ஐ ஹேட் யூ, பட் – பகுதி 11
அத்தியாயம் 7
புகழ்ச்சியை ‘போதை’ என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. கண்ணை மறைக்க கூடியது அது. புத்தியை மழுங்கடிக்க செய்வது அது. ப்ரியாவுக்கு தன்னை யாராவது புகழ்ந்தால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் தன்னை பற்றி பெருமையாக பேசும்போது அவளுடய மனதிலும், உடலிலும் பரவுகிற அந்த பரவசம் பிடிக்கும். சிறியதொரு பாராட்டுக்கே சிட்டென விண்ணில் பறக்க ஆரம்பித்து விடுவாள். ஆயிரம் பேர் கூடியுள்ள அரங்கில், அத்தனை பெரும் அவளுக்காக கைகள் தட்டினால் என்ன ஆவாள்..?? அருகில் இருக்கும் அசோக்கை மறந்து போவாள்..!!
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
‘தான்’ என்ற எண்ணம் தகாத கிருமிக்கு ஒப்பானது. அன்பென்ற தூய்மையான பாலை திரித்து விட கூடியது அது. வலுவான உறவில் கூட விரிசலை ஏற்படுத்தி விடும் வல்லமை கொண்டது அது. அந்த கைதட்டல்கள் எல்லாம் ‘தனக்கு கிடைக்க வேண்டியவை’ என்ற எண்ணம் அசோக்கின் மனதுக்குள் கிருமியென கிளம்பி, அவன் ப்ரியா மீது வைத்திருந்த அன்பென்ற பாலில் சென்று விழுந்தது. தன்னுடன் இருப்பவர்கள் மத்தியில் தன் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவன். தன்னை சுற்றி நடக்கிற சம்பவங்கள் பிடிக்காத பாதையில் பயணிக்கையில், தான் விரும்புகிற பாதைக்கு திருப்பிவிட துடிப்பவன். தனது உழைப்புக்கு மற்றொருவருக்கு பெரும்பாராட்டு என்ற அதிர்வு.. அத்தனை நாளாய் தனது கைக்குள் இருந்த ப்ரியா, தன்னை மீறி செல்வது போன்றதொரு உணர்வு.. இவைகளுடன் அவள் இவனை கண்டுகொள்ளவில்லை என்கிற நினைவும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வான்..?? அவளை விட்டு விலகி நடப்பான்..!!
விலகி நடந்த அசோக், மீட்டிங் ஹாலில் இருந்து வெளிப்பட்டதுமே விடுவிடுவென சென்று தனது க்யூபிக்கலில் அமர்ந்து கொண்டான். இன்னும் மீட்டிங் முடிந்து யாரும் திரும்பியிருக்காத நிலையில், அந்த தளத்தில் அவன் மட்டுமே இப்போது தனித்திருந்தான். சிஸ்டம் முன் அமர்ந்து கீ போர்டில் எதையோ நோக்கமில்லாமல் தட்டினான். அவனுடைய மனதை ஒரு இனம்புரியாத அழுத்தம் நிரப்பியிருந்தது. ஐந்தரை வருடங்களாக ப்ரியாவுடனான நட்பில், இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையை அவன் இப்போதுதான் சந்திக்கிறான். இந்த மாதிரியான சூழ்நிலைக்கு அவன் தயாராயிருக்கவில்லை. எப்படி இதை கடந்து செல்வது என்றும் அவன் புத்திக்கு பிடிபடவில்லை.
அவன் வந்து அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே, மீட்டிங் சென்றவர்கள் ஒவ்வொருவராய் வேலைக்கு திரும்ப ஆரம்பித்தார்கள். அமைதியாயிருந்த தளம் கொஞ்சம் கொஞ்சமாய் சலசலவென பேச்சு சப்தத்தால் நிரம்ப ஆரம்பித்தது. ப்ரியாவும் சிறிது நேரத்திலேயே வந்து சேர்ந்தாள். அசோக்குடைய இடத்திற்கு சென்றவள், அவளுடைய குரலில் கொஞ்சம் கோவம் தொனிக்கவே கேட்டாள்.
“என்னடா.. இங்க வந்து உக்காந்துட்டு இருக்குற..?? உன்னை எங்கல்லாம் தேடுறது..??”
“ஏன்.. எங்க தேடுன..??” அசோக் மானிட்டரை வெறித்தவாறே அமைதியாக கேட்டான்.
“அ..அங்க.. மீட்டிங் ஹால்ல..!!”
இப்போது அசோக் தன் தலையை திருப்பி, ப்ரியாவை ஏறிட்டு சலனமில்லாமல் ஒரு பார்வை பார்த்தான். ‘தேட வேண்டிய வேளையில் தேட மறந்துவிட்டு.. நான் தொலைந்து போனபின் தேடிப்பார்த்தாயோ பேதைப்பெண்ணே..??’ என்பது போல இருந்தது அவனது பார்வை. அப்புறம் அந்தப்பார்வை சற்றே தாழ்ந்து, ப்ரியாவின் கையிலிருந்த அந்த நினைவுப்பரிசின் மேல் படிந்தது. முழுக்க முழுக்க பளிங்கினால் உருவாக்கப்பட்டிருந்தது அது.. அறுங்கோணப் பட்டகத்தின் மேலே அமைந்த பூகோள உருண்டை..!! பளீரிட்டது..!! அதைப் பார்க்கையில் அவன் மனதில் இருந்த அழுத்தம் சற்று அதிகரித்ததை அவனால் உணர முடிந்தது. தனது உழைப்பு அவளது கைப்பிடிக்குள் அகப்பட்டிருக்கிறது என்று தோன்றியது. ஆனால் அதை குரலில் காட்டாமல் இயல்பாகவே அசோக் சொன்னான்.
“இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது.. அதான் உடனே வந்துட்டேன்..!!”
“ஓ..!! இன்னைக்கு முடிக்கனுமா..??” ப்ரியாவின் பார்வை இப்போது மானிட்டரில் விழுந்தது.
“அப்படி இல்ல.. பட்.. கொஞ்சம் க்ரிட்டிக்கல் வொர்க்.. சொல்லு..!!”
“ம்ம்.. ஒண்ணுல்ல.. நான் அவார்ட் ரிஸீவ் பண்ண போறப்போ நீ இருந்த.. திரும்ப வந்தப்போ உன்னை காணோம்..!! அதான்.. நான் அவார்ட் வாங்குனதை நீ பாத்தியா இல்லையான்னே எனக்கு தெரியலை..!!”
“ஹ்ம்ம்.. பார்த்தேன் ப்ரியா.. நல்லா கண்ணு குளிர பாத்தேன்..!! அதுக்கப்புறம் நீ கொஞ்சம் பிஸியா இருந்த.. அதான் நான் கெளம்பி வந்துட்டேன்..!!”
அசோக் சற்று எரிச்சலாகத்தான் சொன்னான். ஆனால்.. அவள் அவார்ட் வாங்கியதை அவன் பார்த்திருக்கிறான் என்று அறிந்து கொண்டதுமே, ப்ரியாவின் முகம் விளக்கு போட்டது மாதிரி மீண்டும் பிரகாசமானது. அவளுடைய குரலிலும் இப்போது ஒரு தனி உற்சாகம்..!! திடீரென குழந்தையாக மாறிப் போனவளாய் குஷியாக பேச ஆரம்பித்தாள்.
“ஹை.. பாத்தியா நீ..??? ஹ்ம்ம்ம்… இன்னைக்கு நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா அசோக்..?? சான்ஸே இல்ல.. அப்படியே ஜிவ்வுன்னு பறக்குற மாதிரி இருக்குடா..!! இந்த மாதிரி ஒரு ரெகக்னைஸேஷன்.. என் லைஃப்ல இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்..!! சுத்தி ஆயிரம் பேர் கை தட்ட.. நான் ஸ்டேஜ்க்கு நடந்து போனது.. ஹப்பா.. இட் வாஸ் அமேஸிங் யு நோ..?? அப்படியே மிதக்குற மாதிரி இருந்தது அசோக்….”
ப்ரியா பேசிக்கொண்டே போனாள். அந்த சம்பவம் அசோக்கிடம் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அவள் அறிந்து கொண்டிருக்கவில்லை. அவனுடைய அப்போதைய மன நிலையையும் அவள் உணர்ந்து கொண்டதாய் தெரியவில்லை. அவளைப் பொறுத்தவரை நடந்து முடிந்தது ஒரு இயல்பான, சந்தோஷமான விஷயம். அதனால்தான் கண்களில் ஒரு பிரகாசமும், முகத்தில் மலர்சியுமாய் அப்படி அவளால் பேசமுடிந்தது.
ஆனால் அவளுடைய பேச்சு அசோக்கிடம் வேறுவிதமான விளைவை ஏற்படுத்தியது. அவனுடைய உள்ளத்து நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பது போலிருந்தது. ப்ரியா பேச பேச அவனுக்கு மூளை நரம்புகள் வலி எடுப்பது மாதிரி ஒரு உணர்வு. கண்களை சுருக்கி, தலையை பிடித்துக் கொண்டான். அதை கவனித்துவிட்ட ப்ரியா, தனது பேச்சை பட்டென நிறுத்தி, இப்போது கனிவான குரலில் கேட்டாள்.
“ஹேய்.. எ..என்னடா ஆச்சு..??”
“ஒ..ஒண்ணுல்ல ப்ரியா..!!”
“இ..இல்ல.. உன் முகமே சரி இல்ல.. என்னாச்சு..??”
“ப்ச்.. ஒண்ணுல்லன்றன்ல.. லைட்டா தலை வலிக்குது.. வேற ஒன்னும் இல்ல..!!”
“ஓ..!! என்கிட்டே டேப்லட் இருக்குது.. எடுத்து தரவா.. போட்டுக்குறியா..??” ப்ரியாவின் அன்பான குரல்.
“வேணாம் வேணாம்.. நான் அல்ரெடி போட்டுட்டேன்.. இப்போ பரவால..!!”
“ஓகே ஓகே..!! ம்ம்ம்ம்ம்…!!” ஒரு சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கனிவாக பார்த்தவள், அவன் சற்று இயல்புக்கு திரும்பவும்,
“சரி.. இந்தா..!!”
என்று இயல்பான குரலில் சொல்லிக்கொண்டே, தன் கையிலிருந்த பளிங்குப் பொருளை அசோக்கிடம் நீட்டினாள். அசோக் இப்போது புரியாமல் ப்ரியாவை ஏறிட்டான். நெற்றியை சுருக்கியவாறு கேட்டான்.
“எ..என்ன இது..??”
“ஹ்ஹ.. எனக்கு தந்த அவார்ட்-டா.. அம்மாவோட டேலன்ட்டை பாத்து அசந்து போய் அவங்க தந்தது..!! ஹாஹா.. ஆக்சுவலா உனக்குத்தான இது கெடைச்சிருக்கணும்..? நீதான அந்த காம்பனன்ட் ஃபுல்லா ரீ-டிசைன் பண்ணின..? அது தெரியாம அவங்க எனக்கு தூக்கி குடுத்துட்டாங்க..!! ஹாஹாஹாஹா..!! ஹ்ம்ம்.. எனிவே.. நீதான் இதை வச்சிருக்க டிசர்வ்டான ஆளு.. இந்தா.. வச்சுக்கோ..!!”
ப்ரியா உதட்டில் வழியும் புன்னகையுடனே சொல்ல, அசோக் இப்போது மீண்டும் ஒருமுறை அந்த நினைவுப் பரிசின் மீது பார்வையை வீசினான். ‘ஒரு ஐநூறு ரூபாய் பெருமானம் இருக்குமா இது..?? இதை கொண்டு சென்று, என் வீட்டு கண்ணாடி அலமாரியில் பூட்டி வைப்பதால், இப்போது என்ன ஆகி விடப் போகிறது..?? ஆண்டுக்கு இரண்டு ஜோடி புதுக்கண்களில் இது படுவதே அபூர்வம்..!! ஆயிரம் பேர் கை தட்ட நடந்து சென்று இதை வாங்கிக் கொள்வதற்கு நிகராகுமா..??’
“என்னடா..??” ப்ரியா அசோக்கின் மனநிலை புரியாமல் கேட்டாள்.
“இல்ல ப்ரியா.. வேணாம்..!!”
“ஏன்..??”
“உனக்குத்தான குடுத்தாங்க.. நீயே வச்சுக்கோ..!!” அசோக் இறுக்கமான குரலில் சொல்ல, ப்ரியாவின் முகம் இப்போது மீண்டும் பிரகாசமானது.
“நெஜமாத்தான் சொல்றியா அசோக்.. நானே வச்சுக்கவா..??”
“வச்சுக்கோ ப்ரியா..!!”
“உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..??”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல..!!”
“வாவ்.. தேங்க்ஸ்டா.. தேங்க்ஸ் எ லாட்..!! எங்க இதை நீ புடுங்கிக்குவியோன்னு நெனச்சேன்.. ஹாஹாஹாஹா..!! ஹ்ம்ம்ம்… இதை என் டாடிட்ட போய் காட்டனும்.. இதை பாத்தா அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா..??”
ப்ரியா குழந்தை போல குதுகலமாக சொல்ல, அசோக் சற்றே விரக்தியாக புன்னகைத்தான். கையிலிருந்த அந்த பொருளையே சில வினாடிகள் ஆசையாக பார்த்த ப்ரியா, அப்புறம் அசோக்கை ஏறிட்டாள். ‘என் மீது இவனுக்கு எவ்வளவு அன்பு..’ என்று அவளுடைய மனதுக்குள் ஒரு பெருமிதம்..!! ஸ்னேஹமாக புன்னகைத்தாள். அப்புறம் முகத்தில் திடீரென மெலிதாக நாணம் மிளிர, தயக்கமாய் கேட்டாள்.
“வீ..வீட்டுக்கு கெளம்பலாமா அசோக்.. நீ பைக்ல ட்ராப் பண்றியா..??”
“இ..இல்ல ப்ரியா.. நீ கம்பனி பஸ்ல கெளம்பு.. இதை இன்னைக்கு முடிக்கணும்..!!” அசோக் பொய் சொன்னான்.
“இப்போதான் இன்னைக்கு முடிக்கனுமான்னு கேட்டதுக்கு இல்லன்னு சொன்ன..??”
“அ..அது.. அது வந்து.. இன்னைக்கு ஃபிக்ஸ் பண்ணி முடிக்கணும்.. நாளைக்கு டெஸ்ட் பண்ணி முடிக்கணும்..!!”
அசோக் தடுமாற்றமாக சொல்ல, ப்ரியா முகத்தில் ஒருவித ஏமாற்றத்துடன் சில வினாடிகள் அவனையே பார்த்தாள். அப்புறம் சகஜமான குரலில் சொன்னாள்.
“சரிடா.. அப்போ நான் கெளம்புறேன்..!!!”
“ம்ம்.. ஓகே..!!”
ப்ரியா அவளுடைய இடத்துக்கு சென்றாள். கையிலிருந்த பரிசுப்பொருளை பேகுக்குள் திணித்தாள். சிஸ்டத்தை ஷட்டவுன் செய்துவிட்டு, பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். வீட்டுக்கு கிளம்பினாள். அசோக்கை கடக்கையில் ‘பை டா..’ என்றாள். அசோக்கும் பை சொல்லிவிட்டு, அவளுடைய முதுகையே வெறித்துக் கொண்டிருந்தான். ப்ரியா ஒரு நான்கைந்து எட்டுகள் கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள். சட்டென ப்ரேக் போட்டது போல நின்றாள். ஏதோ யோசனையுடன் திரும்பவும் அசோக்கிடம் வந்தாள். சுட்டுவிரலால் நெற்றியை கீறியவாறு சற்றே குழப்பமான குரலில் கேட்டாள்.
“ஹேய்.. நீ அப்போ ஏதோ சொல்ல வந்தேல..??”
“எ..எப்போ..??” அசோக் தடுமாற்றமாய் கேட்டான்.
“அ..அப்போ.. காபி ப்ரேக் அப்போ..”
“ஓ.. ஆமால..??”
“ஹம்.. என்ன சொல்ல வந்த..??”
“ஆமாம்.. என்ன சொல்ல வந்தேன்..??” அசோக்கும் இப்போது நெற்றியை பிடித்துக் கொண்டு மறந்து போன மாதிரி நடித்தான்.
“ஹாஹா.. மறந்துட்டியா..??” ப்ரியா சிரித்தாள்.
“ம்ம்.. மறந்துட்டேன்..!!”
“ஓகே.. பரவால..!! நைட்டு வீட்டுக்கு போனதும் படுத்து தூங்காம.. என்ன சொல்ல வந்தேன்னு நல்லா யோசிச்சு பாரு.. ஞாபகம் வந்ததும் நாளைக்கு வந்து சொல்லு.. சரியா..??”
“ம்ம்.. சரி ப்ரியா..!!”
“ஓகேடா.. கெளம்புறேன்.. பை..!!”
ப்ரியா கிளம்பினாள். அவள் சென்ற பிறகு கொஞ்ச நேரத்திற்கு கம்ப்யூட்டர் திரையையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த அசோக், பிறகு தானும் வீட்டுக்கு கிளம்பினான்.
ப்ரியா எந்த நேரத்தில் சொன்னாளோ..?? அன்று இரவு அசோக்கிற்கு தூக்கம் செத்துப் போனது. கண்களை மூடினால்.. காதுக்குள் கைதட்டல்கள் கேட்டன..!! கையில் கோப்பையுடன் ப்ரியா வக்கணம் காட்டினாள்..!! அசோக்கின் கைகளுக்குள் சிக்காமல் நழுவிப்போய், தூரமாய் சென்று கைகொட்டி சிரித்தாள்..!! அடிக்கடி அவன் விழித்துக்கொள்ள வேண்டி இருந்தது..!! பால்கனிக்கு சென்று இருட்டுக்குள் புகைக்க வேண்டி இருந்தது..!! அவனுடைய காதல் மனமும், அவனது இயல்பான குணமும் கட்டி உருண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன..!!
அசோக் இங்கே கண்ணுறக்கம் இன்றி தவித்துக் கொண்டிருந்த வேளையில், ப்ரியா அவள் வீட்டில் பெரிய களேபரமே செய்து கொண்டிருந்தாள். தான் அவார்ட் வாங்கிய அனுபவத்தை, அப்பாவிடம் சொல்லி அவரை ப்ளேடு போட்டுக் கொண்டிருந்தாள்.
“இந்த அவார்ட் கெடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா டாடி..??”
“ஆமாம்.. ஆயிரம் பேரு இருக்குறப்போ.. உனக்கு குடுத்துருக்காங்கன்னா.. சும்மாவா..??”
“ஐயோ.. டாடீஈஈ.. தவுசன் அண்ட் எய்ட்டீன்.. ஆயிரத்தி பதினெட்டு..!!!!!”
“ஆமாமாம்.. ஆயிரத்தி பதினெட்டு பேரு..!!”
வரதராஜனும் மகளின் ஆட்டத்துக்கு மத்தளம் கொட்டினார். அந்த விஷயத்தை அப்பாவோடு விடவில்லை ப்ரியா. லோக்கலில் உள்ள நண்பிகளுக்கெல்லாம் கால் செய்து டார்ச்சர் செய்தவள், எஸ் டி டி வேறு போட்டு எக்சாமுக்கு படித்துக்கொண்டிருந்த தம்பியையும் சித்திரவதை செய்தாள்.
“காம்பனன்ட் டிசைன் ரொம்ப கஷ்டம்னு சொல்லிருக்கனே.. ஞாபகம் இருக்கா கோகுல்..??”
“ஷ்ஷ்.. காலைல எனக்கு எக்சாம் இருக்குன்னு சொன்னனே.. அது உனக்கு ஞாபகம் இருக்காக்கா..??” கோகுல் அடுத்த முனையில் அழுகுரலில் கேட்டான்.
“ஞாபகம் இருக்கே.. ஏன் கேக்குற..??”
“பேசுனது போதும்க்கா.. ப்ளீஸ்.. கட் பண்ணு..!!”
“ஐயோ.. இருடா.. நான் சொல்லி முடிச்சுக்குறேன்..!!”
“ப்ளீஸ்க்கா.. படிக்கனும்க்கா.. சொன்னவரை போதும்.. ஏற்கனவே அரை மணி நேரம் காலி..!!”
கோகுல் ரொம்பவே கெஞ்சவும், ப்ரியா சற்றே மனம் இளகினாள். நீண்டதாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு, இப்போது மிகவும் சீரியஸான குரலில் சொன்னாள்.
“ம்ம்ம்ம்.. அக்கா இதுலாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்குறதுக்கு காரணம் இருக்குடா தம்பி..!!”
“ஓ..!!”
“அதுவும் எக்ஸாம் டயத்துல இதெல்லாம் சொல்றதால உனக்கு ரொம்ப யூஸா இருக்கும்..!!”
“யூஸா..?? இதால என்ன யூஸ்..??” கோகுல் தலையை சொறிந்தான்.
“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அக்கா மாதிரி நீயும் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியரா வரணும்டா தம்பி.. அக்காவோட கதையை சொன்னா உனக்கு இன்ஸ்பயரிங்கா இருக்கும்.. நாமளும் அக்கா மாதிரி வரணும், நல்லா படிக்கணும்னு ஒரு வெறி வரும்.. அதான் சொன்னேன்..!! போ.. அந்த வெறியோட போய்.. இப்போ எக்ஸாமுக்கு படி..!! பை..!!”
ஒருவழியாய் மனமுவந்து ப்ரியா காலை கட் செய்தாள். பேசி முடித்த கோகுலுக்கு படிப்பு மீதெல்லாம் வெறி வரவில்லை. மொக்கை போட்ட அக்காவின் மீதுதான் கொலவெறி வந்தது..!! ‘இவளுக்குலாம் அவார்ட் குடுத்து.. ஏண்டா என் தாலியை அறுக்குறீங்க..??’ என்று அவளுடைய கம்பெனியை கன்னாபின்னாவென்று திட்டினான்.
தம்பியிடமும் தற்பெருமை அடித்து தீர்ந்தபின்தான் ப்ரியாவுக்கு நிம்மதியாக இருந்தது. எந்தக்கவலையும் இல்லாமல் உறங்க முடிந்தது. ப்ரியா ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில், சுகமாக கம்பளிக்குள் முடங்கிப் போயிருந்தபோது, அசோக் உறக்கம் மறந்த கண்களால், சுவற்றில் நகர்ந்த பல்லியை முறைத்துக் கொண்டிருந்தான்.
காலையில் எழுந்தபோது அசோக்கின் மனம் ஓரளவு தெளிவாயிருந்தது. நடந்ததை இனியும் மனதுக்குள் போட்டு குழப்பிக்கொள்வது நல்லதில்லை என்று தோன்றியது. ப்ரியாவின் மீது தேவையற்ற வெறுப்புதான் இதனால் உண்டாகும் என்று புரிந்தது. எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆபீஸில் ப்ரியாவை பார்க்கையில் சகஜமாக புன்னகைக்க முயற்சி செய்தான். நடுவில் ஒருமுறை அவள் வந்து வேலை விஷயமாக ஒரு உதவி கேட்கையில், சற்று தயங்கினாலும், பிறகு உதவினான். மாலையில் அவனாகவே ப்ரியாவின் இடத்துக்கு சென்று, ‘ஸ்குவாஷ் ஆட போலாமா ப்ரியா..??’ என்று கேட்டான்.
அசோக்கின் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தாலும், அதை ப்ரியாவிடம் காட்டிக்கொள்ளவில்லை. முன்பை போல அவளிடம் இயல்பாக பேச முடியவில்லை என்பதையும் அவனால் உணர முடிந்தது. விரைவில் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தான். ஆனால்.. விதியோ வேறு விதமாக நினைத்தது..!! அடுத்த வாரமே அது தன் வேலையை காட்டியது..!!
அன்று சற்று தாமதமாகத்தான் அசோக் ஆபீஸுக்கு கிளம்பி இருந்தான். பைக்கில் எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி சென்று கொண்டிருந்தவன், பொம்மனஹல்லியை தாண்டியபோது மணி பத்தரை. அப்போதுதான் அவனுடைய பேன்ட் பாக்கெட்டுக்குள் கிடந்த செல்போன் பதறி துடித்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பதறிய போனை கையில் எடுத்து பார்த்தான். ஹரி கால் செய்திருந்தான். ஹெல்மட் கழற்றியவன், கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.
“சொல்லுடா..!!” என்றான்.
“மச்சி.. எங்கடா இருக்குற..??”
“வந்துட்டு இருக்கேண்டா.. சொல்லு..!!”
“ஹேய்.. சீக்கிரம் வாடா.. இங்க கம்பெனில பெரிய கலவரமே நடந்துட்டு இருக்கு..!!”
“கலவரமா..?? என்ன கலவரம்..??”
“ம்ம்ம்..?? பேசி பேசியே காது ஜவ்வை கிழிக்கிற கலவரம்..??”
“ஹாஹா.. யார் அது.. அவ்வளவு பேசுறது..??”
“எல்லாம் உன் ஆளுதான்..!!”
“என் ஆள்னா.. ப்ரியாவா..??”
“ஆமாம்.. அவதான்..!! ஹப்பா…. அவ பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலைடா..!!”
“என்ன பண்றா..??”
“என்ன பண்றாளா..?? அந்தக்கொடுமையை நீயே இங்க வந்து பாரு..!!”
ஹரி அதன்பிறகும் என்ன விஷயம் என்று தெளிவாக சொல்லாமல் இழுத்துக்கொண்டே போக, அசோக் இப்போது பொறுமை இழந்து போய் டென்ஷனாக கத்தினான்.
“த்தா.. அப்புறம் என்ன மசுத்துக்குடா நீ கால் பண்ணின.. மாங்காக்..”
“ஏய் ஏய்.. இருடா.. சொல்றேன்..!!”
“சொல்லித்தொலை..!!”
“ப்ரியாவை ஆன்சைட் அனுப்ப சூஸ் பண்ணிருக்காங்கடா..!!”
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :