அன்புள்ள ராட்சசி – பகுதி 50
பால்கனியை அடைந்தவர்கள், நிலைமையின் டென்ஷன் குறைக்க சிகரெட் புகைத்தனர். வேணுவே ஆளுக்கொரு சிகரெட் எடுத்துக்கொடுத்து, அவனும் ஒன்று பற்ற வைத்துக்கொண்டான். புகையை ஊதிக்கொண்டே கிஷோரிடம் சொன்னான்.
“என்ன மச்சி நீ.. அவன்தான் அப்படி இருக்கான்னா.. நீயும்..!!”
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“ப்ச்.. வேற என்னடா பண்ண சொல்ற..?? அவ போய் ரெண்டு வாரம் ஆச்சு.. இவன் கொஞ்சம் கூட மாறுற மாதிரி தெரியல..!! இப்படியே விட்டா ஆளே ஒன்னும் இல்லாம போயிடுவாண்டா..!!”
“புரியுது மச்சி..!! ஆனா அவன் கூட இப்படி மல்லுக்கட்டுறதுல எந்த பிரயோஜனமும் இல்லடா.. அதை நீ மொதல்ல புரிஞ்சுக்கோ..!! அவன் எந்தமாதிரி ஸ்டேட்ல இருக்கான்னு தெரிஞ்சா.. இப்படிலாம் அவன்கூட சண்டை போடமாட்ட..!!” வேணு சொல்ல, கிஷோர் இப்போது குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.
“எ..என்ன சொல்ற நீ..?? எந்த மாதிரி ஸ்டேட்ல அவன் இருக்கான்..??”
“நேத்து.. அந்த சுமங்கலி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ப்ராஜக்ட் விஷயமா.. ஷூட்டிங் லொகேஷன் பாத்துட்டு வர சொல்லிருந்தல..??”
“ம்ம்..”
“ஆபீஸ்ல சும்மாதான இருக்கான்னு.. இவனையும் கூட்டிட்டு போயிருந்தேன்..!!”
“சரி..!!”
“பதினஞ்சு மாடி பில்டிங் மச்சி.. மேல நின்னுக்கிட்டு லொகேஷன் பாத்துட்டு இருந்தோம்..!! திடீர்னு இவன்.. ‘இங்க இருந்து இப்படியே குதிச்சிடலாம் போல இருக்குடா’ன்றான்..!! எனக்கு ஒன்னும் புரியல.. திரும்பி இவன் மூஞ்சை பாத்தா.. மூஞ்சில அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! எங்க இவன்பாட்டுக்கு டப்புன்னு குதிச்சிருவானோன்னு.. நான் அப்படியே மெர்சலாகி போயிட்டேன்..!!”
“ஓ..!!” வேணு சொல்ல சொல்ல.. கிஷோரும் சாலமனும் திகைப்பாக அவனையே பார்த்தனர்..!!
“அப்புறம்.. அப்படியே நைஸா.. பேச்சை வேற மாதிரி மாத்தி.. அவனை கீழ இழுத்துட்டு வந்தேன்..!!”
“ம்ம்..!!”
“அன்பா பேசித்தான்டா அவனுக்கு நெலமையை புரிய வைக்கணும்..!! அதைவிட்டுட்டு.. சும்மா சும்மா அவளை மறந்துடுன்னு சொன்னா.. அவன் என்னடா பண்ணுவான்..?? அவன் அந்த ஸ்டேஜ்லாம் தாண்டிட்டான்டா..!! ஆளாளுக்கு அவனை போட்டு டார்ச்சர் பண்ணி.. அவன்பாட்டுக்கு ஏடாகூடமா ஏதாவது பண்ணிக்கிட்டான்னு வச்சுக்கோ.. நெனச்சு பாரு..!!”
“ம்ம்.. புரியுதுடா..!!”
“வா.. கொஞ்சம் நல்லவிதமா பேசி.. அவனை கூல் பண்ணு.. வா..!!”
வேணுதான் அசோக்கின் நிலையை ஓரளவு சரியாக கணித்திருந்தான்.. இப்போது அவன்மூலமாக சாலமனும், கிஷோரும் அதன் தீவிரத்தை புரிந்து கொண்டிருந்தார்கள்.. மூவரும் சிகரட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு, மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்..!! நுழைந்தவர்கள்.. ஒருகணம் திகைத்துப் போனார்கள்..!! அசோக்கை அங்கே காணவில்லை..!!!!
“எங்கடா போயிருப்பான்..??”
“தெரியலையே மச்சி..!!”
“அவன் நம்பருக்கு கால் பண்ணு..!!”
கிஷோர் சொல்ல.. வேணு ஒருவித பதற்றத்துடன் தனது செல்போனை எடுத்து.. அசோக்கின் எண்ணை தேட ஆரம்பித்தான்..!!
அதே நேரத்தில்.. அசோக்கின் வீட்டில்.. அவனுடைய அறையில்..
வெட்டி நேரத்தை செலவழிக்க.. ஏதாவது ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன்.. DVD எடுத்துச்செல்கிற நோக்கத்துடன்.. அண்ணனின் அறைக்கு வந்திருந்தாள் சங்கீதா..!! அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த DVDகளை ஆராய்ந்து.. அதில் ஒன்றை தேர்வு செய்து வெளியே இழுக்க.. DVDயுடன் சேர்ந்து இன்னொன்றும் வெளியே வந்து விழுந்தது.. ‘டிங்டடாங்டாங்..’ என்ற சப்தத்துடன் தரையில் விழுந்து சிதறி ஓடியது..!! அது.. அசோக்கின் பாட்டி மீராவுக்கு அன்பளிப்பாக தந்த பரம்பரை மோதிரம்.. மீரா அசோக்கை விட்டு பிரிகையில், அவனிடம் திருப்பியளித்த மோதிரம்..!!
அதைப் பார்த்த சங்கீதா ஒருகணம் குழம்பிப் போனாள்.. குனிந்து கையில் எடுத்தாள்..!! அது பாட்டியின் பரம்பரை மோதிரம், விலைமதிப்பில்லாதது என்று அவளுக்கு தெரியும்..!! ஆனால்.. அது எப்படி இங்கே.. அண்ணனின் அறையில்..??
“பாட்டிஈஈ..!!”
என்று கத்தியவாறே படிக்கட்டு இறங்க ஆரம்பித்தாள் சங்கீதா..!! பாட்டியிடம் சென்று அந்த மோதிரத்தை அவள் நீட்ட.. அவளுக்கும் அந்த மோதிரத்தை பார்த்து அதிர்ச்சி..!!
“நான் இதை.. நம்ம மீரா பொண்ணுட்ட குடுத்தேனே.. இது எப்படி உன்கிட்ட..??”
“அ..அங்க அண்ணன் ரூம்ல கெடந்துச்சு பாட்டி..!!”
பாரதியும் அவர்கள் இருவருடனும் வந்து சேர்ந்துகொண்டாள்.. விஷயம் தெரிந்ததும் அவளுக்கும் குழப்பம்..!! ‘இது எப்படி இங்கே வந்திருக்கும்’ என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ள.. அந்த குழப்பம் அதிகரித்துக்கொண்டே சென்றது.. இரண்டு வாரங்களாக அசோக்கின் நடவடிக்கைகள் வேறு அவர்களுடைய சந்தேகத்தை கிளப்பியது..!!
“கொஞ்சநாளாவே அவன் ஒன்னும் சரியில்ல மம்மி..!! முன்னாடிலாம் அண்ணி பத்தி பேசினாலே அவன் மூஞ்சி அப்படியே ப்ரைட் ஆயிடும்.. இப்போலாம் அண்ணி பத்தி பேசினாலே அவன் அவாய்ட் பண்ணிடுறான்.. அவன் மட்டும் இல்ல.. இந்த கிஷோரும்..!!” சங்கீதா சொல்ல, இப்போது மற்ற இருவரையும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது.
“அவனுக்கு ஃபோனை போடுடி..!!” என்றாள் பாரதி, மூளையில் பலப்பல எண்ண ஓட்டத்துடன்.
“ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கான் மம்மி..!!” முயன்று பார்த்து சொன்னாள் சங்கீதா.
“ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கானா..??”
பாரதியின் பதற்றம் இப்போது மேலும் அதிகரித்தது..!! நெஞ்சில் ஒருவித கிலியுணர்வு கிளம்ப.. நெற்றியை பற்றி பிசைந்துகொண்டவள்.. சற்றே தடுமாற்றமான குரலில் மகளிடம் சொன்னாள்..!!
“ச..சரி.. கி..கிஷோருக்கு ஃபோனை போடு..!!”
அதே நேரத்தில்.. அசோக்கின் அலுவலகத்தில்.. வீடியோ எடிட்டிங் அறையில்..
“விடு மச்சி.. ஃபோன் பண்றது வேஸ்ட்..!! அவன் ஃபோனை இங்கயே விட்டுட்டு போயிருக்கான்.. ஸ்விட்ச் ஆஃப் ஆகி வேற இருக்கு..!!” சாலமன் சொல்லிக்கொண்டே மேஜையில் இருந்த செல்ஃபோனை கையில் எடுத்தான்.
“இப்போ என்னடா பண்றது..?? திடீர்னு எங்க போய் தொலைஞ்சான்..??” வேணு கையை பிசைந்தான்.
அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனுடைய செல்ஃபோன் அலறியது..!! எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன், நெற்றியை பிசைந்தான்..!!
“யார்டா..??”
“சங்கி..!!”
அடுத்த அரைமணிநேரத்தில் அசோக்கின் நண்பர்கள் அவனுடைய வீட்டில் இருந்தார்கள்..!! அசோக்குடைய குடும்பத்தினர் அவர்களை சூழ்ந்துகொள்ள.. கடந்த இரண்டு வாரங்களாக அசோக்கிற்கு நேர்ந்ததை எல்லாம்.. ஒவ்வொன்றாக அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்..!! மீரா அசோக்கை விட்டு பிரிந்து சென்றது.. அவர்களுக்கு தெரியாமல் இவர்கள் அவளை தேடிப்பிடிக்க முயன்றது.. இப்போது அவளை கண்டுபிடிக்கிற வழியெல்லாம் அடைபட்டுப்போனது.. அவளை அடையமுடியாத ஏக்கத்தில் அசோக்கின் மனநிலை மிக மோசமாகிப்போனது.. சற்றுமுன் கிஷோருடன் ஏற்பட்ட சண்டை.. அதைத்தொடர்ந்து அவன் காணாமல் போனது.. எல்லாவற்றையும் வேறுவழியில்லாமல் சொல்லிமுடித்தார்கள்..!!
அவர்கள் சொன்னதை எல்லாம்.. அசோக்கின் குடும்பத்தினர் அதிர்ச்சியும் திகைப்புமாய் கேட்டுக்கொண்டனர்..!! அசோக்கைப் பற்றி அவர்கள் சொன்னவை எல்லாம்.. பாரதியைத்தான் மிகவும் பாதிப்பதாக அமைந்தன.. பெற்ற மகனுக்கு நேர்ந்த பெருந்துயரத்தை.. குமுறுகிற நெஞ்சுடன் கேட்டுக்கொண்டாள் பாரதி..!! ‘ஐயோ.. எம்புள்ளை..’ என்று மனதுக்குள்ளேயே மருகி மருகி.. கலங்கி கண்ணீர் வடித்தாள்..!!
“இவ்வளவு நடந்திருக்கு.. இத்தனை நாளா எதையுமே சொல்லாம மறைச்சுட்டிங்களேடா..?? ஒன்னுக்கு மூணு பேரு ஃப்ரண்டுன்னு இருந்தும்.. எம்புள்ளையை இப்படி தொலைச்சுட்டு வந்து நிக்குறீங்களே..??”
வேதனையுடன் பாரதி வெடித்து சிதற.. பதில் சொல்ல வார்த்தையின்றி நண்பர்கள் மூவரும் தலையை குனிந்துகொண்டனர்..!!
அசோக்கை தேடி இரண்டு காரில் கிளம்பினார்கள்.. நண்பர்கள் மூவரும் வேணுவின் காரில்.. பாரதி, மணிபாரதி, சங்கீதா மூவரும் மணிபாரதியின் காரில்..!! வெளியே கோடைமழை ‘ச்ச்சோ’வென்று கொட்டிக்கொண்டிருந்தது.. மழை நீர் பாதையை மறைக்காமல் இருக்க.. காரின் வைப்பர்கள் ‘தடக் தடக்’என அடித்து.. தமது பணியை செய்துகொண்டிருந்தன..!!
அசோக்கின் குடும்பத்தினர்.. தங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று.. அவனை தேடினர்..!! அசோக்கின் நண்பர்கள்.. அவன் வழக்கமாக தண்ணியடிக்கிற பார்களுக்கெல்லாம்.. சென்று பார்த்தனர்..!! மணி இரவு பத்துமணியையும் தாண்டிப் போனது.. ஆனால் அசோக்கை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..!!
“கொஞ்ச நேரம் முன்னாடிதான் ஸார் வந்துட்டு போனாரு.. கன்னாபின்னான்னு குடிச்சாரு.. சொன்னாகூட கேக்கல..!!”
அண்ணாநகரில் இருக்கிற ஒரு பார் பேரர் சொன்ன செய்தியை.. சங்கீதாவுக்கு கால் செய்து சற்றே நாசுக்காக சொன்னான் கிஷோர்..!! அதை அவள் அப்படியே அம்மாவிடம் சொன்னாள்..!! பாரதியின் கண்களில் இருந்து வடிகிற கண்ணீரின் அளவு இப்போது இன்னும் அதிகமானது.. வேதனையில் துடித்த அவளது உதடுகள் மேலும் வெடவெடத்தன.. அவளுடைய பதைபதைப்பு எல்லை மீறி சென்று கொண்டிருந்தது..!!
சங்கீதா திடீரென.. “ஒருவேளை..” என்று ஆரம்பித்து.. அசோக் சென்றிருக்கக் கூடிய இடத்தை கெஸ் செய்ய.. அனைவருக்கும் அதில் ஒரு நம்பிக்கை பிறக்க.. மணிபாரதி காரை யு-டர்ன் அடித்து திருப்பினார்..!!
சங்கீதாவின் கணிப்பு நூறு சதவீதம் சரிதான்..!! அசோக் அந்த நேரத்தில்.. அவர்கள் வழக்கமாக சாப்பிடுகிற அந்த ஃபுட்கோர்ட்டில்தான் அமர்ந்திருந்தான்..!! வெளியே ‘சடசட’வென மழை கொட்டுகிற சப்தம் இரைச்சலாக கேட்டது.. அசோக் அல்ரெடி மழையில் நனைந்திருப்பான் போலிருக்கிறது.. அவனுடைய சட்டையும் தலைமுடியும் ஈரமாக இருந்தன..!!
பரந்து விரிந்த அந்த தளத்தில்.. அவனையும், டேபிள் சேர்களையும் தவிர வேறு ஆட்களை காணோம்..!! அவன் மட்டும் தனியே.. அவனும் மீராவும் எப்போதும் அமர்ந்து உண்கிற அந்த டேபிளில் அமர்ந்திருந்தான்..!! அளவுக்கதிகமான போதையில்.. அவனுடைய கருவிழிகள் இரண்டும் மேலே ஏறி செருகியிருந்தன.. அவனது தலை நிலையில்லாமல் தள்ளாடியது..!!
வெகுநேரம் பொறுத்து பொறுத்து பார்த்த ஃபுட்கோர்ட் ஊழியர்கள் நான்கு பேர்.. இப்போது அவனுக்கு எதிரே வந்து நின்றனர்..!! கைகளை பின்னால் கட்டியிருந்தவர்கள்.. கடுமையான குரலில் அசோக்கிடம் சொன்னார்கள்..!!
“ஹலோ.. சொன்னா உங்களுக்கு புரியாதா..?? சர்விஸ் டைம் முடிஞ்சு போச்சு.. எடத்தை காலி பண்ணுங்க..!!”
“ஹ்ஹ.. எ..என் மீரா வராம.. நா..நான் எடத்தை காலி பண்ண மாட்டேன்..!! ஓகே..??” அசோக் குழறலாக சொன்னான்.
“மீராவா.. அது யாரு..??” ஒரு ஆள் அந்த மாதிரி கேட்க, இப்போது அசோக் சேரை விட்டு எழுந்தான்.
“மீ..மீரா தெரியாது உனக்கு..?? ம்ம்..?? உனக்கு தெரியுமா..?? உ..உனக்கும் தெரியாதா..??” கிண்டலாக கேட்டவாறே, சுற்றி நின்றவர்களின் கன்னத்தில் ‘பட்.. பட்.. பட்..’ என்று தட்டினான்.
சங்கீதாவின் பேச்சைக்கேட்டு ஃபுட்கோர்ட் வந்த அசோக்கின் பெற்றோர்.. அவர்களுடைய வாழ்நாளின் மிக மோசமான காட்சியை அன்று காண நேர்ந்தது..!! ஃபுட்கோர்ட்டுக்கு வெளியே.. கொட்டுகிற மழையில்.. அவர்களுடைய மகன் யாரோ நான்கு பேருடன்.. ஒரு ரவுடி ரேஞ்சுக்கு அடிதடி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்..!! போதையின் பிடியில் சிக்கியிருந்த அவனது உடலும் மூளையும் அவனுடன் ஒத்துழைக்காமல் போக.. மற்ற நான்குபேராலும் அவனை எளிதில் சுற்றிவளைத்து அடித்து வீழ்த்த முடிந்தது..!!
“ஐயோ.. விடுங்கப்பா.. எம்புள்ளையை விட்ருங்க..!!” மணிபாரதி ஓடிச்சென்று அவர்களை தடுக்க, அவரை மதியாமல் தள்ளிவிட்டு,
“குடிச்சுட்டு வந்து சலம்பல் பண்ணா.. சும்மா விட சொல்றியா..??” என்றவாறே அசோக்கை அடித்து உதைப்பதை தொடர்ந்தனர்.
பாரதியும் சங்கீதாவும் கூட அலறியடித்து ஓடிச்சென்று அவர்களை தடுக்க முயன்றார்கள்..
“வேணாம்பா.. விட்ருங்கப்பா..” கெஞ்சினாள் பாரதி.
“அண்ணாஆஆ..!!” அலறினாள் சங்கீதா.
அவர்களுடைய முயற்சி வெற்றிபெற சிறிது நேரம் பிடித்தது..!! இறுதியாக.. நான்கு பேரும் சேர்ந்து அசோக்கை தூக்கி வீச.. நடுரோட்டில் சென்று மல்லாந்து விழுந்தான் அசோக்.. அவனுடைய நெற்றி உடைந்து ரத்தம் கொட்டியது..!! அந்த ரத்தம்.. சடசடவென முகத்தில் அடித்து தெறிக்கிற மழைநீருடன் கலந்து.. கன்னம் வழியாக ஓடியது..!!
“அசோக்க்க்..!!!” கதறியவாறே ஓடிவந்த பாரதி.. மகனை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டாள்..!!
மூன்று பெரும் கைத்தாங்கலாக அழைத்து சென்று அசோக்கை காரில் ஏற்றினார்கள்.. கார் கிளம்பியது.. காரின் வைப்பர்கள் தங்களது ‘தடக் தடக்’ ஓசையை தொடர்ந்தன..!! மணிபாரதி காரை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தார்.. அவருக்கு அருகே அமர்ந்திருந்த சங்கீதா, அடிக்கடி திரும்பி பின்சீட்டை பார்த்துக்கொண்டாள்..!! பின்சீட்டில் பாரதியும்.. அவள் மார்பில் அசோக்கும்..!! பாரதி தன் ஈரமான புடவைத்தலைப்பால்.. தனது கண்களில் வழிந்த நீரை துடைக்காமல்.. மகனின் நெற்றியில் வழிந்த உதிரத்தை துடைத்தெடுத்தாள்..!!
“ரொம்ப வலிக்குதாயா..??” கனிவாக கேட்டாள்.
“ஹ்ஹ.. இது என்ன மம்மி வலி..?? அவ என்னை விட்டுட்டு போயிட்டான்னு தெரிஞ்சப்போ வலிச்சதே ஒரு வலி.. அதுக்குலாம் முன்னாடி இது ஒன்னும் இல்ல மம்மி..!!” அசோக் சொல்ல பாரதிக்கு அழுகை வெடித்து கிளம்பியது.
“ஐயோ.. எம்புள்ளை..!!!” என்று அவனை மார்போடு இறுக்கிக் கொண்டாள்.
“நீ சொன்னமாதிரிதான் எல்லாம் செஞ்சேன் மம்மி.. நல்லபுள்ளையா நடந்துக்கிட்டேன்..!! ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரியவச்சேன்.. கண்கலங்காம அவளை பாத்துப்பேன்னு கான்ஃபிடன்ஸ் குடுத்தேன்..!! அப்புறமும் ஏன் மம்மி என்னை விட்டுட்டு போயிட்டா..??”
அசோக்கின் ஏக்கம் பாரதியின் இதயத்தை பிசைவதாக இருந்தது..!! மகனுக்கு காதலென்ற மகிழ்ச்சியை கொடுக்க முயன்று.. இப்போது அவனையே இழந்துவிடுவோமோ என்பது மாதிரியான பயம்.. அவளது இதயத்தை வந்து கவ்விக்கொண்டது..!! அந்த பயம்.. மகன் மீதிருந்த அளவுகடந்த அன்பு.. அவனுடைய பரிதாபநிலையை பார்க்க சகியாமை.. அடுத்தவர்கள் செய்த தவறையே அவளையும் செய்ய தூண்டின..!!
“வேணாய்யா.. அவ உனக்கு வேணாம்.. அவளை மறந்துடு..!! இந்தப்பாழாப்போன காதலே உனக்கு வேணாம்..!! எனக்கு எம்புள்ளை வேணும்.. எம்புள்ளை மட்டும் எனக்கு போதும்..!!” சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.
அவ்வளவுதான்..!! அசோக் அப்படியே நொறுங்கிப் போனான்.. அம்மாவின் வாயிலிருந்தே அந்தமாதிரி வார்த்தைகளை கேட்போமென்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திரவில்லை..!! விக்கித்துப் போனவனாய் பாரதியின் முகத்தையே பரிதாபமாக பார்த்தான்..!!
“ஆமாண்ணா.. அம்மா சொல்றதுதான் கரெக்ட்..!! அண்ணியை…” என்று ஆரம்பித்த சங்கீதா சற்றே நிறுத்தி,
“அ..அந்தப்பொண்ணை மறந்துடுண்ணா..!!” என்று முடித்தாள்.
தங்கையை ஏறிட்டு ஒருசிலவினாடிகள் வெறுமையாக பார்த்த அசோக்.. பிறகு அப்பாவிடம் திரும்பினான்..!!
“நீங்க எதுவும் சொல்லலையா டாடி..??” என்று கேட்டான்.
“எ..என்ன சொல்ல..??” மணிபாரதி காரை ஓட்டிக்கொண்டே தளர்வான குரலில் கேட்டார்.
“ஏதாவது சொல்லுங்க டாடி..!! அவ ஒரு ஃப்ராடு.. அவளை மறந்துடு.. வேற யாரையாவது கட்டிக்கோ.. சந்தோ…ஷமா இருக்கலாம்.. ஆகாசத்தை கிழிக்கலாம்.. மலையை புடுங்கலாம்..!! ஏதாவது சொல்லுங்க டாடி..!!”
“எங்களுக்கு.. அந்தப்பொண்ணைவிட நீ ரொம்ப முக்கியம்டா.. அதைத்தவிர வேற எதுவும் எனக்கு சொல்ல தோணல..!!”
மணிபாரதி பின்னால் திரும்பிப்பார்த்து சொன்னார்..!! அப்பா சொன்னதைக்கேட்ட அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான்.. அப்புறம் திடீரென.. அழுகை கலந்திட்ட குரலில் வெடித்து சிதறினான்..!!
“அப்போ அவ்ளோதான்ல..?? எல்லாமே போச்சுல.. எல்லாமே என்னாலதான் போச்சுல..?? இந்தக்குடும்பம் காதல் மேல வச்சிருந்த நம்பிக்கை.. எல்லாமே என்னால நாசமா போச்சுல..??”
“ஐயோ.. அப்படி இல்லடா..!!” பாரதி மகனை அணைத்துக்கொண்டாள்.
“அப்படித்தான்..!! நான்தான் தோத்துட்டேன்ல..?? போச்சு.. எல்லாம் போச்சு..!!”
அசோக் புலம்ப ஆரம்பித்தான்.. ‘இல்லடா.. இல்லடா..’ என்றவாறு, பொங்கி வருகிற அழுகையுடன் அவனை ஆறுதல் படுத்த முயன்றாள் பாரதி..!!
வீடு வந்து சேர்ந்தது.. தாத்தாவும், பாட்டியும் பாவமாக பார்த்துக்கொண்டிருக்க.. அவனை அழைத்து சென்று அவனுடைய அறையில் படுக்க வைத்தனர்..!! அவன் தூங்கிப் போகும் வரையில், பாரதி அவனருகே அமர்ந்து, அவனுக்கு தலைகோதி விட்டுக்கொண்டிருந்தாள்..!! பிறகு கீழே வந்து.. அசோக்கின் எதிர்காலம் பற்றியும்.. அவனிடம் அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைககளை பற்றியும்.. மற்றவர்களிடம் பேசினாள்..!! அசோக் கிடைத்துவிட்ட செய்தியை.. சங்கீதா கிஷோருக்கு முன்பே தெரிவித்துவிட்டிருந்தாள்..!! அனைவரும் தூங்க செல்ல நள்ளிரவு ஒருமணிக்கு மேல் ஆகிவிட்டது..!!
அடுத்த நாள் காலை ஏழு மணி..
வீடு மட்டுமல்ல.. வெளியுலகமும் மிக அமைதியாக இருந்தது..!! எங்கேயோ ‘கா.. கா.. கா..’ என்று கரைகிற காக்கையின் சப்தம் மட்டும் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது..!! பாரதி சமையலறையில் இருந்தாள்.. முந்தினநாள் இரவு நெடுநேரம் விழித்திருந்ததால், வீட்டில் அனைவரும் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தனர்..!! பாரதியுமே.. உறக்கம் இழந்த, அழுது அழுது சோர்ந்து போயிருந்த விழுகளுடன்.. வேலை செய்துகொண்டிருந்தாள்.. பாத்திரங்களை கழுவி அடுக்குகிற வேலை..!! அப்போதுதான்..
“பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!!” உள்ளறையில் இருந்து தாத்தாவின் குரல் சற்றே ஈனஸ்வரத்தில் ஒலித்தது.
“என்ன மாமா..??” பாரதியின் பதில் அவருடைய காதில் விழவில்லை போலிருக்கிறது.
“பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!! செத்த இங்க வாயேன்..!!” என்று மீண்டும் அழைத்தார்.
“இருங்க மாமா.. இதோ வந்துட்டேன்..!!”
பெருமூச்சொன்றை எறிந்த பாரதி.. செய்துகொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு.. சமையலறையில் இருந்து வெளியேறினாள்..!! நடந்து சென்று நாராயணசாமியின் அறையை நெருங்கியவள்.. கதவை உட்பக்கமாய் தள்ளி..
“என்ன மாமா..??” என்றாள்.
“காலாங்காத்தாலேயெ காலு ரெண்டும் கொடைச்சல் குடுக்குதுமா.. எந்திரிக்கவே முடியல.. அந்த தைலத்தை கொஞ்சம் எடுத்து தாரியா..??”
“ம்ம்.. சரி மாமா..!!”
சொல்லிவிட்டு பாரதி முன்னறைக்கு வந்தாள்..!! டைனிங் ரூமுக்குள்ளேயே.. ரெஃப்ரிஜரேட்டரை ஒட்டியிருக்கும் அந்த அலமாரியில்தான்.. மருந்துப்பொருட்களை அவர்கள் அடைத்து வைத்திருப்பது..!! அந்த அலமாரியை நோக்கித்தான் பாரதி இப்போது சென்றாள்..!! அலமாரி திறந்து.. தாத்தா கேட்ட அந்த தைல சீசாவை எடுத்துக்கொண்டாள்..!! அலமாரியை மூட சென்றபோதுதான்.. எதேச்சையாக அதை கவனித்தாள்..!!
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் மணிபாரதி தனது எழுத்துல வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார்.. இரவெல்லாம் கண்விழித்து கதை எழுதியாகவேண்டிய கட்டாயம்..!! அது அவருடைய உடல்நிலையை பாதித்தது.. இன்சோம்னியா எனப்படுகிற தூக்கமின்மை வியாதியை கொடுத்தது..!! அடிக்கடி அந்த வியாதியால் அவர் அவதிப்படுகிறபோது.. உறக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைப்பதற்காக.. தூக்க மாத்திரைகளை அவர் உட்கொள்வது வழக்கம்..!! அந்த தூக்க மாத்திரைகள் அடைத்து வைத்திருக்கும் டப்பாவை.. இப்போது அலமாரியில் காணவில்லை..!!!!
அதை கவனித்ததுமே பாரதிக்கு திக்கென்று இருந்தது..!! அவ்வளவு நேரம் களைப்பாக இருந்த அவளுடைய மூளை.. இப்போது சுறுசுறுப்பாக எதையோ யோசிக்க ஆரம்பிக்க.. சுருக்கென்று அவளுடைய புத்தியில் அந்த எண்ணம் தைத்தது..!!
“ஒருவேளை.. ஒருவேளை..”
நினைத்துப் பார்க்கும்போதே அவளுக்கு குலைநடுங்கிப் போனது..!! தைல சீசாவை அலமாரியிலேயே போட்டுவிட்டு.. சரக்கென திரும்பி ஓடினாள்.. படிக்கட்டை அடைந்தவள் விழுந்தடித்துக்கொண்டு தடதடவென மேலேறினாள்..!! அவளுடைய முகத்தில் அப்படி ஒரு பதற்றம்.. உடலில் அப்படி ஒரு நடுக்கம்.. மகனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதே என்று அப்படி ஒரு பயம்..!!
“இந்த மீரா சரியான லூஸு மம்மி..!!”
“ஹாஹா.. ஏன்டா அப்படி சொல்ற..??”
“பின்ன என்ன மம்மி.. அடிக்கடி ஏதாவது லூஸுத்தனமா உளர்றா..!! இன்னைக்கு அவ கண்டுபிடிப்பை பாரேன்..!!”
“என்ன..??”
“சூசயிட் பண்ணிக்கிறதுக்கு தூக்க மாத்திரைதான் பெஸ்ட் ஆப்ஷனாம்..!! மத்ததெல்லாம் பெயின்ஃபுல்லாம்..!!”
“ஹாஹா.. கரெக்டாத்தான சொல்லிருக்குறா என் மருமக..!!”
எப்போதோ மகனிடம் பேசி சிரித்தது இப்போது பாரதியின் நினைவில் வர.. அவளுடைய இதயம் கிடந்தது குமுறியது.. கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து நின்றது..!! அழுது வடிகிற கண்களை துடைக்ககூட தோன்றாமல்.. பரபரப்பாய் படிக்கட்டு ஏறினாள்.. அசோக்கின் அறைக்கு விரைந்தாள்..!! ‘கடவுளே.. எம்புள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது..’ என்று வாய்க்குள்ளேயே முனுமுனுத்துக்கொண்டாள்..!!
ம்ம்ம்… அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!!
– தொடரும்
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :