அன்புள்ள ராட்சசி – பகுதி 18

“ஹேய்.. நாளைக்கு அந்த ‘பேச்சி பெருங்காயம்’ ஷூட்டிங் இருக்குடா.. நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போறேன்ற..??” சாலமன் திடீரென ஞாபகம் வந்தவனாய் சொன்னான்.

“ஆமாண்டா.. நாளைக்கு விட்டா.. அப்புறம் பரவை முனியம்மா கால்ஷீட் கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்..!! அப்புறம்.. அந்த மோகன்ராஜ் கெடந்து தையதக்கான்னு குதிப்பான்.. பே..பேசாம நீ ப்ளானை கேன்ஸல் பண்ணிடு மச்சி..!!” என்றான் வேணு, எப்படியாவது அசோக்கின் ஆசையில் மண்ணை போட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஹேய்.. அதான் கிஷோர் இருக்கான்ல.. எல்லாம் அவன் பாத்துப்பான்..!! ஏன்னா..” அசோக் கேஷுவலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“அவன்தான் இளிச்சவாயன்..!!!!” என்றான் கிஷோர் கடுப்புடன்.

“என்ன மச்சி இப்படி சொல்லிட்ட.. என் உயிர் நண்பன்னு சொல்ல வந்தேண்டா..!!”

“ம்க்கும்.. ரெண்டும் ஒண்ணுதான்..!!”

“ஹேய்.. ப்ளீஸ்டா..!! ஃபர்ஸ்ட் டைம் நானும் அவளும் வெளில போறோம்.. கொஞ்சம் உன் ப்ரோக்ராம் கேன்ஸல் பண்ணிட்டு இதை கவனிச்சுக்கோயேன்.. ப்ளீஸ்..?? நீயும் சங்கியும் ஊர் சுத்த போறப்போலாம்.. எத்தனை தடவை உன்னோட வேலையும் சேர்த்து நான் கவனிச்சிருப்பேன்.. அதெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோ மச்சி..!!”

“சரி சரி.. போய்த்தொலை.. ஐ வில் டேக் கேர்..!!”

“தேங்க்ஸ் மச்சி..!!” அசோக் கிஷோரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் இப்போது ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

“ஹ்ம்ம்.. உங்க வண்டி ஓவர் ஸ்பீடா போற மாதிரி எனக்கு தோணுது அசோக்.. பாத்து.. எங்கயாவது ஆக்சிடண்ட்னு முட்டிக்கிட்டு நிக்கப் போவுது..!!”

“என்னடா சொல்ற..??”

“ஆமாம்.. பேசுன மொத நாளே ஐ லவ் யூ சொல்லிக்கிட்டிங்க.. இப்போ மூணாவது நாளே ஊர் சுத்த கெளம்பிட்டிங்க.. ரொம்ம்ப ஸ்பீடா போறீங்கடா.. அதான் சொல்றேன்..!!” சாலமனின் பேச்சில் பொறமை மிதமிஞ்சிப் போயிருந்தது. அதை புரிந்து கொண்ட அசோக் நக்கலான குரலில் சொன்னான்.

“ஹாஹா..!! பொறாமை..???? ஹ்ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. ஆனா அதுக்குலாம் நாங்க ஒன்னும் செய்ய முடியாது..!! ம்ம்ம்.. இந்த ரெண்டு நாள்லயே அவளைப் பத்தி நான் எவ்வளவோ புரிஞ்சுக்கிட்டேன்.. அதேமாதிரி.. இனிமே வர்ற ஒவ்வொருநாளும் அவளைப் பத்தி இன்னும் என்னன்னவோ புரிஞ்சுக்கப் போறேன்..!! யு ஜஸ்ட் வெயிட் அண்ட் ஸீ..!!”

அத்தியாயம் 11

நாள் – 3

காலை 9.45 மணி..!! அசோக்கும் மீராவும்.. அடையாறு கஸ்தூர்பா நகரில்.. ஏழாவது மெயின் ரோடும், எட்டாவது மெயின் ரோடும்.. முட்டிக்கொள்கிற இடத்தில் சாலையோரமாக நின்றிருந்தார்கள்.!!

“குட் மார்னிங்.. நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்..!! எங்க.. சொல்லு பார்ப்போம்..??”

“கு..குட் மார்னிங்.. நா..நான் அனோபா விநாதை விடுதில..” அசோக் சொல்லி முடிக்கும் முன்பே, அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டு வைத்தாள் மீரா.

“ஆஹ்ஹ்ஹ்….!!!!” அசோக் வலி தாங்காமல் தலையை தேய்த்துக் கொண்டான்.

“த்தூ.. இத்தனை வயசாச்சு.. இன்னும் பேச கத்துக்கல நீ..!! ஒரு நாலுவரி.. அதை மனப்பாடம் பண்ண வக்கு இல்ல..??”

“ஷ்ஷ்ஷ்.. ஸாரி மீரா.. டங் ஸ்லிப் ஆயிடுச்சு.. இரு.. திரும்ப சொல்றேன்..!!”

“ம்ம்.. சீக்கிரம்..!! டைம் வேஸ்ட் ஆகிட்டு இருக்கு..!!”

“கு..குட் மார்னிங்.. நா..நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்.. எங்க விடுதி சார்பா ஒரு பெரிய இசை நிகழ்ச்சி நடத்த நெனைச்சிருக்குறோம்.. எ..எங்க விடுதில இருக்குற மாற்று திறனாளிகளை மட்டும் வச்சே.. இந்த இசை நிகழ்ச்சியை நடத்தப் போறோம்.. ரொம்ப ரொம்ப வித்தியாசமான.. நீங்க கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி..!! அ..அதுக்கான என்ட்ரன்ஸ் டிக்கெட்தான் ஸார் இது.. ஒரு டிக்கெட்டோட விலை.. ஜஸ்ட் பிஃப்ட்டி ருபீஸ்தான்..!! இதை நீ வாங்கிகிட்டா.. உங்களோட ஒரு நாள் ஈவினிங்க சந்தோஷமா கழிச்ச மாதிரியும் இருக்கும்.. எங்க விடுதில இருக்குற நெறைய ஆதரவற்ற குழந்தைங்களுக்கு உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும்..!! ப்ளீஸ் ஸார்.. உங்களோட உதவி எங்களுக்கு தேவை..!!” அசோக் தட்டுதடுமாறி சொல்லி முடிக்க,

“ஹ்ம்ம்… குட்..!! இந்தா.. இதுல நூறு டிக்கெட் இருக்கு.. நீ இந்தப்பக்கம் இருக்குற ஏரியாலாம் எடுத்துக்கோ.. நான் அந்தப்பக்கம்.. ஈவினிங் ஆறு மணிக்கு திரும்ப இதே எடத்துல மீட் பண்ணுவோம்.. சரியா..??”

“ம்ம்..!!”

“நல்லா ஞாபகம் வச்சுக்கோ.. ஆறு மணிக்குள்ள எல்லா டிக்கெட்டையும் வித்துட்டு.. ஐயாயிரம் ரூபா பணத்தோட வரணும்.. இல்லனா உன் பைக்கை காயலான் கடைல போட்டு காசை எடுத்துக்க வேண்டியதா இருக்கும்.. புரிஞ்சதா..??” மீரா பைக் சாவியை சுழற்றிக்கொண்டே சொன்னாள்.

“இ..இதுலாம் நல்லா இல்ல மீரா..!!” அசோக் பரிதாபமாக சொன்னான்.

“எதுலாம்..??”

“பார்க் பீச்னு சுத்தப் போறோம் நெனச்சுட்டு ஆசையா வந்தேன்.. இப்படி பாட்டுக்கச்சேரி டிக்கெட் விக்க சொல்றியே.. அதுவும் தெருத்தெருவா.. தனித்தனியா..!! அட்லீஸ்ட் சேர்ந்தாவது போகலாம்ல..??”

“நாம என்ன கொள்ளையடிக்கவா போறோம்.. சேர்ந்து போக சொல்ற..?? டொனேஷன் கேக்க போறோம்.. தனித்தனியா போனாத்தான் நெறைய பேரை மீட் பண்ணலாம்.. நெறைய பேரை மீட் பண்ணாத்தான் நெறைய டிக்கெட்டும் விக்க சான்ஸ் இருக்கு..!!”

“ப்ளீஸ் மீரா..!!”

“ப்ச்.. பைக் திரும்ப வேணுமா வேணாமா உனக்கு..??”

“வேணும்..!!

“அப்போ கெளம்பு..!!”

“நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல மீரா.. ஜாலியா ஊர் சுத்தலாம்னு கூட்டிட்டு வந்துட்டு.. இப்படி என் பைக்கை வாங்கி வச்சுட்டு மெரட்றியே..?? நீ பண்றதுலாம் தப்புன்னு உனக்கு தோணல..??”

“இல்ல.. தப்பு இல்ல.. நாலு பேருக்கு நல்லது நடந்தா.. எதுவுமே தப்பில்ல..!!” மீரா ‘நாயகன்’ கமல் போல சொல்ல,

“அய்யயையைய்யயே…!!” என்று அசோக் ‘காதல்’ பரத் போல தலையில் அடித்துக் கொண்டான்.

அன்று முழுதும் அசோக் வீதி வீதியாக அலைந்து திரிந்தான்..!! அடையாறு ஏரியாவின் இண்டு இடுக்கு, சந்து பொந்தெல்லாம்.. தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டான்..!! ஒவ்வொரு டிக்கெட்டையும் விற்று தீர்ப்பதற்குள்.. அசோக்குக்கு.. தாவு தீர்ந்தது.. தவிடு தின்ன வேண்டி இருந்தது.. தழை கீழாக நின்று டகீலா அடிக்க நேர்ந்தது..!! இலவசம் என்றதும் ‘ஈஈ’ என இளிக்கிற மனித இனம்.. நன்கொடை என்றதும் நாயைப் போல பார்க்கிற நிதர்சனத்தை.. கண்கூடாக கண்டு கொண்டான்..!!

“இல்லைங்க.. எதுவும் வாங்கறது இல்ல..!!” என்ன ஏது என்று, நின்று கேட்க கூட நேரமின்றி, அசோக்கின் முகத்தில் கதவை அறைந்துவிட்டு, தியாகம் சீரியல் பார்க்க விரைந்தாள் ஒரு இல்லத்தரசி.

“என்க்கு டமில் வராது.. ஐ டோன்ட் நோ இங்க்லீஷ் டூ..!!” வாய் கூசாமல் பொய் சொன்னான் ஒரு நடுத்தர ஆசாமி.

“ச்சே.. லீவ் நாள் ஆனாலே கையில நோட்டு எடுத்துட்டு கெளம்பி வந்துடுறானுக..!!” அசோக்கின் முதுகுக்கு பின்னால் முணுமுணுத்த முறுக்கு மீசை பெரியவர், அவனை பிச்சைக்காரன் போலத்தான் பாவித்தார்.

அசோக் அவ்வளவு அவமானங்களையும் தாங்கிக் கொண்டுதான் ஒவ்வொரு டிக்கெட்டாக விற்க வேண்டி இருந்தது. அடுத்தவர்களுடைய ஏளனப் பார்வை அவனுடைய தன்மானத்தை கிளறி விட்டாலும், மீரா மீதிருந்த காதலுக்காக பொறுத்துக் கொண்டான். ஆனால்.. அவனுடைய பொறுமையை ஒரு பேச்சிலர் பையன், மிக அதிகமாகவே சோதித்து விட்டான். ‘விடுதியில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்.. என்னென்ன வசதிகள் இருக்கின்றன.. எப்படி எல்லாம் நிதி திரட்டுகிறார்கள்..’ என்பது மாதிரி ஆயிரெத்தெட்டு கேள்விகள் கேட்டான். அசோக்கும் மீரா தந்த பிரவுசர் உதவியுடன் அவனுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு மேல் அசோக்கை கேள்வியால் துளைத்து எடுத்தவன், பிறகு

“ஸாரி பாஸ்.. ஆக்சுவலா நீங்க சொன்ன டேட்ல எனக்கு ஒரு முக்கியமான அப்பாயின்ட்மன்ட் இருக்கு.. இல்லனா கண்டிப்பா இந்த டிக்கெட் வாங்கிருப்பேன்..!! நீங்க ஒன்னு பண்ணுங்க.. நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் நீங்க நடத்தினா.. அப்போ வந்து என்னை மீட் பண்ணுங்க.. நான் கண்டிப்பா வாங்குறேன்.. ஓகேவா..??” என்று கூலாக சொல்லிவிட்டு பீர் டின் எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான். அசோக்கோ வெறியாகிப் போனான்.

“ஏண்டா.. நீ குடிக்கிற எம்பது ரூவா பீரு, இன்னும் அரை மணி நேரத்துல பாத்ரூம்ல மூத்திரமா போயிரும்.. ஆதரவு இல்லாத அநாதை புள்ளைங்களுக்கு, அம்பது ரூவா செலவழிக்க மாட்டியா நீ..??”

என்று அவனுடைய உச்சந்தலையிலே ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. தான் பிரதிநிதியாக வந்திருக்கிற அநாதை விடுதியின் பெயர் கெட்டுப் போகக் கூடாதே என்பதற்காக, பொறுமையாக எழுந்து வந்தான்.

ஆறுமணிக்கு அசோக்கும் மீராவும் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். மீரா அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று முடித்திருந்தாள். அசோக்கின் கையில்தான் ஆயிரம் ரூபாய்க்கான டிக்கெட் மீதம் இருந்தது. ஆனால் மீரா அதற்காக அவனை திட்டவில்லை.

“குட் அசோக்.. யு ஹவ் டன் ரியல்லி எ க்ரேட் ஜாப்..!!” என்று மனதார பாராட்டினாள்.

“சரி.. மிச்ச டிக்கெட்லாம் குடு..!!” என்று மீரா கேட்டபோது, அசோக் தரவில்லை. மாறாக பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினான்.

“இந்தா..!!”

“ஹேய்.. பரவால.. விக்க முடியலைன்றதுக்காக நீ பணம் தரவேண்டியது இல்ல.. அடுத்தவங்க வாங்கலன்னா அதுக்கு நீ என்ன பண்ணுவ..??”

“இல்ல மீரா.. இன்னைக்கு பூரா அலைஞ்சு திரிஞ்சதுல.. நான் ஒரு விஷயம் கத்துக்கிட்டேன்..!!”

“என்ன..??”

“நல்லது செய்ங்கன்னு நாலு பேர்ட்ட உதவி கேக்குறதுக்கு முன்னாடி.. நாம அதுக்கு தகுதி உள்ளவங்களா இருக்கணும்..!! அதுக்காகத்தான் மிச்ச டிக்கெட்லாம் நானே வாங்கிக்கிறேன்னு சொல்றேன்.. என் ஃப்ரண்ட்ஸ், ஃபேமிலி எல்லாரும் கூட்டிட்டு நான் அந்த பங்க்ஷன்க்கு போக போறேன்..!! இந்தா.. பணத்தை வச்சுக்கோ..!!” அசோக் மீராவின் கையில் பணத்தை திணிக்க, அவள்

“ச்சோ.. ச்ச்வீட்..!!”

என்றாள் அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு. பணத்தை வாங்கி பேகில் மொத்தமாக வைத்தவள், உள்ளே இருந்து அந்த பொம்மையை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள்.

“ம்ம்..”

“ஹேய்.. என்ன இது..??”

“ஆயிரம் ரூபா டிக்கெட்டை நீங்க ஒரே ஆளே மொத்தமா வாங்கினதால.. உங்களோட தாராள குணத்தை பாராட்டி.. எங்க விடுதி சார்பா நாங்க தர்ற ஒரு நினைவுப்பரிசு.. எங்க குழந்தைங்க தேங்கா நார்லயே செஞ்ச.. மூக்கு செவந்த கொரங்கு பொம்மை..!!”

“ஹாஹா.. இட்ஸ் க்யூட்..!!” அசோக் புன்னகையுடனே அந்த குரங்கு பொம்மையை கையில் வாங்கிக்கொண்டான்.

“சரி.. கெளம்பலாம்… அர்பனேஜ் போய் பணத்தை ஹேண்ட் ஓவர் பண்ணிடலாம்..!!”

“கெளம்பலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு உன்கூட சேர்ந்து ஏதாவது சாப்பிடனும் மீரா..!!” அசோக் சற்றே ஏக்கமாக சொன்னான்.

“அவ்வளவுதான..?? சாப்பிட்டா போச்சு.. வா.. நான் உனக்கு ட்ரீட் தர்றேன்..!!” மீராவும் உற்சாகமாகவே சொன்னாள்.

அன்று அவளுடன் சேர்ந்து ரோட்டோர தள்ளு வண்டிக்கடையில் குடித்த தேநீர், தேவாமிர்தமாய் தோன்றியது அசோக்கிற்கு..!!

மூன்றாம் நாளில் அசோக் புரிந்து கொண்டது: மீரா அப்படி ஒன்றும் புரிந்து கொள்ளவே முடியாத புதிர் அல்ல.

நாள் – 8

இடம்: ஃபுட்கோர்ட்

“ஹையோ.. ஸ்பூன் கீழ விழுந்துடுச்சு அசோக்.. கொஞ்சம் எடுத்து தர்றியா..??”

மீரா அவ்வாறு சொன்னதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக் எழுந்தான். கீழே குனிந்து அமர்ந்தான். அந்த ஸ்பூனை பார்வையாலேயே தேடி, கையை வைக்கவும் மீரா தன் காலை நகர்த்தி அவன் கைக்கருகே வைக்கவும் சரியாக இருந்தது. இவனுடைய கை அவளுடைய காலை தொட,

“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் மகனே..”

அசோக் தலையை நிமிர்த்தி பார்த்தான். மீரா தன் கைகள் இரண்டையும் உயர்த்தி அசோக்கை ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. அந்த அற்புதக் காட்சியை, தூரத்தில் இருந்த அசோக்கின் நண்பர்களும் கண்டுவிட்டனர்.

“ஹாஹா..!! அவ்ளோ பேர் இருக்குற பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ கால்ல விழுந்து கெஞ்சுற அளவுக்கு என்னடா மச்சி தப்பு பண்ணின நீ..??” ஆளாளுக்கு அசோக்கை கலாய்த்தனர்.

“ஹேய்.. அவ கால்லலாம் விழடா.. நம்புங்கடா..!!” அசோக் கதறியதை யாருமே பொருட்படுத்தவில்லை.

நாள் – 12

“எப்படி இருக்கு..?? நல்லா இருக்கா..?? பிடிச்சிருக்கா உனக்கு..??”

அசோக் தன் தலையை இப்படியும் அப்படியுமாய் திருப்பி, தன் காதுகளை மீராவிடம் ஆசையாக காட்டினான். அவனுடைய இரண்டு காதுகளிலும் சிவப்பு நிறத்தில் இரண்டு வளையங்கள்..!! ‘ஹேய் அசோக்.. எனக்கு.. இந்த காதுல வளையம் போட்டுக்குற பசங்களலாம் ரொம்ப பிடிக்கும்.. நீயும் அந்த மாதிரி போட்டுக்குறியா..?” என்று அதற்கு முன்தினம்தான் மீரா அசோக்கிடம் சொல்லியிருந்தாள். அதன் விளைவுதான் இது..!! ஆனால் நேற்று அப்படி சொன்னவள், இன்று அசோக்கின் காதுகளை பார்த்ததும் குபீரென்று சிரித்துவிட்டாள்.

“ஹாஹாஹாஹா..!!!”

அசோக் எதுவும் புரியாமல் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க, அவளோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அவனை பார்த்து கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஏ..ஏன் மீரா சிரிக்கிற..?? நல்லா இல்லையா..??” அசோக் பாவமாய் கேட்டான்.

“ரொம்ப கேவலமா இருக்கு..!! யாராவது ஏதாவது சொன்னா.. அப்படியே செஞ்சுடுவியா..?? உன் மூஞ்சிக்கு எது செட் ஆகும்னு உனக்கே தெரியாதா..?? ஹையோ ஹையோ..!! ஹாஹாஹாஹா..!!!” மீரா சிரித்துக்கொண்டே இருக்க, அசோக் அப்படியே நொந்து நூலாய் போனான்.

அசோக் புரிந்து கொண்டது: என்னை அசிங்கப்படுத்தி பார்ப்பதில் மீராவுக்கு ஏனோ ஒரு அலாதி ப்ரியம்.

நாள் – 16

இடம்: அதே ஃபுட்கோர்ட்

“ஹேய்.. வாங்கடா.. பயப்படாதிங்க..!! நீங்க நெனைக்கிற மாதிரி இல்லடா.. அவ ரொம்ப நல்லவ… உங்களை ஒன்னும் செய்ய மாட்டா… உங்களை பத்தி எல்லாம் நல்ல விதமா சொல்லி வச்சிருக்குறேன்.. உங்களை மீட் பண்ண அவ எவ்வளவு ஆசையா இருக்குறா தெரியுமா..? வாங்கடா.. வாங்க..!!”

தயங்கிய நண்பர்களை அசோக் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மீரா முன்பாக நிறுத்தினான். அவர்களும் அறுக்கப் போகிற ஆடு மாதிரி, மிரள மிரள விழித்துக் கொண்டே, நடுக்கத்துடன் அவள் முன் சென்று நின்றனர்.

“இ..இவங்கதான் என் ஃப்ரண்ட்ஸ் மீரா.. காலேஜ்ல எல்லாம் ஒரே க்ளாஸ்.. அப்போ இருந்தே நாங்க ரொம்ப க்ளோஸ்..!!” அசோக் ஆரம்பித்து வைக்க,

“ஹாய்.. ஐ’ம் கி..கிஷோர்..!!”

கிஷோர் ஒரு தயக்கத்துடனே கை நீட்டினான். மீரா முகமெல்லாம் பிரகாசமாய் சேரை விட்டு எழுந்தாள். கிஷோரின் கையைப் பற்றி குலுக்கிக் கொண்டே சொன்னாள்.

“ஹாய்.. நீங்கதான் கிஷோரா..?? அசோக் உங்களை பத்தி நெறைய சொல்லிருக்கான்..!! உங்களுக்கு ஃபோடாக்ராஃபில ரொம்ப இன்ரஸ்டாமே..??”

“ஹ்ம்ம்.. யெஸ்..!! அதெல்லாம் சொல்லிருக்கானா இவன்..??” கிஷோர் இளித்தான்.

“ம்ம்..!! காலேஜ் படிக்கிறப்போ.. லேடீஸ் ரெஸ்ட் ரூம் எப்படி இருக்கும்னு, போட்டோ எடுத்துட்டு வர்றதா ஃப்ரண்ட்ஸ்ட்ட பெட் கட்டி.. உள்ள ஏறி குதிச்சு.. அங்க எதிர்பாராத விதமா உங்க பிரின்ஸிபால் மேடத்தை மீட் பண்ணி.. கைல கேமராவோட கையும் களவுமா மாட்டிக்கிட்டு.. காலேஜ் மொத்தமும் உங்க மூஞ்சில காறி துப்புச்சாமே..??”

மீரா சிரிப்புடனே சொல்ல, கிஷோரின் முகம் பட்டென இருண்டது. பக்கவாட்டில் திரும்பி அசோக்கை முறைத்தான். அவனோ பாக்யராஜ் மாதிரி ஒரு அசட்டு பாவனையை வெளிப்படுத்தினான்.

“எவ்வளவு கேவலப்பட்டாலும் பரவாலன்னு.. இன்னும் அந்த கேமராவை விடாம, கெட்டியா பிடிச்சிருக்கீங்க பாத்திங்களா..?? ரியல்லி யு ஆர் க்ரேட்..!!” என்ற மீரா, வேணுவிடம் திரும்பி,

“நீங்க..??” என்றாள்.

“ஐ’ம் வேணு..!!” கிஷோருக்கு நேர்ந்ததை பார்த்து வேணுவிடம் அல்ரெடி ஒரு உதறல்.

“ஓ.. நீங்கதானா அது..?? வாவ்.. என்ன ஒரு மனவலிமை ஸார் உங்களுக்கு..?? அப்படி ஒரு சூழ்நிலைல கூட… ச்ச.. சான்ஸே இல்ல..!!”

“நீ..நீங்க எதை பத்தி சொல்றீங்க..?? எ..எனக்கு புரியல..!!”

“அதான் ஸார்.. நீங்க கோவா டூர் போயிருந்தப்போ.. லேடீஸ் மசாஜ் பார்லர்னு நாக்கை தொங்கப் போட்டுட்டு போய்.. கடைசில அவங்க எல்லாத்தையும் உருவிட்டு, உங்களை ஜட்டியோட விட்டுட்டு போயிட்டாங்களே.. அந்த இன்ட்ரஸ்டிங் இன்சிடண்ட் பத்தி சொல்லிட்டு இருக்குறேன்..!!”

இப்போது வேணு திரும்பி அசோக்கை முறைத்தான். அவன் வேணுவிடம் பார்வையாலே ‘ப்ளீஸ் மச்சி.. கொஞ்சம் பொறுத்துக்கோ..’ என்பது மாதிரி கெஞ்சினான்.

“கோவால.. கொட்டுற பனில.. இடுப்புல வெறும் ஜட்டியோட.. அஞ்சு கிலோமீட்டர் நடந்தே, ஹோட்டல்க்கு திரும்ப வந்து சேர்ந்திங்களாமே..?? வரே வா.. என்ன ஒரு அஞ்சா நெஞ்சு ஸார் உங்களுக்கு.. அப்படியே புல்லரிக்குது எனக்கு..!!”

அடுத்து என்ன நேரப் போகிறது என்று, சாலமனுக்கு இப்போது புரிந்து போனது. நைசாக அங்கிருந்து நழுவ முயன்றான். அதை கவனித்துவிட்ட மீரா, அவசரமாய் அவனை அழைத்தாள்.

“ஹலோ.. மிஸ்டர் சாலமன்.. எங்க ஓடுறீங்க.. வாங்க இங்க ..!!”

“அ..அது எப்படி..?? எல்லார்ட்டயும் ‘நீங்கதானா அது.. நீங்கதானா அது..’ன்னு கேட்டிங்க.. என்னை மட்டும் நான்தான் சாலமன்னு கரெக்டா கண்டுபுடிச்சுட்டிங்க..??”

“ஹலோ.. மிச்சம் இருக்குறது நீங்க மட்டுந்தான..?? நீங்க இவ்வளவு பெரிய அதிபுத்திசாலியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..!!”

“ஆ..ஆமால்ல.. ஸாரி..!!”

“ஆனா.. நீங்க ஒரு பயங்கர தைரியசாலின்னு எனக்கு நல்லா தெரியும்.. அசோக் சொல்லிருக்கான்..!!”

“ஓ..!! இஸ் இட்..?? அப்டிலாம் அவன் சொல்லிருக்க சான்ஸ் இல்லையே..??” சாலமன் இளித்தான்.

“சொன்னானே..?? நல்லா தண்ணியடிச்சுட்டு.. ஃபுல் மப்புல.. போலீஸ் ஜீப்பை நிறுத்தி லிஃப்ட் கேட்டு.. கான்ஸ்டபில் மடியிலயே படுத்து தூங்கி, போலீஸ் ஸ்டேஷன் வரை போய்.. நைட் ஃபுல்லா தங்கி இருந்து நல்லா வாங்கிட்டு வந்தீங்களாமே..??”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments