நெஞ்சோடு கலந்திடு – பகுதி 35

அத்தியாயம் 34

அடுத்த நாள் காலை..

அசோக் அக்காவின் வீட்டிற்குள் நுழைந்தபோது, கார்த்திக் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்ததும் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த கார்த்திக்குக்கு, பதிலுக்கு ஒரு புன்னகையை தந்தான். ஹாலை கடந்து உள்ளே சென்று கிச்சனுக்குள் நுழைந்தான். ஸ்டவ்வில் பால் கொதிப்பதை பார்த்துக் கொண்டிருந்த அக்காவிடம் சற்றே எரிச்சலாக கேட்டான்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“என் டைரியை எடுத்துட்டு வந்தியா..?”

“டைரியா.. எந்த டைரி..?”

“ப்ச்.. தெரியாத மாதிரி நடிக்காத.. நீதான் எடுத்துட்டு வந்தேன்னு செல்வாண்ணா சொல்லிட்டாரு..!!”

“ஓ.. அதுவா..? அதுக்காகவா இப்படி அரக்கப்பரக்க ஓடியாற..? சரி.. காபி போடுறேன்.. சாப்பிடுறியா..?”

“அதுலாம் ஒன்னும் வேணாம்.. டைரியை எடுத்துட்டு வா..”

“கொஞ்சூண்டு பால் மிச்சம் இருக்குடா.. வேஸ்டா போயிடும்.. போடுறேன்.. சாப்பிடு..!!”

“ப்ச்.. மொதல்ல என் டைரியை எடுத்துக்குடுக்கா..!!”

“ஐயையையே..!! காலாங்காத்தாலேயே கால்ல வெண்ணித்தண்ணியை ஊத்திக்கிட்ட மாதிரி.. டைரி டைரின்னுக்கிட்டு..!! இப்போ அந்த டைரியை வாங்கிட்டுப்போய் என்ன பண்ணப்போற..? ‘ஐ லவ் யூ திவ்யா.. ஐ லவ் யூ திவ்யா..’ன்னு கிறுக்காம இருக்க முடியலையோ..??”

“அதுக்கில்ல.. அதுல ஒரு ஃபோன் நம்பர் நோட் பண்ணி வச்சேன்.. அது வேணும்..!!”

“ஓஹோ..?? இரு காபி போட்டுட்டு போய் எடுத்துட்டு வர்றேன்..!!”

“நீ மொதல்ல போய் எடுத்துட்டு வா.. நான் உடனே கால் பண்ணனும்..!!”

“ஏண்டா இப்படி பறக்குற..?? சரி.. எடுத்துட்டு வர்றேன்.. நீ எங்கயும் போயிடாத.. இங்கயே இரு.. ஸ்டவ்வை பாத்துக்கோ..!! பால் பொங்கிடுச்சுன்னா.. ஆஃப் பண்ணிடு..!!”

“சரி சரி.. பாத்துக்குறேன் பாத்துக்குறேன்..!!” என்றவன், சற்றே குரலை தாழ்த்திக்கொண்டு,

“ஆமாம்.. அவ இல்லையா..?” என்று அக்காவிடம் கேட்டான்.

“எவ..?”

“நான் எவளை கேட்பேன்..?”

“திவ்யாவா..? வெளில போயிருக்கா..!!”

சொல்லிவிட்டு சித்ரா கிச்சனை விட்டு வெளியேற, அசோக் ஸ்டவ்வை கவனிக்காமல், கப்போர்டுகளில் அடுக்கி வைத்திருந்த டப்பாக்களை பார்வையிட்டான். அதில் முந்திரிப்பருப்பு போட்டு வைத்திருந்த டப்பாவை எடுத்து, உள்ளங்கை நிறைய கொட்டிக் கொண்டான். கொறிக்க ஆரம்பித்தான். வேறென்னவெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான்.

கிச்சனை விட்டு வெளியே வந்த சித்ரா நேராக சென்று, திவ்யாவின் அறைக்குள் நுழைந்தாள். திவ்யா அப்போதுதான் குளித்து முடித்து ஃப்ரஷாக இருந்தாள். கூந்தலை பின்னிக் கொண்டிருந்தாள். சித்ராவை பார்த்ததும், ‘வாங்க அண்ணி..’ என்று புன்னகைத்தாள். சித்ராவும் ஒரு ஸ்நேக புன்னகையை அவளிடம் வீசிவிட்டு, உள்ளே நடந்து சென்று.. திவ்யாவின் படுக்கையில்.. தலைமாட்டுக்கு அருகே கிடந்த அந்த டைரியை எடுத்தாள்..!! அதைப்பார்த்த திவ்யா, உடனே சற்றே ஏக்கமாய் கேட்டாள்.

“ஏன் அண்ணி.. அது என்கிட்டயே இருக்கட்டுமே..?”

“அவன் டைரியை வாங்கிட்டு போக வந்திருக்கான்..”

“அ..அசோக் வந்திருக்கானா..?” திவ்யா ஒருமாதிரி உற்சாகமும், பதற்றமும் ஒன்று சேர்ந்தமாதிரியான குரலில் கேட்டாள்.

“ம்ம்.. வந்திருக்கான்..!! உன்னைப்பத்தி கேட்டான்.. நீ வீட்டுல இல்லைன்னு சொல்லிருக்கேன்.. நீ இருக்கேன்னு தெரிஞ்சா.. உடனே ஓடிப்போயிடுவான்..!! அதான்.. பொய் சொன்னேன்..!!”

“ம்ம்.. என் மேல அவ்ளோ கோவமா அவனுக்கு..?”

“ஐயோ.. ஐயோ..!! கோவம்லாம் ஒன்னும் இல்ல திவ்யா.. நீ வந்து பேசிட மாட்டியான்னு.. அவன் ஒவ்வொரு செகண்டும் துடிச்சுக்கிட்டு இருக்கான்.. நீ என்னடான்னா..!! சரி.. நான் வேணா ஒன்னு பண்ணவா..? திவ்யா உன்கிட்ட ஏதோ பேசனுமாம்னு.. உன் ரூமுக்கு அவனை அனுப்பி வைக்கவா.. பேசுறியா அவன்கிட்ட..??”

“இல்ல அண்ணி.. வேணாம் வேணாம்.. நான் அப்புறமா பேசிக்கிறேன்..!!” திவ்யா பதற்றமாக சொல்ல, சித்ரா அவளை பரிதாபமாக பார்த்தாள்.

“சரி உன் இஷ்டம்..!! உன் மனசுல இருக்குறதை நீயே மொதல்ல அவன்கிட்ட சொல்லு.. அதுவரை நான் ஒன்னும் சொல்லலை..!! சரியா..??”

“ம்ம்.. சரி அண்ணி..!!”

சித்ரா அந்த அறையை விட்டு வெளியேறினாள். டைரியுடன் கிச்சனுக்குள் நுழைந்தாள். நுழைந்தவள் உடனே பதறிப்போனாள். ஸ்டவ்வில் வைத்திருந்த பால் கொதித்து, பொங்கி வழிந்து கொண்டிருந்தது. கவனித்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றிருந்த அசோக்கோ, கப்போர்டை நோண்டிக் கொண்டிருந்தான். எரிச்சலான சித்ரா, ஒரு கையால் ஸ்டவ்வை ஆஃப் செய்துகொண்டே, அடுத்த கையால் அசோக்கின் தலையில் ஓங்கி குட்டினாள்.

“ஆஆஆ..!! ஏன்க்கா கொட்டுற.. வலிக்குது..!!”

“ஸ்டவ்வை பாத்துக்க சொல்லிட்டு போனா.. அங்க என்ன பாத்துட்டு இருக்குற..?”

“முந்திரிப்பருப்பு கெடைச்சது.. பாதாம் பருப்பு இருக்குமான்னு பாத்துட்டு இருந்தேன்..!!”

“உனக்கு இருக்குற கொழுப்புக்கு பாதாம் பருப்பு ஒண்ணுதான் பாக்கி..!! இந்தா.. உன் டைரி..!!”

“தேங்க்ஸ்க்கா..!!” டைரியை வாங்கிக்கொண்டு அசோக் கிச்சனை விட்டு வெளியேற,

“ஏய்.. போயிடாதடா..!! காபி போட்டுட்டேன்.. குடிச்சுட்டு போ..!!” சித்ரா கத்தினாள்.

“போடு போடு..!!”

சலிப்பாக சொன்ன அசோக், ஹாலுக்கு வந்தான். கார்த்திக்குக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். டைரியின் கடைசி பக்கத்தை புரட்டினான். அதில் குறித்திருந்த நம்பருக்கு செல்போனை எடுத்து கால் செய்தான். கால் பிக்கப் செய்யப்படவில்லை. மீண்டும் ஒருமுறை முயன்று தோற்றான். அப்புறம் சலிப்படைந்தவனாய் முயற்சியை கைவிட்டு செல்போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். வரப் போகும் காபிக்காக காத்திருந்தான்.

அப்படி காத்திருக்கும் போதுதான் அதை கவனித்தான். திறந்து வைக்கப்பட்டிருந்த டைரியின் காகிதங்கள் காற்றில் படபடக்க, இப்போது வேறொரு பக்கம் விரிந்திருந்தது. அந்தப்பக்கத்தில் ஆங்காங்கே அவனுடைய கிறுக்கலை தவிர இப்போது வேறு சில கிறுக்கல்கள்..!! திவ்யாவின் கையெழுத்தில்.. ‘ஐ லவ் யூ டா அசோக்.. ஐ லவ் யூ டா அசோக்..’ என்று..!!

அசோக்கிற்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை. ‘எப்படி இது சாத்தியம்..? திவ்யாவா இப்படி எல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறாள்..? அப்படியானால்.. அவள் தன் மனதை மாற்றிக் கொண்டாளா..? நிஜமாகவா..? திவ்யாவிடம் அக்கா பேசுவாள் என்று தெரியும்.. ஆனால்.. திவ்யா அவளை எல்லாம் மதிக்கவே மாட்டாள் என்றுதானே எண்ணியிருந்தேன்..? ஒருவேளை அக்கா பேசிபேசி திவ்யாவின் மனதை மாற்றி விட்டாளோ..? என் அக்காவுக்குள் இவ்வளவு திறமையா..? அதுசரி.. திவ்யா மனம் மாறியிருந்தால், அதை ஏன் இன்னும் என்னிடம் சொல்லவில்லை..?’

அசோக்கிற்கு குழப்பமாய் இருந்தது. ஆனால்.. அதேநேரம் அவனுடைய உடம்பெல்லாம் பரவசமாய் ஒரு உணர்ச்சி பரவுவதையும் அவனால் உணர முடிந்தது. ‘இது மட்டும் உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும்..? திவ்யா என் காதலை புரிந்துகொண்டு என்னை ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்கும்..? அப்படி மட்டும் நடந்துவிட்டால்.. அதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்கும்..?’

“இந்தாடா காபி..”

சித்ரா அசோக்கின் கவனத்தை காபி நீட்டி கலைத்தாள். அசோக் காபியை வாங்கி அமைதியாக உறிஞ்ச ஆரம்பித்தான். சித்ராவும் இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டு காபியை அருந்தினாள். இவர்கள் ஹாலில் அமர்ந்து பேசுவதை எல்லாம், திவ்யா அவளுடைய அறைக்குள் இருந்தவாறு காதுகளை கூர்மையாக்கி கவனித்துக் கொண்டிருந்தாள். காபியை உறிஞ்சியவாறே அசோக் கார்த்திக்கிடம் கேட்டான்.

“நீங்க காபி சாப்பிடலையா அத்தான்..?”

“ஹாஹா.. நான் அப்போவே சாப்பிட்டேன் அசோக்..!!” கார்த்திக் இளிக்க, சித்ரா இப்போது இடைமறித்து இடக்காக சொன்னாள்.

“உன் அத்தான் காலைல பெட்ல இருந்து எந்திரிச்சதும்.. பல்லு கூட வெளக்காம.. அந்த காபியை அப்படியே ரசிச்சு ரசிச்சு உறிஞ்சுவாறு பாரு..!! அடா அடா.. அதை பாக்குறதுக்கு ஆயிரம் கண் பத்தாது..!!”

சித்ராவின் நக்கலில் கார்த்திக் பட்டென முகம் சுருங்கிப் போனான். வெட்கப்பட்டுக்கொண்டு தன் முகத்தை ந்யூஸ் பேப்பருக்குள் புதைத்துக் கொண்டான். சித்ரா திரும்பி அசோக்கிடம் கேட்டாள்.

“அது சரி.. நீ ஏதோ கால் பண்ணனும்னு சொன்னியே.. பண்ணிட்டியா..?”

“பண்ணுனேன்.. யாரும் எடுக்க மாட்டேன்றாங்க..!!”

“ம்க்குக்கும்.. இதுக்காகத்தான் காலங்கத்தால வந்து டைரி டைரின்னு டான்ஸ் ஆடுனியாக்கும்..?”

“இல்லக்கா.. இன்னைக்கு எனக்கு நெறைய வேலை இருக்கு..!!”

“என்ன வேலை..?”

“ஜெர்மன் எம்பஸிக்கு போகணும்..!!”

“எதுக்கு..?”

“என்னோட விசா ப்ராசிங்ல ஏதோ சிக்கலு.. அதான்..!!” அசோக் சொல்ல இப்போது கார்த்திக் அவனிடம் கவலையாக கேட்டான்.

“விசாவா..? என்ன அசோக்.. ஆன்சைட் போறதுன்னு முடிவே பண்ணிட்டியா..??”

“ம்ம்.. ஆமாம்த்தான்.. முடிவு பண்ணிட்டேன்..!!” அசோக் இங்கே சொல்ல, உள்ளே கேட்டுக்கொண்டிருந்த திவ்யாவுக்கோ சுருக்கென்று இருந்தது.

“மூணு வருஷம்ல..?”

“ஆமாம்த்தான்.. கொஞ்சம் எக்ஸ்டன்ட் ஆனா கூட ஆகலாம்..”

“எப்படி அசோக்.. மூணு வருஷம்.. எங்களைலாம் விட்டுட்டு இருந்துடுவியா..?”

“கஷ்டந்தான்.. ஆனா இருந்துடுவேன்.. வருஷத்துக்கு ஒரு தடவை வந்துட்டு போவேன்த்தான்.. ஒன்னும் பிரச்னை இல்ல..!!” அசோக் கார்த்திக்கிடம் சொல்லிக்கொண்டிருக்க, சித்ரா இப்போது இடையில் புகுந்தாள்.

“இவன்கிட்ட இப்படி கேட்க கூடாதுங்க.. வேற மாதிரி கேக்கணும்..”

“வேற மாதிரின்னா எப்படி..?” அசோக் அக்காவை முறைத்தான்.

“மூணு வருஷம் திவ்யாவை விட்டு இருந்துடுவியா..?”

“ஏன்..? இருந்தா என்ன..?”

“ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு..!!”

“என்ன சொல்ல சொல்ற..? அவ கொரங்கு மூஞ்சியை பாக்க சகிக்காமத்தான் நான் ஆன்சைட்டே போறேன்.. போதுமா..??”

“அடப்பாவி..!!”

சித்ரா இங்கே வாய்பிளக்க, உள்ளே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவுக்கு சுருசுருவென இருந்தது. ‘ம்ஹூம்.. இதை இப்படியே விடக் கூடாது..!! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்..?’ திவ்யா ஓரிரு விநாடிகள்தான் யோசித்திருப்பாள். உடனே துணிச்சலாக ஒரு முடிவுக்கு வந்தாள். பின்னிய கூந்தலை தூக்கி பின்னால் போட்டுவிட்டு விருட்டென்று எழுந்தாள். தன் அறையில் இருந்து வெளிப்பட்டு ஹாலை நோக்கி ஒரு வீர நடை நடந்து வந்தாள்.

தூரத்தில் திவ்யா முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு வருவதை கவனித்த அசோக் பதறிப் போனான். ‘இவ்வளவு நேரம் உள்ளேதான் இருந்தாளா இவள்..? ஐயையோ..!!’ பதறியவன், கிசுகிசுப்பான குரலில் அக்காவிடம் கேட்டான்.

“என்னக்கா.. வெளில போயிருக்கான்னு சொன்ன..?”

“ம்ம்.. சும்மா.. பொய் சொன்னேன்..!!”

சித்ரா கூலாக சொல்லிவிட்டு காபியை உறிஞ்சினாள். அதற்குள் திவ்யா ஹாலுக்குள் நுழைந்திருந்தாள். வந்தவள் நேராக சென்று சித்ராவுக்கு அருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டாள். அசோக்கை ஒருமுறை ஏறிட்டு பார்த்து, அப்புறம் ‘ம்ஹ்ம்..’ என்று முகத்தை சிலுப்பிக் கொண்டாள்.

“குடிச்சது போதும் அண்ணி.. குடுங்க..!!” என்று சித்ராவின் கையில் இருந்த காபியை பறித்தாள்.

“ஏய்.. ஏய்.. எச்சிடி இது..” என்று சித்ரா பதறினாள்.

“பரவால.. குடுங்க..!!”

கேஷுவலாக சொன்ன திவ்யா, சித்ரா சாப்பிட்ட மிச்ச காபியை வாங்கி உறிஞ்ச.. அசோக்கும், கார்த்திக்கும் அதிர்ந்து போய்.. வாயை பிளந்தார்கள்..!! ‘காண்பதெல்லாம் கனவா நனவா..?’ என குழம்பிப் போனவர்கள், கண்ணிமைக்க கூட மறந்து போய் விழிகள் விரிய அமர்ந்திருந்தார்கள்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு கார்த்திக் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தான். மற்ற மூவரும் பேசிக்கொண்டார்கள். ஆனால்.. அசோக்கும், திவ்யாவும் ஒருவருக்கொருவர் நேரிடையாக பேசிக்கொள்ளவில்லை. இருவரும் சித்ராவிடம்தான் பேசினார்கள். திவ்யாதான் முதலில் ஆரம்பித்தாள்.

“என்ன ஆச்சு அண்ணி உங்க தம்பிக்கு..? கோணவாயன் கொட்டாவி விட்ட மாதிரி உக்காந்திருக்கான்..??”

“தெரியலையே திவ்யா.. எதையோ பாத்து பயந்தவன் மாதிரி இருக்கான்..”

“பயமா.. எனக்கா..? அதுலாம் ஒன்னும் கெடயாது..” அசோக் இடையில் புகுந்து சொன்னான்.

“வேற என்னதான் பிரச்னையாம் அவனுக்கு..?”

“எனக்கு என்ன பிரச்னை..?”

“அப்புறம் எதுக்கு ஊரை விட்டு ஓடுறான்னு கேளுங்க அண்ணி..”

“ஹாஹா.. ஆன்சைட் போறதுக்கு பேரு.. ஊரை விட்டு ஓடுறதா.. கேளுக்கா..!!”

“அவன் எங்க வேணா போகட்டும்.. எதுக்கு என் மூஞ்சியை பாக்க சகிக்காம போறதா சொல்லணும்..? அதுவும் கொரங்கு மூஞ்சியாம்.. என் மூஞ்சியை பாத்தா கொரங்கு மாதிரியா இருக்கு..? மொதல்ல அவன் மூஞ்சியை ஒழுங்கா கண்ணாடில பாக்க சொல்லுங்க அண்ணி..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments