அன்புள்ள ராட்சசி – பகுதி 47

“ம்ம்..!! ஆக்சுவலா.. ஃபோன்லயே கூட மேட்டரை சொல்லிருக்கலாம் அசோக்.. ஆனா.. எனக்கென்னவோ நேரா சொல்றது பெட்டர்னு தோணுச்சு..!!” ஸ்ரீனிவாச பிரசாத் சொல்ல, அசோக்கிடம் மெலிதான பதற்றம்.

“எ..என்ன விஷயம் ஸார்..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அந்த பதற்றம் தொனிக்கிற குரலிலேயே அசோக் கேட்க.. ஸ்ரீனிவாச பிரசாத் ஒருசில வினாடிகள் அமைதியாக இருந்தார்..!! பிறகு அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு மெல்லிய குரலில் சொன்னார்..!!

“அந்த நம்பரை வச்சு.. அட்ரஸை கண்டு பிடிச்சாச்சு..!!”

அவர் சொல்லவும், அசோக்கின் முகத்தில் இப்போது பட்டென ஒரு பரவசம்.. ஏதோ மீராவையே அடைந்துவிட்டவன் போல, அவனிடம் அப்படி ஒரு பூரிப்பு..!!

“என்ன ஸார் நீங்க.. இவ்வளவு முக்கியமான மேட்டரை இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டு இருக்கீங்க..??”

“இருடா.. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு பேசு..!!” ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அசோக்கை அடக்கியதும், அவனது உற்சாகம் சற்றே குறைந்து போனது.

“ஏன் ஸார்.. ஏதாவது ப்ராப்ளமா..??”

“ப்ராப்ளம்லாம் ஒன்னுல்ல..!! ம்ம்ம்.. மேட்டர் என்னன்னா.. நீ சொன்ன அந்த நம்பர் விஜயசாரதின்ற பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு..!!”

“விஜயசாரதின்னா..????” அசோக் சற்றே குழப்பமாகி, கேள்வியை இழுத்தான்.

“ஆமாம்.. பையன்தான்..!! ஆக்சுவலா அந்தப்பையன் இண்டியாலயே இல்ல.. அவன் வெளிநாட்டுக்கு போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு..!!”

“ஒ..ஒருவேளை.. அந்த விஜயசாரதி நம்ம மீராவுக்கு தெரிஞ்ச பையனா இருக்கலாம் இல்லையா.. அவன் இவளுக்கு அந்த நம்பர் வாங்கித் தந்திருக்கலாமே..?? அந்தப்பையன்ட்ட பேசுனா..”

“ப்ச்.. என்னை சொல்ல விடுடா..!!” ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே எரிச்சலாக,

“ச..சரி.. சொல்லுங்க..!!” அசோக் தனது ஆர்வத்தை கட்டுப் படுத்திக் கொண்டான்.

“கே.கே.மூர்த்தின்னு கேள்விப்பட்டிருக்கியா..??”

“இல்ல.. யாரு அவரு..??”

“பெரிய பணக்காரர்.. மூணு காலேஜ், ரெண்டு ஹாஸ்பிடல், ஒரு லிக்கர் ஃபேக்டரி..!! ரொம்ப பெரிய கையி.. நார்த் சென்னைல ரொம்ப பவர்ஃபுல்..!! அவரோட பையன்தான் இந்த விஜயசாரதி..!!”

“ஓ..!!”

“அவருக்கு மாதவரத்துல ஒரு பங்களா இருக்கு.. இந்த ஸிம் ரெஜிஸ்டர் ஆகிருக்குறது அந்த அட்ரஸ்லதான்..!!”

“ம்ம்..!!”

“நான் அந்த அட்ரஸ்க்கு போய்.. கே.கே.மூர்த்தியோட பி.ஏவை மீட் பண்ணினேன்..!! அவர் மூலமா.. அந்தப்பையனோட ஃபாரீன் காண்டாக்ட் நம்பர் வாங்கி பேசினேன்..!!”

“ஓ.. என்ன சொன்னான்..??” அசோக்கிடம் இப்போது மீண்டும் ஒரு உற்சாகம்.

“அவனுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல..!! திடீர்னு.. சென்னைல இருந்து போலீஸ்ன்னதும்.. என்ன ஏதுன்னு தெரியாம.. பையன் கொஞ்சம் டென்ஷனாயிட்டான்..!!”

“அப்புறம்..??”

“நான் அவனை கொஞ்சம் கூல் பண்ணினேன்.. அந்த நம்பர் அவன் பேர்ல ரிஜிஸ்டர் ஆகி இருக்குறதை பத்தி சொன்னேன்.. மீராவோட அடையாளம்லாம் சொல்லி.. அந்த மாதிரி ஒரு பொண்ணை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்..!!”

“அ..அதுக்கு அவன் என்ன சொன்னான்..??”

“அந்த மாதிரி யாரையும் அவனுக்கு தெரியாதாம்..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அசோக்கிடம் இருந்த உற்சாகம் மொத்தமும் இப்போது காணாமல் போனது.

“ஓ..!!” அவனது குரலும் வறண்டு போய் ஒலித்தது.

“ஆக்சுவலா.. ஒரு வருஷத்துக்கு முன்னாடி.. ஐ மீன்.. அந்த விஜயசாரதி இண்டியால இருக்குறப்போ.. அவன் ஃப்ரண்ட்சோட சேர்ந்து ஒரு ரெஸ்டாரன்ட் போயிருந்திருக்கான்.. அங்க அவனோட செல்ஃபோனை தொலைச்சிருக்கான்..!! அப்போ.. அதை அவன் ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல.. அப்படியே விட்டுட்டான்..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் சொல்ல சொல்ல.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருந்தான்.. முற்றிலும் தளர்ந்து போனான்..!! ஏற்கனவே ஐந்தாறு நாட்கள் தானாக மீராவை தேடியலைந்து.. அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில்.. அந்த செல்ஃபோன் நம்பரைத்தான், மிகப்பெரிய துருப்புச்சீட்டாக அவன் எண்ணியிருந்த வேளையில்.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் இருந்து வந்த இந்த செய்தி.. இடியென அவனது இதயத்தில் இறங்கியது..!!

“ம்ம்..!!” வாயிலிருந்து வந்த வார்த்தை கூட குறைந்த டெசிபலில் ஒலித்தது.

“அந்த தொலைஞ்சுபோன செல்ஃபோன்ல இருந்த ஸிம்மை வச்சுத்தான்.. உன் ஆளு உன்கூட இத்தனை நாள் வெளயாண்ட்ருக்கா..!!”

ஏதோ ஒரு உணவகத்தில் கண்டெடுத்த.. யாருடைய கைபேசியையோ வைத்துக்கொண்டா.. இத்தனை நாட்கள் மீரா தன்னிடம் பேசிக் கொண்டிருந்தாள்..?? அசோக்கிற்கு ஏனோ அதை நம்புவதற்கு கடினமாக இருந்தது..!!

“ந..நம்ப முடியல ஸார்..!!”

“என்ன நம்ப முடியல..??”

“யாரோ ஒருத்தரோட ஃபோனை வச்சுக்கிட்டு.. இத்தனை நாளா..!! என் மீரா அந்த மாதிரி ஆளு கெடையாது ஸார்..!!”

“ம்ம்.. சரி.. வேற ஏதோ ஒரு வழில.. வேற யார் மூலமாவோ.. தொலைஞ்சு போன அந்த ஃபோன் அவ கைக்கு போயிருக்கலாம்..!! ஆனா.. இப்போ அது மேட்டர் இல்ல..!!”

“பின்ன..??”

“அவளை ட்ரேஸ் பண்றதுக்கு இருந்த ஒரே ரூட்டும்.. இப்போ க்ளோஸ் ஆயிடுச்சு..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் சொன்ன வார்த்தைகள், அசோக்கின் மனதில் ஒரு இனம்புரியாத வேதனையை கிளறிவிட ஆரம்பித்தன.

“வே..வேற வழியே இல்லையா ஸார்..??” என்று பரிதாபமாக கேட்டான்.

“இருக்கு.. அவ திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணினா.. கண்டிப்பா ட்ரேஸ் பண்ண முடியும்..!!”

“அவ எப்படி ஸார் திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணுவா..?? அவதான் என்கூட இருந்த எல்லா லிங்கையும்.. ப்ளான் பண்ணி பக்காவா கட் பண்ணிட்டு போயிருக்காளே..?? அவ எப்படி திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணுவா..??”

“அப்போ எதுவும் செய்ய முடியாது அசோக்..!!” ஸ்ரீனிவாச பிரசாத் இயல்பாக சொல்ல, அசோக்கின் மனவேதனை உச்ச பட்சத்தை எட்டியது.

“எ..என்ன ஸார்.. நீங்களே இப்படி சொல்றீங்க..??”

அசோக்கின் கண்கள் இப்போது லேசாக கலங்கிப் போயிருந்தது.. அவனுமே சோர்ந்து தளர்ந்து போயிருந்தான்..!! அவனுடைய மூளை சிந்திக்க மறுத்து, மரத்துப்போன மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! அடுத்து என்ன செய்வது என்று புரியாத ஒரு குழப்பம்.. அவளைக் கண்டுபிடிக்க இருக்கிற வழிகளெல்லாம் ஒவ்வொன்றாக அடைபடுகிறனவே என்கிற ஆதங்கம்.. சிக்கலான வலைக்குள் சிக்கி மீள முடியாமல் தவிக்கிற மீனுடைய இயலாமை.. எங்கே அவளை திரும்ப பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்பது போலொரு பயம்..!! உள்ளத்தால் உடைந்தும், உடலால் உறைந்தும் போய் நின்றிருந்தான்..!!

ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அசோக்கை அவ்வாறு பார்க்க பாவமாக இருந்தது.. தனது வலது கையால் அவனுடய தோளைப் பற்றினார்.. ஆறுதலாக ஒரு அழுத்தம் கொடுத்தார்.. அசோக் இப்போது அவரை ஏறிட்டு.. ‘என்ன?’ என்பது போல பாவமாக பார்த்தான்..!!

“நான் ஒன்னு சொல்வேன்.. தப்பா எடுத்துக்க மாட்டியே..??”

“சொ..சொல்லுங்க ஸார்..!!”

“அ..அவளை.. மறந்துடுடா அசோக்..!!”

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் அசோக்கின் மனதுக்குள் கொப்பளித்துக்கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து.. வேறொரு உருவம் எடுத்துக்கொண்டன.. ஏமாற்றம், குழப்பம், இயலாமை, பயம் எல்லாம் உருமாறி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் மீதான கோபமாக மாறின..!! அவனுடைய குழப்பமான மனதின் முன்பு.. அவர் அவனது காதலுக்கு முளைத்த புது எதிரியாகவே தோன்றினார்..!! தனது தோளைப்பற்றியிருந்த அவரது கையை வெடுக்கென தட்டிவிட்டான்..!!

“டேய்..!!”

அவனுடைய செய்கையில் ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே எரிச்சலானார். அசோக்கோ அவருடைய கண்களை நேருக்கு நேராக சந்தித்து, சூடாக சொன்னான்.

“மறக்கலாம் முடியாது ஸார்..!!”

“ப்ச்.. உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்..!!”

“எனக்கு எது நல்லதுன்னு நீங்க சொல்ல வேணாம் ஸார்.. எல்லாம் எனக்கு தெரியும்..!!”

“புரியாம பேசாதடா..!!”

“யாரு ஸார் புரியாம பேசுறா..?? நீங்கதான் புரியாம பேசுறீங்க..!! எப்படி ஸார் மறக்க சொல்றீங்க..?? அவ என் உசுரோட கலந்துட்டா ஸார்.. உசுரை விட்டாத்தான் அவளை மறக்க முடியும்..!!”

“டேய்.. என்ன பேசுற நீ..??”

அசோக் உபயோகப் படுத்திய வார்த்தைகளில், ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே அரண்டு போனார்.. அவனுடைய முகத்தையே ஒருவித திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்..!! அசோக் ஒரு தெளிவற்ற ஆவேசத்தில் இருந்தான்.. ஜூரம் வந்தவன் மாதிரி உடலை சிலிர்த்துக்கொண்டான்.. முகத்தை அப்படியும், இப்படியுமாய் வெட்டிக்கொண்டான்.. உள்ளுக்குள் பொங்கிய உணர்வுகளில், அவனது முகம் கிடந்தது துடித்தது..!! பற்களால் உதட்டை அழுத்திக்கடித்து அந்த உணர்வுகளை அடக்க முயன்றவன்.. அப்புறம் அவனது ஆவேசம் குறையாமலேயே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் கேட்டான்..!!

“உங்க ஆளு.. அவ பேர் என்ன..??” அசோக் திடீரென அப்படியொரு கேள்வி கேட்பான் என்று எதிர்பாராத ஸ்ரீனிவாச பிரசாத்..

“அ..அனிதா..!!” என்றார் திணறலாக.

“ஆங்.. அனிதா..!! அவள்லாம் ஒரு பொண்ணா ஸார்..??? ச்சை..!! உங்க காதலை புரிஞ்சுக்காம.. சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு.. அப்பா, அம்மா மேல பழியைப் போட்டு.. உங்களை அப்படியே தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போனவ..!! உங்களோட உண்மையான காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவ ஸார் அவ..!! அந்த மாதிரி ஒரு பச்சைத்துரோகியையே.. அவளை உண்மையா நேசிச்ச உங்களால மறக்க முடியல.. போறவன், வர்றவன்ட்டலாம் பொலம்பிட்டு இருக்கீங்க..!! இல்ல..??”

“………………………..”

அசோக்கின் வார்த்தைகளில் இருந்த உண்மை, ஸ்ரீனிவாச பிரசாத்தின் இதயத்தில் சுருக்கென தைக்க, அவர் இப்போது வாயடைத்துப் போனார்.

“என் மீரா உங்க ஆளு மாதிரி இல்ல ஸார்..!! என் காதலை நல்லா புரிஞ்சுக்கிட்டவ.. பதிலுக்கு என்னையும் உண்மையா நேசிச்சவ.. என்னை விட்டு அவ விலகி இருக்குறதே என் மேல இருக்குற காதாலாலதான்..!! அவளுக்கு ஏதோ பிரச்னை இருக்கு.. அந்தப் பிரச்சினையை கூட எங்கிட்ட சொல்லி, என்னை கஷ்டப்படுத்த விரும்பாதவ ஸார் அவ..!! அவளை எப்படி ஸார் என்னால மறக்க முடியும்..??” அசோக் ஆவேசமாக கத்தினான்.

“………………………..”

“மறக்க முடியாது ஸார்.. மறக்கலாம் முடியாது..!!”

தனது வலது கையை சரக்கென உயர்த்தி.. ஐந்து விரல்களை விறைப்பாக விரித்து வைத்து.. ‘முடியாது’ என்பது போல அசோக் அசைத்துக் காட்டினான்..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஒருமாதிரி ஸ்தம்பித்துப்போய் பார்த்துக் கொண்டிருக்க.. அவன் சரேலென திரும்பி நடந்தான்.. பைக்கில் ஏறி அமர்ந்தான்.. ஆத்திரத்துடன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை திருகி புயல் வேகத்தில் பைக்குடன் பறந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஒருவித பயமும், கவலையும் தொற்றிக்கொண்டவராய்.. அவன் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தார்..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments