ஆண் ஓரின சேர்கை கதை – பூங்காவில் ஒருநாள்

ஒருநாள், நானும் எனது 2 நண்பர்களும் $(%^$(&%^$& பூங்காவில் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு வெகு நேரமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அது மதிய நேரம். ஆங்காங்கே ஒரு சில கல்லூரி இளைஞர்கள், சில ஆண்கள் தனிமையாக நடப்பதும், இருக்கையில் இருந்து கொண்டு சுற்றி நோட்டம் விடுவதுமாக இருந்தார்கள். நானும் எனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேனே தவிர என் கவனம் எல்லாம் அந்த நபர்களின் மீது தான் இருந்தது.

பார்ப்பதும், பேசுவதும் அதன் பிறகு ஒருவருக்கொருவர் பிரிந்து செல்வதுமாக ஒரு காட்சி….

வெகு நேரமாக நோட்டம் மட்டுமே விட்டுக்கொண்டிருப்பது போல சில காட்சிகள்….

ஒருவருக்கொருவர் பார்ப்பதும், பிடித்திருந்தால் தொடர்ந்து பார்ப்பதும், பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னர் மெதுவாக பேச ஆரம்பித்து அப்படியே கொஞ்ச தூரம் பேசிக் கொண்டே காலாற நடப்பதும் திடிரென்று காணாமல் போவதுமாக ஒரு காட்சி…

சற்றே வயதான பெருசுகள் தனிமையில் இருக்கும் இளசுகளின் அருகில் சென்று பேச்சிக் கொடுக்கும் காட்சி…

பிடித்திருந்தால் இளசுகளின் தோளிலோ, அல்லது கையைப் பிடித்து சரசமாடும் காட்சி…. என்று பலவிதமான காட்சிகள் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தது. இத்தனை காட்சிகளையும் கவனமாக பார்த்தால் மட்டுமே யாரும் புரிந்துக் கொள்ளலாம். மிக சாதுரியமாக நடக்கும் வேலைகள் இவை. அவ்வப்போது கவனித்தால் அவற்றை எல்லாம் உடனே புரிந்துக்கொள்ள முடியாது.

ஒருபக்கம் என் நண்பர்களோடு பேசிய படியே இன்னொரு பக்கம் இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் அங்கும் இங்கும் பார்த்ததை கவனித்து ஒரு இளைஞன் எனக்கு கொக்கி போட்டுக் கொண்டிருந்திருக்கிறான். நான் அங்கும் இங்கும் பார்த்ததில் என் கண்ணில் அவன் மட்டும் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருந்தான். நான் பார்க்க மாநிறமாகவும், நல்ல ஆஜானுபாகுவான உடல் தோற்றத்தோடும் இருப்பேன். எனவே அவனுக்கு என்னை பிடித்து விட்டது போல. ஆனால் நான் முதலில் அவனை கவனத்தில் கொண்டிருக்கவில்லை. அவனது முகத்தைப் பார்க்கும் படியாக அவன் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்துக் கொண்டு என்னைப் பார்க்க ஆரம்பித்த பிறகு தான் நான் அவனை முழுவதுமாக கவனிக்க ஆரம்பித்தேன்.

அவன் பார்க்க அழகாக இருந்தான். கட்டிப்பிடித்தால் என் கைகளுக்குள் அடங்கிவிடும் உடல்வாகு அவனுக்கு. வயது இருபதிலிருந்து இருபத்திரெண்டுக்குள்ளாக இருக்கும். எனக்கும் அவனை மிகவும் பிடித்துவிட்டது. அதன் பிறகு நானும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இருவரும் கொஞ்ச நேரமாக ஒருவருக்கொருவர் அவ்வப்போது காதல் ரசம் சொட்ட பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு நான் பார்க்கும் போது அவன் கொஞ்சமாக வெட்கப்பட ஆரம்பித்தான். நான் அவனை பார்க்கும் போதெல்லாம் முகத்தில் ஒருவித புன்னகை புரிந்து தலை கவிழ்ந்து விடுவான். நானும் சில நேரங்களில் சிரித்த முகமாக இருந்தேன். அவ்வப்போது என் நண்பர்களுக்கு தெரியாமல் என் கைகளை அசைத்து சைகைகளையும் செய்தபடி இருந்தேன். திடிரென்று என் நண்பன் ஒருவன்,

“யார் அந்த பையன்? அவன் உன்ன பார்த்து சிரிக்கிறான், நீ அவன பார்த்து சிரிக்கிற! யாருடா அது?” என்று கேட்டுவிட்டான்.

அந்த பையனைப் பார்த்து சிரிப்பதை எல்லாம் எனது நண்பர்கள் என்னிடம் கேட்பதற்கு முன்பே கவனித்து விட்டார்கள் என்பதை நான் ஏற்கனவே உணர்ந்திருந்தேன்! அதனால், மிகத் தெளிவாக ”

என் பக்கத்துக்கு ஊரு மச்சி, தெரிஞ்ச பையன் தான், காலேஜ் கட் அடிச்சிட்டு வந்துருக்கான் போல, அதான் என்ன பார்த்து பேந்த பேந்த முழிக்கிறான்” என்று சொன்னேன். அவர்களும் என்னுடைய ரெடி மேட் பதிலை நம்பினார்கள். “சரிடா, இனி கெளம்பலாம், நேரம் ஆகிடுச்சி” என்று ஒருவன் சொல்ல, அதன்படியே இருக்கையிலிருந்து மூவரும் எழுந்து விட்டோம்.

ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. சட்டென்று, “மச்சி அவன்கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடுறேன்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் அந்த பையனிடம் சென்றேன். மனதுக்குள் பயமாக இருந்தாலும் பக்கத்தில் சென்று “ஹாய்” என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தேன், என் நண்பர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள்.

நான், “உன் மொபைல் நம்பர் என்ன?”, அவனுக்கு தர மனம் இல்லை. நான் பக்கத்தில் சென்றதுமே மிகவும் பயந்திருந்தான். என் நண்பர்கள் போய்க் கொண்டிருந்தார்கள், நிற்பதற்கோ யோசிப்பதற்கோ நேரமில்லை, எனக்கு உடனே போக வேண்டும்.

“சரி, இது என் நம்பர் 98” என்று சொல்ல ஆரம்பித்தேன். அவன் அதை நோட் செய்யவில்லை. எனக்கு சட்டென்று கடுப்பாகியது. “என்னடா இது!!” என்று மீண்டும் ஒருமுறை நண்பர்களை திரும்பி பார்த்துவிட்டு அவனைப் பார்த்தேன். அவன் தரையைப் பார்த்தபடியே, “இப்போவே ஏதும் செய்ய முடியாதா!!” என்று அப்பாவியாக கேட்டான்.

Comments