அன்புள்ள ராட்சசி – பகுதி 24
“உன் ஆளுதான்டா.. கோவில்பட்டிதான அவ சொந்த ஊரு..?? பேர் கூட ஏதோ வீரலட்சுமின்னு கிஷோரும் சாலமனும் அன்னைக்கு சொன்னாங்களே..??” என்ற பவானி தம்பியிடம் திரும்பி,
“என்னடா.. கரெக்ட்தான..??” என்றாள்.
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
கிஷோர் அல்ரெடி வேறெங்கோ பார்வையை திருப்பி இருந்தான். அசோக் இப்போது பக்கவாட்டில் திரும்பி நண்பனை முறைத்தான். ‘ஏண்டா.. என் கேர்ள் ஃப்ரண்டுக்கு நீங்க நிக் நேம் வச்சு வெளையாடுறீங்களா..?? கோவில்பட்டி வீரலட்சுமியா..?? அவ முன்னாடி ஸ்டெடியா நிக்க கூட உங்களுக்குலாம் துப்பு இல்ல.. அவளுக்கு பட்டப்பேர் வச்சு கேலி பண்றீங்களா..?? குடுக்குறண்டா.. அவகிட்ட உங்களை போட்டுக் குடுக்குறண்டா..!!’ என்று மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டான். அப்புறம் பவானியிடம் திரும்பி,
“இல்லக்கா.. அவ சொந்த ஊரு கோவில்பட்டிலாம் இல்ல.. காரைக்குடி..!! அவ பேரு மீரா..!!” என்றான்.
“ஹையோ.. அசோக்..!! உனக்கு எத்தனை தடவை சொல்றது.. இனிமே அக்கான்னு கூப்பிடாதன்னு..?? மொறையை மாத்தாதடா..!!” பவானி பேச்சை வேறுபக்கம் திருப்பும் விதமாக சொன்னாள். அசோக்கோ பட்டென டென்ஷனாகிப் போனான்.
“யாரு..?? நானா மொறையை மாத்தினேன்..?? உங்க தம்பி மாத்திட்டான்க்கா..!! எட்டு வருஷமா உங்களை அக்கான்னு கூப்பிட்டுட்டு இருக்கேன்.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க எனக்கு அக்காதான்.. என்னை பொறுத்தவரை ஃப்ரண்டோட சிஸ்டர் எப்போவும் எனக்கு சிஸ்டர்தான்..!! சில கருகாலிப்பயலுகளுக்கு வேணா அதுலாம் ஒரு மேட்டரே இல்லாம இருக்கலாம்..!!” அசோக் அவ்வாறு சொன்னதும், கிஷோருக்கு சுருக்கென கோவம் வந்தது.
“ஹேய்.. யாருடா கருங்காலி..??” என்று அசோக்கிடம் சீறினான்.
“உன்னைத்தாண்டா சொல்றேன் வெண்ணை..!!” அசோக்கும் பதிலுக்கு சீறினான்.
“நான் என்னடா தப்பு பண்ணினேன்..?? எதுக்கெடுத்தாலும் என்னையே வந்து நொட்டை சொல்லிட்டு இருக்குற..?? ஏன்.. உன் தங்கச்சியை போய் இதெல்லாம் கேக்குறதுதான..?? சும்மா இருந்தவன் மனசுல ஆசையை வளர்த்து.. கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குனது உன் தங்கச்சிதான்.. ஞாபகம் வச்சுக்கோ..!!”
“ஹ்ஹ.. இந்தக்கதையலாம் வேற யார்ட்டயாவது போய் சொல்லு..!! நீ எந்த மாதிரிலாம் ஐஸ் வச்சு.. என் தங்கச்சி மனசுல ஆசையை கிண்டி விட்டன்னு எனக்கு நல்லா தெரியுன்டா..!! ஃப்ராடுப்பயலே..!!”
“யாரு.. நானா ஃப்ராடு..?? என்னை சொல்றியே.. உன் ஆளு எழுதுன மொக்கை கவிதைக்கு அர்த்தம் கூட தெரியாம.. ஆஹா ஓஹோன்னு அவளை பாராட்டுனியே.. அதை என்ன சொல்றது.. நான் ஃப்ராடுன்னா.. நீ 420-டா ..!!”
“அப்போ நீ மொள்ளமாறி..!!”
“நீ முடிச்சவிக்கி..!!”
“அடச்சை.. நிறுத்துங்கடா.!!” பவானி அந்த மாதிரி பொறுமையற்று கத்தியதும்தான், அசோக்கும் கிஷோரும் அமைதியானார்கள்.
“ஏண்டா.. கவர்மண்ட் ஒரு பெரிய பொறுப்பை என்னை நம்பி ஒப்படைச்சிருக்கு.. நான் அதை உங்களை நம்பி ஒப்படைச்சிருக்கேன்.. நீங்க என்னடான்னா சின்னப்புள்ள மாதிரி சண்டை போட்டு இருக்கீங்க..??”
“…………….” கிஷோரும் அசோக்கும் வாயை மூடிக்கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தனர்.
“நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க.. ‘Suicide Prevention Awareness’ பத்தி நீங்க எடுக்கப் போற இந்த டாகுமன்ட்ரிய.. இந்தியால இருக்குற எல்லா லாங்குவேஜ்லயும் டப் பண்ணப் போறாங்க..”
“ம்ம்.. தெரியும் தெரியும்.. ‘ஒரிஸா மாநிலத்தை சேர்ந்த இவர் கூறுகிறார்..’ அப்டின்னு சரோஜ் நாராயணஸ்வாமி சொல்வாங்களே.. அந்த மாதிரிதான..??” அசோக் மெல்லிய குரலில் கேலியாக சொல்ல, பவானி அவனை முறைத்தாள்.
“என்ன.. கிண்டலா இருக்கா..?? இந்தியால இருக்குற மூலை முடுக்குலாம் உங்க டாகுமன்ட்ரி ஓடப் போகுது.. டிவின்னா என்னன்னே தெரியாத பழங்குடி கிராமத்துல கூட ப்ரொஜக்டர் வச்சு ஓட்டப் போறாங்க.. எவ்வளவு பெரிய விஷயம் இது.. எவ்வளவு பெரிய ஆப்பர்ச்சூனிட்டி உங்களுக்கு..?? நீங்க என்னடான்னா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம..??”
“இங்க பாருங்க பவானிக்கா.. மத்த விஷயத்துல நாங்க எப்படியோ.. ஆனா வேலை விஷயத்துல கரெக்டா இருப்போம்.. அதுலாம் நீங்க வொர்ரி பண்ணிக்க வேணாம்..!!” அசோக் அந்த மாதிரி சமாளிப்பாக சொன்னதும், பவானி இப்போது சற்றே சாந்தமானாள்.
“சரி.. வேலையை எப்போ ஆரம்பிக்கிறீங்க..??”
“இன்னைக்கே..!!”
“எப்போ முடியும்..??”
“இன்னும் பத்து நாள்ல..!!”
“ஏண்டா.. பத்து நிமிஷம் ஓடுற டாகுமன்ட்ரிக்கு.. பத்து நாள் டைம் வேணுமா உனக்கு..??”
“ரெண்டு மணி நேரம் ஓடுற படத்தை.. ரெண்டரை வருஷமா எடுக்குறது இல்லையா.. அந்த மாதிரிதான் இதும்..!! பர்பஃக்ஷன் ரொம்ப முக்கியம்க்கா..!!”
“ஹ்ம்ம்.. சரி.. டாகுமன்ட்ரி எந்த மாதிரி ஷூட் பண்ணப் போறேன்னு.. ஏதும் ஐடியா வச்சிருக்கியா..??” பவானிக்கு அசோக் பதில் சொல்வதற்குள், கிஷோர் இடையில் புகுந்து சொன்னான்.
“ம்க்கும்.. இவன்கிட்டயா ஐடியா கேக்குற..?? ‘ஓப்பன் பண்ணதுமே.. தவுசண்ட் ஃபீட் ஹைட்ல இருந்து ஒருத்தர்.. அப்படியே தலைகுப்புற விழுந்து தற்கொலை பண்ணிக்கிறதை.. டாப் ஆங்கிள்ள காட்டுறோம்.. அப்புறம் அந்த ஆள் தலை ரெண்டா பொளந்து.. செவப்பு கலர்ல ப்ளட் குபுகுபுன்னு வர்றதை க்ளோசப்ல போய் காட்டுறோம்..’னு சொல்வான் பாரு..!!” கிஷோரின் கிண்டல் அசோக்கிற்கு எரிச்சலை கிளப்பி விட்டது.
“ஏய்.. அடங்குடா..!! எங்க க்ரியேட்டிவா இருக்கனும்.. எங்க இன்ஃபர்மேடிவா இருக்கனும்னு.. எங்களுக்கு தெரியும்..!! இமேஜின் பண்ணினதை இன்ரஸ்டிங்கா சொல்லவும் தெரியும்.. நாட்டுல உள்ள பிரச்சனையை நச்சுன்னு அப்பட்டமா காட்டவும் தெரியும்..!!”
“ஹஹ.. கிழிச்ச..!!”
“நீ மூடு..!!” மறுபடியும் அவர்களுக்குள் வாய்ச்சண்டை மூள, பவானி எரிச்சலுற்றாள்.
“ஐயயே.. ஒரு நிமிஷம் கூட கேப் விடாம சண்டை போடுறீங்க.. எப்படிடா எட்டு வருஷம் ஃப்ரண்டா இருக்கீங்க..??”
“ஹ்ஹ.. நீங்க வேணா பாப்புலர் சைக்யாட்ரிஸ்டா இருக்கலாம் பவானிக்கா.. ஆனா பசங்க சைக்காலஜிலாம் உங்களுக்கு புரியாது.. விட்டுடுங்க.. இது வேற உலகம்..!!”
“ஹ்ம்ம்.. எப்படியோ போங்க.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. டாகுமன்ட்ரி பத்தி என்ன ப்ளான் வச்சிருக்கீங்க..??”
“நான்தான் ஃபோன்லயே சொன்னேன்லக்கா.. இங்க கவுன்சிலிங் வர்றவங்க கூட நான் பேசணும்.. அப்படி பேசினா எனக்கு கொஞ்சம் ஐடியா கெடைக்கும்.. அதுக்கு மொதல்ல அரேஞ்ச் பண்ணுங்க..!!”
“ம்ம்.. ஓகே..!!”
சொன்ன பவானி டெலிபோன் எடுத்து எண்களை அழுத்தினாள். ‘ஹலோ மும்தாஜ்..’ என்றாள். ‘சொன்னேன்ல.. அவங்க வந்திருக்காங்க..’ என்றாள். இரண்டு மூன்று ‘ஓகே’களை உதிர்த்தாள். ‘அதனால பரவால..’ என்றாள் இடையில் ஒருமுறை. இறுதியாக ‘சரி.. அப்போ கெளம்பி வர்றோம் மும்தாஜ்.. என்ன விஷயம்னு நீங்க எல்லார்ட்டயும் கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணி வச்சிருங்க.. தேங்க்ஸ் மும்தாஜ்..’ என்றுவிட்டு ரிஸீவரை அதனிடத்தில் வைத்தாள்.
“யாருக்கா அது.. மும்தாஜ்..??” அசோக்கின் குரலில் ஒருவித எள்ளல் தொனித்தது.
“இங்க கவுன்சிலிங் வர்றவங்களுக்கு.. ஆர்ட் ஆஃப் லிவிங் க்ளாஸ் எடுக்குற ட்யூட்டர்..!!”
“ஓ..!! இந்த.. ‘வாழ்க்கை ரொம்ப அற்புதமான விஷயம்.. தற்கொலை பண்ணிக்கிறது பாவம்..’ அப்டின்னு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றவங்களா..?? நான் கூட ‘மல மல மருதமல’ன்னு டவல் வச்சுட்டு டான்ஸ் ஆடுவாங்களே.. அவங்களோன்னு நெனச்சுட்டேன்.. ஹிஹி..!!”
கிஷோரின் கிண்டலை பவானி ரசிக்கவில்லை. கண்களை இடுக்கி கடுமையாக அவனை முறைத்தாள். பிறகு இறுக்கமான குரலில் சொன்னாள்.
“மும்தாஜ் ஒரு காலத்துல என்னோட பேஷன்ட்.. மும்பை கலவரத்துல பாதிக்கப்பட்ட பொண்ணு.. அவ குடும்பத்துல எல்லார் கண் முன்னாடியும் கேங் ரேப் பண்ணப்பட்டவ.. அப்புறம் இவ கண் முன்னாடியே குடும்பத்துல இருக்குற எல்லார் கழுத்தையும் கத்தியால அறுத்து போட்டாங்க.. இவ கழுத்தையும்தான்..!! இவ மட்டும் பொழைச்சுக்கிட்டா.. அதுக்கப்புறம் அஞ்சு தடவை சூசயிட் பண்ணிக்க ட்ரை பண்ணிருக்கா.. ஆயுசு கெட்டி.. எல்லா தடவையும் யாரோ காப்பாத்திட்டாங்க..!! அங்க இங்க சுத்தி.. கடைசியா ட்ரீட்மன்ட்டுக்கு இங்க வந்து சேர்ந்தா.. நான்தான் அவளுக்கு ட்ரீட்மன்ட் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா மாத்தினேன்.. இங்க ட்யூட்டரா வேலையும் வாங்கி குடுத்தேன்..!! இப்போ.. தன்னம்பிக்கையோட ஒரு வாழ்க்கை வாழறா.. ‘தற்கொலை பண்ணிக்கிறது தப்பு..’ன்னு, இங்க வர்றவங்களுக்கு புரிய வைக்கிற புனிதமான காரியத்தை செஞ்சுட்டு இருக்கா..!! உங்களுக்கு கிண்டலா இருக்குல..??”
“……………” ஸ்தம்பித்துப் போன நிலையில் இருந்த அசோக்குக்கும், கிஷோருக்கும் பேச வார்த்தையில்லை.
“இந்த மாதிரி இங்க இன்னும் நெறைய பேர் இருக்காங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை.. உங்களுக்கு இதுலாம் புரியாதுடா.. இது வேற உலகம்.. இந்த உலகத்துல இருக்குற வலியும், வேதனையும் ஒரு பர்சன்டேஜ் கூட உங்களுக்கு புரியாது..!! உங்களை நம்பி இந்த டாகுமன்ட்ரி வேலையை குடுத்திருக்கேன்.. என்ன லட்சணத்துல எடுத்து வைக்கப் போறீங்களோ தெரியல.. எந்திரிச்சு வாங்க..!!”
படபடவென பொரிந்து தள்ளிய பவானி, படக்கென சேரை விட்டு எழுந்தாள்.. அசோக்கும் கிஷோரும் உர்ரென்ற முகத்துடனே உடன் எழுந்தார்கள்..!! அந்த நீளமான காரிடாரில்.. பவானி விடுவிடுவென கம்பீரமாக நடந்து செல்ல.. அவளுக்கு இரண்டடி இடைவெளிவிட்டு.. அசோக்கும் கிஷோரும் ஆளுக்கொரு புறமாய்.. அவளை பின் தொடர்ந்தனர்..!! பவானி ஆதங்கத்துடன் பேசிக்கொண்டே முன்னால் நடக்க.. இவர்கள் அமைதியாக ‘உம்’ கொட்டியவாறே உடன் நடந்தனர்..!!
“சூசயிட்ன்றது.. டெம்போரரி ப்ராப்ளத்துக்கான பெர்மனன்ட் சொல்யூஷன்தான்..!! பட்.. டெம்போரரியா இருந்தாலும், அந்த ப்ராப்ளத்தை நாம அசால்ட்டா நெனைக்க கூடாது..!!”
“……….”
“தற்கொலை பண்ணிக்கிறவங்கலாம் முட்டாளுங்க.. கோழைங்க.. லைஃபோட மீனிங் தெரியாதவங்கன்னு.. ஈஸியா சொல்லிட்டு நாம க்ராஸ் பண்ணி போயிட முடியாது..!! வேர்ல்ட் வைடா.. வருஷத்துக்கு பத்து லட்சம் பேர் சூசயிட் பண்ணிக்கிறாங்க.. ஃபார்ட்டி செகண்டுக்கு ஒரு உயிரை சூசயிடால இழந்துட்டு இருக்கோம்.. அட்டம்ப்ட் பண்ணினவங்க எண்ணிக்கை, செத்துப் போனவங்களோட எண்ணிக்கையை விட பத்து மடங்காவது இருக்கும்..!! அவ்வளவு பேரும் முட்டாளா.. அவ்வளவு பேரும் கோழைங்களா..?? I Don’t Buy That..!!”
“……….”
“சின்ன சின்ன விஷயங்களுக்காக தற்கொலை பண்ணிக்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க.. ஆனா நெறைய தற்கொலைகளுக்கு பின்னாடி.. ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு.. இந்த சமுதாயத்தோட பங்கு இருக்கு..!! சமுதாயத்தை எங்களால மாத்தமுடியாது.. ஆனா.. சாக நெனைக்கிற அந்த பாவப்பட்ட மனுஷங்க மனசை மாத்த முடியும்.. தன்னம்பிக்கையை கொடுக்க முடியும்.. அதைத்தான் இங்க பண்ணிட்டு இருக்குறோம்..!!”
“……….”
காரிடாரின் வலதுபுறம் திரும்பியதுமே, முதலில் இருந்த அந்த அறைக்குள் பவானி நுழைந்தாள். அசோக்கும் கிஷோரும் அவளை பின் தொடர்ந்தனர்.
“இவங்கதான் மும்தாஜ்..!!”
என்று பவானி அந்த நடுத்தர வயது பெண்ணை அறிமுகப் படுத்தி வைக்க, அசோக்கும் கிஷோரும் அவர்களையும் அறியாமல் அந்த மும்தாஜிற்கு கைகூப்பி வணக்கம் வைத்தனர்.
அப்புறம் கொஞ்ச நேரம் அந்த மும்தாஜுடன் பேச்சு. பிறகு அவளுடைய உதவியுடன், அன்று கவுன்சிலிங் வந்திருந்தவர்களுடன், தனித்தனியாக தனியறையில் மீட்டிங். ‘எந்த மாதிரியான சூழ்நிலையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள்..? எந்த மாதிரியான முயற்சியை மேற்கொண்டார்கள்..? அவர்களுக்கு பிடித்தமான உலகம் எப்படி இருக்க வேண்டும்..?’ என்பது மாதிரியான கேள்விகளை அசோக் கேட்க, அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்களுடைய அனுமதியுடன் கிஷோர் அதை படம் பிடித்துக் கொண்டான்.
“எனக்கு படிப்பு வரலண்ணா.. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..?? எல்லாரும் எவ்வளவு கேவலமா பேசுவாங்க தெரியுமா..?? எதுக்கெடுத்தாலும் அதையே சொல்லி சொல்லி, குத்தி காட்டிட்டு இருப்பாங்க.. ‘எருமை மாடு மேய்க்கத்தான் இவன் லாயக்கு.. எப்படித்தான் திங்கிற சோறு உனக்கு செரிக்குதோ..’ அப்டி இப்டின்னு..!! ‘இவன் படிக்காத பையன் இவன்கூட சேர்ந்தா நீ கெட்டு போயிடுவ’ன்னு சொல்லி.. என் ஃப்ரண்ட்சை கூட எங்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்கண்ணா.. எனக்குன்னு யாருமே இல்லாம, நான் என்னண்ணா பண்ணுவேன்..?? சத்தியமா சொல்றேண்ணா.. ‘இந்தத்தடவை எப்படியாவது பாஸ் ஆயிடனும்’னு.. நைட்லாம் கண்ணுமுழிச்சு ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன்.. அப்படியும் ஃபெயில் ஆயிட்டேன்.. அதுக்கு நான் என்னண்ணா பண்ணுவேன்..?? படிப்பு வராதது பாவமா..?? உலகத்துல வாழ்றதுக்கு எனக்கு அருகதை இல்லையா..??”
எஸ்.எஸ்.எல்.ஸி எக்ஸாமிலும் அதைத்தொடர்ந்து தற்கொலை முயற்சியிலும் தோல்வியடைந்த, அந்த அரும்பு மீசை மாணவன் கேட்ட கேள்விகளுக்கு, அசோக்கிடம் சரியான பதில் இல்லை. திகைப்பாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த போதுதான், அசோக்கின் செல்போன் கிணுகிணுத்தது. எடுத்து பார்த்தான். மீரா அழைத்திருந்தாள். கால் பிக்கப் செய்தான். இவன்
“ஹலோ” என்றதுமே,
“ஆவிச்சி ஸ்கூல்.. அஞ்சு நிமிஷம் டைம்.. கெளம்பி வா..!!”
என்று அவசரமாய் சொன்ன மீரா, உடனே காலை கட் செய்தாள். அசோக் ‘ப்ச்..’ என்று எரிச்சலானான். மீண்டும் அவளுக்கு கால் செய்தான்.
“ஹலோ..” – இது மீரா
“ஹேய் மீரா.. நான் இங்க கொஞ்சம் வேலையா..”
“ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. வா..!!”
அவ்வளவுதான்..!! மீண்டும் கால் கட்..!! அசோக் திரும்ப அவள் எண்ணுக்கு தொடர்பு கொள்ள, செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது..!! ‘ஷப்பாஆஆ.. முடியல..’ என்று தலையை சொறிந்து கொண்டான். பிறகு கிஷோரை திரும்பி பரிதாபமாக பார்த்தான். அவனுடைய நிலைமையை உடனடியாய் புரிந்துகொண்ட கிஷோர்,
“சரி கெளம்பு.. நான் பாத்துக்குறேன்..!!” என்றான்.
அதன்பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து..
பூந்தமல்லி ஹைரோடில் போரூரை தாண்டியதும்.. வலதுபுறம் திரும்பினால் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வந்து சேரும் அந்த ஏரி..!! ஏரியின் ஒருபக்கம் சாலை.. அடுத்த பக்கம் எங்கிலும் அடர்த்தியாய் பச்சை பசேலென்ற மரங்கள்..!! குளுமையாக.. பசுமையாக.. அமைதியாக இருந்தது அந்த பகுதி..!! ஏரியின் இந்தப்புறம் இருந்து அந்தப்புறம் செல்வதற்காக.. மரப்பலகைகளால் ஆன பாலம் அமைக்கப்பட்டிருந்தது..!! இருபுறமும் மூன்றடி உயரத்திற்கான கைப்பிடி தடுப்புகளுடன்.. இக்கரையில் இருந்து அக்கரை வரை நீண்டிருந்தது.. அந்த மரப்பாலம்..!! ஏரியில் நீர் நிறைந்து போயிருக்க.. இப்போது நீரின் மேற்பரப்புக்கும், பாலத்தின் அடிப்பரப்புக்கும்.. ஐந்து அடிகளே இடைவெளி..!!
அசோக் பைக்கை நிறுத்தியதும், மீரா கீழே இறங்கிக் கொண்டாள். அவனை எதிர்பார்க்காமல் பாலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பைக்குக்கு ஸ்டாண்ட் இட்டு நிறுத்திய அசோக், மெல்ல அவளை பின்தொடர்ந்தான். பாலத்தில் ஏறுவதற்கு முன்பாக, கீழே கிடந்த சில கற்களை மீரா கைகளில் பொறுக்கிக் கொண்டாள். பாலத்தில் ஏறியதும், அந்தக் கற்களை ஒவ்வொன்றாக, நீருக்குள் தூரமாய் வீசி எறிந்தாள். ‘பொலக்.. பொலக்..’ என்ற சப்தத்துடன் கற்கள் நீருக்குள் மூழ்கிப் போவதை, இங்கிருந்தே ரசித்தாள். குழந்தைத்தனமான அவளுடைய செய்கையை, ஒரு புன்னகையுடன் பார்த்தவாறே அசோக் அவளுக்கு பின்னால் நடந்து கொண்டிருந்தான். கற்கள் தீர்ந்து போனதும். மீரா திடீரென திரும்பி அசோக்கிடம் சொன்னாள்.
“அந்த கவாஸாகி ஆட் நேத்து டிவில பார்த்தேன்டா.. செமையா இருந்தது..!! நீதான் அந்த ஆட் ஷூட் பண்ணினதுன்னு.. சத்தியமா என்னால நம்பவே முடியல..!! கிரேட் வொர்க் மேன்..!!”
“தேங்க்ஸ்..!!” அசோக் மெலிதாக புன்னகைத்தான்.
“ஹ்ம்ம்.. தென்..?? வாட் எபவுட் த நெக்ஸ்ட் ப்ராஜக்ட்..??”
“சூசயிட்..!!”
“சூசயிடா..?? என்ன.. நீ அடுத்து எழுத போற ஸ்க்ரிப்டுக்கு டைட்டிலா..?? என் படத்தை பாக்குறதும்.. இதுவும் ஒண்ணுதான்னு சிம்பாலிக்கா சொல்லப் போறியா..?? ஹாஹாஹாஹா..!!” சொல்லிவிட்டு மீரா சிரிக்க, அசோக் கடுப்பானான்.
“ஹிஹி.. வெரி ஃபன்னி..!!” என்று பலிப்பு காட்டினான்.
“பின்ன என்ன..?? சும்மா சூசயிட்னா என்ன அர்த்தம்..??”
“ஒரு டாகுமன்ட்ரி பண்ணப் போறோம் மீரா.. ‘Suicide Prevention Awareness’ பத்தி..!!”
“ஓ..!! யாரு க்ளையன்ட்..??”
“கவர்மண்ட்..!!”
“ஹ்ம்ம்.. என்ன திடீர்னு.. அட்வர்டைஸ்மன்ட் விட்டுட்டு டாகுமன்ட்ரில எறங்கிட்ட..??”
“அதனால என்ன..?? நல்ல காரியம்னு தோணுச்சு.. அதான்..!! நீ கால் பண்றப்போ கூட அந்த சென்டர்ல தான் இருந்தேன்.. அங்க கவுன்சிலிங் வந்தவங்ககூட பேசிட்டு இருந்தேன்..!! ச்சே.. அவங்கல்லாம் எவ்வளவு பாவம் தெரியுமா.. ஒவ்வொருத்தர் பின்னாடியும் ஒவ்வொரு கதை இருக்கு மீரா.. நாமலாம் எவ்வளவோ லக்கி..!! இப்போ நாம பேசிட்டு இருக்குற இந்த நிமிஷத்துல கூட.. உலகத்துல ஏதோ ஒரு மூலைல யாரோ ஒருத்தர் சூசயிட் பண்ணிட்டு இறந்திருப்பாங்க..!! நான் எடுக்கப்போற இந்த டாகுமன்ட்ரி பாத்து.. அட்லீஸ்ட் ஒருத்தராவது அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டா.. அது எவ்வளவு பெரிய விஷயம்..??”
“ஹ்ம்ம்.. சூசயிட் பத்தி நெறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்ட போல இருக்கு..??”
“ம்ம்.. ஆமாம்.. ஒரு இன்ட்ரஸ்டிங் கோட் கூட தெரிஞ்சுக்கிட்டேன்..!!”
“என்ன அது..??”
“Suicide is permanent solution to a temporary problem..!!”
“ஹாஹா.. நைஸ் கோட்..!!”
மெலிதான புன்சிரிப்புடன் சொன்ன மீரா, பட்டென அமைதியானாள். அசோக்கின் முகத்தையே ஒருவித சலனமற்ற பார்வை பார்த்தாள். அசோக்குக்கு அவளுடைய பார்வையின் அர்த்தம் புரியவில்லை.
“ஹேய்.. என்னாச்சு..??” என்றான் புன்னகையுடன்.
“இல்ல.. ஒன்னுல்ல..!!”
சொன்ன மீரா அவன் முகத்தில் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். அகலமாக விரிந்திருந்த ஏரியையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் திடீரென திரும்பி ,
“ஹேய் அசோக்.. இந்த எடத்துல எவ்வளவு ஆழம் இருக்கும்..??” என்றாள் குரலில் ஒரு புது உற்சாகத்துடன்.
“ஏன் கேக்குற..??”
“சொல்லேன்..!!”
“ம்ம்.. எப்படியும் ஒரு இருபது இருபத்தஞ்சு அடி இருக்கும்னு நெனைக்கிறேன்..!!”
“அப்போ.. இங்க இருந்து உள்ள குதிக்கிறவங்க செத்து போயிருவாங்களா..??”
“நீச்சல் தெரியலன்னா சாக வேண்டியதுதான்..!!”
“எனக்குத்தான் நீச்சல் தெரியாதே..??”
“நீதான் உள்ள விழலையே..??”
“இதோ.. இப்போ குதிக்கப் போறேனே..??”
“என்னது..???”
“நீ சூசயிட் பத்தி பேசுனியா.. எனக்கு உடனே சூசயிட் பண்ணிக்கணும்னு ஆசை வந்துடுச்சு..!!”
“ஹாஹா.. வெளையாடாத மீரா..!!”
“இல்ல.. சீரியஸா..!! நீ சொன்னல.. ‘Suicide is permanent solution to a temporary problem..!!’ன்னு.. பெர்மனன்டா இப்படி ஒரு சொல்யூஷன் இருக்குறப்போ.. எதுக்காக சாப்பாடு, பணம், ட்ரஸ், வீடு, வசதின்னு.. தெனம் தெனம் டெம்போரரி ப்ராப்ளம்ஸ் கூட போராடனும்..?? பேசாம எல்லாரும் சூசயிட் பண்ணி செத்துப் போயிட்டா.. எல்லாருக்கும் நிம்மதிதான..?? நான் முடிவு பண்ணிட்டேன்.. சூசயிட் பண்ணிக்கப் போறேன்..!!” மீரா அந்த மாதிரி பேசியது, அசோக்குக்கு சிரிப்பையே வரவழைத்தது.
“ஹாஹா.. லூஸு மாதிரி ஏதாவது உளறிட்டு இருக்காம.. கெளம்பு.. டைம் ஆச்சு..!!”
சிரிப்புடன் சொல்லிவிட்டு, அசோக் கேஷுவலாக முன்னால் நடந்தான். ஒரு ஐந்து எட்டு கூட எடுத்து வைத்திருக்க மாட்டான். அவனுக்கு பின்னால் இருந்து, ‘டமார்..’ என எதுவோ நீரில் விழுகிற சப்தம் பெரிதாக கேட்டது. அசோக் படக்கென திரும்பி பார்த்தான். பாலத்தில் மீரா இல்லை..!!! அவ்வளவுதான்.. பக்கென அதிர்ந்து போனான்.. பரபரப்பு தொற்றிக்கொண்டது அவனை.. அட்ரினலின் ஜிவ்வென சுரந்து உடலெங்கும் தாறுமாறாய் ஓடியது..!!
“மீரா..!!!!!”
என்று அலறியவாறே ஓடினான். கைப்பிடி தடுப்பை பற்றிக்கொண்டு ஏரியை குனிந்து பார்த்தான். நீரலைகள் அமைதி குலைந்து போய், வட்ட வட்டமாய் விலகி ஓடிக் கொண்டிருந்தன. மீரா கண்களுக்கு தட்டுப்படவில்லை. அசோக் அதன்பிறகும் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. கைப்பிடி தடுப்பில் கால்வைத்து ஏறி, சரக்கென ஏரிக்குள் குதித்தான். குத்தித்த மறுநொடியே, உடலை சுழற்றி நீருக்குள் மீராவை தேடினான். நீருக்குள் மூழ்கி மூழ்கி தேடியவன், பிறகு மேற்பரப்புக்கு வந்து கத்தினான்.
“மீரா..!!!!!”
அவனுடைய முகத்தில் அப்படி ஒரு பதற்றம்.. உடம்பில் அப்படி ஒரு நடுக்கம்.. ‘அவளுக்கு என்ன ஆனதோ’ என்ற பயம்..!! தலையை அப்படியும் இப்படியும் திருப்பி, மீராவின் முகம் கண்டுவிட துடித்தான்..!!
“மீரா..!!!!! மீரா..!!!!!”
கத்திவிட்டு மீண்டும் நீருக்குள் மூழ்கினான். தண்ணீருக்குள் அவள் தட்டுப்படுகிறாளா என நீந்தி நீந்தி பார்த்தான். அவனையும் அறியாமல், கண்களில் நீர் சுரந்து தண்ணீரோடு கலந்து ஓடியது. மனம் முழுதும் பயமும் படபடப்புமாய்.. கையையும் காலையும் அசைத்து அசைத்து.. நீருக்குள் நீந்தி நீந்தி.. முடிந்தவரை மூச்சை அடக்கி.. காதலியின் உருவம் காண தவித்தான்..!! மூச்சை அதற்கு மேல் அடக்க முடியாது என்பதை உணர்ந்ததும்.. சர்ரென நீர் மட்டத்துக்கு வந்து.. ஆவி துடிக்க அலறினான்…!!
“மீரா..!!!!!”
ஒரு இரண்டு நிமிடத்திற்கு அந்த மாதிரி அசோக் அங்கும் இங்கும் அலை பாய்ந்திருப்பான். அப்புறம் எதேச்சையாக பாலத்தை ஏறிட்டவன், ஒரே நேரத்தில் எரிச்சலுக்கும், எல்லையில்லா ஆனந்தத்துக்கும் உள்ளானான். மீரா மரப்பாலத்தின் மீது, நனைந்த உடலுடன் நின்று கொண்டிருந்தாள். இவன் வேதனையுடன் துடித்த துடிப்பை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்து ‘ஹாய்’ என்று விரல்கள் அசைத்தாள். அவளுக்கு நீச்சல் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அசோக் இந்தப்பக்கம் குதித்ததும், அவள் அந்தப்பக்கமாய் மேலே சென்றிருக்க வேண்டும்.
அசோக்குக்கு சில வினாடிகள் என்ன செய்வது என்றே புரியவில்லை. சோர்ந்து போனவனாய் இங்கிருந்தே மீராவை பரிதாபமாக பார்த்தான். பிறகு மெல்ல நீரில் நீந்தினான். மரத்தூணை பிடித்து மேலேறினான். தடுப்பு தாண்டி பாலத்தில் குதித்தான். முகத்தில் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த மீராவை, முறைத்து பார்த்தவாறே அவளை நோக்கி நடந்தான். அவனுடைய மனதில் ஒருவித ஆத்திரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
“ஹஹா.. என்னடா நீ.. பேசிட்டு இருக்குறப்போவே, திடீர்னு தண்ணிக்குள்ள குதிச்சு மீன் பிடிக்க போயிட்ட..?? மீன் சிக்குச்சா..?? மீரா மீன்..??” மீரா குறும்பாக கண் சிமிட்டியவாறே கேட்டாள். ஆனால் அவளை நெருங்கிய அசோக்,
“நீ என்ன பொண்ணா.. இல்ல பிசாசா..??” என்று சீற்றமாக கேட்டான்.
“ஹேய்.. என்ன.. கொழுப்பா.. அப்டியே போட்டன்னா..??” உடனடி கோவத்துடன் மீரா புறங்கையை உயர்த்தினாள்.
“அடி மீரா..!! அடி..!! எதுக்கெடுத்தாலும் கையை ஓங்குறதும்.. கன்னத்துல அறையுறதும் தவிர வேற உனக்கு என்ன தெரியும்..?? என் மனசு பத்தி தெரியுமா.. என் மனசுல உன் மேல வச்சிருக்குற காதல் பத்தி தெரியுமா..?? இப்போ.. கொஞ்ச நேரம் என் உசுரு எங்கிட்ட இல்ல.. அதாவது உனக்கு தெரியுமா..??”
அசோக் ஆதங்கத்துடன் கேட்க, மீரா உயர்த்திய கையை மெல்ல கீழே இறக்கினாள். அவளுடைய முகம் பட்டென மாறிப்போய், ஒருவித குற்ற உணர்ச்சியுடன் அசோக்கை பார்த்தாள். அவனோ குமுறுகிற இதயத்துடன் தொடர்ந்து பேசினான்.
“உ..உன் வெளையாட்டுக்குலாம் ஒரு அளவே இல்லையா..?? என்னை லவ் பண்றேன்னும் சொல்லிட்டு.. நான் எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சுக்க.. ஒவ்வொரு நாளும், எனக்கு டெஸ்ட் மேல டெஸ்ட் வைக்கிற.. இல்ல..??”
“………….”
“எனக்கு எல்லாம் தெரியும் மீரா.. நீ ஏன் இப்படிலாம் நடந்துக்குறேன்னு தெரியும்..!! இப்போ என்ன.. உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் என்ன பண்றேன்னு.. என்னை டெஸ்ட் பண்ணனும்.. அவ்வளவுதான.. அதுக்காகத்தான இந்த வெளையாட்டு..?? பாத்துட்டியா.. தண்ணிக்குள்ள குதிச்சு, பைத்தியக்காரன் மாதிரி உன்னை தேடினேன்.. பாத்துட்டியா.. சந்தோஷமா..??”
அசோக்கின் சீற்றத்தில் மீரா வெலவெலத்து போனாள். அவனுடைய கண்கள் கசிந்த வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாதவளாய், தலையை மெல்ல கவிழ்த்துக் கொண்டாள்.
“இத்தனை நாள் நீ பண்ணினதுலாம் பரவால மீரா.. என்னை அடிச்ச.. அதிகாரம் பண்ணின.. அசிங்கப் படுத்தின..!! அதுலாம் பரவால மீரா.. உன் மேல இருந்த லவ்ல அதுலாம் எனக்கு பெரிய விஷயமா தெரியல..!! ஆனா.. இது அப்படி இல்ல.. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு.. அந்த வேதனை.. அந்த பயம்.. அந்த துடிப்பு.. சத்தியமா இந்த மாதிரி ஒரு வேதனையை நான் அனுபவிச்சதே இல்ல..!! கொஞ்ச நேரம்.. அப்படியே செத்துட்டேன் மீரா..!!” அசோக் கண்களில் வழிகிற நீருடன் வெடித்து சிதறினான்.
“………….” மீரா அமைதியாய் தரை பார்த்து குனிந்திருந்தாள்.
“நீ என்கிட்ட ஐ லவ் யூ சொல்லி ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு.. சத்தியமா சொல்றேன்.. இந்த நிமிஷம் வரை.. நீ என்னை உண்மையா லவ் பண்றியா இல்லையான்னு கூட என்னால சரியா புரிஞ்சுக்க முடியல.. நான் புரிஞ்சுக்குற மாதிரி நீயும் நடந்துக்கல..!! ஆனா நான் அப்படி இல்ல மீரா.. உன் மேல உயிரையே வச்சிருக்கேன்.. உன் மேல பைத்தியமா இருக்கேன்..!! உன் மேல நான் எவ்வளவு லவ் வச்சிருக்கேன்னு.. ஒவ்வொரு நாளும் உன்கிட்ட எக்ஸ்ப்ரஸ் பண்ணிட்டுத்தான இருக்குறேன்.. உன்னால புரிஞ்சுக்க முடியலையா மீரா..?? புரிஞ்சுக்கிட்டா இப்படிலாம் எனக்கு டெஸ்ட் வைப்பியா..??”
“………….”
“நல்லா சொல்றேன் கேட்டுக்கோ.. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்..!! என் உயிரை விட நான் உன்னை அதிகமா நேசிக்கிறேன்.. நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன்..!! இதுக்கு மேல என் காதலை எப்படி சொல்றதுன்னு எனக்கும் தெரியல.. தயவு செஞ்சு இனிமேலும் இந்த மாதிரிலாம் டெஸ்ட் வச்சு.. என் காதலை கேலி செய்யாத..!! ப்ளீஸ்.. உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்..!!”
அசோக் படபடவென பேசி முடித்தான். மீரா எதுவும் பதில் பேசாமல் குனிந்த தலை குனிந்தவாறே நின்றிருந்தாள்.
ஆவேசத்துடன் பேசி முடித்த அசோக்குக்கு, அவளுடைய அமைதி ஒருவித எரிச்சலை உண்டாக்கியது. ஒரு சில வினாடிகள் அவளுடைய வார்த்தைகளுக்காக காத்திருந்து ஏமாந்தவன், அப்புறம் கோபத்துடன் அவளை நெருங்கினான். அவளுடைய புஜத்தை இறுகப் பற்றி, கொதிப்புடன் கேட்டான்.
“நான் இவ்வளவு பேசுறேன்.. நீ எதுவுமே சொல்ல மாட்டியா..?? என்னோட ஆதங்கத்துக்கும், வேதனைக்கும் நீ குடுக்குற மதிப்பு இவ்வளவுதானா..?? கமான்.. ஏதாவது சொல்லு.. உன் ஃபோன்ல போட்டு வச்சிருக்கியே.. கேனைப்பய.. மஞ்சமாக்கான்.. ஏதாவது சொல்லு..!! ம்ம்ம்.. பேசு மீரா..!!”
“………….” அவள் அப்புறமும் அமைதியாக இருக்க, அசோக் பொறுமை இழந்தான்.
“கேக்குறேன்ல..?? பேசுடி..!!! வாயை தொறந்து ஏதாவது சொல்லு..!!!” என்று பற்களை கடித்து கத்தினான்.
இப்போது மீரா சரக்கென தன் தலையை திருப்பி, அசோக்கின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். ஒரு மாதிரி அனல் கக்குகிற செந்நிற பார்வை..!! என்னவென்று புரிந்து கொள்ள முடியாத ஒருவித உணர்ச்சி, அவளுடைய முகத்தின் ஒவ்வொரு ரேகையிலும்..!! வெடுக்கென்று உதறி தன் கையை அசோக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டாள்..!! அசோக் சற்றே மிரட்சியாய் அவளுடைய கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்..!! உள்ளுக்குள் பொங்குகிற ஏதோ ஒரு உணர்வை அடக்க முயலுபவள் போல மீரா காட்சியளித்தாள்..!! அவளுடைய உதடுகள் அப்படியே படபடத்தன.. பற்களால் அந்த உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டாள்..!! அவ்வாறு கடித்ததுமே முணுக்கென்று அவளுடைய கண்களில் நீர் வெளிப்பட்டு ஓடி வந்தது.. அவசரமாய் அந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..!! முகத்தை வேறெங்கோ திருப்பி.. மூக்கை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டு.. உதடுகள் படபடக்க.. உடைந்து தழதழத்துப் போன குரலில் சொன்னாள்..!!
“ச்சோ.. ச்ச்வீட்..!!!!”
– தொடரும்
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :