மாங்கல்யம் தந்துனானே – பகுதி 18

எபிஸோட் – VI

இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில்.. இணையில்லா மகிழ்ச்சியை தந்த தினம் என்று ஒன்றிருக்கும்..!! இதயத்தில் இடி விழுந்த மாதிரி அதிர்ச்சியை அள்ளி வந்த தினம் என்று ஒன்றிருக்கும்..!! இரண்டுமே ஒரே தினமாய் இருந்திருக்கிறதா உங்களுக்கு..?? இருந்தால் எப்படி இருக்கும் என்று இமேஜின் செய்ய முடிகிறதா உங்களால்..?? எனக்கும் அதுதான் நேர்ந்திருக்கிறது..!! கருவுற்றிருக்கிறேன் என்று.. மதியந்தான் கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேன்..!! கணவனால் ஏமாற்றப் பற்றிருக்கிறேன் என்று மாலையில் வந்த சேதியால்.. காலூன்ற கூட வலுவில்லாமல் வீழ்ந்து கிடக்கிறேன்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அசோக் பாத்ரூமில் இருந்து வெளிப்பட மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகின. அதுவரை நான் மெத்தையில் பித்து பிடித்தவள் மாதிரி அமர்ந்திருந்தேன். வெளியே வந்தவர் என்னை கண்டுகொள்ளாமல், எடுத்து வைத்திருந்த உடைகளை உடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டவர், டி-ஷர்ட்டை கழுத்து வழியாக மாட்டியபோதுதான், எதேச்சையாக என் முகத்தை கவனித்தார். உடனே குழப்பமான குரலில் கேட்டார்.

“ஹேய்.. என்னடி ஆச்சு உனக்கு..? போறப்போ நல்லாருந்த.. இப்போ பேயறஞ்ச மாதிரி உக்காந்திருக்க..?”

நான் பதில் சொல்லாமல், நிமிர்ந்து அவருடைய முகத்தை கூர்மையாக பார்த்தேன். பார்க்க பார்க்க அவர் மீது ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டேன். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் பொங்கி வந்து துக்கத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன்.

“உங்களுக்கு இப்போ ஒரு கால் வந்தது..!!”

“யார்கிட்ட இருந்து..?”

“ஷர்மா..!!”

நான் சொன்னதும் அவர் முகம் பட்டென ஒரு அதிர்ச்சிக்கு போனது. ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதான அதிர்ச்சி இல்லை. முகம் சற்று இறுக்கமானது. கண்களை இடுக்கி என்னை துளைப்பது மாதிரி ஒரு பார்வை பார்த்தார். அப்புறம் மெல்ல நடந்து சென்று கீழே கிடந்த செல்போனை எடுத்துப் பார்த்தார். ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவர், செல்போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே, மிக இயல்பான குரலில் கேட்டார்.

“என்ன சொன்னா..?”

நான் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்க, அவரோ அந்த மாதிரி கேஷுவலாக கேட்டது, எனக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பி விட்டது. சீறினேன்..!!

“ம்ம்ம்ம்.. ‘உன் புருஷன் நல்லா பொய் சொல்லி உன்னை ஏமாத்திட்டு இருக்காரு’ன்னு சொன்னா..!!”

“பவி.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற..?”

“ஓ..!! கத்துறனா..? சரி கத்தலை..!! நேத்து அவ கூட அவ்வளவு நேரம் திருட்டுத்தனமா பேசிட்டு.. வேற யார் கூடவோ பேசுனேன்னு கதை சொல்லிருக்கீங்க..!! அதையாவது ஏன்னு கேட்கலாமா.. இல்ல கேட்க கூடாதா..?”

“ப்ச்.. புரிஞ்சுக்காம பேசாத பவி..”

“ஏன் பொய் சொன்னீங்கன்னு கேட்டா.. புரிஞ்சுக்காம பேசுறனா..?”

“இங்க பாரு.. உன்கிட்ட பொய் சொல்லன்னும்ன்றது என் இன்டன்ஷன் இல்ல..”

“அப்புறம்..?”

“தெரிஞ்சா.. தேவையில்லாம நீ சந்தேகப்படுவ..!! அதான்..”

“ஓஹோ..!! தப்பை நீங்க பண்ணிக்கிட்டு.. பழியை என் மேல தூக்கிப் போடுறீங்களா..?”

“நான் எந்த தப்பும் பண்ணலை..!! அதே மாதிரி.. உன் மேல பழி போடனும்னும் எனக்கு அவசியம் இல்ல.. நீ நடந்துக்குறதை வச்சுத்தான் சொல்றேன்..!!”

“அப்டி என்ன நான் தப்பா நடந்துக்குட்டேன்..?”

“பவி.. நீ இப்போ கோவத்துல இருக்குற.. நான் என்ன சொன்னாலும் உனக்கு தப்பா தோணும்..!! வேணாம்.. விடு..!! நான் புனே போயிட்டு வந்து.. பொறுமையா இதைப் பத்தி பேசலாம்..!!” சொல்லிக்கொண்டே அவர் நகர முற்பட, நான் அவசரமாக எழுந்து அவர் முன்பாக கை நீட்டி அவரை மறித்தேன். காட்டமாக சொன்னேன்.

“எனக்கு அவ்வளவு பொறுமைலாம் இல்ல.. இப்போவே பேசிடலாம்..!!”

வழிமறித்து கூச்சலிட்ட என்னை, அவர் இப்போது எரிச்சலாக பார்த்தார். முறைத்தார். சலித்துப் போனவர் போல தலையை லேசாக இப்படியும் அப்படியுமாய் அசைத்தார். பின்பு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சற்றே சாந்தமான குரலில் கேட்டார்.

“சரி.. சொல்லு.. என்ன பேசணும்..?”

“நேத்து அவகூட அவ்வளவு நேரம் என்ன பேசுனீங்க..?”

“நேத்து அவளுக்கு ஒரு இன்டர்வ்யூ இருந்தது.. சில டவுட்ஸ்லாம் கேட்டுட்டு இருந்தா.. சொல்லிட்டு இருந்தேன்..!!”

“நம்பலாமா..?”

“நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்..!!”

“சரி.. அதுக்கெதுக்கு பொய் சொல்லணும்..? கேட்டா… நான் நடந்துக்குற விதம் சரியில்லைன்னு சொல்றீங்க..? என்ன சரியில்லை..?”

“உன் மனசாட்சியை கேளு.. அது சொல்லும்..!!”

“அது சொல்றது இருக்கட்டும்.. நீங்க சொல்லுங்க..!!”

“சரி சொல்றேன்..!! நான் வேற பொண்ணுகளோட பேசுறது.. பழகுறது.. உனக்கு புடிக்கலை..!! தேவையில்லாம பயப்படுற.. சந்தேகப்படுற..!! போதுமா..?”

“என் புருஷன் எனக்கு மட்டுந்தான் சொந்தம்னு நெனைக்கிறது தப்பா..?”

“அது தப்பு இல்ல..!! ஆனா.. புருஷன் எந்தப் பொண்ணு கூட பேசினாலும்.. அவ பின்னாடி போயிடுவாரோன்னு நெனைக்கிற பாத்தியா.. அதுதான் தப்பு..!!”

“நான் அந்த மாதிரிலாம் நெனச்சது இல்ல..”

“பொய் சொல்லாத பவி..”

“நான் ஏன் பொய் சொல்லப் போறேன்..?” நான் பிடிவாதமாக சொல்லவும், அவர் பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.

“ஆமாம்.. பொய்தான் சொல்ற..!! கல்யாணம் ஆன இத்தனை நாள்ல.. எத்தனை பொண்ணுகளோட என்னை நீ தப்பா நெனச்சு பாத்திருப்ப..? ஏதாவது பொண்ணு கூட நான் பேசிட்டா.. போச்சு..!! ரேணுவும் நானும் பழகுனதையே தப்பா நெனச்சவதான நீ..? ஹனிமூன் போன எடத்துல.. லாவண்யாவோட சேர்த்து தப்பா நெனச்சுக்கிட்டு.. என்கூடவே சண்டை போட்ட..!! உண்மையா இல்லையா..?? அது சரி.. உன் பெட்டிக்குள்ள.. கசங்கிப் பொய் சுஜியோட போட்டோ கெடந்ததே.. அது எப்படி..??” சுஜியின் போட்டோ பற்றி அவர் சொன்னதில் நான் நிச்சயமாய் அதிர்ந்து போனேன்.

“அ..அது.. அது..” என திணறினேன். அவரோ எனக்கு அவகாசம் கொடாமல், படபடவென பேசினார்.

“ஹ்ஹா.. ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே.. இதே ஷர்மிலியோட சேர்த்து என்னை சந்தேகப்பட்டு.. துருவித்துருவி விசாரிச்சவதான நீ..?? இப்போ.. அந்த மாதிரிலாம் நெனச்சது இல்லைன்னு பொய் சொல்ற..!! ஷர்மிலி கூடதான் பேசிட்டு இருந்தேன்னு நேத்தே நான் உண்மையை சொல்லிருக்குறதுக்கும்.. இன்னைக்கு நீயா கண்டு பிடிச்சதுக்கும்.. ஒரே ஒரு சின்ன வித்தியாசந்தான் தெரியுமா..?”

“எ..என்ன வித்தியாசம்..?”

“ஒரு நாள்..!! ஒரே ஒரு நாள்தான் வித்தியாசம்..!!”

“என்ன சொல்றீங்க..? புரியலை..!!”

“ஆமாம்.. நேத்தே சொல்லிருந்தா.. இன்னைக்கு போடுற சண்டையை நேத்தே போட்டிருப்ப..!! அவ்வளவுதான் வித்தியாசம்..!!” அவர் சொன்னது எனக்கு மேலும் எரிச்சலை கிளப்பி விட்டது.

“ஓஹோ..?? அப்போ நான் தேவையில்லாம சண்டை போடுறேன்..!! எல்லாத் தப்பும் என் மேலதான்.. உங்க மேல எந்த தப்பும் இல்ல.. அப்படியா..??”

“என் மேல தப்பே இல்லைன்னு நான் சொல்லலை..!! ஷர்மிலி கூட பேசிட்டு.. என் மேனேஜர் கூட பேசினேன்னு.. உன்கிட்ட பொய் சொன்னது தப்புதான்..!! ஆனா.. அந்த தப்பு பண்றதுக்கு.. என்னை தூண்டினது நீதான்னு சொல்ல வர்றேன்..!! போதுமா..?”

“ஓ.. நான் உங்களை தப்பு பண்ண தூண்டினேனா..? நீங்க என்னை அப்படி சொல்றப்போ.. ‘நீங்கதான் என்னை சந்தேகப்பட தூண்டுனீங்க.. எனக்கு சந்தேகம் வர்ற மாதிரி நடந்துக்குறீங்க..’ அப்டின்னு நான் உங்களை சொல்லலாமா..?” நான் படபடவென கேட்க, அவர் படு எரிச்சலானார்.

“ப்ச்..!! நீ என்னவேனா லூசு மாதிரி சொல்லிக்கோ.. உன்கூட சண்டை போட்டுட்டு இருக்கலாம் இப்போ எனக்கு நேரம் இல்ல..!! வழியை விடு.. ஏற்கனவே ரெம்ப லேட் ஆயிடுச்சு..!!”

அவர் என் புஜத்தைப் பற்றி இழுத்து, இடைமறித்து நின்றிருந்த என்னை விலக்கி, விடுவிடுவென ஹாலுக்குள் நடந்தார். நான் இப்போது உச்சபட்ச ஆத்திரத்துக்கு சென்றேன். என்னை அவர் லூசு என்று திட்டியது, என் கோபத்தீயில் எண்ணெய் ஊற்றி கொழுந்து விட்டு எரியச் செய்தது. அவருடைய தவறை மறைக்க, என் மீதே குற்றம் சுமத்துகிறார் என்று தோன்றியது. எனக்கு சந்தேகம் வரக் காரணம் அவருடைய நடவடிக்கைதான் என அவரை உணரச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். வார்த்தைகளை கொட்டினேன்..!!

“ஓ..!! கொஞ்ச நேரம் லேட்டா போனா அவ கோவிச்சுக்குவாளோ..??”

நான் வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை கக்க, அசோக் அப்படியே நின்றார். திரும்பினார். எதுவும் புரியாத மாதிரி ஒரு பார்வை பார்த்தார். குழப்பமும், எரிச்சலுமாய் கேட்டார்.

“என்னடி உளர்ற..?”

“இல்ல.. இப்படி பறக்குறீங்களே..? நீங்க போக கொஞ்ச நேரம் லேட்டானா கூட அவளால தாங்கிக்க முடியாதான்னு கேட்டேன்..?”

“எவளால..?”

“அவதான்.. இப்போ கால் பண்ணினாளே.. ஷர்மிலி..!! கெளம்பிட்டீங்களா இல்லையான்னு கேக்குறதுக்குத்தான இப்போ கால் பண்ணினா..?”

“என்னாச்சுடி உனக்கு..? ஏன் இப்படி எல்லாம் பேசுற..? நான் ஆபீஸ் வேலையா புனே போறேண்டி..!!”

“ஓஹோ..? ஆபீஸ் வேலையா போறீங்களா..? அவகூடத்தான் எதோ வேலையா போறீங்களோன்னு நான் நெனச்சுட்டேன்..!!” நான் கிண்டலாக சொல்ல, அவர் பொறுமை இழந்தார். பற்களை கடித்துக்கொண்டு கத்தினார்.

“அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் பவி.. உன் இஷ்டப்படி வாயில வந்ததுலாம் பேசாத..”

“கோவம் வருதுல..? இந்த மாதிரி நான் சந்தேகப்பட எவ்வளவு நேரம் ஆகும்..? நீங்க எங்கிட்ட பொய் சொல்லி திருட்டுத்தனமா அவ கூட பேசுனா.. இப்படித்தான் சந்தேகப்படத் தோணும்..!! இப்போ சொல்லுங்க.. யார் மேல தப்பு..?”

“யார் மேல தப்புன்லாம் எனக்கு தெளிவா தெரியலை..!! ஆனா.. நீ என்ன பேசுறோம்னே தெரியாம.. பைத்தியம் மாதிரி உளர்ற.. அது மட்டும் தெளிவா தெரியுது..!!”

“ஓ.. நான் பைத்தியமா..? ஆமாம்… பைத்தியந்தான்..!! ஒவ்வொரு செகண்டும் உங்களை பத்தியே நெனச்சுக்கிட்டு.. உங்களுக்காகவே வாழ்றேன்ல..? நான் பைத்தியந்தான்..!!” நான் அந்த மாதிரி பரிதாபமாக சொல்ல, அவர் சற்று இளகினார்.

“ப்ச்.. பவி…!! நீ என் மேல எக்கச்சக்கமா லவ் வச்சிருக்க.. அது எனக்கு புரியாம இல்ல..” சொல்லிக்கொண்டே அவர் அன்பாக என் புஜத்தை பற்ற, நான் பற்றிய கையை உதறினேன்.

“விடுங்க..!! என்னைப் பத்தி உங்களுக்கு புரியுது.. ஆனா உங்களைப் பத்தித்தான் எனக்கு எதுவும் புரியலை..!!”

“என்ன புரியலை..?”

“என் மேல எவ்ளோ ப்ரியம் வச்சிருக்கீங்கன்னு..”

“என்ன பேசுற நீ..? நானும் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் பவி..” அவர் எரிச்சலாக சொன்னார்.

“உங்களால நிரூபிக்க முடியுமா..?”

“ப்ச்.. லவ்ன்றது ப்ரூவ் பண்ற விஷயமா..? ஃபீல் பண்ற விஷயம்..!!”

“நான் ஃபீல் பண்றது சரியா தப்பான்னு எனக்கே புரியலை.. அதான் ப்ரூவ் பண்ண சொல்லி கேக்குறேன்..!!”

“சரி.. என்ன பண்ணனும்னு சொல்லு..? என்ன செஞ்சு என் லவ்வை ப்ரூவ் பண்ணனும்..?”

“எனக்கு அந்த ஷர்மிலியை புடிக்கலை.. இனிமே அவகூட நீங்க பேசக் கூடாது..!! முடியுமா..?”

“ப்ச்.. என் லவ்வுக்கும்.. அவகூட பேசாம இருக்குறதுக்கும் என்ன சம்பந்தம்..?”

“என்னைப் பொறுத்தவரை சம்பந்தம் இருக்கு.. முடியுமா முடியாதான்னு சொல்லுங்க..!!”

“இங்க பாரு பவி.. நான் உன்னை லவ் பண்றேன்.. அதுக்காக நீ என்ன சொன்னாலும் என்னால மாடு மாதிரி தலையாட்ட முடியாது..!!”

“ஓ..!! அப்போ உங்களால அவகூட பேசாம இருக்க முடியாது.. அப்டித்தான..? என்னை விட அவதான் உங்களுக்கு முக்கியம்.. அப்டித்தான..?”

“அறிவில்லாம பேசாத பவி.. அவ என் க்ளோஸ் ஃப்ரண்ட்.. அவகூட எப்படி நான் பேசாம இருக்க முடியும்..?”

“ஏன் முடியாது..? என்னால முடியும்..!! உங்களுக்கு புடிக்கலைன்னா.. எந்த ஆம்பளை கூடவும் பேசாம இருக்க.. என்னால முடியும்..!! முடியும் என்ன.. அல்ரெடி அந்த மாதிரிதான் இருக்குறேன்.. தேவையில்லாம எந்த ஆம்பளை கூடவும் பேசாம..!!”

“உன்னை யார் அப்படி இருக்க சொன்னாங்க..? எனக்கு அவ கூட பேசுறது புடிச்சிருக்கு.. பேசுறேன்.. அதுமாதிரி உனக்கும் யார் கூடவாது பேச புடிச்சிருந்தா.. பேசிக்கோ போ..!!”

“ஓஹோ..?? இன்னைக்கு அவ கூட பேசுறேன்.. நீயும் யார்கூடவாவது பேசிக்கோன்னு சொல்வீங்க.. நாளைக்கு அவ கூட வேறொன்னு பண்ணப் போறேன்.. நீயும் யார்கூடவாவது பண்ணிக்கோன்னு சொல்வீங்களா..?”

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவர் தன் புறங்கையை வீசி ‘பளார்ர்ர்….!!!!’ என என் கன்னத்தில் ஒரு அறை விட்டார். பொறி கலங்கிப் போனேன் நான்..!! பொத்தென சோபாவில் சுருண்டு விழுந்தேன். கொள்ளிக்கட்டையால் கோடு கிழித்த மாதிரி, என் வலது கன்னம் திகுதிகுவென எரிந்தது. எனது கட்டுப்பாடு இன்றியே, கண்களில் இருந்து பொலபொலவென நீர் கொட்ட ஆரம்பித்தது. ஒரு கையால் கன்னத்தை அழுத்திப் பற்றிக் கொண்டேன். அவர் தன் முகத்தை எனக்கு நெருக்கமாக கொண்டு வந்து, வெறுப்பாக கத்தினார்.

“இங்க பாரு.. நான் உன்னை லவ் பண்றேன்.. உனக்கு ஒரு நல்ல புருஷனா இருக்கணும்னு என் மனசார நெனைக்கிறேன்..!! அது என் மனசாட்சிக்கு தெரியும்.. அது போதும் எனக்கு..!! உனக்கு புடிச்ச மாதிரிலாம் அதை ப்ரூவ் பண்ணிக்கிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை..!! நான் அவ கூட எந்த தப்பான எண்ணத்தோடவும் பழகலை.. நீ அறிவில்லாம கத்துறதுக்காகலாம் என்னால அவகூட பேசாம இருக்க முடியாது..!! புரிஞ்சதா..?”

சொன்னவர், நான் தயாராக எடுத்து வைத்திருந்த பேகை தூக்கி, அவருடைய பின்பக்கமாக மாட்டிக் கொண்டார். சேர் இழுத்துப் போட்டு ஷூ அணிந்து கொண்டார். நான் அசையாமல் அப்படியே அழுதுகொண்டே கிடந்தேன். ஷூ அணிந்ததும், லேப்டாப் பேகையும் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டார். கதவை நெருங்கியவர், அப்படியே திரும்பி என்னை பார்த்து சொன்னார்.

“நீ இப்டிலாம் பேசுவேன்னு சத்தியமா நான் நெனச்சே பாக்கலை பவி..!! இன்னும் மூணு நாள் தனியாத்தான இருக்கப் போற..? நான் போனப்புறம் நிதானமா யோசி.. நீ பேசுனதுலாம் கரெக்டான்னு யோசி..!!”

சொல்லிவிட்டு, அவர் கதவை அறைந்து சாத்தி வெளியேறினார். மூன்று நாட்கள் நிதானமாக யோசி என்று அவர் சொன்னதை, அடுத்த நொடியே நான் யோசிக்க ஆரம்பித்தேன். சற்று பொறுமையாக யோசிக்க ஆரம்பித்ததுமே, நான் பேசிய பேச்சில் இருந்த தவறு எனக்கு புரிந்தது. அதிலும் இறுதியாக என் வாயில் இருந்து வந்து விழுந்த அந்த வார்த்தைகள்.. நான்தான் அவ்வாறெல்லாம் பேசினேனா என நம்ப முடியாத மாதிரி இருந்தது. ஏன் அப்படி எல்லாம் பேசினேன் என என் மீதே எனக்கு கோபம் வந்தது.

ஆனால், அதே நேரம் அவர் மீது எந்த தவறும் இல்லை எனவும், என் மனம் ஒத்துக் கொள்ள மறுத்தது. என்னைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பவரானால், அந்த மாதிரி பொய் சொல்லியிருக்க மாட்டார் என்று நினைத்தேன். அவர் சொன்ன பொய்யால் என் மனம் எப்படி துடித்துப் போகும் என்று அவர் உணரவில்லையே என வருந்தினேன். இந்த மாதிரி எண்ணங்கள் மனதுக்குள் மோதிக்கொண்டிருக்க, என்னையும் அறியாமலே, விழுந்து கிடந்த சோபாவிலேயே உறங்கிப் போனேன்.

காலையில் எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தபோது, மனதும் கொஞ்சம் தெளிவாக இருந்தது. நேற்று இரவு என் கணவர் மீது இருந்த கோபம் வெகுவாக குறைந்திருந்தது. அவர் பேசியதில் இருந்த நியாயத்தையே என் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments