ஐ ஹேட் யூ, பட் – பகுதி 1

ஐ ஹேட் யூ, பட்..

இது ரொம்ப சிம்பிளான, கொஞ்சம் ஜாலியான கதைதான்.. படிக்கிறவங்களுக்கு நெறைய மனஅழுத்தம் தராம, இலகுவான உணர்வை கொடுக்குற விதத்துலதான் கதையை எழுத ப்ளான் பண்ணிருக்கேன்.. ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே சின்னப்புள்ளத்தனமான கேரக்டர்ஸ்.. அவங்களுக்கு இடையிலான நட்பு, பிரச்னை, சீண்டல், காதல், மோதல்.. இதுதான் மொத்தக்கதையுமே..!! கதைன்னு பாத்தா ரெண்டு வரில சுருக்கமா சொல்லிறலாம்.. அதை நான் நீட்டி முழக்கி சொல்லப்போறேன்..!! உங்களுக்கு எந்த அளவுக்கு புடிக்குதுன்னு பாக்கலாம்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அத்தியாயம் 1

“One of the most commonly known cardiac surgery procedures is the coronary artery bypass graft, also known as bypass surgery..!!”

ஸ்வர்ணா டிவியில் ‘ஆரோக்ய ஜீவனா’ ப்ரோக்ராம் டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டிருந்தது. காலங்காத்தாலேயே கார்டியாக் சர்ஜரி பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்னணியில் குரல் ஒலிக்க, திரையில் நிஜமான அறுவை சிகிச்சையையே க்ளோசப்பில் காட்டிக் கொண்டிருந்தார்கள். பச்சை நிற உடை அணிந்திருந்த பேஷன்ட், மார்பு கிழிக்கப்பட்டு மல்லாந்திருந்தார். சுற்றி நின்றிருந்த மூன்று நான்கு சர்ஜன்கள், அவருடைய ஹார்ட்டுக்குள் கை விட்டு நோண்டிக் கொண்டிருந்தார்கள். குருதியில் குளித்திருந்த இருதயம் படக் படக்கென துடித்துக் கொண்டு கிடக்க, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலாலான ஊசிகளையும், கிடுக்கிகளையும் தாங்கிய கைகள், கவனமாக அந்த இருதயத்தை குத்தி குத்தி பார்த்துக் கொண்டிருந்தன.

விரிந்த விழிகளும், திறந்த வாயுமாக ப்ரியா டிவியையே வெறித்துக் கொண்டிருந்தாள். காதுகளை கூர்மையாக்கி, வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளை கவனமாக கிரஹித்துக் கொண்டிருந்தாள். வாய்க்குள் இருந்த உப்புமாவை அவ்வப்போது அசை போடுவதும், அப்புறம் அசை போட்டதை விழுங்க மறந்து அப்படியே ஃப்ரீஸ் ஆவதுமாக இருந்தாள். டிவி நிகழ்ச்சியோடு அந்த அளவுக்கு ஒன்றிப் போயிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த சோபாவிலேயே அவளுக்கு அருகே வரதராஜன் அமர்ந்திருந்தார். சர்க்கரை தோய்க்கப்பட்ட உப்புமா தாங்கிய கையை மகளுடைய உதட்டுக்கருகே நீட்டியவாறு உறைந்திருந்தார். அரைத்ததை விழுங்கிவிட்டு அவள் மறுபடியும் எப்போது வாய் திறப்பாள் என்று, அவளுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவர், அவளுடைய இந்த குழந்தைத்தனமான செய்கையை கண்டு சற்றே நொந்து போயிருந்தார். மகளுடைய முகத்தையும், டிவி திரையையும் மாறி மாறி பார்த்தவர், இப்போது கெஞ்சலான குரலில் கேட்டார்.

“சாப்பிடுறப்போ போய் இதெல்லாம் பாக்கனுமாடா செல்லம்..??”

“ஏன்.. பாத்தா என்ன..??” ப்ரியா டிவியில் இருந்து பார்வையை விலக்காமலே கேட்டாள்.

“கசாப்புக்கடை மாதிரி எதையோ போட்டு அறுத்துட்டு இருக்கானுக.. இந்த கருமம் புடிச்சவனுக அதை வேற படம் புடிச்சு டிவில காட்டிட்டு இருக்கானுக.. பாத்தாலே எனக்கு குடலை புரட்டிட்டு வருது..!!” வரதராஜன் முகத்தை சுளித்தவாறு சொல்ல, ப்ரியா டென்ஷனானாள்.

“கசாப்புக்கடையா..?? கார்டியாக் ஆபரேஷன் பண்ணிட்டு இருக்காங்க டாடி..!!”

“அப்படின்னா..??”

“ஷ்ஷ்ஷ்ஷ்..!! ஸாரி.. இங்லீஷ் உங்களுக்கு நஹி ஆத்தா ஹே’ல..?? தமிழ்ல சொல்றேன்.. கார்டியாக் ஆபரேஷன்னா இருதய அறுவை சிகிச்சைன்னு அர்த்தம்.. போதுமா..??”

“ம்ம்ம்ம்.. இஞ்சினியரிங் படிச்ச பொண்ணுக்கும்.. இருதய அறுவை சிகிச்சைக்கும் என்னம்மா சம்பந்தம்..??” வரதராஜன் தலையை சொறிந்தார்.

“ஐயோ.. அறிவை வளத்துக்குறதுக்கு லிமிட்டேஷனே இல்லை டாடி..!! இப்போ.. ம்ம்ம்.. உலகத்துல எந்த நாட்டுல பாம்பு, பல்லிலாம் அதிகம்னு உங்களுக்கு தெரியுமா..??”

“ஹ்ம்.. அதை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்..??”

“தெரிஞ்சுக்கணும் டாடி.. நாலு விஷயங்களை பத்தி தெரிஞ்சுக்குறது தப்பே இல்ல..!!”

“ஓஹோ..?? மொதல்ல நீ ஒழுங்கா சாப்பிடு.. சாப்பிட்டுட்டு.. நாலு விஷயம் என்ன.. நானூறு விஷயம் கூட தெரிஞ்சுக்கோ..!!”

“ப்ச்.. ஏன் டாடி இப்படி படுத்துறீங்க..?? திருவள்ளுவர் என்ன சொல்லிருக்காரு தெரியுமா..??”

“என்ன சொல்லிருக்காரு..??”

“செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈ..’ன்னு சொல்லிருக்காரு..!!”

“என்னது..?? ஈஈஈ’ன்னு சொன்னாரா..??” வரதராஜன் முகத்தை சுருக்கி குழப்பமாக கேட்டார்.

“ஐயையே.. ஈஈஈ’ன்னு இழுக்காதீங்க டாடி.. ஜஸ்ட் ஈ.. அவ்ளோதான்..!! ஈன்னா நீங்க நெனைக்கிற ஈ இல்ல..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்புறம்.. அதுக்கு என்ன அர்த்தம்..??”

“ஆங்.. சோறு துன்னுன்னு அர்த்தம்..!!” ப்ரியா கிண்டலாக சொல்ல,

“நானும் அதைத்தானம்மா அப்போ இருந்து சொல்லிட்டு இருக்குறேன்..??” வரதாராஜன் சலிப்பாக கேட்டார்.

“அயையயயோ.. அறிவை வளத்துக்க நேரம் இல்லாதப்போதான் துன்ன சொல்லிருக்காரு.. நான்தான் இப்போ அறிவை வளத்துட்டு இருக்கேன்ல..?? ச்ச.. உங்களுக்கு வெளக்கம் சொல்லியே எனக்கு வாய் கோணிக்கும் போல இருக்கு..!! எனக்கு டாடியா பொறந்துட்டு.. ஏன்தான் இப்படி ட்யூப் லைட்டா இருக்கீங்களோ..??”

“ஹாஹா.. என்னம்மா பண்றது.. உன் அப்பன் படிச்சது வெறும் எட்டாங்கிளாஸ்தான..??”

“ம்ம்ம்ம்.. போங்க டாடி.. படிப்புக்கும், அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!!”

“சரி சரி.. நான் அறிவில்லாதவனாவே இருந்துட்டு போறேன்..!! அதான் என் பொண்ணு இவ்வளவு அறிவா இருக்காளே.. அது போதும் எனக்கு..!!”

முகம் முழுதும் மலர்ச்சியும், பெருமிதமுமாய் வரதராஜன் அவ்வாறு சொல்ல, ப்ரியா இப்போது அப்படியே உருகிப் போனாள். அன்பு கொப்பளிக்கும் அவருடைய முகத்தை அவள் ஏறிட, மனதுக்குள் குபுக்கென்று அப்பாவின் மீது ஒரு பாசம் பொங்க ஆரம்பித்தது. முகத்தை பட்டென குழந்தை மாதிரி மாற்றிக் கொண்டவள், ‘ஹம்.. ஹம்.. ஹம்..’ என்று செல்லமாக சிணுங்கியவாறே, அவருடைய நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். தனது மூக்கால் அவருடைய மார்பை தேய்த்தவாறே குழைவான குரலில் சொன்னாள்.

“என்ன டாடி நீங்க.. நான் ஏதோ சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்.. அதைப்போய் சீரியஸா எடுத்துக்கிட்டு..!!”

“இதுல என்னம்மா இருக்கு.. நான் உண்மையைத்தான சொன்னேன்..?? நான் படிக்காத தற்குறியா இருந்தாலும்.. என் புள்ளைங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்க வச்சிருக்கேன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? யாராவது ‘உன் புள்ளைங்க என்ன பண்றாங்க..?’ன்னு கேட்டா.. ‘மூத்தவ சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்குறா.. சின்னவன் சென்னைல இஞ்சினியரிங் படிக்கிறான்’னு.. எவ்வளவு பெருமையா சொல்வேன் தெரியுமா..?? நீங்க ரெண்டு பேரும் என் புள்ளைகளா பொறந்ததுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்மா..!!”

“ம்ஹூம்.. அப்டிலாம் ஒன்னும் இல்ல..!! இத்தனை வருஷமா அம்மா இல்லாத குறை கொஞ்சம் கூட தெரியாம எங்களை வளர்த்திருக்கீங்களே.. நீங்க எங்க அப்பாவா கெடைச்சதுக்கு நாங்கதான் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கணும்..!! யூ ஆர் த பெஸ்ட் டாடி இன் திஸ் வேர்ல்ட்..!!” ப்ரியா உற்சாகமாக கத்த,

“ஹ்ம்ம்.. இதுக்கு என்ன அர்த்தம்..??” வரதராஜன் ஆங்கிலம் புரியாதவராய் கேட்டார்.

“இதுக்கா..?? அது… ம்ம்ம்ம்.. நீங்க ரொம்ம்ம்ப நல்லவர்ர்ர்ர்னு அர்த்தம்..!!” ப்ரியா புன்னகையுடன் சொல்லிவிட்டு, குறும்பாக கண்சிமிட்டினாள். வரதராஜன் சிரித்தார்.

“ஹாஹா..!! சரி சரி.. அப்பாவுக்கு ஐஸ் வச்சது போதும்.. இந்தா இன்னும் ரெண்டு வாய்தான்.. ஆஆஆ..!!”

“ப்ச்.. இருங்க டாடி.. சும்மா சும்மா சாப்பிடு சாப்பிடுன்னு சொல்லிக்கிட்டு..!! ஒபாமா என்ன சொல்லிருக்காரு தெரியுமா..??”

“மொதல்ல நீ உப்புமாவை சாப்பிடுமா.. ஒபாமா என்ன சொன்னார்னு அப்புறம் சொல்லலாம்..!!” வரதராஜன் சற்றே குரலை உயர்த்த,

“எனக்கு போதும்..!!” ப்ரியா வெடுக்கென்று சொன்னாள்.

“அப்டிலாம் சொல்லக்கூடாது.. கொஞ்சந்தான் இருக்கு.. என் கண்ணுல..?? சாப்பிட்ரும்மா..!!”

ப்ரியா சிணுங்கினாள். சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்தாள். ஆனால் வரதராஜன் அவளை விட பிடிவாதமாய் இருந்தார். தட்டில் இருந்த உப்புமா மொத்தத்தையும் மகளின் வாயில் திணித்த பின்தான் ஓய்ந்தார். காலி பிளேட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு நடந்தவாறே மகளிடம் சொன்னார்.

“சரிம்மா.. சீக்கிரம் கெளம்பு.. ஆபீசுக்கு டைமாச்சு பாரு..!!”

“ம்ம்.. ம்ம்..” ப்ரியா உப்புமாவை அசை போட்டுக்கொண்டே, டிவி திரையை இமைக்காமல் பார்த்துக்கொண்டே சொன்னாள்.

வரதராஜனுக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி. சின்ன வயதிலேயே வீட்டாருடன் சண்டையிட்டுக்கொண்டு பெங்களூர் ஓடி வந்தவர். ஒரு கார் சர்வீஸ் ஸ்டேஷனில் எடுபிடி வேலை செய்யபவராகத்தான் தன் வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு ஒரு பதினைந்து வருடங்கள்.. இந்த வேலைதான் என்று இல்லாமல், விதவிதமான இடங்களில் விதவிதமான பணிகள். உடல் உழைப்பை மிகவும் நாடுகிற மாதிரியான பணிகள். வயது முப்பதை நெருங்கையில், கையில் இருந்த சேமிப்பை கொண்டு ஒரு பிரிண்டிங் பிரஸ் ஆரம்பித்தார். இன்று வரை அதுதான் அவருடைய தொழில்.

காதலித்து மணம் புரிந்தவர். தான் வேலை பார்த்த தொழிற்சாலையில் தண்ணீர் பிடித்து வைக்கிற, கூட்டி பெருக்குகிற வேலைகள் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இனிமையான தாம்பத்திய வாழ்க்கையை முழுமையாக சுகிக்காமல், இடையிலேயே இழந்தவர். ப்ரியா பெருமையாக சொன்னது போல, மனைவி இறந்த பிறகு ‘பிள்ளைகளே இனி தனது உலகம்..’ என வாழ்க்கையை மிக எளிதாக மாற்றிக் கொண்டவர். மூத்தவள் இந்த ப்ரியதர்ஷினி. இளையவன் கோகுல கிருஷ்ணன். இருவர் மீதுமே அவருக்கு அளவிட முடியாத அன்பு. ஆனால் ப்ரியா மீது கொஞ்சம் அதிகப்படியான ப்ரியம் எனலாம். மறைந்த மனைவியை நினைவு படுத்தும் விதமாய், மகளுடைய நிலவு முகம் அமைந்திருந்ததே அதற்கு காரணம்.

அவர் சென்ற பிறகும் ஒரு ஐந்து நிமிடங்கள் அறுவை சிகிச்சை பாடம் கேட்டுவிட்டுத்தான் ப்ரியா சோபாவில் இருந்து எழுந்தாள். ஆபீசுக்கு கிளம்ப நேரமாகிவிட்டது சற்று தாமதமாகத்தான் அவளுக்கு உறைத்தது. அவளுடைய அறைக்குள் புகுந்து கொண்டு, அவசர அவசரமாக வேறு உடை அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். ப்ரியாவுக்கு உடை அலங்காரத்திலோ, நகை அலங்காரத்திலோ, முக அலங்காரத்திலோ பெரிய அக்கறை கிடையாது. ஏதோ ஒரு சுடிதார் எடுத்து ஏனோ தானோவென்று அணிந்து கொள்வாள். முகத்திற்கு மெலிதாக பவுடர் தீட்டிக் கொள்வாள். நடு நெற்றியில் சின்னதாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிக் கொள்வாள். அவ்வளவுதான்..!!

ஆனால்.. அந்த அலட்சியமான அலங்காரத்திலேயே, அழகான ஓவியமாய் காட்சியளிப்பாள்..!! நடு வகிடு எடுத்து படிய வாறப்பட்ட கருகருவென மினுக்கும் கேசம்.. இன்றுதான் மடல் அவிழ்ந்த மலர் போன்றதொரு பூரிப்பான முகம்.. வெளுத்த பாலில் விழுந்து துடிக்கும் கரு வண்டுகளாய் ஜீவனுள்ள கண்கள்.. அந்த கண்களில் எப்போதும் ஒருவித குறும்பு மின்னல்.. உருண்டு நீண்ட கூர்மையான மூக்கு.. தேனில் நனைந்த ரோஜா இதழ்களாய் ஈரப்பதமான உதடுகள்.. அந்த உதடுகளில் எப்போதும் ஒரு அசட்டு புன்னகை.. கோதுமையையும் சந்தனத்தையும் குழைத்து கலந்த மாதிரியாய் ஒரு மேனி வண்ணம்.. அளவாய் விரிந்து, அளவாய் குறுகி, அளவாய் அகன்ற வாளிப்பான உடற்கட்டு.. ப்ரம்மா மிக ரசனையாய் செதுக்கிய சிற்பம்தான் ப்ரியா..!!

உடை அணிந்து முடித்த ப்ரியா, ஷோல்டர் பேக் எடுத்து மாட்டிக் கொண்டாள். சார்ஜரின் பிடியில் கிடந்த செல்போனை பிடுங்கி, வந்திருந்த மெசேஜ்களை பார்வையிட்டவாறே ஹாலுக்கு வந்தாள். வரதராஜனும் இப்போது வேறு உடை அணிந்து ப்ரஸுக்கு கிளம்பி இருந்தார். கையில் ஸ்கூட்டர் சாவியுடன் தயாராக இருந்தார். கால்கள் முளைத்த காந்தள் மலராய், கொள்ளை அழகுடன் அசைந்து வரும் மகளையே ஓரிரு வினாடிகள் பெருமிதமாய் பார்த்தார்.

“எ..என்ன டாடி.. அப்படி பாக்குறீங்க..??” ப்ரியா குழப்பமாய் கேட்க,

“அறிவுல மட்டும் இல்ல.. அழகுலயும் உனக்கு அந்த ஆண்டவன் எந்த குறையும் வைக்கலைம்மா.. மகாலட்சுமி மாதிரி இருக்குற..!!” வரதராஜன் பெருமிதமாக சொன்னார்.

“ஹையோ.. போங்க டாடி..!!” ப்ரியா நாணத்தில் முகம் சிவந்தாள்.

“ஹாஹா..!! வெக்கப்படுறப்போ இன்னும் அழகா தெரியுற..!! ம்ம்ம்.. எல்லாம் எடுத்துக்கிட்டியா.. கெளம்பலாமா..??”

“ம்ம்.. கெளம்பலாம்..!!”

அடுத்த இரண்டு நிமிடங்களில் இருவரும் வீட்டை விட்டு கிளம்பியிருந்தார்கள். ஹெல்மட் தலையுடன் வரதராஜன் நிதானமாக ஸ்கூட்டரை செலுத்திக் கொண்டிருந்தார். பின் சீட்டில் அமர்ந்திருந்த ப்ரியா அவருடைய காதுக்கருகே குனிந்து ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தாள்.

‘இந்த ட்ராஃபிக் சிக்னல்லாம் எப்படி வொர்க் ஆகுதுன்னு உங்களுக்கு தெரியுமா டாடி..??’

‘நம்ம விட மோசமான எகனாமி இருக்குற ஸ்ரீலங்கால கூட பெட்ரோல் ரேட்லாம் ரொம்ப கம்மிதான் டாடி..!!’

‘குரங்குகளுக்குலாம் ஜலதோஷம் புடிக்காது தெரியுமா டாடி..??’

செல்கிற வழியெல்லாம், அவள் பார்க்கிற காட்சியெல்லாம் ப்ரியாவின் மூளையை டீஸ் செய்து, அவளை அவ்வாறு பேச வைத்தன. அவளும் அசராமல் அப்பாவை ப்ளேடு போட்டுக்கொண்டே சென்றாள். வரதராஜன் மகள் சொல்வதற்கெல்லாம் அமைதியாகவும், அப்பாவியாகவும் தலையாட்டிக் கொண்டே வந்தார்.

பிரியாவுக்கும் வரதராஜனுக்குமான காலைப்பொழுது இப்படித்தான் இருக்கும். அவர்களுடைய வீடு இருப்பது எச்.எஸ்.ஆர் லேயவுட் டீச்சர்ஸ் காலனியில். ப்ரஸ் இருப்பது மடிவாலா மாருதி நகரில். ப்ரியாவின் ஆபீஸ் அமைந்திருப்பது எலக்ட்ரானிக் சிட்டி. ப்ரியாவும், வரதராஜனும் தினமும் ஒன்றாகத்தான் வீட்டில் இருந்து, முறையே ஆபீசுக்கும் ப்ரஸூக்கும் கிளம்புவார்கள். சில்க் போர்ட் வரை ஸ்கூட்டரில் அழைத்து வந்து மகளை ட்ராப் செய்துவிட்டு, பிறகு ரைட் டர்ன் எடுத்துவிடுவார் வரதராஜன். சில்க் போர்டில் இருந்து கம்பெனி பஸ் பிடித்து ப்ரியா எலக்ட்ரானிக் சிட்டி சென்று விடுவாள்.

அவர்கள் சில்க் போர்ட் செல்வதற்குள் ப்ரியாவை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்..!! ப்ரியா பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே பெங்களூர்தான். சற்று முன்பு வரை அவள் தன் அப்பாவிடம் பேசியதை வைத்து, அவள் மஹா அறிவாளியாக இருப்பாள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். அதுதான் கிடையாது..!! நான்கு விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்கு ஆர்வம் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவள் அவ்வாறு தெரிந்து கொள்ளும் நான்கு விஷயங்கள், நான்கு நாட்கள் கூட அவளுடைய மண்டையில் தங்காது என்பதுதான் பரிதாபகரமான உண்மை. ஆனால்.. தன்னை பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எப்போதும் உண்டு. தன்னிடம் இல்லாத அறிவுக்காக எல்லோரும் தன்னை பாராட்ட வேண்டும் என்று அசட்டுத்தனமாய் எதிர்பார்ப்பாள். சுருக்கமாக சொன்னால்.. எல்லாம் தெரிந்த மாதிரி ஸீன் போடுகிற அரைகுறை..!!

கல்லூரி படிப்பிலும் ப்ரியா சராசரிதான். தட்டு தடுமாறித்தான் எஞ்சினியரிங் முடித்தாள். பார்டரில்தான் ஃபர்ஸ்ட் க்ளாசை க்ராஸ் செய்தாள். பிட் அடிப்பது, பேப்பர் மாற்றுவது மாதிரி திருட்டு வேலைகள் கூட செய்திருக்கிறாள். கேம்பஸ் இன்டர்வ்யூவில் அவளுக்கு வேலை கிடைத்தது வேறொரு விதமான கதை. அவள் போட்ட ‘இங்கி.. பிங்கி.. பாங்கி..’ எல்லாம் அவளுக்கு அதிர்ஷ்டவசமாகமும், கம்பெனிக்கு துரதிர்ஷ்டவசமாகவுமாய் அமைந்து போக.. நிறைய ‘பாங்கி’கள் சரியான விடைகளாகவும் இருந்து போக.. ரிட்டன் டெஸ்ட் கிளியர் செய்துவிட்டாள்..!! ‘கலக்குறடி ப்ரியா..!!’ என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் தன்னை தானே பாராட்டிக் கொண்டாள்.

கம்பெனியின் துரதிர்ஷ்டம், ‘விடாது கருப்பு..’ கணக்காய் டெக்னிக்கல் ரவுண்ட்டிலும் பின் தொடர்ந்தது. அவளை இன்டர்வ்யூ செய்ய வந்தவன், ப்ரியா உள்ளே நுழைந்ததுமே அவளுடைய அழகை பார்த்து, அகலமாய் வாயை பிளந்தவன்தான். அப்புறம் இன்டர்வ்யூ முடியும் வரை, பீர் குடித்த குரங்கு போல ப்ரியாவை பார்த்து ‘ஈஈஈஈ’ என இளித்துக் கொண்டே இருந்தான். ‘எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்..?’ என்பது மாதிரி ஆவாத போவாத கேள்விகளாக அடுக்கினான். ப்ரியாவும் அந்த கேள்விகளுக்கெல்லாம் மிக சீரியஸாக முகத்தை வைத்தவாறு ‘எட்டு..!!’ என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அந்த பதிலுக்கும் அந்த ஜொள்ளு வாயன் ‘பர்ஃபக்ட்.. பர்ஃபக்ட்….!!’ என்று பல்லிளித்துக் கொண்டிருந்தான்.

ப்ரியாவிடம் சில சாதகமான குவாலிபிகேஷன்கள் இருப்பதையும் இந்த இடத்தில் சொல்லியாகவேண்டும். அவளுக்கு தயக்கம், தாழ்வு மனப்பான்மை என்பதெல்லாம் துளியளவும் கிடையாது. அதிகம் பேசுவதால் தனது அம்மாஞ்சித்தனம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் அணுவளவும் கிடையாது. பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என்று நான்கு மொழிகளும் அவளுக்கு நன்றாக பேச தெரியும். அதிலும் ஆங்கிலத்தில் மிக சரளமாக பேசுவாள். பிசாத்து விஷயத்தை கூட, பிரபலமில்லாத ஆங்கில வார்த்தைகளின் துணை கொண்டு, பிரம்மாதமான விஷயம் போல எடுத்துரைக்க அவளால் இயலும். அவளுடைய அந்த திறமைதான் க்ரூப் டிஸ்கஷன் ரவுண்டில் அவளை கரையேற்றியது.

அவளோடு சேர்த்து மொத்தம் ஏழு மாணவ, மாணவிகளை ட்ரெய்னீ சாப்ட்வேர் எஞ்சினியராக தங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொள்வதாக, கேம்பஸ் இன்டர்வ்யூக்கு வந்த கம்பெனியின் எச்.ஆர் பெண், அன்று மாலை நேரத்தில் மைக்கில் அறிவித்தாள். ஆஃபர் லெட்டர் ஒரு மாதத்துக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும், டிக்ரீ முடித்த அடுத்த மாதமே கம்பெனியில் ஜாயின் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தாள். லிஸ்டில் இருந்த ப்ரியதர்ஷினி என்ற பேரை அவள் உச்சரித்ததுமே, ‘ஹேய்..!!!’ என்று கையை உயர்த்தி உற்சாகமாக கத்தினாள் ப்ரியா. தலை, கால் புரியவில்லை அவளுக்கு. ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு. உடனே அப்பாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள். வரதராஜன் ஃபோனை எடுத்ததுமே,

“டாடி…!!!” என்று பெரிதாக கத்தினாள்.

“என்னம்மா.. இன்டர்வ்யூலாம் முடிஞ்சதா.. எப்படி பண்ணிருக்குற..??”

“ஹையோ.. கஸ்டின்லாம் பயங்கர குஷ்டமா இருந்துச்சு டாடி..!!”

“என்னது..????”

“ச்ச.. கொஸ்டின்லாம் பயங்கர கஷ்டமா இருந்துச்சு டாடி..!!” ப்ரியா நெற்றியில் தட்டிக் கொண்டாள்.

“ஐயையோ.. அப்புறம் என்னாச்சு..??”

“ஆனா நான் யாரு..?? தி கிரேட் ப்ரியா..!! என்கிட்டயேவா..?? எல்லா கொஸ்டினுக்கும் டான் டான்னு ஆன்சர் பண்ணிட்டேன்..!!”

“ஹாஹா.. அதான.. என் பொண்ணா.. கொக்கா..??” பெருமையாக சொன்ன வரதராஜன், அடுத்த கணமே

“அ..அப்போ.. வேலை கெடைச்சுடுமாம்மா..??” என்று சந்தேகமாவே கேட்டார்.

“ஐயோ.. கெடைச்சுடுச்சு டாடி.. பெங்களூர்லயே போஸ்டிங்.. மாசம் இருபதாயிரம் சம்பளம்.. ஃபைனல் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் போய் ஜாயின் பண்ணிக்க வேண்டியதுதான்..!!”

“நெஜமாவா சொல்ற..??”

வரதராஜனுக்கு மட்டும் அல்ல.. காலேஜில் யாருக்குமே ப்ரியாவுக்கு வேலை கிடைத்ததை நம்ப முடியவில்லை..!! நிறைய பழப்பெண்களுக்கு, நாலைந்து நாட்களுக்கு தின்ற சோறு செரிக்கவில்லை..!! காலேஜில் எல்லார் மத்தியிலும் அவளுக்கு புதிதாக ஒரு மதிப்பு பிறந்தது. அத்தனை நாளாய் அவள் மட்டுமே அவளுக்குள் அசட்டுத்தனமாய் சொல்லித் திரிந்ததை, அதன் பிறகு ஆளாளுக்கு அவளை பார்த்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

“கலக்குற ப்ரியா..!!!!!”

அவர்கள் அவ்வாறு சொல்கையில் ப்ரியாவும் அப்படியே மனதுக்குள் பூரித்துப் போவாள். கால்கள் தரையில் இருந்து மேலெழுந்து, காற்றில் மிதப்பது போல உணர்வாள்.

வெயிட் வெயிட்.. சில்க் போர்ட் வந்து விட்டது.. மீதியை அப்புறம் பார்க்கலாம்..!! ஃப்ளை-ஓவருக்கு சற்று தூரமாகவே ஸ்கூட்டர் வேகத்தை குறைத்து, ப்ரேக் அடித்து நிறுத்தினார் வரதராஜன். ப்ரியா பின் சீட்டில் இருந்து குதித்து கீழே இறங்கிக் கொண்டாள்.

“பாத்து போம்மா..”

“நான் போய்க்கிறேன் டாடி.. நீங்க பாத்து போங்க.. சிக்னல் விழுந்துடுச்சு பாருங்க..!!”

“சரிம்மா.. டாடி கெளம்புறேன்.. நைட்டு பாக்கலாம்..” வரதராஜன் சொல்லிக்கொண்டே, ஆக்சிலரேட்டரை முறுக்கினார்.

“பை டாடி..” ப்ரியா அவருடைய முதுகை பார்த்து கத்தினாள்.

அப்பா கண்ணில் இருந்து மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்புறம் அவள் நின்றிருந்ததற்கு பக்கவாட்டில் சென்ற, சிறிது தூரத்திலேயே வளைவாக இடப்பக்கம் திரும்பிய, அந்த சர்வீஸ் ரோட்டில் இறங்கி, பொறுமையாக நடந்தாள். சாலையை க்ராஸ் செய்து பஸ் ஸ்டாப்பை அடைந்தாள். மணிக்கட்டை ஒருமுறை திருப்பி பார்த்தவள், கம்பெனி பஸ்ஸின் வருகைக்காக கைகளை கட்டிக்கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள்.

சரி.. நாம் எங்கே விட்டோம்..?? ஆங்.. யெஸ்.. டிக்ரீ முடிக்கும் முன்பே ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் ப்ரியாவுக்கு வேலை கிடைத்துவிட்டது.. சரியா..?? ஆனந்தக் கண்ணீருடன் அவள் ஆஃபர் லெட்டரை கையில் வாங்கி ஐந்து வருடங்களுக்கும் மேலாயிற்று. இன்னும் அதே கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள். ட்ரெய்னீயாக சேர்ந்தவள் இப்போது சீனியர் சாஃப்ட்வேர் இஞ்சினியர்..!! சம்பளமும் இப்போது அப்போதை விட மூன்று மடங்கு ஆகிவிட்டது.

அவளுடைய சாப்ட்வேர் டெவலப்மன்ட் வேலை, இன்று வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல்.. அவள் அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொள்வது போல.. ‘கூல் ப்ரியா.. கூல்..’ என்றுதான் சென்று கொண்டிருக்கிறது. அவளது திறமை குறைபாடு அவளுடைய வேலையை எந்த வகையிலும் பாதிக்கவில்லையா என்று கேட்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! தனது அரைகுறை மென்பொருள் அறிவை வைத்துக்கொண்டு.. ஐந்து வருடங்களாக அவள் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் தலையில் சட்னி அரைத்துக் கொண்டிருக்கிறாள் என்றால்.. அதற்கு மிக முக்கியமான காரணகர்த்தா ஒருவன் இருக்கின்றான்..!! அவன் பெயர் அசோக்..!!

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments