ஆண்மை தவறேல் – பகுதி 41

நந்தினி உதட்டில் புன்னகையும், கேலியுமாக கேட்டாள். அசோக் அவளையே உர்ரென்று முறைத்துக் கொண்டிருந்தான். நந்தினி இப்போது எழுந்து, கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள். தன் கணவனை நெருங்கி அவனுடைய கண்களை குறுகுறுவென பார்த்தவாறு கேட்டாள்.

“கூட்டிட்டு வந்தவளை ஏன் திரும்ப அனுப்பிச்சிட்டீங்க மிஸ்டர்..?? ம்ம்..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“அதெதுக்கு உனக்கு..??”

“சும்மா.. தெரிஞ்சுக்கணும்னு ஆசை..!! சொல்லுங்களேன்..!!”

“எ..எனக்கு புடிக்கலை.. அனுப்பிச்சுட்டேன்..!!”

“அதான்.. திடீர்னு ஏன் புடிக்காம போச்சுன்னு கேட்டேன்..??” நந்தினி துளைத்தெடுக்க, அசோக் கடுப்பானான்.

“ப்ச்.. அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல..!!” அசோக் சீற,

“சரி.. சொல்லாட்டா போங்க..!! என்ன காரணம்னு எனக்கு நல்லா தெரியும்..!!” நந்தினி கூலாக சொன்னாள்.

“என்ன காரணம்..??”

“அதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல..!!”

அசோக் சொன்னதையே அவனுக்கு திருப்பி கொடுத்துவிட்டு, நந்தினி புருவத்தை உயர்த்தி காட்டி புன்னகைத்தாள். அவளுடைய சீண்டலிலும் கிண்டலிலும் அசோக் இப்போது களைத்துப் போனான். இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி நந்தினியையே சில வினாடிகள் சலிப்பாக பார்த்தான். அப்புறம் தலையை அசைத்து ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு,

“உன்கிட்ட போராட எனக்கு நேரம் இல்ல.. வழியை விடு.. நான் கெளம்புறேன்..!!”

என்று வாசலை நோக்கி நகரப் போனான். நந்தினி இப்போது அவசரமாக தன் இடது கையை அவனுக்கு குறுக்காக நீட்டி, சுவற்றில் ஊன்றி, அவன் செல்லும் வழியை மறித்தாள். கணவனை ஏறிட்டு கண்களிலும், உதட்டிலும் ஒரு ஒருவித ஏளனத்தை சிந்தினாள்.

“என்ன..??” என்றான் அசோக் முறைப்பாக.

நந்தினி இப்போது அசோக்கையே விழுங்கி விடுவது போல பார்த்தாள். அவளுடைய முகமெல்லாம் ஒருவித குறும்பு கொப்பளித்துக் கொண்டிருந்தது. சில வினாடிகள் அவ்வாறு பார்த்தவள், அப்புறம் அவளுடைய வலது கையால் அசோக்கின் கன்னத்தை பிடித்து, குழந்தையை கொஞ்சுவது மாதிரி குழைவாக சொன்னாள்.

“அச்சோ.. பாவம் புள்ளை.. நைட்டு ரொம்ப ஏமாந்து போயிடுச்சா..??”

“ப்ச்..” அசோக் சலிப்பாக அவளுடைய கையை தட்டிவிட்டான்.

“சும்மா இருந்த புள்ளையை நான்தான் கெளப்பி விட்டுட்டேன்.. இல்ல..??”

“ம்ம்..”

“நானே இப்போ அதை சரி பண்ணிடவா..??” நந்தினி குழைவாக கேட்க,

“என்னது..??” அசோக் முகத்தை சுளித்தான்.

“புரியலையா..?? வாட் அபவுட் ஹேவிங் யுவர் பொண்டாட்டி இன் தேட் பெட்..??”

நந்தினி ஓரக்கண்ணால் அந்த படுக்கையை பார்த்தவாறே குறும்பாக கண்சிமிட்ட, அசோக் இப்போது உச்சபட்ச எரிச்சலை எட்டினான். மனைவியை உஷ்ணமாக முறைத்தவன், சுவற்றில் ஊன்றியிருந்த அவளுடைய கையை வலுவாக பற்றி, அப்படியே வளைத்து, ஒரு முறுக்கு முறுக்கினான்.

“ஆஆஆஆஆஆ…!!!”

நந்தினி கத்திக்கொண்டே படக்கென அந்தப்பக்கமாய் சுழன்றாள். அவளுடைய இடது கை, அவளுக்கு பின்பக்கமாக, அசோக்கின் இரும்புப்பிடியில் சிக்கியிருந்தது. கை அதிகம் வலிக்காமல் இருப்பதற்காக அவள் சற்று பின்னோக்கி நகர வேண்டியிருந்தது. நந்தினி அவ்வாறு நகர, அவளது பின்புறம் அசோக்கின் இடுப்புக்கு கீழே வந்து மெத்தென்று அழுந்தியது. அவளுடைய கூந்தல் வாசனை அசோக்கின் நாசிக்குள் புகுந்தது. அவளது காது மடலும், வழவழப்பான பின்கழுத்தும், செழுமையான தோளும்…!! அவளுடைய அழகு அசோக்கின் கண்களை பளிச்சென தாக்கியது. அவளோ வலி தாளாமல் அலறினாள்.

“ஆஆஆஆ… வலிக்குதுப்பா..!! உங்களுக்கு புடிக்கனும்னா.. வேற எதையாவது புடிச்சு தொலைங்க..!! கையை விடுங்க..!!”

அந்த நிலையிலும் அவள் சீண்ட, அசோக் மேலும் டென்ஷனானான். முறுக்கியிருந்த அவளுடைய கைக்கு மேலும் சற்று அழுத்தம் கொடுத்தான். நந்தினி இப்போது வேதனையில் துடித்தாள்.

“ஆஆஆஆஆஆ…!!!”

“கொழுப்புடி உனக்குலாம்..!!” அசோக் பற்களை கடித்துக்கொண்டு சொன்னான்.

“ஆஆ.. எனக்கென்ன கொழுப்பு..??”

“அந்த நாயர்ட்ட போய்.. நம்ம மேட்டர்லாம் சொல்லி பொலம்பிருக்குற..?? அவன் கெட்ட கேட்டுக்கு.. ஒரு பேக்கரியை ஆரம்பிச்சுட்டு.. அவன்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணுறான்..!!”

“அவர்கிட்ட பொலம்பலாம் ஒன்னும் இல்ல..!! மேட்டரை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! அந்த ஆளுக்கு கொஞ்சமாவது புத்தி இருந்தது.. சொன்னதுமே திருந்திட்டாரு..!!”

அவளுடைய பதிலில் இருந்த குத்தலை உடனே புரிந்து கொண்ட அசோக், மீண்டும் அவள் கைக்கு ஒரு அழுத்தம் கொடுத்தான். நந்தினி மீண்டும் துடித்தாள்.

“ஆஆஆஆஆஆ…!!!”

“உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா.. இந்த வேலைலாம் பண்ணிருப்ப..??”

“இதுல என்ன திமிரு இருக்கு..??”

“இத்தனை நாளா நான் சொன்னதை கேட்டுட்டு இருந்தவனை.. எனக்கு எதிரா திருப்பி விட்டுருக்குற..!! அந்த தைரியத்துல எங்கிட்ட வந்து உன் உடம்பை காட்டி சீண்டி விளையாடுற..!! இதுலாம் திமிர் இல்லாம வேற என்ன..??”

“நான் ஒன்னும் உங்களை சீண்டி விளையாடலை..!! ப்ச்.. கையை விடுங்கப்பா..!!”

நந்தினி தன் உடலை படக்கென ஒரு சிலுப்பு சிலுப்பி, தனது கையை அசோக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டாள். உடனே திரும்பி அசோக்கின் முகத்தை ஏறிட்டு முறைத்தாள். வலியெடுத்த கையை இன்னொரு கையால் அழுத்தி தடவிக்கொண்டே சீற்றமாக சொன்னாள்.

“இப்போ என்னாயிடுச்சுன்னு சும்மா துள்ளுறீங்க..?? அப்படி என்ன நான் தப்பு பண்ணிட்டேன்..?? என் புருஷன் தப்பான வழிக்கு போறதை தடுக்குறது ஒரு குத்தமா..??”

“என் விஷயத்துல தலையிட கூடாதுன்னு சொல்லிட்டுத்தான்.. உன்னை நான் கல்யாணமே செஞ்சுக்கிட்டேன்.. மறந்து போச்சா..??”

“ஹ்ஹ.. உங்க கண்டிஷனும், அக்ரீமன்ட்டும்.. மொட்டை மாடில வச்சு நீங்க என்னை கிஸ் அடிச்ச அன்னைக்கே.. காலாவதி ஆகிப் போயிடுச்சு..!! இனிமேயும் அதெல்லாம் கட்டிக்கிட்டு என்னால அழ முடியாது..!!”

“ஓ.. அந்த அளவுக்கு ஆயிடுச்சா..??”

“ஆமாம்.. அப்படித்தான்.. நான் அப்படித்தான் செய்வேன்.. என்ன இப்போ..?? நல்லா கேட்டுக்கங்க.. நீங்க எனக்கு வேணும்.. எனக்கு மட்டுந்தான் வேணும்.. அப்படி நெனைக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு..!! உங்க பொண்டாட்டி நான்.. தொட்டு தாலி கட்டிருக்கீங்க எனக்கு..!! உங்களை எனக்கு சொந்தமாக்கிக்க.. என்னென்ன செய்யணுமோ.. எல்லாம் நான் செய்வேன்..!! என்ன பண்ண முடியும் உங்களால..??”

நந்தினி ஆவேசமாக கேட்க, அசோக் அவளையே திகைப்பாக பார்த்தான். அவளுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், திக்கித்துப் போனான். எரிச்சலும், இயலாமையுமாய் மனைவியையே விழிகள் விரிய பார்த்தான்.

பார்க்க பார்க்க.. அவனுக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது. கண்களை இறுக்க மூடி, தலையை சற்றே குனிந்து, இரண்டு கைகளாலும் அழுத்தி பிடித்துக் கொண்டான். அதை பார்த்த நந்தினிக்கு, அவ்வளவு நேரம் கணவன் மீது இருந்த ஆவேசம் உடனே வற்றிப் போனது.

“என்னாச்சு..??” என்றாள் சற்றே கவலையாக. அவனுடைய கையை தொட்டாள்.

“ப்ச்..” அசோக் அவளுடைய கையை தட்டி விட்டான்.

“என்னாச்சுன்னு கேக்குறேன்ல..?”

நந்தினியின் குரலில் இப்போது கவலையுடன், கோபமும் கலந்திருந்தது. அசோக் பதில் எதுவும் சொல்லவில்லை. நந்தினி அவனுடைய மூளைக்குள் புகுந்து குடைச்சல் கொடுப்பது மாதிரி வலியெடுத்தது அவனுக்கு. அப்படியே தலையை பிடித்தவாறு கொஞ்ச நேரம் குனிந்திருந்தான். அப்புறம் படக்கென தன் மனைவியின் முகத்தை ஏறிட்டு, குரலை உயர்த்தி கத்தினான்.

“ஏண்டி இப்படிலாம் பண்ற..?? உன்னால…”

என்று அதிக டெசிபலில் ஆரம்பித்தவன், சற்று நிறுத்தி, நந்தினியின் முகத்தையே ஓரிரு வினாடிகள் பார்த்துவிட்டு, குரலை பட்டென தாழ்த்திக்கொண்டு..

“டார்ச்சரா இருக்குதுடி.. என்னால முடியலை..!!”

என்று பரிதாபமாக சொல்லி முடித்தான். சோர்ந்து போனவனாய் அப்படியே பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான். அவனது ஆவேசத்தில் நந்தினி சற்றே மிரண்டு போனாள். நிலைகுலைந்து போய் அமர்ந்திருக்கும் கணவனையே, திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய மனநிலையை இப்போது அவளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

‘இப்படித்தான் தன் வாழ்க்கை என்றொரு உறுதியுடன் வாழ்ந்திருந்தான்.. இன்று அந்த வாழ்க்கை தடம் மாற.. இவன் தடுமாறுகிறான்..!! நந்தினி ஏற்படுத்திய காயத்தால்.. இதயத்தில் இனி யாருக்கும் இடமில்லை என்ற முடிவில் இருந்திருந்தான்.. இன்று அவனுடைய மனம் அவனது கட்டுப்பாட்டை மீற.. யாரால் அந்த முடிவு எடுத்தானோ அவள் மீதே சென்று சாய.. இவன் கிடந்து குழம்புகிறான்..!!’

கணவனை பார்க்க பார்க்க.. நந்தினியின் மனதுக்குள்.. கனிவும், கருணையும் பொங்க ஆரம்பித்தது..!! தரையில் முழங்கால் இட்டு.. அவன் முன்பாக அமர்ந்தாள்..!! கவிழ்ந்து போயிருந்த அவனுடைய முகத்தை நிமிர்த்தினாள்.

“இங்க பாருங்க..!!”

“………………..”

“ப்ச்.. பாருங்கன்றேன்ல..?”

அசோக் இப்போது நிமிர்ந்து தன் முகத்துக்கு எதிரே இருந்த மனைவியின் முகத்தை பார்த்தான். அசோக்கின் முகம் ஒரு மாதிரி கலங்கி, வாடிப்போயிருக்க, நந்தினியின் முகம் மிக தெளிவாக, மலர்ச்சியாக இருந்தது. நந்தினி அசோக்கின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் தாங்கி பிடித்து, தனது மெல்லிய உதடுகளை குவித்து, அவனுடைய நெற்றியில் ஈரமாய் ஒற்றி எடுத்தாள். அசோக் எந்த சலனமுமின்றி அமைதியாக இருந்தான். நந்தினி இப்போது அவனது வலது கையை பற்றினாள். எடுத்து தன் கன்னத்தோடு வைத்து பிடித்துக் கொண்டாள். அவ்வப்போது அந்தக்கைக்கு ‘இச்.. இச்..’ என்று இதமாக முத்தம் கொடுத்தவாறே பேசினாள்.

“இப்போ என்னாச்சுன்னு இப்படி ஃபீல் பண்றீங்க..?? ம்ம்..?? உங்களுக்கு நான் இருக்கேன்ப்பா.. உங்க நந்தினி இருக்கேன்..!! நான் பாத்துக்குறேன்.. என் கண்ணனுக்கு எந்த குறையும் இல்லாம.. கண்ணுக்குள்ள வச்சு நான் பாத்துக்குறேன்..!!”

கனிவாக சொல்லிவிட்டு நந்தினி கணவனின் முகத்தையே காதலும் ஆசையுமாய் பார்த்தாள். அசோக்கும் அவளையே ஒரு சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அவனுடைய கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. உதடுகள் மெலிதாக ஒரு விரக்தி புன்னகையை சிந்தின. நந்தினி என்னென்று புரியாமல் திகைக்க, அசோக் சற்றே தழதழத்து போன குரலில் சொன்னான்.

“ஆறு வருஷத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நீ சொல்லிருந்தா.. ரொம்ப நல்லா இருந்திருந்திருக்கும் நந்தினி..!!”

அவ்வளவுதான்..!! கண்களில் நீர் துளிர்க்க கணவன் சொன்னதை கேட்டு, நந்தினி அப்படியே உருகிப் போனாள்..!! ஆறுவருடங்களுக்கு முன்பாக தான் அள்ளி வீசிய வார்த்தைகள், எந்த அளவுக்கு அவன் மனதை ரணமாக்கியிருக்கின்றன என்பதை, இப்போது முழுமையாக உணர்ந்து கொண்டாள்..!! அவனுடைய கலங்கிப்போன முகத்தை காண காண.. நந்தினிக்கு ஒரு வித துக்கம் வந்து தொண்டையை அடைத்தது..!! படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். அசோக்கையே ஒரு இரக்கப் பார்வை பார்த்தவள், அவளுடைய ஒரு கையால் அவனது கன்னத்தை வருடியவாறே, பரிதாபமாக சொன்னாள்.

“ஸாரிப்பா.. ஸாரி..!!! உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. ஸாரி..!!!”

அதன்பிறகும் நந்தினியால் அவளுடைய கண்களுக்கு அணை போட முடியவில்லை. கண்ணீரை கசிய ஆரம்பித்தன அவளது விழிகள்..!! அசோக் ஒரு சில வினாடிகள் அவளுடைய கண்ணீர் வழியும் முகத்தையே அமைதியாக பார்த்தான். அப்புறம் தனது விரல்களால் அவளுடைய விழி நீரை துடைத்தான். கட்டிலில் இருந்து எழுந்து கொண்டான்.

“ஆபீஸுக்கு டைமாச்சு நந்தினி.. நான் கெளம்புறேன்..”

என்றவன், அறை வாசலை நோக்கி நடந்தான். நந்தினியோ உறைந்து போன மாதிரி, அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.

அத்தியாயம் 32

அன்று காலை 10.30. அடையாறு ஆபீஸ். அசோக் சற்று முன்புதான் ஆபீஸ் வந்து சேர்ந்திருந்தான். இப்போது தனது அறைக்குள் அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனுடைய கைகள் இரண்டையும் கோர்த்து, பின்னந்தலைக்கு கொடுத்து, நாற்காலியில் தலை சாய்த்து, சீலிங்கை வெறித்துக் கொண்டிருந்தான். சிணுங்கிய தொலைபேசியை கூட எடுக்க மனமின்றி, சிந்தனை வயப்பட்டவனாய் அமர்ந்திருந்தான்.

ஆறு வருடங்களில் அவன் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறிப்போனது என்று, அதையே எண்ணி மருகிக் கொண்டிருந்தான். ஆறு வருடங்களுக்கு முன்பு, அமைதியாக சென்று கொண்டிருந்த அவனது வாழ்க்கை, ஒரு பெண் வீசிய வார்த்தைகளால் முற்றிலும் மாறிப்போனது. இன்று அதே பெண் அந்த வாழ்க்கையை வேறு திசைக்கு திருப்பிப்போட கடுமையாக முயலுகிறாள்..!! நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்க.. அவனுக்கு மனதுக்குள் போராட்டம்..!!

அப்போதுதான் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது. தலையை சாய்த்து அறை வாசலுக்கு பார்வையை வீசிய அசோக், இன்ஸ்டண்டாய் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளானான். வாசலில் கற்பகம்..!!! அவளுடைய கைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல், அலுவலகத்திலும் ஆளைக் காணாமல், விடுப்பு எடுத்துக் கொண்டாள் என்று அசோக் நினைத்திருக்க, அவளோ திடீரென வந்து நிற்கிறாள். அதுவும் அவள் வந்திருந்த கோலம்…

“அ..அசோக்.. அ..அசோக்.. ”

அவனை திணறலாக அழைத்துக்கொண்டே, கற்பகம் அவசரமாய் உள்ளே வந்து கொண்டிருந்தாள். பேயறைந்த மாதிரியாக, அவளுடைய முகத்தில் ஒரு உச்சபட்ச பயம் அப்பியிருந்தது. அவளது கைவிரல்கள் நடுநடுங்கியதில் இருந்தே, மிகுந்த பதற்றத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. கலைந்த கூந்தலும், கசங்கிப்போன புடவையும்..!! அவளுடைய கோலத்தை பார்த்ததுமே அசோக்கிடமும் ஒரு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. படக்கென சேரை விட்டு எழுந்து, அவளிடம் சென்றான்.

“ஹேய்.. கற்பு.. என்னாச்சு..??” என்று பதட்டமாக கேட்டான்.

“அ..அசோக்.. அ..அசோக்.. ”

கற்பகம் அவனுடைய கைகளை பிடித்துக்கொண்டு, அவனது முகத்தை பரிதாபமாக ஏறிட்டாள். அவளுடைய கண்கள் அழுது அழுது சோர்ந்து போயிருந்த மாதிரி காட்சியளித்தன. ‘புஸ்.. புஸ்..’ என அவளுக்கு மூச்சிரைக்க, மார்புகள் வேகவேகமாய் மேலும் கீழும் ஏறி இறங்கின.

“சொ..சொல்லு கற்பு.. என்னாச்சு..??”

“ப..பணம்.. பணம்…!! ப..பணம்.. வேணும் அசோக்..!!”

“ப..பணமா..??”

“ம்ம்.. நெ..நெறைய வேணும்.. நெறைய பணம் வேணும் அசோக்..!!”

கற்பகம் பிரம்மை பிடித்தவள் மாதிரி பேசினாள். அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

“எ..எனக்கு புரியலை கற்பு..?? எதுக்கு பணம்..??”

“அ..அங்க.. ஹாஸ்பிடல்ல.. அவரு..!! ப..பணம் வேணும் அசோக்… என் புருஷன் அங்க உசுருக்கு போராட்டிட்டு..” கற்பகம் அழுகையும், தவிப்புமாய் சொல்ல, அசோக் அதிர்ந்து போனான்.

“க..கற்பு..!!!! எ..என்ன சொல்.. எ..என்னாச்சு அவருக்கு..???” அசோக்கிற்கும் வாய் குழறியது.

“க..கத்தியால குத்திப் போட்டு போயிட்டாங்க..!!” சொல்லும்போதே அவளுடைய கண்களில் கண்ணீர் பொங்கியது.

“யாரு..??”

“தெரியலை..!!!!!” கற்பகம் கத்தினாள்.

“சரி.. எ..எந்த ஹாஸ்பிட்டல்..??”

“ம..மலர் ஹாஸ்பிட்டல்..!! உ..உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க.. லட்ச கணக்குல பணம் கேக்குறாங்க..!!”

“ஓ..!!” அசோக் லேசாகத்தான் திகைத்தான். அதற்குள்ளாகவே கற்பகம்,

“ப்ளீஸ் அசோக்.. எ..எனக்கு ஹெல்ப் பண்ணுடா..!! பதிலுக்கு நான் என்ன வேணாலும் செய்றேன்..!!” என்றாள்.

“ஹேய்.. என்ன பேசுற நீ..”

அசோக் திகைப்பாக சொன்னதை கற்பகம் கவனிக்கவே இல்லை. ஒருமாதிரி புத்தி பேதலித்த நிலையில் இருந்தாள் அவள். தொடர்ந்து திணறலாக சொன்னாள்.

“உ..உனக்கு.. உனக்கு என்னை புடிக்கும்ல..?? நா..நான் வந்தா எவ்வளவு வேணா தருவேன்னு சொல்வேல..??” அவளுடய வார்த்தைகளை கேட்டு அசோக் மிரண்டு கொண்டிருக்கும்போதே,

“எனக்கு இந்த ஹெல்ப் மட்டும் பண்ணு அசோக்.. நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்..!!”

கற்பகம் சொல்லியே விட்டாள்..!!! ஒரு மாதிரி திக்பிரம்மையிலும், குழப்பத்திலும் இருந்த கற்பகம், சொல்லியே விட்டாள்..!! அதை கேட்ட அசோக் அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்து போனான்..!! அவள் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் அமிலத்தை ஊற்றிய மாதிரி இருக்க, துடித்துப் போனான். விழிகள் விரிய கற்பகத்தையே ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தான். அடியில் பூமி விரிசல் விட்டாற்போல அவனது கால்கள் தடுமாறின. இரண்டு எட்டுகள் பின்னால் எடுத்து வைத்தவன், கீழே சரிந்து விடாமல் இருக்க, டேபிளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments