அன்புள்ள ராட்சசி – பகுதி 61

‘ஆறுதலுக்கென்று இருந்த அம்மாவையும் தொலைத்துவிட்ட அவள்.. அன்று எவ்வளவு வேதனையான ஒரு மனநிலையில் இருந்திருப்பாள்..?? அத்தனையும் மனதிலேயே போட்டு புதைத்துக்கொள்ள எப்படி முடிந்தது அவளால்..?? சரியான நெஞ்சழுத்தக்காரி..!!’

இவனுடைய மனநிலை அறியாத பவானி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“அம்மான்னா அவளுக்கு அவ்ளோ பிடிக்கும்.. உலகத்துல அவளுக்குன்னு இருந்த ஒரே ஜீவன் அவ அம்மா மட்டுந்தான்.. அவங்களும் இல்லைன்னதும் ரொம்ப உடைஞ்சு போயிட்டா..!!”

“……………….”

“அவளை ஏமாத்திட்டுப்போன அந்தப்பையனை பத்தி நாங்க எவ்ளோ கேட்ருப்போம் தெரியுமா.. எதுவுமே அவ சொன்னது இல்ல..!! ஏமாந்துட்டமேன்றதுக்காக கூட அவ சூசயிட் அட்டம்ப்ட் பண்ணிக்கல அசோக்.. ‘தன்னோட நெலமை தன் மகளுக்கும் வந்திருச்சே’ன்னு அவ அம்மா பட்ட வேதனையை தாங்கிக்க முடியாமத்தான்.. அந்த ஸ்ட்ரெஸ் அதிகமாகித்தான்.. கத்தியால கை நரம்பை கட் பண்ணிக்கிட்டா..!! இதோ.. இந்த எடத்துல.. இப்படி..!!”

பவானி சொல்ல.. அசோக்கின் மனதுக்குள் பளிச்சென்று ஒரு மின்னல்..!! முன்பொருமுறை மீராவுடன் ஃபுட்கோர்ட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது.. தனது கற்பனை அப்பாவின் காதல் வெறுப்பினைப்பற்றி அவள் கதையடித்ததுக்கு இடையில்..

“நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!!”

இடது கையில் இருந்த தழும்பை காட்டி.. அவள் அப்போது அப்பாவியாக சொன்னது.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவன் தலையை பிடித்துக் கொண்டான்..!! ‘இன்னும் என்னவெல்லாம் புதிர் ஒளித்து வைத்திருக்கிறாயடி பிசாசே..??’ என்பது மாதிரியான சலிப்புடன்.. பிடித்த தலையை பிசைந்து விட்டுக் கொண்டான்..!!

போக்குவரத்து நெரிசல் சற்றே குறைய.. இரண்டு கார்களும் மெல்ல மெல்ல நகர.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே.. எதிரெதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்தினர்..!!

அசோக்கும் பவானியும் சிந்தாதிரிப்பேட்டை வீட்டை சென்றடைய மேலும் இருபது நிமிடங்கள் ஆயின..!! வீட்டை பார்த்ததுமே அசோக்கால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. அவனது தேடுதல் வேட்டையின் முதல் வீடே அதுதானே..??

‘அப்படியானால்.. அன்று கண்ணாடியில் நான் கண்ட பிம்பம் என் மீராவுடையதுதானா..?? வீட்டுக்குள் ஒளிந்துகொண்டேதான் இல்லையென்று சொல்ல சொல்லியிருந்தாளா..?? இரக்கமற்ற இராட்சசி..!!!’

ஒருபக்கம் மீராவின்மீது அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டிருந்தாலும்.. இன்னொரு பக்கம், இப்போது அவளை நேரிலேயே காணப்போகிற சந்தோஷமும் அவனுக்குள் எக்கச்சக்கமாய் ஏறிப்போயிருந்தது..!! அவர்களுக்கு முன்பாக தோன்றி மனோகர் சொன்ன செய்தி.. அத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாய் வடிந்து போக வைத்தது..!!

“ஹேய்.. நீ.. அந்த நித்தி வளைச்சுப்போட்ட பையன்ல..?? என்ன இந்தப்பக்கம்..??”

மனோகரின் ஆரம்பமே அசோக்கின் கோபத்தை கிளறிவிடுவதாய் இருந்தது.. அதை கட்டுப்படுத்திக்கொண்டுதான் அவன் மீரா பற்றி விசாரித்தான்..!! மனோகரோ அலட்சியமாகவே அவனுக்கு பதில் சொன்னான்..!!

“எந்த நாட்டுக்கு போறா.. எத்தனை மணிக்கு ஃப்ளைட்.. எத்தனை வருஷம் இருக்கப் போறா.. எப்போ திரும்பி வருவா.. எதுவும் எனக்கு தெரியாது..!!”

அவனுடைய பதிலில் அசோக் நொந்துபோனான்.. அவனுடைய மனதில் மெலிதாக ஒரு பதற்றம் பரவ ஆரம்பித்தது..!!

“அ..அக்கா.. அவ நம்பருக்கு கால் பண்ணிப் பாருக்கா..!!”

பதற்றத்துடனே அசோக் சொன்னதும்.. பவானி தனது எண்ணிலிருந்து மீராவின் மொபைல் நம்பருக்கு கால் செய்தாள்..!! இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தவள்.. பிறகு அசோக்கிடம் திரும்பி சலிப்பாக சொன்னாள்..!!

“ரிங் போகுது அசோக்.. எடுக்க மாட்டேன்றா..!! ட்ராவல்ல இருக்குறா.. கவனிக்கல போல..!!”

“ப்ச்..!!”

அசோக்கின் பதற்றம் இப்போது இன்னும் அதிகமாயிருந்தது..!! ‘மீண்டும் அவளை மிஸ் செய்துவிடுவோமோ..?’ என்பது மாதிரி அவனுக்குள் ஒரு கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! மனோகரிடம் திரும்பி கெஞ்சலாக கேட்டான்..!!

“ஸார்.. ப்ளீஸ் ஸார்..!! நான் எப்படியாவது அவளை மீட் பண்ணியாகணும்.. ஃப்ளைட் ஏர்றதுக்குள்ள அவளை புடிச்சாகனும்..!! உங்களுக்கு ஏதாவது யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் தெரிஞ்சா சொல்லுங்க.. ப்ளீஸ்..!!”

“ப்ச்.. நான்தான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றேன்ல..?? வேலை விஷயமா வெளிநாட்டுக்கு போறாளா.. இல்ல.. வேற ஏதும் தொழில் பண்ணப் போறாளான்னு கூட எனக்கு தெரியாது..!!”

மனோகரின் வக்கிரமான வார்த்தைகள் அசோக்கை உக்கிரமாக்கின.. சட்டென அவனுக்குள் ஆத்திரம் பீறிட்டு கிளம்ப, ‘ஏய்ய்..!!’ என்று கத்தியவாறு மனோகருடைய சட்டையை கொத்தாகப் பிடித்தான்..!! பதிலுக்கு மனோகரும் ‘ஹேய்.. என்ன..?’ என்று சூடாக.. பவானிதான் இடையில் புகுந்து அசோக்கை தடுத்தாள்..!!

“விடு அசோக்.. விடுன்றேன்ல..!! சொன்னா கேளு.. இப்போ இதுக்குலாம் நேரம் இல்ல..!! இந்தா.. நீ உடனே கெளம்பு.. ஏர்ப்போர்ட் போய் அவளை ஸ்டாப் பண்ணு.. போ..!!”

என்றவாறு கையில் இருந்த கார்ச்சாவியை அசோக்கிடம் நீட்டினாள்..!! அசோக் இன்னும் ஆத்திரம் தணியாதவனாய், மனோகரை முறைத்தவாறே ஒரு சில வினாடிகள் யோசித்தான்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன், கார்ச்சாவியை கையில் வாங்கிக்கொண்டான்.. பவானியுடைய செல்போனையும் அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டான்.. பதற்றத்தில் துடிக்கிற மனதுடன், கேட் திறந்து வெளியேறினான்..!!

அசோக்கின் அவசரத்துக்கு, தான் இடையூறாக இருப்போம் என்று கருதியே.. பவானி அவனை தனியாக கிளம்ப சொன்னாள்..!! காரில் ஏறி அமர்ந்த அவனும்.. வண்டியை கிளப்பியதுமே சர்ரென்று புயல் வேகத்தில் பறந்தான்..!!

கார் காற்றைக் கிழித்துக்கொண்டு அண்ணாசாலையில் சீறியது..!! பயமும் தவிப்புமாய்.. ‘படக் படக்’ என அடித்துக்கொள்கிற இருதயமுமாய்.. உச்சபட்ச வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் அசோக்..!! ‘கீய்ங்.. கீய்ங்..’ என்று ஹார்ன் ஒலியெழுப்பி முன்னால் சென்ற வாகனங்களை முந்திச்சென்றான்.. பவானியின் செல்ஃபோனில் இருந்து மீராவின் எண்ணுக்கு அவ்வப்போது கால் செய்து பார்த்து, ‘ப்ச்’ என்று சலிப்பை உதிர்த்தான்.. சிக்னலிலோ, ட்ராஃபிக்கிலோ மாட்டிக்கொள்ள நேர்ந்தபோது, ‘ஷிட்’ என்று ஸ்டியரிங்கை குத்தினான்..!!

கத்திப்பாரா ஜங்க்ஷனை கடந்து இடது புறம் திரும்பியதுமே.. தூரத்தில் அந்த ஆள் தெரிந்தான்..!! கொள்ளைகொள்ளையாய் தாடிமயிர்களும்.. கொழுகொழுவென்ற சதைப்பிதுக்கங்களும்.. கோணிப்பை மாதிரியான கால்ச்சட்டையும்.. கோழிமுட்டை கண்ணுக்கு கண்ணாடியுமாக..!! ப்ரேக்டவுன் ஆகிப்போன ஆல்ட்டோவுக்கு அருகே.. முதுகில் பெரிய மூட்டையுடன் நின்றிருந்தான்..!! கையை இவனது காருக்கு குறுக்கே காட்டி..

“லிஃப்ட்.. லிஃப்ட்.. ப்ளீஸ்..!!”

என அந்த ஆள் பரிதாபமாக கத்தியது அசோக்கின் காதில் விழவே செய்தது.. அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் கூட அசோக்கிற்கு தோன்றியது..!! இருந்தாலும் இது சமயமில்லை என்ற எண்ணத்துடன்.. அந்த ஆளின் கதறலை அசோக் அலட்சியம் செய்தான்.. காரின் வேகத்தை சற்றும் குறைக்காமல் ‘விஷ்க்க்’ என கடந்து சென்றான்..!!

அடுத்த பத்தாவது நிமிடம்.. மீனம்பாக்கம் இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் இருந்தான் அசோக்..!! பார்க்கிங் ஏரியாவில் காரை விட்டவன்.. பரபரப்பாக ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸுக்குள் நுழைந்தான்..!! மீரா எங்காவது தென்படுகிறாளா என்று.. தவிப்புடன் தலையை திருப்பி திருப்பி பார்த்தான்..!! விமான பயணச்சீட்டு இல்லாமல்.. பயணிகள் அமர்ந்திருக்கிற பகுதிக்கு அனுமதிக்க முடியாது என்று.. அசோக்கை தடுத்தார் ஏர்போர்ட் செக்யூரிட்டி ஒருவர்..!! அசோக் அவரிடம் கெஞ்சினான்..!!

“ப்ளீஸ் ஸார்.. என்னை உள்ள அலவ் பண்ணுங்க.. அவளை நான் பார்த்தே ஆகணும்.. இது என் லைஃப் பிரச்சினை ஸார்.. கொஞ்சம் புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!”

“உன்னை உள்ளவிட்டா என் வேலை போய்டும்பா.. எனக்கும் இது லைஃப் பிரச்சினைதான்.. நீ கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..!!”

அசோக்கின் நிலையை ஓரளவு புரிந்துகொண்ட அந்த செக்யூரிட்டி.. மிஞ்சுவதற்கு பதிலாக கெஞ்சலாய் சொல்ல.. அதற்கு மேலும் என்ன செய்வது என்று புரியாமல், அசோக் நெற்றியைப் பற்றி பிசைந்தான்..!! மீரா தென்படுகிறாளா என்று மீண்டும் ஒருமுறை அவன் தலையை திருப்பி பார்க்க.. அவனுக்கு பின்பக்கமாக அந்த ஆள் வந்து ‘பொத்’தென்று மோதினான்..!! சற்றுமுன் சாலையில் லிஃப்ட் கேட்ட அந்த கொழுகொழு ஆசாமி..!!

“ஹலோ கண்ணு தெரியாதா உங்களுக்கு..??” ஆளை அடையாளம் கண்டுகொண்டும், அசோக் எரிச்சலாகவே எகிறினான்.

“ஸாரி ஸார்.. ஸாரி..!! ஃப்ளைட்க்கு லேட் ஆய்டுச்சு.. அதான்..!! ஸாரி ஸாரி ஸாரி..!!”

ஸாரிக்களை மானாவாரியாக இறைத்தவாறு.. அந்த ஆள் நிற்கக்கூட நேரமின்றி அவசரமாக உள்ளே ஓடினான்..!! ஒருசில வினாடிகள் செயலற்றுப் போய் நின்றிருந்த அசோக்.. பிறகு, ‘போர்டிங் ஏரியா தவிர வேறு எங்காவது மீரா இருந்தால், அவளை பிடிக்கலாமே..’ என்பது மாதிரியான எண்ணத்துடன்.. விசிட்டர்கள் ஏரியா பக்கமாக ஓடினான்..!!

அதே நேரம்..

போர்டிங் ஏரியாவுக்குள்.. இரண்டாவது மாடியில் இருந்த அந்த புக் ஸ்டாலில்.. மீரா நின்றுகொண்டிருந்தாள்..!! ட்ராவல் பேகை அவள் செக்கின் செய்திருக்க.. தோளில் மட்டும் அந்த சிறிய பேக்..!! ஃப்ளைட்டில் அனுமதிக்கப்பட இன்னும் சிறிது நேரமே இருக்கிற நிலைமையில்.. திடீர் யோசனை தோன்றியவளாய் அந்த புக் ஸ்டாலுக்கு வந்திருந்தாள்..!! சவூதி அரேபியா பற்றிய உபயோகமான தகவல்கள் அடங்கிய அந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தாள்..!! பில்லுக்கு பணம் எடுத்து கொடுத்துவிட்டு.. புத்தகத்தை பேகுக்குள் திணித்தபோதுதான்.. அவளுடைய கவனத்தை அது ஈர்த்தது.. பேகுக்குள் கிடந்த அவளுடைய செல்ஃபோன்..!!

எதேச்சையாக எடுத்துப் பார்த்தவள்.. பவானியின் நம்பரில் இருந்து ஏகப்பட்ட மிஸ்ட் கால்ஸ் வந்திருப்பதை கவனித்தாள்..!! ‘இவர்கள் எதற்கு இந்த நேரத்தில்?’ என ஓரிரு வினாடிகள் குழம்பினாள்.. புக் ஸ்டாலை விட்டு அவசரமாக வெளியே வந்தாள்.. வெளியே வந்ததுமே பவானியின் நம்பருக்கு கால் செய்தாள்..!!

அதே நேரம்.. விசிட்டர் ஏரியாவில்..

ஏக்கமும் தவிப்புமாய் மீராவை தேடிக்கொண்டிருந்த அசோக்கின் கையில் இருந்த செல்ஃபோனுக்கு.. அவளிடமிருந்தே கால் வர.. அந்த நொடியில் அவன் அடைந்த மகிழ்ச்சியை அளவிடவே முடியாது..!! அவனது முகம் பட்டென பரவசத்துக்கு செல்ல.. காலை உடனே பிக்கப் செய்து காதில் வைத்தான்..!!

“ம்ம்.. சொல்லுங்கக்கா.. கால் பண்ணிருந்தீங்களா..??”

எதிர்முனையில் மீராவின் குரல்.. அந்தக்குரலை கேட்டதும் அசோக்கின் உள்ளத்தில் பலவகை உணர்ச்சி அலைகள்..!!

“மீ..மீரா.. மீரா..”

வார்த்தைகள் வெளிவராமல் தவித்தான்.. அவளுடைய உண்மையான பெயர் நித்தி என்று மூளைக்கு தெரிந்திருந்தும்.. அவனுடைய மனம் என்னவோ ‘மீரா மீரா’ என்றே இன்னும் அலறியது..!! அடுத்த முனையில் அவனுடைய குரலை கேட்ட மீராவும்.. பலத்த அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளானாள்.. அவளும் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கியவளாய் தடுமாறினாள்..!!

“அ..அசோக்.. அசோக் நீயா..??”

“நா..நான்.. நான்தான் மீரா..!!”

“அசோக்.. நீ.. நீ எப்படி..??”

“எ..எங்க.. நீ எங்க மீரா இருக்குற..??”

“நா..நான்.. நான் உன்னை விட்டு தூரமா போறேன் அசோக்.. இன்னும் பத்து நிமிஷத்துல.. எனக்கு..”

“தெரியும் மீரா.. நீ ஏர்ப்போர்ட்ல இருக்குறன்னு எனக்கு தெரியும்.. நானும் இப்போ ஏர்ப்போர்ட்லதான் இருக்குறேன்..!! ஏர்ப்போர்ட்குள்ள எங்க இருக்குறன்னு சொல்லு மீரா.. நான் உன்னை பாக்கணும்.. உன்கூட பேசணும்..!! ப்ளீஸ் மீரா.. போயிடாத.. மறுபடியும் என்னை தவிக்கவிட்டுட்டு போயிடாத.. என்கிட்ட வந்துடு.. ப்ளீஸ்..!!”

அசோக்கின் குரல் தழதழத்துப் போய் ஒலிக்க.. அடுத்த முனையில் அதைக்கேட்ட மீரா அப்படியே உருகிப்போனாள்..!! ‘தன்மீது எத்தனை காதல் இருந்தால்.. தன்னை தேடிக்கண்டுபிடிக்க இவன் இத்தனை முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பான்..?’ என்பது மாதிரியான எண்ணம் அவளுக்குள் தோன்ற.. உள்ளத்தில் அசோக்கின்மீது பீறிட்டு கிளம்பிய காதல் ஊற்றினை.. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..!! கண்களுக்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. உதடுகளை பற்களால் அழுந்த கடிக்கவும்.. இமைகளை பொத்துக்கொண்டு கண்ணீர் வெளிச்சிந்தியது..!!

இந்தப்பக்கம் இவளது உணர்சிகளை, அந்தப்பக்கம் அறியாத அசோக்.. அவளது அமைதியை மட்டும் தவறாக அர்த்தம் எடுத்துக்கொண்டு.. பதற்றம் கொப்பளிக்கிற குரலில் மீராவை கெஞ்சினான்..!!

“ப்ளீஸ் மீரா.. ஏதாவது பேசு.. ஃபோனை மட்டும் கட் பண்ணிடாத.. ப்ளீஸ்..!! எ..என்னை.. என்னை விட்டு போயிடாத மீரா.. என்னால தாங்கிக்கவே முடியாது.. ப்ளீஸ் மீரா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!!”

கரகரத்த குரலில் அசோக் அவ்வாறு கெஞ்ச.. முன்பொருமுறை தனது மடியில் மடியில் சரிந்து மயங்கிப் போவதற்கு முன்பாக.. அவன் கெஞ்சிய வார்த்தைகள் மீராவின் காதுக்குள் இப்போது மீண்டும் ஒலித்தன..!!

“போ..போகாத மீரா..!! எ..எனக்கு நீ வேணும் மீரா..!!”

அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய உணர்சிகளை மீராவால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.. இதற்கு மேலும் இவனை தவிக்க விடுவது தவறென்று உணர்ந்துகொண்டாள்..!!

‘இல்ல அசோக்.. உன்னை விட்டு போக மாட்டேன்டா.. எப்போவும் போக மாட்டேன்..!!’ என்று கத்துவதற்காக அவள் வாயெடுத்தபோதுதான்.. அவள் மீது தொம்மென்று வந்து இடித்தான் அந்த ஆள்.. சற்றுமுன் அசோக்கை இடித்த, அதற்குமுன் அசோக்கிடம் லிஃப்ட் கேட்ட அதே கனத்ததேக ஆசாமி..!! அவன் இடித்த வேகத்தில்.. மீராவின் கையிலிருந்த செல்ஃபோன் எகிறி.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! இரண்டாவது மாடியிலிருந்து கீழ்நோக்கி நழுவி.. தரைத்தளத்தில் சென்று ஜிலீரென மோதி.. இரண்டு மூன்று பாகங்களால தெறித்து.. மூலைக்கொன்றாக சிதறி ஓடியது..!!

“ஸாரி மேடம்.. ஸாரி ஸாரி ஸாரி.. ஐ’ம் இன் எ ஹர்ரி… ஸாரி..!!”

வழக்கமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு.. தனது பின்புற சதைகள் குலுங்க குலுங்க.. அந்த ஆள் எங்கேயோ ஓட ஆரம்பித்தான்..!!

அவனுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிற மனநிலையில் மீரா இல்லை.. காதலும், ஏக்கமும், தவிப்பும் அவள் நெஞ்சை கொள்ளை கொள்ளையாய் அடைத்திருந்தன.. படக்கென ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டவளாய் படிக்கட்டு நோக்கி ஓடினாள்.. கால்கள் ரெண்டும் பிண்ணிக்கொள்ள, தடதடவென படியிறங்கினாள்.. இறங்குகையிலேயே, கீழே விழுந்த செல்ஃபோன் கண்ணில் தட்டுப்படுகிறதா என்று தவிப்பாக பார்த்தாள்..!!

இவளுடைய நிலையை அறியாத அசோக்.. மீராதான் காலை கட் செய்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டான்..!! நடுங்கிய விரல்களுடன் மீண்டும் கால் செய்து பார்க்க.. ஸ்விட்ச் ஆஃப் என்று வர..

“ஷிட்..!!!”

என்று கத்தியவன்.. ஏதோ ஒரு வேகத்தில் செல்ஃபோனை தரையில் ஓங்கி அடித்து விசிறினான்..!! தேங்காய் உடைத்தது போல.. பவானியின் செல்ஃபோன் சில்லு சில்லாக சிதறி ஓடியது..!!

‘இன்னும் பத்து நிமிடங்கள்தான் உள்ளன.. எங்கே என்றே தெரியாத ஒரு வெளிநாட்டுக்கு, என்னருமைக்காதலி தப்பிச்செல்லப் போகிறாள்.. செல்ஃபோனை வேறு ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாள்.. எப்படியாவது அவளை தடுத்தாக வேண்டும்.. என்ன செய்வது இப்போது..??’

எதுவும் புரியாமல் அசோக் நெற்றியை பிசைந்துகொண்டான்..!! எதேச்சையாக அவன் திரும்புகையில்தான்.. அந்த விளம்பரம் அவனுடைய பார்வையில் விழுந்தது..!! அதை பார்த்ததுமே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு யோசனை..!! செய்யலாமா வேண்டாமா என்று சிந்திக்கக்கூட அவகாசம் ஒதுக்காமல்.. செய்துவிடவேண்டும் என்கிற உறுதியான முடிவுடன்.. தலையை சுழற்றி சுழற்றி எதையோ தேடினான்..!! அவன் தேடியது கிடைக்காமல் போகவும்.. அவசரமாக ஏர்போர்ட் என்ட்ரன்சை விட்டு வெளியே வந்தான்..!! வெளியே ஓடிய சிமெண்ட் சாலைக்கு அந்தப்பக்கமாக அவன் தேடியது காட்சியளித்தது.. அந்த கண்ணாடிக்கூண்டு.. பப்ளிக் டெலிஃபோன் பூத்..!!

அதே நேரத்தில்.. ஏர்ப்போட்டுக்குள்ளே.. உடலின் அத்தனை உறுப்புகளிலும் பதற்றம் தொற்றிக்கொண்டவளாய் மீரா தனது செல்ஃபோனை தேடிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.. புறங்கையால் அந்தக் கண்ணீரை அவ்வப்போது துடைத்துக் கொண்டாள்.. உதடுகள் அடிக்கடி ‘அசோக்.. அசோக்..’ என்று உச்சரித்துக் கொண்டிருந்தன..!! கீழ்த்தளத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகள், இண்டு இடுக்குகள் எல்லாம்.. தரையில் அமர்ந்து குனிந்து குனிந்து தேடினாள்..!!

“என்னம்மா.. என்ன தேடுறீங்க..??” அவளை கவனித்த ஒரு செக்யூரிட்டி வந்து கேட்டார்.

“எ..என் செல்ஃபோன்.. என் செல்ஃபோன் மேல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!”

மீராவுக்கு அந்த செக்யூரிட்டி உதவி செய்தார்.. அவளுடன் சேர்ந்து அவரும் செல்ஃபோன் தேட ஆரம்பித்தார்..!! சிதறிப்போன செல்ஃபோன் பாகங்களை.. இருவருமாக தேடிக்கண்டுபிடித்து ஒன்றிணைக்க.. ஐந்து நிமிடங்கள் ஆகிப் போயின..!!

“சென்னையிலிருந்து ரியாத்துக்கு செல்கிற ஏர்-இண்டியா விமானத்தின் பயணிகள்.. உடனடியாக ட்ரான்ஸ்போர்ட் டெஸ்கை அணுகவும்..!!”

மீரா பயணிக்கவிருந்த விமானம் புறப்பட தயார் நிலையில் இருக்கிற விஷயம்.. ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது..!! அதைக் கண்டுகொள்ளாமல்.. அவசரமாக பவானியின் எண்ணுக்கு கால் செய்த மீராவுக்கு.. ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.. செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி..!!

“ப்ளீஸ் அசோக்.. பிக்கப்.. பிக்கப்..!!!!”

தவிப்பும் பதற்றமுமாய் அழுகையுடன் கதறிய மீரா.. திரும்ப திரும்ப அந்த எண்ணுக்கு கால் செய்து கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் திடீரென..

“கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்..!!!!!”

என ஏர்ப்போர்ட்டுக்குள் எமர்ஜன்ஸி அலார்ம் அடித்தது.. ஆங்காங்கே சிவப்பு விளக்குகள் பளிச் பளிச்சென்று மின்னின.. அனைவரையும் உடனே ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய அவசரகால அறிவிப்பு..!!

“ஏதோ பிரச்சினைன்னு நேனைக்கிறேன்மா.. வா வெளில போயிடலாம்..!!” மீராவுக்கு உதவிய அந்த செக்யூரிட்டி பதற்றமாக சொன்ன அதே நேரத்தில்..

“ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்களாம்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வெடிக்கப் போகுதாம்.. எல்லாரும் ஓடுங்க.. ஓடுங்க..!!”

வெளியில் கசிந்த விஷயத்தை அறிந்துகொண்ட யாரோ.. டப்பிங் பட டயலாக் எஃபக்டில் கத்தினார்கள்..!!

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் தேகத்தில் மழை பெய்த எருமை மாடுகளாய், அங்குமிங்கும் ஊர்ந்துகொண்டிருந்த மனிதர்கள்.. பட்டென வாலில் தீப்பிடித்துக்கொண்ட குரங்குகளாக மாறிப்போயினர்.. ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ் நோக்கி திமுதிமுவென ஓடினர்..!! அத்தனை பேரின் மனதிலும் ஒரு உயிர்ப்பயம்.. அனைவரது முகத்திலும் ஒரு மரணபீதி..!! பயம்.. குழப்பம்.. அவசரம்.. இடைஞ்சல்.. நெரிசல்.. தள்ளுமுள்ளு..!!

எதுவும் புரியாமல் திகைத்தவாறு நின்றிருந்த மீராவை, அந்த செக்யூரிட்டியே..

“வாம்மா..!!” என்றவாறு கைபிடித்து இழுத்து சென்றார்.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments