♥ நீ -31♥

”தாமரை…”

நீ விசித்து விசித்து அழுதாய். உன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் என் மார்பு நனைந்து விட்டது.

”ஏய்.. தாமரை..?”

ம்கூம்..! நீ புரண்டு புரண்டு அழுதாய்..! உன் மனதின் பாரமான ஒரு பகுதியை நான் தாக்கிவிட்டேன்.! இது உன் நீண்ட நாள் துக்கத்தின் வெளிப்பாடு போலும்..!!
உன் கண்ணீர்… என் நெஞ்சைத் தாக்கியது..! என் தவறு புரிந்தது..!

உன் முகத்தை… மேலே தூக்கினேன்..! கண்ணீர் வழிந்த உன் கன்னங்களைத் துடைத்து. . ”ஏய்.. என்னடி இது..? ஒரு வெளையாட்டுக்கு பேசினா… அதுக்கு போயி… இப்படி….” உன்னை மேலே இழுத்து.. உன் நெற்றியில் முத்தமிட்டு..
”ஸாரிடி…! நா..ஏதோ.. வெளையாட்டா நெனச்சுத்தான் கேட்டேன்..! ஆனா… நீ அத இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவேனு தெரியாம…!! ஸாரி…!!” என்றேன்.

உன் விசும்பல் மெல்ல குறைந்தது.
”பரவால்லீங்…” என மூக்கை உறிஞ்சினாய்.

”நெஜமா.. நா… வெளையாட்டாத்தான்டி கேட்டேன்…”

”பரவால்லீங்க.. ஆனா இன்னொரு வாட்டி அப்படி பேசாதிங்க..! என்னால தாங்கமுடியாது..!! ”

”சரி… பேசல…! ஆனா அநதளவுக்கு… இதுல என்னடி இருக்கு..?”

” என்னால முடியாதுங்க…! நீங்க இப்படி பேசினா… அப்பறம்.. நான்… செத்துருவங்க..!’

”ஏய்…ச்சீ… லூசு…! என்னடி.. பேசற…?”

மறுபடி உன் கண்கள் கண்ணீரைச் சுரந்தது..! உன்னை அணைத்து..உன் கணகளைத் துடைத்து விட்டேன்.
இப்போதைக்கு உனக்குத் தேவை ஆறுதல்தான். கேள்விகள் அர்த்தமற்றவை..!
”சரி…சரி…! இனிமே கேக்க மாட்டேன் போதுமா..? என்னை மன்னிச்சிரு…!!”

”ஐயோ… மன்னிப்பெல்லாம் கேக்காதிங்க..” கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாய் ”நீங்க என்னோட உசுருங்க..! உங்களத் தவற நான் யாருக்குமே இல்லீங்க..! இதுக்கு முன்னால நான் அப்படி இருந்தவதாங்க.. ஆனா இனிமே… உங்களத் தவற வேற யாரும் என்னை தொடமுடியாதுங்க..! இது சத்தியங்க..! உங்களுக்கு என்னை புடிக்கலேன்னாலும் பரவால்லீங்க.. ஆனா இப்படியெல்லாம் பேசாதிங்க..! அப்பறம் நான் உசிரையே விட்றுவங்க…!!” என்று நீ உருக்கமாகச் சொல்ல…

எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
நான் அலட்சியமாக நினைக்கும் ஒரு விசயம்… உனக்கு எந்தளவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது..?

உன்னை இருக்கமாக அணைத்துக் கொண்டேன்.
நீண்ட நேரத்துக்குப் பின்பே.. நீ என்னிடமிருந்து விலகினாய்.

”என் மேல கோபமாடி…?” நான் கேட்டேன்.

”ஐயோ…! இல்லீங்க…!!”

”கோபமில்லதானே..?”

”சாமி சத்தியமா இல்லீங்க..”

”இனிமே அப்படி பேசமாட்டேன்..! தெரியாம பேசிட்டேன்… என்ன..?”

”பரவால்லீங்க..! நானும் சட்னு அழுதுட்டேன்..! என்னை மன்னிசசிருங்க… என்னமோ.. நீங்க அப்படி கேட்டதும்.. என்னால தாங்கிக்க முடியலீங்க..”

”ம்ம்…! நான் அப்படி கேட்றுக்கக் கூடாது..!!”

”காபி குடிக்கலாங்களா…?”

” ம்ம்…! வெய்…!! பாலு..?”

”நான் போயி வாங்கிட்டு வரங்க..”

”ம்..ம்..!!”

”வேற ஏதாவது வாங்கறதுங்களா..?”

”இல்ல வேண்டாம்..! பால் மட்டும் வாங்கிட்டு வா..! உனக்கு வேனும்னா ஏதாவது வாங்கிக்க..”

”செரிங்க..”

என்னிடமிருந்து விலகி எழுந்து..நின்று.. உள்ளாடைகள் அணிந்து.. ரவிக்கை போட்டு.. புடவை கடடிக்கொண்டு பாத்ரூம் போனாய்.

என் அருகே.. கட்டிலில்.. உன் கூந்தலில் இருந்து.. உதிர்ந்த ரோஜாவும்… மல்லிகையும் சிதறிக் கிடந்தது. ரோஜாக்கள் இதழ்… இதழாக பிரிந்து.. கசங்கி சுருண்டு கிடந்தது.
என் படுக்கையை அலங்கரித்த.. உதிரிப்பூக்களை எல்லாம் சேகரித்து.. முகர்ந்தேன்.
வாடிய பூக்களின் நறுமணத்தில் என் சுவாசம் புத்துணர்ச்சியடைந்தது. அவைகளை.. என் நெஞ்சின் மேல் போட்டுக்கொண்டு கண்களை மூடினேன்.
அசதியும்.. தலை பாரமும்.. அப்படியே என்னைத் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டது.!

கலர் கலராகக் கனவுகள் வந்தன.! நீ பல ஆண்களுக்கு நடுவில்.. நிர்வாணமாக நீராடிக்கொண்டிருந்தாய். என்னைப் பார்த்ததும்.. அப்படியே ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டாய். அத்தனை பேருக்கும் நடுவே… நாம் உடலுறவில் ஈடுபட்டோம்..!!
காட்சி மாறியது..இன்னொரு கனவு. ஊரெங்கும் புயல் வீசியது. பலத்த மழை பெய்தது..! அதில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.நான் உன்னைப் பார்க்க வந்தபோது.. உன் வீடு.. எனக்கு மேலாக காற்றில் பறந்து போகிறது. உன் ஏரியாவே தரை மட்டம்..! சிறிது தள்ளி.. உன் உடல்.. அரைகுறை ஆடையுடன் மின் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நான் எப்படி மேலே ஏறினேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் உன்னைத் தொடுகிறேன். நான் தொட்டதும் உனக்கு உயிர் வந்து விடுகிறது.
அப்பறம் நான் கட்டிலில் படுத்திருக்கிறேன். நீ வெள்ளை உடை தேவதையாக பறந்து வந்து என் பக்கத்தில் படுத்தாய்.

”ஏங்க..?”

”ஊஊ…ஊஊஊஊ..!” தூரத்தில் எங்கோ… ஓநாய் ஊளையிட்டது.

”ஏங்க….?”

என்னருகே வெள்ளை உடை தேவதையாகப் படுத்திருந்த நீ.. மெல்ல மெல்ல காற்றில் கரைந்து.. புகையாக மாறி.. ஜன்னல் வழியாக வெளியே பறந்து போனாய்.

” என்னங்க…?” சட்டென நான் கண்விழிக்க… நீ என் தோளைத் தட்டிக்கொண்டிருந்தாய்.

”ம்… ம்.. என்ன..?”

”காபி வெச்சுட்டங்க…”

”ம்..ம்..!!” என் கனவு நினைவு வந்தது.
”ஏய்.. நீ.. எப்ப டீ வந்த. .?”

”எங்கீங்க..?” குழப்பமாக என்னைப் பார்த்தாய்.

”இங்கதான்…?”

”நாம ரெண்டு பேரும் ஒன்னாதாங்க வந்தோம்..”

”அதில்லடி… நீ இப்பத்தான..ஜன்னல்ல பறந்து போன..?”

‘ஆ’ வென வாயைப் பிளந்தாய் ”நானுங்களா..?”

”ம்..ம்…!!”

”வெள்ள ட்ரஸ்ல…?” என்று விட்டு என் கனவைச் சொன்னேன்.

வெள்ளையாகச் சிரித்தாய்.
”ஐயோ… உங்க கனவுல நானுங்களா..?”

”ம்…ம்..!!” சிரித்தவாறு நான் எழுந்து உட்கார்ந்தேன்.

நீ காபியை எடுத்து என்னிடம் கொடுத்தாய். உன் கையைப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு..காபி குடித்தேன்..!!
”தாமரை…”

”என்னங்க..?”

” என்மேல கோபமாடி…?”

”ஐயோ… எனக்கென்னங்க கோபம் உங்கமேல..?”

”உன்ன அழவெச்சுட்டேனே..?”

”ஐயோ… அதவே ஏன் நெனச்சுட்டிருக்கீங்க..? மறந்துருங்க…!!”

” எம்மேல கோபமில்லதான..?”

”சாமி சத்தியமா இல்லீங்க…” என்று என் தோளில் சாய்ந்து கொண்டாய்.

☉ ☉ ☉

குணா நிறைய உணர்ச்சிவசப்பட்டான். இன்னும் நிறையக் கவலைப் பட்டான். பொருமையின்றி அலைந்தான். சட்டெனத் திரும்பி என்னைக் கழிவிரக்கத்துடன் பார்த்தான்.

”என்னடா.. ஆச்சு… உனக்கு..?” என்று நான் கேட்டேன்.

”நத்திங்டா…” என்று வானத்தைப் பார்த்தான்.

நானும் பார்த்தேன். தேவதைகள் யாரும் தெண்படவில்லை. மேகங்களுக்கிடையே… கொஞ்சூண்டு நிலா தெரிந்தது..!

மத்யாணம் சாப்பாட்டுக்கு போய் வந்ததிலிருந்தே.. குணா ஒரு மாதிரியாகத்தான் இருந்தான்.

”அப்றம் ஏன்டா… இப்படி ஒரே டென்ஷனா இருக்க..?”

என்னை நேரடியாகப் பார்த்தான். அவனது வாய் எதையோ சொல்லத் தவித்தது. உதடுகள் நடுங்கின. முகத்தில் வியர்வை வழியத் தொடங்கியது. .!

”என்னடா பிரச்னை..?” என்றேன்.

தடுமாற்றத்துக்குப் பின்.. மெல்ல.. ”இ..இல்லடா..! உன்.. உன்கிட்ட.. நான் கொஞ்சம் பேசனும்..” என்றான்.

”ம்.. பேசுடா…” புன்னகைத்தேன்.

” அது… அது.. கொஞ்சம்.. தனியா…பேசனுன்டா..”

”ம்..ம்.! நாம இங்க தனியாத்தான இருக்கோம்..!”

”இங்க… வேண்டாம்..! வா..”

”எங்கடா..?”

என் கை பிடித்து இழுத்தான் ”கங்காக்கு போலாம் வா..!”

”பாருக்கா…?”

”ம்..ம்..வா..!”

”என்னடா… இப்படி திடுதிப்புனு..?”

”சொல்றேன் வா..”

” இருடா…பசங்க….”

”எவனும் வேண்டாம்..! நீ மட்டும் வா..!!”

”அப்படி என்னடா பிரச்னை..?”

”பொரு… வா…” என்னை இழுத்துக் கொண்டு போனான்.

எனக்கு குழப்பமாக இருந்தது. தண்ணியடித்து விட்டு தனியாக என்னுடன் பேசுமளவுக்கு.. என்ன பிரச்சினை..?
தாமரை என் வீட்டில் தங்குவது தெரிந்து விட்டதோ…? அது பற்றி ஏதாவது பேசப்போகிறானோ..?
சே… சே… அதற்கு இவன் ஏன் இவ்வளவு டென்ஷனாக வேண்டும்..? அல்லது… அவனது புது செட்டப்புடன் ஏதாவது பிரச்சினையோ..?

ம்ம்…பார்க்கலாம்…!!

ஸ்டேண்டுக்கு எதிரேதான் கங்கா. ஊட்டி ரோட்டைத் தாண்டி.. இரண்டே நிமிடத்தில் கங்கா பாருககுள் நுழைந்தோம்.
எனக்கு பீர்..! அவனுக்கு பிராண்டி..!
மடக்.. மடக்கென பிராண்டியைக் குடித்தான்.

நான் சிப்.. சிப்பாக பீரைப் பருகியவாறு கேட்டேன்.
”என்னடா பிரச்னை..?”

”நீ… கல்யாணம் பண்ணிப்பதான…?” என்று கேட்டான்.

சிரித்து விட்டேன்.. ”இதக்கேக்கவா… என்னை இங்க கூட்டிட்டு வந்த…?”

சிகரெட் பற்ற வைத்தான் குணா.
”கமான் ஐ..ஸே..! பண்ணிப்ப தான..?”

”நிச்சயமா..!! ஏன்.. நீ பண்ணிக்க மாட்டியா..?”

சீரியஸாக. ”யாரை..?” என்றான்.

”என்னடா கேள்வி இது…? ஒரு பொண்ணத்தான்..!!”

”ஐநோ…! பட்… உன் மைண்ட்ல… எவளாவது இருக்காளா..?”

”என் மைண்டுலயா…? என்னடா.. அப்படி இருந்தா… உனக்கு தெரியாதா..?”

”ரிலேட்டிவ்ஸ்ல யாராவது..?”

”ரிலேட்டிவ்ஸா..? எனக்கா..? அதவிடு.. உனக்கு இப்ப என்னடா பிரச்சனை..?”

புகை ஊதினான் ”ஒரு பொண்ணு இருக்கு… பண்ணிக்கறியா..?”

”பொண்ணா… நீ எப்படா புரோக்கறான..?” சிரித்தேன்.

சீரியஸாக”என்ன சொல்ற..?” என்று கேட்டான்.

”சரி… நா பண்றது இருக்கட்டும் மேட்டருக்கு வா..”

”நா பேசறதுதான் மேட்டர்…!! கம் டு த பாய்ண்ட்..! பண்ணிக்கறியா..?”

”யார்ரா… அப்படி..?”

”அழகானவ… படிச்சவ… கொஞ்சம் வசதியானவ… நிச்சயமா அவள உனக்கும் புடிக்கும். ..”

”அப்படியா…? யார்றா… அவ..?”என்று நான் கேட்க..

கண்களை அழுத்தமாக மூடித்திறந்தான். என்னைப் பார்த்து நடுங்கும் குரலில் சொன்னான்.
”என் தங்கச்சி…!! நிலா..!!”

-சொல்லுவேன்…..!!!!

– கருத்துக்களைச் சொல்லவும்.. நண்பர்களே…..!!!!

Comments