அன்புள்ள ராட்சசி – பகுதி 59

மீரா ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாள் என்று ஆரம்பத்தில் அவன் நம்பியிருந்தான். அவள் சரளமாக தெலுங்கு பேசியதும் அவனது நம்பிக்கைக்கு வலு சேர்த்திருந்தது. பிறகு ஃபுட்கோர்ட் விளம்பர போர்டை பார்த்ததும், அது பொய்யென்று நினைத்தான். இப்போது கே.கே.மூர்த்தியின் பி.ஏ இப்படி சொன்னதும், மீண்டும் ‘மீராவும் ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாளோ.. அங்குதான் அவளுக்கும் இந்த விஜயசாரதிக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்குமோ..?’ என்கிற ரீதியில் அவனுக்குள் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??”

கிஷோரின் அக்கா பவானி சொன்னது வேறு மூளையில் பளிச்சிட, அவன் மேலும் குழம்பிப் போனான். அவனுடைய புத்தி மெல்ல மெல்ல, தவறான புரிதலின் ஆழத்துக்கு செல்ல ஆரம்பித்தது. அந்த தவறான புரிதலுடன்தான்..

“மீரா டிக்ரி படிச்சது ஹைதராபாத்தா இருக்கும்னு நெனைக்கிறேன் மம்மி..!!” என்று இப்போது பாரதியிடம் சொன்னான்.

“ஓ.. எப்படி சொல்ற..??”

அசோக் தனது அனுமானத்தை அம்மாவிடம் விளக்கி கூறினான்.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவிடம் பேசியது பற்றி.. மீரா முன்பு தன்னிடம் குறிப்பிட்டது பற்றி.. எல்லாம் அவளிடம் பொறுமையாக எடுத்துரைத்தான்..!!

“ரெண்டு பேரும் ஒரே காலேஜ்லதான் படிச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.. அங்கதான் அவங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஆகிருக்கணும்..!! அந்த காலேஜ்ல போய் விசாரிச்சா.. கண்டிப்பா மீரா பத்தி ஏதாவது லீட் கெடைக்கும் மம்மி..!!”

“ஹ்ம்ம்.. அந்த காலேஜ் பேரு, அந்தப் பையன் எந்த வருஷம் படிச்சு முடிச்சான்.. அதுலாம் அவர்ட்ட விசாரிச்சியா..??”

“ம்ம்.. எல்லாம் விசாரிச்சு வச்சிருக்கேன்..!!”

“அப்புறம் என்னடா.. உடனே கெளம்ப வேண்டியதுதான.. இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..??”

“இன்னைக்கு நைட் கெளம்புறேன் மம்மி.. கிஷோரும் கூட வர்றேன்னு சொல்லிருக்கான்..!!”

“ம்ம்.. நல்லது..!! உடனே கெளம்பு.. அந்த காலேஜ்ல போய் விசாரி.. ஏதாவது தகவல் கெடைக்கும்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..!!”

“மீரா எனக்கு கெடைப்பாளா மம்மி..??” அசோக் திடீரென அந்த மாதிரி ஏக்கமாக கேட்கவும், பாரதி புன்னகைத்தாள்.

“போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!” நம்பிக்கையாக சொல்லிவிட்டு, மகனின் தலைமுடியை கோதிவிட்டாள்.

அன்று இரவே அசோக்கும் கிஷோரும் ஜெட் ஏர்வேஸில் ஹைதராபாத் கிளம்பினார்கள்.. ஒரு மணி நேர பயணத்தின்பின் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் வந்து இறங்கினார்கள்.. பஞ்சாரா ஹில்ஸ் சென்று, அவர்களது கல்லூரி நண்பன் பரணியின் வாடகை வீட்டு காலிங்பெல்லை அழுத்தினார்கள்..!! தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜகன்னாத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறான் பரணி..!!

“இதுதான் மச்சி என் பேரு..!!”
சமீபத்தில் பூரி ஜகன்னாத் இயக்கி ஹிட்டடித்த ஒரு தெலுங்கு படத்தின் டைட்டில் கார்டில்.. அடுக்கடுக்காக காணப்பட்ட ஜாங்கிரி வரிசையில்.. நான்காவது வரியை சுட்டிக்காட்டி பல்லிளித்த பரணியை.. அசோக்கும் கிஷோரும் வெறுப்புடன் பார்த்தார்கள்..!!

“கூடிய சீக்கிரம் தமிழ்ல என் பேரு வரும்டா.. அதுவும் தனியா..!!”

கான்ஃபிடன்ட்டாக சொன்ன பரணியை கடுப்புடன் முறைத்தவாறே.. அவன் வாங்கிவைத்திருந்த ஹைதராபாத்தி சிக்கனை எடுத்து கடித்தார்கள்..!! இவர்கள் விழித்திருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையில்.. பரணி தனது டாலிவுட் அனுபவங்களை சொல்லிக்கொண்டிருக்க.. இருட்டுக்குள் அவனை தனியாக புலம்பவிட்டு.. இவர்கள் குறட்டை இல்லாமல் உறங்கினார்கள்..!!

அடுத்தநாள் காலையே அசோக்கும், கிஷோரும் இப்ராஹிம் பாக்கில் இருக்கும் வாசவி இஞ்சினியரிங் கல்லூரிக்கு சென்றார்கள்..!! எப்படி ஆரம்பிப்பது என்றே இருவருக்கும் ஆரம்பத்தில் படுகுழப்பம்..!! விஜயசாரதி கொலையாகியிருந்த விஷயம் அவனது கல்லூரிக்கு இன்னும் பரவியிருக்கவில்லை.. இவர்களும் அந்த விஷயத்தை யாருக்கும் தெரிவிக்கவில்லை..!! கல்லூரி பேராசிரியர்கள் சிலரை சந்தித்து பேசினார்கள்.. விஜயசாரதி அந்த கல்லூரியில் படித்து முடித்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன.. நிறைய பேராசிரியர்கள் மாறியிருந்தனர்.. ஒருசில பழையவர்கள் விஜயசாரதியை நினைவு கூர்ந்தாலும், ‘ரோக்’ என்று அவனை திட்டியதை தவிர, அவர்களால் உருப்படியான தகவல் எதையும் தர முடியவில்லை..!!
பிறகு.. கல்லூரிக்கு வெளியே இருந்த பெட்டிக்கடையில்.. காசில்லாமல் சிகரெட் மறுக்கப்பட்ட அவனை பிடித்தனர்.. அந்த கல்லூரியில் ஆபீஸ் அசிஸ்டன்டாக பணிபுரிபவன்..!! அவனிடம் சில கரன்ஸிகளை அள்ளி தெளித்து.. அவன் மூலமாக அந்தக் கல்லூரியில் அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் படித்த மாணவர்களின் தகவல்களை ஒரு குறுந்தட்டில் கிடைக்கப் பெற்றனர்..!! மாணவர்களுடைய புகைப்படங்களும் அந்த குறுந்தகட்டில் இடம்பெற்றிருந்தன..!!

அந்த புகைப்படங்களை கவனமாக ஆராய்ந்து.. விஜயசாரதி அந்த கல்லூரியில் பயின்ற காலத்தில் மீரா அங்கு பயிலவில்லை என்ற உண்மையை கண்டறிந்தனர்..!! ‘சரி.. ஹைதராபாத்திலேயே வேறு கல்லூரியாக இருக்கும்..’ என்று மீண்டும் ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டனர்..!! குறுந்தகட்டில் கிடைத்த தகவல் மூலம்.. ஹைதராபாத்தில் விஜயசாரதி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று முதலில் விசாரித்தனர்..!!
அவர்கள் மூலம் இன்னொருவர்.. அவர் மூலம் வேறொருவர்.. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம்.. அந்த இடத்திலிருந்து அடுத்த இடம் என்று.. அவர்களது விசாரணை அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது..!! விஜயசாரதியின் புகைப்படத்தை காட்டி அவனை நினைவுறுத்துவது.. பிறகு மீராவின் அடையாளங்களை சொல்லி அந்த மாதிரி யாராவது ஒரு பெண்ணை அந்த விஜயசாரதி காதலித்தானா என கேட்பது.. என்கிற மாதிரிதான் அவர்களது விசாரணை பொதுவாக அமைந்திருந்தது..!!

விஜயசாரதியை பற்றி விசாரிக்க விசாரிக்க.. அவனது தீய குணங்களும், கெட்ட சகவாசங்களும்.. மேலும் மேலும் அவர்களுக்கு தெரியவந்தன..!!

பேகும்பேட்டில் ஒரு விபச்சார விடுதி..

“இவளுக எல்லாம் அவன் காதலிச்சவளுகதான்.. ஒவ்வொருநா ராத்திரிக்கும் ஒவ்வொருத்தி..!!” – தன்னிடமிருந்த பெண்களை கைகாட்டி பேசினாள், அந்த விடுதியின் தலைவி.

ஹைடெக் சிட்டியில் ஒரு பார்..

“என்ன ஸார்.. விஜயோட ஃப்ரண்டுன்றீங்க.. டோப் இருக்கானு கேட்டா இல்லைன்றீங்க..??” – மிதமிஞ்சிய போதையில் வாய்குழற சொன்னான், விஜயசாரதியுடன் கல்லூரியில் படித்த ஒருவன்.

துமுகுன்ட்டாவில் ஒரு சேரிப்பகுதி..

“அவன்ட்ட சொல்லி வைங்க.. என்னைக்கா இருந்தாலும் என் கையாலதான் அவனுக்கு சாவு.. அண்ணா அடுத்த மாசம் வெளில வர்றாரு..!!” – விஜயசாரதி இறந்துபோன விஷயம் தெரியாமல் கறுவினான், ஒற்றை கையை இழந்துபோயிருந்த ஒரு ரவுடி.

எர்ரகடாவில் ஒரு ஓபன் கார்டன் ரெஸ்டாரன்ட்..

“அதெல்லாம் ஒரு கனவா நெனச்சு மறந்துட்டு.. இப்போ நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன் ஸார்..!! தயவு செஞ்சு.. என் வீட்டுக்காரர்ட்ட மட்டும் இந்த விஷயத்தை சொல்லிடாதிங்க.. உங்களை கையெடுத்து கும்பிடுறேன்..!!” – கையில் ஒருவயது குழந்தையுடன் கெஞ்சினாள், விஜயசாரதியிடம் காதலென்ற பெயரில் கற்பிழந்த இன்னுமொரு பெண்.

அசோக் ஹைதராபாத்தில் விஜயசாரதி பற்றி விசாரித்து அலைந்து கொண்டிருந்த சமயத்தில்.. மீரா சென்னையில் வளைகுடா பயணத்தின் விசா பிரச்சினைக்கு அலைந்து கொண்டிருந்தாள்..!! வேலைக்கு ஏற்பாடு செய்திருந்த கன்சல்டன்ஸிக்கு சென்று மேனஜரை சந்தித்து பேசினாள்.. வெளிநாட்டில் தான் தங்குவதற்கான ஏற்பாட்டை பற்றி விவாதித்தாள்..!! முதல் மாச சம்பளம் வரும்வரை செலவுக்கு தேவையென.. தனது செயின், ப்ரேஸ்லட்டை எல்லாம் விற்று காசாக்கினாள்..!! அந்தக்காசின் கணிசமான தொகையை.. ஐயாயிரம் சவூதி ரியாலாக மாற்றி.. தனது ஹேண்ட் பேகுக்குள் திணித்தாள்..!!

“எந்த நாட்டுக்கு போறேன்னு கூட சொல்ல மாட்டியா..??” கேட்ட மனோகரிடம்,

“எனக்கு சொல்ல விருப்பம் இல்ல..!! இன்னும் ரெண்டே நாள்.. அப்புறம் நீங்க யாரோ நான் யாரோ..!!” என்று வெடுக்கென சொன்னாள்.

“ஹ்ம்ம்.. எதுக்கு இந்த கஷ்டம்லாம்..?? இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல.. நீ மட்டும் கொஞ்சம் உன் பிடிவாதத்தை விட்டுட்டேன்னு வச்சுக்கோ.. ராணி மாதிரி வாழலாம்..!!” பல்லிளித்தவனிடம்,

“செருப்பு பிஞ்சுடும்..!!!!” கண்களில் கோபக்கனலுடன் எச்சரித்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பே.. வெளிநாட்டு பயணத்திற்கான பேக்கிங் வேலைகளை ஆரம்பித்திருந்தாள்.. ஒரு பெரிய பெட்டியில் தனது உடைகளை எல்லாம் அடுக்கி வைத்தாள்.. மறவாமல் அந்த உடைகளுக்கு நடுவே அசோக்கின் புகைப்படத்தை செருகினாள்..!!

இன்னொரு பக்கம்.. கொலையாளியை கண்டுபிடிக்கிற முயற்சியில் மலரவன் மிகத் தீவிரமாக இறங்கியிருந்தார்..!! உயர் அதிகாரியிடம் டெலிஃபோனில் பேசியவர்.. ‘கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவேன் ஸார்’ என்று நம்பிக்கையாக சொன்னார்..!! கொலை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகை பிரதிகளை கவனமாக ஆராய்ந்தார்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஒரு வரி விடாமல் கூர்ந்து வாசித்தார்..!! விஜயசாரதியிடமும், காசியிடமும் சமீபகாலமாக மொபைலில் பேசியவர்களை ஒவ்வொருவராக விசாரித்து முடித்தார்..!! தண்டையார்பேட்டை ஸ்லம் ஏரியாவில்.. சேறு நிறைந்த ஒரு சாலையில் நடந்து சென்று.. ஒருவாரம் முன்பு ஜெயிலில் இருந்து ரிலீசான ஒரு ரவுடியின் வீட்டு கதவை தட்டினார்..!! ஒரு நாளுக்கு நான்கு மணி நேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்துக்கொண்டு.. மிச்ச நேரங்களில் தனது ஜீப்பில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்..!!

மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் கழித்துவிட்டு.. நான்காம் நாள் காலை.. அசோக் வெறுங்கையுடன் சென்னை திரும்பினான்..!! மீராவும் அன்று மாலை வெளிநாட்டுப் பயணத்திற்கு தன்வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாள்..!! மூன்று நாட்கள் அலைச்சல்.. திரும்ப வருகையில் ரயில் பயணம்.. களைப்படைந்து போயிருந்தான் அசோக்.. வந்ததுமே தனது அறைக்கு சென்று படுக்கையில் வீழ்ந்தவன்.. அடித்துப் போட்டாற்போல உறங்கிப் போனான்..!!

மகன் தூங்கட்டும் என்று விட்டுவிட்டிருந்த பாரதி.. மதியம் ஆனதும் ஒரு காபியுடன் சென்று அவனை எழுப்பினாள்..!! பல்துலக்கிவிட்டு அந்த காபியை அவன் உறிஞ்ச.. அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள், மெல்ல ஆரம்பித்தாள்..!!

“என்னடா.. என்னாச்சு.. உபயோகமா ஏதாவது தெரிஞ்சதா..??”

அம்மா கேட்கவும், ஹைதராபாத்தில் நடந்த விஷயங்களை அசோக் சுருக்கமாக அவளுக்கு எடுத்துரைத்தான். அவன் சொன்னதை எல்லாம் அவளும் கவனமாக கேட்டுக் கொண்டாள்.

“அவன் ஏமாத்தின இன்னும் ரெண்டு மூணு பொண்ணுகளை பத்தித்தான் தகவல் கெடைச்சது மம்மி.. மீரா பத்தி எந்த தகவலும் கெடைக்கல..!!”

“ம்ம்.. அப்போ அலைச்சல்தான் மிச்சமா..??”

“அப்படியும் சொல்லிட முடியாது..!! அந்த விஜயசாரதி பத்தி நெறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது..!! அப்புறம்.. இங்க சென்னைல அவனோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சது.. அவங்களுக்கு கண்டிப்பா மீரா பத்தி தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.. அவங்களை பத்தின டீடெயில் கலக்ட் பண்ணிட்டு வந்திருக்கேன்..!! ஆனா.. இப்போ உடனே அவங்களை போய் விசாரிக்க முடியாது.. கொலை நடந்திருக்குற இந்த சமயத்துல நான் போய் விசாரிச்சா.. தேவையில்லாத சந்தேகம் வரும்..!! அதனால.. இதை கொஞ்சநாள் ஆறப்போட்டு.. அப்புறம் அவங்களை விசாரிக்கலாம்னு நெனைச்சிருக்கேன்..!! அதுவரை மீராவுக்கு மட்டும் எதுவும் ஆகிடக்கூடாது மம்மி..!!” அசோக் கவலையாக சொல்ல,

“ஹ்ம்ம்.. அவளுக்கு எதுவும் ஆகாது.. நீ தேவையில்லாம கவலைப்படாத..!! அவ கண்டிப்பா உனக்கு கெடைப்பா.. நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் சேர்ந்து வாழப் போறீங்க.. அம்மாவுக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல..!!” பாரதி அவனுக்கு நம்பிக்கையூட்டினாள்.

“தேங்க்ஸ் மம்மி..!!”

“அம்மா கீழ போறேன்டா.. இன்னும் அரைமணி நேரத்துல சாப்பாடு ரெடியாயிடும்..!! காலைல வேற நீ சாப்பிடல.. குளிச்சுட்டு கீழ வா.. மொதல்ல வந்து நல்லா வயிறாற சாப்பிடு.. என்ன பண்ணலாம்னு அப்புறமா யோசிச்சுக்கலாம்..!! சரியா..??” சொல்லிவிட்டு பாரதி அந்த அறையினின்று வெளியேறினாள்.

குளித்து முடித்து வேறு உடை மாற்றி கீழே செல்ல.. அசோக் முழுதாக ஒருமணி நேரம் எடுத்துக் கொண்டான்..!! படியிறங்கி கீழே வந்தவன், நேராக ஹாலுக்குத்தான் சென்றான்..!! ஹாலில் இருந்த டிவியில் ஜஸ்டின் டிம்பர்லேக் அலறிக்கொண்டிருந்தார்..!!

“Aren’t you something to admire..?
‘Cause your shine is something like a mirror..!!”

டிவிக்கு முன்னால் கிடந்த சோபாவில் சங்கீதா அமர்ந்திருந்தாள்.. ஆனால் டிவியில் ஓடிய பாடலுக்கு காதுகொடாமல்.. கையில் விரித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தில் தன் கவனத்தை செலுத்தியிருந்தாள்..!! அசோக் வந்ததும் புத்தகத்திலிருந்து முகத்தை திருப்பி.. அண்ணனை ஏறிட்டு புன்னகைத்தாள்..!! அசோக்கும் பதிலுக்கு புன்னகைத்து.. அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்..!! சங்கீதா உடனே ரிமோட்டை எட்டி எடுத்து சேனல் மாற்றினாள்.. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு சென்றவள்.. ஒரு சேனலில் விளம்பரம் ஓடியதை பார்த்ததும்.. அதிலேயே வைத்துவிட்டு அசோக்கிடம் திரும்பி கேலியாக சொன்னாள்..!!

“ஹ்ம்ம்.. நீங்கதான் டிவில அட்வர்டைஸ்மன்ட் மட்டுந்தான பார்ப்பிங்க.. பாருங்க..!!”

“ஹஹா.. லூஸு..!!”

தங்கையின் கிண்டலுக்கு அசோக் மெலிதாக சிரித்தான்..!! அவளும் சிரித்துவிட்டு மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்க.. இவன் டிவியை பார்க்காமல்.. டீப்பாயில் இருந்த செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டான்..!! ரெட்ஹில்ஸ் கொலை கேஸ் புலன் விசாரணையில்.. சமீபத்தைய முன்னேற்றத்தை வாசித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்தான்..!!

“சங்கீஈஈஈ..!!!!” சமையலறையில் இருந்து பாரதி அலறினாள்.

“என்ன மம்மி..??”

“இங்க கொஞ்சம் வாடி..!!”

“என்னன்னு சொல்லு..!!”

“ப்ச்.. வாடின்னு சொல்றேன்ல.. வா..!!!”
பாரதியின் குரல் அவ்வாறு கோபமாக ஒலிக்க.. சங்கீதா இப்போது எரிச்சலானாள்..!! அந்த எரிச்சலை பதிலுக்கு கத்துவதில் காட்டாமல்.. பக்கத்தில் இருந்த அண்ணனிடம் குறைபட்டுக் கொண்டாள்..!!

“ஹ்ம்ம்.. பாருடா இந்த மம்மியை.. நிம்மதியா ஒரு புக் கூட படிக்க விடமாட்டேன்றாங்க..!! ச்சே..!!”

சலிப்பாக சொன்னவள், கையிலிருந்த புத்தகத்தை மடக்கி, டம்மென்று டீப்பாய் மீது வைத்தாள். அசோக்கின் பார்வை இப்போது எதேச்சையாக அந்த புத்தகத்தின் மீது விழுந்தது. அந்த புத்தகத்தை பார்த்ததும், அவனுடைய நெற்றி நெருக்கமாய் சுருங்கிக் கொண்டது. அது.. மும்தாஜ் இவனிடம் படிக்க சொல்லி கொடுத்த அந்த புத்தகம்.. கிறித்தவ மத போதனைகளை உள்ளடக்கிய புத்தகம்.. ஆர்வமில்லாமல் இவன் இத்தனை நாட்களாய் படிக்காமலே வைத்திருந்த புத்தகம்..!!

“ஹேய்.. சங்கி.. இ..இது.. இது என்னோட..” அசோக் முடிக்கும் முன்பே,

“ம்ம்.. ஆமாம்.. உன் பேக்ல இருந்த புக்தான்.. போரடிக்குதுன்னு நான்தான் எடுத்துட்டு வந்து படிச்சுட்டு இருந்தேன்..!! சும்மா சொல்லக் கூடாது.. ஜீசஸோட லைஃப் ஹிஸ்டரி.. படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..!!”

சங்கீதா சிந்திய வார்த்தைகளில் உண்மையான ஒரு உற்சாகம் பொங்கியது..!! அசோக் இப்போது மீண்டும் அந்த புத்தகத்தின் மீது பார்வையை வீசினான்.. புத்தக முகப்பில் பெரிதாக எழுதப்பட்டிருந்த அந்த தலைப்பை கண்களாலேயே வாசித்தான்..!!

“தட்டுங்கள் திறக்கப்படும்..!!”

அதை வாசித்த அந்த நொடியிலேயே…

“மனம் போலே எல்லாம் நடக்கும்..!!” டிவியில் பாண்ட்ஸ் விளம்பர பாடல் ஓடியது.

“போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!”

என்று.. பாரதி மூன்று நாட்களுக்கு முன்னால், கிருஷ்ண பகவான் கோவிலில் வைத்து அவனிடம் சொன்னதும் நினைவுக்கு வர.. அவனது உடலில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு எழுந்து அடங்கியது..!! அந்த புத்தகத்தை எடுப்பதற்காக மெல்ல கையை நீட்டினான்.. புத்தகத்தை பற்றி டீப்பாயில் இருந்து எடுத்தான்..!! அதே நேரத்தில்.. சங்கீதா அம்மாவின் அழைப்பிற்காக சோபாவில் இருந்து அவசரமாய் எழ.. ஆக்சிடன்டலாக அண்ணனின் கையை தட்டிவிட்டாள்..!!

அந்த புத்தகம் அசோக்கின் கையிலிருந்து விடுபட்டு.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! சங்கீதா ‘ஓவ்’ என்று ஓசை எழுப்பிக்கொண்டே.. அந்த புத்தகத்தை கீழே விழாமல் பிடிப்பதற்காக.. கைநீட்டியவாறே திடீர் பரபரப்புடன் நகர்ந்தாள்..!! அந்த புத்தகத்தில் இருந்து விடுபட்ட அது மட்டும்.. காற்றில் மிதந்து.. பறந்தவாறே கீழிறங்கி.. அசோக்கின் மடியில் வந்து மெல்ல அமர்ந்தது..!!

அது.. ஒரு புகைப்படம்.. ஒரு பெண்ணின் புகைப்படம்..!! அந்தப் பெண்ணின் முகம் மட்டுமே பிரதானமாக தெரியுமாறு.. படம்பிடிக்கப்பட்ட புகைப்படம்..!! அந்த முகம் கூட முழுதாக தெரியவில்லை.. அந்தப்பெண் தனது துப்பட்டாவால் பாதி முகத்தை மூடி சுற்றியிருக்க.. அவளது கண்கள் மட்டுமே தெளிவாக பிரகாசித்தன..!!

அசோக் அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தான்..!! பார்த்ததுமே அவனது விழிகள் படக்கென விரிந்து கொண்டன.. இருதயம் வெடுக்கென சுண்டி விடப்பட்டு துடித்தது.. நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு அதிர்வலை.. நாளங்களிலெல்லாம் ரத்தம் புது வேகத்துடன் பீய்ச்சியடித்தது..!!

எத்தனை நாட்கள் அந்த கண்களை மணிக்கணக்கில் பார்த்தவாறு அமர்ந்திருப்பான்..?? எத்தனை காதலுடன் அந்த விழிகளின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் பார்த்து ரசித்திருப்பான்..?? அந்த கண்கள்தானே அவனுடைய படுக்கையறை சுவற்றை முழுதாக ஆக்கிரமித்திருக்கின்றன.. அந்த பார்வைதானே அவனது விழிவழி பாய்ந்து, இதயத்தை சூழ்ந்து பிசைந்தது..!! புகைப்படத்தை பார்த்த அந்த நொடியே அவனால் கண்டுகொள்ள முடிந்தது..அவனையும் அறியாமல் அவனது உதடுகள் முணுமுணுத்தன..!!

“மீரா..!!!!!”

அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த புகைப்படத்தையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க.. சங்கீதா கீழே விழுந்த புத்தகத்தை, கையால் அள்ளி வாரி எடுக்க.. டிவியில் அந்த வாசகத்துடன் பாண்ட்ஸ் விளம்பரம் நிறைவு பெற்றது..!!

“இப்போ வந்ததுல லவ் ஸ்டோரில ட்விஸ்ட்..??”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments