ஐ ஹேட் யூ, பட் – பகுதி 6

அத்தியாயம் 4

“புதுப் ப்ராஜெக்ட்ன்றது, புதுப் பொண்டாட்டி மாதிரி ஃபோக்ஸ்.. ஆரம்பத்துல விட்டுட்டோம்னு வச்சுக்கோங்க.. அப்புறம் கடைசி வரை புடிக்கவே முடியாது..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

இது அன்றைய மீட்டிங்கில் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து அருளிய தத்துவம்..!! அவர் எப்போதும் இப்படித்தான். எதற்கெடுத்தாலும் ஏதாவது புதிது புதிதாக உதாரணம் யோசிப்பார். குப்புறப் படுத்தா.. மல்லாக்கப் படுத்தா.. என்று தெரியவில்லை. பெண்கள், பெண்டாட்டி, காதல், கல்யாணம்.. இந்த நான்கு விஷயங்களில் ஒன்றைத்தான் உதாரணங்கள் சொல்ல தேர்ந்தெடுப்பார். கழுத்தில் தொங்குகிற ஐடி கார்டையும், கல்யாணத்தில் கட்டுகிற தாலி கயிறையும் கம்பேர் செய்வார். லைசென்ஸ் என்பார். பவர்ஃபுல் என்பார். பட் டேஞ்சரஸ் என்பார். ஹேண்டில் வித் கேர் என்பார்.

சில நேரங்களில் அவருடைய அசட்டுத்தனமான கம்பேரிசன்கள் அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்கும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் அலட்டிக்கொள்வது இல்லை.

“ச்ச.. எனக்கு வாச்ச பொண்டாட்டியும் அப்படித்தான் இருக்குறா.. க்ளையன்ட்டும் அப்படித்தான் இருக்கானுக அசோக்..!!” என்பார் திடீரென.

“ஏன் பாலா.. என்னாச்சு..??” என்று அசோக் சீரியஸாக கேட்பான்.

“என்ன பண்ணினாலும் ரெண்டு பெரும் சாடிஸ்ஃபையே ஆக மாட்டேன்றாங்க..!!”

என்று எஸ்.ஜே.சூர்யாத்தனமாய் ஒரு ஜோக் அடித்து விட்டு இளிப்பார். ‘ஐயே..!!’ என்று மனசுக்குள் தலையில் அடித்துக் கொள்வான் அசோக்.

ஆனால் அன்று அவர் மீட்டிங்கில் சொன்ன தத்துவத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எந்த ப்ராஜக்ட்டுக்கும் ஆரம்ப கட்டம் மிக முக்கியம். அந்தக்கட்டத்தில் ஸ்லிப் ஆகிவிட்டால், அப்புறம் எல்லாக்கட்டமுமே ‘கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..’ கணக்காக மாறிவிடும். புதுமனைவியின் விருப்பு, வெறுப்புகளை மனம் விட்டு பேசி தெரிந்து கொள்வது போல, க்ளையன்ட்டின் தேவை, ஆசைகளை மீட்டிங் போட்டு அறிந்து கொள்வது அவசியம்.

‘எங்களிடம் வேலை பார்ப்பவர்களின் சம்பளக்கணக்கை நிர்வகிக்கிற மாதிரி ஒரு மென்பொருள் வேண்டும்..!!’ என்று க்ளையன்ட் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதிரி ஒரு மென்பொருளை தயாரித்து கொடுப்பதுதான் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனிகளின் வேலை. அதைத்தான் ப்ராஜக்ட் என்கிறார்கள். ‘வாழ்க்கைன்றது ஒரு வட்டம்டா..!!’ என்று டாக்டர் ஒருவர் சொல்லியிருக்கிறார் அல்லவா..?? அதுபோல மென்பொருள் அபிவிருத்திக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. அதை மென்பொருள் அபிவிருத்தி வாழ்க்கை சக்கரம் என்று தமிழ்ப்படுத்தலாம். அந்த சக்கரத்திற்கு நிறைய வடிவங்கள் இருந்தாலும், அதில் வருகிற முக்கியமான கட்டங்கள் என்றும் மாறாது. அவை மூன்று கட்டங்கள்..!!

முதல் கட்டம், ப்ளானிங் – ‘எதையும் ப்ளான் பண்ணாம பண்ணப்படாது..!!’ என்று வடிவேலுவின் வார்த்தைகளை எல்லா சாப்ட்வேர் கம்பனிகளின் சுவற்றிலும் பொன்னெழுத்தில் பொறித்து வைக்க வேண்டும். அந்த அளவிற்கு முக்கியமானது இந்தக்கட்டம். ரெகயர்மன்ட் கேதரிங், எஸ்டிமேஷன், சாஃப்ட்வேர் டிசைன் எல்லாம் இந்தக்கட்டத்தில்தான் வரும். ‘ரெகயர்மன்ட் கேதரிங்’ என்றால் க்ளையண்ட்டுக்கு என்ன தேவை என்று விவரமாக விசாரித்து தெரிந்து கொள்வது. அப்படி தெரிந்து கொள்ளும்போது தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் கேட்ட கடலை எண்ணையை கண்ணாடி சீசாவில் ஊற்றிக் கொண்டிருக்கும்போதே, ‘இது நல்லெண்ணைதான..?’ என்று கேட்டு நம்மை குழப்புவார்கள். அதற்கெல்லாம் பித்துப் பிடித்துப் போகாதவாறு, முழு சித்தத் தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியம்.

எஸ்டிமேஷன்தான் பொதுவாக நிறைய தவறு நடக்கிற ஏரியா. ப்ராஜக்டை எப்படியாவது லவட்டிவிட வேண்டும் என்ற பேராசையால், இரண்டு வருடத்தில் முடிக்கவேண்டிய ப்ராஜக்ட்டை, ஆறு மாதங்களில் முடித்து தருவதாக க்ளையன்ட்டிடம் உதார் விட்டு, கம்பனி மேனேஜ்மன்ட் லவட்டிவிடும். பிறகு டெவலப்பர்களும், மேனேஜர்களும் இந்த விஷயத்தில்தான் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் பாப்புலரான ஜோக் ஒன்று இருக்கிறது.

‘கொழந்தை வேணும்னா.. ஒரு பொண்ணையும், பத்து மாசம் டைமும் கொடுங்க..!!’ ன்னு டெவலப்பர் சொல்வான்.

‘இல்ல இல்ல.. உனக்கு பத்துப் பொண்ணு தாரேன்.. ஆனா எனக்கு ஒரே மாசத்துல கொழந்தை வேணும்..!!’ ன்னு மேனேஜர் சொல்வார்.

இந்த விஷயத்தில் மேனேஜருக்கும், டெவலப்பருக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது. அவர் இவர்களை குறை சொல்வார். இவர்கள் அவரை குறை சொல்வார்கள். அதிருப்தியுடனே ப்ராஜக்ட் முடியும்வரை அலைவார்கள்.

சாஃப்ட்வேர் டிசைன் என்பது, பெரிதாக கோலம் போடுவதற்கு முன்பாக சின்ன சின்னதாக புள்ளி வைத்துக் கொள்கிற மாதிரியான சமாச்சாரந்தான். கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் வரைந்து வைத்துக் கொள்கிற ட்ராயிங்குகள் மாதிரி. க்ளையன்ட்டுகளிடம் விசாரித்து தெரிந்து கொண்ட அவர்களது தேவைகளை மனதில் கொண்டு, உருவாகப் போகிற மென்பொருள் எந்த மாதிரி இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே தோராயமாக வடிவமைத்துக் கொள்கிற வேலை. புள்ளிகள் சரியாக வைக்கப்படவில்லையெனில், கோலமும் கோணல் மாணலாய் போய் விட கூடிய வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவது கட்டம், இம்ப்ளிமண்டேஷன் – வைத்த புள்ளிகளை இணைத்து கோலம் போட ஆரம்பிக்க வேண்டியதுதான். முதல் கட்டத்தில் உருவாக்கிய டிசைனை கொண்டு கோட் எழுதுவதும், அதை டெஸ்டிங் செய்வதும் இந்தக்கட்டத்தில்தான். எல்லா கட்டங்களிலும் இந்த கட்டத்துக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கப்படும். டெவலப்மன்ட் டீமும், டெஸ்டிங் டீமும் அடித்துக் கொள்கிற கட்டம். அதுவரை மாமன் மச்சான் என்று கொஞ்சித் திரிந்தவர்கள், அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு போல முறைத்துக் கொண்டு எதிரெதிராக க்ராஸ் செய்து கொள்வார்கள். பாட்டெழுதி பேர் வாங்குகிற கூட்டம் டெவலப்பர் கூட்டம் என்றால்.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குகிற கூட்டம் டெஸ்டிங் கூட்டம்..!!

மூன்றாவது கட்டம், இன்ஸ்டாலேஷன் – அத்தனை நாளாய் கோட் அடித்து குவித்த குப்பைகளை கொண்டு சென்று, க்ளயன்ட்டின் தலையில் கொட்டுகிற கட்டம். உருவாக்கிய மென்பொருளை க்ளயன்ட்டின் சிஸ்டத்தில் நிறுவவேண்டும். டெப்ளாய்மன்ட்..!! க்ளையண்டும் அவர்கள் பங்கிற்கு ஒரு டெஸ்டிங் டீம் வைத்து மென்பொருளை டெஸ்ட் செய்து கொள்வார்கள். மென்பொருளின் இறுதி வடிவத்தில், பெரும்பாலும் க்ளையண்ட்டுக்கு திருப்தி இராது. ‘ஐயையோ.. நாங்க பார்வதி ஓமனக்குட்டன்ல கேட்டோம்.. நீங்க பரவை முனியம்மாவை டெலிவர் பண்ணிருக்கீங்களே..??’ என்ற ரீதியில் பதறுவார்கள். இவர்களும் ‘ஐயையோ பதறாதீங்கங்க.. கொஞ்சம் மேக்கப் இல்லனா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினா சரியாப் போவும்..’ என்ற ரீதியில் சமாளித்து, தலையில் கட்டித் திரும்புவர். சில கில்லாடி சாப்ட்வேர் கம்பனிகள் தொடர்ந்து அந்த மேக்கப் போடும் பணிக்காக, மெயின்டனஸ் காண்ட்ராக்ட் வேறு தனியாக போட்டு துட்டு தீட்டுவார்கள்.

சரி. இதெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா..?? காரணம் இருக்கிறது. கதையை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு சாப்ட்வேர் கம்பனி இயங்கும் விதம் பற்றி இந்த அளவிற்காவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்..!!

இப்போது இவர்களது ப்ராஜக்ட் இருப்பது ப்ளானிங் ஸ்டேஜில்..!! முதல் கட்ட ரெகயர்மன்ட் கேதரிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ரெகயர்மன்ட் கேதரிங்குக்கு, இன்னும் சில நாட்களில் அமெரிக்காவிற்கே யாரையாவது நேரிடையாக அனுப்பி வைப்பார்கள். டிசைன் ஆரம்பித்து விட்டார்கள். ஃப்ரேம்வொர்க் டெவலப் செய்வதுதான் இப்போது டீமின் பிரதான வேலை. ஃப்ரேம்வொர்க் என்றால் என்னவென்று எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், உருவாக்கப் போகிற முக்கியமான மென்பொருளுக்கு அடித்தளமான மென்பொருள் என்று சொல்லலாம். ஃப்ரேம்வொர்க் சரியாக அமையாமல் போனால், ‘பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்கு..’ கதையாகி விடும்.

ஃப்ரேம்வொர்க் டெவலப் செய்வதற்கான மொத்த வேலைகளும் டீமில் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தது. ஆளுக்கொரு காம்போனன்ட் என்று டிசைன் அண்ட் டெவலப்மன்ட் செய்ய ஆரம்பித்து இப்போது ஒருவாரம் ஓடிவிட்டது. அத்தனை நாளாய் ஜாலியாய் சுற்றித் திரிந்த அனைவரும் இப்போது சைலண்டாகிப் போயிருந்தனர். அவர்கள் வேலை பார்க்கும் தளத்தில் கேட்கும் அரட்டை சத்தம் அறவே வற்றிப் போயிருந்தது. எல்லோரும் தீயாக வேலை பார்த்தார்கள்..!!

அசோக் ஆபீஸ் நேரத்தில் வழக்கமாக மூன்று தம் அடிப்பான். ஃப்ரேம்வொர்க் வேலை ஆரம்பித்த பிறகு, அந்த மூன்று ஆறாகிவிட்டது. அன்று மாலை அவன் தம்மடிக்க ஸ்மோகிங் ஏரியா சென்றபோது, அவனுக்கு பின்னாடியே ஹரியும் வந்தான்.

“எனக்கு ஒரு தம் குடுடா மச்சி.. ஒரே ப்ரஷ்ஷ்ஷ்ஷரா இருக்கு..!!” என்றான் வெறுப்பான குரலில்.

“என்னடா.. தைரியமா தம்மடிக்க வந்துட்ட..?? உன் வொய்ஃப் இல்லையா..??” கேட்டுக்கொண்டே சிகரெட் எடுத்து நீட்டினான் அசோக்.

“உன் ஆளும் என் ஆளும் மட்டையை தூக்கிட்டு வெளையாட கெளம்பிட்டாங்க.. அவங்களுக்கும் ஒரே ப்ரஷ்ஷ்ஷ்ஷர் போல..!!” ஹரி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.

“உன் ஆளு சரி.. அது யாரு என் ஆளு..??” கேலியாக கேட்டவாறே, அசோக்கும் சிகரெட்டின் தலைக்கு கொள்ளி வைத்தான்.

“ஏன்.. நெறைய ஆள் வச்சிருக்கியோ.. ப்ரியாவைத்தான்டா சொன்னேன்..!!”

ஹரி சொல்லும்போது அசோக்கிற்கு உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ‘நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரண்ட்ஸ்னு சொன்னேன்..’ என்று ப்ரியா சொன்னது இப்போது ஏனோ நினைவுக்கு வந்தது. உடனே முகத்தை ஒருமாதிரி கடுகடுப்பாய் மாற்றிக்கொண்டு சொன்னான்.

“இங்க பாரு ஹரி.. இப்படிலாம் சொல்லிட்டு திரியாத.. எங்களுக்குள்ள இருக்குறது ஜஸ்ட் ஃப்ரண்ட்ஷிப்.. அவ்ளோதான்..!! புரியுதா..??” அசோக்கின் கோபம், ஹரியை சற்றே மிரள செய்தது.

“ஹிஹி.. எனக்கு தெரியும் மச்சி.. உன் ஃப்ரண்ட்ன்றதைதான் உன் ஆளுன்னு சொன்னேன்..!!” என்று சமாளிக்க முயன்றான்.

“இனிமே ஃப்ரண்ட்னே சொல்லு.. இந்த ஆளு, வாலுன்னு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்லாம் வேணாம்..!! சரியா..??”

“சரிடா சரிடா.. மொறைக்காத..!!”

அப்புறம் ஓரிரு நிமிடங்கள் இருவரும் அமைதியாக புகைவிட்டுக் கொண்டிருந்தனர். பாதியில் விட்டு வந்திருந்த வேலையைப் பற்றியே அவர்களது மூளை யோசித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் ஹரியின் செல்போனுக்கு அந்த கால் வந்தது. யார் அழைக்கிறார்கள் என்று எடுத்துப் பார்த்தவனை, உடனே ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது. பாதி தீர்ந்திருந்த சிகரெட்டை அவசரமாய் கீழே போட்டு நசுக்கிவிட்டு, காலை பிக்கப் செய்தான்.

“ஆங்.. சொல்லுங் மாமா..” என்றான் பவ்யமாக.

ஹரியின் மாமனார் அடுத்த முனையில் இருக்கிறார் என்று அசோக் உடனே புரிந்துகொண்டான். மனைவியைக் கண்டால் அவன் அப்படியே மிரளுவான் என்பது அசோக்கிற்கு தெரியும். ஆனால் மாமனாரிடமும் இப்படி பம்முவான் என்பதை இப்போதுதான் அறிந்து கொள்கிறான். போனில் பேசுவதற்கே சிகரெட்டை கீழே போட்டு அணைக்கிறானே..?? நேரில் பார்த்தால் நெடுஞ்சான் கிடையாக விழுந்து விடுவானோ..?? அசோக் ஹரியை சற்றே ஏளனமாய் பார்க்க ஆரம்பித்தான். அவனோ ‘சரிங் மாமா.. சரிங் மாமா..’ என்று சலிக்காமல், பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தான்.

அவரிடம் பேசி முடித்ததும், ‘ஹ்ஹ..!!’ என்று நிம்மதியாய் ஒருமுறை தலையை உலுக்கினான். ஒரு சில வினாடிகள் நெற்றியைக் கீறியவாறு எதையோ யோசித்தான். அப்புறம் தனது செல்போனை அசோக்கிடம் நீட்டியவாறே, அலட்சியமான குரலில் சொன்னான்.

“என் பொண்டாட்டிக்கு ஒரு ஃபோனை போடு மாப்ள..!!”

“எதுக்கு..??” அசோக் குழப்பமாக கேட்டான்.

“போடு.. சொல்றேன்…!!”

அசோக் குழப்பமாய் ஒரு பார்வை பார்த்தவாறே, அவனிடமிருந்து செல்போனை வாங்கினான். கவிதாவின் நம்பர் தேடிப்பிடித்து டயல் செய்துவிட்டு, காதில் வைத்துக் கொண்டான். ரிங் போய்க்கொண்டிருந்தது. காத்திருந்த நேரத்தில் ஹரியிடம் கேட்டான்.

“போட்டாச்சு.. ரிங் போயிட்டு இருக்கு.. என்னன்னு சொல்லு..!!”

“அவ அப்பா கால் பண்ணினாரு.. அவகிட்ட பேசணுமாம்.. அவளை கால் பண்ணி பேச சொல்லு..!!”

“ஏன்.. அதை நீங்க சொல்ல மாட்டீங்களோ..??”

“நான் அவகூட பேச மாட்டேன் மாப்ள.. சண்டை..!!” ஹரி கூலாக சொல்ல,

“சண்டையா.. எப்போ..??” அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

“நேத்து நைட்டு..!!” ஹரி அவ்வாறு சொன்னதும், அசோக்கிற்கு இப்போது சின்னதாய் ஒரு குழப்பம்.

“நேத்து நைட்டா..?? காலைல ஒண்ணா பைக்ல வந்தீங்க..??”

“ஆமாம்.. வீட்ல ஒரு பைக்தான இருக்கு.. அதான் ஒண்ணா வந்தோம்.. அதுக்காக ஒத்துமையா இருக்கோம்னு அர்த்தமா..?? நீ நல்லா கவனிச்சு பாத்திருந்தா உனக்கு ஒரு மேட்டர் புரிஞ்சிருக்கும்..!!”

“என்ன..??”

“என்னைக்கும் ரெண்டு பக்கமும் காலை போட்டு உக்காந்துட்டு வருவாள்ல..?? இன்னைக்கு ஒரே சைட் போட்டு உக்காந்திருந்தா.. கவனிச்சியா..??”

“அடச்சை.. இதெல்லாம் கவனிக்கிறதுதான் என் வேலையா..?? உங்க ரெண்டு பேருக்கும் வேற பொழப்பே இல்லடா.. எப்பப்பாரு சின்னப்புள்ளைங்க மாதிரி சும்மா சும்மா சண்டை போட்டுக்க வேண்டியது..!!” பிக்கப் செய்யப்படாமலே கால் கட் ஆக, செல்போனை காதில் இருந்து எடுத்துக்கொண்டே அசோக் சொன்னான்.

“ஐயோ.. இது ஸ்மால் ஃபைட்லாம் இல்ல மச்சி.. பிரச்னை பெருசாயிடுச்சு.. இந்த மாதிரி நாங்க சண்டை போட்டுக்கிட்டதே இல்ல..!!”

“ஏன்.. என்ன ஆச்சு..??”

“அவளுக்கு ரொம்ப கொழுப்பு மச்சி..!!”

“ஓஹோ..?? மேல..!!”

“நேத்து நைட்டு வெஜ் பிரியாணி பண்ணுனா.. நல்லாவே இல்ல.. என்னடி இவ்வளவு கேவலமா இருக்குன்னு சாதரணமாத்தான் கேட்டேன்.. அதுக்குப்போய் ஆய் ஊய்ன்னு கத்துறா.. நானும் பொறுத்து பொறுத்து பாத்தேன் மச்சி.. ரொம்ப ஓவரா பேசிட்டே இருந்தாளா.. விட்டேன் ஒன்னு கன்னத்துல பளார்ன்னு..!!”

ஹரி சீரியசாக சொல்லிக்கொண்டே போக, அசோக் இப்போது தன் தலையை ஒருபக்கமாய் சாய்த்து, கண்களை இடுக்கி அவனை கடுப்புடன் முறைத்தான். அவனுடைய பார்வையின் அர்த்தம் புரியாத ஹரி, சொன்னதை பாதியில் நிறுத்திவிட்டு,

“என்ன மச்சி.. என்னாச்சு..??” என குழப்பமாக கேட்டான்.

“நீ அறைஞ்ச..??”

“ம்ம்ம்..”

“உன் பொண்டாட்டியை..??”

“ஆ..ஆமாம்.. ஏன் கேக்குற..??”

“மச்சி.. பொய் சொல்லலாம்.. ஆனா பொருந்த சொல்லணும்..!! நான் கூட நெறைய பொய் சொல்வேன்.. ஆனா நம்புற மாதிரி சொல்வேன்..!!”

“அப்போ நீ நம்பலையா..??”

“போடா கப்ஸா கண்ணா.. இதெல்லாம் நம்புறதுக்கு நான் ஒன்னும் கேனயன் இல்ல..!!”

“ஹேய் மச்சி.. ப்ராமிஸ்டா..!!”

“ஹ்ஹ.. உன் ப்ராமிஸ், பெப்சொடன்ட்லாம் வேற யார்ட்டயாவது போய் பிதுக்கு மகனே..!! மாமனார்ட்டயே இப்படி மட்டையா மடங்குற நீ.. பொண்டாட்டிட்ட எப்படி பம்முவன்னு எனக்கு தெரியாதா..?? என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லவா..??”

“எ..என்ன நடந்திருக்கும்..??”

“ரொம்ப டயர்டா இருக்குன்னு நேத்து நைட்டு அவ உன்னையே சமைக்க சொல்லிருப்பா.. நீ உனக்கு ரொம்ப புடிச்ச வெஜ் பிரியாணி பண்ணிருக்குற.. ஆர்வத்துல காரத்தை அள்ளி போட்டிருப்ப.. அவ ஏன் இவ்ளோ காரம்னு கேட்டிருப்பா.. நீ வாயை வச்சுட்டு சும்மா இருக்காம ஏடாகூடமா ஏதாவது சொல்லிருப்ப.. அவ கடுப்பாயிருப்பா.. கையை முறுக்கிட்டு கும்மு கும்முன்னு நல்லா பன்ச் விட்டிருப்பா..!! அதை அப்படியே உல்ட்டா பண்ணி, இங்க வந்து ஊத்தி விட்டுட்டு இருக்குற..!!”

“ஹேய்.. போடா.. நான் உண்மையைத்தான் சொல்லிட்டு இருக்குறேன்..!!”

“ஹாஹா.. எது உண்மைன்னு எனக்கு நல்லா தெரியும் தம்பி.. விடு..!!”

“சரி நம்பாட்டி போ.. எனக்கு என்ன..?? ஆனா நீ சொன்னதுல ஒன்னு தப்பு..!!”

“என்ன..??”

“காரம்லாம் நான் எப்போவும் கரெக்டா போட்டிருவேன்.. உப்புதான் கொஞ்சம் தப்பு தப்பா..!!”

“ம்ம்.. உப்போ காரமோ.. அவ உன்னை அப்புனது உண்மைதான..??”

“ஏய்.. அது வேற இது வேற.. ரெண்டையும் போட்டு கொழப்பாத..!!”

ஹரி எரிச்சலாக சொல்ல, அசோக் இப்போது அமைதியானான். ஹரியின் முகத்தையே சலனமில்லாமல் ஒரு பார்வை பார்த்தான். ‘வாங்குற அடியையும் வாங்கிக்கிட்டு.. எப்படித்தான் இப்படி வெறப்பா மூஞ்சியை வச்சுக்குறானோ..??’ என்று அவன் மனதிற்குள் ஒரு எண்ணம் ஓடியது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவாறு சொன்னான்.

“சரி எப்படியோ போ.. அது உங்க குடும்பத்துக்குள்ள நடக்குற குத்து வெட்டு.. அதுல நான் தலையிட விரும்பலை..!!”

“ஹ்ம்ம்.. சரி அதை விடு.. அவளுக்கு ஃபோன் போட்டியே.. என்னாச்சு..??”

“ரிங் போகுது.. எடுக்கலை..!!”

“ஓ..!! அவரும் அதைத்தான் சொன்னாரு..!! வெளையாடுறா போல.. அதான் கவனிச்சிருக்க மாட்டா..!! சரி நீ ஒன்னு பண்ணுறியா..??”

“என்ன..??”

“நேராவே போய் அவளைப் பாத்து சொல்லிட்டு வந்துடுறியா..?? ப்ளீஸ்..!!”

“என்னடா.. வெளையாடுறியா..?? உனக்கென்ன நான் அல்லக்கையா..?? அப்படி என்ன அவசரம்..?? அவ ஆடி முடிச்சுட்டு வரட்டும்.. அப்புறமா சொல்லிக்கலாம்..!!”

“ஏய் மச்சி.. ப்ளீஸ்டா.. உடனே போய் சொல்லிட்டு வாடா.. இல்லனா அவ வர்றதுக்குள்ள இந்த ரப்பர் வாயன் பத்து தடவை எனக்கு கால் பண்ணி ரவுசு விடுவான்.!!”

“ரப்பர் வாயனா..?? இரு.. அவருக்கு கால் பண்ணி சொல்றேன்..!!” என்றவாறு அசோக் செல்போனை அமுக்க, ஹரி பதறிப்போய் அதை பறித்தான்.

“டேய்.. சும்மா இருக்க மாட்டியா நீ..??”

“ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!! வீட்ல பம்முறது.. வெளில உதார் விட்டுட்டு திரியிறது..!!”

“சரிப்பா.. நான் பயந்தாங்கொள்ளின்னு ஒத்துக்குறேன்.. போதுமா..?? அவகிட்ட போய் சொல்லிட்டு வாடா.. ப்ளீஸ்..!!”

“நீயும் வா.. ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்..!!”

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மச்சி.. டீபக் போட்டு விட்டு வந்திருக்கேன்.. அப்புறம் சிஸ்டம் அப்படியே ஹேங் ஆகி படுத்துடும்..!! இன்னைக்கு அதை செக்கின் பண்ணனும் வேற.. இல்லனா அந்த ஸ்ப்ரிங்கு மண்டையன் வந்து டாபர் மேன் மாதிரி சவுண்டு விட்டுட்டு இருப்பான்..!! ஒரு அஞ்சு நிமிஷம்தான.. என் செல்லம்ல.. அப்படியே பொடிநடையா போய் சொல்லிட்டு வந்துடுடா.. ப்ளீஸ்..!!”

ஹரி கெஞ்சலாக சொல்லவும், அசோக் கொஞ்சம் மனம் இளகினான். நேராகவே சென்று கவிதாவிடம் சொல்லிவர ஒத்துக்கொண்டான். இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஹரி தனது பணியிடம் செல்லும் பாதையில் திரும்ப, அசோக் எதிர் திசையில் நடந்தான்.

கம்பெனி வளாகம் பிரம்மாண்டமாக இருக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் இல்லையா..?? வளாகத்தின் உட்புறம் நாலாபக்கமும் சிமென்ட்டாலான சாலைகள் அகலமாகவும், நீளமாகவும் ஓடும். சாலையின் ஒருபுறம், காம்பவுண்ட் சுவரை ஒட்டி, கரும்பச்சை நிறத்தாலான ஸ்டீல் தகடுகள் வேயப்பட்ட கொட்டாரம் இட்டிருப்பார்கள். கொட்டாரத்தின் அடியில் கொஞ்சம் கூட கேப் இல்லாமல், கார்களும் பைக்குகளும் பார்க் செய்யப்பட்டிருக்கும். சாலையின் மறுபக்கத்தில், இளம்பச்சை நிற இலைகள் கொண்ட பெயர் தெரியாத தாவரம், இடுப்பளவு உயரத்திற்கு நெருக்கமாக நடப்பட்டிருக்கும்.

மையப்பகுதியில் சின்ன சின்ன மேடு பள்ளங்களுடன் கோல்ஃப் மைதானம் போன்று பரந்து விரிந்திருக்கும் புல்வெளி..!! அந்த புல்வெளிகளில்தான் ஆங்காங்கே, ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த மாதிரியான கலரில், அவர்கள் வேலை பார்க்கிற கட்டிடங்கள், உடலெல்லாம் கண்ணாடி பாதிக்கப்பட்டு உயர உயரமாய் எழுப்பப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ‘டவர் ஒன்.. டவர் டூ..’ என்று பெயரிட்டிருப்பார்கள். எல்லா டவர்களையும் தாண்டி சென்றால், வளாகத்தின் பின்பக்க காம்பவுன்ட்டை ஒட்டி இரண்டு கட்டிடங்கள் நின்றிருக்கும். ஒன்று, க்ளையன்ட்டுகள் வந்தால் அவர்களை தங்க வைக்கிற வசதிக்காக கட்டப்பட்ட லக்ஸுரி கெஸ்ட் ஹவுஸ்..!! இன்னொன்றுதான் கம்பனி எப்ளாயிக்கள் ஆரோக்கியமாக பொழுதை போக்குவதற்காக கட்டப்பட்டிருக்கும் உள் விளையாட்டு அரங்கம்.

அசோக் அந்த அரங்கத்துக்குள் நுழைந்தான். அரங்கத்தின் ஒரு பக்கம் பிரம்மாண்டமான ஜிம். இன்னொரு பக்கம் இன்டோர் கேம்ஸ் ஆடுவதற்கான சிறு சிறு அறைகள்.. வரிசையாக..!! அந்த அறைகளுக்குள் கேரம், டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் என விளையாடிக் கொண்டிருந்தவர்களை கடந்து அசோக் நடந்து சென்றான். ஸ்குவாஷ் அரங்கம் இருந்த பகுதிக்கு நகர்ந்தான். வரிசையாக இருந்த நான்கு ஸ்குவாஷ் கோர்ட்டுகளில் கவிதாவை தேடினான். இரண்டாவது கோர்ட்டிலேயே அவள் பார்வைக்கு சிக்கினாள்… அவளோடு விளையாடிக்கொண்டிருந்த ப்ரியாவும்..!!

ஸ்குவாஷ் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியும் அல்லவா..?? நான்கு புறமும் சூழப்பட்ட சுவர்களுக்குள் விளையாடப்பட்டும் உள்ளரங்கு விளையாட்டு. ரப்பர் பந்தும், ராக்கெட் எனப்படும் வலை மட்டையும் கொண்டு ஆடப்படும் ஆட்டம். டென்னிஸ் போன்றதுதான். டென்னிஸ் விளையாடுபவர்கள் எதிரெதிர் பக்கமாக நின்று கொண்டு, பந்தை மாற்றி மாற்றி அடித்துக் கொள்வார்கள். ஸ்குவாஷில் ஒரே பக்கமாக நின்று கொண்டு, முன்பக்க சுவரை நோக்கி பந்தை மாற்றி மாற்றி அடித்து விளையாடவேண்டும். டென்னிஸில் நெட் இருப்பது போல, இங்கு அதே உயரத்திற்கு சுவரோடு பொருந்திய மெட்டல் தகடு இருக்கும். அந்த தகடுக்கு மேல்தான் பந்தை அடிக்கவேண்டும். நாம் சுவற்றில் அடித்த பந்து திரும்பி வரும்போது, அதை எதிராளி திரும்பவும் சுவற்றில் அடிக்க முடியாமல் போனால், நமக்கு ஒரு பாயின்ட்..!!

அசோக் ஓரிரு நிமிடங்கள் கோர்ட்டுக்கு வெளியே நின்று, உள்ளே விளையாடிக்கொண்டிருந்த ப்ரியாவை, கண்ணாடி சுவர் வழியாக கண்களாலேயே விழுங்கினான். அசோக்கிற்கு பொதுவாகவே ஸ்போர்ட்ஸில் இருக்கிற பெண்களை பிடிக்கும். விளையாடுவது பெண்களுக்கு கட்டான உடலை மட்டுமன்றி, முகத்தில் ஒரு தனி களையையும் கொடுப்பதாக அவனுக்கு தோன்றும். பூப்போன்ற தேகம் கொண்டவர்கள், புயல் போல சுழன்றாடி விளையாடுவதே ஒரு தனி அழகுதான். அதுவும் இந்தப்புயல் தன் இதயத்தில் மையம் கொண்ட புயலாக வேறு இருந்து போனதே..?? ஆசையாகவும், ஆர்வமாகவும் ரசித்தான்.

ப்ரியா வெள்ளை நிற டி-ஷர்ட்டும், அதே நிறத்தில் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். முழங்கால் வரை ஸ்கர்ட் மறைத்திருக்க, மீதி கால் வெளுப்பாய், வழவழப்பாய் வெளிப்பட்டிருந்தது. அழகு பாதங்களை அடிடாஸ் ஷூ கவ்வியிருந்தது. கூந்தலை குதிரை வால் போலாக்கி, அங்குமிங்கும் அசைய விட்டிருந்தாள். இடது கை மணிக்கட்டில் ஒரு ரிஸ்ட் பான்ட் அணிந்திருந்தாள். நெற்றியில் வழியும் வியர்வையை அவ்வப்போது அதில் துடைத்துக் கொண்டாள்.

நளினமாக விளையாடிக் கொண்டிருந்தாள் என்றுதான் ப்ரியாவை சொல்லவேண்டும். அழகாக சர்வீஸ் போடுவதும்.. லாவகமாக கோர்ட்டின் மையப்பகுதிக்கு நகர்ந்து கொள்வதும்.. ஓடிச்சென்று அகலமாய் அடியெடுத்து வைத்து கால்களை ஊன்றி, வலது கையை வலுவாக வீசி பந்தை சுவற்றுக்கு அடிப்பதும்.. பாயின்ட் கிடைத்ததும் ‘ஹேய்..’ என்று உற்சாகமாக கத்தி முஷ்டியை மடக்குவதும்..!! ப்ரியா ஸ்குவாஷ் விளையாடுவாள் என்று அசோக்கிற்கு முன்பே தெரியும். ஆனால் அவள் விளையாடுவதை இன்றுதான் பார்க்கிறான். இவ்வளவு அழகாக ஆடுவாள் என்பதை இப்போதுதான் அறிகிறான். அவள் விளையாடும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது அசோக்கிற்கு..!!

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments