நெஞ்சோடு கலந்திடு – பகுதி 34
ஆஆஆஆஆ…!!!”
இப்போது திவாகர் வலி தாளாமல் அலறினான். திவ்யாவிடம் இருந்து விலகிக் கொள்ள முயன்றான். அவள் கடித்த கடியை விடாமல் இருக்க, ஆவேசமாய் அவளை அப்படியே பின்னால் பிடித்து தள்ளிவிட்டான். திவ்யா தடுமாறிப்போய் பின்புறமாக சரிந்தாள். கால்கள் இடற மெத்தையில் சென்று பொத்தென்று விழுந்தாள். திவாகர் இப்போது உச்சபட்ச ஆத்திரத்தில் இருந்தான். பற்களை கடித்து கத்தினான்.
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“எவ்வளவு திமிர்டி உனக்கு..?? பொட்டச்சி நீ.. உன் வீரத்தை எங்கிட்ட காட்டுறியா..? இப்போ நான் என் ஆம்பளை வீரத்தை காட்டுறேன்.. உன்னால தாங்க முடியுதான்னு பார்க்கலாம்..”
கொக்கரித்த திவாகர் வெறியுடன் திவ்யா மீது பாய்ந்தான். ஆத்திரம் அவன் கண்ணை மறைத்திருந்தது. திவ்யாவின் அழகு மீதிருந்த வெறி அவனை குருடனாக்கியிருக்க வேண்டும். அதனால்தான் திவ்யாவின் கையில் என்ன இருக்கிறது என்பதை கூட அவன் கவனிக்கவில்லை. மெத்தையில் தள்ளிவிடப்பட்ட திவ்யாவின் கையில் இப்போது புதிதாக ஒன்று முளைத்திருந்தது. அது.. திவாகரின் பாக்கெட்டில் செருகியிருந்த பால்பாயின்ட் பேனா..!!
திவ்யா கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. தன் வலது கையில் சிக்கியிருந்த அந்த பேனாவை இறுகப் பற்றினாள். சரக்கென கையை வீசி, தன் மீது பாய்ந்த திவாகரின் முகத்தில் குத்தினாள். வேகமாக வீசப்பட்ட பேனாவின் கூர்மையான முனை, திவாகரின் கன்னத்தில் குத்தி துளையிட்டது. சிவப்பு இரத்தில் ரத்தம், அவன் கன்னத்தில் இருந்து தெறித்து ஓடியது.
அவ்வளவுதான்..!! திவாகர் ‘ஆஆஆஆஆ..!!’ என வலியை தாங்க முடியாமல் அலறினான். கன்னத்தை பிடித்து கத்தியவாறு திவ்யாவின் மீதிருந்து எழுந்தான். கண்களை இறுக்கி மூடிக்கொண்டு காட்டுத்தனமாக கத்தினான். நிற்க முடியாமல் தள்ளாடினான். அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் சராமாரியாக கீழே தள்ளி விட்டான். அப்புறம் கால்கள் இடற.. தரையில் விழுந்து.. கன்னத்தை பிடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தான்.
திவ்யா எழுந்தாள். கீழே கிடந்தது துடிக்கும் திவாகரையே வெறுப்பாக ஒரு பார்வை பார்த்தாள். வலியை தாளாமல் வாய் திறந்து அலறிக் கொண்டிருந்த திவாகரிடம் இறுக்கமான குரலில் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் பென்.. திவாகர்..!!”
தான் முதன்முதலாக திவாகரை பார்த்தபோது வெட்கத்துடன் சொன்ன அதே வார்த்தைகளையே, இப்போது அவர்களது இறுதி சந்திப்பின் இறுதி வார்த்தைகளாய், வெறுப்புடன் உமிழ்ந்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
கேட் திறந்து வெளியேறிய திவ்யா சிட்டாக பறக்க ஆரம்பித்தாள். சுற்றிலும் இருள் அப்பிக் கிடந்தது. எது எந்த திசை என்று அவளுக்கு சுத்தமாக பிடிபடவில்லை. கால்கள் சென்ற திசையில் அசுர வேகத்தில் ஓடினாள். காலில் செருப்பில்லாமல்.. கல்லும், முள்ளும் குத்துவதை பொருட்படுத்தாமல்.. ஓடினாள். அவ்வப்போது திரும்பி, திவாகர் தன்னை தொடர்ந்து வருவானோ என்று பயத்துடன் பார்த்துக்கொண்டே ஓடினாள். அப்படி ஒருமுறை திரும்பி பார்த்தபோதுதான், எதிரே வந்த காரை கவனிக்காமல் குறுக்கே ஓடினாள். கார் உடனே ப்ரேக் அடித்து நின்றும், அதன் மீது மோதி தூக்கி எறியப்பட்டாள்.
அத்தியாயம் 33
சித்ராவும், கார்த்திக்கும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். ஆளுக்கொரு திசையை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். சித்ரா கண்களில் வழிந்த நீரை மீண்டும் ஒருமுறை துடைத்துக் கொண்டாள். கார்த்திக் தாடையை சொறிந்தவாறு தீவிர யோசனையில் இருந்தான்.
சற்றுமுன் ஆபீஸில் இருந்து வீடு திரும்பிய கார்த்திக், மனைவி அமர்ந்திருந்த கோலத்தை கண்டு திகைத்துப் போனான். கண்களில் வழியும் நீரோடு எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து பதறிப் போனான். ‘ஏய்.. என்னடி.. என்னாச்சு.. ஏன் இப்படி உக்காந்திருக்குற..?’ என்று கார்த்திக் கேட்டதுதான் தாமதம். அத்தனை நாட்களாய் அவனிடம் இருந்து மறைத்து வைத்த மொத்த ரகசியத்தையும் சித்ரா அவனிடம் கொட்ட ஆரம்பித்தாள். அசோக்கின் காதல் பற்றி.. திவ்யாவின் காதல் பற்றி.. அசோக்குக்கும், திவ்யாவுக்கும் ஏற்ப்பட்ட பிணக்கு பற்றி.. எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்.
கார்த்திக்கும் எல்லா விஷயங்களையும் அமைதியாக கேட்டுக் கொண்டான். அவனுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக இருந்தன. ‘இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா..’ என நிறைய ஆச்சரியம் அவனுக்கு..!! சித்ரா எல்லாம் சொல்லி முடிக்க.. கார்த்திக் எல்லாம் கேட்டுக்கொள்ள.. அதன் பிறகுதான் இருவரும் இந்தமாதிரி அமர்ந்திருக்கிறார்கள். தொண்டையை செருமிக்கொண்டு கார்த்திக் மெல்ல ஆரம்பித்தான்.
“ம்ம்ம்.. இவ்வளவு நடந்திருக்கு.. எல்லாரும் எங்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்களே..?”
“நான்தான் சொல்றேன்ல.. இது இவ்வளவு சீரியஸா போகும்னு நான் நெனைக்கவே இல்ல..”
“சரி.. பரவால விடு.. இப்போவாவது சொன்னியே..!! ஆமாம்.. இப்போ அவ எங்க போயிருக்கா..?”
“அந்தப்பையனை பாக்கத்தான் போயிருக்கா.. நான் சொல்ல சொல்ல கேட்காம..!!”
“ம்ம்.. வரட்டும்.. நான் அவகிட்ட பேசிக்கிறேன்.. அவ மனசுல என்னதான் நெனச்சிருக்கான்னு தெரியலை..!! ஆளாளுக்கு செல்லம் குடுத்து ரொம்ப கெட்டுப் போயிட்டா..!! வரட்டும்.. நான் இன்னைக்கு நல்லா கேக்குறேன்.. அசோக்கை விட நல்ல பையன் வேற எவன் கெடைப்பான்னு கேக்குறேன்..!!”
“இங்க பாருங்க.. அவகிட்ட கொஞ்சம் பொறுமையா பேசுங்க..!! நான் இறங்கிப்போய் பேசுனா அவ கேட்பான்னு நெனச்சேன்.. ஆனா.. ஆனா அவ.. என்னை கொஞ்சம் கூட மதிக்கலை..!! கடைசி வரை.. மூடுன வாயை தெறக்காமலே போயிட்டா..!! நீங்க கோவப்பட்டு.. அப்புறம் அவ ஏடாகூடமா ஏதாவது முடிவு எடுத்துடப் போறா.. கொஞ்சம் பார்த்து பேசுங்க..!!”
“ப்ச்.. அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ விடு..!! அசோக்கை கட்டிக்க அவளை சம்மதிக்க வைக்கவேண்டியது என் பொறுப்பு..!!”
“அப்படி மட்டும் நீங்க செஞ்சிட்டீங்கன்னா.. என் மனசுல இருக்குற பாரம் இறங்கிடும்.. நிம்மதியா இருப்பேன்..!!”
சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் காலிங்பெல் அடித்தது. உடனே எழப்போன சித்ராவை கார்த்திக் தடுத்தான்.
“நீ இரு.. நான் போய் பாக்குறேன்..”
ஹாலுக்கு வந்து கதவை திறந்த கார்த்திக் அதிர்ந்து போனான். வெளியே அவர்கள் நின்றிருந்தார்கள். திவ்யாவின் கல்லூரி தோழி அஞ்சு, அவளுடைய வழுக்கைத்தலை அப்பா, அவர்கள் தாங்கிப்பிடிக்க நின்றிருந்த சோர்ந்து போன திவ்யா.
“தி..திவ்யா.. திவ்யா என்னாச்சும்மா..?”
கார்த்திக் பதற்றமாக கேட்க, அவள் பதிலளிக்கவில்லை. கண்கள் செருகிப் போய் அண்ணனையே பரிதாபமாக பார்த்தாள். கார்த்திக் அஞ்சுவை ஏற்கனவே அறிந்திருந்தான். ஓரிருமுறை திவ்யாவுடன் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இப்போது அஞ்சுவிடம் திரும்பி கவலையாக கேட்டான்.
“எ..என்னம்மா… என்னாச்சு என் தங்கச்சிக்கு..?”
“பயப்படுறதுக்கு ஒன்னுல்லண்ணா.. கார்ல வந்துட்டு இருந்தோம்.. குறுக்க வந்து விழுந்துட்டா..!! அடிலாம் ஒன்னும் படலை.. எப்படி குறுக்க வந்து விழுந்தேன்னு கேட்டா எதுவும் பேச மாட்டேன்றா..!! கொஞ்சம் பயந்த மாதிரி இருக்குறா.. டயர்டா வேற இருக்குறா.. படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா.. எல்லாம் சரியாப் போயிடும்னு நெனைக்கிறேன்..!!”
கார்த்திக் திவ்யாவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். அதற்குள் உள்ளறைக்குள் இருந்து பதறிப்போய் எழுந்து ஓடிவந்திருந்த சித்ரா, அவளை இன்னொரு பக்கம் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். கார்த்திக்கும், சித்ராவும் கைத்தாங்கலாக திவ்யாவை அழைத்து சென்றார்கள். திவ்யாவுடைய அறைக்கு அழைத்து சென்று அவளை படுக்கையில் படுக்க வைத்தார்கள். தங்கையின் நிலையை தாங்கமுடியாமல் அவளுடைய கன்னத்தை வருடியபடி கார்த்திக் கேட்டான்.
“தி..திவ்யா.. என்னம்மா ஆச்சு..?”
“எனக்கு ஒன்னுல்லண்ணா.. ஐ’ஆம் ஆல்ரைட்..!! என்னை கொஞ்ச நேரம் தனியா.. நிம்மதியா இருக்க விடுங்க.. ப்ளீஸ்..!!”
அதன்பிறகு கார்த்திக் எதுவும் பேசவில்லை. திவ்யாவை அவளுடைய அறையில் விட்டுவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள். சரியான நேரத்தில் வந்து.. திவ்யாவுக்கு உதவி செய்து.. பொறுப்பாக வீட்டில் கொண்டு வந்து ஒப்படைத்த.. அஞ்சுவுக்கும், அவள் அப்பாவிற்கும்.. இருவரும் மனமார நன்றி சொல்லிக் கொண்டார்கள்.
அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து..
சித்ரா வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டாள். சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் இப்போதுதான் கழுவி அடுக்கி வைத்தாள். ஒரு ஜக் நிறைய தண்ணீர் பிடித்துக்கொண்டு கிச்சன் விட்டு வெளியே வந்தாள். தங்கள் பெட்ரூமுக்கு சென்றாள். அதற்குள் தூங்க ஆரம்பித்திருந்த கார்த்திக்கிடம் இருந்து மெலிதான குறட்டை ஒலி வந்துகொண்டிருந்தது. ஜக்கை ஒரு டேபிள் மீது வைத்துவிட்டு தானும் உறங்கலாம் என்றுதான் முதலில் கட்டிலில் அமர்ந்தாள்.
அப்புறம் ஏதோ நினைத்தவளாய் எழுந்துகொண்டாள். தங்கள் அறையை விட்டு வெளியே வந்தாள். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தாள். திவ்யாவின் அறைக்குள் புகுந்தவள், சுவற்றை தேய்த்து குழல்விளக்கை உயிர்ப்பித்தாள். கட்டில் மீது பார்வையை வீசினாள்.
கட்டிலில் திவ்யா குழந்தை மாதிரி தூங்கிக் கொண்டிருந்தாள். வாயை ‘ஓ’வென திறந்து வைத்துக்கொண்டு, அசந்து போய் நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். அவளுக்கு அருகே சென்ற சித்ரா சில வினாடிகள் அவளுடைய மாசுமருவற்ற முகத்தையே அமைதியாக பார்த்தாள்.
‘என்னாயிற்று இவளுக்கு..? ஏன் இப்படி இருக்கிறாள்..? கசக்கிப்போட்ட காகிதமாய் வந்து கிடக்கிறாளே..? என்னாயிற்று என்று கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாள்..!! ரொம்பத்தான் நெஞ்சழுத்தம் இவளுக்கு..!! இல்லாவிட்டால், நான் அவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசியும் வாயை இறுக்க மூடிக் கொண்டிருப்பாளா..? அப்படி என்ன பிடிவாதம் இவளுக்கு..?? அழுத்தக்காரி.. ராட்சஸி..!!’
மனதுக்குள் திவ்யாவை திட்டியவாறே, ஓரமாய் கிடந்த போர்வையை எடுத்து, சித்ரா திவ்யாவுக்கு போர்த்தி விட்டாள். அவளுடைய கால்களை மென்மையாக உயர்த்தி அதனடியில் ஒரு தலையணையை திணித்தாள். அறை வாசலை நோக்கி நடந்தாள். விளக்கை அணைக்க சித்ரா கையை உயர்த்திய போதுதான், அவளுக்கு பின்னால் இருந்து ஈனஸ்வரத்தில் அந்த குரல் கேட்டது.
“அண்ணீ..!!!!!”
சித்ராவுக்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை. ‘எங்கிருந்து வருகிறது இந்தக்குரல்..?’ மெல்ல திரும்பி பார்த்தாள். படுக்கையில்.. உறங்கியிருந்த திவ்யா இப்போது விழிகளை திறந்திருந்தாள். ஆனால் இன்னும் அந்த விழிகள் சோர்வாகவே செருகியிருந்தன. ‘இவளா அப்படி அழைத்தாள்..?’ என சித்ரா திகைத்துக் கொண்டிருக்கும்போதே, திவ்யா மீண்டும் சித்ராவை அழைத்தாள்.
“அண்ணீ..!!!!!”
அவ்வளவுதான்..!! சித்ரா அப்படியே சிலிர்த்துப் போனாள்..!! ஜிவ்வென்று உடம்பெல்லாம் புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி ஒரு சிலிர்ப்பு அவளுக்கு..!! முதன்முறையாக யாரோ அவளை அப்படி அழைக்கிறார்கள்..!! இத்தனை நாட்களாய் தன்முன் வாய்திறக்காமலே இருந்த திவ்யா, முதன்முறையாக அவளை அழைக்கிறாள்.. அன்பு ஒழுக..!! அதுவும் பசியாகிப்போன கன்று ஒன்று தாய்ப்பசுவை அழைப்பது போல, ஏக்கமாக அழைக்கிறாள்..!! எப்படி இருக்கும் சித்ராவுக்கு..?? அவளுடைய கண்கள் பட்டென கலங்கிப் போயின. சிலிர்த்துப்போன உடல் இப்போது வெடவெடவென நடுங்கியது..!! அதற்குள் திவ்யா படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து..
“என்னை மன்னிச்சுடுங்க அண்ணி..!!”
என்று ஒரு கையை நீட்டி பரிதாபமாக சொல்லவும், சித்ரா அப்படியே உருகிப் போனாள். ஓடிப்போய் அவளை வாரி அணைத்துக் கொண்டாள். அழுகையை அடக்க முடியாமல், தழதழத்த குரலில் சொன்னாள்.
“ஏய்.. ச்சீய்.. என்னடி நீ..?? நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற..?? நீ என்ன தப்பு செஞ்ச..??”
“இல்ல அண்ணி.. நான் நெறைய தப்பு பண்ணிட்டேன்..!! யார் நல்லவங்க.. யார் கெட்டவங்கன்னு கூட புரிஞ்சுக்காம.. நெறைய தப்பு பண்ணிட்டேன்..!! எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்திட்டேன்..!!” சொல்லும்போதே திவ்யாவின் கண்களில் நீர் ஒழுக ஆரம்பித்தது.
“ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல திவ்யா..!! அழாத.. கண்ணை தொடைச்சுக்கோ ..!!” சொன்ன சித்ரா அவளே திவ்யாவின் கண்களை துடைத்தாள்.
“உ..உங்களைக்கூட இத்தனை நாளா நான் புரிஞ்சுக்கலை அண்ணி..”
“ஐயோ.. அதெல்லாம் எதுக்கு இப்போ.. நீ எங்கிட்ட பேசுறதே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?”
“எனக்கு உங்ககிட்ட பேசனும்னுதான் ஆசை அண்ணி.. ஆனா.. ஏதோ ஒன்னு வந்து என்னை தடுத்துடும்..!! சின்ன வயசுல நாம போட்ட சண்டை.. உங்க கூட பேசமாட்டேன்னு நான் சில்லித்தனமா போட்ட சபதம்..!! அந்த சபதத்தை எப்படியாவது காப்பாத்தனும்னு ஏதோ ஒரு பிடிவாதம்.. மத்தபடி உங்கமேல எனக்கு எந்த கோவமும் இல்ல அண்ணி..!!”
“எனக்கு தெரியும் திவ்யா.. எனக்கு தெரியும்..!!”
சித்ரா திவ்யாவை அணைத்துக்கொண்டாள். இருவரும் ஒருவர் தோளில் இன்னொருவர் முகம் சாய்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். சித்ரா ஆதரவாக திவ்யாவின் முதுகை வருடிக் கொடுக்க, திவ்யா அமைதியாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். சில வினாடிகள்..!! அப்புறம் திவ்யா திடீரென கேட்டாள்.
“அசோக் என் மேல கோவமா இருக்கானா அண்ணி..?”
“ச்சேச்சே.. அப்டிலாம் ஒண்ணுல்ல..”
“இல்ல.. அவனுக்கு என் மேல கோவம் இருக்கும்.. உங்ககிட்ட சொல்லிருக்க மாட்டான்..!! அழுத்தக்காரன்.. அவன் லவ்வையே இத்தனை நாளா எங்கிட்ட சொல்லாம மறைச்சவன்தான..?”
“ப்ச்.. நான்தான் சொல்றேன்ல..? அவனுக்கு உன் மேல கோவம்லாம் ஒண்ணுல்ல திவ்யா..!!”
“இருக்கும் அண்ணி.. கண்டிப்பா இருக்கும்..!! நான் அவனை என்னெல்லாம் சொல்லிட்டேன்..? செருப்பால அறைஞ்ச மாதிரி எப்படிலாம் பேசிட்டேன்..? அவன் எப்படி துடிச்சு போயிருப்பான்..?? கண்டிப்பா அவனுக்கு என் மேல கோவம் இருக்கும்..!!” திவ்யா அழுதவாறே சொல்ல,
“ச்சே.. என்ன பேசுற நீ..? அ..அவன்.. அவனுக்கு உன் மேல கோவமே வராது திவ்யா.. அவன் உன் மேல எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கான்னு உனக்கு தெரியாது..!!”
“தெரியும் அண்ணி.. என் மேல அவன் உயிரையே வச்சிருக்கான்.. எனக்கு நல்லா தெரியும்..!! அதான்.. அவனை காயப்படுத்திட்டேன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!”
“நீ தேவையில்லாம மனசை போட்டு கொழப்பிக்கிற திவ்யா.. அதுக்குலாம் அவசியமே இல்ல..!!”
“இல்ல அண்ணி.. அவன் இதுவரை எனக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கான்.. எனக்கு சிரிப்பும், சந்தோஷமும் மட்டுந்தான் கொடுத்திருக்கான்..!! ஆனா நான் அவனுக்கு கொடுத்ததுலாம்.. கஷ்டமும், வலியும், வேதனையுந்தான்..!! அவன் என்னை ஏத்துப்பான்ல அண்ணி..?” திவ்யா பரிதாபமாக கேட்க, சித்ரா உருகிப் போனாள்.
“ஏய்.. தி..திவ்யா..”
“நான் அவன் கால்ல விழுந்து கெஞ்சினா.. என்னை ஏத்துப்பான்ல அண்ணி..?” திவ்யா உடைந்து போய் அழுதாள்.
“ப்ச்.. பைத்தியம் மாதிரி ஏதாவது உளறாத திவ்யா..!! நீ ஏதோ ரொம்ப கொழம்பி போய் இருக்குற.. பேசாம படுத்து தூங்கு..!! காலைல அவனைப் பாத்து பேசு.. காலுலாம் ஒன்னும் விழ வேணாம்.. உன் மனசுல இருக்குறதை சொல்லு.. அவன் உன்னை தலைல தூக்கி வச்சு ஆடுவான்.. அதுக்கு அண்ணி உத்திரவாதம் தர்றேன்.. சரியா..? இப்போ தூங்கு..!!”
சித்ரா திவ்யாவை படுக்க வைத்தாள். போர்வை போர்த்தி விட்டாள். அவளுடைய கூந்தலை இதமாக தடவிக் கொடுத்தாள். கொஞ்ச நேரத்திற்கு திவ்யாவின் முகத்தையே கண்கள் கொட்டாமால் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் எழுந்து கொண்டாள். அறையை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் அவள் நகர முயல, திவ்யா இப்போது அவளுடைய கையை எட்டி பற்றினாள்.
சித்ரா நின்றாள். எதுவும் புரியாமல் திரும்பி பார்த்தாள். ‘என்ன..?’ என்பது போல திவ்யாவை ஏறிட்டாள். திவ்யா எதுவும் பேசவில்லை. தனது வலது கையில் இருந்த அந்த தழும்பை தடவிக் காட்டினாள். சித்ரா இன்னும் குழப்பமாய் திவ்யாவையே பார்க்க.. திவ்யா இப்போது முகத்தில் ஒரு அழகான ஸ்நேக புன்னகையுடன் சொன்னாள்.
“சின்ன வயசுல என் கைல பட்ட சூடு..!! அந்தக்காயம் இப்போ ஆறிடுச்சு அண்ணி.. எனக்கு இப்போ வலிக்கலை..!!”
இப்போது சித்ராவும் கண்களில் நீர் துளிர்க்க திவ்யாவைப் பார்த்து புன்னகைத்தாள். திவ்யாவின் தலை முடியை லேசாக கலைத்துவிட்டவள், இதமான குரலில் சொன்னாள்.
“லூசு.. நிம்மதியா படுத்து தூங்குடி..!!”
சித்ரா திரும்பி நடந்தாள். கண்களில் வழிந்த நீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டாள். மறுகையால் விளக்கை அணைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :