நெஞ்சோடு கலந்திடு – பகுதி 11
டேய்.. சொல்லிட்டாருடா.. சொல்லிட்டாரு..!!”
“என்ன சொல்லிட்டாரு..?” என்றான் அசோக் எதுவும் புரியாமல்.
“லவ்வை சொல்லிட்டாரு..”
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
அவ்வளவுதான்… அசோக் உச்சபட்ச பதட்டத்துக்கு உள்ளானான். அவனுடைய உடல் தானாகவே நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது. இதயம் படபடக்க.. உள்ளத்தில் உணர்ச்சி அலைகள் சுழன்றடிக்க.. சேட் திரையில் பார்வையை வீசினான். ‘ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ..’ என்று திவாகர் அனுப்பிய வாசகம், அவனுடைய கண்களை கோரமாய் தாக்கியது. தளர்ந்து போனான்..!!
“…… நான் என்ன சொல்லட்டும்..?” திவ்யா கேட்டது அரைகுறையாகத்தான் அவன் காதில் விழுந்தது.
“ம்ம்.. என்ன கேட்ட..?” திரும்ப அவளிடம் கேட்டான்.
“நானும் அவரை லவ் பண்றேனான்னு கேக்குறாருடா.. என்ன சொல்லட்டும்..? எஸ் சொல்லிடவா..? ம்ம்..?? சொல்லிடவா..???”
திவ்யா எக்கச்சக்க ஆர்வமும், கொள்ளை கொள்ளையாய் உற்சாகமுமாக கேட்க.. அசோக்கின் மனம் எந்த மாதிரி ஒரு உணர்ச்சித் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் என்பதை வார்த்தைகளில் சொல்வது கடினம்..!! பதறினான்.. திணறினான்.. தடுமாறினான்..!! பதில் சொல்ல தயங்கினான்..!! திவ்யாவோ முகத்தில் பிரகாசமும், கண்களில் மின்னலும், கீபோர்டில் தயாராய் விரல்களுமாய் இருந்தாள்.
“சொல்லுடா.. அவர் வெயிட் பண்றார்.. எஸ் சொல்லிடவா..?” அவனை அவசரப் படுத்தினாள்.
அப்போதுதான் அசோக்கின் மனதில் ஒரு விபரீத எண்ணம் ஓடியது..!! இது இறைவன் அவனுக்கு அளித்திருக்கும் ஒரு வாய்ப்பாக தோன்றியது..!! அதை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம் என்று தோன்றியது..!! திவ்யாவின் மீது அவனுக்கிருந்த அளவு கடந்த காதல்.. அவனுடைய மனசாட்சியின் கழுத்தை நெரித்து ஊமையாக்கி இருந்தது..!! அந்த லேப்டாப்பையே ஒரு வெறித்த பார்வை பார்த்தவாறு.. அசோக் இறுக்கமான குரலில் சொன்னான்.
“நீ அவரை லவ் பண்ணலைன்னு சொல்லு திவ்யா..!!!”
“எ..என்னடா சொல்ற..?” திவ்யா விழிகளை விரித்து அதிர்ந்தாள். அசோக்கையே நம்ப முடியாத மாதிரி ஒரு பார்வை பார்த்தாள்.
“சொல்றேன்ல..? உனக்கு அந்த மாதிரி எதுவும் ஐடியா இல்லைன்னு அனுப்பு..”
திவ்யா ஓரிரு வினாடிகள்தான் யோசித்திருப்பாள். அதிர்ந்து போனவளாய் அசோக்கை பார்த்திருப்பாள். அப்புறம் பட்டென சகஜமானாள். அவளுடைய முகம் இயல்புக்கு திரும்பியிருக்க, இதழ்களில் லேசாய் ஒரு புன்னகை அரும்பியிருந்தது. அசோக்கை சற்றே பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தவள்,
“சரி.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!!” என்றாள்.
லேப்டாப் பக்கம் திரும்பி, படபடவென டைப் செய்து, ‘ஸாரி.. நான் உங்களை லவ் பண்ணலை.. எனக்கு அந்த மாதிரி எதுவும் ஐடியா இல்ல..’ என்று திவாகருக்கு அனுப்பினாள். அனுப்பிவிட்டு அசோக்கை திரும்பி பார்த்தாள். வெகுளித்தனமாய் ஒரு குழந்தை சிரிப்பை உதிர்த்தாள். அசோக்கிற்கு இப்போது அவனது இதயத்தை எதுவோ பிசைவது மாதிரி ஒரு உணர்வு..!!
திவ்யா அந்த மாதிரி அனுப்பியதற்கு திவாகரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அசோக்கும், திவ்யாவும் சேட் விண்டோவையே கவனமாக பார்த்துக்கொண்டிருக்க.. அடுத்த முனையில் திவாகர் அமைதியாக இருந்தான். பின்பு பட்டென அவனது ஐடி ஆஃப்லைன் காட்டியது.
“என்னடா.. ஆஃப்லைன் போயிட்டாரு..?”
திவ்யாவின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. அசோக் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
“ஏண்டா அப்படி சொல்ல சொன்ன..?”
திவ்யா பரிதாபமாக கேட்க, அசோக் இப்போது அவளுடைய தோளில் கைபோட்டு, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளும் அவனது அணைப்புக்கு எதிர்ப்பு காட்டாமல், அவன் மீது சாய்ந்து கொண்டாள். அசோக் அவளுடைய கூந்தலை இதமாக கோதி விட்டான். திவ்யா தன் முகத்தை சற்றே நிமிர்த்தி மீண்டும் அசோக்கிடம் கேட்டாள்.
“சொல்லுடா.. ஏன் அப்படி சொல்ல சொன்ன..?”
“ம்ம்..? எல்லாம் காரணமாத்தான்..!!” அசோக் இறுக்கமான குரலில் சொன்னான்.
“அவர் திரும்ப வருவார்ல..?” திவ்யா பரிதாபமாக கேட்க,
“வருவாரு.. வருவாரு..” என்றான்.
மனதுக்குள் ‘வரக்கூடாது.. வரக்கூடாது..’ என்று இறைவனை வேண்டிக்கொண்டான்.
அத்தியாயம் 13
அண்டம் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஆயிரம் காரணங்களை நீங்கள் அடுக்க இயலும். அசைக்க முடியாத ஒரு காரணத்தை நான் சொல்லுகிறேன். அதன் பெயர்.. நம்பிக்கை..!!
ஒரு உயிரணு கொள்ளும் நம்பிக்கைதான் கருவாகிறது..!! தவழும் குழந்தை நம்பிக்கையினை பற்றிக்கொண்டுதான் மேலெழுகிறது.. நிற்கிறது.. நடக்கிறது.. ஓடுகிறது..!! பள்ளி செல்லும் பையன் முதுகில் மூட்டை கட்டி எடுத்து செல்வது புத்தகங்களை மட்டும் அல்ல.. கூடவே நம்பிக்கையையும்..!! வேலை தேடுவோர் உறையின் உள்ளே இடுவது பயோ டேட்டா மட்டுமல்ல.. பதில் வரும் என்ற நம்பிக்கையையும்..!! தாலி கட்டுவதும், அதற்கு தலையை குனிவதும்.. நீடிக்கும் என்ற நம்பிக்கையால்..!! பொருள் ஈட்டுவதும், அதனுடன் புகழ் தேடுவதும்.. நிலைக்கும் என்ற நம்பிக்கையால்..!!
எடிசன் கொண்ட நம்பிக்கைதான் இன்று உலகம் முழுதும் எரிந்து கொண்டிருக்கிறது..!! கிரஹாம்பெல் கொண்ட நம்பிக்கைதான் உங்களது, எனது பாக்கெட்டில் இன்று கிணுகிணுக்கிறது..!! மனிதர்கள் கொண்ட நம்பிக்கையால்தான் அணுவை பிளந்து ஆராய்ச்சி செய்ய இயன்றது..!! நாடுகள் கொண்ட நம்பிக்கையால்தான் அணு ஆயுதப்போர் இன்னும் மூளாமல் இருக்கிறது..!!
ஒரு உயிர் இன்னொரு உயிரின் மீது வைக்கும் நம்பிக்கை என்பது அற்புதமான விஷயம்..!! உலகை இன்னும் சுழல செய்து கொண்டிருக்கும் உன்னதமான விஷயம்..!! அத்தகைய நம்பிக்கையை கொல்லுகிற செயல் மிகப்பெரிய குற்றம்..!! விஷத்தை விட கொடியது..!! நம்பிக்கை துரோகம் என்பது நல்ல மனம் கொண்டார்கள் செய்யத் துணியும் காரியம் அல்ல..!!
அதே நேரம்.. இயல்பிலேயே நல்ல இதயம் கொண்டவர்கள், அறிந்தோ அறியாமலோ அத்தகைய குற்றம் செய்துவிட்டால், அவர்கள் படுகிற மன உளைச்சலும் சொல்லி மாளாது..!! அசோக் அத்தகைய உளைச்சலுக்குத்தான் இப்போது உள்ளாகியிருந்தான்..!!
“ஏண்டா அப்படி சொல்ல சொன்ன..?” என்று திவ்யா திரும்பவும் கேட்டபோது,
“அவர் உன்னை எந்த அளவு லவ் பண்றாருன்னு பாக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா.. அவர் இப்படி பட்டுன்னு ஆஃப்லைன் போவார்னு நெனைக்கலை..”
என்று சொல்லி சமாளித்தான். திவ்யாவும் அந்த பதிலில் ஓரளவு சமாதானம் ஆனாள். ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே..
“அவர் எப்படியும் திரும்ப வந்துடுவாருல அசோக்..?” என்று திவ்யா பாவமாக கேட்கும்போது நொந்து போய் விடுவான்.
திவாகர் ஆஃப்லைன் சென்று, அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லாமல் போய், இன்றோடு ஐந்து நாட்கள் ஆகின்றன. இந்த ஐந்து நாட்களும் அசோக் அடைந்த மனப்போராட்டம் மிகவும் கொடிது..!! ‘தவறு செய்து விட்டோமோ..?’ என்று ஒரு எண்ணம் அவன் மனதை எந்த நேரமும் அரித்துக் கொண்டே இருந்தது. வழக்கமாக குறும்பு கொப்பளிக்கும் திவ்யாவின் முகம், அந்த ஐந்து நாட்களும் ஒருவித மென்சோகத்தில் மூழ்கிக்கிடக்க, அசோக்கிற்கு அவள் முகத்தை காண சகிக்கவில்லை. அவளை பார்க்கும் போதெல்லாம் ஒருவித குற்ற உணர்வின் பிடியில் அவன் சிக்கிக் கொள்வதையும் தவிர்க்க இயலவில்லை..!!
அன்று அசோக்குடைய அலுவலக நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள். அந்த நண்பன் அவர்களுடைய டீமில் அனைவருக்கும், அன்று மதிய உணவு ட்ரீட் கொடுத்தான். அவர்கள் சென்ற உணவகத்திற்கு மிக அருகில்தான் திவ்யா படிக்கும் கல்லூரி உள்ளது. தின்று முடித்ததும் அனைவரும், திரும்ப அலுவலகம் கிளம்ப, அசோக் மட்டும் திவ்யாவை ஒரு எட்டு சென்று பார்த்து வீட்டு வரலாம் என்று பைக்கில் கிளம்பினான்.
பைக்கை கல்லூரி வளாகத்துக்குள் செலுத்தி பார்க் செய்தவன், செல்போன் எடுத்து திவ்யாவின் நம்பருக்கு கால் செய்தான். காத்திருந்தான்..!! கால் பிக்கப் செய்யப்பட்டது. எதிர் முனையில் வேறொரு பெண்ணின் குரல்..!!
“ஹலோ..”
“தி..திவ்யா..??” அசோக் திணறலாக கேட்டான்.
“அவ இங்க இல்லீங்களே..? நான் அவ ஃப்ரண்டு பேசுறேன்…!!”
“எங்க போயிருக்கா..?”
“அவ பேஸ்கட்பால் கிரவுண்ட்ல இருப்பா.. பேகை இங்க போட்டுட்டு போயிட்டா..”
“ஓ..!! தேங்க்ஸ்ங்க..!! ம்ம்ம்… ஆமாம்.. உங்க பேரு..??” அசோக் கேட்க,
“அது எதுக்கு உங்களுக்கு..?” அடுத்த முனை சூடானது.
“சரி.. வேணாம்.. விடுங்க..!!”
காலை கட் செய்த அசோக், அருகில் புல் வெட்டிக் கொண்டிருந்த ஒரு தொழிலாயிடம், பேஸ்கட்பால் மைதானம் எங்கிருக்கிறது என்று கேட்டு அறிந்து கொண்டான். செல்போனை பேன்ட் பாக்கெட்டில் செருகியவாறே, அந்த ஆள் கைகாட்டிய திசையில் மெல்ல நடையை போட்டான்.
புதிதாக போடப்பட்டிருந்த சிமென்ட் சாலை. அதன் இருபுறமும் உயர உயரமாய், பச்சை பச்சையாய் மரங்கள்.. அவன் நடந்து சென்ற அந்த சாலையை நிழலால் நனைத்திருந்தன..!! வெளிர் சாம்பல் நிற சாலையில் உதிர்ந்திருந்த பழுப்பு நிற இலைகளில், ஷூ கால்கள் பதிய அசோக் நடந்து சென்றான்..!!
நேராக நடந்து சென்றவன், புல் வெட்டியவன் சொன்ன நூலகத்தை அடைந்ததும், இடப்பக்கம் திரும்பினான். இப்போது தூரமாக பேஸ்கட்பால் மைதானம் கண்ணில் பட்டது. தனியாக பந்தை தரையில் தட்டியவாறே, இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த திவ்யாவும்..!! மைதானத்தை நெருங்கியவன், சற்று தூரமாகவே நின்று கொண்டான். மர நிழலில் போடப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டான். பந்து தட்டி ஓடிக்கொண்டிருந்த திவ்யாவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
திவ்யா அவள் மட்டும் தனியாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள்… கொளுத்தும் வெயிலில்..!! அவள்தான் அந்த நேரத்தில் அங்கு வந்து தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்றால்.. அந்தப்பக்கம் ஜீன்ஸ் அணிந்த இரண்டு பேர்.. ஏதோ சீரியசாக பேசிக்கொள்வது மாதிரி பாவ்லா செய்து கொண்டு.. உச்சி வெயிலில் நின்று அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள்..!!
அசோக் வந்ததை திவ்யா கவனிக்கவில்லை. பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்தாள். தன்னை சுற்றி எதிரணியினர் இருப்பது மாதிரி கற்பனை செய்துகொண்டு, அவர்கள் கைகளில் பந்து சிக்காதவாறு, நெளிந்து வளைந்து காப்பாற்றிக்கொண்டு, அப்படியும் இப்படியுமாய் ஓடினாள். அப்புறம் திடீரென திரும்பி.. லேசாக ஜம்ப் செய்து.. கூடையை நோக்கி சர்ரென பந்தை எறிந்தாள். அதுவும் அழகாக வளையத்துள் புகுந்து, வலைக்குள் நுழைந்து பொத்தென்று கீழே விழுந்தது..!!
இளநிலை பட்டம் படிக்கையில்தான், இந்த பேஸ்கட்பால் ஆர்வம் திவ்யாவுக்கு பிறந்தது. இப்போது இந்த கல்லூரி பெண்கள் அணிக்கு அவள்தான் கேப்டன்..!! பேஸ்கட்பால் அவளுக்கு அவ்வளவு பிடித்து போனது. அசோக்கிற்கும் அது நன்றாகவே தெரிந்த ஒரு விஷயம்..!! ஒருமுறை இந்தமாதிரி அவனிடம் சொல்லியிருக்கிறாள்.
“மனசு சரியில்லன்னு வச்சுக்கோ.. பேஸ்கட்பால் கோர்ட் போய்.. ரெண்டு ஷூட் போட்டா போதும்..!! அப்டியே கூல் ஆகிடுவேன் நானு..!!”
ஓரிரு நிமிடங்கள் கழித்துதான் திவ்யா அசோக்கை கவனித்தாள். எதேச்சையாக திரும்பியவள், அவனை பார்த்ததும் அப்படியே நின்றாள். ஒருகணம் திகைத்தவள், அப்புறம் லேசாக ஒரு புன்னகையை அவனிடம் வீசினாள்… அந்த புன்னகையுடனே கையில் வைத்திருந்த பந்தையும்..!! பறந்து வந்த பந்தை சரியாக கேட்ச் செய்த அசோக், பதிலுக்கு திவ்யாவை பார்த்து புன்னகைத்தான்.
திவ்யா நடந்து வந்து அவனுக்கருகே அமர்ந்து கொண்டாள். முகத்தில் வழிந்த வியர்வையை துவாலையால் துடைத்துக் கொண்டே கேலி தெறிக்கும் குரலில் கேட்டாள்.
“ஆபீஸ் பொண்ணுகள்லாம் உனக்கு அலுத்து போயிட்டாளுகளா..?”
“ஏன்…?”
“கலர் பார்க்க காலேஜுக்கே கெளம்பி வந்துட்டியேன்னு கேட்டேன்..”
“கலரா..?? உங்க காலேஜ்ல படிக்கிறதுகள எல்லாம் கலர்னு சொல்லாத..!! கலர்களா அதுங்க.. காட்டேரிங்க..!!”
“ஏன்..??”
“பின்ன..? பேரை கேட்டா கடிக்க வர்றாளுக..”
“ஹாஹா..!! யார்கிட்ட பேர் கேட்ட..?”
“உனக்கு கால் பண்ணேன்.. ஒருத்தி எடுத்தா.. அவகிட்ட..!! நல்லா கருங்கல்லை முழுங்குன காக்கா மாதிரி ஒரு வாய்ஸ்..!! ஆ..ஆமாம்.. அவ பேர் என்ன..??” அசோக் எதேச்சையாக கேட்பது மாதிரி கேட்க,
“அது எதுக்கு உனக்கு..?” என திவ்யா தெளிவாக இருந்தாள்.
“கிழிஞ்சது..!! எல்லாம் ஒரே மாதிரி இருக்கீங்கடி..!! அவளும் இப்டித்தான் கேட்டா..!!”
“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!” திவ்யா பெரிதாக, அழகாக சிரித்தாள். அப்புறம் அந்த சிரித்த முகத்துடனே கேட்டாள்.
“ம்ம்ம்.. சாப்டியாடா..??”
“ஆச்சு ஆச்சு.. ஒரு ட்ரீட் இன்னைக்கு..!! இங்கதான்.. ராயல் என்க்லேவ் இருக்குல..”
“ஆமாம்..”
“அங்கதான்.. செம தீனி..!! சிக்கன், டர்க்கி, ஃபிஷ்.. வயிறு ஃபுல் ஆயிடுச்சு..!! ம்ம்ம்ம்.. நீ சாப்டியா திவ்யா..?” அசோக் சிரித்தவாறே கேட்க,
“இ..இல்லடா..” திவ்யாவின் முகம் பட்டென மாறியது.. சோர்வாக..!!
“ஏன்..?”
“ஒரு மாதிரி.. மனசே சரியில்ல..!! அதான்.. பால் எடுத்துட்டு இங்க வந்துட்டேன்..!!”
சொல்லிவிட்டு திவ்யா வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டாள். அவ்வளவு நேரம் உற்சாகமாக இந்த அவளது முகம், பட்டென இப்போது வாடிப் போயிருந்தது. வாடிப்போன அவளுடைய முகத்தை பார்க்க.. அசோக்கிற்கு இப்போது வலித்தது..!! கடந்த ஐந்து நாட்களாக அடிக்கடி அவனை வாட்டி வதைக்கிற அந்த குற்ற உணர்ச்சி, இப்போது மீண்டும் வந்து அவன் மனதை கவ்விக் கொண்டது..!! சற்றே தடுமாற்றமான குரலில் கேட்டான்.
“தி..திவாகர் திரும்ப வராதாதலையா…?”
திவ்யா அந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. எங்கேயோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இப்போது அசோக் குற்ற உணர்ச்சியை குழைத்த குரலில் சொன்னான்.
“ஸா..ஸாரி திவ்யா..” அவன் அப்படி சொல்ல, திவ்யா உடனே பதறிப் போனாள்.
“ஐயோ.. என்னடா நீ..?? நீ எதுக்கு ஸாரி கேக்குற..??”
“என்னாலதானா அப்படி ஆச்சு..? நாந்தான உன்னை லவ் இல்லன்னு சொல்ல சொன்னேன்..?? நான் மட்டும் அப்படி சொல்லாம இருந்திருந்தா.. இப்போ எந்த பிரச்னையும் இருந்திருக்காது…!!! ஸாரி திவ்யா.. என்னை மன்னிச்சுடு..!!”
“அசோக்.. ப்ளீஸ்..”
“நா..நான்.. நான் தப்பு பண்ணிட்டேன் திவ்யா..”
“அதுலாம் ஒண்ணுல்ல.. உன் மேல எந்த தப்பும் இல்ல..!!”
“இல்ல.. உனக்கு புரியலை.. நான்..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திவ்யா டென்ஷனானாள். கத்தினாள்.
“ப்ச்..!! இப்போ நிறுத்தப் போறியா..? இல்லனா.. அப்படியே அறையவா..?? லூசா நீ..??”
“……” அசோக் இப்போது அமைதியானான்.
“அவர் திரும்ப வர்றாரு.. இல்லனா வராம போறாரு.. அதுக்காக நீ இப்படிலாம் தேவையில்லாம ஃபீல் பண்ணிட்டு இருக்காத..!! ப்ளீஸ்..!!”
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :