மாங்கல்யம் தந்துனானே – பகுதி 13
“உங்ககிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?”
“எ..என்ன பவி.. சொல்லு..” அவள் இப்போது முகத்தில் குழப்ப ரேகை ஓட கேட்டாள்.
“புருஷன்றவன் ஒரு பொண்ணுக்கு எவ்வளவு முக்கியமானவன்..”
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“ஆ..ஆமாம்..”
“புருஷன்ற அந்த உறவு.. எவ்வளவு புனிதமான உறவு..”
“ம்..ம்ம்ம்..”
“எங்கயோ பிறந்து.. எங்கயோ வளர்ந்து.. நம்மள அவங்க வாழ்க்கைல சேர்த்துக்கிட்டு.. அவங்க சுகதுக்கம்.. கஷ்ட நஷ்டம்லாம் ஷேர் பண்ணிக்கிட்டு.. நமக்கு புடிச்சதெல்லாம் தேடித்தேடி செஞ்சுக்கிட்டு.. நமக்காகவே ஓடிஓடி ஒழைச்சு.. ஓடா தேயுறாங்களே..?? பொண்டாட்டிக்கு புருஷன்றவன்தான் மொதல் புள்ளை.. புருஷனுக்கு கடவுள் கொடுத்த இன்னொரு அம்மாதான் பொண்டாட்டி.. அப்டின்லாம் சொல்றாங்களே..?? எவ்வளவு புனிதமான உறவுல அது..?”
“ம்ம்..!! ஆ..ஆனா.. நீ என்ன சொல்ல வர்றேன்னு…”
“அப்படிப்பட்ட புனிதமான உறவை கொச்சைப் படுத்துற மாதிரி.. உங்க ஹஸ்பண்டை யாராரோடவோ கம்பேர் பண்றீங்களே..? அது தப்பு இல்லையா..?”
நான் சொல்ல சொல்ல.. அவளுடைய முகம் பக்கென அதிர்ச்சியில் சுருங்கி சிறுத்துப் போனது. பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி திகைப்பாக என் முகத்தையே பார்த்தாள். நான் அதே அமைதியான குரலில் தொடர்ந்தேன்.
“எப்படி இருந்தாலும்.. என்ன கொறை இருந்தாலும்.. அவன் என் புருஷன்.. அவனை விட்டுக்கொடுக்க கூடாதுன்னு.. உங்களுக்கு தோணலையா..?”
நான் சொல்லிவிட்டு அவள் முகத்தையே கூர்மையாகப் பார்த்தேன். அவள் ஒருமாதிரி ஸ்தம்பித்துப் போயிருந்தாள். முகம் முழுதும் அதிர்ச்சியில் வெளிற ஆரம்பிக்க, அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. கண்கள் கூட லேசாக கலங்கிய மாதிரி தோன்றியது. ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் உறைந்து போய் நின்றிருந்தாள்.
அவள் அந்தமாதிரி சிலையாக நின்று கொண்டிருந்தபோதே, ஒரு பையன் அடித்த பந்து பால்கனி நோக்கி பறந்து வந்தது. அவளுக்கு நேராக..!! அவள் அதை கவனிக்கவில்லை..!! பந்து அவளுடைய தலையில் அடித்துவிடக் கூடாது என்று பதறிய நான், பட்டென என் வலக்கையை நீட்டி அவளுடைய கன்னத்துக்கு சில அங்குல இடைவெளியில் அந்தப் பந்தை பிடித்தேன். அவளோ.. நான் அவளை அறையத்தான் கையை ஓங்கினேன் என்று நினைத்தாளோ என்னவோ.. படக்கென முகத்தை திருப்பியவள், அறை விழாமலே.. விழுந்த மாதிரி தன் கன்னத்தில் கை வைத்து மூடிக் கொண்டாள்.
அவளை இவ்வாறு காயப் படுத்தும் அளவிற்கு அவள் மீது எனக்கென்ன கோபம் என்று கேட்கிறீர்களா..? அவள் மீது எனக்கு பெரிதாக கோபமெல்லாம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால்.. இரண்டு வாரங்கள் முன்பு நடந்த அந்த சம்பவத்தினால், அவள் மீது நான் மனதில் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தேன். இந்தமாதிரி அவள் பேசும்போதெல்லாம் வழக்கமாக எனக்குள் எழும் எரிச்சல்தான்.. இன்று சற்று எல்லை கடந்துவிட்டது..!! இரண்டு வாரங்கள் முன்பு அசோக் ஆபீசில் எதையோ சாப்பிடப் போக, அது ஃபுட் பாய்சன் ஆகி, வயிறு கோளாறு சீரியசாகி, இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்குமாறு ஆயிற்று.
அந்த இரண்டு நாட்கள் நான் மிகவும் கலங்கிப் போனேன். முதன்முறையாக தாயாகிப் போன மாதிரியான உணர்வு. உடல் மெலிந்து, சோர்ந்து போய், ஹாஸ்பிட்டல் படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டு, என் உள்ளங்கையை தேடிப்பிடிக்கும் என் கணவரை காணும்போது, என் குழந்தையாகத்தான் தோன்றினார் அவர்..!! அவர் தூங்கும் நேரம் எல்லாம் அழுதுகொண்டே இருப்பேன். அவர் கண்விழிக்கும்போது, என் கண்துடைத்து சகஜ நிலைக்கு திரும்ப, மிகவும் சிரமப் படுவேன்.
அந்த மாதிரி நான் கலங்கிப் போயிருந்த நிலையில் இந்த ரேணுகாதான் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தாள். ஆபீசுக்கு ஒருநாள் லீவ் சொல்லிவிட்டு, முதல் நாள் முழுவதும் என்னுடனே இருந்தாள். அவருடைய உடல்நிலை பற்றி நான் கவலை கொள்ளும் வேளையில், பணம் ஒரு பிரச்னையாக இல்லாதவாறு பார்த்துக் கொண்டாள். மருந்து வாங்குவதற்கெல்லாம் அவளே அலைந்தாள். என் அருகில் இருந்து என்னை தேற்றியவள், அடுத்தநாள் காலை அத்தையும், மாமாவும் வந்து சேர்ந்த பிறகுதுதான் ஆபீஸ் கிளம்பினாள்.
அந்த சம்பவம் அவளைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை என் மனதுக்குள் உருவாக்கி இருந்தது. ஆனால்.. மீண்டும் அவர் திரும்பி வந்த ஓரிரு நாட்களிலேயே அவள் பழைய மாதிரி ஒப்பீட்டு பேச்சை ஆரம்பிக்கவும், மறுபடியும் என் மனதை எரிச்சல் அரிக்க ஆரம்பித்திருந்தது. அந்த மாதிரியான பேச்சு கடுமையாக என் மனதைப் பாதித்தது. அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணியே, அவ்வாறு முகத்தில் அறைந்த மாதிரி கேட்டுவிட்டேன்.
ஆனால், கேட்டுவிட்ட பிறகு அவள் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவசரப் பட்டு விட்டோமோ என்று கூட தோன்றியது. நான் நினைத்ததை விட மிகவும் காயப்பட்டுப் போனாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், ‘ஸாரி பவி..’ என்று உலர்ந்து போன குரலில் சொல்லிவிட்டு, விடுவிடுவென நடந்து அவள் ஃப்ளாட்டுக்கு சென்றுவிட்டாள்.
அப்புறம் இரண்டு மூன்று நாட்கள் அவள் என் கண்ணிலேயே படவில்லை. எங்கள் வீட்டுக்கும் வரவில்லை. ஆபீசில் இருந்து வந்ததும் அவளுடைய ஃப்ளாட்டிலேயே அடைந்து கிடந்தாள். கோவம் இருக்கும் என்று எனக்கும் புரிந்தது. ‘பாவம்..’ என்று ஒருமனம் நினைத்தாலும், ‘பரவாயில்லை..’ என்று இன்னொரு மனம் சொல்லியது. நான் சொல்லிய விதந்தான் எனக்கு வருத்தத்தை அளித்ததே ஒழிய, சொன்ன விஷயத்தில் எந்த வித தவறும் இல்லை என்றே தோன்றியது. அந்த மாதிரி சமயத்தில்தான் அவள் மீது உச்சபட்ச வெறுப்பை உமிழ்ந்த அந்த சம்பவம் நடந்தது.
அன்று நியூ இயருக்கு முந்தய தினம்..!! காலையில் அவர் ஆபீசுக்கு கிளம்பிய போதே, இரவு சீக்கிரம் வர சொன்னேன். வெளியில் எங்காவது செல்லலாம் என என் விருப்பத்தை சொல்லியிருந்தேன். அவரும் சரி என்றுவிட்டே கிளம்பினார்.
மாலையில் நான் சற்று பரபரப்பாகவே காணப்பட்டேன். அவருடன் ஊர் சுற்றுவது என்பது எப்போதுமே எனக்கு உற்சாகம் தரும் விஷயம். பைக்கில் அவர் பின்னால் அமர்ந்துகொண்டு அவருடைய இடுப்பை வளைத்துக் கொள்வது பிடிக்கும். செல்லுமிடங்களில் அவர் என்னுடைய கணவராக்கும் என்று உரிமையுடன் அவருடைய கையை கோர்த்துக் கொண்டு நடப்பது பிடிக்கும். சீக்கிரமே கிளம்பி ரெடியானேன். அவருக்கு மிகவும் பிடித்த ஒரு காட்டன் புடவையை அணிந்து கொண்டு.. கொஞ்சமாய், திருத்தமாய் அலங்காரம் செய்துகொண்டு.. கூந்தலில் மல்லிகை அள்ளி வைத்து.. வாங்கி வைத்திருந்த கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டு.. காத்திருந்தேன் அவருக்காக..!!
அவரிடம் இருந்து கால் வந்தது. ஓடிச்சென்று எடுத்தேன். உற்சாகமும் சந்தோஷமும் பொங்கும் குரலில் கேட்டேன்.
“என்னங்க.. கெளம்பிட்டீங்களா.. எப்போ வருவீங்க..?”
ஆனால் மறுமுனையில் இருந்து அவருடைய குரலுக்கு பதிலாக அந்த ரேணுகாவின் குரல் தயங்கி தயங்கி ஒலிக்க, நான் பட்டென முகம் சுருங்கினேன்.
“ப..பவி.. நான் ரே..ரேணு..”
“ஓ… நீ..நீங்களா..? அ..அவரு..” நான் தடுமாற்றமாய் கேட்டேன்.
“அ..அசோக் கார் ஓட்டிட்டு இருக்கான்.. அதான் என்னைப் பேச சொன்னான்..”
“ம்ம்ம்.. சொல்லுங்க..”
“ஆபீஸ்ல திடீர்னு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிட்டாங்க பவி.. ரெண்டு பேரும் அங்கதான் போயிட்டு இருக்கோம்.. நைட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடும்.. அதான்.. உ..உன்கிட்ட சொல்லலாம்னு..”
“ஓ.. பா..பார்ட்டியா..? போ..போறீங்களா..? ஓகே.. போ..போயிட்டு வாங்க..!! வேற..?”
“வே..வேற ஒன்னும் இல்ல..”
அவள் சொல்லி முடிக்கும் முன்பே நான் பட்டென காலை கட் செய்தேன். செல்போனை தூக்கி வீசினேன். நெஞ்சில் அடைத்த துக்கத்தை அடக்க முடியாதவளாய், கண்ணில் நீர் வார்க்க ஆரம்பித்தேன். அவருடன் வெளியே செல்கிற என் ஆசை கலைந்தது ஒருபுறம் வதைக்க, அவளும் அவரும் சேர்ந்து பார்ட்டி சென்று கூத்தடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் இன்னொரு புறம் என்னை வாட்டியது. கண்ணீர் மட்டும் வடிக்கவில்லை என்றால்.. உயிரற்ற ஜடம் என்று என்னை முடிவு கட்டிவிடலாம். அந்த மாதிரிதான் அவர்கள் வரும்வரை அசையாமல் சோபாவில் அமர்ந்திருந்தேன்.
கீழே காரின் ஹார்ன் கேட்டதும், தலை திருப்பி மணி பார்த்தேன். பதினோரு மணிக்கு மேலாகி இருந்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது, அவர்கள்தான் என்று புரிந்தது. இருவரும் முகமெல்லாம் சிரிப்பாக காரில் இருந்து இறங்கினார்கள். அசோக் நன்றாக குடித்திருப்பார் என்று தோன்றியது. தள்ளாடினார்..!! நானே சென்று அவரை மேலே அழைத்து வரலாம் என்று நினைத்தேன். படியிறங்கி கீழே சென்றேன்.
நான் அவரை நெருங்கவும்.. அவர் கோணலான வாயுடன் என்னை பார்த்து புன்னகைத்தவாறு, கால் இடறி தடுமாறவும் சரியாக இருந்தது..!! நான் ‘பாத்துங்க..’ என்றவாறு அவருடைய இடுப்புக்கு கை கொடுத்து தாங்கிப் பிடிக்க, அதே நேரம் அந்த ரேணுகாவும் ‘டேய்..’ என்றவாறு அவருடைய தோளைப் பற்றினாள். அவ்வளவுதான்..!! எங்கிருந்துதான் எனக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது என்று தெரியவில்லை. பட்டென அவளுடைய கையை அவருடைய தோளில் இருந்து தட்டிவிட்டேன். உக்கிரமாக அவளை பார்த்து முறைத்தவாறு, வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை உதிர்த்தேன்.
“எல்லாம் எனக்கு பாத்துக்க தெரியும்..!!!!”
அவள் வாயடைத்துப் போனாள். கடுமையான காயம்பட்டவள் மாதிரி, பரிதாபமாக என் முகத்தை பார்த்தாள். ‘ஸாரி பவி..’ என்கிறாள் என அவளுடைய உதட்டசைவில் இருந்தே உணர்ந்து கொண்டேன். வார்த்தை வெளியே வரவில்லை. மேலும் உக்கிரமாய் ஒரு முறைப்பை அவள் மீது வீசிவிட்டு, என் கணவரின் ஒரு கையை எடுத்து என் தோளில் போட்டுக் கொண்டேன். ஒரு கையால் அவருடைய இடுப்பை பற்றி, அவர் படியேறி மேலே செல்ல உதவினேன்.
“ஸா..ஸாரி பவி.. நி..நியூ இயர்னு… கொ..கொஞ்சம் ஓவரா.. இனிமே இப்டிலாம்.. இன்னும் ரெ..ரெண்டு மாசம் நான் குடிக்கவே மாட்டேன்… சரியா..?”
அவர் வாய் குழற சொன்னபடியே, ஹாலில் கிடந்த சோபாவில் தொப்பென அமர்ந்தார். நான் கதவை அடைக்க மீண்டும் வாசலுக்கு வந்தேன். வெளியே அடிபட்ட பறவை மாதிரி பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த ரேணுகாவை, வெறுப்புடன் பார்த்தவாறே கதவை ஓங்கி அறைந்து சாத்தினேன். திரும்ப நடந்து வந்து, என் கணவருக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். போதையில் அவருடைய தலையும், கண்களும் நிலை கொள்ளாமல் சுழன்றதை சில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் இறுக்கமான குரலில் அவரிடம் சொன்னேன்.
“கூடிய சீக்கிரம் வேற வீடு மாறிடலாங்க..”
அவர் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். படாரென ஒரு அதிர்ச்சி ரேகை அவருடைய முகத்தில் ஓடுவதை என்னால் உணர முடிந்தது. ஏற்றிய போதையும் அந்த கேள்வியால் அவருக்கு வெகுவாக குறைந்திருக்க வேண்டும். சற்றே தெளிவான குரலில் கேட்டார்.
“எ..என்னடி சொல்ற..?”
“புரியலையா..? இந்த வீட்டை காலி பண்ணிட்டு வேற வீடு போயிறலாம்னு சொல்றேன்..!!”
“ஏன்..?”
“ஏன்னா.? எனக்கு இந்த வீடு புடிக்கலை..!!”
“அதான்.. ஏன் புடிக்கலைன்னு கேக்குறேன்..? சின்னதா இருந்தாலும் அழகான வீடு.. என்ன தேவைன்னாலும் எல்லாமே பக்கத்துலயே கெடைக்குது.. தண்ணி பிரச்னை இல்லை.. கம்மி ரெண்ட்.. ஆபீசுக்கும் ரொம்ப க்ளோஸ்.. எல்லாத்துக்கு மேல என்ன ஹெல்ப் வேணுன்னாலும் கேக்குறதுக்கு பக்கத்துலயே ரேணுகா..” அவர் சொல்லிக்கொண்டே போக,
“அவ பக்கத்துல இருக்குறதாலதான் புடிக்கலை..!!” நான் பட்டென இடைமறித்தேன்.
“எ..என்ன சொல்ற நீ..?” அவர் இன்னும் என் எண்ணம் புரியாமல் கேட்டார்.
“புரியலையா இன்னும்..? எனக்கு அந்த ரேணுகாவை புடிக்கலை.. அதான் வேற வீடு மாத்தலாம்னு சொல்றேன்.. முடிஞ்சா வேற வேலை கூட மாத்திடுங்க..!!” நான் படபடவென சொல்ல, அவர் சில வினாடிகள் என் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம்,
“ரேணுகாவை ஏன் உனக்கு புடிக்கலை..?” என்றார்.
“ஏன்லாம் காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது.. புடிக்கலை..!! அவ்ளோதான்..!! வீட்டைத்தான உங்களை மாத்த சொல்றேன்.. மாத்துங்களேன்..!!”
“இந்த மாதிரி வசதியான இன்னொரு வீடு கெடைக்கிறது கஷ்டம் பவி.. இந்த வீட்டை புடிக்கவே நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன் தெரியுமா.?”
“என்ன கஷ்டப்பட்டிருக்க போறீங்க..? ‘உன் பக்கத்துலயே எனக்கு ஒரு வீடு பாரு ரேணு..’ன்னு அவகிட்ட வழிஞ்சுருப்பீங்க.. அவளும் உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம எல்லாம் பண்ணிக் கொடுத்திருப்பா..!!”
“ஓஹோ..?? சரி.. அப்டியே இருந்துட்டு போகட்டும்.. உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்..!! பேச்சை விடு..!!”
“விடுறேன்.. வேற வீடு எப்போ போறோம்னு சொல்லுங்க.. விடுறேன்..!!”
“இங்க பாரு.. இந்த வீடும், வேலையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. கம்ஃபர்ட்டபிளா இருக்குது..!! நீ காரணம் இல்லாம கத்துறதுக்காகலாம் நான் கஷ்டப்பட்டுட்டு இருக்க முடியாது..!!” அவர் சற்றே கடுமையாக சொல்ல, எனக்கு சுரீர் என கோபம் வந்தது.
“யாரு..??? நான் கத்துறனா..??? நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கெளம்பி உக்காந்திருப்பேன்.. நீங்க அவகூட குடிச்சு கூத்தடிச்சுட்டு வருவீங்க..? நான் எதுவும் சொல்ல கூடாது..?? அப்டித்தான..? சொன்னா.. கத்துறேன்னு சொல்வீங்க..!!” இப்போது நான் நிஜமாகவே கத்தினேன்.
“ஹேய்.. ஆபீஸ்ல திடீர்னு அரேஞ்ச் பண்ணிட்டாங்கம்மா.. க்ளையன்ட்லாம் வந்திருந்தாங்க.. நீ வரலைன்னா நல்லாருக்காதுன்னு..” அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,
“அந்த ரேணுகா சொன்னாளா..?” நான் பட்டென கேட்டேன்.
“ம்ம்.. அவதான என் பாஸ்..?”
“அப்போ.. என்னை விட உங்களுக்கு அவதான் முக்கியம் இல்ல..??”
“ப்ச்..!! அறிவில்லாம பேசாத பவி.. ரேணுகா மேல அப்டி என்ன கோவம் உனக்கு..?”
“ஹ்ஹா.. யாரு..? நான் அறிவில்லாம பேசுறனா..? அவதான் அப்டிலாம் பேசுவா..?”
“அவ பேசுவாளா..? என்ன பேசுவா..?”
“ம்ம்ம்ம்.. கட்டுன புருஷனை கண்டவங்க கூடவும் கம்பேர் பண்ணிப் பேசுவா.. என் புருஷன் சரியில்லைன்னு எல்லார்கிட்டயும் போய் சொல்வா.. வேற யாராவது நல்ல புருஷன் கெடைக்க மாட்டாங்களான்னு ஏங்குவா..” நான் ஓரக்கண்ணால் அவரை பார்த்தபடி சொல்லவும், அவருக்கு மொத்தமும் சட்டென புரிந்து போனது. உடனே சீறினார்.
“வாயை மூடு பவி.. ரேணுகாவைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..?”
“ஓஹோ.. அவளைப் பத்தி சொன்னா.. உங்களுக்கு கோவம் பொறுக்கலையோ..? நல்லாத்தான் மயக்கி வச்சிருக்கா..!!”
அவ்வளவுதான்..!! அவருடைய ஆத்திரம் எல்லை மீறியது..!! என் கன்னத்தில் அறைய கையை ஓங்கியவாறு கத்தினார்.
“வாயை மூடுன்னு சொல்றேன்லடி..?? பல்லை உடைச்சிடுவேன்..!!”
விழிகளை அகலமாய் திறந்து, ரவுத்திரமாய் ஒரு பார்வை பார்த்தபடி என்னை அறைய கையை ஓங்கிய என் கணவரை பார்த்ததும், என்னால் எழுந்த துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் இன்ஸ்டண்டாய் ஒரு அருவி உற்பத்தியாகி, பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது. ஆத்திரம் மொத்தமும் அடங்கி, இப்போது பரிதாபமான குரலில் சொன்னேன்.
“அறைங்க.. ஏன் நிறுத்திட்டீங்க..? அவளுக்காக என்னை அடிக்கிற அளவுக்கு வந்துட்டீங்கல்ல..?”
இப்போது அவருடைய முகம் பட்டென மாறியது. ரவுத்திரம் இருந்த இடம் முழுக்க, இப்போது என் மீதான காதல் வந்து ஒட்டிக் கொண்டது. ஓங்கிய கையை படக்கென கீழே இறக்கினார். அவரும் கண்கள் கலங்க என்னை பார்த்தவாறு, அதே கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தபடி.. அன்பும், வருத்தமும் கலந்த குரலில் சொன்னார்.
“ஐ..ஐயோ.. ஸாரி பவிம்மா.. ஸாரிடா..!!”
“பேசாதீங்க.. போங்க.. அவதான உங்களுக்கு முக்கியம்.. அவகிட்டயே போங்க..!!”
அழுகையும், ஆத்திரமுமாய் சொல்லிவிட்டு நான் எழுந்து உள்ளே ஓடினேன். படுக்கையறைக்குள் நுழைந்து பொத்தென மெத்தையில் விழுந்தேன். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். மனதெல்லாம் தாங்க முடியா வேதனை..!! அவருடைய அழகு முகத்தில் இப்படி ஒரு ரவுத்திரம் தாண்டவமாடியதையும் இன்றுதான் முதன்முதலாய் காண நேரந்தது..!! எவளோ ஒருத்திக்காக என்னை அறைய கையோங்கி விட்டாரே..? என்னைவிட அவள்தானா முக்கியம் அவருக்கு..??
“பவி.. என்னம்மா நீ..??” அவர் கேட்டுக்கொண்டே என் தோள் மீது கை வைத்தார்.
“என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா அழவாவது விடுங்க.. போயிடுங்க..” நான் சீறினேன்.
“ஸாரி பவிம்மா.. நான் உன்னை அடிக்க வந்தது தப்புதான்.. மன்னிச்சுடுடா.. ப்ளீஸ்…!!”
“ஒன்னும் வேணாம்.. போங்க..!!”
“ஹேய்..”
“போங்கன்னு சொல்றேன்ல..?”
நான் காட்டுத்தனமாய் கத்தியதும் அவர் அமைதியானார். எதுவுமே பேசவில்லை. ஆனால் எழுந்தும் செல்லவில்லை. என் அருகிலேயே அமர்ந்திருந்தார். நான் குப்புறப் படுத்து.. முதுகு குலுங்க.. தலையணை நனைக்க.. அவர் எனக்கருகே தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார். கொஞ்ச நேரம்..!! அப்புறம்..
“பவிம்மா..”
என்று அவர் மீண்டும் என் தோள் தொட்டார். இப்போது எனக்கு எரிச்சல் எல்லை மீறிப் போனது. நான் அவ்வளவு சொல்லியும் ஏன் தொந்தரவு செய்கிறார்..? நிம்மதியாக அழக் கூட விட மாட்டாரா..? பட்டென படுக்கையிலிருந்து எழுந்தேன். முகம் முழுதும் கண்ணீரும், ஆத்திரமுமாய் சீறினேன்.
“சொன்னாப் புரியாதா உங்களுக்கு..? ஏன் சும்மா சும்மா..” நான் கத்திக்கொண்டு இருக்கும்போதே,
“பசிக்குதும்மா..!!” என்றார் அவர் பரிதாபமாக.
அவ்வளவுதான்..!!!! சத்தியமாக சொல்கிறேன்.. துடித்துப் போனேன்..!! அத்தனை நேரம் அவர் மீது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபம், போன இடம் தெரியாமல் பறந்திருந்தது. பாலுக்கழும் குழந்தையை பார்த்த தாயின் மனநிலை, படக்கென என் மனதை வந்து கவ்வியது. எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்த இதயம், அழகு கொஞ்சும் அன்பு நீரோடையாய் மாறிப் போயிருந்தது. இப்போது என் கண்களில் கண்ணீர் அருவி இன்னும் அதிகமாகியிருந்தது. இது வேறு மாதிரியான கண்ணீர்…!! அவர் மீதான காதலும் கனிவும் கலந்து கொட்டிய கண்ணீர்..!! அதிகமாகத்தான் கொட்டும்..!! பதறிப் போனவளாய் சொன்னேன்.
“ஐயோ.. என்னப்பா நீங்க..? பசிக்குதுனா அப்போவே சொல்ல வேண்டியதுதான..? நீங்க பார்ட்டிலயே சாப்பிட்டு வந்திருப்பீங்கன்னு..”
“நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேன்னு தெரியும் பவி.. அதான் சாப்பிடாம வந்துட்டேன்..”
“சரி சரி.. வாங்க.. எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடலாம்..!!”
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :