அன்புள்ள ராட்சசி – பகுதி 22

“ஓஹோ.. திருவிழா போயிட்டுத்தான்.. மூணு நாளா மேடம் எனக்கு கால் பண்ணலையா..??”

“ம்ம்.. ஆமாம்..!!”

“ஹ்ம்ம்.. வீட்ல யாரும் இல்லன்னதும் தண்ணியடிக்க ஆசை வந்துடுச்சாக்கும்..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஹாஹா.. ஆமாம் ஆமாம்..!!” மீரா பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினாள்.

“பரவால.. வீட்ல யாரும் இல்லனாலும் பரவால.. நான் கொண்டு போய் ட்ராப் பண்ணிர்றேன்..!! நீயாச்சு.. உன் வீடாச்சு..!!”

“ஏன்.. உன்கூட தங்க வச்சுக்க மாட்டியா..?? உன் ஆபீஸ்லதான் யாரும் இருக்க மாட்டாங்களே..??” மீரா ஒருவித குறும்பு சிரிப்புடன் கேட்டாள்.

“ஹ்ஹ.. நீ எதுக்கு இந்த கேள்வி கேக்குறேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! உனக்கு சந்தேகமே வேணாம்.. நான் ஒன்னும் அலைஞ்சான் இல்ல.. எனக்கு அப்படிலாம் எதும் ஆசை இல்ல.. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தா போதும்..!!”

“ச்சோ.. ச்ச்வீட்..!!”

“ஹாஹா.. போதும் போதும்.. இன்னைக்கு நெறைய ‘ச்சோ ச்ச்வீட்’ சொல்லிட்ட..!!”

சொல்லிவிட்டு அசோக் புன்னகைத்தான். மீராவும் போதை ஏறிய கண்களுடன், பற்கள் தெரிய பளீரென்று சிரித்தாள். அப்புறம் திடீரென முகத்தை சீரியசாக மாற்றிக்கொண்டு,

“அ..அசோக்..” என்றாள்.

“ம்ம்..!!”

“நா..நான்.. நான்.. உன்கிட்ட..”

“என்கிட்ட..??”

“ஒ..ஒரு உண்மையை மறைச்சுட்டேன்.. ஸாரி..!!” மீரா சொல்ல, அசோக் இப்போது குழப்பமாக அவளை ஏறிட்டான்.

“எ..என்ன.. எதை மறைச்சுட்ட..??”

“ஆக்சுவலா.. நான் மறைக்கனும்னு மறைக்கல..!!”

“எ..என்னன்னு சொல்லு..!!”

“சொ..சொன்னா உனக்கு ஷாக்கா இருக்கும்.. நம்பவே மாட்ட..!!”

“ப்ச்.. ப்ளீஸ் மீரா.. வெ..வெளையாடாத.. என்னன்னு சீக்கிரமா சொல்லு..!!”

“ம்ம்ம்ம்… நா..நான்.. அல்ரெடி ட்ரிங்க்ஸ்லாம் சாப்பிட்ருக்கேன்னு சொன்னேன்ல.. அது பொய்.. இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்..!!” மீரா அவ்வாறு சொல்ல, அசோக்குக்கு பொசுக்கென்று போனது.

“ம்க்கும்.. இவ்வளவுதானா..?? இதுல ஷாக் ஆகுறதுக்கு என்ன இருக்கு.. ‘இங்க பட்டை சாராயம் கெடைக்குமா’ன்னு நீ கேட்டப்போவே எனக்கு அது தெரிஞ்சு போச்சு..!!”

“ஓ..!!”

“ஃபர்ஸ்ட் டைம் அதுவுமா.. சொல்ல சொல்ல கேட்காம, கன்னாபின்னான்னு குடிச்சிருக்க.. ஹ்ம்ம்… என்ன ஆகப் போகுதோ..??”

அசோக் இருவருக்கும் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தான். ஆர்டர் செய்தபோது ‘அப்படி இருக்க வேண்டும்.. இப்படி இருக்க வேண்டும்..’ என்று பேரருக்கு ஆயிரம் நிபந்தனைகளும், குறிப்புகளும் கொடுத்த மீரா, ஃப்ரைட் ரைஸ் வந்தபோது கூட ஆர்வமாகவே சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால்.. இரண்டு வாய் எடுத்து வைத்ததுமே..

“எனக்கு போதும்.. பசிக்கல..!!” என்று முகத்தை சுளித்தாள்.. முரண்டு பிடித்தாள்..!!

“ப்ச்.. ட்ரிங்ஸ் அடிச்சா நல்லா சாப்பிடனும்… இல்லனா வயிறு கெட்டு போயிடும்..!! இந்தா.. சாப்பிடு.. சாப்பிடுன்றேன்ல..??” அசோக்கே அவளுக்கு ஊட்டி விட வேண்டியது இருந்தது.

ஒருவழியாக சிணுங்கிக் கொண்டே மீரா சாப்பிட்டு முடித்தாள்.. அசோக்கும் சாப்பிட்டு முடித்து, பில் கொண்டு வர சொன்னான்..!! சாப்பாடு உள்ளே சென்றதில் இருந்தே.. மீராவிடம் சாமியாட்டமும் அதிகமாகவே இருந்தது..!! மொத்தமாய் உள்ளே தள்ளிய விஸ்கி எல்லாம்.. இப்போது ஒன்றுகூடி முழு வீரியத்தில் வேலையை காட்டின..!! அவளுடைய கூந்தல் எப்போதோ கலைந்து போயிருந்தது.. முடிக்கற்றைகள் எல்லாம் அதது இஷ்டத்திற்கு அலைபாய்ந்தன..!! கண்கள் முக்கால்வாசி செருகிப் போயிருக்க.. தலை ஒரு இடத்தில் நில்லாமல், அங்கும் இங்கும் அல்லாடியது..!! கீழுதட்டை வேறு அவ்வப்போது வாய்க்குள் மடித்து வைத்து.. ‘பச்சக்.. பச்சக்..’ என சுவைத்துக் கொண்டாள்..!!

பில் கொடுத்த பேரருக்கு, அசோக் கார்ட் கொடுத்தான். தேய்த்து முடித்த கார்டை மீண்டும் பில்புக்குக்குள் இட்டு, பேரர் டேபிளில் வைத்து சென்றான். கார்டை கலெக்ட் செய்து கொண்ட அசோக், டிப்ஸ் பணத்தை புக்குக்குள் செருகிக் கொண்டிருக்கும்போதுதான்..

“டமார்..!!” என்று டேபிள் சப்தம் எழுப்பியது.

இந்தமுறை காலிக்ளாஸ் வைக்கப்பட்டதால் வந்த சப்தம் அல்ல.. மீராவின் கபாலம் சென்று மோதியதால் எழுந்த சப்தம்..!! போதை மிகுந்து போய்.. டேபிளிலேயே தலைகுப்புற மட்டை ஆகியிருந்தாள் மீரா..!! அசோக் பதறிப் போனான்.. உடனடியாய் அவளை அள்ளி கையிலெடுத்தான்.. அவளுடைய கன்னத்தில் பட் பட்டென தட்டியவாறே கேட்டான்..!!

“மீரா..!! ஹேய் மீரா.. ஹேய்.. என்னாச்சுமா..??”

அவன் கேட்பதை புரிந்து கொண்டு பதில் சொல்கிற சுவாதீனம் எல்லாம் மீராவுக்கு இல்லை. விழிகளை திறந்து மலங்க மலங்க பார்த்தாள். உதட்டை உள்ளே மடித்து சப்பு கொட்டினாள். பிறகு மீண்டும் இமைகள் செருகிக் கொள்ள, மயக்கத்திலோ நித்திரையிலோ மூழ்க ஆரம்பித்தாள்.

“ஹேய் மீரா.. ஹேய்.. கண்ணை தொறந்து பாரு..!!”

அசோக் திரும்ப திரும்ப அவளுடைய கன்னத்தை தட்டி, அவளுக்கு விழிப்பு கொணர முயன்றான். ம்ஹூம்..!! ஒரு புண்ணியமும் இல்லை..!! அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. அவளுடைய நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை..!! நடுவில் ஒருமுறை வாய்திறந்து ‘ரிப்பீட்..!!’ என்று உளறியதோடு மட்டும் சரி..!!

அசோக்குக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவஸ்தையாய் நெற்றியை பற்றி பிசைந்தான். ‘இப்படி ஃப்ளாட் ஆகி கிடக்கிறாளே.. இவளை எப்படி வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கப் போகிறேன்..?? அட்லீஸ்ட் அட்ரஸ் தெரிந்தாலாவது.. ஆட்டோவில் அள்ளிக்கொண்டு போய் போடலாம்..?? அதுவும் தெரியாதே..?? என்ன செய்யலாம் இப்போது..??’

அப்போதுதான் திடீரென அசோக்குக்கு அந்த ஐடியா மூளையில் உதித்தது. உடனே மீராவுடைய பேகை எடுத்தான். உள்ளே இருந்த செல்போனை எடுத்தான். கான்டாக்ட் லிஸ்ட் திறந்தான். ‘இவளுடைய ஃப்ரண்ட்ஸ் யாருக்காவது ஃபோன் செய்து உதவி கேட்கலாம்.. அட்ரஸ் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்..!!’ என்பது மாதிரியான ஐடியா.

கான்டாக்ட் லிஸ்ட் திறந்து பார்த்தவன்.. ஒருகணம் குழம்பிப் போனான்.. அப்படியே ‘பே’ என்று செல்ஃபோனையே பார்த்தான்..!! ‘மட்டி, மடையன், முட்டாள், மூடன்’ என.. பதிவு செய்யப்பட்டிருந்த கான்டாக்ட்கள் எல்லாமுமே.. பரமார்த்த குரு சீடர்களின் பெயர்கள் ரேஞ்சுக்கு இருந்தன..!! அசோக் இப்போது பக்கவாட்டில் திரும்பி, மீராவை பார்த்து முறைத்தான்..!!

“ஆனாலும் உனக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாதுடி..!!” என்று வாய்விட்டே சொன்னான்.

‘சரி.. இத்தனை பேரில் இப்போது யாருக்கு கால் செய்வது..??’ ஓரிரு வினாடிகள் யோசித்த அசோக், பிறகு ‘ஓகே.. கேனைப்பயலிடம் ஹெல்ப் கேட்கலாம்..’ என்று முடிவுக்கு வந்தான். கேனைப்பயல் என்ற பெயரில் இருந்த கான்டாக்டுக்கு கால் செய்தான்.. ரிங் சென்றது.. அதே நேரம்..

“Sexy lady on the floor.. Keep you coming back for more..!!” என அசோக்கின் செல்போனும் அலறியது.

‘அடிங் கொய்யால..’ என்பது போல அசோக் நொந்து போனான்..!! ‘நான்தான் அந்த கேனைப்பயலா..??’ என்று மீராவின் பக்கமாய் திரும்பி, முன்பை விட அதிகமாக அவளை முறைத்தான். ‘அன்-கான்சியஸாதான கெடக்குறா.. அப்படியே கொமட்டுல நாலு குத்து குத்தினா என்ன..??’ என்று கூட தோன்றியது. அப்புறம் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு, லிஸ்டில் அடுத்ததாக இருந்த மஞ்சமாக்கானுக்கு கால் செய்தான். மீண்டும் அசோக்கின் செல்போனில் இருந்து பாட்டு சப்தம்..!!

அப்புறந்தான் அசோக்கின் மூளையில் ஒரு பொறி தட்டியது. உடனே கான்டாக்ட் லிஸ்ட் மொத்தத்தையும் கவனமாக ஆராய்ந்தான். சீக்கிரமே அந்த உண்மையை கண்டறிந்தான். எல்லா கான்டாக்டுகளுமே ஒரே எண்ணைத்தான் கை காட்டின.. அசோக்கின் எண்..!! ஒரே நம்பரையே விதவிதமான பெயர்கள் கொண்டு ஸேவ் செய்திருந்தாள். குட் பாய்.. ஸ்வீட் பாய்.. ஹனிபனி.. என ஒருசில பெயர்கள் தவிர்த்து.. மற்ற எல்லாமே.. அரை லூஸு.. அடுப்பு வாயன்.. ஆஃப்ரிக்கா கொரங்கு.. என்பது மாதிரிதான் இருந்தன..!!

அசோக்குக்கு சிரிப்பதா, தலையில் அடித்துக் கொள்வதா என ஒன்றும் புரியவில்லை. ‘என்ன பெண் இவள்..?? இந்த மாதிரி லூஸுத்தனமான வேலை எல்லாம் செய்து கொண்டு.. என்னை கேனையன் என்கிறாள்..??’

என்ன செய்வது என்ற குழப்பத்துடன், அசோக் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

“இங்கயே ரூம் எடுத்துக்கங்க ஸார்.. எந்த ப்ராப்ளமும் வராது..!!”

“நீ..நீங்க.. எங்களை தப்பா புரிஞ்சுக்கலைல..??”

“சேச்சே.. எனக்கு உங்க சிச்சுவேஷன் நல்லா புரியுது ஸார்.. அதான் சொல்றேன்.. இந்த நெலமைல இவங்களை வெளில கூட்டிட்டு போறது நல்லது இல்ல.. நைட் இங்கயே ஸ்டே பண்ணிட்டு காலைல கெளம்புங்க..!! இது டீசண்டான ஹோட்டல்.. நீங்க எதும் பயப்பட தேவை இல்லன்னு சொன்னேன்..!!”

பேரர் தந்த நம்பிக்கையில், அன்று இரவு அங்கேயே தங்கிக் கொள்வது என்று அசோக் முடிவு செய்தான். வீட்டுக்கு ஃபோன் செய்து, ‘கொஞ்சம் வேலை இருக்கு மம்மி.. நைட் ஆபீஸ்லயே தங்கிக்கிறேன்..’ என்றான். மீராவுடைய பேகை தோளில் மாட்டிக் கொண்டான். அவளை பூப்போல அள்ளி, கைகளில் ஏந்திக் கொண்டான். ரூம் சர்வீஸ் பையன் வழி நடத்த, மீராவை தூக்கிக் கொண்டே மாடிப்படிகள் ஏறினான்.

“ஏ..ஏன்.. படிக்கட்டுல.. பைக் ஓட்டுற..??”

மீரா உளறிக்கொண்டே வந்தாள். அறைக்குள் நுழைந்ததும் அசோக் அவளை மென்மையாக மெத்தையில் கிடத்தினான். பருவச்செழிப்புடன் படுக்கையில் மல்லாந்திருந்த மீராவிடமிருந்து.. பார்வையை அகற்ற முடியாமல்.. ஏக்கமாய் பார்த்த ரூம் சர்வீஸ் பையனை.. ‘ஏய்..’ என்று அதட்டினான்..!!

“வே..வேற.. வேற எதும் வேணுமா ஸார்..??” அவன் சமாளித்துக் கொண்டு கேட்டான்.

“கொஞ்சம் தண்ணி மட்டும் குடு..!!”

“ஓகே ஸார்..!!”

அந்தப்பையன் கதவு திறந்து வெளியேறும் வரை, அசோக் அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். அப்புறம் கதவை லாக் செய்யலாம் என்று வாசல் நோக்கி நடந்தான். திடீரென அவனுடைய முதுகுப்புறம் இருந்து..

“அ..அசோக்..!!”

என்று சத்தம் கேட்டதும், அப்படியே நின்றான். திரும்பி பார்த்தான். மீரா இப்போது படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தாள். இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து, அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு தலையை பரபரவென சொறிந்து கொண்டே..

“எ..எங்க இருக்கோம்..??” என்றாள்.

“ஹோட்டல் ரூம்..!!”

“அப்போ.. வீடு..??”

“அதான் உன் வீட்டுல யாரும் இல்லன்னு சொன்னேல.. நைட்டு இங்க தங்கிட்டு காலைல போலாம்..!!”

அசோக் அவ்வாறு சொன்னதுமே மீராவின் முகம் பட்டென மாறியது. ஒருமாதிரி பரிதாபமாக முகத்தை மாற்றிக் கொண்டாள். அவளுடைய மூக்கு திடீரென விசும்பியது. கண்கள் பட்டென கலங்கிப்போக, அழ ஆரம்பித்தாள்.

“ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..”

“ஹேய்.. மீரா.. எ..என்னாச்சு.. ஏன் அழற..??” அசோக் சற்றே பதறிப்போய் அவளிடம் ஓடினான்.

“அழனும் போல இருக்கு..!!”

“ஏன்..??” இரு கைகளாலும் அவளுடைய முகத்தை மென்மையாக தாங்கி பிடித்தவாறு அசோக் கேட்க,

“எ..எனக்கு.. எனக்கு யாரும் இல்ல அசோக்..!!” மீரா கேவலுடன் பரிதாபமாக சொன்னாள்.

“ஹையோ.. என்ன பேசுற நீ..?? அதான்.. உனக்கு..”

“எ..எனக்கு அழுகை அழுகையா வருது.. போ..!!”

“ப்ச்.. என்னமா நீ.. அழாத ப்ளீஸ்.. கண்ணை தொடைச்சுக்கோ..!! எ..என்ன பிரச்னை இப்போ..??”

“என்னை பத்தி கவலைப்பட யாரும் இல்ல.. என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!”

“ச்சே.. என்ன பேச்சு இது..?? வீ..வீட்ல எதாவது பிரச்னையா..??”

“ம்ம்..!!”

“அதுக்காக இப்படிலாம் பேசுறதா..?? நா..நான்.. நான் ஒருத்தன் இருக்குறப்போ.. இப்படிலாம் பேசாத மீரா..!! உன் மேல நான் எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கேன்னு உனக்கு புரியலையா..?? நான் இருக்கேன்டா.. நான் இருக்கேன் உனக்கு..!!” அசோக் சொல்ல, மீரா இப்போது அவனை சற்று வித்தியாசமாக பார்த்தாள்.

“நெஜமா..??”

“ம்ம்..!!”

“என் மேல ப்ரியமா இருப்பியா..??”

“இருப்பேன்..!!”

“எப்போவும் என் கூடவே இருப்பியா..??”

“இருப்பேன்டா..!!”

அசோக் உறுதியாக சொல்ல, முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளியுடன் மீரா அவனையே பார்த்தாள். ஒரு சில வினாடிகள்..!! பிறகு மீண்டும் அவளுடைய முகம் பட்டென இருண்டது. கண்களில் முணுக்கென்று நீர் துளிர்க்க..

“இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!” என்று விசும்பலாக சொன்னாள்.

“ஹையோ.. நான்தான் சொல்றேன்ல..?? சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??”

அசோக் தன் தலைமீது கைவைத்து சத்தியம் செய்தான். மீரா இப்போது அழுகையை நிறுத்தினாள். மூக்கு மட்டும் விசும்ப, அசோக்கின் முகத்தையே அமைதியாக பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ.. உதடுகள் பிரித்து.. மெல்ல..

“அசோக்..!!” என்றாள் ஏக்கமாக.

“ம்ம்..”

“என்னை கட்டிப் புடிச்சுக்கோ..!!”

கைகள் ரெண்டையும் அசோக்கை நோக்கி நீட்டி.. ‘என்னை தூக்கிக்கோ மம்மி..’ என்று சிறுகுழந்தை ஒன்று தாயிடம் கெஞ்சுவது போல.. ஏக்கமாக சொன்னாள் மீரா..!! அசோக்கின் மனதுக்குள் இப்போது காதல் வெள்ளம் கரை புரண்டு ஓட.. கனிவாக அவளை ஒரு பார்வை பார்த்தான்..!! இதுவரை மீராவை அவன் கட்டியணைத்ததே இல்லை. அவன் மனதுக்குள் ஆசையிருந்தும், மீராவின் குணமறிந்து அந்த ஆசையை அவன் வெளிப்படுத்தியதே இல்லை. வீதியில் நடந்து செல்கையில் விரல்களை கோர்த்துக் கொள்ள கூட, அவளும் அனுமதித்தே இல்லை. இப்போது அவளே தன்னை அணைத்துக்கொள் என்று அழைப்பு விடுக்க, ஆரம்பத்தில் சிறிது தயங்கிய அசோக், பிறகு அவளை ஆரத் தழுவிக் கொண்டான். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தது மாதிரி அவனை அப்படியே இறுக்கிக் கொண்டாள். தனது மூக்கினை அவனுடைய மார்பில் வைத்து சரக் சரக்கென தேய்த்தவள், பிறகு அந்த மார்பிலேயே முகம் சாய்த்து படுத்துக் கொண்டாள்.

“என் மேல உனக்கு கோவம் இல்லைல..??”

“ம்ஹூம்..!!”

“என்னை விட்டு போயிட மாட்டேல..??”

“ம்ஹூம்..!!”

“நான் என்ன பண்ணாலும்..??”

“ஹஹ.. நீ என்ன பண்ணாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.. போதுமா..??”

“ம்ம்ம்ம்..!!”

மீரா இப்போது இன்னும் இறுக்கமாக அசோக்கை அணைத்துக் கொண்டாள். மழையில் நனைந்திட்ட ஆட்டுக்குட்டியென, அவள் தன் மார்போடு அண்டியிருப்பது, அசோக்கிற்கு ஆனந்தமாகவே இருந்தது. அவளுடைய கூந்தலை மென்மையாக வருடி கொடுத்தான். அவனுடைய மனதில் ஒருவித ஆச்சரியம்..!! எந்த நேரமும் முகத்தில் முறைப்பும், பேச்சில் திமிருமாக தெரிகிற மீராவுக்குள்.. இப்படி அன்புக்கு ஏங்குகிற ஒரு குழந்தை இருக்கிறாள் என்பது.. முதன் முறையாக அவனுக்கு தெரிய வந்ததுதான் அந்த ஆச்சரியத்துக்கு காரணம்..!!

‘பாவம்.. இவளுடைய குடும்பத்தினர் இவளை புரிந்து கொள்ள தவறிவிட்டனர் போலும்.. அன்பை வெளிக்காட்டுகிற கலையை அவர்கள் அறியவில்லை போலும்.. எப்படி ஏங்கிப்போய் கிடக்கிறாள்..?? இவளுடைய முரட்டுத் தனத்துக்கெல்லாம் அதுதான் காரணமா..?? அன்பு கிடைக்காத ஏக்கம் எல்லாம் ஆத்திரமாய் வெளிப்படுகிறதோ..?? கலங்காதே கண்மணியே.. நானிருக்கிறேன் உனக்காக.. உன்னை நேசிக்க.. உன் குணங்களை பூஜிக்க..!! எனக்கென உன் சுயத்தை நீ இழக்க வேண்டாம்.. திட்டுவாய்.. வாங்கிக் கொள்கிறேன்.. அடிப்பாய்.. தாங்கிக் கொள்கிறேன்..!! உன் கோபம் பொறுக்கிறேன்.. உன் ஆத்திரத்தை அலட்சியம் செய்கிறேன்.. எனது அன்பை உனக்கு உணர்த்துகிறேன்.. என் அம்மா சொன்னது போல..!!’

“ஸார்.. தண்ணி..!!”

இயல்பாக சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்த ரூம் சர்வீஸ் பையன், அசோக்கும் மீராவும் இருந்த கோலத்தை கண்டு, அப்படியே மிரண்டு போனான். அவனையும் அறியாமல் அவனுடைய வாய் ‘ஓ’வென பிளந்து கொண்டது. அசோக்கிடமும் உடனடியாய் ஒரு பதற்றம். எந்தக் கவலையும் இல்லாமல் அவனை இறுக்கிக் கொண்டு கிடந்த மீராவின் பிடியில் இருந்து, அவசரமாய் விலகிக் கொள்ள முயன்றான்.

“ஹேய்.. மீரா..”

“ம்ஹூம்..!!” அவள் அவனை இன்னும் அதிகமாகவே இறுக்கினாள்.

“ப்ச்.. விடு..!!”

“ம்ஹூம்..!!”

“ப்ளீஸ் மீரா.. விடுன்றேல..??”

மீராவை வலுக்கட்டாயமாக உதறிக்கொண்டு அசோக் எழுந்தான். நடந்து சென்று பையனின் கையிலிருந்த தண்ணீர் ஜாடியை வாங்கிக் கொண்டான்.

“வே..வேற ஏதாவது..??” கேட்கும்போதே அவனின் பார்வை கட்டில் மீதிருந்த மீராவிடம் போய் வந்தது. அதை கவனித்து எரிச்சலான அசோக்,

“ப்ச்.. ஒன்னும் வேணாம்.. கதவை லாக் பண்ணிட்டு கெளம்பு.. காலைல வரை இந்தப் பக்கமே வராத..!!” என்றான் கடுப்பாக.

“ம்ம்.. புரியுது ஸார்.. வர்றேன்..!!” அவன் ஒரு நமுட்டு புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர முயல,

“ஹேய்..” அசோக் அவனை நிறுத்தினான்.

“என்ன ஸார்..??”

“நீ.. நீ நெனைக்கிற மாதிரிலாம் இங்க ஒன்னும் இல்ல.. பு..புரியுதா..??”

“ஹிஹி.. சரி ஸார்.. புரியுது.. ஹிஹி..!!”

அவன் நக்கலாக சிரித்துவிட்டு கிளம்பியதிலேயே, நம்பவில்லை என்பது அசோக்கிற்கு புரிந்து போனது. ‘ப்ச்..’ என்று சலிப்பானவன் தலையை சொறிந்து கொண்டான். கதவு சரியாக லாக் ஆகியிருக்கிறதா என, ஒருமுறை சென்று உறுதி செய்து கொண்டான். கையிலிருந்த ஜாடியை கொண்டு போய் டேபிளில் வைத்தான். வைத்துவிட்டு திரும்பியவன், சற்றே ஷாக் ஆனான். மீரா அவனுக்கு வெகு நெருக்கமாக நின்று கொண்டிருந்தாள். அவளுடைய உடல் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்க, முகத்தில் ஏதோ ஒரு அவஸ்தை..!!

“எ..என்ன மீரா..??”

“வா..” முடிக்கும் முன்பே ‘உப்ஹ்’ என்று அவளுக்கு எதுக்களிப்பு ஏற்பட, முகத்தை சுருக்கி கண்களை மூடிக் கொண்டாள்.

“வாட்டர் வேணுமா..??”

மீரா இப்போது பேசவில்லை. ‘ம்ஹூம்’ என்பது போல தலையை அசைத்தவள், முகத்துக்கு முன் கையை வைத்து சுழற்றி சைகையால் ஏதோ சொல்ல முயன்றாள். அசோக்குக்கு புரியவில்லை.

“பு.புரியல மீரா.. என்னன்னு வாயை தெறந்து சொன்னாத்தான புரியும்..??”

“வா..வாமிட்..”

சொல்லி முடிக்கும் முன்பே.. மீராவின் நெஞ்சுக்குள் இருந்து ஒரு உந்துதல்..!! மார்பின் மீது கைவைத்து பிடித்துக் கொண்டவள்.. ‘ஓவ்..!!’ என்று.. வாய் திறந்து வாந்தியே எடுத்துவிட்டாள்.. அப்படியே தன் முன் நின்ற அசோக்கின் மீது..!! அவன் வலுக்கட்டாயமாக அவளுடைய வாய்க்குள் திணித்த உணவெல்லாம்.. ஆல்கஹாலுடன் சேர்ந்து வாந்தியாக வெளிப்பட்டிருந்தது.. அசோக்கின் முகம்.. அவனுடைய டி-ஷர்ட்.. பேன்ட்.. எல்லாம்..!! செய்வதறியாது திகைத்த அசோக்.. முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு.. பரிதாபமாக நின்றிருந்தான்..!!

“ஸாரி அசோக்.. ஸாரி..!!”

குற்ற உணர்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. மீராவுக்கு மீண்டும் குடலை புரட்ட.. வாயை மூடிக்கொண்டு ‘உப்ஹ்’ என்று மீண்டும் ஒரு குமட்டல்..!! அவள் திரும்பவும் வாந்தி எடுக்கப் போகிறாள் என்பதை.. இந்தமுறை அசோக் முன்கூட்டியே புரிந்து கொண்டான்..!! ஆனால்.. நின்ற இடத்தை விட்டு அவன் அசையவில்லை.. கண்களை மட்டும் இறுக்கி மூடிக் கொண்டான்..!!

“ஓவ்வ்..!!!!” மீரா மறுபடியும் அவன் மீது வாமிட் செய்தாள்.

அடுத்த நாள் காலை..

மீராவுக்குத்தான் முதலில் விழிப்பு வந்தது. விழிகளை திறப்பதற்கு முன்பே ‘வின்வின்’என்று தலை வலிப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. தலையை பிடித்துக்கொண்டு, கண்களை சுருக்கிப் பார்த்தாள். இடம் புதிதாக இருப்பதை அறிந்து ஒருகணம் துணுக்குற்றாள். இரவு மூன்று ரிப்பீட் வரை அவளுக்கு ஞாபகம் இருந்தது. மற்றவை எல்லாம் நினைவடுக்குகளில் சரியாக பதிந்திருக்கவில்லை.

‘என்ன ஆயிற்று அதன் பிறகு..?? எப்படி இங்கே வந்தேன்..??’

மீரா குழப்பத்துடனே தலையை திருப்ப, கீழே தரையில் படுத்திருந்த அசோக் பார்வையில் பட்டான். இவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான். மேலே போற்றியிருந்த போர்வை விலகியிருந்தது. இடுப்பில் ஒரு ஜட்டியை தவிர, வேறெதுவும் அவன் அணிந்திருக்கவில்லை. குளிரை தாங்க முடியவில்லை போலிருக்கிறது. கால்கள் இரண்டையும் மடக்கி வைத்து, கைகள் ரெண்டையும் ஒன்றாக்கி தொடைகளுக்குள் செருகி, குழந்தை போல படுத்திருந்தான்.

வெறும் ஜட்டியுடன் அவன் படுத்திருந்த கோலம்.. மீராவின் மூளையை சுரீர் என்று தாக்கியது.. சுருசுருவென ஒரு ஆத்திரம் அவளுக்குள்.. என்ன நடந்தது என்று நினைவில் இல்லாத குழப்பம்.. ஏதாவது நடந்திருக்குமோ என்று ஒரு பயம்.. தனது மயக்க நிலையை உபயோகப்படுத்தியிருப்பானோ என்று ஒரு சந்தேகம்.. எல்லாம் ஒன்று சேர்ந்து அவளை சூடாக்கி விட.. படுக்கையில் இருந்து விருட்டென எழுந்தாள்..!! கோல்கீப்பர் ஃபுட்பாலை ஓடிவந்து உதைப்பது போல.. அசோக்கின் புட்டத்திலேயே ஓங்கி ஒரு உதை விட்டாள்..!!

“எந்திரிடா..!!!”

“ஆஆஆஆ..!!”

அசோக் பதறியடித்துக் கொண்டு எழுந்தான். எழுந்ததுமே.. தன் எதிரில் மீரா நிற்பதையும்.. தன் உடலில் ஜட்டி தவிர வேறு ஆடை இல்லை என்பதையும்.. உடனடியாய் உணர்ந்து கொண்டான்..!! வெட்கத்தில் கூசிப்போய்.. தரையில் கிடந்த போர்வையை வாரி சுருட்டி எடுத்தான்.. தன் உடம்பில் அவசரமாய் சுற்றிக் கொண்டான்..!! மீராவின் பார்வைக்கு பயந்து.. சற்றே நகர்ந்து.. சுவரோரமாய் சென்று பம்மினான்..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments