ஐ ஹேட் யூ, பட் – பகுதி 14
“வர்றேண்டா மச்சி.. பட் ஒன் கண்டிஷன்..!!”
“என்ன..??” அசோக் குழப்பமாய் கேட்க,
“இந்தா..!!” ஹரி அவனுடைய செல்போனை எடுத்து அசோக்கிடம் நீட்டினான்.
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“இது எதுக்கு..??”
“தண்ணியடிக்கிறதுக்கு என் பொண்டாட்டிட்ட பெர்மிஷன் கேளுடா மச்சி.. ப்ளீஸ்டா..!!” ஹரி வெட்கமே இல்லாமல் சொன்னான்.
“த்தா.. என்ன வெளையாடுறியா..?? ஒவ்வொரு தடவை தண்ணியடிக்க போறப்போவும் இதுதான் எனக்கு வேலையா..?? என்னால முடியாது.. நீயே கேளு..!!” அசோக் டென்ஷனானான்.
“ஹேய்.. புரிஞ்சுக்கோடா மச்சி.. நீன்னா அவ கொஞ்சம் பொறுமையா சாஃப்டா பேசுவா.. அதான் உன்னை கேக்க சொல்றேன்..!!”
“பொறுமையா பேசுறாளா..?? இப்டியே நான் அடிக்கடி பர்மிஷன் கேட்டுக்கிட்டே இருந்தேன்னு வச்சுக்கோ.. ஒருநாளைக்கு என்னையும் வெளக்கமாத்தாலதான் அடிக்கப்போறா..!!”
“உன்னையுமா..?? அடப்பாவி.. அப்போ என்னை வெளக்கமாத்தால அடிக்கிறான்னு முடிவே பண்ணிட்டியா..??”
“ஆமாம்.. அதுல என்ன சந்தேகம்..??”
“டேய்.. அவளுக்கு நான் தண்ணியடிக்கிறது கொஞ்சம் புடிக்காதுடா.. அவ்ளோதான்..!! மூஞ்சை கொரங்கு மாதிரி தூக்கி வச்சுப்பா.. எனக்கு அதை பாக்க சகிக்காமத்தான்.. இதெல்லாம் அவாய்ட் பண்றது..!! மத்தபடி வீ ஆர் கூல்..!!”
“ஹ்ம்ம்.. நீங்க கூலா இருங்க.. இல்லனா ஹாட்டா இருங்க.. எனக்கு அதைப்பத்திலாம் கவலை இல்ல..!! சும்மா சும்மா இதுக்குலாம் என்னால பெர்மிஷன் கேட்க முடியாதுடா.. எனக்கு தேவையில்லாத பிரச்னை..!!”
“ஹேய் அப்டிலாம் சொல்லாதடா மச்சி..!! ஹ்ம்ம்.. இங்க பாரு.. நான் ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன்.. உனக்கு ஒரு பிரச்னையும் வராது.. கேக்குறியா..??”
“என்ன..??”
“உனக்கு இன்னைக்கு பர்த்டே.. எனக்கு ட்ரீட் குடுக்க ஆசைப்படுறேன்னு அவகிட்ட சொல்லு.. அவ ஒன்னும் சொல்ல மாட்டா..!! என்ன சொல்ற..??” ஹரி இளித்தவாறு சொல்ல அசோக் அவனை முறைத்தான்.
“மசுரு.. ரெண்டு மாசம் முன்னாடி அப்படி சொல்லிட்டு போய்த்தானடா.. எனிக்மால போய் மூக்கு முட்ட குடிச்சோம்..??” அசோக் சொல்ல, ஹரிக்கு முகம் சுருங்கிப் போனது.
“ஓ..!! ஆமால்ல..?? ஐடியா அல்ரெடி யூஸ்ட்-ஆ..?? ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்…!!”
ஹரி நெற்றியை கீறியவாறு யோசித்தான். வேறு என்ன சொல்லி தன் மனைவியை ஏமாற்றலாம் என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். ஒரு சில வினாடிகள்..!! வேறு எந்த யோசனையும் தோன்றாமல் போகவே வெறுப்பாக கத்தினான்.
“ச்ச.. என்ன உலகம்டா இது.. என்ன சொசைட்டிடா இது..?? கருமம்..!!”
“என்னடா அச்சு..??”
“பின்ன என்ன மச்சி.. பொறந்த நாள்லாம் வருஷம் வருஷம்தான் கொண்டாடனும்னு எந்த பொறம்போக்கு இவனுகளுக்கு சொல்லிக் குடுத்துட்டு போனான்..?? மாசமாசம் அந்த டேட்ல பொறந்த நாள் கொண்டாடினா, என்ன கொறைஞ்சா போயிடுவானுக..??” ஹரி சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க, அசோக் அவனையே கடுப்புடன் பார்த்தான்.
“இங்க பாரு.. வெட்டித்தனமா பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத.. என்ன காரணம் சொல்லலாம்னு சீக்கிரம் யோசி..!!”
“ம்க்கும்.. எனக்கு தோணுச்சுனா சொல்ல மாட்டனா..??”
“சரி.. அப்போ நான் ஒன்னு சொல்லவா..??”
“என்ன..??”
“பர்மிஷனே கேக்க வேணாம்.. குடிச்சுட்டு நேரா வீட்டுக்கு போயிடு..!! எப்படியாவது அவகிட்ட அடியை உதையை வாங்கியாவது சமாளிச்சுக்கோ..!!” அசோக் கூலாக சொல்ல,
“டேய்.. ஒரேடியா என் ஜோலியை முடிச்சிறலாம்னு பாக்குறியா நீ..??” ஹரி பதறினான்.
“அப்போ என்னை ஆளை விடு.. டைம் ஆயிட்டே இருக்குது.. நான் கெளம்புறேன்..!!”
“டேய் மச்சி… இருடா.. டேய்..!!”
ஹரி கத்திக்கொண்டே இருக்க, அவனை கொண்டுகொள்ளாமல் அசோக் கிளம்பினான். தளத்தின் நுழைவாயில் நோக்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான். ஒரு நான்கைந்து எட்டுகள் வைத்ததும் அப்படியே நின்றான். தனது தலையை திருப்பி பக்கவாட்டில் பார்வையை வீசினான். அவன் பார்வை சென்ற இடத்தில் கோவிந்த் அமர்ந்திருந்தான்.
தனது இருக்கையில் அமர்ந்தவாறு.. எதிரே இருந்த மானிட்டரை முறைத்தவாறு.. அருகில் இருந்த வேஃபர் பிஸ்கட்டை அவ்வப்போது எடுத்து கடித்தவாறு..!! அவனுடைய முகத்தில் ஒருவித சோகம் அப்பிக் கிடந்தது..!! விரக்தியுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெளிவாக புரிந்தது..!! அசோக்கிற்கு ஏனோ இப்போது அவன் மீது புதிதாக ஒரு இரக்கம் பிறந்தது..!! ‘தன்னைப் போலவே ஏமாற்றம் கொண்டிருக்கும் இன்னொரு ஜீவன்..’ என்று தோன்றியது..!!
ஒருசில வினாடிகள் அவ்வாறு கோவிந்தை இரக்கத்துடன் பார்த்த அசோக்கிற்கு, மனதில் திடீரென ஒரு எண்ணம். அந்த எண்ணம் தோன்றியதுமே அவன் அதிகம் தயங்கவில்லை. நடந்து சென்று கோவிந்தை நெருங்கினான். இதமான குரலில் அவனை அழைத்தான்.
“கோவிந்த்..!!”
“ம்ம்..!!” கோவிந்த் அசோக்கை நிமிர்ந்து பார்த்தான்.
“ட்..ட்ரிங்க்ஸ் சாப்பிடுவியா நீ..??”
அசோக் சிறு தயக்கத்துடனே கேட்டான். கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் விழித்த கோவிந்த், அப்புறம் தடுமாற்றமாய் சொன்னான்.
“ம்ம்.. சா..சாப்பிடுவேன்.. எ..எப்போவாச்சும்..!! எதுக்கு கேக்குறீங்க..??”
“இன்னைக்கு சாப்பிடலாமா..??”
இப்போது கோவிந்த் முகத்தில் மீண்டும் குழப்ப ரேகைகள். அசோக் அப்படி கேட்பான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அத்தனை நாளாய் நேத்ராவை தவிர அந்த டீமில் இருப்பவர்கள் யாருமே கோவிந்திடம் முகம் கொடுத்து பேசியதில்லை. அசோக் திடீரென இவ்வாறு தன்னை அணுகவும், ஒருவித ஆச்சரியத்துக்கு உட்பட்டுப் போயிருந்தான். உடனே பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை பார்த்துவிட்டு அசோக்கே இப்போது புன்னகையுடன் சொன்னான்.
“ஹே.. கமான்..!! ஜஸ்ட்.. எனக்கு இன்னைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடனும் போல இருந்தது.. கம்பெனிக்கு ஆள் இல்ல.. அதான் உன்னை கூப்பிட்டேன்.. உனக்கு விருப்பம் இருந்தா என் கூட ஜாயின் பண்ணிக்கலாம்.. வாட் யு ஸே..??”
அசோக் மிகவும் ஸ்னேஹமான குரலில் கேட்டான். கோவிந்த் முகத்தில் இருந்த குழப்பம் இப்போது சற்று நீங்கியது. மெலிதாக புன்னகைத்தான். நீண்ட நேரம் எல்லாம் யோசிக்கவில்லை அவன். ஒரு சில வினாடிகளிலேயே,
“ம்ம்.. போலாம்..!!” என்று தலையாட்டினான்.
“ஓகே.. அப்போ ஷட்டவுன் பண்ணிட்டு கெளம்பு..!!”
கோவிந்த் ஷட்டவுன் எல்லாம் செய்யவில்லை. சிஸ்டத்தை அப்படியே லாக் செய்து மானிட்டரின் வெளிச்சத்தை மட்டும் நிறுத்தினான். சேரில் இருந்து எழுந்து கொண்டான். அத்தனை நேரம் அவர்களை கடுப்புடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஹரி, இப்போது பொறுக்கமாட்டாமல் எழுந்து ஓடிவந்தான். அசோக்கை பார்த்து கத்தினான்.
“டேய்.. டேய்.. என்னை விட்டுட்டு குடிக்க போறலடா.. நீ நல்லாவே இருக்க மாட்டடா.. நீ நல்லாவே இருக்க மாட்ட!!”
“ஏய்.. போடா..!! வொய்ஃப்புக்கு பயப்படுறவன்லாம் ஏன்டா லைஃபை என்ஜாய் பண்ணனும்னு ஆசைப்படுறீங்க..?? போ போ.. போய் வேலையை பாரு போ..!!” அசோக் ஏளனமாக சொன்னான்.
“போங்கடா போங்க.. என்னை இப்படி அம்போன்னு விட்டு போறீங்கல்ல.. நீங்க இன்னைக்கு குடிக்கிற சரக்குலாம் மட்டமான சரக்காதாண்டா இருக்கப் போகுது.. மப்பே ஏறாதுடா உங்களுக்கு.. அப்படியே ஏறுனாலும் அடுத்த செகண்டே வாந்தி எடுத்துடுவீங்கடா.. அப்படியே வாந்தி எடுக்காட்டாலும் போதையோட போய் போலீஸ்ட்ட மாட்டி, பர்ஸை பறிகொடுக்கப் போறீங்கடா..!! இது என் சாபம்டா.. வயிறு எரிஞ்சு சொல்றேண்டா.. பலிக்குதா இல்லையான்னு பாருங்க..!!”
ஹரி துக்கம் தாளாமல் புலம்ப, அவன் பேசிய வார்த்தைகள் அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தன. முகத்தை முறைப்பாக வைத்திருந்தவன் அவனையும் மீறி சிரித்து விட்டான். பிறகு கை நீட்டி ஹரியை அருகில் அழைத்தான்.
“ஏய்.. வாடா இங்க..!!”
“என்னடா..??”
கடுகடுப்பாக அருகில் வந்து நின்ற ஹரியின் பாக்கெட்டுக்குள் அசோக் கைவிட்டான். உள்ளே இருந்த செல்போனை எடுத்து கோவிந்த்திடம் நீட்டினான். என்னவென்று புரியாமல் விழித்த கோவிந்திடம் பொறுமையாக சொன்னான்.
“கவிதாவுக்கு ஒரு கால் பண்ணு கோவிந்த்.. இன்னைக்கு உனக்கு பர்த்டேன்னு சொல்லு.. ஹரியை ட்ரீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி.. அவகிட்ட பர்மிஷன் கேளு.. ப்ளீஸ்..!!”
கோவிந்த் ஓரிரு விநாடிகள்தான் திகைத்தான். அப்புறம் அசோக்கிடமிருந்து செல்போனை வாங்கி கவிதாவின் நம்பருக்கு கால் செய்தான். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹரிக்கோ முகமெல்லாம் பிரகாசம்.. வாயெல்லாம் பல்..!! அசோக்கின் கையை பிடித்துக்கொண்டு இளித்தவாறே சொன்னான்..!!
“மச்சி.. நண்பேண்டா மச்சி.. நண்பேண்டா..!!”
அசோக் எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. அவனது கவனம் கோவிந்திடம் இருந்தது. கோவிந்த் கவிதாவுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னான். அசோக்கும், ஹரியும் ரிசல்ட் தெரிந்து கொள்வதற்காக கோவிந்தின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஷயத்தை சொல்லிவிட்டு ஒரு சில ‘உம்..’ கொட்டின கோவிந்த், அப்புறம் செல்போனை ஹரியிடம் நீட்டினான்.
“என்ன..??” ஹரி புரியாமல் கிசுகிசுப்பாக கேட்டான்.
“உங்ககிட்ட பே..பேசணும்னு சொல்றாங்க..!!”
ஹரியின் முகம் இப்போது பட்டென சீரியசானது. செல்போனை வாங்கி பவ்யமாக காதுக்கருகே வைத்துக் கொண்டான். பெரும் முயற்சி செய்து குரலை இயல்பாக மாற்றிக்கொண்டு,
“ஹலோ..!!” என்றான்.
“ம்ம்.. என்ன.. காரணம் கெடைச்சிடுச்சு போல..??” அடுத்த முனையில் கவிதாவின் கடுகடு குரல்.
“சேச்சே.. அப்டிலாம் இல்லம்மா..!! நம்ம கோவிந்த்க்கு இன்னைக்கு பர்த்டேயாம்.. ட்ரீட்க்கு நான் வந்தே ஆகணும்னு ரொம்ப பிரியப்படுறான்.. அதான்..!!”
“என்னது.. நம்ம கோவிந்தா..?? அவனைத்தான் உங்களுக்கு புடிக்காதுல்ல..??”
“அச்சச்சோ.. யார் சொன்னா..?? ரொம்ப புடிக்கும்மா..!!”
“தர்பூஸ் தலையன்.. தர்பூஸ் தலையன்..னு சொல்வீங்க..??”
“அ..அது சும்மா.. செல்லமா.. கூப்பிடுறது..!!”
“ஹ்ம்ம்..!! சொன்னா கேக்கவா போறீங்க.. என்னவோ பண்ணி தொலைங்க..!! அப்டியே வெளில சாப்பிட்டு வந்துடுங்க.. உங்களுக்காக சமைச்சு வச்சுட்டுலாம் என்னால உக்காந்திட்ருக்க முடியாது.. நான் ஓட்ஸ் ஏதாவது போட்டு சாப்பிட்டுக்குறேன்..!!”
“ஓகேம்மா.. ஓகேம்மா..!! ஓட்ஸ் சாப்பிட்டு நீ படுத்துக்கோ.. நான் வெளிலயே சாப்பிட்டு வந்துடுறேன்..!!”
“ஹ்ம்ம்..!!! அளவா குடிங்க.. புரியுதா..??”
“ஹ்ஹ.. என்னம்மா நீ.. என்னைப் பத்தி தெரியாதா உனக்கு..?? நமக்கு லிமிட்னா லிமிட்தான்..!! ஓகே..??”
“ஓகே ஓகே..!! பை..!!”
“பை..!!”
ஹரி சந்தோஷமாக காலை கட் செய்தான். கட் செய்ததுமே கோவிந்தை ஏறிட்டு கூலாக சொன்னேன்.
“ஓகே மிஸ்டர் கோவிந்த்.. உங்க டைம்லி ஹெல்ப்புக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!! நீங்க இப்போ போய் உங்க வேலையை கண்டின்யூ பண்ணுங்க.. நானும் நண்பனும் பாருக்கு கெளம்புறோம்..!! சரியா.. நாளைக்கு பாக்கலாமா..??”
ஹரி அவ்வாறு சொன்னதும் கோவிந்தின் முகத்தில் பட்டென்று ஒரு ஏமாற்றம். அப்படியே முகத்தை பக்கவாட்டில் திருப்பி அசோக்கை பார்த்தான். அவன் அசோக் பக்கம் திரும்பியதும், இப்போது ஹரியும் கேஷுவலாக அசோக்கின் முகத்தை ஏறிட்டான். அசோக்கோ ஹரியை உஷ்ணமாக முறைத்துப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். அவனுடைய உக்கிரமான பார்வை ஹரியை சற்றே மிரள செய்தது. உடனே தடுமாற்றமாக சொன்னான்.
“இ..இல்ல மச்சி.. மூணு பேரா சேர்ந்து போனா.. எந்தக்காரியமும் வெளங்காதுன்னு.. மூத்தவங்க சொல்லிருக்காங்க.. அதான்..!!”
“அப்போ நீ போய் உன் வேலையை பாரு.. நானும் கோவிந்தும் மட்டும் போறோம்..!!”
“ஹேய்.. என்னடா இப்படி சொல்ற..??”
“பின்ன என்ன..?? இஷ்டம்னா எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ.. இல்லனா பொட்டியை சாத்திட்டு பொண்டாட்டியை பாக்க கெளம்பு..!! நீ வா கோவிந்த்..!!” அசோக் கோவிந்தை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்க,
“டேய்.. டேய்.. இருங்கடா.. ஷட்டவுன் பண்ணிட்டு வர்ரண்டா.. டேய்..!!” என்று பின்னால் இருந்து பதறிப்போய் அலறினான் ஹரி.
அதன்பிறகு இரண்டு மணி நேரம் கழித்து..
கோரமங்களாவில் இருக்கும் ஒரு செட்டிநாடு ரெஸ்டாரன்ட் கம் பார்..!! வார இறுதியாதலால் பாரில் கூட்டம் நிரம்பி வழிந்தது..!! நீல நிற நியான் வெளிச்சத்துடன், ஒருவித மசமசப்பான சூழல்..!! ஏ.ஸி காற்றில் மெலிதாக இளையராஜாவின் இன்ஸ்ட்ருமென்ட்டல் கசிந்துகொண்டிருந்தது. குடிக்க வந்திருந்தவர்கள் குடியரசு தலைவர் தேர்தல் பற்றியெல்லாம் வெட்டி விவாதத்தில் இறங்க ஆரம்பித்திருந்தார்கள்..!! பணியாளர்கள் எல்லாம் பம்பரமாய் சுழன்று பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்..!!
ஒரு மூலையில் நான்கு பேர் அமரக்கூடிய ஒரு டேபிளில் நமது ஆட்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். அசோக்கும், ஹரியும் ஒரு சோபாவை பகிர்ந்துகொண்டிருக்க, கோவிந்த் எதிரே தனியாக அமர்ந்திருந்தான். பீங்கான் பிளேட்டுகளில் வித விதமான பெயர்களுடன் வந்திருந்த கோழிகள் எல்லாம், அவர்களால் இரக்கமே இல்லாமல் விழுங்கப்பட்டிருந்தன. எவ்வளவு தின்றார்கள் என்பதற்கு சாட்சியாக எலும்புகள் மட்டுமே டேபிளில் இறைந்து கிடந்தன. எவ்வளவு குடித்தார்கள் என்பதற்கு சாட்சியாக அவர்களது தலைகள் எக்குத்தப்பாய் ஒரு நிலையில் நில்லாமல் சுழன்று கொண்டிருந்தன.
அருகே நின்றிருந்த பேரரிடம் கோவிந்த் ஆர்டர் செய்துகொண்டிருந்தான். எல்லோருக்கும் நான்காவது லார்ஜ் கொடுக்குமாறு நாக்கு குழற கேட்டுக்கொண்டான். வேறு சைடிஷ் ஏதாவது வேண்டுமா என்று தெரியாத்தனமாக கேட்டுவிட்ட பேரரை, கோவிந்த் வெறுப்பேற்ற ஆரம்பித்திருந்த சமயம்..!!
“ஐயோ.. நான் சொல்றதே உங்களுக்கு பு..புரியலை.. கோ..கோழி மாதிரியே இருக்குங்க.. ஆனா கோ..கோழி இல்ல.. அது ரெ..ரெண்டு ப்ளேட் கொண்டாங்க..!!” கோவிந்த் திக்கி திக்கி சொன்னதற்கு அந்த பேரர் தலையை சொறிந்தான்.
“ஸார்.. இப்படி சொன்னீங்கன்னா எப்படி ஸார்..?? அது என்னன்னு பேரை சொல்லுங்க ஸார்..!!”
“பேர் எனக்கு ஞா..ஞாபகம் இல்லையே..!!”
“வான்கோழியை சொல்றீங்களா..??”
“ப்ச்.. இல்ல..!!”
“புறாவா..??”
“ஹாஹா.. உங்க ஊர்ல பு..புறாலாம் கோழி மாதிரியா இருக்கும்..?? விட்டா கா..காக்காவான்னு கேட்பீங்க போல..??” என்று கோவிந்த் அந்த பேரரையே கலாய்க்க, அவன் இப்போது சற்றே எரிச்சலானான்.
“ஸார்.. எனக்கு தெரியலை ஸார்.. எதாருந்தாலும் மெனு பாத்து நீங்களே சொல்லுங்க..!!”
“டென்ஷன் ஆவாதீங்க பாஸ்.. அது பேர்ல ஒரு ந..நடிகை கூட இருக்காங்க..!! இருங்க.. யோசிக்கிறேன்..!!”
என்ற கோவிந்த், ‘ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..’ என்று நெற்றியை சொறிந்தவாறு தீவிரமாக அந்த உயிரினத்தின் பேரை யோசித்தான். அசோக்கும், ஹரியும் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் இவ்வளவு பேசுவான் என்ற விஷயமே, சில பல ஆன்ட்டிகுட்டிகள் அவனுக்குள் இறங்கியதும்தான் இவர்களுக்கே தெரிகிறது. ஒரு சில வினாடிகளிலேயே கோவிந்துக்கு அந்தப்பேர் ஞாபகம் வந்து போனது. உற்சாகமாக சொன்னான்.
“ஹாங்.. கௌதாரி.. கௌதாரி..!! கௌதாரி ரெ..ரெண்டு ப்ளேட் கொண்டாங்க..!!”
“கௌதாரிலாம் எங்ககிட்ட இல்ல ஸார்..!!” பேரர் சலிப்பாக சொல்ல,
“ஓ..!!!! இல்லையா..??” கோவிந்தின் முகத்தில் ஒரு ஏமாற்றம்.
“ஹ்ம்ம்.. காடை இருக்கு.. அது வேணும்னா ட்ரை பண்ணி பாக்குறீங்களா..??”
“காடையா..??? அ..அது எப்படி இருக்கும்..??” கோவிந்த் வாய் குழற கேட்டான்.
“ம்ம்ம்..?? கோழி மாதிரியே இருக்கும்.. ஆனா கோழி இல்ல..!!” பேரரின் குரலில் அவனையும் அறியாமலே ஒரு நக்கல் கலந்திருந்தது.
“ஓ..!!!! அப்படின்னா.. அதையே குடுங்க..!!”
கோவிந்த் ஒருவழியாய் ஆர்டர் செய்து முடித்தான். அந்த பேரர் ‘எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க.. எங்க உசுரை வாங்குறதுக்குன்னே..!! ஷ்ஷ்ஷ்.. பாஆஆ..!!’ என்று மனதுக்குள் நொந்துகொண்டவாறே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். அதற்காகவே காத்திருந்த மாதிரி ஹரி கோவிந்திடம் கேட்டான்.
“மிஸ்டர் கோவிந்த்.. எனக்கு ஒரு டவுட்..!!”
“என்ன..??”
“இந்த கௌதாரின்ற பேர்ல ஒரு நடிகை இருக்குறதா சொன்னீங்களே..?? அவங்க ஹாலிவுட் நடிகையா..??”
“இல்ல இல்ல.. நம்ம ஊர்தான்.. த..தமிழ்ல கூட நடிச்சிருக்காங்களே..??”
“தமிழ்லயா..?? தமிழ்ல யாரு.. எனக்கு தெரியாம..??” ஹரி தலையை சொறிந்தான்.
“ந..நடிச்சிருக்காங்க பாஸ்.. வாடா வாடா பையான்னு ஆடுவாங்களே.. அ..அவங்கதான்..!! அவங்க முழுப்பேரு நிஷா கௌ..கௌதாரி..!!”
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :