நெஞ்சோடு கலந்திடு – பகுதி 3
“……… அப்போ அவ என்னை லவ் பண்றானுதான அர்த்தம்..?”
“எவ..??” அசோக் புரியாமல் கேட்டான்.
“ப்ச்.. அவதான்பா.. கண்மணி..!!”
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
கிழிஞ்சது..!! இவர் இப்படித்தான்..!! இவர் ஏதோ மன்மதராசா மாதிரியும், உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் இவரிடம் ஜொள்ளுவிட்டு திரிவது மாதிரியும் நினைப்பு இவருக்கு..!! இந்த ஐந்து மாதத்தில் பத்து, பதினைந்து பெண்களுக்கு மேல் இவரை காதலிப்பதாக சொல்லிவிட்டார்..!!
“எதை வச்சு அவ உங்களை லவ் பண்றான்னு சொல்றீங்க..?”
“இப்போலாம் ஒழுங்காவே நீங்க சாப்பிடுறது இல்ல.. எளைச்சு போயிட்டீங்க.. நல்லா சாப்பிடுங்க.. அப்டின்னு சொல்றாப்பா..!! இதுக்கு என்ன அர்த்தம்..? என் மேல அவளுக்கு அப்படி என்ன அக்கறை..? இதுக்கு பேர் காதல்தான..?”
“அண்ணா.. வெளையாடாதீங்கண்ணா..!! அவ ஏதோ.. நீங்க நல்லா சாப்பிட்டா.. கூட ரெண்டு கல்த்தோசை விக்குமேன்னு சொல்லிருப்பா..!! அதைப்போய் காதல்னு சொல்றீங்க..?”
“அட போப்பா..!! உனக்கு தெரியாது.. பார்வையே காட்டிக் கொடுத்திடும்..!! காதல்ல எனக்கு நெறைய அனுபவம் இருக்கு அசோக்.. நான் கரெக்டா கண்டுபிடிச்சுடுவேன்..!! உங்க காதலையே நான் எப்படி கரெக்டா கண்டுபுடிச்சேன் பாத்தேல..?”
“ஐயையோ.. நீங்க வேற..!! நாங்க லவ்லாம் பண்ணலைண்ணா.. நாங்க ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்..!!”
“ம்ஹூம்..!!”
“ஏண்ணா நம்ப மாட்டேன்றீங்க..? நான்தான் சொல்றேன்ல..?”
“நான் நம்ப மாட்டேன்.. நான் நம்ப மாட்டேன்..!! நீயும் அந்தப்பொண்ணும் லவ் பண்றீங்க.. லவ் பண்றீங்க..!! இதை நான் ஆணித்தரமா அடிச்சு சொல்வேன்..!!”
“ஷ்ஷ்ஷ்ஷ்…. என்னால முடியலை..!! ஆளை விடுங்க.. வேற ஏதாவது பேசுங்க..!!”
அசோக் காலில் விழாத குறையாக கதற, செல்வா சற்று மனமிறங்கினார். மீண்டும் கண்ணாடி முன் சென்று நின்றுகொண்டு, விட்ட இடத்தில் இருந்து மேக்கப்பை தொடர்ந்தார். அவர் சீவி சிங்காரித்து வருவதற்குள் அசோக்கை பற்றி மேலும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
அசோக் சென்ற வருடம்தான் எஞ்சினியரிங் முடித்தான். ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சிறிய சாஃப்ட்வேர் கம்பெனியில், குறைந்த ஊதியத்திற்கு ஒரு வேலை கிடைத்தது. அந்த கம்பெனியில் சேர்ந்து கொள்வது என்று முடிவெடுத்தான். தங்குவதற்கு இடம் வேண்டுமே..? தயக்கமே இல்லாமல் சென்னையில் இருக்கும் தன் அக்கா சித்ராவிற்கு கால் செய்தான். அவள் பார்த்து தந்த அறைதான் இது..!! அதுவும் தான் வசிக்கும் அப்பார்ட்மன்ட்சுக்கு அடுத்த தெருவிலேயே ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு போர்ஷன்..!!..!!
சித்ரா எப்போது சென்னை வந்தாள் என்று கேட்கிறீர்களா..? வருகிறேன் வருகிறேன்.. பொறுங்கள்..!! சித்ராவுக்கும் சென்ற வருடம்தான் திருமணம் ஆனது. தன் கணவனுடன்தான் அடுத்த தெரு அப்பார்ட்மன்ட்சில் குடியிருக்கிறாள். அவளுடைய கணவன் வேறு யாரும் கிடையாது.. திவ்யாவின் அண்ணன் கார்த்திக்தான்..!! எஸ்.. அனலில் விழுந்த புழுவாய் தங்கை அலறி துடித்துக் கொண்டிருந்தபோது, பணியாரத்தை பரிதாபமாய் பார்த்த அதே கார்த்திக்தான்..!! இப்போது அரசு வங்கி ஒன்றில் பணக்கட்டுகளுக்கு இடையில் பணிபுரிகிறான்..!!
திவ்யாவை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. சொல்கிறேன்..!! திவ்யாவும் சென்னையில்தான் ஒரு கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் பயில்கிறாள். சித்ராவும் கார்த்திக்கும் குடியிருக்கும் அதே வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். முதல் மூன்று வருடங்கள் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தாள். அண்ணனுக்கு திருமணம் ஆனதும், அவனுக்கென்று சென்னையிலேயே ஒரு வீடு வந்ததும்.. ‘ஏன் தேவையில்லாத தெண்ட செலவு..?’ என்பது மாதிரியான குடும்பத்தினர் நெருக்குதலுக்கு உட்பட்டு.. விருப்பமும், வேறு வழியும் இல்லாமல்.. ஹாஸ்டலை காலி செய்துவிட்டு அந்த வீட்டில் தங்கியிருக்கிறாள்.
திவ்யாவுக்கும் சித்ராவுக்கும் இன்னும் ஏழாம் பொருத்தம்தான்..!! சிறுவயதில் பேசிக்கொள்ளாமல் பிரிந்தவர்கள் இன்று வரை பேசிக்கொள்ளவில்லை..!! சித்ரா தன் அண்ணியாக வருவதில் அவளுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. வீட்டு பெரியவர்களிடம் கூட சண்டையிட்டு பார்த்தாள். அவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்க.. திவ்யாவால் எதுவும் செய்ய முடியவில்லை..!! ஏதோ அயலார் வீட்டு கல்யாணத்திற்கு வந்தவள் போலத்தான், அண்ணனின் திருமணத்தன்று சுற்றி திரிந்தாள். சித்ராவின் கையை பிடித்து மணவறையை வளம் வரக்கூட, திவ்யாவின் சித்தி பெண்ணை வைத்துத்தான் சமாளித்தார்கள்.
விருப்பம் இல்லாமல் அண்ணனின் வீட்டில் வந்து தங்கியிருந்தவளுக்கு, அசோக்கும் அருகிலேயே குடிவந்தது சற்றே நிம்மதியையும், எக்கச்சக்கமாய் சந்தோஷத்தையும் கொடுத்தது. அசோக்குடன் நிறைய நேரம் செலவழிக்கிறாள். அசோக் தங்கியிருக்கும் அறைக்கு சகஜமாக வந்து செல்வாள். மேலே.. செல்வா அசோக்குடன் இணைத்துக் கூறிய அந்த பெண்.. திவ்யாதான்..!! அவர்களுடைய நெருக்கத்தைப் பார்த்து அவராக அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
செல்வா மேக்கப்பில் மூழ்கிவிட, அசோக் பாத்ரூம் சென்று குளித்தான். குளித்து முடித்து வேறு உடைகள் அணிந்து வெளியே வந்தபோது, செல்வா கிளம்பி ரெடியாக இருந்தார்.
“அப்போ.. நான் போயிட்டு வர்றேன் அசோக்..”
“எங்கண்ணா கேளம்பிடீங்க..?”
“வேறெங்க..? மெஸ்ஸூக்குத்தான்.. சாப்பிட்டு வர்றேன்பா..!!”
“ஓ.. சரிண்ணா..”
“ஹ்ஹ்ம்ம்ம்.. நீ கொடுத்து வச்ச மகராசன்..!! அக்கா வீடு பக்கத்துலையே இருக்குது.. அங்கேயே சாப்பிட்டுக்குவ..!! லவ் பண்ற பொண்ணு வேற அந்த வீட்டுலையே இருக்குது.. அப்படியே ரொமான்ஸ் லுக் விட்டுக்கிட்டே சாப்பிடுவீங்க..!!”
“ஐயோ.. அண்ணா.. ஏண்ணா இம்சை பண்றீங்க..? நாங்க லவ்லாம் பண்ணலைண்ணா..” அசோக் எரிச்சலாக கத்தினான்.
“நோ நோ..!! நீ அந்தப்பொண்ணை லவ் பண்ற.. அந்தப்பொண்ணும் உன்னைத்தான் லவ் பண்ணுது.. யார்கிட்ட விடுறீங்க உங்க கதையை..? நான் நம்ப மாட்டேன்.. நான் நம்ப மாட்டேன்..!! என்னை யாரும் ஏமாத்த முடியாது..!!”
அவர் கூலாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தார். கூச்சமே இல்லாமல் ‘என் கண்மணி.. என் காதலி.. இளமாங்கனி.. எனை பார்த்ததும்.. சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே..’ என்று சத்தம் போட்டு பாடிக்கொண்டே சென்றார். கதவை சாத்தி வெளியேறினார். பாட்டுக்கு ஏற்றவாறு தன் கைகளையும், இடுப்பையும் நெளித்தவாறே அவர் சென்றது செமகாமடியாக இருந்தது..!! அசோக் கொஞ்ச நேரம் அவரையே வெறுப்பாக பார்த்தான். அப்புறம் அவனும் தயாராகி அக்கா வீட்டிற்கு சாப்பிட கிளம்பினான்.
அத்தியாயம் 4
ஆறு அடுக்குகள் கொண்ட அப்பார்ட்மன்ட்ஸ் அது..!! அதில் நான்காவது அடுக்கில்தான் சித்ராவின் வீடு இருக்கிறது..!! அப்பார்ட்மன்ட்சுக்கு வெளியிலேயே அசோக் பைக்கை பார்க் செய்தான். லிஃப்ட் பிடித்து நான்காவது தளத்துக்கு சென்றான். வீடு திறந்தே இருக்க உள்ளே நுழைந்தான். மிக்ஸியில் எதையோ அரைத்துக்கொண்டிருந்த சித்ரா, அசோக் உள்ளே நுழைந்ததும் ஒருமுறை ஏறிட்டு பார்த்தாள். அப்புறம் அவனை கண்டுகொள்ளாமல், அவளது வேலையில் கவனத்தை செலுத்தினாள். அசோக் அவளை நெருங்கினான். சற்றே கொஞ்சலாக கேட்டான்.
“என்னக்கா பண்ணிட்டு இருக்குற..?”
“ஹ்ம்ம்.. பாத்தா தெரியலை..? தேங்கா அரைச்சுக்கிட்டு இருக்குறேன்..” சித்ரா சற்றே சலிப்பாக சொன்னாள்.
“அப்போ.. டிபன் இன்னும் ரெடியாகலையா..?” அசோக் அப்படி கேட்டதும், அக்கா எரிச்சலானாள்.
“அப்டியே போட்டன்னா..!! என்னவோ ரொம்ப குடுத்து வச்சவன் மாதிரி வந்து கேக்குற..?”
“அடிப்பாவி.. உங்க வீட்டுல சாப்பிடுறதுக்கு.. மாசாமாசம் ஆயிரம் ரூபா கொடுக்குறேன்.. ஞாபகம் இருக்கட்டும்..!!”
“ஆமாம்.. இவரு கொடுக்குற ஆயிரம் ஓவாயை வச்சுத்தான் நாங்க இங்க கோட்டை கட்டப்போறோம்..? உன் ஆயிரம் ஓவாயை நீயே வச்சுக்கோ சாமி.. நாளைல இருந்து வேற எங்கயாவது சாப்பிட்டுக்க..!!” அவள் அப்படி மிஞ்சியதும், அசோக் இப்போது கொஞ்சலாக சொன்னான்.
“என்னக்கா.. கோவிச்சுக்குற..? நீயே இப்படி சொன்னா.. நான் சாப்பாட்டுக்கு வேற எங்க போவேன்..?”
“ஏன்.. அந்த புவனா மெஸ்ல போய் சாப்பிடு..!!”
“என்னதான் இருந்தாலும்.. என் அக்காவோட கையால சமைச்சதை சாப்பிடுறது மாதிரி வருமா..?”
“என்ன.. அக்கா மேல ரொம்பத்தான் பாசம் இன்னைக்கு..”
“இன்னைக்கு இல்லக்கா.. என்னைக்குமே அப்படித்தான்..!! உனக்குத்தான் புரியுறது இல்ல..!!”
அவன் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் திவ்யா அவளுடைய அறையில் இருந்து வெளிப்பட்டாள். குளித்து முடித்து புதிதாய் பூத்த பூ மாதிரி வந்தாள். அசோக்கை பார்த்ததும் மலர்ந்துபோன அவள் முகம், அருகிலேயே அவளுடைய அக்காவும் இருப்பதை அறிந்ததும் பட்டென சுருங்கியது. அமைதியாக நடந்து சென்று ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். ரிமோட் எடுத்து டிவி ஆன் செய்தாள்
அசோக் திவ்யாவையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது அவளும் திரும்பி இவனை பார்த்தாள். அசோக் அவளிடம் சைகையாலே ஏதோ சொன்னான். அவளும் திரும்ப சைகையாலேயே ஏதோ கேட்டாள். அப்புறம் அசோக் சொல்ல வந்ததை அவள் புரிந்துகொண்ட மாதிரி தலையசைத்தாள். சில வினாடிகள் டிவி பார்த்தவள் அப்புறம் எழுந்து கொண்டாள். நடந்து உள்ளறைக்கு சென்று மறைந்தாள். இவர்கள் இருவரும் சைகையால் பேசிக்கொண்டதை, சித்ரா ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தாள். திவ்யா உள்ளே சென்றதும், அசோக்கிடம் கேட்டாள்.
“என்ன பண்ணுனீங்க இப்போ ரெண்டு பேரும்..?”
“எ..என்ன பண்ணுனோம்.. ஒன்னும் பண்ணலையே..?” அசோக் திணறினான்.
“ப்ச்.. நடிக்காதடா.. நான் பாத்துக்கிட்டுத்தான இருக்குறேன்..?”
“ஐயோ.. ஒன்னும் இல்லக்கா..”
“ரெண்டு பேரும் என்னை ஏதோ கேலி பண்ணுனீங்க.. கரெக்டா..?”
“சேச்சே.. என்னக்கா நீ..? என் செல்ல அக்காவை நான் கேலி பண்ணுவேனா..?” அசோக் தன் அக்காவின் கன்னங்கள் இரண்டையும் பிடித்துகொண்டு கொஞ்ச, அவள் பட்டென அவனுடைய கைகளை தட்டிவிட்டாள்.
“அப்போ.. என்ன மேட்டர்னு சொல்லு..”
“அதான் ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல..? நம்பிக்கை இல்லையா..?”
“ம்ஹூம்..!! நான் அவளையும் நம்ப மாட்டேன்.. அவகூட சேர்ந்து நீ சுத்திட்டு இருக்குற வரை உன்னையும் நம்ப மாட்டேன்..!!”
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :