அன்புள்ள ராட்சசி – பகுதி 27
“மொளகாப்பொடி அல்வாவா..??” பாரதி மீண்டும் முகத்தை சுளித்தாள்.
“அவளுக்கு ஸ்வீட்டே பிடிக்காது மம்மி.. காரந்தான் பிடிக்கும்..!! மிர்ச்சின்னு ஒரு நிக்நேம் வேற..!!” என்று சற்றே எரிச்சலாக சொன்னவன், பிறகு திடீரென குரலை தாழ்த்திக்கொண்டு,
“ச்ச.. அவ முன்ன மாதிரி இல்ல மம்மி.. முன்னாடிலாம் என்கிட்ட எப்படி நடந்துக்குவா தெரியுமா..??” என்று பழைய பல்லவியையே பாடினான்.
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“எப்படி..??” தூரத்தில் அமர்ந்திருந்த சங்கீதா இப்போது முறைப்புடன் கேட்டாள். தங்கை கேட்ட கேள்விக்கு அசோக் அம்மாவிடமே பதில் சொன்னான்.
“முன்னாடிலாம் சூப்பரா திட்டுவா மம்மி.. தலைலயே நங் நங்னு அழகா கொட்டுவா.. கன்னத்துலயே சப் சப்புன்னு செமையா அறைவா தெரியுமா..?? இப்போலாம் எதுவுமே பண்றது இல்ல.. அவ ஏன் மம்மி இப்படி மாறிட்டா..??”
அசோக் நிஜமாகவே ரொம்பவும் ஏக்கத்துடன் அவ்வாறு சொல்ல, சங்கீதாவால் அதற்கு மேலும் அவனுடைய இம்சையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வாயில் இருந்த சித்தரத்தையை ‘த்தூ..’ என்று துப்பியவாறே, விருட்டென சேரில் இருந்து எழுந்தாள்.
“ஏண்டா.. உனக்கு எங்களை பாத்தா எப்படி தெரியுது..?? நானும் அப்போ இருந்து பாத்துக்கிட்டே இருக்கேன்..!!” என்று எரிச்சலாக கத்தியவாறே, அண்ணனை நோக்கி ஆவேசமாக வந்தாள்.
“இப்போ என்ன.. உனக்கு கன்னத்துல சப்பு சப்புன்னு அறை வேணும்.. அவ்வளவுதான..?? இரு.. நான் அறையுறேன்..!!”
என்றவாறு அவனுடைய தலை முடியை ஒரு கையால் கொத்தாக பிடித்தாள். அவனது கன்னத்தில் அறைவதற்காக இன்னொரு கையை ஓங்கினாள். தங்கையின் ஆவேசத்தில் சற்றே பதறிப்போன அசோக், உடனடியாய் சுதாரித்துக்கொண்டு, ஓங்கிய அவளுடைய கையை தடுத்து பிடித்துக் கொண்டான். கண்களை உருட்டி உக்கிரமாக அவளை பார்த்து கத்தினான்.
“ஏய்.. அடி வாங்கப் போறடி சங்கு.. ஒழுங்கா முடியை விடு..!!”
“முடியாது..!! இன்னைக்கு ஒரு அறையாவது உன்னை அறையாம விடுறது இல்ல..!!”
“விட்றி.. அப்புறம் நான் அறைஞ்சா நீ தாங்க மாட்ட..!!”
“அதையும் பாக்கலாம்..!!”
பிள்ளைகள் இருவரும் அவ்வாறு முட்டி மோதிக்கொண்டிருக்க, பாரதிதான் நொந்து போய் தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஐயயயயயே.. என்ன இது.. சின்ன புள்ளைக மாதிரி..?? ஏய்.. அவன் முடியை விடுடி.. விடுன்னு சொல்றேன்ல..??”
அம்மா அதட்டவும், அண்ணனின் தலைமுடியை சங்கீதா விடுவித்தாள். அப்புறம் அங்கேயே நின்றவாறு அசோக்கின் முகத்தையே கடுப்புடன் முறைத்துக்கொண்டிருக்க, பாரதி அவளை விரட்டினாள்.
“ஏய்.. போடி.. போய் எக்ஸர்சைஸ் பண்ணு.. போ..!!”
இப்போது சங்கீதா மெல்ல அவளுடைய சேருக்கு நகர்ந்தாள். அவளையே சில வினாடிகள் எரிச்சலாக பார்த்த பாரதி, பிறகு தலை கலைந்து போய் அமர்ந்திருந்த மகனிடம் திரும்பி சொன்னாள்.
“இந்தாடா.. உனக்குந்தான்..!! மீரா பத்தி பொலம்புறதை இத்தோட நிறுத்திக்கோ.. சும்மா சும்மா அந்த பொண்ணு பண்ற நல்ல விஷயத்தை எல்லாம்.. கொலைக்குத்தம் மாதிரி வந்து சொல்லிட்டு இருக்காத.. எனக்கே எரிச்சலா வருது..!! என்ன.. புரியுதா..??”
“ம்ம்..” அசோக்கும் முறைப்பாக சொன்னான்.
“ப்ச்.. சும்மா மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்காம.. நீ சொன்ன அந்த ஐட்டத்துக்கு.. இன்டர்நெட்ல ஏதாவது சமையல் குறிப்பு, செய்முறை விளக்கம் போட்ருக்கானான்னு பாரு.. நாளைக்கு செஞ்சு அசத்திடலாம்..!!” பாரதி இயல்பாகவே கேட்க, அசோக் இப்போது குழப்பமாக அம்மாவை ஏறிட்டான்.
“எ..எந்த ஐட்டத்துக்கு..??”
“அதாண்டா.. ஜானி வாக்கர்னு ஏதோ புதுசா ஒரு ஐட்டம் சொன்னியே.. மீராவுக்கு ரொம்ம்ம்ப புடிக்கும்னு..??”
பாரதி அப்பாவியாக கேட்டாள். சங்கீதா குபுக்கென்று எழுந்த சிரிப்பை, வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முயன்றாள். அசோக் திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி திருதிருவென விழித்தான்.
அத்தியாயம் 15
அடுத்த நாள் காலை.. இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள், வானத்தின் மையத்தை எட்டி விடவேண்டும் என்று.. சூரியன் மெல்ல மேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த நேரம்..!! அந்த சூரியனை சுற்றிலும் கருப்பு நிற குளிர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க.. வெப்பத்தின் உக்கிரம் வலுவிழந்து போய்.. சற்றே குளுமையான வானிலை பூமியில்..!! மாலை அதற்குள் வந்துவிட்டதோ என மயக்கம் கொள்கிற அளவுக்கு.. மங்கிப்போன வெளிச்சமே எங்கெங்கிலும்..!! காற்றிலும் ஈரப்பதம் மிகுந்து போயிருந்தது.. ஜிலுஜிலுவென ஊருக்குள் அலைபாய்ந்து.. மரங்களையும் மனிதர்களையும் இதமாய் வருடிச் சென்றது..!!
அசோக்கின் பைக் விருகம்பாக்கம் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. மந்தமான போக்குவரத்துடன் கூடிய மாநில நெடுஞ்சாலையில், மிதமான வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது. அசோக்கின் கண்கள் சாலையில் பதிந்திருக்க, அவனது தலைகவச வார்ப்பட்டை காதோரமாய் தடதடத்துக் கொண்டிருந்தது. பில்லியனில் அமர்ந்திருந்த மீராவின் கை அசோக்கின் தோளில் படர்ந்திருக்க, அவளது கூந்தல் குளிர்காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அசோக்கின் உதடுகள் ஒரு புன்னகையை பூசியிருக்க, மீராவின் முகமோ ஒருவித குழப்பத்தில் குளித்திருந்தது.
“ப்ளீஸ் அசோக்.. எங்க போறோம்னு சொல்லு..!!”
“நோ.. இட்ஸ் சர்ப்ரைஸ்..!!”
“ப்ச்.. ப்ளீஸ் அசோக்..!!”
“ம்ஹூம்.. எத்தனை நாள் நீ இந்த மாதிரி என்னை மண்டை காய வச்சிருப்ப..?? இன்னைக்கு உன் மண்டை கொஞ்ச நேரம் காயட்டும்.. நான் சொல்ல மாட்டேன்..!!”
“இ..இங்க பாரு அசோக்.. மூவின்னா ஐ’ம் ரியல்லி ஸாரி.. மூவி பாக்குறதுக்குலாம் எனக்கு இப்போ சுத்தமா மூட் இல்ல.. ஓகே..??”
“மூவிலாம் இல்ல..!!”
“அப்புறம்..?? வே..வேற எங்கதான் போற..?? இந்தப்பக்கம் நல்ல ரெஸ்டாரன்ட் கூட இல்ல..??”
“நீயே கெஸ் பண்ணு..!!”
“ப்ளீஸ் அசோக்..!!”
“ம்ஹூம்..!!” அசோக் பிடிவாதமாக இருக்க, மீரா இப்போது பொறுமை இழந்தாள்.
“ப்ச்..!! இப்போ நீ சொல்லப் போறியா.. இல்ல நான் பைக்ல இருந்து குதிக்கட்டுமா.?? ஐ’ம் சீரியஸ்..!!” என்றவாறே அவள் எழ முயல, அசோக்கிடம் உடனடியாய் ஒரு பதற்றம்.
“ஹேய்ய்ய்.. இரு இரு.. சொல்றேன்.. நீ பாட்டுக்கு குதிச்சாலும் குதிச்சிடப் போற..!!”
“அப்போ சொல்லு..!! எங்க போயிட்டு இருக்குறோம்..??”
“ஹ்ம்ம்.. எப்படி சொல்றது.. இந்த ஸ்பெஷல் டே’யை செலிப்ரேட் பண்ண போயிட்டு இருக்குறோம்..??” அசோக் உற்சாகமாக சொல்ல, மீராவுக்கு நெற்றி சுருங்கியது.
“ஸ்பெஷல் டே’யா..?? எ..என்ன ஸ்பெஷல் இன்னைக்கு..??”
“ஹேய்.. கமான்.. நடிக்காத..!! இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இல்ல..??”
“ம்ஹூம்.. இல்ல..!!”
“ஹேய் மீரா.. இன்னைக்கு பிப்ரவரி – 14.. வேலண்டைன்ஸ் டே..!!”
“ஓ..!!” அசோக்கின் குரலில் இருந்த குதுகலம், மீராவிடம் துளியும் இல்லை.
“அது மட்டும் இல்ல.. யு நோ ஒன்திங்.. நாம ரெண்டு பேரும் ஐ லவ் யூ சொல்லிக்கிட்டு.. இன்னைக்கோட நூறு நாள் ஆகிப் போச்சு..!! என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்.. இல்ல..??”
“ஹ்ம்ம்..!!”
“இப்போ சொல்லு.. இன்னைக்கு ஸ்பெஷல் டே’யா.. இல்லையா..??”
“ம்ம்.. ஸ்பெஷல்தான்..!!”
“ஆர்டினரி ஸ்பெஷல் இல்ல மீரா.. இட்ஸ் அல்ட்ரா ஸ்பெஷல்.. ஹாஹா..!!”
“அதுசரி.. அதுக்கு இப்போ.. என்னை எங்க கூட்டிட்டு போயிட்டு இருக்குற..??”
“அது சர்ப்ரைஸ்..!! சொல்ல மாட்டேன்..!!”
“ப்ளீஸ் அசோக்.. சொல்லு..!!”
“ப்ச்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல உனக்கே தெரிஞ்சிடும் மீரா.. கொஞ்ச நேரம் பல்லை கடிச்சுட்டு உக்காந்திரு..!!”
மீரா அதன்பிறகு அசோக்கை தொல்லை செய்யவில்லை. அமைதியாகிப் போனாள். அசோக் உற்சாகமாய் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க, மீரா தீவிரமாய் எதையோ யோசித்துக் கொண்டே வந்தாள்.
கேசவர்த்தினி பஸ் நிறுத்தத்தை தாண்டியதும், அசோக் பைக்கை இடது புறம் திருப்பினான். மேலும் ஐந்து நிமிட பயணம்..!! சௌத்ரி நகரை கடந்து, புதிதாக போடப்பட்டிருந்த அந்த தார்ச்சாலையில் வண்டி பயணித்தது. காலி மனையிடங்கள் அதிகமாகவும், ஆங்காங்கே முளைத்திருந்த பெரிய பெரிய வீடுகளுமாக அமைதியான சாலை. அந்த சாலையின் இறுதியில், இளம் பச்சை நிற பூச்சுடன் நின்றிருந்தது அந்த வீடு. காம்பவுண்டுக்குள் வண்டியை செலுத்தி, ஓரமாக ப்ரேக்கிட்டு நிறுத்தினான் அசோக். தயக்கத்துடனே கீழிறங்கிய மீரா, அந்த வீட்டை குழப்பமாக பார்த்தவாறே அசோக்கிடம் கேட்டாள்.
“எ..எங்க வந்திருக்குறோம்..?? இ..இது யார் வீடு..??”
“ம்ம்.. நம்ம வீடு மீரா.. கல்யாணத்துக்கு அப்புறம் நாம வாழப்போற வீடு..!!”
பைக்கில் இருந்து இறங்கிய அசோக் புன்னகையுடன் சொல்ல, மீராவிடம் உடனடியாய் ஒரு திகைப்பு.
“வாட்..????”
“யெஸ்.. இதுதான் அந்த சர்ப்ரைஸ்..!! எப்டி..??”
“எ..என்ன அசோக் இது.. என்னை எதுக்கு இங்க..??” மீரா தடுமாற்றமாய் கேட்டாள்.
“ஹேய் ரிலாக்ஸ்.. என்னாச்சு இப்போ.. ம்ம்..?? இங்க பாரு.. நீ ஏன் இப்படி ஷாக் ஆகுறேன்னு எனக்கு புரியுது..!! வேலண்டைன்ஸ் டே’ன்னா.. எல்லாரும் வீட்ல இருந்து எஸ்கேப் ஆகி ஊர் சுத்துவாங்க.. இவன் என்னடான்னா வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கானேன்னு பாக்குற.. அதான..?? ஹ்ம்ம்.. நான் ஒன்னு சொல்லவா..??”
“எ..என்ன..??”
“இந்த உலகத்துலேயே எங்க வீடு மாதிரி.. வேலண்டைன்ஸ் டே’யை செலப்ரேட் பண்றதுக்கு, வேற பெஸ்ட் ப்ளேஸே கெடையாது..!! தீபாவளி, பொங்கல்லாம் விட.. வேலண்டைன்ஸ் டே’யை ரொம்ப ஸ்பெஷலா செலப்ரேட் பண்ணுவோம்.. தெரியுமா..??”
“ஐயோ நான் அதுக்கு சொல்லல அசோக்.. இப்படி திடீர்னு..”
“ப்ச்.. அதுலாம் ஒன்னுல்ல மீரா..!! உன்னை கூட்டிட்டு வர்றேன்னு, நான் நேத்தே வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன்.. எல்லாரும் உனக்காக ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..!! வா.. வந்து எங்க ஆளுங்களை பாரு.. கமான்..!!”
சொல்லிவிட்டு அசோக் முன்னால் நடந்தான். மீரா ஒருவித தயக்கத்துடனே அவனை பின்தொடர்ந்தாள். அதற்குள்ளாகவே பைக் சத்தம் கேட்டு, வீட்டுக்கதவு திறந்து கொண்டது. அசோக்கின் குடும்பத்தினர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வெளிப்பட்டு, வாசலை நிறைத்தனர். பாட்டி.. தாத்தா.. பாரதி.. மணிபாரதி.. சங்கீதா.. இவர்களுடன் கிஷோரும் தலை காட்டினான்..!! அனைவருடைய முகத்திலுமே, அப்படி ஒரு அளவிட முடியாத ஒரு பூரிப்பும், மலர்ச்சியும்..!! இன்னும் சிறிது நாட்களில் முறைப்படி வீட்டுக்கு வரப்போகிற மருமகளை வரவேற்க, வீட்டு வாசலுக்கே எல்லோரும் வந்திருந்தனர்.
அனைவரும் வாசலிலேயே காத்திருக்க, அவர்களது கால்களுக்கு இடையே தலை நீட்டி எட்டிப்பார்த்த நாய்க்குட்டிகள் இரண்டும், பிறகு சந்தோஷமாக குறைத்துக்கொண்டே இவர்களை நோக்கி ஓடிவந்தன. அருகில் நெருங்கி இருவரையும் ஸ்னேஹமாக முகர்ந்து பார்த்தவைகள், அப்புறம் ஆளுக்கொரு பக்கமாய் இவர்களுடன் வாசலை நோக்கி நடந்தன.
மீரா நூறு சதவீதம் திகைப்பின் பிடியில் சிக்கியிருந்தாள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு அசோக் தன்னை உள்ளாக்குவான் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த திகைப்பு அவளுடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. ஒருவித மிரட்சிப் பார்வையுடனே, அசோக்குடன் நடந்தாள்.
“ரெண்டு பேரும் எந்தக்குறையும் இல்லாம.. நூறு வருஷம் சந்தோஷமா வாழனும் கண்ணுகளா..!!” ஆரத்தி எடுத்த பாட்டி, அசோக்குக்கும் மீராவுக்கும் நெற்றியில் திலகமிட்டாள்.
“நீ வாழப்போற வீடும்மா.. வலது காலை எடுத்து வச்சு உள்ள வா..!!” கனிவாக சொன்ன பாரதி, மீரா உள்ளே நுழைந்ததும் அவளுடைய கன்னத்தை அன்பாக வருடினாள்.
“நான் அசோக்கோட அப்பா பிச்சுமணி.. எழுத்தாளர் மணிபாரதின்னு கேள்விப்பட்டிருக்கியா.. அது சாட்சாத் நானேதான்.. ஹாஹா..!!” புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மணிபாரதி.
“ஹாய் அண்ணி..!! அண்ணாவும் கிஷோரும் உங்களை பத்தி நெறைய்ய்ய்ய சொல்லிருக்காங்க..!! நீங்க அழகா இருப்பீங்கன்னு தெரியும்.. ஆனா.. இவ்வ்வ்வளவு அழகா இருப்பீங்கன்னு நான் நெனச்சே பாக்கல..!! ஹையோ… சூப்ப்ப்பரா இருக்கீங்க..!!” மீராவின் விரல்களுடன் தனது விரல்களை கோர்த்துக் கொண்டு, விட மறுத்தாள் சங்கீதா.
“இதுதான் நாம ரெண்டு பேரும் வாக்கப்படப்போற வீடு ஸிஸ்டர்.. நல்லா பாத்துக்கங்க.. உலகத்துல எங்க தேடுனாலும், இந்த மாதிரி கேரக்டர்ஸ்கள ஒரே வீட்ல பாக்க முடியாது.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு டைப்பு..!!” சன்னமான குரலில் அசோக்கின் குடும்பத்தை கிண்டலடித்தான் கிஷோர்.
வெளில ரொம்ப வெயிலாம்மா..?? இப்படி களைச்சு போய் வந்திருக்கிறியே..?? ஏம்மா பாரதி.. பாப்பாக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது குடு..!!” மீராவின் மீதான அக்கறையை, மருமகளுக்கு உத்தரவு போடுவதில் காட்டினார் தாத்தா.
மீராவை உள்ளறைக்கு அழைத்து சென்று.. சோபாவில் அமரவைத்து.. அவளை சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டனர்..!! பாரதி கொண்டு வந்த பாதாம் கீரை.. மீரா கொஞ்சம் கொஞ்சமாய் அருந்த.. மற்றவர்கள் அத்தனை நாளாய் மீராவிடம் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம்.. இப்போது சராமரியாக கேட்டு தள்ளினர்..!! மீராவும் அவர்களது கேள்விகளுக்கெல்லாம்.. முகத்தில் ஒரு மிரட்சியும்.. கண்களில் ஒரு மருட்சியுமாய்.. தயங்கி தயங்கி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..!! அசோக் எதுவுமே பேசவில்லை.. அவனது உள்ளம் கவர்ந்த திருடியிடம்.. தனது குடும்பத்தினர் குறுக்கு விசாரணை செய்கிற காட்சியை.. உதட்டில் ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!!
மீரா ஆரம்பத்தில் அவஸ்தையாக நெளிந்தாள்.. அசௌகரியமாக உணர்ந்தாள்.. இப்படி ஒரு சூழ்நிலைக்கு அவள் கொஞ்சமும் தயாரில்லாமல் இருந்ததுதான் அதன் காரணம்..!! ஆனால் அசோக்கின் குடும்பத்தினர்.. அவள் மீது காட்டிய பரிவும் பிரியமும்.. சீக்கிரமே அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தன..!!
சகஜ நிலைக்கு திரும்பினாலும்.. அவளுடைய மனதில் ஏற்பட்டிருந்த அந்த வியப்பு நிலை.. அப்படியேதான் இருந்தது..!! இன்னும் சொல்லப் போனால்.. நேரம் ஆக ஆக.. அந்த வியப்பு அதிகரித்துக் கொண்டேதான் சென்றது..!! அப்படி என்ன வியப்பு என்கிறீர்களா..?? இரண்டு வகையான வியப்பு அவளுக்கு.. ஒன்று.. அசோக்கின் குடும்பத்தினர் அவளிடம் காட்டிய அபரிமிதமான அன்பு.. இரண்டு.. மூன்று தலைமுறையினர் வாழ்கிற அந்த குடும்பத்தில்.. ஒருவருக்கொருவர் இடையில் இருந்த அந்த அன்னியோன்யம்..!! இரண்டையுமே அவள் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை..!!
தங்களுடைய காதல் விஷயத்தை, தன் குடும்பத்திடம் தெரிவித்திருப்பதாக அசோக் மீராவிடம் சொல்லியிருக்கிறான். ஆனால், வரப்போகிற மருமகள் மீது அவர்கள் இப்போதே இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார்கள் என்று மீரா நினைத்திருக்கவில்லை. தங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே காதல் திருமணம்தான் என்பதையும் அசோக் அவளுக்கு சொல்லியிருக்கிறான். ஆனால் இந்த அளவுக்கு காதலும், மகிழ்ச்சியும் கொஞ்சி விளையாடுகிற குடும்பம் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.
முதலில் அவளை சூழ்ந்து கொண்டு மொத்தமாக அன்பை பொழிந்தவர்கள்.. அப்புறம் அவளை கைப்பிடித்து அவரவர் அறைக்கு அழைத்துச் சென்று.. தனித்தனியாக அவளிடம் மனம் விட்டு பேசி.. தங்கள் ப்ரியத்தை காட்டினர்..!!
மணிபாரதியின் அறை..
“அப்பா எப்படிமா இருக்காரு..??” சம்பிரதாயமாகவே ஆரம்பித்தார் மணிபாரதி.
“ம்ம்.. ந..நல்லா இருக்காரு அங்கிள்..!!” மீராவின் குரலில் இன்னுமே தயக்கம்.
“அப்பா பேரு சந்தானம்தான.??”
“ஆ..ஆமாம்..!!”
“அசோக் ஒருதடவைதான் சொன்னான்.. எப்டி ஞாபகம் வச்சிருக்கேன் பாத்தியா..?? அங்கிள்க்கு ஞாபக சக்தி கொஞ்சம் ஜாஸ்தி..!!”
“ஓ..!!”
“ஹ்ஹ்ம்ம்ம்.. அப்பா பத்தி அசோக் எல்லாம் சொல்லிருக்கான்மா.. இந்தக்காலத்துலயும் இப்படிலாம் இருக்காங்களான்னு ரொம்ப ஆச்சரியமா இருந்தது..!! ஆனா.. நீ அதெல்லாம் எதுவும் நெனைச்சு கவலைப்பட்டுக்க வேணாம்மா மீரா.. ‘அப்பா சம்மதிப்பாரா.. இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்குமா..’ அப்டின்லாம் எந்த கவலையும் உனக்கு வேணாம்.. தெரிஞ்சதா..?? நீ எங்க வீட்டு பொண்ணும்மா.. நாங்கல்லாம் இருக்கோம் உனக்கு..!! உன் அப்பா கைல கால்ல விழுந்தாவது.. இந்த கல்யாணத்துக்கு அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு.. ஹாஹா.. சரியா..??” மணிபாரதி சிரிப்புடன் சொன்னாலும், அவருடைய பேச்சில் ஒரு அழுத்தமான நம்பிக்கை தெரிந்தது.
“ச..சரி அங்கிள்..!!” மீராவின் குரல்தான் ஏனோ பிசிறடித்தது.
“ம்ம்.. என்னோட நாவல்லாம் படிச்சிருக்கியாமா..??” மணிபாரதி திடீரென அப்படி கேட்டார்.
“இ..இல்ல அங்கிள்.. ஆனா உங்க பேரை கேள்விப் பட்ருக்கேன்..!!”
“ஹஹா.. பரவால பரவால..!! எதுக்கு கேட்டேன்னா.. பதினஞ்சு வருஷம் முன்னாடி.. ‘காதலை வாழ விடுங்கள்’ அப்டின்னு நான் ஒரு நாவல் எழுதினேன்.. எனக்கு ரொம்ப பேர் வாங்கி தந்த நாவல்..!! அதுலயும் இப்படித்தான்.. உன் அப்பா மாதிரியே ஒரு அப்பா கேரக்டர்.. அவருக்கும் உன்னை மாதிரியே ஒரு பொண்ணு..!! அந்தப் பொண்ணு என்ன ஒரு கேரக்டர் தெரியுமா.. நான் இதுவரை உருவாக்குனதுலயே அந்த பொண்ணு கேரக்டர்தான்..” மணிபாரதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவரை செல்லமாக கடிந்து கொண்டே பாரதி அந்த அறைக்குள் நுழைந்தாள்.
“ஐயயயே.. என்னங்க இது.. புள்ளையை சாப்பிடவிடாம.. நாவலு.. கேரக்டருனுட்டு..” என்றவாறே உள்ளே வந்தவள், மீராவுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டு,
“இவர் எப்போவும் இப்படித்தான்மா.. எந்த நேரமும் எழுத்து நெனைப்பாவே இருப்பாரு.. இப்போ உன்கிட்ட அஞ்சு நிமிஷம் பேசுனார்ல.. இதை வச்சு கூட ஏதாவது கதை எழுதலாமான்னு யோசிப்பாரு..!!” என்று கணவனை கிண்டல் செய்தாள்.
“ஹாஹா.. அப்படிலாம் எதுவும் இல்லம்மா மீரா.. வெளையாட்டுக்கு சொல்றா.. அவளை நம்பாத..!!” மணிபாரதி மீராவிடம் சமாளிப்பாக சொன்னார்.
– தொடரும்
மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :