ஐ ஹேட் யூ, பட் – பகுதி 40
அவளுடைய மெயில் வந்த அடுத்த நிமிடத்தில் இருந்தே.. அடுக்கடுக்காய்.. அந்த மெயிலை ரிஸீவ் செய்த அனைவருமே.. டீமை பாராட்டி ரிப்ளை செய்தார்கள்..!! எல்லோருமே அசோக்கை தனியாக குறிப்பிட்டு வெகுவாக பாராட்டினார்கள்..!! எல்லாவற்றையும் வாசித்த அசோக்குக்கு, வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒருவகை சந்தோஷம்..!! ப்ரியாவிடம் பேசவேண்டும் போலிருந்தது அவனுக்கு..!! எழுந்து அவளுடைய அறைக்கு நடந்தான். கதவை திறந்து உரிமையாக உள்ளே நுழைந்தான். இவன் நுழைந்ததும் ப்ரியா லேப்டாப்பில் இருந்து நிமிர்ந்து..
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“ஹேய்.. இன்னும் கெளம்பலையா நீ..??” என்று புன்னகையுடன் கேட்டாள்.
“உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..!!”
“ஹாஹா.. நான் இன்னைக்கு கெளம்ப ட்வெல்வ் ஆயிடும்னு நெனைக்கிறேன் அசோக்..!!”
“ஓ..!! அவ்ளோ லேட் ஆகுமா..??”
“ஆமாம்.. எனக்காக வெயிட் பண்ணாத.. நீ கெளம்பு.. கேப் வேணா புக் பண்ணிக்கோ.. ரெக்வஸ்ட் அனுப்பு.. நான் அப்ரூவ் பண்றேன்..!!”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் விடு..!! நான் ஆட்டோல கூட போய்க்குறேன்..!!”
“ஹ்ம்ம்..!! அப்புறம்..?? மெயில்ஸ்லாம் பாத்தியா..?? ஆளாளுக்கு உன்னை புகழ்ந்து தள்ளுறாங்க போல..??”
“ஆமாம்..!! நீ இல்லாததும் பொல்லாததுமா என்னை பத்தி சொல்லிருக்குற..?? அவங்களும் வெவரம் இல்லாம என்னை புகழ்றாங்க..!!”
“ஹாஹா..!! அப்படிலாம் ஒன்னும் இல்ல.. நான் சொன்னதுல ஒரு வார்த்தை கூட பொய் இல்ல..!! இந்த ப்ராஜக்ட் இன்னைக்கு சக்சஸ்ஃபுல்லா டெலிவர் ஆகப் போகுதுன்னா.. அதுக்கு உன்னோட கான்ட்ரிப்யூஷன் ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட்..!! உன்னோட வேலை மட்டும் இல்லாம, அடுத்தவங்க வேலைக்கும் ரொம்ப ரொம்ப ஹெல்ப் பண்ணிருக்குற..!! அதைத்தான் நான் மெயில்ல மென்ஷன் பண்ணிருந்தேன்..!! எல்லாமே ஹன்ட்ரட் பர்சன்ட் ட்ரூ வேர்ட்ஸ் அசோக்..!!”
“ம்ம்.. தேங்க்ஸ் ப்ரியா..!! எனக்கு ரொம்ப ஹேப்பியா இருந்தது..!!” அசோக் ஸ்னேஹமாக ஒரு புன்னகையை வீசினான்.
“ஹாஹா.. பார்டா.. ஒருத்தன் தேங்க்ஸ்லாம் சொல்றான்..!! ம்ம்.. உனக்கு இன்னொரு சர்பரைஸ் கூட இருக்கு அசோக்..!!”
“என்ன..??”
“இதை பாரேன்..!!”
ப்ரியா தனது லேப்டாப்பை அவன் பக்கமாக திருப்பினாள். ஓரிரு வினாடிகள் குழப்பமாய் திகைத்த அசோக், அப்புறம் சேரில் அமர்ந்தவாறே அவளுடைய லேப்டாப் மீது பார்வையை வீசினான். என்ன விஷயம் என்று அவன் படித்து தெரிந்து கொள்வதற்கு முன்பாக, ப்ரியாவே சொன்னாள்.
“பெர்ஃபார்மர் ஆஃப் திஸ் குவார்ட்டர் அவார்ட்க்கு.. உன் பேரை நாமினேட் பண்ணிருக்கேன் அசோக்..!! நீ என்னன்ன பண்ணிருக்கன்னு பக்காவா ஒரு டாகுமன்ட் ரெடி பண்ணி.. அவார்ட் கமிட்டிக்கு அனுப்பிருக்கேன்..!! நீ வேணா பாரு.. இந்தத்தடவை கண்டிப்பா உனக்குத்தான் அந்த அவார்ட்..!!” ப்ரியா பூரிப்பாக சொல்ல, அசோக் அவளை ஏறிட்டு புன்னகைத்தான்.
“இது என்ன.. பதிலுக்கு பதிலா..??” என்று குறும்பாக கேட்டான்.
“அப்படின்னா..?? புரியல..!!”
“என் ஹெல்ப்பால நீ அவார்ட் வாங்குன.. அதுக்கு பதிலா இப்போ.. நான் அவார்ட் வாங்குறதுக்கு நீ ஹெல்ப் பண்றியா..??”
“சீச்சீ.. அப்படிலாம் இல்ல..!! ஒன்னு சொல்லவா.. எனக்கு அவார்ட் கெடைச்சது.. இட் வாஸ் ஜஸ்ட் ப்யூர் லக்.. அந்த அவார்டை வாங்குறதுக்கு எனக்கு கொஞ்சம் கூட தகுதியே கெடையாது..!! ஆனா இது அப்படி இல்ல.. இந்த அவார்ட் வாங்குறதுக்கு எல்லா தகுதியும் உனக்கு இருக்கு.. சொல்லப்போனா அதைவிட அதிகமாவே இருக்கு..!! ஆறு வருஷமா இந்தக்கம்பனிக்காக நீ செஞ்ச பெரிய பெரிய நல்ல காரியத்துக்காக.. கம்பனி உனக்கு கொடுக்குற ஒரு சின்ன ரெகக்னைஷேஷன்..!! அதுக்கான எல்லா குவாலிட்டியும் உனக்கு இருக்கு அசோக்..!! நான் சும்மா.. நீ செஞ்சதுலாம் அவங்களுக்கு ஹைலைட் பண்ணி சொல்ற ஒரு ஆள்.. அவ்ளோதான்..!!”
ப்ரியா அடக்கமாக சொன்னாள். அவள் சொன்னதைக்கேட்டு அசோக் எதுவும் பேசாமல் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது ப்ரியா தனது சேரில் இருந்து எழுந்து கொண்டாள். அந்த அறையின் ஒரு மூலைக்கு மெல்ல நடந்தவள், சுவற்றில் தொங்கிய பிளாஸ்டிக் கர்ட்டைனை தளர்த்தினாள். கண்ணாடி சுவர் மூலமாக வெளியே தெரிந்த வெளிச்சமிகு சாலையை வேடிக்கை பார்த்தவாறே, இதமான குரலில் தொடர்ந்து பேசினாள்.
“அன்னைக்கு கோவிந்த் ஒன்னு சொன்னானே.. ஞாபகம் இருக்கா அசோக்..?? நேத்ரா ஸ்டேஜ்ல பாடனும்.. எல்லாரும் அவளுக்கு கை தட்டுறதை பாத்து.. அவன் சந்தோஷப்படனும்னு சொன்னானே..??”
“ஹ்ம்ம்..!!”
“அதே மாதிரி எனக்கும் இப்போ மனசுக்குள்ள ஒரு ஆசை..!! இந்த அவார்ட் நீ வாங்கணும்.. அதை பாத்து நான் சந்தோஷப்படணும்.. கை வலிக்க வலிக்க க்ளாப் பண்ணனும்..!!”
ப்ரியா பேசிக்கொண்டே இருக்க, அதை கேட்டுக்கொண்டே அசோக் இங்கே அவளுடைய லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தான். அவள் வேறென்ன விண்டோஸ் எல்லாம் திறந்து வைத்திருக்கிறாள் என்று பார்த்தான். கோட் எடிட்டர் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்ததுமே அவனுக்குள் ஒரு குறும்பான எண்ணம். ப்ரியாவை சீண்டி டென்ஷன் ஆக்கும் எண்ணத்துடன், ப்ரோக்ராமில் ஒரு சில்மிஷம் செய்தான். அவன் செய்த காரியம் ப்ரியாவுக்கு தெரிய வரும்போது, அவள் எந்த மாதிரி கடுப்பாவாள் என்பதை இப்போதே கற்பனை செய்து பார்த்தான். சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டான்.
“என்னடா.. என்ன பண்ணிட்டு இருக்குற..??” அசோக்கின் அமைதியை உணர்ந்து, ப்ரியா அவன் பக்கமாக திரும்பி கேட்க,
“ஒ..ஒண்ணுல்ல..!! எ..என்ன சொல்லிட்டு இருந்த..??” அவன் தடுமாற்றமாக அவளை ஏறிட்டான்.
“கோவிந்த் பத்தி சொல்லிட்டு இருந்தேன்..!!”
“ஓ.. ஓகே ஓகே..!! ஹ்ம்ம்… அப்புறம்..?? கடைசில என்னாச்சு..?? அவன் ஆன்சைட் போறானா.. இல்லையா..??”
“ஹாஹா.. ஒருவழியா ஓகே சொல்லிட்டான்.. நெக்ஸ்ட் வீக் கெளம்புறான்..!!” சொல்லிக்கொண்டே ப்ரியா மீண்டும் அசோக்கை நோக்கி வந்தாள்.
“ஓ.. அப்போ நேத்ராதான் ஜெயிச்சாளா..??”
“ஆமாம்..!! லவ்ல யூசுவலா பொண்ணுக வச்சதுதான் சட்டமா இருக்குது..!! ஆனா.. என் லவ்வுதான் இப்படி ஏடாகூடமா உல்டா ஆகிப்போய் கெடக்குது.. நீ வீம்பு பண்ணிட்டு திரியுற.. நான் உன் பின்னாடி வெக்கமே இல்லாம தொங்கிட்டு திரியுறேன்..!! ஹ்ஹ்ம்ம்ம்.. எல்லாம் நான் லவ் பண்ண ஆரம்பிச்ச நேரம்..!!” ப்ரியா சலிப்பாக சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டாள். அவளுடய சேரில் அமர்ந்துகொண்டாள்.
“ஹாஹாஹாஹா..!!” அசோக் இப்போது வாய்விட்டு சிரித்தான்.
“சிரிக்காத..!! அப்படியே கன்னத்துல பளார் பளார்னு விடலாம் போல இருக்கு எனக்கு..!!” ப்ரியா முறைக்க,
“ஹாஹாஹாஹா..!!” அசோக் அதற்கும் சிரித்தான்.
ப்ரியா இப்போது பட்டென அமைதியானாள். இதழ்களில் புன்னகையை வழியவிட்டு.. விழிகளை அகலமாய் விரித்துவைத்து.. அசோக்கின் முகத்தையே ஆசையும் காதலுமாய் பார்த்தாள்..!! அவனை அப்படியே விழுங்கிவிடுபவள் மாதிரியான ஒரு பார்வை..!! அப்புறம் அவளுடைய காதல் மொத்தமும் சொட்டுகிற மாதிரியான ஒரு குரலில் சொன்னாள்.
“ஆனா.. இப்போ எனக்கு அதுலாம் பெரிய விஷயமா தெரியலை அசோக்.. தெரியுமா..?? நீ பெரியவனா நான் பெரியவளான்னு போட்டி போட்டதுலாம் போயிடுச்சு..!! இன்னைக்கு கேஃப்டீரியால கோவிந்த் சொன்னானே ஒரு வார்த்தை.. ‘மனசுக்கு புடிச்சவங்களுக்கு கஷ்டத்தை கொடுத்துட்டு.. என்னத்த ப்ரூவ் பண்ணி.. என்ன சந்தோஷம் எனக்கு கெடைச்சிடப் போகுது’ன்னு..?? எவ்வளவு சத்தியமான வார்த்தை அசோக்..?? ‘இந்த டி.எல் போஸ்ட்க்கு நான் தகுதியானவன்னு ப்ரூவ் பண்ணி காட்டுறேன்..’ அப்டின்னு.. உன்கிட்ட நான் சவால் விட்டது.. அதுக்காக நான் செஞ்ச வேலைகள்.. அதெல்லாம் இப்போ நெனச்சுப் பாத்தா ரொம்ப ஸில்லித்தனமா தோணுது அசோக்..!!”
சொல்லிவிட்டு ப்ரியா புன்னகைக்க, இப்போது அசோக் அவளுடய முகத்தையே கண்ணிமைக்காமல் காதலாய் பார்த்தான். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் மெல்ல தனது உதடுகளில் ஒரு புன்னகையை கசியவிட்டவாறே சொன்னான்.
“உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு சொல்லனும்னு நெனச்சுட்டு இருந்தேன் ப்ரியா..!!”
“என்ன..??”
“நீ ஜெயிச்சுட்ட.. இந்த டி.எல் போஸ்ட்க்கு எல்லா வகைலயும் நீ தகுதியானவதான்னு ப்ரூவ் பண்ணிட்ட..!! என் தோல்வியை நான் ஒத்துக்குறேன்..!!”
“ஹேய் ச்சீய்.. சும்மா காமடி பண்..” ப்ரியா சிரிப்புடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
“நோ..!! ஐ’ம் சீரியஸ்..!!” அசோக் இடை மறித்து சொன்னான். அவளுடைய கை மீது தனது கையை வைத்து ஒரு அழுத்தம் கொடுத்தவாறே தொடர்ந்தான்.
“சொன்ன நேரத்துக்கு ஒரு ப்ராஜக்ட் டெலிவர் பண்றது எவ்வளவு கஷ்டம்னு.. உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல..!! பல ப்ராஜக்ட் ஹேண்டில் பண்ணின ஆளுங்களே.. பல தடவை சொதப்பிடுவாங்க..!! நீ எந்த எக்ஸ்பீரியன்சும் இல்லாம.. இந்த ப்ராஜக்ட் லீட் பண்ண ஆரம்பிச்ச.. இன்னைக்கு எந்த பிரச்சினையும் இல்லாம.. இந்த ப்ராஜக்ட் டெலிவர் பண்ணப்போறோம்னா.. அதுக்கு உன்னை தவிர வேற யாரும் காரணம் இல்ல ப்ரியா..!! லெட் மி அக்ஸப்ட் திஸ்.. ஐ ரியல்லி அண்டர் எஸ்டிமேட்டட் யு.. ஐ வாஸ் ராங்.. யு ப்ரூவ்ட் தேட் ஐ வாஸ் டோட்டல்லி ராங்..!!”
அசோக் பேசிமுடித்து அமைதியானான். ப்ரியாவின் முகத்தையே ஆசையாக பார்த்தான். அவளும் இப்போது அசோக்கையே அன்பு சொட்ட பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் வார்த்தைகளை தொலைத்தவர்களாய், அப்படியே ஒருவரை ஒருவர் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கைவிரல்கள் மட்டும் ஒன்றோடொன்று பிண்ணிக்கொண்டு கிடந்தன. எவ்வளவு நேரம் என்பதை அவர்கள் அறியவில்லை. அப்புறம் டேபிள் மீதிருந்த டெலிபோன் கனைத்துத்தான் அவர்களுடைய கவனத்தை கலைக்கக் வேண்டி இருந்தது. டிஸ்ப்ளே பார்த்த ப்ரியா, அசோக்கிடம் திரும்பி அவசரமாக சொன்னாள்.
“ஹேய்.. யு.எஸ். கால்டா..!! பேச ஆரம்பிச்சா ரொம்ப நேரம் ஆகும்னு நெனைக்கிறேன்..!!”
“ஓ..!!”
“நீ வேணா கெளம்பு.. நாம நாளைக்கு பேசலாம்.. காலைல வீட்டுக்கு வர்றேன்.. சரியா..??”
“ம்ம்.. சரி ப்ரியா..!!” சொல்லிக்கொண்டே அசோக் எழுந்தான்.
“கவனமா போ.. குட்நைட்..!!”
“ம்ம்.. குட்நைட் ..!!”
புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக் அந்த அறையிலிருந்து வெளியேறினான். அவன் வெளியேறியதும், ப்ரியா ரிஸீவர் எடுத்து காதில் வைத்துக்கொண்டு ‘ஹலோ..!!’ என்றாள்.
அத்தியாயம் 25
அன்று இரவு.. அசோக் நீண்ட நேரம் தூக்கம் வராமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!! ப்ரியாவின் நினைவுகளே அவனுடைய நெஞ்சில் அலை அலையாய் வந்து மோதிக் கொண்டிருந்தன. அவளுடய கனிவான பேச்சு.. காதலான பார்வை.. கவின்மிகு புன்னகை..!! ‘என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள்.. எனக்காக எப்படியெல்லாம் உருகுகிறாள்.. நானுந்தான் அவளை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறேன்.. ச்சே.. பாவம் அவள்..!!’
கோவிந்தும், நேத்ராவும் கூட அடிக்கடி அவன் மனதில் வந்து போனார்கள். ‘அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள்.. என்ன அழகாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துக் கொள்கிறார்கள்.. அடுத்தவரின் வளர்ச்சியிலும், சந்தோஷத்திலும் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள்..?? காதலிப்பவர்களின் நிலையை உயர்த்திப் பார்ப்பதுதானே உண்மையான காதலாக இருக்க முடியும்..?? ப்ரியாவின் நிலை உயர்ந்தபோது, அதற்காக நான் ஏன் மகிழ்ந்து போயிருக்க கூடாது..?? அந்த மகிழ்ச்சி எனக்கு இல்லாமல் போனதால்தானே எல்லா பிரச்சினையும்..??’
தீவிர சிந்தனை அவனுடைய உறக்கத்தை திருடியிருந்தது. பிறகு அவனையும் அறியாமல் தூக்கத்தின் பிடியில் சிக்கிக்கொள்ள, பின்னிரவு இரண்டு மணி ஆயிற்று. எரிச்சலெடுக்கும் விழிகளுடன், காலையில் சற்று தாமதமாகவே எழுந்தான். எழுந்ததுமே குளித்துவிட்டு, ஆபீசுக்கு கிளம்பி தனது அறையை விட்டு வெளியே வந்தான்.
“என்ன.. இன்னைக்கு தொரை ஒன்பது மணி வரை தூங்கிட்டாரு..??” செல்வி காபியை நீட்டிக்கொண்டே கேட்டாள்.
“நைட்டு சரியா தூக்கம் இல்ல அண்ணி..!! ப்ரியா இன்னும் வரலையா..??”
“இன்னும் வரலைடா.. ஆளைக்காணோம்.!!”
அசோக் காபியை எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்கு சென்றான். ப்ரியாவின் முகத்தை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. டேபிள் முன்பாக அமர்ந்துகொண்டான். ஓரமாக மூடி வைக்கப்பட்டிருந்த அவனது லேப்டாப்பை தன் பக்கமாக இழுக்க, டேபிள் மீதிருந்த ஒரு புத்தகம் தவறி கீழே விழுந்தது. அந்த புத்தகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றும் வெளியே நழுவி விழுந்தது. குனிந்து அதை எடுத்தான். ப்ரியாவின் புகைப்படம்..!! முன்பொரு நாள் ராஜேஷ் அவனிடம் காட்ட நினைக்க, அதை பார்க்காமலே விசிறி எறிந்தானே.. அதே புகைப்படம்..!! மஞ்சள் நிற புடவையுடன் மந்தகாசமாக புன்னகைக்கிற ப்ரியாவின் புகைப்படம்..!!
அசோக் ப்ரியாவை கையில் அள்ளிக்கொண்டான். காபியை உறிஞ்சிக்கொண்டே அவளுடைய அழகு கொஞ்சும் முகத்தை சிறிது நேரம் ஆசையாக பார்த்தான். அவனுடைய மூளை தனியாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தது. அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு எழுந்தான். நடந்து ஹாலுக்கு வந்தான். சோபாவில் அமர்ந்து ந்யூஸ் பேப்பர் புரட்டிக்கொண்டிருந்த ராஜேஷின் முன்பாக வந்து நின்றான். தனக்கு முன் நிழலாட ராஜேஷ் நிமிர்ந்து பார்த்தான். தம்பி என்று தெரிந்ததும், சற்றே குழப்பமாக நெற்றியை சுருக்கி..
“என்னடா..??” என்றான்.
“எனக்கு உடனே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு..!!”
“என்னது..???”
“நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணை.. ஒரு வருஷத்துக்குள்ள செலக்ட் பண்ணி.. உனக்கு சொல்றேன்னு சொன்னேன்ல..??”
“ம்ம்..”
“இவதான் அந்தப்பொண்ணு..!!” அசோக் கையிலிருந்த ஃபோட்டோவை அண்ணனிடம் நீட்ட, அதை பார்க்காமலே ராஜேஷ் டென்ஷனாக சீறினான்.
“இங்க பாருடா.. நீ இழுத்த இழுப்புக்குலாம் இனி எங்களால ஆட முடியாது..!! ப்ரியாதான் பொண்ணுன்னு நாங்க எல்லாம் முடிவு பண்ணிட்டோம்.. அந்தப்பொண்ணும் உன் மேல உயிரையே வச்சிருக்குறா.. அவளை விட வேற நல்ல பொண்ணு யாருடா உனக்கு கெடைப்பா..?? நல்லா சொல்றேன் கேட்டுக்கோ.. அவளை கல்யாணம் செய்துக்குறதா இருந்தா.. எங்கிட்ட சொல்லு.. இல்ல.. உன் இஷ்டந்தான் உனக்கு முக்கியம்னா.. நீ என்ன வேணா பண்ணிக்கோ.. எவளை வேணா கட்டிக்கோ.. எப்படியோ போ.. எங்ககிட்ட சொல்லிட்டு இருக்காத..!!”
“ஹாஹா.. மொதல்ல ஃபோட்டோவை பாத்துட்டு அப்புறம் கத்துடா.. லூஸு..!!” அசோக் சிரிப்பாக சொல்ல, அப்புறந்தான் ராஜேஷ் ஃபோட்டோவையே பார்த்தான். உடனே அவன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :