மாங்கல்யம் தந்துனானே – பகுதி 19
இரவு சாப்பிடாமல் படுத்தது வயிற்றை பிசைவது மாதிரி இருந்தது. காபி போட்டு எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஜன்னலுக்கு அருகில் சென்று, ஸ்க்ரீனை விலக்கியவாறே, கப்பை வாயில் வைத்து உறிஞ்சினேன். கீழே கேட்டுக்கு அருகில் அந்த கால்டாக்சி நின்றிருந்தது. டாக்சிக்கு அருகில் நின்றிருந்த அந்த ஆள், பர்சை திறந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தார். இதுவரை அவரை நான் பார்த்ததில்லை. உயரமாய்.. உப்பலான தேகத்துடன்.. மீசை, தாடி மழிக்கப்பட்ட முகத்துடன்..!! முன்தலையில்.. விழமாட்டேன் என விடா முயற்சியுடன் சில முடிகள் மட்டும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, மிச்ச முடிகள் வீழ்ந்திருந்தன..!!
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
பணம் எடுத்துக் கொடுத்தவர், டாக்சிக்குள் இருந்த பெட்டியை வெளியே எடுத்து வைத்தார். நான் நின்றிருந்த ஜன்னல் பக்கம் எதேச்சையாய் அவருடைய பார்வை திரும்ப, நான் பட்டென ஸ்க்ரீன் இழுத்து போர்த்தினேன். நடந்து வந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன். டிவி ஆன் செய்துவிட்டு, மிச்ச காபியை உறிஞ்ச ஆரம்பித்தேன். ‘யாராய் இருக்கும்..?’ என்று கேள்வி கேட்ட மனதை, ‘யாரோ..!!!’ என வடிவேலு மாதிரி சொல்லி வாயடைத்தேன்..!!
சாலமன் பாப்பையாவின் அமுத மொழிகளில் மனம் லயிக்க ஆரம்பிக்கவும், அந்த ஆளைப் பற்றி சுத்தமாய் மறந்து போனேன். ஆனால், அடுத்த அரை மணி நேரத்திலேயே அந்த ஆள், என் வீட்டு காலிங் பெல் அழுத்தி, ‘ஹாய் பவித்ரா..’ என்று கன்னத்தில் குழி விழ சிரிப்பார் என சத்தியமாய் நான் எதிர்பார்க்கவில்லை. குழம்பிப் போனேன்.
“நீ..நீங்க..?”
“ஐ’ம் பாலமுரளி..!! ரேணுகாவோட ஹஸ்பண்ட்..!!”
அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவருக்கு பின்னால் ஒரு பெரிய பையை, தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு, ரேணுகா வருவது தெரிந்தது. அடுத்த வாரம் கணவர் வருவதாக அன்றொருநாள் சொன்னாளே..? வந்துவிட்டாரா..? எப்படி மறந்தேன்..? நான் ஒருகணம் எழுந்த திகைப்பை உடனடியாய் மறைத்துக் கொண்டு, முகத்தில் புன்னகையை வரவழைத்தவாறு அவரிடம் சொன்னேன்.
“வா..வாங்க.. உள்ள வாங்க.. எப்போ வந்தீங்க..?”
“ஜஸ்ட் இப்போதான்.. காலைலதான் இண்டியால லேண்ட் ஆனேன்..”
அவர் சொல்லிக்கொண்டே உள்ளே வர, அவரை தொடர்ந்து ரேணுகாவும் வீட்டுக்குள் நுழைந்தாள். பாலமுரளி வீட்டை ஒருமுறை பார்வையால் அளந்துவிட்டு, சோபாவில் அமர்ந்து கொள்ள, ரேணுகா கொண்டு வந்த பையை அந்த சோபாவுக்கு அருகில் வைத்தவாறு சொன்னாள்.
“இதை எடுத்து உள்ள வச்சிடு பவி..”
“என்னக்கா அது..??” நான் குழப்பமாக கேட்க,
“இவர் இண்டியா திரும்புறதா சொன்னதும்.. அசோக் கால் பண்ணி இதெல்லாம் வாங்கிட்டு வர சொல்லிருப்பான் போல..!! யப்பா.. செம வெயிட்டு..!!” அவள் சொல்லிவிட்டு தன் கணவருக்கு அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டாள். உற்சாகமான குரலில் என்னிடம் சொன்னாள்.
“அசோக் இப்போத்தான் கால் பண்ணினான்.. புனே போய் சேர்ந்துட்டானாம்.. ப்ரசண்டேஷனுக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னான்.. உனக்கு கால் பண்ணிருப்பானே..?”
“ம்ம்.. ஆ..ஆமாம்.. பண்ணினாரு..” நான் பொய் சொன்னேன். பிறகு பேச்சை மாற்றும் எண்ணத்தில்,
“அப்புறம்.. என்ன சாப்பிடுறீங்க..? காபி.. டீ..” நான் கேட்டதும் உடனே பாலமுரளி மறுத்தார்.
“ஐயோ.. இப்போதான் வீட்ல சாப்பிட்டு வந்தோம் பவி..”
“இல்ல.. முதமுதல்ல வீட்டுக்கு வந்திருக்கீங்க..”
“நோ ஃபார்மாலிட்டீஸ் ப்ளீஸ்..!! எங்களுக்கு ஒன்னும் வேணாம்.. உக்காரு..!!”
நான் சிலவினாடிகள் தயங்கிவிட்டு, அப்புறம் அவர்களுக்கு எதிர்ப்புறம் கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். பாலமுரளி முகத்தில் புன்னகையுடன் என்னையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் மெல்லிய குரலில் ஆரம்பித்தார்.
“ரேணு உன்னைப் பத்தி நெறைய சொல்லிருக்கா பவி..”
“ஓ.. என்ன சொன்னாங்க..?”
“நீயும் அசோக்கும்.. ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ ப்ரியமா இருக்கீங்க.. எவ்ளோ சந்தோஷமா மேரேஜ் லைஃபை என்ஜாய் பண்றீங்க.. எல்லாம் அடிக்கடி பெருமையா சொல்லி பேசிட்டு இருப்பா..”
“ம்ம்ம்…” சொல்லும்போதே என் மனம் சற்று குறுகுறுத்தது.
“ஹ்ஹ்ஹஹ்ஹா.. ஆக்சுவலா.. உங்களைப் பத்தி பேசுறப்போ.. எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும்..” அவர் ஒரு சிரிப்புடனே அப்படி சொன்னார்.
“சண்டையா.. ஏன்..?” நான் குழப்பமாக கேட்டேன்.
“ஆமாம்..!! ரேணு உன்னைப் பத்தி பெருமையா சொல்லுவா.. நான் அசோக்கை பத்தி பெருமையா சொல்லுவேன்.. உங்களுக்குள்ள யாரு பெஸ்ட்ன்னு எங்களுக்குள்ள சும்மா ஒரு ஜாலி சண்டை..!!”
“ஓ..!!” உடனே என் முகம் லேசாக சுருங்க, அதை அவர் பட்டென புரிந்து கொண்டார்.
“ஸாரி பவி.. டோன்ட் மிஸ்டேக் மீ..!! எனக்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாது.. அசோக்கைத்தான் நல்லா தெரியும்.. அதான் அவனைப் பத்தி பெருமையா சொல்லுவேன்..!! மத்தபடி.. ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ..!!”
“சேச்சே.. அதெல்லாம் நான் தப்பா எடுத்துக்கலை..”
நான் புன்னகையுடன் சொல்லவும், அவர் சற்றே அமைதியானார். நல்ல அகலமான, சிரித்த மாதிரியான முகம் அவருக்கு. எந்த நேரமும் இப்படி புன்னகையுடன்தான் இருப்பாரோ என்று தோன்றிற்று. சில வினாடிகள் அங்கே நிலவிய அமைதியை குலைத்தவாறு அவர் பேச ஆரம்பித்தார்.
“அசோக்கை எனக்கு ஒரு அஞ்சு வருஷமா தெரியும் பவி.. ரொம்ப ரொம்ப நல்ல பையன்..!! வயசு வித்தியாசம் இல்லாம ஃப்ரண்ட்ஸ் மாதிரிதான் எங்க பழக்கம்..!!”
“ம்ம்ம்..”
“வாரம் ஒரு தடவையாவது எனக்கு கால் பண்ணி பேசிருவான் தெரியுமா..? பேசினா.. முக்கால்வாசி நேரம் உன்னைப் பத்தித்தான் பேசிட்டு இருப்பான்..!! உன்னை பாராட்டுவான்.. திட்டுவான்.. கேலி பண்ணுவான்.. நீ சொன்னதை நெனச்சு சிரிப்பான்.. உனக்காக கவலைப்படுவான்..!! ஆனா.. என்ன பேசினாலும்.. அதுல உன்மேல அவன் வச்சிருக்குற அன்பு தெரியும்..!!”
“ம்ம்ம்..”
“உன்னை பாத்து ரேணுவுக்கு.. என் பக்கத்துல இருக்கணும்னு ஆசை வந்துச்சுனா.. அதே ஆசை எனக்கு அசோக்கைப் பாத்து வந்தது..!! அதனாலதான் இந்தியா வந்துடுங்கன்னு ரேணு சொன்னப்ப.. உடனே நான் ஒத்துக்கிட்டேன்..!! ஆக்சுவலா நாங்க ரெண்டு பெரும்.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்..!!”
“அய்யயோ.. தேங்க்ஸா.. நாங்க என்ன அப்டி பெருசா பண்ணிட்டோம்..?”
“ஹ்ஹாஹ்ஹா.. நீங்க என்ன பண்ணுனீங்கன்னு உங்களுக்கே தெரியாது..!! மெக்கானிக்கலா போயிட்டு இருந்த எங்க லைஃப்ல.. உங்களைப் பாத்தப்புறம் ஒரு புது சந்தோஷம் வந்திருக்கு..!! எங்களுக்கு கொழந்தை இல்லைன்ற கவலைதான்.. எங்க லைஃப் அந்தமாதிரி மெக்கானிக்கலா மாறுனதுக்கு காரணம்..!! ஆனா.. இனிமே நாங்க அதை ஒரு பெரிய விஷயமா நினைக்கப் போறதில்ல.. உங்களை மாதிரி நாங்களும் எப்பவும் சந்தோஷமா இருக்கப் போறோம்..!!”
“ம்ம்ம்ம்..”
“இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பி.. எங்க சொந்த ஊர் போறோம் பவி.. அப்புறம்.. அப்டியே பத்து நாள் மூணாறு, வயநாடுன்னு ஊர் சுத்தப் போறோம்.. செகண்ட் ஹனிமூன்..!!” சொல்லிவிட்டு அவர் ரேணுகாவை பார்த்து கண்ணடிக்க, அவள் புதுப்பெண் மாதிரி ‘ச்சீய்…!!!’ என்று வெட்கப்பட்டாள்.
“சந்தோஷமா போயிட்டு வாங்க..” நானும் நிறைந்த மனதுடன் சொன்னேன்.
“ம்ம்.. அப்புறம் இன்னொரு மேட்டர் பவி..” அவர் சொல்ல,
“எ..என்ன..?” நான் ஆர்வமாக கேட்டேன்.
“அந்த பேக் ஃபுல்லா என்ன இருக்கு தெரியுமா..?” சற்றுமுன் ரேணுகா தூக்கி வந்த பையை சுட்டிக்காட்டி அவர் கேட்டார்.
“அதுக்குள்ளே என்ன இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்..?” நான் ஒரு இலகுவான புன்னகையுடனே கேட்டேன்.
“ஹ்ஹ்ஹா.. அதுக்குள்ளே இருக்குறதுலாம் நான் ஃபாரீன்ல இருந்து வாங்கிட்டு வந்த திங்க்ஸ்னு சொல்லலாம்.. வேற மாதிரியும் சொல்லலாம்..”
“வேற மாதிரின்னா..?”
“உன் புருஷன் உன் மேல வச்சிருக்குற லவ்..!!” அவர் சொன்னதைக்கேட்டு நான் திகைத்துக் கொண்டிருக்க, அவரே தொடர்ந்தார்.
“அசோக் ரெண்டு நாள் முன்னாடி கால் பண்ணி.. நெறைய திங்க்ஸ் வாங்கிட்டு வர சொன்னான்..!! ஆனா.. அதுல ஒண்ணுகூட அவனுக்காக வாங்கிட்டு வர சொன்னது இல்லை.. எல்லாமே உனக்காகத்தான்..!! ‘இந்த மாதிரி இருந்தாத்தான் பவிக்கு புடிக்கும்.. அந்த மாதிரி இருந்தாத்தான் பவிக்கு புடிக்கும்.. பாத்து வாங்குங்க பாலமுரளி..’ அப்டின்னு ஒரு அரை மணி நேரம் என்னை டார்ச்சர் பண்ணிட்டான்..!! ஹ்ஹ்ஹாஹ்ஹா…!!”
அவர் முகமெல்லாம் சிரிப்பாக சொல்ல, எனக்கு கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. அழுதுவிடாமல் இருக்க பெரிதும் முயல வேண்டியிருந்தது. பற்களை அழுத்திக் கடித்து, வந்த அழுகையை கட்டுபடுத்தினேன். அவர் அப்புறமும் அசோக்கைப் பற்றி நிறைய பேசினார். அசோக்குடைய இரக்க குணம், நகைச்சுவை உணர்வு, தொழில் நுட்ப அறிவு, வேலை மீது பக்தி, நண்பர்களுக்கு தரும் முக்கியத்துவம், எல்லாவற்றையும் விட அசோக் என் மீது வைத்திருந்த எக்கச்சக்க காதல்..!!
அவர் சொல்ல சொல்ல, என் மனசாட்சி எல்லாவற்றையும் தலையாட்டி ஆமோதித்தது. உள்ளத்துக்குள் என் கணவர் மீதான காதல் ஊற்று ஒன்று உடனடியாய் உற்பத்தியாகி பொங்க ஆரம்பித்தது. அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று நேற்று எண்ணினேன். ஆனால் அவருடைய அன்பை நான்தான் புரிந்துகொள்ளவில்லையோ என என்னை நானே திட்டிக் கொண்டேன்.
கொஞ்ச நேரம் சென்று அவர்கள் கிளம்பியதும், நான் அந்தப் பையை பிரித்துப் பார்த்தேன். அவர் சொன்னது உண்மைதான்..!! அத்தனையும் எனக்கான பொருட்கள்..!! மலிவான விலை பொருட்களிலிருந்து.. காஸ்ட்லி சமாச்சாரங்கள் வரை.!! அத்தனையும் அசோக் என் மீது வைத்திருந்த அக்கறையும் அன்பும்..!!
‘மார்னிங்லாம் ரொம்ப குளிரா இருக்குதுப்பா.. எந்திரிக்க கஷ்டமா இருக்கு..’ – ஸ்வெட்டர் இருந்தது..!!
‘ஹாஹா.. பிடிக்காதுன்னு யாராவது சொல்வாங்களா..? எவ்ளோ கொடுத்தாலும் சாப்பிடுவேன்..’ – பெட்டி பெட்டியாய் சாக்லேட்கள்..!!
‘இது பேட்டரி போயிடுச்சு போலங்க.. ஓடவே மாட்டேன்னுது..’ – வெண்ணிற கற்கள் ஜொலிக்கும் அந்த ரிஸ்ட் வாட்ச்..!!
‘எனக்கு பாட்டை பாக்குறதை விட.. கேக்குறதுதான் ரொம்ப பிடிக்கும்..’ – கையகலத்தில் ஒரு ஐபாட்..!!
இன்னும் நிறைய பொருட்கள்..!! எப்போதோ நான் கேட்ட அல்லது கேட்க நினைத்த பொருட்கள்..!! எல்லாமே எனக்கு பிடித்த மாதிரி.. எனது ரசனை தெரிந்து பொறுக்கியெடுத்த மாதிரி..!! எல்லாப் பொருட்களையும் நான் தொட்டுப் பார்த்தேன்.. எனது கை விரல்களை மெல்ல அந்த பொருட்கள் மீது ஓடவிட்டேன்..!! என் மீது எவ்வளவு காதலும், கவனமும் கொண்டிருந்தால்.. என் கணவர் இவையெல்லாம் வீட்டுக்கு கொண்டுவந்திருப்பார்..?
மனதுக்குள் என்னவர் மீதான காதல் பீறிட்டு கிளம்பியது..!! உடனே அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது..!! மன்னிப்பு கேட்டு அழலாமா..??? இல்லை இல்லை.. வேண்டாம்..!!! அப்புறம் அதையே லைசென்சாக எடுத்துக்கொண்டு எல்லா பெண்களிடமும் பேச ஆரம்பித்து விட்டால்..?? ரொம்பவும் இறங்கிப் போகவேண்டாம்..!! கோவம் போய்விட்டது என்று மட்டும் காட்டிக் கொள்ளலாம்..!! நான் பேசிய விதம் தவறு என்று மட்டும் ஒத்துக் கொள்ளலாம்..!!
செல்போன் எடுத்து அவருக்கு கால் செய்தேன். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. மணி பார்த்தேன். ஒன்பதை தாண்டியிருந்தது. ப்ரசன்டேஷன் ஆரம்பித்திருக்கும் போலிருக்கிறது..!! சரி.. அப்புறம் பேசிக் கொள்ளலாம்..!!
பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்துவிட்டு, வேறு வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்தேன். இரவு ஆக்கி வைத்திருந்த உணவை கீழே கொட்டிவிட்டு, பாத்திரங்கள் எல்லாம் கழுவி வைத்தேன். பதினொரு மணி வாக்கில் ரேணுகாவும், அவள் கணவரும் வந்து ஊருக்கு கிளம்புவதாக சொல்லிவிட்டு சென்றார்கள். காரில் சென்றவர்களுக்கு ஜன்னல் வழியாக கைகாட்டி வழியனுப்பினேன்.
பசி வயிற்றை கிள்ளியது. கொஞ்சமாய் பருப்பு வேகவைத்து நெய் ஊற்றி சாப்பிட்டேன். டிவி ஆன் செய்து சோபாவில் அமர்ந்தேன். அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே குமட்டிக்கொண்டு வந்தது. பாத்ரூம் சென்று வாந்தியெடுத்தேன். உள்ளே சென்ற அத்தனையும் வெளியே வந்துவிட்டன. அதோடு சேர்ந்து சிறுகுடலும், பெருங்குடலுமே வெளியே வந்து விழுகிற மாதிரி அப்படி ஒரு வாந்தி…!! கண்களும் சிவந்து போய் பொலபொலவென நீரைக் கொட்டின. முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தபோது, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அப்படியே மெத்தையில் விழுந்தேன். மயங்கிப் போனேன்..!!
எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் என்று தெரியவில்லை. கண்விழித்தபோது மிகவும் களைப்பாக உணர்ந்தேன். உடம்பின் ஒவ்வொரு அணுவும் விண்விண்னென வலித்தன. தட்டுத்தடுமாறி எழுந்து கிச்சன் சென்றேன். ஃப்ரிட்ஜ் திறந்து ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து ஒரு டம்ளர் அருந்தினேன். பழச்சாறு பாய்ந்ததும், உடல் சற்றே தெம்பாக இருந்தது..!!
இதயத்தில் எழுந்த படபடப்பு என்னவோ இன்னும் குறையவில்லை. மனதில் இப்போது ஒரு இனம் புரியாத பயம் படருவதை உணர முடிந்தது. இதே மாதிரி மயக்கம் வந்து, வேறெங்காவது விழுந்து கிடந்தால்..? அவர் வேறு ஊரில் இல்லை.. ரேணுகாவும் அருகில் இல்லை..!! உதவி கேட்டு நான் எழுப்பும் குரல் கூட, யார் காதிலாவது விழுமா என சந்தேகம் வந்தது.
பேசாமல் நானும் கிளம்பி ஊருக்கு சென்று விடட்டுமா..? செங்கல்பட்டு போய் விட்டால் ஸேஃப் என்று தோன்றியது. அம்மாவையும் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. அவர் வரும் வரை இரண்டு நாட்கள் அங்கே இருக்கலாம்..!! அம்மாவின் சமையலை உண்டு.. உறங்கி.. நிம்மதியாய் ஓய்வெடுத்துவிட்டு வரலாம்..!!
யோசனை வந்த சில நிமிஷங்களிலேயே நான் செங்கல்பட்டு கிளம்பினேன். இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டும் ஒரு பெட்டியில் திணித்து எடுத்துக் கொண்டேன். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். மெயின்ரோட் சென்று ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டேன். தாம்பரம் வந்து, தயாராய் நின்றிருந்த ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். பயணச்சீட்டு வாங்கி பர்ஸில் வைத்துவிட்டு, கண்மூடி தலைசாய்த்துக் கொண்டேன். செவ்வானம் இருள ஆரம்பித்த சமயத்தில் செங்கல்பட்டு சென்றடைந்தேன்.
“என்னடி இது.. சொல்லாம கொள்ளாம கெளம்பி வந்து நிக்குற..?” குழப்பமாய் கேள்வி கேட்ட அம்மாவை,
“சும்மாதான்மா வந்தேன்..!! உன் மாப்ளை ஊர்ல இல்ல.. வேலை விஷயமா வெளியூர் போயிருக்காரு.. ரெண்டு நாள் கழிச்சுதான் வருவாரு..!! ரேணுக்காவும் இன்னைக்கு வெளியூர் கெளம்பிட்டாங்க..!! ரொம்ப போரடிச்சது.. அதான்.. உங்களாம் பாக்கலாம்னு கெளம்பி வந்துட்டேன்..!!” என்று சமாளித்தேன்.
“உடம்பு சரியில்லையாடி.. மூஞ்சிலாம் ஒருமாதிரி இருக்கு..?”
“அதுலாம் ஒண்ணுல்லம்மா.. பஸ்ல வந்தது.. டயர்டா இருக்கு.. வேறொன்னும் இல்ல..!!”
“ஓஹோ..? சரிடி.. அப்பா இன்னும் வரலை..!! நீ வேணா கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு.. அம்மா சாப்பாட்டுக்கு எழுப்புறேன்..!!”
சொன்ன மாதிரியே இரவு அம்மா எழுப்பினாள். வயிறு சரியில்லை என்று சொன்னாலும் கேட்காமல், நான்கு இட்லிகளை என் வாயில் திணித்தாள். சாப்பிட்டுவிட்டு அவள் மடியிலேயே படுத்து உறங்கிப்போனேன். காலையில் எழுந்தபோது அந்த நான்கு இட்லிகள், உடலுக்கு புது சக்தியை கொடுத்திருந்ததை உணர முடிந்தது. நேற்று இருந்த களைப்பு இன்று காணாமல் போயிருந்தது.
காலையில்தான் அப்பாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க முடிந்தது. அசோக்குடைய வேலை பற்றி விசாரித்தார். அவரை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். விடுமுறை நாட்களில் நாங்கள் என்ன செய்வோம் என்று கேட்டு அறிந்துகொண்டார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பழகும் விதம் பற்றி அக்கறையுடன் கேட்டார். இறுதியாக..
“சந்தோஷமா இருக்கேல பவித்ரா..?” என கவலையுடன் கேட்டார்.
“எனக்கென்னப்பா கொறை..? நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்..” என்று நான் சொல்ல, நிம்மதியாய் புன்னகைத்துவிட்டு, நியூஸ் பேப்பரில் மூழ்கினார்.
லக்ஷ்மிப்ரியா என்று எனக்கொரு சினேகிதி இருக்கிறாள். எங்கள் ஊர்தான். பள்ளிப்பருவ சினேகிதி. ஒரு வருடம் முன்னர்தான் அவளுக்கு திருமணமானது. மூன்று மாதத்தில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாய் தாய் வீட்டுக்கு வந்தபோது அவளை பார்த்தது. குழந்தை பிறந்த பின் சென்று பார்க்கவில்லை. அவளை போய் பார்த்துவிட்டு வரலாம் என்று, காலை சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.
பொக்கை வாயும்.. வழுக்கைத்தலையும்.. பிஞ்சுக் கரங்களும், கால்களும்.. தலை நிற்காத கழுத்துமாய்.. கொள்ளை அழகாய் இருந்தது குழந்தை..!! தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை என் மடியில் சிறிது நேரம் வைத்திருந்தேன். அருகில் வைத்து அந்த பிஞ்சின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் வந்த ஓரிரு நிமிடங்களிலேயே அழ ஆரம்பித்தது. உடனே லக்ஷ்மி குழந்தையை வாங்கிக்கொண்டாள். மீண்டும் அவள் அம்மாவிடம் சென்றதும், குழந்தை பட்டென அழுகையை நிறுத்தியது. ப்ளவுசுகுள் இருந்து மார்பு வந்து விழுந்ததும், தானே சென்று கவ்விக்கொண்டது.
இன்னும் ஒன்பது மாதங்களில் இதேமாதிரி எனக்கென ஒரு குட்டி வரப்போகிறது. அதுவும் இப்படித்தானே செய்யும்.? யார் கைகளுக்குள் சென்றாலும், எனது அணைப்பிற்குள் வரத்தானே துடிக்கும்..? எனது கதகதப்பைத்தானே எப்போதும் நாடும்..? எனது மடியிலேயே தன் கழிவுகள் வெளியேற்றும்..? முட்டி முட்டி என் முலையில் பாலருந்தும்..? முதன்முதலாய் வாய்திறந்து ‘அம்மா..!!’ என எனை அழைக்கும்..? தாயாக ஆவதில்தான் எவ்வளவு கர்வம் இருக்கிறது..?
“அப்புறம்டி பவி.. உன் சைடுல இருந்து ஏதும் விசேஷம்..?” லக்ஷ்மி கேட்ட கேள்விக்கு,
“ஹ்ஹ்ஹா.. இல்லடி.. இன்னும் இல்ல..”
என நான் புன்னகையுடன் பதில் சொன்னேன். குழந்தை உருவாகியிருக்கும் சேதியை, அவரிடம்தான் முதலில் சொல்லவேண்டும் என்பது என் நெஞ்சில் ஊறிப் போயிருந்தது. நான் மேலும் கொஞ்ச நேரம் அவளுடன் பழைய பள்ளிக்கால கதை, இப்போதைய குடும்பக் கதையென பேசிக்கொண்டிருந்தேன். நண்பகல் நேரத்தில் மீண்டும் என் வீட்டுக்கு திரும்பினேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா,
“மாப்பிள்ளை போன் பண்ணிருந்தாருடி.. உனக்கு போன் பண்ணினாராம்.. எடுக்கவே இல்லையாம்..?” என்றாள்.
“நேத்து கெளம்புற அவசரத்துல.. செல்போனை சென்னைலயே விட்டுட்டு வந்துட்டேன்மா..!! என்ன சொன்னாரு..?”
“அங்க வந்திருக்காளான்னு கேட்டார்.. ஆமான்னு சொன்னேன்.. அவ்வளவுதான்.. வச்சுட்டாரு..!!”
“சரி விடு.. நான் பேசிக்கிறேன்..”
“உங்களுக்குள்ள ஏதும் சண்டையாடி..?” அம்மா கவலையாக கேட்டாள்.
“ச்சே.. அதுலாம் ஒன்னும் இல்லம்மா..!!” நான் அவளுடைய வாயை அடைத்தேன்.
என் வீட்டு டெலிபோனில் இருந்து அவருக்கு கால் செய்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக ஒரு பெண் சொன்னாள். நாம் மேலும் இரண்டு முறை முயன்று விட்டு முயற்சியை கைவிட்டேன்.
“வெளில போயிட்டு வந்தது.. மேலுலாம் ஒரே கசகசன்னு இருக்குதும்மா.. நான் இன்னொருதடவை குளிச்சுர்றேன்..”
“சரிடி.. இன்னைக்கு மோர்க்குழம்பும் வத்தலுந்தான்.. வேற ஏதாவது வைக்கவா..?”
“வேணாம்மா.. அது போதும்..!!”
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :