அன்புள்ள ராட்சசி – பகுதி 55
ஸ்ரீனிவாச பிரசாத்தாவது பரவாயில்லை.. அசோக் அந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை.. கண்களில் கண்ட காட்சியில் அப்படியே வெலவெலத்துப்போய் நின்றிருந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத்-தான் முதலில் சுதாரித்துக் கொண்டார்.. எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல், படக்கென அவருடைய வலதுகையில் அந்த பிஸ்டல் முளைத்தது.. அதன் மேற்புறத்தை பிடித்து இழுத்து, சேஃப்டி கேட்சை விடுவித்துக் கொண்டவர்.. தடதடவென வீட்டுக்குள் ஓடினார்..!! அசோக் என்ன செய்வதென்றே தெரியாமல்.. இறந்து கிடந்த பிணங்களை பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தான்..!!
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
உள்ளே ஓடிய ஸ்ரீனிவாச பிரசாத்.. கையில் விறைப்பாக பிடிக்கப்பட்ட துப்பாக்கியுடன்.. ஒவ்வொரு அறையாக சென்று அலசினார்.. ஒருவரும் அகப்படவில்லை..!! பின்பு வீட்டுக்கு பின்புறமாக ஓடினார்.. பின்புற வாசல் திறந்தே கிடந்தது..!! வீட்டுக்கு பின்புறம் காம்பவுண்ட் சுவர் இல்லை.. பெரிய பரப்பிலான காலியிடம்.. குட்டையும், நெட்டையுமாய் ஆங்காங்கே செடிகள்..!! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை.. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லை..!!
ஸ்ரீனிவாச பிரசாத் சிறிது நேரம் அங்கேயே நின்று சுற்று முற்றும் பார்த்தார்.. உபயோகமாக எதுவுமில்லை என்று அறிந்தபிறகு, ‘ச்சே’ என்ற சலிப்புடன் மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்..!! அவர் வீட்டுக்குள் புகுந்த சில வினாடிகளில்.. வீட்டு சுவற்றை ஒட்டியிருந்த புதருக்குள் இருந்து.. மீரா வெளிப்பட்டாள்..!!!! அவளுடைய முகம் வியர்த்து வடிந்தது.. செடிகளுக்கு மத்தியில் நீளமாக சென்ற அந்த ஒத்தையடிப்பாதையில் நுழைந்து.. புயல்வேகத்துடன் ஓடினாள்..!!
ஹாலுக்குள் நுழைந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. பிஸ்டலின் சேஃப்டி கேட்சை போட்டு.. இடுப்பில் செருகிக்கொண்டார்..!! பிரம்மை பிடித்தவன் மாதிரி நின்றிருந்த அசோக்கிடம்..
“உள்ள யாரும் இல்ல அசோக்..!! உசுரு இருக்குதான்னு பாத்தியா..??” என்று கேட்டார்.
அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே.. அவரே ரத்தவெள்ளத்தில் மிதந்தவர்களிடம் பார்வையை திருப்பினார்.. அதில்.. சோபாவில் சரிந்திருந்தவனின் முகத்தை சற்றே உன்னிப்பாக கவனித்ததும்.. நெற்றியை சுருக்கினார்..!!
“இவன் நெற்குன்றம் காசில..?? இவன் எப்படி இங்க..??” என்று குழப்பமாக முணுமுணுத்தார்.
விழுந்து கிடந்தவர்களிடம் குனிந்து.. அவர்களது மூச்சையும், நாடித்துடிப்பையும் சோதனை செய்து பார்த்தார்..!! ஒருசிலவினாடிகள்.. பிறகு எழுந்துகொண்டவாறே.. அசோக்கிடம் சொன்னார்.!!
“உசுரு இருக்குற மாதிரி தெரியல அசோக்.. எதுக்கும் நான் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்..!! நீ அப்படியே அசையாம நில்லு.. இங்க இருக்குற எதையும் தொட்டுறாத.. சரியா..??”
பதட்டமான குரலிலேயே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத்.. பாக்கெட்டில் இருந்து செல்ஃபோன் எடுத்தார்.. ‘பட் பட்’டென அந்த செல்ஃபோனை அழுத்தியவர்.. பிறகு..
“ஆங்.. கனகு..” என்றவாறே வாசலை நோக்கி நடந்து வெளியே சென்றார்.
அசோக் வீட்டுக்குள்ளேயே அசையாமல் நின்றிருந்தான்.. இதயத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னுமே அவனால் மீளமுடியவில்லை.. உண்டான படபடப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு..!! கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான்.. அவனுடைய கவனத்தை அந்தப்பொருள் ஈர்த்தது..!! உடனே அவனுடைய முகத்தில் ஒரு சீரியஸ்னஸ்.. கண்களில் ஒரு கூர்மை..!! நின்ற இடத்தில் இருந்து மெல்ல அடியெடுத்து வைத்தான்.. தரையில் விழுந்து கிடந்தவனை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. கீழே கிடந்தவனின் காலுக்கடியில் கிடந்த அதை கையில் எடுத்தான்..!!
கோல்ட் கலரினால் ஆன.. ஹார்ட் ஷேப்பினால் ஆன.. பளபளப்பான அந்த குட்டி பென்டன்ட்..!! மீராவின் ப்ரேஸ்லட்டில் மினுமினுப்புடன் தொங்குமே.. அதே பென்டன்ட்..!!
அதைப் பார்த்ததுமே அசோக்கிற்கு சுரீர் என்றது.. அவனுடைய புத்தி சரமாரியாய் எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! ‘அப்படியானால்.. அப்படியானால்.. மீராதான் இதையெல்லாம் செய்ததா..?? காதலித்து ஏமாற்றியவனை கத்தியெடுத்து பழி தீர்த்துக் கொண்டாளா..??’ ஆமாம் என்றது அவனது மூளை.. நம்ப மறுத்தது அவனது மனம்..!!
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!
மீரா எழுதிய கவிதையின் கடைசி வரிகள் அவனது காதுக்குள் க்றீச்சிட்டன..!! வியர்த்துப் போனது அவனுக்கு இப்போது.. உடம்பெல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தது.. இருதயம் இன்னும் வேகமாய் படபடக்க ஆரம்பித்தது..!!
அப்போதுதான் அவனது மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்று..!! ‘மீரா இங்கே வந்து சென்றிருக்கிறாள் என்றால்.. ஒருவேளை.. நான் இந்த விஜயசாரதிக்கு கால் செய்தபோது என்கேஜ்டாக இருந்ததே.. அந்த நேரத்தில் இவன் மீராவுடன் பேசிக்கொண்டிருந்திருப்பானோ..?? அப்படியானால்.. இவனது செல்ஃபோனில் மீராவின் தொடர்பு எண் பதிவாகியிருக்க வேண்டும் அல்லவா..??’
அந்த எண்ணம் மனதில் உதயமானதும் அசோக் மீண்டும் பரபரப்பானான்..!! ‘எதையும் தொட்டுறாத’ என்று எச்சரித்து விட்டு சென்றிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்தான்..!! செங்குருதியில் நனைந்துபோய் கிடந்த விஜயசாரதியிடம் குனிந்தான்.. அவனுடைய சட்டை, பேன்ட் பாக்கெட் எல்லாம் தடவி.. அவனது செல்ஃபோனுக்காக துழாவினான்.. கிடைக்கவில்லை..!! அருகில் இருந்த மேஜை, டீப்பாய், அலமாரி எல்லாம் அவசரமாக தேடினான்.. எங்கேயும் செல்ஃபோனை காணவில்லை..!!
உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தவன்.. தனது செல்ஃபோன் எடுத்து.. சேகரித்து வைத்திருந்த விஜயசாரதியின் எண்ணுக்கு கால் செய்தான்.. கால் செய்ததுமே.. ரிங்டோன் சத்தம் எங்கிருந்தாவது வருகிறதா என்று.. காதுகளை கூர்மையாக்கி கொண்டான்..!!
ரிங்டோன் சத்தம் வரவில்லை.. மறுமுனையில் இருந்து டயல்டோன் சத்தம்தான் காதில் ஒலித்தது..!! ‘கால் செல்கிறது.. ரிங்டோன்சப்தம் வரவில்லையே..’ என்று அசோக் குழப்பமாக விழித்துக் கொண்டிருக்கையிலேயே.. அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டது..!! அடுத்த நொடியே.. ஆதங்கமும், கோவமும் நிறைந்த மாதிரியாக மீராவின் குரலும்..!!
“பைத்தியக்காரன் மாதிரி பண்ணிட்டு இருக்காத அசோக்.. நீ நெனைக்கிறதுலாம் எப்போவும் நடக்காது.. புரிஞ்சுக்க..!!” சூடாக சொன்னாள் மீரா.
அசோக்கால் நம்பவே முடியவில்லை..!! ‘நிஜம்தானா..?? மீராதானா இது..?? என் மீராதான் இப்போது என்னுடன் பேசுவதா..?? நிஜமாகவே அவளுடைய குரல்தான் இப்போது என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறதா..??’ உள்ளத்தில் ஆச்சரியம் பீறிட.. உடனே ஒரு பதற்றமும் அவனை வந்து தொற்றிக்கொள்ள..
“மீ..மீரா.. மீரா..” என்றான் தவிப்பாக.
“ஏண்டா இப்படி பண்ற..?? போய்த் தொலையுறா சனியன்னு விட்டு தொலைக்க வேண்டியதுதான..?? எதுக்கு இன்னமும் என்னை தேடிட்டு இருக்குற..??” மீரா சீற, அசோக்கின் கண்களில் முணுக்கென்று கண்ணீர்.
“எ..என்ன மீரா பேசுற.. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்.. நீ எனக்கு வேணும் மீரா..!! ப்ளீஸ் மீரா.. எங்கிட்ட வந்துடு…!!”
“இல்ல அசோக்.. என்னால அது முடியாது.. சொன்னா புரிஞ்சுக்கோ..!!”
“இன்னும் என்ன புரிஞ்சுக்கணும்.. எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு போச்சு மீரா..!! இதுக்காகத்தான நீ ஓடி ஒளிஞ்ச.. இப்போ எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு..!! உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!! நீ இப்போ எங்க இருக்குறன்னு சொல்லு.. நான் மட்டும் தனியா வர்றேன்.. நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..!! நான் உன்மேல எந்த அளவுக்கு லவ் வச்சிருக்கேன்னு கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ மீரா.. ப்ளீஸ்..!!”
“ஐயோ.. உன் லவ்வை பத்தி நான் நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்டா.. நீதான் என் மனசை புரிஞ்சுக்க மாட்டேன்ற..!! இந்த விஷயம் தெரிஞ்சா நீ என்னை ஏத்துக்க மாட்டேன்னு நெனச்சா.. நான் உன்னை விட்டு விலகுனேன்னு நெனைக்கிற..?? சொன்னா கேளுடா.. நான் உனக்கு வேணாம்.. இந்தப்பாவி உனக்கு வேணவே வேணாம்..!!” மீராவின் குரல் இப்போது அழுகையாக ஒலித்தது.
“இல்ல.. நீதான் எனக்கு வேணும்..!! நீ எனக்கு சொந்தமானவ மீரா.. நீ என் லைஃப்ல வந்ததுக்கு காரணம் இருக்கு.. என்கூட பழகுனதுக்கு காரணம் இருக்கு.. என்னை விட்டு பிரிஞ்சதுக்கு காரணம் இருக்கு..!! இப்போ என்கூட ஃபோன்ல பேசிட்டு இருக்குறதுக்கு கூட காரணம் இருக்கு மீரா..!!”
“எ..என்ன சொல்ற நீ..??”
“நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்க எடுத்துக்கிட்ட முயற்சிதான் இதெல்லாம்..!! அந்த காதல்தான் இப்போ உன்னையும் என்னையும் பேச வச்சிருக்கு..!! புரிஞ்சுக்கோ மீரா.. நீயும் நானும் சேரணும்.. அதுதான் விதி..!!”
அசோக் சொல்ல.. அடுத்த முனையில் மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! அவளுடைய அமைதி அசோக்கை பதற்றம் கொள்ள செய்தது..!!
“மீ..மீரா.. என்னாச்சு மீரா.. ஏதாவது பேசு மீரா..!!”
“ஓ.. நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்குமா..??” மீராவின் குரலில் ஒருவித இறுக்கம்.
“ஆ..ஆமாம்..!!” அசோக்கின் குரலில் ஒருவித தடுமாற்றம்.
“சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!! இப்போ கட் பண்றேன்..” படபடவென பேசிய மீரா ஒருகணம் நிறுத்தி..
“ஐ லவ் யூ..!!” என்று தழதழக்கிற குரலில் சொல்லிவிட்டு, பட்டென்று இணைப்பை துண்டித்தாள்.
“மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!”
என்று பதட்டத்துடன் கதறிக்கொண்டிருந்த அசோக்கிற்கு.. இணைப்பு துண்டிக்கப்பட்ட ஓசையே கேட்க கிடைத்தது..!! மீண்டும் அந்த எண்ணுக்கு அவன் கால் செய்ய.. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது..!!
என்ன செய்வதென்று புரியாத அசோக்.. அப்படியே தலையை பிடித்துக்கொண்டான்.. தலை எல்லாம் வின்வின்னென்று வலிப்பது போல ஒரு உணர்வு..!! சோர்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்..!! அவனுடைய இதயமெல்லாம் தாங்க முடியாத மாதிரி ஒரு வலி..!! கண்களில் கண்ணீர் பூத்து..கன்னம் நனைந்து ஓட ஆரம்பித்தது..!!
“பேசிட்டேன் அசோக்.. வந்துட்டு இருக்காங்க..!!”
சொல்லிக்கொண்டே ஸ்ரீனிவாச பிரசாத் வீட்டுக்குள் நுழைய.. அசோக் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தான்..!! கையிலிருந்த பென்டன்ட்டை.. அவர் அறியாமல் தனது பாக்கெட்டுக்குள் திணித்து மறைத்தான்..!! அவர் பக்கமாய் திரும்பி.. மிக இயல்பாக ஒரு பார்வை பார்த்தான்..!!
அத்தியாயம் 27
இருட்டுக்குள் இப்போது மிக பிரகாசமாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. கூரையில் இருந்து கீழ்தொங்கிய மின்விளக்குகள் வீட்டுக்குள்ளே வெளிச்சத்தை கிளப்பின என்றால்.. தரையில் இருந்து மேற்கிளம்பிய குமிழ்விளக்கு கம்பங்கள் வீட்டுக்கு வெளியே ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன..!! வாயிற்கதவுக்கருகே ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்போடு சேர்த்து.. இப்போது மேலும் இரண்டு போலீஸ் ஜீப்புகள், ஒரு ஒழுங்கற்ற கோணங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.. அதில் ஒரு ஜீப்பின் நெற்றியில், சிவப்பு விளக்கு இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஜனங்களின் கண்களில்.. ஒருவித ஆர்வமும், மிரட்சியும் ஒருசேர காணக்கிடைத்தன..!! வீட்டை சுற்றி வளர்ந்திருந்த மரங்கள்.. சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து.. அசையக்கூட மனமின்றி அப்படியே உறைந்து போயிருந்தன..!!
வீட்டுக்குள்ளே.. காவல்துறையை சேர்ந்த கைரேகை மற்றும் தடவியல் குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்..!! அவர்களிடம், ரெட்ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் மலரவன் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும்.. குற்றம் நடந்திருந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்..!! ஆதாரங்கள் என்ற பெயரில் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேகரிக்கப்பட்டன.. ரத்தத்தில் நனைந்திருந்த மாய கிருஷ்ணனின் சிலை, பாலித்தீன் கவருக்குள் பத்திரமாக்கப்பட்டது..!! அறையின் ஒருமூலையில்.. எச்சில் வடிகிற நாக்கை நீளமாக தொங்கப் போட்டுக்கொண்டு அந்த மோப்ப நாய்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வீராவேசமாக பின்பக்கம் ஓடி.. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சீறிப்பாய்ந்து.. பிறகு ஒரு புதரைக் கண்டதும் சிறுநீர் பெய்துவிட்டு.. மீண்டும் வீட்டுக்குள் வந்து ஓரமாக செட்டில் ஆகியிருந்தது..!!
உயிரற்ற உடல்கள் பிரேத பரிசோதனைக்கென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க.. அவை விழுந்து கிடந்த இடங்கள் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தன..!! எப்போதோ உறைந்து போயிருந்த கருஞ்சிவப்பு ரத்தச்சேற்றில்.. இப்போது ஈக்கள் ரீங்காரமிட்டபடி வந்தமர்ந்து, மொய்க்க ஆரம்பித்திருந்தன..!! காற்றில்கூட குருதியின் நெடி கலந்துபோய்.. சுவாசிப்பவர்களின் முகத்தை சற்றே சுளிக்க வைத்தது..!!
வீட்டுக்கு வெளியே.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த காவல்த்துறை வாகனத்தின் மீது சாய்ந்திருந்தனர்.. அவர்களை சுற்றிலும் ஒரு மெலிதான புகை மூட்டம்.. அவர்களுடைய ஒரு கையில் பாதி காலியான டீ க்ளாஸ்.. இன்னொரு கையில் பாதி கரைந்திருந்த சிகரெட்..!! ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகம் ஒருமாதிரி இறுகிப் போயிருக்க.. அசோக்கின் முகமோ ஒருவித கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது..!! அவனது பாக்கெட்டில் கிடந்த பென்டன்ட் தொடையை உறுத்த.. பலவித குழப்ப எண்ணங்கள் அவனது மூளையை உறுத்திக் கொண்டிருந்தன..!!
‘மீரா ஒரு குற்றவாளி.. கொலைக்குற்றம் செய்திருக்கிறாள்.. அவள் செய்த குற்றத்துக்கு சட்டப்படி தண்டனை உண்டு..!! அப்படியிருக்கையில்.. அவளுடன் உனது வாழ்க்கையை பங்குபோட்டுக் கொள்ள நினைப்பது அறிவுள்ள செயலா..?’ என்று.. அவனது புத்தி கிடந்து பதறியது..!! அதையெல்லாம் அவனுடைய காதல்மனம் அப்படியே புறந்தள்ளியது..!!
‘குற்றம் செய்த எல்லோரும் தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டுமா..? நம்நாட்டு அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் இதைக்கேட்டால்.. விழுந்து விழுந்து சிரிக்க மாட்டார்களா..? பணமும், பதவியும் படைத்தவர்கள் எல்லாம் சட்டத்தை ஏய்த்து சந்தோஷமாக திரிகையில்.. பாவப்பட்ட என் மீரா மட்டும் எதற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும்.. அதுவும் இரு கொடியவர்களை கொன்று முடித்ததற்காக..? அவசியமே இல்லை..!! அவள் சிக்குவது என்னிடமாக இருக்கவேண்டுமே ஒழிய.. போலீஸின் வசம் அல்ல..!! அவள் வாழ வேண்டியது என் மனச்சிறையில்தானே ஒழிய.. மத்திய சிறையில் அல்ல..!!’ என்பது மாதிரி இருந்தது அவனது இதயத்தில் எழுந்த எண்ணம்..!!
காதலியை கண்டுபிடிக்கிற காரியத்துக்கு.. காவல்துறையை ஒரு கருவியாகத்தான் இத்தனை நாள் அசோக் கருதியிருந்தான்.. இனி அப்படி கருதுவதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்தது..!! சற்று ஒதுங்கியிருப்பதுதான் நல்லது.. இனி மீராவைப்பற்றி போலீஸிடம் என்ன பேசினாலும்.. அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும் என்று தோன்றியது..!! ஏற்கனவே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் பேசிய சில விஷயங்களே.. மீராவுக்கு சிக்கல்களை உருவாக்கக் கூடியவைகளாக இருந்தன..!!
“கைல ஒரு ப்ரேஸ்லட் போட்ருப்பா ஸார்.. அதுல ஹார்ட் ஷேப்ல ஒரு கோல்ட் பென்டன்ட் தொங்கும்..!!”
மீராவின் அங்க அடையாளங்களை பற்றி ஸ்ரீனிவாச பிரசாத்திடம் முன்பு சொன்னபோது.. அந்த பதக்கத்தைப் பற்றியும் அசோக் குறிப்பிட்டிருந்தான்..!! அசோக்கின் கண்ணில்பட்ட அந்த பதக்கம் மட்டும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பார்வையில் சிக்கியிருந்தால்.. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது மாதிரி காவல்த்துறையின் வேலை மிக எளிதாக முடிந்து போயிருக்கும்..!! அந்த பதக்கம் தனது கண்ணில் பட்டதற்காக, அசோக் இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்..!! காவல்த்துறையின் பிடியில் இருந்து மீராவை காப்பாற்றிவிட்டது போன்றொரு திருப்தி அவனுக்குள்..!!
அதேநேரம்.. போலீஸின் உதவியில்லாமல் மீராவை எப்படி தேடிக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்ற கேள்வியும்.. அவன் மனதில் எழாமல் இல்லை..!! ஒருசில யோசனைகள் அவன் மூளையில் உதித்தாலும்.. அவை யாவுமே வலுவான யோசனைகளாய் அவனுக்கு படவில்லை..!! இருந்தபோதிலும்.. எத்தனை கஷ்டப்பட நேர்ந்திட்டாலும்.. இனி போலீஸின் உதவியை மட்டும் நாடக்கூடாது என்று மட்டும், மனதுக்குள் ஒரு உறுதியான முடிவெடுத்துக் கொண்டான்..!!
‘நானே தனியா அவளை தேடிக் கண்டுபுடிக்கணும்.. போலீஸ்ட்ட மட்டும் அவ பிடிபட்டுட கூடாது..!!’
“ஹ்ம்ம்.. அதுலாம் அவளை புடிச்சுடலாம்.. எங்க எஸ்கேப் ஆயிட போறா..!!”
ஸ்ரீனிவாச பிரசாத் திடீரென அவ்வாறு சொன்னதும்.. அசோக் சற்றே பதறிப்போய் அவரை திரும்பிப் பார்த்தான்.. அவன் முகத்தில் ஒருவித திகைப்பு..!! ஸ்ரீனிவாச பிரசாத்தோ.. ஒரு மெலிதான புன்முறுவலுடன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்..!!
“எ..என்ன ஸார் சொல்றீங்க..??” அசோக்கின் குரல் தடுமாற்றமாக ஒலித்தது.
“இல்லடா.. அந்த விஜயசாரதிட்ட இருந்து, உன் ஆள் பத்தி ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடைக்கும்னு நெனச்சோம்.. அவன் என்னடான்னா இங்க செத்துப்போய் கெடக்குறான்..!! அவளை கண்டுபிடிக்க இருந்த ஒரே சான்ஸும், இப்படி ஆயிருச்சேன்னு நெனச்சு நீ வொர்ரி பண்ணிக்காத.. கூடிய சீக்கிரம் எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடலாம்னு சொன்னேன்.. புரியுதா..??”
அசோக்கின் தடுமாற்றத்தை கவனியாமல், ஸ்ரீனிவாச பிரசாத் அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சொன்னார். அவர் அவ்வாறு சொன்னதும்தான், அவ்வளவு நேரம் நின்று போயிருந்த அசோக்கின் மூச்சு இப்போது நிம்மதியாக வெளிப்பட்டது.
“ம்ம்.. பு..புரியுது ஸார்..!!” என்றான் உலர்ந்த குரலில். ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது அசோக்கின் தடுமாற்றத்தை கண்டுகொண்டார்.
“எ..என்னடா ஆச்சு.. கண்டுபிடிச்சுடலாம் சொல்றேன்.. உன் மூஞ்சில ஒரு எக்ஸ்ப்ரஸனே காணோமே..??”
“ஒ..ஒன்னும்.. ஒன்னுல்ல ஸார்..!!” என்ன பதில் சொல்வதென்று திணறிய அசோக்கிற்கு,
“ஹ்ம்ம்.. ரத்தத்தை பார்த்த ஷாக் இன்னும் போகலையா..??” ஸ்ரீனிவாச பிரசாத்தே உதவி செய்தார்.
“ஆ..ஆமாம்..!!”
“ஹ்ஹ.. இட்ஸ் ஓகே.. நைட் தூங்கி எந்திரிச்சா, காலைல எல்லாம் சரியா போயிடும்..!! உனக்கு ஃபர்ஸ்ட் டைம்ல.. அதான்..!! எனக்கு இதுலாம் பழகிப் போச்சு..!!”
ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அமர்த்தலாக சொன்னதும்.. அசோக் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்..!! புகை உள்ளிழுத்து குபுகுபுவென வெளியிட்டவாறே.. எதையோ தீவிரமாக யோசித்தான்..!! பிறகு மனதில் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஆழம் பார்ப்பது மாதிரி.. மெல்லிய குரலில் அந்த கேள்வியை கேட்டான்..!!
“யா..யாரு இதை பண்ணிருப்பாங்க ஸார்..??”
“எதை..??”
“இ..இந்தக் கொலையை..!!” அசோக் அந்த மாதிரி தயக்கமாக சொன்னதும், ஸ்ரீனிவாச பிரசாத் பட்டென சிரித்துவிட்டார்.
“ஹாஹா..!! டேய்.. என்னை என்ன மந்திரவாதின்னு நெனச்சுட்டியா.. இங்க்-க வெத்தலைல தடவி பட்டுன்னு சொல்றதுக்கு..?? எல்லாம் இன்வெஸ்டிகேட் பண்ணித்தான் கண்டுபிடிக்கணும்..!! ஹ்ம்ம்.. அதுவும்கூட இப்போ என் வேலை கெடையாது.. எல்லாம் ரெட்ஹில்ஸ் போலீஸ் பாத்துப்பாங்க.. கொலை செஞ்சது யாருன்னு அவங்க கண்டுபிடிப்பாங்க..!!”
“தெ..தெரியும் ஸார்.. சும்மா கேட்டேன்..!!”
– தொடரும்
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :