ஆண்மை தவறேல் – பகுதி 17
“அது இல்ல.. வே..வேற எங்கயாச்சும்..?”
“வேற எங்கயாச்சும்னா..?”
“அதான்.. அந்த கா..கால்கேர்ல்ஸ்.. அந்த மாதிரி.. எங்கயாச்சும்..” நந்தினி கேட்டவிதம் அசோக்குக்கு சிரிப்பை வரவழைத்தது. உதட்டில் புன்னகையுடனே,
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“இதுவரைக்கும் அப்படி எதுவும் ப்ளான் இல்ல..!! ஏன்.. போகனுமா..?” என்று அவன் குறும்பாக கேட்க, இப்போது நந்தினி சிரித்தாள்.
“ஆமாம்.. கல்யாணத்துக்கு அடுத்த நாளு.. கட்டுன புருஷனை அந்த மாதிரி எடத்துக்கு அனுப்பி வைக்கிறேன்னு.. நித்யானந்தருக்கு நேர்ந்திருக்குறேன்..!!” என்று அவளும் கிண்டலாக சொன்னாள்.
“ஹாஹா..!! அப்புறம் எதுக்கு அப்படி கேட்ட..?”
“இல்ல.. இன்னைக்குன்னு இல்ல.. நீங்க என்னைக்கு அந்த மாதிரி போனாலும்.. நைட்டு எவ்வளவு லேட் ஆனாலும்.. தூங்குறதுக்கு வீட்டுக்கு வந்துடுறீங்களா..? ப்ளீஸ்..!! கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க வெளில தங்குனா.. பாக்குறவங்க தப்பா பேசுவாங்க..!!”
கெஞ்சலான குரலில் பரிதாபமாக சொன்னாள் நந்தினி. அவள் அந்த மாதிரி கெஞ்சலாக கேட்டது, அசோக்கிற்கு ஏனோ கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நந்தினியின் அழகு முகத்தையே, அந்த முகத்தில் தெரிந்த ஒரு ஏக்கத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் இதமான புன்னகை ஒன்றை அவளிடம் வீசியவாறு சொன்னான்.
“ஓகே.. ரெக்வஸ்ட் அக்ஸப்டட்..!!”
“தேங்க்ஸ்..!!” நந்தினி நன்றிப் பெருக்குடன் சொன்னாள்.
“வா.. ஹாலுக்கு போலாம்..”
சொல்லிவிட்டு அசோக் முன்னால் நடக்க, நந்தினி அவனை பின்தொடர்ந்தாள். அறையை விட்டு அவர்கள் வெளியே வரவும், மஹாதேவன் எதிர்ப்படவும் சரியாக இருந்தது. டிப் டாப்பாக ட்ரஸ் அணிந்திருந்த மகனையும், ஈரத்தலையை கூட இன்னும் பின்னியிராத மருமகளையும் மஹாதேவன் ஓரிரு வினாடிகள் மாறி மாறி பார்த்தார். அப்புறம் அசோக்கிடம் சற்றே குழப்பமாக கேட்டார்.
“எங்க கெளம்பிட்ட..?”
“ஆபீஸுக்கு..!!” அசோக் இறுக்கமான குரலில் பதிலளித்தான்.
“ஆபீஸுக்கா..?? நேத்துதான் கல்யாணம் முடிஞ்சது.. இன்னைக்கு ஆபீஸ் போறேன்ற..?”
“வேற எங்க போக சொல்றீங்க..?”
“உன் பொண்டாட்டியை கூட்டிட்டு நாலு எடத்துக்கு போயிட்டு வாப்பா..!! ஒரு ரெண்டு வாரம்.. ஊட்டி, கூர்க்னு எங்கயாவது வெளியூருக்கு போ.. அது பிடிக்கலைன்னா.. தாய்லாந்து, மலேசியான்னு ஏதாவது வெளிநாட்டுக்கு போயிட்டு வா..!!”
“ப்ச்.. ஆபீஸ்ல நெறைய வேலை இருக்கு டாட்.. ஊர் சுத்திட்டு இருக்கலாம் எனக்கு இப்போ நேரம் இல்ல..”
“இங்க பாரு அசோக்..!! வேலைன்றது வருஷம் பூரா இருக்கத்தான் செய்யும்.. வேலை இல்லாம இருக்குறப்போதான் போவேன்னா.. உன்னால எப்போவும் போக முடியாது..!! கொஞ்ச நாள் நீங்க ரெண்டுபேரும் தனியா இருந்தீங்கன்னா.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வசதியா இருக்கும்.. கல்யாணம் ஆன புதுசுல எல்லா புருஷன், பொண்டாட்டிக்கும் அது ரொம்ப அவசியம்.. அதான் சொல்றேன்..!!”
“இல்ல டாட்.. எனக்கு இப்போ எங்கயும் வெளியூர் போற மூட் இல்ல.. இன்ரஸ்ட்டும் இல்ல..!!”
“உன் இன்ரஸ்ட் மட்டுந்தான் உனக்கு பெருசா..? நீ இப்போ தனியாள் இல்லப்பா.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..!! உன் பொண்டாட்டியை கொஞ்சம் நெனச்சு பாரு.. அவளுக்கு மனசுக்குள்ள ஆசை இருக்கும்ல..?” மஹாதேவன் அந்த மாதிரி சொல்ல, அசோக் உச்சபட்ச எரிச்சலுக்கு உள்ளானான்.
“இங்க பாருங்க டாட்.. கல்யாணம் பண்ணிக்க சொன்னீங்க.. பண்ணிக்கிட்டாச்சு..!! இன்னமும் அது பண்ணு, இது பண்ணுன்னு.. ஒவ்வொன்னா எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்காதீங்க..!! இனிமே என்ன பண்ணனும்னு நான் பாத்துக்குறேன்..!!”
சீற்றமாய் சொன்ன அசோக், திரும்பி வீட்டு வாசலை நோக்கி விறுவிறுவென நடந்தான். அவன் ஹாலை கடந்த போது, ‘ஐயோ அசோக்கு.. எங்க கெளம்பிட்ட.. சாப்பிட்டு போப்பா..’ என்று கௌரம்மா கத்தியதை, காதிலேயே அவன் வாங்கிக்கொள்ளவில்லை. கதவை திறந்து வெளியேறினான்.
அவன் கோவமாக செல்வதையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்த மஹாதேவன், அப்புறம் மருமகள் அருகில் நிற்பதை உணர்ந்ததும், சகஜ நிலைக்கு திரும்ப முயன்றார். முகத்தில் வரவழைத்துக் கொண்ட ஒரு புன்னகையுடன், நந்தினியிடம் தடுமாற்றமாக சொன்னார்.
“இ..இப்போத்தான கல்யாணம் ஆயிருக்கு.. போக போக எல்லாம் சரியாயிடும்மா நந்தினி..!! இ..இதெல்லாம் நீ ஒன்னும் பெருசா எடுத்துக்காத..!!”
மாமனாரின் தடுமாற்றத்தையும் அவருடைய மனநிலையையும் புரிந்து கொண்ட நந்தினி, இப்போது கனிவான குரலில் சொன்னாள்.
“இல்ல மாமா.. நான் பெருசா எடுத்துக்கலை..!! நான் கஷ்டப்படுவேன்னு நெனச்சுக்கிட்டு.. நீங்க மனசு கவலைப்படாதீங்க..!!”
வீட்டை விட்டு வெளியேறிய அசோக், தனது காரை ஸ்டார்ட் செய்து விருட்டென்று கிளம்பினான். அவன் மனதுக்குள் அப்பாவின் மீது லேசான எரிச்சல். நந்தினியின் கழுத்தில் தாலி கட்டி விட்டால் அவர் கம்மென்று இருப்பார் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால் தன் இஷ்டப்படி இருக்க அவர் தன்னை விட மாட்டார் என்று இப்போது அவனுக்கு தோன்றியது. நந்தினியை விட தந்தையை சமாளிப்பதுதான் இனி பெரும்பாடாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டான்.
கார் கொட்டிவாக்கத்தை கடந்தபோது, தூரத்திலேயே அந்த பஸ் ஸ்டாப்பையும் அங்கே நின்றிருந்த கற்பகத்தையும் அசோக் கவனித்துவிட்டான். உடனே காரின் வேகத்தை குறைத்து, சரியாக அந்த பஸ் ஸ்டாப் அருகிலேயே நிறுத்தினான். ஹார்ன் அடித்தான். சப்தம் கேட்டு திரும்பி பார்த்த கற்பகம், அசோக்கை பார்த்ததும் புன்னகைத்தாள். ஓடி வந்து கார்க்கதவை திறந்து அசோக்கிற்கு அருகே அமர்ந்து கொண்டாள். அசோக் காரை கிளப்பிக்கொண்டே கிண்டலான குரலில் கேட்டான்.
“எங்க போகணும் கற்பு..??”
“எங்கயா..?? ஆபீசுக்குத்தாண்டா..!!”
“ஆபீசுக்கா..?? ஒன்பது மணி ஆபீசுக்கு பத்து மணிக்கு போயிட்டு இருக்குற.. இதான் நீ ஆபீஸ் வர்ற லட்சணமா..?? இந்த மாசம் உன் சம்பளத்துல கை வைக்கிறனா இல்லையான்னு பாரு..!!”
“டேய்.. ஏதோ இன்னைக்கு ஒருநாள் லேட் ஆகி போச்சு.. அதுக்கு போய் ரொம்ப ஓவரா பேசுற..? நீயுந்தான் தெனமும் லேட்டா வர்ற.. நாங்க ஏதாவது கேக்குறமா..??”
“ஹேஹே.. நீயும் நானும் ஒண்ணா..?? நான் மொதலாளிமா..!!”
“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி..!! அதுசரி.. நீ என்ன கல்யாணம் ஆன அடுத்த நாளே ஆபீஸ் வந்துட்டு இருக்குற..??”
“ஏன்.. வர கூடாதா..?? நான் இன்னைக்கு வர மாட்டேன்னு.. ஆபீஸ்ல எல்லாம் ஓப்பி அடிக்க ப்ளான் பண்ணிருக்கீங்களா..??”
“ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுல்ல..!! ஹனிமூன்லாம் எங்கயும் போகலையான்னு கேட்டேன்..??”
“ஹனிமூனா..?? உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்..!! போலாமா..??” குறும்பாக கேட்டுவிட்டு அசோக் கண் சிமிட்ட, கற்பகம் டென்ஷனானாள்.
“செருப்பு பிஞ்சுடும்..!! நான் கேட்டது நீயும் உன் வொய்ஃபும் ஹனிமூன் போகலையான்னு..??”
“இ..ல்லை கற்பு..!!” அசோக் இப்போது சலிப்பாக சொன்னான்.
“ஏன்..??”
“என்ன ஏன்..? அவளை கூட்டிட்டு எங்க ஹனிமூன் போறது..??”
“ஆமாமாம்.. கட்டுன பொண்டாட்டியோடலாம் நீங்க ஹனிமூன் போவீங்களா..? அதுக்குத்தான் உங்களுக்கு நெறைய பேர் இருக்காங்களே..??” கற்பகம் கிண்டலாக சொன்னாள்.
“ப்ச்.. புரியாம பேசாத கற்பு.. பொண்டாட்டியா அவகிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டேன்னு சொல்லிருக்குறேன்..!! ஹனிமூன்லாம் எங்களுக்குள்ள அவசியம் இல்லாத ஒன்னு..!!”
“ஓஹோ..?? ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நேத்து கல்யாணத்தப்பதான் பார்த்தேன்.. ரொம்ப நல்ல பொண்ணா தெரியிறாடா உன் வொஃய்ப்..!! லட்சணமா இருக்குறா.. ஒரு மாதிரி அழகும், அடக்கமும் ஒண்ணா சேர்ந்த மாதிரி..!! பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. நீ என்னடான்னா.. அவளை போய் கேடி, கேப்மாறின்னு சொல்லிட்ட..!!”
“இப்போ கொஞ்சம் மாறிட்டான்னு தோணுது கற்பு..!! காலேஜ்லலாம் நான் சொன்ன மாதிரிதான் இருந்தா..!!”
“ம்ம்ம்.. அவ மாறிட்டா.. ஸார் எப்போ மாறுற மாதிரி ஐடியா..?”
“ஸார்லாம் எப்போவும் மாற மாட்டாரு.. இப்படியேதான் இருப்பாரு..!!”
“ஐயே.. இதுல என்ன உனக்கு பெருமை வேண்டி கெடக்கு..? கல்யாணத்துக்கு அப்புறமாவது அந்த கருமத்தைலாம் தொலைச்சு கட்டலாம்ல..?”
“தயவு செஞ்சு உன் அட்வைஸ் மோட்டரை கொஞ்சம் ஆஃப் பண்றியா.. ஆரம்பிச்சேன்னா அப்புறம் லொடலொடன்னு ஓடிட்டு கெடக்கும்..!!”
“ஹ்ம்.. நல்லது சொன்னா உடனே வாயை அடைச்சுடுவியே..? எக்கேடோ கேட்டு போ.. எனக்கென்ன..? ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அந்த பொண்ணை நெனச்சாத்தான் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு..”
“அவளே அதையெல்லாம் நெனச்சு கஷ்டப்படல.. நீ ஏன் கஷ்டப்படுற..?? அதுசரி.. நீ ஏன் இன்னிக்கு இவ்வளவு லேட்டு..??” அசோக் கேட்க, கற்பகத்தின் முகம் பட்டென மலர்ந்தது.
“இன்னைக்கு என் வீட்டுக்காரருக்கு பர்த்டே அசோக்.. காலைல கோயிலுக்கு போய் அவர் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்.. காலங்காத்தாலேயே கோயில்ல செம கூட்டமா.. லேட்டாகி போச்சு..!!”
“ம்ம்.. புருஷன் மேல ரொம்பத்தான் பிரியமா இருக்குற நீ..” அசோக்கின் குரலில் ஏனோ ஒரு சலிப்பு.
“என் புருஷன்.. நான் பிரியமா இருக்குறேன்.. உனக்கு ஏன் எரியுது..??”
“எரிச்சலா.. எனக்கா.. ஹேஹே.. அதெல்லாம் ஒண்ணுல்ல..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்புறம்.. வேற என்ன ஸ்பெஷல்.. புருஷன் பர்த்டேக்கு..??”
“வேற என்ன.. வீட்டுல காலைல ஒரு ஸ்வீட் பண்ணினேன்.. பேக்ல இருக்கு.. சாப்பிடுறியா..?”
“வேணாம் வேணாம்.. நீயே வச்சுக்கோ உன் ஸ்வீட்டை..!! அதான் டெயிலி எனக்கு ஸ்வீட் தர்றியே..?”
“ஹாஹா.. நான் டெயிலி ஸ்வீட் தர்றனா.. என்னது..?”
“ம்ம்ம்..?? அல்வா…!!”
“ஹாஹாஹாஹாஹாஹா..!!”
கற்பகம் கலகலவென சிரிக்க, அசோக்கும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டான். அடையாறு நோக்கி அந்த கார் அதிவேகத்தில் சீறிக்கொண்டிருந்தது.
அத்தியாயம் 14
அந்தக் காரை போல அல்லாமல் அடுத்து வந்த ஒரு மாதம் அவசரமில்லாமலே நகர்ந்தது.
‘அந்த வேலையை விட்ரும்மா.. எதுக்கு தேவையில்லாம கஷ்டப்படுற..?’ என்று மஹாதேவன் கல்யாணத்துக்கு முன்பே நந்தினியிடம் சொல்லியிருந்தார். அவர் சொல்லை ஏற்று கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பு, தான் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறிய வருமானம் உள்ள வேலையையும் ரிஸைன் செய்துவிட்டாள். அப்பாவுக்கு பிசினஸ் நொடித்து வறுமையில் உழன்ற காலத்திலேயே, தொடர்பில் இருந்த சில நண்பிகளும் அவளை விட்டு தொலை தூரம் சென்றிருந்தார்கள். எனவே நந்தினி முழு நேரமும் புகுந்த வீட்டிலேயேதான் கழிக்க வேண்டியிருந்தது.
புது இடத்தில் தன்னை பொருத்திக்கொள்ள நந்தினிக்கு அந்த ஒரு மாத அவகாசம் தேவைப்பட்டது. அசோக் மட்டுமில்லாது, மஹாதேவன், கௌரம்மா, ராமண்ணா என அந்த வீட்டில் இருந்தவர்களையும், அவர்களது குணங்களையும் அறிந்து கொள்ள அவசியமாயிருந்தது. ஒரு மாதம் முடிந்த தருவாயில் அவளுக்கு அந்த புது வாழ்க்கை ஓரளவு பழகிப் போயிருந்தது.
மஹாதேவன் எப்போதும் போல அவள் மீது அன்பை பொழிந்தார். மகனுடைய செயல்கள் மருமகளை காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவள் சாப்பிட்டாளா, தூங்கினாளா, புது இடத்தில் வசதியாய் இருக்கிறாளா என அடிக்கடி கேட்டு அறிந்து கொண்டார். கௌரம்மாவும் அதேமாதிரி நந்தினியை உள்ளங்கையில் வைத்து தாங்கியது, நந்தினிக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது. நந்தினியை எந்த வேலையும் செய்ய விடவில்லை கௌரம்மா. ‘நீ விடும்மா.. நான் பண்ணிக்கிறேன்..’ என்பாள். நந்தினியே அடம் பிடித்து ஒவ்வொரு வேலையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்ய வேண்டி இருந்தது. ராமண்ணா அதிகம் பேச மாட்டார். கேட்பதற்கு மட்டும் புன்னகையுடன் பதில் சொல்வார். மற்றபடி அமைதியின் சின்னம் அவர். எந்த நேரமும், மஹாதேவனுடனே இருந்தார். வெளியில் சென்றால் அவருக்கு கார் ஓட்டிக்கொண்டு.. வீட்டில் இருந்தால் அவருக்கு உதவிகள் செய்துகொண்டு..!! அசோக்கை பற்றியும் அவளால் அந்த ஒரு மாதத்தில் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது…!!
காலையில் எழுந்து குளித்துவிட்டு அசோக்கிற்கு காபி போடுவதில் இருந்து நந்தினியின் வேலை ஆரம்பமாகும். அப்புறம் கௌரம்மாவுடன் சேர்ந்து சமையல்கட்டில் பிஸியாகி விடுவாள். அசோக் குளித்துவிட்டு வந்ததும், உடன் இருந்து அவனுக்கு காலை உணவு பரிமாறுவாள். அவன் ஆபீஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் மீண்டும் சமையலறை..!! கௌரம்மாவுடன் ஏதாவது கதையடித்துக்கொண்டே மதிய உணவு தயார் செய்வாள். ஹாட் பாக்ஸில் போட்டு எடுத்துக்கொண்டு, அடையாறு ஆபீசுக்கு செல்வாள்.
நந்தினி இந்த மாதிரி அவனுக்காக சமைப்பது, ஆபீசுக்கு அதை கொண்டு வருவது, அவனுடைய வேலைகளை அவள் செய்வது எல்லாம் ஆரம்பத்தில் அசோக்கிற்கு பிடிக்கவில்லை. மனைவி என்ற உரிமையை எடுத்துக்கொள்ள முயலுகிறாளோ என்று சந்தேகித்தான். முதல் நாள் அவள் சாப்பாடு கட்டிக்கொண்டு ஆபீசுக்கு வந்தபோது சற்று கடுமையாகவே சொன்னான்.
“இங்க பாரு நந்தினி.. இதுலாம் நீ செய்யணும்னு அவசியம் இல்ல.. இதெல்லாம் நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கவும் இல்லை..!! நாளைல இருந்து நீ சாப்பாடு கொண்டு வர வேணாம்.. நான் எப்போவும் போல வெளிலயே சாப்பிட்டுக்குறேன்..!!”
“ஹையோ.. இதுல என்னங்க இருக்கு..?? எனக்கும் வீட்டுல ரொம்ப போரடிக்குது.. எவ்வளவு நேரம்தான் சும்மா தின்னுட்டு தின்னுட்டு தூங்குறது..?? எனக்கும் பொழுது போக வேணாமா..??”
“பொழுது போறதுதான் உனக்கு பிரச்னையா..?? புக்ஸ், ம்யூசிக், டிவி, வீடியோ, இன்டர்நெட்னு வீட்டுல என்னன்னவோ இருக்கு.. அதெல்லாம் விட்டுட்டு எனக்காக எதுக்கு அலைஞ்சு கஷ்டப்பட்டுட்டு இருக்குற..?”
“இதுல என்ன கஷ்டம் இருக்கு..?? ராமண்ணாட்ட சொல்லப்போறேன்.. அவர் கார்ல கூட்டிட்டு வந்து திரும்ப கூட்டிட்டு போக போறாரு..!! வீட்டுலையே அடைஞ்சு கெடக்குறது கஷ்டமா இருக்கு அசோக்.. இப்படி வந்துட்டு போனா எனக்கும் கொஞ்சம் நல்லாருக்கும்..!! அதில்லாம.. நான் ஆபீசுக்குள்ள நடந்து வர்றப்போ, எல்லாரும் எந்திரிச்சு நின்னு எனக்கு வணக்கம் சொல்றாங்க.. எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..?” நந்தினி பெருமையான குரலில் சொல்ல, அசோக் இப்போது கிண்டலாக கேட்டான்.
“ஓ..!! அப்போ வீட்டுல உனக்கு போரடிக்கிறதாலயும், ஆபீஸ்ல எல்லாம் உனக்கு சல்யூட் அடிக்கிறதாலயுந்தான்.. டெயிலி சாப்பாடு கொண்டு வர்றேன்னு சொல்றியா..?”
“அச்சச்சோ.. அதுலாம் ஸைடு.. மெயின் ரீஸன் வேற..”
“என்ன..?”
“ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு என் பிரண்டோட உடம்பு கெட்டு போயிட கூடாதே.. அதான்..!!”
சொல்லிவிட்டு நந்தினி குறும்பாக கண்சிமிட்ட, அசோக்கும் சிரித்தான். அவளை தினமும் மதியம் தனக்கு சாப்பாடு கொண்டு வர அனுமதித்தான். அசோக் அவ்வாறு அனுமதி அளித்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு வெறுத்து போயிருந்த அவனுக்கு, நந்தினியின் கைப்பக்குவ சாப்பாடு அமிர்தமாக தோன்றியது. அப்புறம்.. சாப்பிடும்போது அவளுடன் ஏதாவது சிரித்து பேசிக்கொண்டே சாப்பிடுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :