணிக்கிட்டோம்..!!”

“ம்ம்..!!”

“நான் ஹாஸ்பிடல் ரெஸ்டாரன்ட்ல தனியா உக்காந்து சாப்பிட்டு இருந்தேன்.. அவர் எதிரே உக்காந்து சாப்பிட்டாரு.. அவரே தானா வந்து எங்கிட்ட பேசினார்.. ஃப்ரண்ட்ஷிப் வச்சுக்கிட்டாரு..!!” என்பதுவரை உண்மையை சொன்ன மீரா, அப்புறம் குரலை மாற்றாமலே ஒருசில பொய்களை சொன்னாள்.

“ரொம்ப நல்ல டைப்.. பணக்காரர்ன்ற பந்தா கெடையாது.. ரொம்ப டீசண்டா, கண்ணியமா நடந்துப்பாரு.. எனக்கும் அவரை ரொம்ப பிடிச்சு போச்சு..!! வீ ஆர் வெரி குட் ப்ரண்ட்ஸ்..!!!” மீரா அப்படி சொன்னதுக்கு மலரவன் மெலிதாக புன்னகைத்தார். அதை கவனித்த அவள்,

“எ..என்ன ஸார்.. சிரிக்கிறீங்க..??” என்று கேட்டாள்.

“ஒன்னுல்ல.. அந்த விஜயசாரதியை இவ்வளவு புகழ்றீங்களேன்னு பார்த்தேன்..!!”

“ஆ..ஆமாம்.. ஏன்..??”

“இல்ல.. இதுவரை நான் விசாரிச்ச வரைக்கும்.. அவரை பத்தி வேற மாதிரிதான் கேள்விப்பட்டேன்..!! ஹ்ம்ம்ம்ம்.. எனிவே.. அது அவங்க அவங்க வ்யூ..!! ஹ்ம்ம்.. உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்..!!”

“ம்ம்.. சொல்லுங்க..!!”

“விஜயசாரதி இறந்து போறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி.. கடைசியா அவர் பேசுனது ரெண்டு பேர்ட்டதான்..!! ஒன்னு.. அவர் கூடவே இறந்து போன அந்த காசி.. இன்னொன்னு நீங்க..!!​” ​மலரவன் சொல்லிவிட்டு மீராவின் கண்களையே கூர்மையாக பார்க்க, அவளோ

“ஓ.. இஸ் இட்..??” என்று ஆச்சரியப்பட்டு அவரை குழப்பினாள்.

“எ..எஸ்.. நேத்து ஈவினிங் உங்ககிட்ட அவர் பேசின ஒரு அரை மணி நேரத்துலதான்.. மர்டர் நடந்திருக்கு..!!”

“ஓகே..!! எ..எனக்கு அது தெரியாது..!!”

“​ஹ்ம்ம்​.. லாஸ்டா அவர்கிட்ட நீங்க என்ன பேசுனிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??”

“​ரெண்டு ​பேரும் நேர்ல மீட் பண்ணிக்கிறது பத்தித்தான் பேசிக்கிட்டோம்..​!! அவரை பாத்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு.. இவ்வளவு நாளா அவர் யூ.எஸ்ல இருந்தாரு.. இப்போ.. இன்னும் ஃபைவ் டேஸ்ல நான் கல்ஃப் கெளம்புறேன்.. அப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சுத்தான் திரும்ப வருவேன்..!! அதான்.. இந்த அஞ்சு நாள் விட்டா.. அப்புறம் ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே முடியாதுன்னு.. அதுக்கு நடுவுல ஒருநாள் மீட் பண்ணிக்க நெனச்சோம்..!! ஆக்சுவலா.. இன்னைக்கு மீட் பண்றதா இருந்தது.. அ..அதுக்குள்ள.. அதுக்குள்ள இப்படி..”

சொன்னதை முடிக்காமலே மீரா போலியாக விசும்ப ஆரம்பித்தாள்.. மலரவன் மீண்டும் தலையை சொறிந்துகொண்டார்.. அழுகிறவளை அவரே மறுபடியும் சமாதானம் செய்யுமாறு ஆகிப் போனது..!!

அதன்பிறகும் மலரவன் மீராவை பல கேள்விகள் கேட்டார்.. எல்லாமே விஜயசாரதி பற்றியும், அவனுக்கும் மீராவுக்கும் இருந்த நட்பு பற்றியுமான கேள்விகளாகவே இருந்தன..!! எல்லா கேள்விகளுக்கும் மீரா மிக இயல்பாக, புத்திசாலித்தனமாக, எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க முடியாத வகையில் பதில் சொன்னாள்..!! ஒரு கட்டத்தில் மலரவன் சலிப்படைந்து போனார்.. ஆரம்பத்தில் மீரா மீது இருந்த சிறிய சந்தேகமும் இப்போது அவருக்கு இல்லாமல் போயிருந்தது..!!

இருந்தாலும்.. அவளை சந்தேக லிஸ்டில் இருந்து முழுமையாக நீக்குவதற்கு முன்பு.. இன்னும் ஒரு காரியம் செய்ய நினைத்தார்.. அவளுடைய கைரேகையை கலெக்ட் செய்துகொள்வதுதான் அது..!! அதை அவளிடம் நேரடியாக கேட்டு பெறுவதற்கும் அவருக்கு மனமில்லை.. அவள் பெண் என்பதும், அதிலும் அழகான பெண் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.. அவள் அறியாமலே அதை செய்யவேண்டும் என்று நினைத்தார்..!!

“வந்துமே கேட்ருக்கணும்.. ஏதோ ஞாபகத்துல மறந்துடுச்சு..!! ஏதாவது சாப்பிடுறீங்களா..?? காபி, டீ, ஜூஸ்..!!” என்று திடீரென கேட்டார்.

“இ..இல்ல ஸார்.. அதுலாம் வேணாம்..!!” மீரா தயங்கினாள்.

“பரவால.. சாப்பிடுங்க..!!”

“நோ ஸார்.. நீங்க மொதல்ல கேட்டு முடிங்க.. அப்புறமா..”

“கேக்க வேண்டியதுலாம் கேட்டு முடிச்சாச்சு.. அவ்வளவுதான்..!! ஏதாவது சாப்பிட்டு நீங்க வீட்டுக்கு கெளம்பலாம்..!!”

“ஓ..!!”

“சொல்லுங்க.. என்ன சாப்பிடுறீங்க..??”

“இ..இல்ல ஸார்.. ஒன்னும் வேணாம்..!!”

“நோ நோ.. அப்படிலாம் சொல்லக் கூடாது.. எங்க இன்வெஸ்டிகேஷனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க.. யு லுக் ஸோ டயர்ட் ஆல்ஸோ.. கண்டிப்பா ஏதாவது சாப்பிடனும்..!! சொல்லுங்க..!!” அவர் மிகவும் வற்புறுத்தவும்,

“ஓகே.. ஜூஸ்..!!” என்று மீரா ஒத்துக் கொண்டாள்.

மலரவன் ஒரு கான்ஸ்டபிளை அழைத்து ஜூஸ் கொண்டுவருமாறு சொன்னார்.. அப்படி சொல்கையிலே கண்ணை சிமிட்டி அந்த கான்ஸ்டபிளுக்கு ஒரு சிக்னல் கொடுத்தார்..!! கைரேகை சேகரிப்பதற்கான யுக்தி அது என்பதை.. அந்த கான்ஸ்டபிளும் புரிந்துகொண்டு ஜூஸ் எடுத்துவர நகர்ந்தார்..!!

மீரா உஷாராக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.. மலரவன் அந்த கான்ஸ்டபிளுக்கு கண்ணால் கொடுத்த சிக்னலை.. அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. தனது கைரேகையை சேகரிக்கத்தான் இந்த கரிசன நாடகம் எல்லாம் என்பது.. அவளுக்கும் விளங்காமல் இல்லை..!!

விஜயசாரதியின் வீட்டில் இருந்து செல்ஃபோனை எடுத்துக் கொண்டு கிளம்புகையில்.. அந்த வீட்டுக்குள் தனது கைரேகை படிந்திருக்க வாய்ப்பிருக்கிற இடங்களை எல்லாம்.. கைக்குட்டையால் துடைத்து முடித்து அவள் கிளம்பிய காட்சி.. இப்போது அவளது மனத்திரையில் பளிச்சிட்டது..!! மலரவனின் சிறுபிள்ளைத்தனமான இந்த முயற்சியை நினைத்து, அவளுக்கு மெலிதாக சிரிப்பு வந்தது.. அதை மிக எளிதாக அடக்கிக் கொண்டாள்..!!

இரண்டே நிமிடங்களில்.. மஞ்சள் நிறத்திலான பழச்சாறு நிறைந்த ஒரு கண்ணாடி டம்ளர்.. மீராவுக்கு முன்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டது..!! அவள் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த டம்ளரை பற்றி.. கையில் எடுத்து உயர்த்தி.. அப்படியே தொண்டைக்குள் சரித்து.. மடக் மடக்கென முழுதும் குடித்து முடித்தாள்..!! கைக்குட்டையால் உதட்டை ஒற்றிக்கொண்டாள்..!! காலி டம்ளரை டேபிளில் வைக்காமல்.. மலரவன் முன்பாக உயர்த்தி பிடித்து காட்டியவாறே.. கொஞ்சம் கேலி கலந்த குரலில் அவரிடம் கேட்டாள்..!!

“இப்போ திருப்தியா ஸார்..??”

“வாட்..??” மலரவன் புருவத்தை சுருக்கினார்.

“இல்ல.. குடிச்சே ஆகணும்னு கம்ப்பெல் பண்ணுனிங்களே.. குடிச்சு முடிச்சாச்சு.. இப்போ திருப்தியான்னு கேட்டேன்..!!” கேட்டுவிட்டு மீரா புன்னகைக்க,

“ஹாஹா.. எ..எஸ் எஸ்.. திருப்தி..!!” மலரவன் ஒரு அசட்டு புன்னகையை சிந்தினார்.

“ம்ம்.. அப்போ நான் கெளம்புறேன் ஸார்..!!”

இயல்பான குரலில் சொன்ன மீரா.. டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு.. மலரவனின் பதிலுக்கு கூட காத்திராமல்.. சேரிலிருந்து எழுந்து.. திரும்பி விடுவிடுவென நடந்து.. ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறினாள்..!!

அத்தியாயம் 29

அன்று மாலை ஐந்து மணி.. கிழக்கு கடற்கரை சாலையில் சோழிங்கநல்லூர் அருகே அமைந்திருக்கிற ISKCON ராதாகிருஷ்ணா திருக்கோயில்..!! வழக்கத்தைவிட அதிகமாகவே கோவில் வளாகத்துக்குள் கூட்டம் நிரம்பி வழிந்தது..!! ஆடல்கோலத்தில் அழகுற வீற்றிருக்கும் ராதையையும் கிருஷ்ணனையும் தரிசிக்க.. ஆலயத்தின் வாயிலிலிருந்தே பக்தர்கள் நெருக்கியடித்தவாறு வரிசையில் நின்றிருந்தனர்..!! கோயிலின் சின்னஞ்சிறு மூலை முடுக்குகளில் கூட.. ஒரேயொரு மந்திரம் மட்டும் தெய்வீகமாக ஒலித்துக்கொண்டே இருந்தது..!!

“ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா..
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே..!!
ஹரே ராமா ஹரே ராமா..
ராமா ராமா ஹரே ஹரே..!!”

அசோக்கும் பாரதியும் அப்போதுதான் தரிசனம் முடித்துவிட்டிருந்தனர்.. மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் அமர்ந்து தற்போது இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.. அவர்களுக்கு அருகிலேயே வாழைப்பழங்கள் எட்டிப்பார்க்கிற அர்ச்சனை பாத்திரம்..!! இருவரது கையிலும் இலையால் வேயப்பட்ட ஒரு கிண்ணம்.. அதில் நெய்யின் செறிவு நிறைந்து போயிருந்த பருப்புசாத பிரசாதம்..!! இருவருமே ஏதோ யோசனையாய் இருந்தனர்.. அவ்வப்போது பிரசாதத்தை விண்டு வாயில் போட்டுக் கொண்டனர்..!!

இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களை எல்லாம்.. ஒன்று கூட ஒளிவு மறைவு இல்லாமல்.. அசோக் தன் அம்மாவிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்தான்..!! மீராவுக்கு நடந்திருந்த கொடுமையையும்.. அசோக்கின் கவலையான மனநிலையையும்.. அவர்களது காதலுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிற சிக்கலையும்.. பாரதி நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள்..!! ஆறுதல் வார்த்தைகளை சொல்லி.. நேற்றே மகனை தேற்றியும் வைத்திருந்தாள்..!!

இந்தமாதிரி கோயிலுக்கு வருவதெல்லாம் அசோக்கின் வழக்கம் கிடையாது.. இன்று ஏனோ அம்மா அழைத்தபோது அவனால் மறுக்க இயலவில்லை..!! கவலையும் குழப்பமும் அவனுடைய மனதில் நிறைந்து போயிருக்க.. கடவுளின் சந்நிதானத்தில் அதற்கான நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தானோ என்னவோ..!! கவலைக்கு காரணம் மீராவை தேடிக்கண்டுபிடிக்க முடியுமா முடியாதா என்பது.. குழப்பத்திற்கு காரணம் இரண்டு நாட்களாய் அவன் செய்த வேலைகள் எல்லாம் சரியா தவறா என்பது..!! அரிக்கிற குழப்பத்தை அடக்க முடியாமல்.. அசோக் இப்போது அம்மாவிடம் மெலிதான குரலில் சொன்னான்..!!

“நான் பண்றதெல்லாம் சரிதானான்னு சந்தேகமா இருக்கு மம்மி..!!”

“எ..எதை சொல்ற..??” பாரதி மகனின் பக்கமாய் முகத்தை திருப்பி கேட்டாள்.

“அதான் மம்மி.. அந்த பென்டன்ட்டை மறைச்சது.. எஸ்.பி ஸாரை பேச விடாம தடுத்தது.. போலீஸ்ட்ட பொய் சொன்னது..!!”

“ம்ம்.. அதுல என்ன சந்தேகம் உனக்கு..?? நீ செஞ்சதுல எந்த தப்பும் இல்ல அசோக்.. எல்லாம் சரிதான்..!!”

“இல்ல மம்மி.. நம்ம வசதிக்காக சட்டத்தை ஏமாத்துறது தப்பு இல்லையா..?? நமக்கு வேணா மீரா நல்லவளா தெரியலாம்.. ஆனா.. சட்டத்தோட பார்வைல அவ குற்றவாளிதான..??”

அசோக் அவ்வாறு கேட்கவும்.. பாரதி மகனின் கண்களையே கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள்..!! அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல்.. சிலவினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! பிறகு ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவள்.. அந்த பேச்சை மாற்றும் விதமாக அவனிடம் கேட்டாள்..!!

“அந்த பையனோட செல்ஃபோனை மீரா தூக்கிட்டு போயிட்டான்னு சொன்னேல..??”

“ம்ம்.. ஆமாம்..!!”

“அதை ஏன் அவ எடுத்துட்டு போனான்னு ஏதாவது யோசிச்சியா..??”

“யோசிச்சேன் மம்மி.. பட்.. எதுவும் புரியல..!!”

“ப்ச்.. என்னடா நீ.. இந்தக் காலத்து புள்ளையா இருந்துட்டு இப்படி சொல்ற..?? டெயிலி ந்யூஸ் பேப்பர்லாம் படிக்கிறியா, இல்லையா..?? ‘செல்ஃபோனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டல்..’ னு எத்தனை ந்யூஸ் வருது..!!” பாரதி சொல்ல வருவது, இப்போது அசோக்கிற்கு புரிய ஆரம்பிக்க,

“…………….” அவன் அம்மாவையே யோசனையாக பார்த்தான்.

“மீராவை லவ் பண்ற மாதிரி நடிச்சு அவன் ஏமாத்திருக்கான்னு சொல்ற.. அமெரிக்கா போனவன் ரெண்டு நாள் முன்னாடிதான் இந்தியா வந்தான்னு சொல்ற.. வந்த ரெண்டாவது நாளே இப்படி நடந்திருக்கு..!! ஏமாத்திட்டு ஓடிப்போனவன் இந்தியா வந்தது இவளுக்கு எப்படி தெரியும்..?? நிச்சயமா அவன்தான் இவளை ஃபோன் பண்ணி வரவச்சிருக்கணும்..!! ரெண்டு பேரை இப்படி கொலை பண்ணி போட்ருக்கான்னா.. அவ்வளவு வெறி வர்ற அளவுக்கு அவனுக அவளை என்ன டார்ச்சர் பண்ணிருக்கணும்..?? அந்த செல்ஃபோனை கரெக்டா எடுத்துட்டு போயிருக்கான்னா.. அதுல ஏதோ விஷயம் இருக்கனுமா இல்லையா..??”

“இ..இருக்கணும் மம்மி..!!”

“கண்டிப்பா இருக்கணும்..!! அவளை அசிங்கமா படம் எடுத்து வச்சுட்டு அவங்க மிரட்டிருக்கனும்.. அதான் அவனுகள கொன்னுபோட்டுட்டு அந்த செல்ஃபோனை எடுத்துட்டு ஓடிருக்கா..!!”

“ம்ம்.. எனக்கும் அப்படித்தான் தோணுது..!!”

“சட்டம் வேற, தர்மம் வேற அசோக்.. சரி தப்புன்றதும் ரெண்டுக்கும் வேற வேற..!!” மகன் முதலில் கேட்ட கேள்விக்கு, பாரதி இப்போது திடீரென வந்தாள்.

“எ..என்ன மம்மி சொல்ற..??” சுருங்கிய புருவத்துடன் அசோக் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“பொண்ணுகளை கிள்ளுக்கீரையா, வெளையாட்டு பொம்மையா, வெறும் போகப்பொருளா நெனைக்கிற ரெண்டு அரக்கனுகளை கொன்னது.. சட்டத்துக்கு வேணா தப்பா தெரியலாம் அசோக்.. ஆனா தர்மப்படி அது தப்பே இல்லடா..!!” தீர்க்கமான குரலில் சொன்ன அம்மாவை, அசோக் திகைப்பாக பார்த்தான்.

“மம்மி..”

“சட்டம்ன்றது மனுஷங்களா வச்சுக்கிட்டதுதான்டா மகனே..!! ஆனா.. தர்மம்ன்றது அந்த ஆண்டவன் விதிச்சது..!! காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி சட்டதிட்டம் மாறும்.. தர்மம் எப்போவும் மாறாது..!! உலகம் பொறந்த நாள்ல இருந்து தர்மம்ன்றது எப்போவும் ஒண்ணுதான்..!!”

“…………….”

“அதர்மம் தலை எடுக்குறப்போலாம் நானே அவதாரம் எடுத்து வருவேன்னு.. கீதைல கிருஷ்ண பரமாத்மா சொல்லிருக்காரு..!! மீரா ரெண்டு அரக்கனுகளை கொன்னுருக்கான்னா.. அவளை ஏன் நாம ஒரு அவதார பொறப்பா நெனைக்க கூடாது..??”

“…………….”

“அந்த ஆண்டவனோட சன்னிதானத்துல இருந்துதான் இதை சொல்றேன் அசோக்.. சொல்றப்போ எனக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தல..!!”

அம்மா சொல்ல.. அசோக் இப்போது சற்றே தலையை திருப்பி பின்னால் பார்த்தான்.. தூரத்தில் புல்லாங்குழலுடன் சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கண்ணில் பட்டார்..!! விஜயசாரதியின் வீட்டில் பார்த்த ரத்தத்தில் தோய்ந்த கிருஷ்ணனின் சிலை இப்போது அவனுடைய நினைவுக்கு வர.. மனதில் இருக்கிற குழப்பம் மெல்ல விலகுவது போல ஒரு உணர்வு..!! கூடவே.. விஜயசாரதி என்கிற பெயர் கூட கிருஷ்ணனைத்தான் குறிக்கும் என்கிற யோசனையும் வர.. அவனது உதட்டில் மெலிதான ஒரு புன்னகை பரவியது..!!

பாரதி தோடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!

“நம்ம கைல எதுவும் இல்ல அசோக்.. நடக்குறதுக்குலாம் ஏதோ காரணம் இருக்கு..!! அந்த நேரத்துக்கு நீ எதுக்கு சரியா அந்த எடத்துக்கு போகணும்..?? அந்த பெண்டன்ட் எதுக்கு கரெக்டா உன் கண்ணுல மட்டும் படணும்..?? அந்த எஸ்.பிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. அவர் எதுக்கு உனக்கு ஹெல்ப் பண்ணனும்.. மீரா பத்தின விஷயத்தை போலீஸ்ட்ட இருந்து அவர் மறைக்கணும்..?? நல்லா யோசிச்சு பாரு.. எல்லாத்துக்கு ஏதோ காரணம் இருக்குற மாதிரி தெரியல..??”

“ம்ம்..!!”

“மீராவுக்கு தண்டனை கெடைக்கனுமா இல்லையான்றத முடிவு பண்ண வேண்டியது நீயோ, நானோ, போலீஸோ இல்லடா.. அந்த ஆண்டவன்..!! தேவையில்லாததை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம.. அடுத்து என்ன பண்றதுன்னு யோசி..!! போலீஸ் உதவி இல்லாம மீராவை எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு எதாச்சும் யோசிச்சியா..??”

அம்மா பேசிய வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தினை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த அசோக்.. பாரதி அந்த மாதிரி கேட்டதும் அந்த யோசனையில் இருந்து விடுபட்டான்..!! பதிலேதும் சொல்லாமல் அம்மாவின் முகத்தையே அமைதியாக பார்த்தான்..!! நேற்று இரவு.. கொலையான வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பு.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவை தனியாக அழைத்து.. அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது, இப்போது அவனது நினைவுக்கு வந்தது..!! கேஷுவலாக சில கேள்விகளை கேட்டு.. விஜயசாரதியை பற்றி சில விஷயங்களை.. அவர் மூலம் அறிந்து கொண்டிருந்தான் அசோக்..!!

“இல்ல.. ஸ்கூல் மட்டுந்தான் சென்னைல படிச்சாரு.. டிக்ரி படிச்சதுலாம் ஹைதராபாத்ல..!!” அவர் அந்த மாதிரி சொன்னதும் அசோக்கிற்கு சுருக்கென்று இருந்தது.

“பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!” என்று மீரா எப்போதோ சொன்னது திடீரென ஞாபகத்துக்கு வந்தது.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments