அன்புள்ள ராட்சசி – பகுதி 48
அத்தியாயம் 23
மனித மனதில் ஒரு மாற்றத்தை விதைப்பதென்பது.. மலையைக் குடைந்து பாதை அமைப்பதற்கு சமானம்..!! அந்த மனம் அத்தனை நாளாய் நம்பியிருந்த சித்தாந்தங்கள்.. எல்லாவித நிகழ்விற்குமான அந்த மனதின் எதிர்வினை சிந்தனைகள்.. இயல்பான அதன் அணுகுமுறைகள்.. இறுகிப்போன அதன் குணநலன்கள்.. இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிந்தால் மட்டுமே.. எந்தவொரு ஒரு மனிதனின் மனதையும் மாற்றிவிடுகிற சூத்திரம் மட்டுப்படக்கூடும்..!! சாத்தியமான காரியமே எனினும்.. சாதாரணமான காரியம் என இயலாது..!!
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
கடினமான அந்த காரியத்தை, மிக எளிதாக செய்து முடிக்கிற ஒன்று.. அண்டத்தில் உண்டெங்கில், அதனை அன்பென்றுதான் சொல்ல வேண்டும்..!! ஒரு உயிர் இன்னொரு உயிர் மீது கொண்ட உறுதியான அன்பென்பது.. உன்னதமானது மட்டுமல்ல.. சக்தி வாய்ந்தது.. வலிமை கொண்டது.. அளப்பரிய ஆற்றல் படைத்தது..!! அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!! அன்பு.. மனதை இளக, உருக செய்கிறது.. இறுக, உறைய வைக்கிறது.. மென்மையாக்குகிறது.. வன்மையாக்குகிறது.. மூர்க்கமாக்குகிறது.. சில சமயங்களில் முட்டாளாக்குகிறது..!! ஒரு வடிவத்தில் இருக்கிற மனதினை.. வேறொரு வடிவத்துக்கு சுலபமாக மாற்றுகிற பண்பு.. அன்பின் அனுகூலங்களில் ஒன்று..!!
‘காதல் வீரனை கோழையாக்கும்.. கோழையை வீரனாக்கும்..’ என்கிற பிரபலமான மேற்கோள் வாசகத்தில்.. காதல் என்ற சொல்லுக்கு பதிலாக, அன்பு என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்பது எனது அபிப்ராயம்.. நம்மூரில் காதல் என்கிற சொல், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்தரங்க அன்பை மட்டுமே குறிக்கிற சொல்லாக இருப்பதாலேயே இதை சொல்கிறேன்..!! எந்தவகை அன்புக்குமே மனிதமனத்தை மாற்றிவிடுகிற வல்லமையுண்டு.. சங்ககாலத்தில் முறத்தால் அடித்து புலியை விரட்டியவள் ஒரு தமிழ்த்தாய்தானே ஒழிய.. தமிழ்க்காதலி அல்ல..!!
‘கவலைப்படாதடா.. கண்டுபிடிச்சிடலாம்’ என்று நம்பிக்கையாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத்தின் மனது.. ‘அவளை மறந்துடுடா’ என்று சொல்கிற அளவிற்கு மாறியிருக்கிறது என்றால்.. அதற்கும் கூட அன்பையே காரணமாக கொள்ளலாம்.. அசோக்கின் மீது அவருக்கிருந்த அன்பு.. அவனுடைய பரிதாபமான நிலையை பார்க்கசகியாத பரிதவிப்பில் பிறந்திட்ட அன்பு..!!
அசோக்கிற்கும் கூட மீராவின்மீது அன்பிருந்தது.. அளந்தெடுத்தோ, அறுதியிட்டோ கூற முடியாத மாதிரியான ஒரு அதீத அன்பு..!! நெஞ்சை அடைத்திருக்கிற அவளை.. இனி நேரில் சந்திப்பதே உறுதியற்றுப் போனநிலையில்.. அவள் மீது அவனுக்கிருந்த அந்த அதீத அன்பு.. அவனை என்ன பாடுபடுத்தியிருக்க கூடும்.. அவனது மனதில் எந்தவித மாற்றத்தை தூண்டியிருக்க கூடும்..??
‘இனி செய்வதற்கு எதுவும் இல்லை..’ என்று ஸ்ரீனிவாச பிரசாத் கையை விரித்தபோதே.. அவனுடைய மனதை ஒரு மாயவகை அழுத்த மண்டலம் சூழ ஆரம்பித்தது.. அச்சம் கலந்த ஒரு வேதனையை அவன் மனதுக்குள் அனுப்பி அழுத்தியது..!! மீராவின் மீதிருந்த அளவிலா அன்பினாலும்.. அவளை அடையமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினாலும்.. அவன் மனதில் உருவான அழுத்தம் அது..!! இதயம் இரும்புக்குண்டென கனத்துப் போனது.. மூளையில் முறுக்காணி ஏற்றியது மாதிரியாக ஒரு வலி..!!
அந்த வலி பொறுக்காமல்தான் அங்கிருந்து அவன் உடனே அகன்றுவிட்டான்.. ஆனால் அவனது அகத்தை விட்டுத்தான் மீரா அகலுவதாய் இல்லை..!! எந்த நேரமும் அவளைப் பற்றிய எண்ணத்துடனே அசோக்கை தத்தளிக்க வைத்தாள்.. உணர்விருக்கையில் அவன் நினைவை நிறைத்திருந்தாள்.. உறங்கிப்போகையில் அவன் கனவை நிரப்பியிருந்தாள்..!! காணுமிடமெல்லாம் அவளது பிம்பம் அசைவது போலொரு மாயை.. காதுகளுக்குள் அவளது குரல் ஒலிப்பது போலொரு மயக்கம்.. காற்றினில் அவளது வாசம் வீசுவது போலொரு மருட்சி.. பித்துப்பிடிக்காத குறைதான் அசோக்கிற்கு..!!
சாலைப்போக்குவரத்து மிகுந்த அண்ணாசாலையில்.. சாலமனும் அவனும் பைக்கில் பறந்து கொண்டிருந்தபோது.. மீராவுடையவை போன்ற பின்னலும், பின்னழகுமாய் ஒருத்தி குறுக்கிட..
“ஏய் மச்சி.. மீராடா…!!”
என்று அலறிய அசோக், தலையை அப்படியே 180 டிகிரிக்கு திருப்பினான்.. சாலமனும் பதறிப்போய் ஒருபக்கமாக சாய.. சமநிலை இழந்த வண்டி சாலையில் சரிந்து சறுக்கியது..!! அசோக்கிற்கு அப்படியொன்றும் அடி பலமில்லை.. இவர்கள் விழுந்த சப்தத்தில், அந்தப்பெண் திரும்பி பார்க்க.. ‘அவள் மீரா இல்லை’ என்று உறைத்திட்ட உண்மைதான்.. அவனுடைய முழங்கை சிராய்ப்பை விட அதிக வலியை தந்தது..!! சாலமனின் நிலைதான் பரிதாபம்.. கீழே விழுந்ததில் முட்டி பெயர்ந்து ரத்தம் கொட்டியது..!!
“டேய்..!!! கொலைகாரப்பாவி..!!! கொஞ்சம்னா அப்டியே எகிறிருப்பேன்டா..!!” என்று வேதனையும் வெறுப்புமாய் அசோக்கைப் பார்த்து கத்தினான். அவனை கண்டுகொள்ளாத அசோக்,
“மீ..மீரான்னு நெனச்சுட்டேன் மச்சி.. அ..அவ இல்லடா..!!” என்று உதிர்த்த வார்த்தைகளில் இருந்த வேதனையை சாலமனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சிந்தாதிரிப்பேட்டையில் அந்த ஃப்ளக்ஸ் போர்டை சூழ்ந்திருந்த, அத்தனை வீடுகளின் கதவையும் தயக்கமில்லாமல் தட்டியாயிற்று.. மக்கள்தொகை கணக்கெடுக்கிற போர்வையில், மனம் திருடிச்சென்றவளின் மதிமுகம் தென்படுகிறதாவென தேடிப் பார்த்தாயாயிற்று.. மாடிவீடுகள் மட்டுமல்லாது, மண்குடிசைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை..!! ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி.. ஆயிரத்து சொச்ச வீடுகளை சலித்தெடுத்தும்.. அகப்பட மறுத்தாள் அவனது அன்புக்காதலி..!! எப்படி அகப்படுவாள்.. அந்த வீடுகளில் அவள் இருந்தால்தானே..?? பார்த்த முதல் வீட்டிலேயேதான் பாவையவள் பதுங்கியிருந்தாள் என்கிற உண்மை.. பாவம் அசோக்கிற்கு தெரியாதல்லவா..??
ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் ஐந்து நாட்கள் ஏறி இறங்குகையில்.. ஒருசில வீடுகளில் அச்சமயம் ஆளிருக்க மாட்டார்கள்.. வெளிப்புற தாழ்ப்பாள்கள் அவர்களை வெறுங்கையுடன் திருப்புவன..!! அந்த மாதிரி வீடுகளை அசோக் ஒரு தனிக்கணக்கில் வைத்திருந்தான்.. அடுத்தநாள் செல்லும்போது அந்த வீடுகளை மீண்டும் அணுகுவதை வழக்கமாக கொண்டிருந்தான்..!! தனது வீட்டிற்கு அசோக் வந்தபொழுதினில்.. மீரா தப்பியோடி இருந்திருந்தால் கூட.. அசோக் அவளை மீண்டும் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்க கூடும்..!! அந்த நெருக்கடிநிலைமையை அவள் மனோகரைக்கொண்டு சமாளித்தபடியால்.. அசோக்கின் தனிக்கணக்கில் மீராவின் வீடு அங்கம் வகிக்காமல் போனது..!!
ஐந்தாம் நாள் இறுதி.. அசோக்கின் நம்பிக்கையைபோல ஆதவனின் வெளிச்சமும் மங்கிப்போயிருந்த மாலைப்பொழுது.. அட்டவணையில் இருந்த அனைத்து வீடுகளிலும் தேடிமுடித்து.. அலைந்து திரிந்த களைப்புடன்.. அருகிலிருந்த ஒரு சாலையோர கடையில்.. பஜ்ஜி கடித்து அவர்கள் பசி தீர்த்துக் கொண்டிருந்த சமயம்..!! அசோக்கின் மனதில்.. ஆரம்பத்திலிருந்தே ஒருசில வீடுகளின் மீதும், அங்கிருந்த மனிதர்கள் மீதும் ஒருவித சந்தேகம்.. அவன் முதன்முதலில் அணுகிய மீராவின் வீடுமே அதில் அடக்கம்.. அடுத்தநாள் அந்த வீடுகளை எல்லாம் திரும்ப ஒருமுறை சென்று பார்க்கலாமா என்று அவனுக்குள் ஒரு எண்ணம்..!!
உள்ளுக்குள் எழுந்த அந்த எண்ணத்தை.. அசோக் சாலமனிடம் உரைத்தான்..!! அவ்வளவுதான்.. ஏற்கனவே கடும் எரிச்சலில் இருந்த சாலமன், அப்படியே கொதித்துப் போனான்.. வாயிலிருந்த பஜ்ஜியை அவசரமாய் விழுங்கியவன், அசோக்கிடம் ஆத்திரமாய் சீறினான்..!!
“டேய்..!!! உனக்கு என்ன பைத்தியமாடா..????”
“ப்ச்.. என்னாச்சு இப்போ..??”
“பின்ன என்ன.. அஞ்சு நாளா பிச்சைக்காரன் மாதிரி வீடுவீடா ஏறிஎறங்கிருக்குறோம்.. அறிவு வரலை உனக்கு இன்னும்..?? அவ இங்க இல்லடா..!!”
“இல்ல மச்சி.. அவ இங்கதான்டா எங்கயோ இருக்குறா.. எனக்கு நல்லா தெரியும்..!!”
“ஆமாம்.. உனக்கு எங்க பாத்தாலும் அவ இருக்குற மாதிரியே இருக்கும்.. எவளை பாத்தாலும் அவளை மாதிரியே தோணும்..!! ஏன்டா இப்படிலாம் பண்ற..??”
“ஏய்.. இது அப்டி இல்லடா..!!”
“என்ன நொப்டி இல்லடா.. அன்னைக்கு ரோட்ல எவளையோ பாத்துட்டு பைக்கை கீழ வுட்டியே..?? த்தா.. அன்னைக்கு ஜஸ்ட் மிஸ்ஸு.. இல்லனா சங்கு ஊதிருப்பானுக..!! உன்கூட பைக்ல போற ஒவ்வொரு செகண்டும், அப்டியே பக்கு பக்குன்னு இருக்குதுடா எனக்கு..!! போதுன்டா சாமி.. என்னால முடியாது இனிமே.. உன் ஆளை தேடுறோம்னு என் உசுரை தொலைச்சுருவேன் போல இருக்கு..!! போதும்.. இத்தோட நிறுத்திக்கலாம்..!!” சாலமன் சலிப்புடன் சொல்ல,
“எ..என்னடா இப்படி சொல்ற..??” அசோக்கின் குரல் உடைந்து போய் ஒலித்தது. இப்போது சாலமனுக்குமே அசோக்கின் மீது மெலிதான ஒரு பரிதாபம்.
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மச்சி.. இது வேலைக்காவாது..!! அவ இந்த ஏரியாலதான் இருப்பான்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல..!!”
“இல்லடா.. அவ சொல்லிருக்குறா.. அவ வீட்டுக்கு எதுத்தாப்ல..”
“ம்க்கும்.. நல்லா சொன்னா.. என்னை பாடைல ஏத்துறதுக்கு..!! அவ ஏதோ ரோட்ல அந்த போர்டை பாத்துட்டு.. என் வீட்டுக்கு எதுத்தாப்லன்னு பொய் சொல்லிருப்பாடா.. நாமளும் அதை உண்மைன்னு நம்பிட்டு நாய் மாதிரி அலைஞ்சுட்டு இருக்கோம்..!!”
“சேச்சே.. மீரா அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாடா..!!” அசோக் அந்த மாதிரி அடம்பிடிக்க, இப்போது சாலமன் மீண்டும் டென்ஷன் ஆனான்.
“டேய்.. அப்புறம் எனக்கு வாயில நல்லா வந்துரும் ஆமாம்..!! மீராவாம் மீரா.. மசுரு..!!!! அந்த மீரான்ற பேரே ஒரு பெரிய பொய்தானடா.. பேர் மட்டுமா.. அவ அவளைப்பத்தி சொன்ன எல்லாமே பொய்தான..?? அப்புறம் எப்படி இதை மட்டும் உண்மைன்னு நம்புற நீ..?? உனக்கே இது பைத்தியக்காரத்தனமா தோணல..?? மொதல்ல அவளோட உண்மையான பேரை கண்டுபிடிடா.. அப்புறம் அவளை கண்டுபிடிக்கலாம்..!!”
சாலமன் பொரிந்து தள்ள.. அசோக் தளர்ந்து போனான்..!! சாலமன் உதிர்த்த வார்த்தைகளில் இருந்த உண்மை.. அசோக்கின் புத்தியை அறைந்தது..!! என்ன பதில் சொல்வதென்று எதுவும் புரியவில்லை அவனுக்கு..!! சோகம் அப்பிய முகமும்.. சோர்ந்து போன கால்களுமாய்.. சொத்தென்று பெஞ்சில் அமர்ந்தான்..!! அவனது மனதைச் சூழ்ந்திருந்த அந்த மாயவகை அழுத்த மண்டலம்.. இப்போது இரக்கமே இல்லாமல் இறுக்க ஆரம்பித்திருந்தது..!!
அடுத்த நாளும் சிந்தாதிரிப்பேட்டையில் அலைய நினைத்திருந்த அந்த எண்ணத்தை.. அவநம்பிக்கையுடன் அசோக் கைகழுவினான்..!! ஆனால்.. அவன் மனதில் எப்போதும் எழுந்து.. அவனைப்பார்த்து கைகொட்டி நகைக்கிற மீராவின் நினைவுகளை கலைந்திடத்தான்.. அவனுக்கு வழியேதும் புலப்படவில்லை..!! அலுவலகச்சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அவளது கவிதைக்காகிதம்.. அவர்கள் அமர்ந்து உண்டு கதையடிக்கிற அந்த ஃபுட்கோர்ட் மேஜை.. சிவந்த மூக்குடன் சிரிக்கிற குரங்கு பொம்மை.. மஞ்சள் இதழ்களுடன் மலர்ந்து குலுங்கும் ரோஜாத்தோட்டம்.. அர்த்தம் புரியாத பார்வையுடன் அவனையே வெறிக்கிற அவளது வால்பேப்பர்.. அவளது அழைப்புக்கென பிரத்தியேகமாக செலக்ட் செய்து, செட் செய்து வைத்திருந்த செல்ஃபோன் ரிங்டோன்..!! கண்ணில் படுகிற அனைத்துமே.. காயம்பட்ட அவன் நெஞ்சில் திராவகம் தெளிப்பதாகவே இருந்தன..!!
மனதில் இருந்த குழப்பமும், பயமும், வேதனையும்.. அசோக்கின் முகத்திலும் வெளிப்படாமல் இல்லை.. வீட்டிலிருப்பவர்கள் அவனுடைய நடவடிக்கைகளை வித்தியாசமாக பார்த்தனர்.. எனினும் அவர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.. ஏதாவது கேட்டாலும் இவன் ‘ஒன்றுமில்லை’ என்றே கூறி சமாளித்தான்..!!
“போதும் மம்மி.. எனக்கு பசி இல்ல..!!”
பெயருக்கு கொறித்துவிட்டு அசோக் எழ முயல.. பாரதி பொறுமை இழந்து போனாள்.. மகனின் முகத்தை ஏறிட்டு கடுமையாக ஒரு முறை முறைத்தாள்.. அவனது கண்களை நேருக்கு நேராக எதிர்கொண்ட கூரான பார்வை.. அந்தப்பார்வையில் அப்படி ஒரு உஷ்ணம்.. எழுந்தாய் என்றால் எரித்துவிடுவேன் என்பது மாதிரி..!! பாரதியின் அனல்கக்கும் பார்வை ஒன்றே அசோக்கிற்கு போதுமானதாக இருந்தது.. எழ முயன்றவன், பிறகு தயக்கத்துடன் மீண்டும் அமர்ந்தான்.. தட்டை அருகில் இழுத்து, சாதத்தை கொஞ்சமாய் அள்ளி, மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்..!!
மகன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்ததும், பாரதியின் கோபமும் மறைந்து போனது.. உள்ளத்தில் அவன் மீதான அன்பு, உடனடியாய் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.. அதேநேரம் ‘இவனுக்கு ஏதோ பிரச்னையோ’ என்கிற கவலையும் அவளை ஆட்கொண்டது.. சாதம் மெள்ளுகிற மகனின் கேசத்தை, இதமாய் வருடிக்கொடுத்தாள்..!!
“அவ கூட ஏதாவது சண்டையா..??” பாரதியின் கேள்வி கூர்மையாக இருந்தது.
“ச..சண்டையா.. அ..அதுலாம் இல்லையே..??” அசோக்கிடம் ஒரு தடுமாற்றம்.
“அப்புறம் என்னாச்சு..??”
“எ..என்னாச்சுனா..??”
“ப்ச்.. நடிக்காத அசோக்.. நானும் ஒருவாரமா பாத்துட்டுத்தான் இருக்கேன்.. நீ ஒன்னும் சரியில்ல..!! உன் மூஞ்சில ஒரு களையே இல்ல.. எந்தநேரமும் எதையாவது யோசிச்சுட்டே இருக்குற..?? ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. சரியா தூங்குறது இல்ல.. வீடே தங்குறது இல்ல..!! எ..என்னாச்சு உனக்கு.. ம்ம்..?? சொல்லு.. மீரா கூட எதும் பிரச்சினையா..??”
“இ..இல்ல மம்மி.. அதுலாம் ஒன்னும் இல்ல..!!”
“அப்புறம்..??”
“ஆபீஸ் டென்ஷன்தான்..!! கொஞ்சநாளா ரொம்ப ஹெக்டிகா போயிட்டு இருக்கு..!!” அசோக் கம்மலான குரலில் சொல்ல, பாரதி அவனை ஒருசில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். பிறகு,
“வேற ஒன்னும் இல்லையே..??” என்றாள் முழு நம்பிக்கை இல்லாதவளாகவே.
“அதான் சொல்றன்ல..??”
“ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! ஆபீஸ் டென்ஷன்லாம் ஆபீஸ்லயே விட்டுட்டு வர மாட்டியா.. வீட்டுக்கு வந்தும் அதையே நெனச்சுட்டு இருப்பியா.. என்ன புள்ள நீ..??” பாரதியின் குரலில் ஒருவித பொறுமல்.
“………………”
“ஆன்னா ஊன்னா சாப்பாடு மேல கோவத்தை காட்ட வேண்டியது..!!”
“………………”
“அவதான் வந்து உன்னை அடிச்சு திருத்தணும்..!!”
அப்படி சொல்லும்போதே, பாரதிக்கு திடீரென மீராவின் நினைவுகள்..!! ஒரே ஒரு நாள்தான் சந்தித்து பேசியிருந்தாலும்.. மீராவுடன் ஒரு அன்னியோன்ய உணர்வு அவளுக்கு அன்றே வந்திருந்தது..!! ‘தனக்குப்பிறகு தனது இடத்தில் இருந்து.. தன் மகனை அன்புடன் கவனித்துக் கொள்ளப்போகிற ஒரு ஜீவன்.. தான் ஈன்றெடுத்தவனுடன் சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்டு, அவனை முழுமனிதனாக்கப் போகிற ஒரு உயிர்..’ என்பது மாதிரியான எண்ணத்தில் பிறந்த உணர்வு அது.. மகனை உண்மையாக நேசிக்கிற எந்த தாய்க்குமே, அவனுடைய மனைவியை பார்த்து வரவேண்டிய உன்னதமான உணர்வு..!!
குரலில் உடனடியாய் ஒரு மென்மையை வரவழைத்துக்கொண்டு.. ஒருவித ஏக்கம் தொனிக்க.. அசோக்கிடம் பாரதி கேட்டாள்..!!
“இ..இந்த வாரம் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா அசோக்..??”
அம்மா அப்படி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. மனதில் சுருக்கென்று ஒரு வலியுடன், அம்மாவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான்..!! மகனின் முகத்தை கவனியாத பாரதி.. எங்கேயோ பார்த்துக்கொண்டு தொடர்ந்து பேசினாள்..!!
“ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! பார்த்து ஒருவாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ளயே வருஷக்கணக்கான மாதிரி இருக்குது..!!”
“………………”
“அவகிட்ட பேசிட்டு இருந்தா, நேரம் போறதே தெரியல தெரியுமா..?? ரொம்ப நல்ல பொண்ணுடா..!! நீதான் கோவக்காரி, டெரர் பார்ட்டின்னு என்னன்னவோ சொன்ன..!!”
“………………”
“பாக்கணும் போல இருக்குடா.. கூட்டிட்டு வர்றியா..??”
ஏக்கத்துடன் கேட்டுவிட்டு வெள்ளந்தியாக சிரிக்கிற அம்மாவுக்கு, என்ன பதில் சொல்வதென்று அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!! அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவனுடைய கண்களில்..!! அதனை அடக்கிக்கொண்டு..
“ம்ம்.. கூ..கூட்டிட்டு வர்றேன்..!!” சற்றே பிசிறடிக்கிற குரலில் சொன்னான்..!!
பாரதி மட்டுமல்ல.. அசோக்கின் குடும்பத்தார் அனைவருமே.. அவர்களையும் அறியாமல், அசோக்கின் நிலையையும் அறியாமல்.. மீராவின் நினைவுகளை அவனுக்குள் தூண்டிக்கொண்டே இருந்தனர்..!! ஏற்கனவே நொறுங்கிப்போயிருந்த அசோக்கிற்கு.. அவர்களின் நடவடிக்கைகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தன..!!
“ஸ்பென்ஸர் போயிருந்தேண்டா.. இயர் ரிங் வாங்கினேன்.. நல்லாருந்துச்சேன்னு அண்ணிக்கும் ஒரு செட் வாங்கினேன்.. இந்தா.. அவங்களை பாத்தா குடுத்துடு..!!”
அண்ணனின் கையில் காதணி பெட்டகத்தை திணித்துவிட்டு.. திரும்பி நடந்தாள் சங்கீதா..!! வலிக்கிற மனதுடனே அசோக் அந்த பெட்டகத்தை பார்க்க.. வாசலை அடைந்திருந்த சங்கீதா திரும்பி கேலியாக சொன்னாள்..!!
“மவனே.. நான் வாங்கி தந்ததா சொல்லி குடுக்கணும்..!! நீயே வாங்கினதா பீலா வுட்டு.. முத்தம் கித்தம் கேட்டு எங்க அண்ணியை டிஸ்டர்ப் பண்ணினேன்னு தெரிஞ்சது.. கொன்னுடுவேன்..!! ஹாஹாஹா..!!”
மத்தாப்பு கொளுத்திய மாதிரி சிரித்துவிட்டு.. மறைமுகமாக அண்ணனுக்கு ரொமான்ஸ் ஐடியாவும் வழங்கிவிட்டு.. அறையை விட்டு வெளியேறினாள் சங்கீதா..!! அசோக்குக்குத்தான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.. வேதனை கொப்பளிக்கிற நெஞ்சுடன்.. வெகுநேரம் அந்த காதணியையே பார்த்துக் கொண்டிருந்தான்..!!
“ஹ்ம்ம்… என் அருமை, என் புள்ளைக்குத்தான் தெரியல.. அட்லீஸ்ட் வரப்போற மருமகளாவது தெரிஞ்சுக்கட்டும்..!! என்னோட நாவல் எதுவும் மீரா படிச்சது இல்லன்னு சொன்னா.. இது நான் எழுதினதுல ரீசன்ட் ஹிட்.. இதை அவகிட்ட குடுத்து படிக்க சொல்லு… மாமனாரோட மகிமை என்னன்னு அவ தெரிஞ்சுக்குவா..!! ஹாஹா..!!”
மணிபாரதி தன் பங்குக்கு அசோக்கின் உணர்வை சீண்டினார்..!! அவர் வைத்துவிட்டு சென்ற நாவலின் தலைப்பை பார்த்த அசோக்கிற்கு.. அழுகை மேலும் பீறிடவே செய்தது..!!
“எங்கே அந்த வெண்ணிலா..??”
நாராயணசாமியும் அமைதியாய் இருக்கவில்லை.. அனுபவத்தால் தான் கற்ற காதல் பாடங்களை, அறிவுரைகளாக பேரனுக்கு அவ்வப்போது அள்ளி வீசிக்கொண்டிருந்தார்..!!
“சும்மா உம்முனே இருக்காத.. நானும் லவ் பண்றேன்னு ஏதோ பேருக்கு லவ் பண்ணாத..!! அவளை சிரிக்க வை.. அழ வை.. கோவப்பட வை.. வெக்கப்பட வை..!! அவளை அடி.. அவளுக்கு முத்தம் குடு..!! என்னை மாதிரி நீ கெழட்டுப்பயலானப்புறமும் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற மாதிரி.. ஏதாவது பண்ணிக்கிட்டே இரு..!! எந்த லட்சணத்துல நீ லவ் பண்ணினன்னு.. எழுபது வயசுல பெருமையா சொல்லிக்கிற மாதிரி உன் லவ் இருக்கணும்..!! புரியுதா..??”
“ம்ம்.. புரியுது தாத்தா..!!” மனதில் எழுந்த ஆதங்கத்தையும் சோகத்தையும் மறைத்துக்கொண்டு, அமைதியாக சொன்னான் அசோக்.
– தொடரும்
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :