ஆண்மை தவறேல் – பகுதி 31

மஹாதேவன் அசோக்கிடம் சூடு பட்டுக்கொண்டார் என்றால், கௌரம்மா நந்தினியிடம் வாங்கி கட்டிக்கொண்டாள். வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், மனதில் இருந்த கேள்வியை தயங்கி தயங்கி நந்தினியிடம் கேட்டுவிட்டாள்.

“ஏன் நந்தினிம்மா.. அ..அசோக் தம்பிக்கும், உ..உனக்கும் ஏதாவது பிரச்னையா..??”

“அ..அதுலாம் ஒண்ணுல்ல.. ஏன் கேக்குறீங்க..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“இல்ல.. எந்த நேரமும் நல்லா சிரிச்சு பேசிட்டு இருப்பீங்க.. இப்போ சுத்தமா பேசிக்கிறதே இல்லையே.. அதான்.. என்ன பிரச்னைன்னு..”

“ப்ச்.. அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..? நான் எப்போவும் போலதான் இருக்கேன்..!! அவர்தான் சும்மா மொறைச்சுட்டு திரியிறாரு..!!”

“ஏன்..??”

“அதை அவர்ட்டயே போய் கேளுங்க ..!!”

“ஐயையோ.. அதுகிட்ட கேட்டா.. என்னை கடிச்சு குதறிடும்..”

“அப்போ.. வாயை மூடிட்டு சும்மா இருங்க..”

அப்புறம் என்ன..?? கௌரம்மாவும் கப்சிப் ஆனாள். மஹாதேவனும், கௌரம்மாவும் இவர்களிடம் அமைதியாகிப் போனாலும், அவர்களுக்குள் தனியாக இவர்களுடைய விஷயத்தை பற்றி பேசிக்கொண்டார்கள். என்ன பிரச்னை என்பதைப் பற்றி கொஞ்சம் கூட அவர்களால் ஊகிக்க முடியாததால், எதுவும் செய்ய முடியாத நிலைக்கு உள்ளானார்கள். ‘கொஞ்ச நாள் விட்டு பிடிக்கலாம்..’ என்பது மாதிரி ஒரு முடிவு எடுத்தார்கள்.

நந்தினிக்கு அசோக் மீது கோவம் இருந்தது. இன்னொரு பெண் ஏற்றிவிட்ட உடல் சூட்டை தணிக்க, தன்னை உபயோகப்படுத்திக் கொண்டானே என்று அவன் மீது ஆத்திரம் இருந்தது. தன் மீது அவனுக்கு காதல் பூக்கும் என்ற நம்பிக்கை கானல் நீர் ஆகிவிடுமோ என்ற கவலை அதிகரித்திருந்தது. ஆனால் அவள் ஒரு விஷயத்தில் மிக தெளிவாக இருந்தாள். அது என்னவென்று தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்.

அவர்கள் சண்டையிட்டுக் கொண்ட அந்த வாரத்தின் இறுதியில், அம்மாவை பார்த்துவர அவள் பெருங்குடிக்கு சென்றிருந்தாள். அன்று இரவு அந்த வீட்டிலேயேதான் தங்கினாள். ஒற்றை படுக்கை அறை கொண்ட வீடுதான் அது. அமுதா எப்போதும் உள்ளறைக்குள் இருக்கும் கட்டிலில்தான் படுத்துக் கொள்வாள். அந்த அறைக்கு வெளியே இருக்கும் சிறிய ஹாலில் நந்தினியும் வந்தனாவும் டேபிள் ஃபேன் காற்றில் படுத்து தூங்குவார்கள்.

நந்தினி அன்று அமுதாவிடம் பேசி இருந்து விட்டு, பிறகு அவள் தூங்கியதும் போர்வையை போர்த்தி விட்டு, விளக்கை அணைத்துவிட்டு, ஹாலுக்கு வந்தாள். ஹாலில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில், வந்தனா இன்னும் தூங்காமல் விழித்திருப்பது, இரவு விளக்கின் வெளிச்சத்திலேயே தெளிவாக தெரிந்தது. நந்தினியும் வந்து தங்கைக்கு அருகில் அமைதியாக படுத்துக் கொண்டாள். போர்வையை இழுத்து தன் உடலை மூடிக்கொண்டே, மெல்லிய குரலில் கேட்டாள்.

“என்னடி.. தூக்கம் வரலியா இன்னும்..?”

“இ..இல்லக்கா.. வரலை..”

“காலேஜுக்கு போகணும்ல காலைல..? சீக்கிரம் தூங்கி எந்திரி..”

“ம்ம்..”

அதன்பிறகு இருவரும் அமைதியாகிப் போனார்கள். தரையில் நின்றிருந்த டேபிள் ஃபேன் மட்டும் ‘விர்ர்ர்ர்ர்….’ என்று சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. ஒரு இரண்டு நிமிடங்கள் இருக்கும். வந்தனா நந்தினியை சன்னமான குரலில் தயக்கமாக அழைத்தாள்.

“அ..அக்கா..”

“ம்ம்..”

“உ..உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..”

“என்ன..?”

“அ..அம்மாகிட்ட கூட இதை சொல்லலை.. அவங்க இருக்குற நெலமைல இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை..!! உன்கிட்டயும் எப்படி சொல்றதுன்னே.. நாலஞ்சு நாளா மண்டையை போட்டு கொழப்பிட்டு இருக்கேன்..!!”

வந்தனா அவ்வாறு சொன்னதும், நந்தினிக்கு உடனடியாய் ஒரு சீரியஸ்னஸ் வந்தது. அவ்வளவு நேரம் தங்கைக்கு முதுகு காட்டி படுத்திருந்தவள், இப்போது புரண்டு படுத்தாள். மங்கலான வெளிச்சத்திலும் பிரகாசமாக தெரிந்த தங்கையின் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.

“என்னடி விஷயம்.. சொல்லு..”

“நா..நாலஞ்சு நாள் முன்னாடி.. ” வந்தனா இன்னும் தயங்கவே செய்தாள்.

“ம்ம்ம்..??”

“அ..அத்தானை நான் வேற ஒரு பொண்ணோட பாத்தேன்க்கா.. கா..காருக்குள்ள உக்காந்திருந்தாங்க.. நந்தனம் சிக்னல்ல..!! ரெண்டு பேரும்.. ரொ..ரொம்ப நெருக்கமா இருந்தாங்க..!!”

சொல்லிவிட்டு வந்தனா தன் அக்காவையே மிரட்சியாக பார்க்க, நந்தினியோ பேச்சிழந்து போனவளாய் தன் தங்கையையே ஒரு சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படியான வார்த்தைகளை தங்கையிடம் இருந்து கேட்கக் கூடும் என்று நந்தினி சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த சூழ்நிலைக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அவள் சொன்ன நாள்க்கணக்கை வைத்து பார்க்கும்போது.. அசோக் அவளை முத்தமிட்டானே.. மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பொய் சொன்னானே.. அன்றுதான் இவள் பார்த்திருப்பாள் என்று நந்தினியால் புரிந்து கொள்ள முடிந்தது. நந்தினியின் அமைதியை பார்த்ததும், வந்தனாவே கேட்டாள்.

“எ..என்னக்கா.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..?”

“எ..என்ன சொல்ல சொல்ற..?”

“உனக்கு ஷாக்கா இல்லையா..?? உன் புருஷன் உனக்கு துரோகம் பண்றாருக்கா.. வேற ஒரு பொண்ணோட தொடர்பு வச்சிருக்காரு..!!”

“ஹாஹாஹாஹா..”

தங்கையின் அறியாமையை நினைத்து நந்தினிக்கு சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பும் விரக்தியாகவே வெளிப்பட்டது.

“ஏ..ஏன் சிரிக்கிற..?”

“ம்ம்ம்.. எப்படி சொல்றது..?? அவருக்கு ஒரு பொண்ணு மட்டும் இல்ல வந்தனா.. அது மாதிரி நெறைய பொண்ணுங்க இருக்காங்க.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி..!!” நந்தினி விரக்தியாக சொல்ல, வந்தனா அதிர்ந்து போனாள்.

“எ..என்னக்கா இவ்வளவு சாதாரணமா சொல்ற..?”

“வேற எப்படி சொல்றது..?” நந்தினி விட்டேத்தியாக சொல்ல, வந்தனாவை பட்டென ஒரு ஆத்திரம் வந்து பற்றிக் கொண்டது.

“என்னக்கா நீ.. இப்படி அசால்ட்டா இருக்குற..? இரு.. நான் இப்போவே போய் அம்மாட்ட சொல்றேன்..!! இதை நான் சும்மா விட போறது இல்ல.. அந்த ஆளை என்ன பண்றேன் பாரு..!!” சீற்றமாய் சொல்லிவிட்டு எழ முயன்ற வந்தனாவை நந்தினி தடுத்தாள்.

“ப்ச்.. இரு வந்தனா.. அம்மாக்கு எல்லாம் தெரியும்..”

“எ..என்னக்கா சொல்ற..?” வந்தனாவின் முகம் வெளிறிப்போனது அந்த இருட்டிலும் தெளிவாக தெரிந்தது.

“ஆமாம்.. அவருக்கு பொண்ணுக சகவாசம் இருக்குறது எனக்கும், அம்மாவுக்கும் முன்னாடியே தெரியும்.. அது தெரிஞ்சுதான் நான் இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்..!!”

நந்தினி சொல்ல, வந்தனா இப்போது உச்சபட்ச அதிர்ச்சியை உள்வாங்கினாள். ‘அக்காவுக்கு நடந்த பணக்கார வீட்டு திருமணம் இவ்வளவு கொடுமையானதா..?’ என திகைத்துப் போனாள். அதிர்ச்சியில் அவள் பேச்சிழந்து போயிருந்தாலும், அவளுடைய மூளை சுறுசுறுப்பாக பல விஷயங்களை யோசித்தது. என்ன நடந்திருக்கும் என்று அவளால் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. அவளுடைய மூளை உரைத்த விஷயங்கள் வந்தனாவை ஆத்திரம் கொள்ள செய்தன. அக்காவுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று அவளுக்கு தோன்றியது. நந்தினியிடம் சீற்றமாக கேட்டாள்.

“ஓ.. இப்படிப்பட்ட ஒரு புள்ளையை தலைல கட்டத்தான்.. நமக்கு விழுந்து விழுந்து உதவி செய்ற மாதிரி நடிச்சாரா அந்த பெரிய மனுஷன்..??”

“வார்த்தையை அளந்து பேசு வந்தனா.. இன்னைக்கு நீ படிச்சுக்கிட்டு இருக்குற படிப்பு.. நம்ம குடும்பம் இருக்குற நெலமை.. எல்லாம் அவர் போட்ட பிச்சை..!!”

மஹாதேவனை தவறாக பேசிய கோபத்தில் நந்தினி கடுமையாக சொன்னாள். வந்தனா இப்போது அமைதியானாள். அவளுடைய கோவமும் பட்டென தணிந்து போனது. அக்காவின் முகத்தையே பாவமாக பார்த்தவள், அப்புறம் இரக்கம் நிறைந்த குரலில் கேட்டாள்.

“ஏன்க்கா.. ஏன் இப்படி பண்ணுன..? எதுக்காக இப்படி ஒரு கல்யாணத்துக்கு சம்மதிச்ச..?”

“அக்காவுக்கு வேற வழி தெரியலை வந்தனா..”

நந்தினி தங்கையின் கவலை தோய்ந்த முகத்தை தடவிக்கொண்டே, கனிவாக சொன்னாள். வந்தனா இப்போது மீண்டும் சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அவளுடைய புத்தி எதையோ தீவிரமாக யோசித்தது. ஒரு தெளிவு பிறந்ததும், அவசரமாய் தன் அக்காவிடம் கேட்டாள்.

“எங்களுக்காகவா அக்கா..?? எங்களுக்காகத்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சியா..?”

“ம்ம்ம்..” நந்தினி சொன்னதும், இப்போது வந்தனா பட்டென சொன்னாள்.

“அப்போ வந்திருக்கா.. அந்த ஆளை விட்டு வந்துரு..!!”

“ஏ..ஏய்.. வந்தனா..” தங்கை சொன்னதை கேட்டு நந்தினி திகைத்தாள்.

“ஆமாம்க்கா.. அம்மாகிட்ட நான் பேசுறேன்.. எதுக்கு உனக்கு இப்படி ஒரு கொடுமையான வாழ்க்கை..? எப்படியோ போறார்னு வந்துடு..!!”

“ப்ச்.. அது அவ்வளவு ஈஸி இல்லை வந்தனா.. உனக்கு புரியலை..!!”

“உனக்குத்தான்க்கா புரியலை..!! நாம ஏன் அவங்ககிட்ட கையேந்தி நிக்கணும்..? எனக்கு காலேஜும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்.. கல்யாணம் கூட வேணாம் எனக்கு..!! நான் வேலைக்கு போறேன்.. கெடைச்ச வேலையை பாக்குறேன்.. நீயும் வேலைக்கு போ.. அம்மாவை நாம பாத்துக்கலாம்க்கா.. கொஞ்சமா சம்பாதிச்சாலும், நாம உழைச்ச காசுல கௌரவமா வாழலாம்..!!”

“ஐயோ.. அதுக்காக இல்லடி..”

“அப்புறம் என்ன..? ஊருல நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்ல போறியா..? அடுத்தவங்களுக்காகலாம் நாம வாழ முடியாதுக்கா..!!”

“புரியாம பேசாத வந்தனா.. அப்படிலாம் என்னால வர முடியாது..”

“ஏன்..?”

“முடியாதுடி..”

“அதான் ஏன்னு கேக்குறேன்..?” வந்தனா விடாப்பிடியாக கேட்கவும், நந்தினி எரிச்சலும் கோவமுமாக சொன்னாள்.

“ஏன்னா நான் என் புருஷனை லவ் பண்றேன்.. போதுமா..??”

“அ..அக்கா..”

வந்தனா அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனாள். அப்புறம் சில வினாடிகள் அங்கே ஒரு பலத்த மௌனம் நிலவியது. நந்தினியின் கண்கள் இப்போது மெல்ல கலங்க ஆரம்பித்தன. வந்தனா காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல், அக்காவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு நந்தினி மூக்கை விசும்பிக்கொண்டே, சற்றே தழதழத்த குரலில் பேச ஆரம்பித்தாள்.

“அவருக்கு பொம்பளைங்க சகவாசம் இருக்கலாம் வந்தனா.. ஆனா மனசால ரொம்ப நல்லவரு..!!”

“……………………………………”

“என்னை ரொம்ப பிடிக்கும் அவருக்கு.. எனக்கு புடிச்சதெல்லாம் பாத்து பாத்து பண்ணுவாரு..”

“……………………………………”

“நான் கஷ்டப்பட்டா அவரால தாங்கிக்க முடியாது..!! இப்போக்கூட.. உன்கிட்ட சொல்ல முடியாத ஒரு வேதனைல நான் இருக்கேன்.. ஆனா இதே அளவு வேதனையை அவரும் அனுபவிச்சுட்டு இருப்பார்னு எனக்கு நல்லா தெரியும்..!!”

“……………………………………”

“என் புருஷனை விட்டு என்னால வரமுடியாது வந்தனா.. நான் அவர்கூடதான் இருப்பேன்.. என்னைக்காவது அவர் முழுமனசோட என்னை மனைவியா ஏத்துப்பாரு.. அதுவரை நான் வெயிட் பண்ணுவேன்..!!”

சொல்லிவிட்டு கண்களை துடைத்துக்கொண்ட நந்தினியையே, வந்தனா கொஞ்ச நேரம் கண்ணிமைக்காமல் பார்த்தாள். அப்புறம் கனிவான குரலில் கேட்டாள்.

“என்ன மாதிரியான லவ்-க்கா இது..?? எ..எனக்கு புரியலை..!!”

“உனக்கு புரியாது வந்தனா.. யாருக்கும் புரியாது..!! நீ இதெல்லாம் நெனச்சு கவலைப்படாத.. அக்கா பிரச்னையை அக்காவே பாத்துக்குறேன்..!! நீ எதை பத்தியும் நெனைக்காம.. நல்லா படி.. லைஃப்ல என்ன சாதிக்கணும்னு நெனச்சியோ அதை பண்ணு.. அம்மாவை பாத்துக்கோ.. அது போதும்..!! சரியா..?”

“ம்ம்.. சரிக்கா..!!”

“சரி டைமாச்சு.. தூங்கு..”

“ம்ம்..”

அப்புறம் நந்தினியும், வந்தனாவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இருவரும் புரண்டு படுத்துக்கொண்டு, இமைகளால் விழிகளை மூடிக்கொண்டார்கள். ஆனால் இருவருக்கும்.. நித்திரை வந்து சேரத்தான் நீண்ட நேரமாகிப் போனது..!!

அத்தியாயம் 24

அசோக் செய்த காரியம் நந்தினிக்கு ஆத்திரத்தை மூட்டி விட்டிருந்ததே ஒழிய, அவனை விட்டு விலகும் எண்ணம் அவளுக்கு துளியளவும் வரவில்லை. அவன் மீது மையல் கொண்டிருந்த மனதை மாற்றிக் கொள்ளவும் அவளால் இயலவில்லை. அவன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கை இப்போது நமத்துப் போயிருந்தாலும், அந்த நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்வதை தவிர அவளுக்கு வேறு வழி புலப்படவில்லை. ஆனால் அதற்காக, தன் கோபத்தை எல்லாம் புதைத்துவிட்டு அவனிடம் கொஞ்சிப் பேசவும் அவளால் முடியவில்லை. ஒருவித நெருக்கடியான மன அழுத்தத்தில் நந்தினி சிக்கி தவித்தாள்.

அந்த மன அழுத்தம்தான் அவளை அசோக் மீது எரிந்து விழ செய்தது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவன் செய்த தவறை குத்திக் காட்ட சொல்லி அவளை தூண்டியது. அவளுடைய செய்கை அசோக்கிற்கு வேதனை தரும் என்பதையும் அவள் உணர்ந்தே வைத்திருந்தாள். ஆனால் அவளுடைய உள்ளக் கொதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வார்த்தைகளை கொட்டி விடுவாள்.

இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் இன்னொரு சம்பவம் நடந்தது. அவர்களுக்கு இடையில் நிலவிய பிரச்னையை அது வேறு திசையில் திருப்பி போட்டது.

நந்தினி பெருங்குடி சென்று திரும்பி ஒரு வாரம் கழித்து ஒரு நாள்.. இரவு ஒன்பது மணி இருக்கும். அசோக் ஆபீசில் இருந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுடைய செல்போனுக்கு அந்த கால் வந்தது. புது எண்ணாக இருக்கவும், ‘யாராக இருக்கும்..?’ என்று சற்றே குழப்பத்துடன் எடுத்து பேசியவன் அடுத்த முனையில் வந்தனா என்பதை அறிந்ததும் ஆச்சரியமுற்றான்.

“ஹேய்.. வந்தனா.. எப்படி இருக்குற..?” என்றான் உற்சாகமாகவே.

“ம்ம்.. நல்லாருக்கேன்..” வந்தனாவின் குரல் இறுக்கமாக ஒலித்தது.

“அப்புறம்.. என்ன திடீர்னு கால் பண்ணிருக்குற..?”

“உ..உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அத்தான்.. இப்போ ஃப்ரீயா இருக்கீங்களா..?”

“ம்ம்.. ஃப்ரீதான்.. சொல்லு.. என்ன விஷயம்..?” அசோக் காரின் வேகத்தை குறைத்து ரோட்டோரமாக நிறுத்திக்கொண்டே கேட்டான்.

“அ..அதை.. எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை..”

“என்ன.. ஓவரா பில்டப்புலாம் கொடுக்குற.. அப்படி என்ன விஷயம்..?”

“ஆக்சுவலா.. போன வாரம் அக்கா இங்க வந்திருக்குறப்போ நான் பாத்த ஒரு விஷயத்தை பத்தி அவகிட்ட சொன்னேன்.. அவ அத்தான்ட்ட இதைப்பத்திலாம் பேசாதடின்னு சொன்னா.. நானும் சரிக்கான்னு சொல்லிருந்தேன்..!! ஆனா எனக்கு மனசு கேக்கலை.. ஒரு வாரமா எனக்கு அதே நெனைப்பாவே இருக்கு..!! ” என்ற வந்தனா திடீரென,

“அக்காவை நெனச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்குத்தான்..!!”

என்று உடைந்து போன குரலில் சொல்ல, அசோக்கை ஒரு மெலிதான பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. ஆனால் அவள் சொல்ல விழைந்த விஷயம் எதுவும் அவனுக்கு தெளிவாக புரியவில்லை. அந்த குழப்பத்துடனே கேட்டான்.

“ஹேய்.. வந்தனா.. இப்போ என்னாச்சுன்னு இப்படிலாம் பேசுற..? நீ என்ன சொல்ல வர்றேன்னே எனக்கு சரியா புரியலை..!! ஆமாம்.. ஏதோ நீ பாத்த விஷயத்தை பத்தி அவகிட்ட சொன்னேன்னு சொன்னியே.. என்ன அது..??”

“அ..அது..”

“ம்ம்ம்… சொல்லு..”

“ஒ..ஒரு பத்து நாள் முன்னாடி.. உ..உங்களை நான் பாத்தேன்..!!”

“எ..என்னையா..??”

“ம்ம்.. நந்தனம் சிக்னல்ல.. ஒரு காருக்குள்ள.. நீங்களும் இன்னொரு பொண்ணும்..!!”

“ஓ..!!!”

அசோக் இப்போது மெலிதாக அதிர்ந்தான். மஞ்சுவும் அவனுன் காருக்குள் இருந்ததை இவள் பார்த்திருக்கிறாள் என்று பட்டென அவனுக்கு புரிந்து போனது. கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ‘இவள் ஒருத்திக்குத்தான் தெரியாமல் இருந்தது. இவளுக்கும் தெரிந்து போனதா..? இப்போது இவள் என்ன சொல்லப் போகிறாளோ..?’ நினைக்க நினைக்க, அசோக்கிற்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது. தலையை பிடித்துக் கொண்டான். அடுத்த முனையில் வந்தனா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments