ஐ ஹேட் யூ, பட் – பகுதி 9
“ஹ்ம்ம்.. வெளக்கமா சொல்லனுமா உனக்கு..?? மடிவாலால ‘சங்காத்தி மேட்ரிமோனியல் சென்டர்னு’ ஒரு ஏஜன்சி இருக்கு.. மேரேஜ் ப்ரோக்கர்ஸ்..!! போன வாரம் உன் ஃப்ரோபைல் அங்க ரெஜிஸ்டர் பண்ணினேன்.. இந்த வாரம் இந்த பொண்ணோட ஃபோட்டோ அனுப்பிருக்காங்க.. முதமுதலா உன் மூஞ்சிக்கு வந்திருக்குற வரன்..!! எனக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. நீ பாத்து எப்படி இருக்கான்னு சொல்லு..!!”
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
ராஜேஷ் சொல்ல சொல்லவே அசோக்கின் முகத்தில் டென்ஷன் ஏறிக்கொண்டே சென்றது. கண்களை உருட்டி அண்ணனை முறைத்தவன், கோபமான குரலில் அவனிடம் சீறினான்.
“உன்னை யாரு இந்த வேலைலாம் பாக்க சொன்னது..??”
“ம்ம்ம்..?? மிஸ்டர் முத்துச்சாமி..!!” ராஜேஷின் குரலில் ஒரு கிண்டல்.
“அது யாரு..??” அசோக் ஒருவேகத்தில் படக்கென கேட்டுவிட,
“டேய்.. நம்ம அப்பாடா..!!” என்று ராஜேஷ் பதறினான்.
“ஷ்ஷ்.. ஸாரி..!! ” என்று நாக்கை கடித்துக்கொண்ட அசோக், உடனே
“ம்ம்ம்ம்… யாரு சொன்னா என்ன..?? நான் சொல்றதை இப்போ நல்லா கேட்டுக்கோ..!! இன்னைக்கோட இந்த பொண்ணு பாக்குற வேலையைலாம் நிறுத்திடு..!!” என்றான்.
“ஆங்.. நிறுத்திட்டு..??? ஒரு வருஷத்துக்குள்ள உனக்கு ஒரு பொண்ணை பாத்து முடிக்கணும்னு.. அப்பா எங்கிட்ட வேலையை விட்டிருக்காரு..!! அவருக்கு யாரு பதில் சொல்றது..??” ராஜேஷ் எரிச்சலாக கேட்க, அசோக் இப்போது அடிக்குரலில் சொன்னான்.
“உனக்கு என்ன.. ஒரு வருஷத்துக்குள்ள உனக்கு ஒரு பொண்ணு வேணும்.. அவ்வளவுதான..?? நானே கொண்டுவந்து நிறுத்துறேன்.. போதுமா..??”
“டேய்.. நீயா பொண்ணு பாக்குறேன்னு தெரிஞ்சா.. அ..அப்புறம்.. பிரச்னை ஆயிடும்டா.. அப்பா ஒத்துக்க மாட்டாரு..!!”
“அவருக்கு தெரிஞ்சாத்தான..?? பொண்ணு நான் பாக்குறேன்.. உன்கிட்ட கூட்டிட்டு வர்றேன்.. நீயே கஷ்டப்பட்டு தேடி கண்டுபுடிச்ச பொண்ணுன்னு அப்பாகிட்ட சொல்லி.. நீ பேர் வாங்கிக்கோ..!! டீல் ஓகேவா..??”
“ஏய்.. இதுலாம் ரொம்ப ஓவருடா..!! நாங்கல்லாம் இப்படியா தனியா பொண்ணு பாத்துட்டு திரிஞ்சோம்.. வீட்ல பாத்த பொண்ணை கட்டிக்கல..??”
“நீ ஒரு ஈனா கூனா.. எல்லாரும் அப்படியா இருப்பாங்க..??”
அசோக் சொன்னதைக்கேட்டு ராஜேஷ் டென்ஷனானான். ஹாலில் அந்தமாதிரி சத்தம் அதிகரித்துக்கொண்டே செல்லவும், இப்போது கிச்சனில் நின்றிருந்த செல்வி, அங்கிருந்து வெளிப்பட்டு ஹாலுக்குள் நுழைந்தாள். அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று புரியாதவளாய்..
“என்னங்க.. என்னாச்சு..??” என்றாள்.
“ஒண்ணுல்ல அண்ணி..!!” என அசோக் உடனடியாய் சமாளித்தான்.
அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அங்கு ஒரு அமைதி. யாரும் எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தார்கள். தம்புச்சாமியோ எதுவும் புரியாமல், தலையை அண்ணாந்து திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான். ராஜேஷ்தான் அந்த அமைதியை குலைத்தவாறு, ஆத்திரமும் சற்றே குறைந்து போனவனாய் மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.
“இங்க பாரு அசோக்.. என்னதான் நீயா பொண்ணு பாத்தாலும்.. பெரியவங்களா பாக்குற மாதிரி வராது.. அவங்களுக்கு இருக்குற அனுபவம் உனக்கு இருக்காது..!!”
“நீங்க உங்களுக்குன்னு நெறைய கண்டிஷன்ஸ் வச்சுக்கிட்டு.. உங்க இஷ்டத்துக்கு ஏதோ ஒன்னை இழுத்துட்டு வந்து நிறுத்துவீங்க.. அதையெல்லாம் என்னால கட்டிக்க முடியாது..!! எனக்கு வரப்போறவ.. என் டேஸ்ட்படி இருக்கனும்..!!”
“நீ மொதல்ல அந்த கவரை பிரிச்சு பாரு.. என் டேஸ்ட் பத்தி உனக்கு நம்பிக்கை வரும்..!!”
“ம்க்கும்.. உன் டேஸ்ட் பத்தித்தான் ஆறு வருஷம் முன்னாடியே எனக்கு தெரிஞ்சு போச்சே..??”
என்று அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னவன், அந்த கவரை தூக்கி டீப்பாயில் விட்டெறிந்தான். அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் செல்வி விழித்தாள். ஆனால் ராஜேஷ் புரிந்துகொண்டு அசோக்கை கடுப்புடன் முறைத்தான். வேறொன்றும் புரிந்துபோன மாதிரி இருக்க, அவசரமாய் கேட்டான்.
“யாருடா அந்தப்பொண்ணு..??”
“எந்தப்பொண்ணு..??”
“அதான்.. நீ லவ் பண்ற பொண்ணு..!!”
“நா..நான் யாரை லவ் பண்றேன்.. அ..அப்டிலாம் யாரும் இல்ல..!!” அசோக் தடுமாற்றமாய் சொன்னான்.
“ஹே.. எல்லாம் எனக்கு தெரியும்.. ஐ.டில வேலை பாக்குறவனுகலாம் இப்படித்தானடா இருக்குறிங்க..??”
“இப்போ எதுக்கு தேவை இல்லாம ஐ.டியை இழுக்குற நீ..?? அப்படி என்ன பண்றோம் நாங்க..??”
“ஆங்.. எல்லாம் செட்டு செட்டாத்தானடா அலையுறீங்க..!! எவ, எப்படின்னு எதுவும் தெரியாம.. எவளையாவது புடிச்சுக்க வேண்டியது.. வீட்டுக்கு தெரியாம பார்க், ரெஸ்டாரன்ட், சினிமான்னு ஊர் சுத்த வேண்டியது..!! நீ யார் கூட அந்த மாதிரி ஊர் சுத்துறேன்னு சொல்லு..!!”
ராஜேஷ் அவ்வாறு கேட்கவும், அசோக் நிஜமாகவே பயங்கர கடுப்புக்கு உள்ளானான். அண்ணனின் முகத்தையே எரிச்சலும், கோபமுமாய் முறைத்தவன், அப்புறம் கண்களை இடுக்கி அவனை கூர்மையாக பார்த்தவாறு, குரலை சற்றே தாழ்த்திக்கொண்டு கேட்டான்.
“கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லு.. ஐ.டில வேலை பாக்குறவனுக மட்டுந்தான்.. வீட்டுக்கு தெரியாம பொண்ணோட ஊர் சுத்துறானுகளா..??”
அவ்வளவுதான்..!! அசோக்கின் பார்வையிலும், கேள்வியிலும் இருந்த கூர்மை.. ராஜேஷை சுருக்கென்று தாக்கி.. அவனை ஸ்தம்பித்துப் போக செய்தது..!! ‘தேரே மேரே பீச் மே.. கேஸா ஹே யே பந்தன்.. அஞ்சானா..!!’ என பின்னணியில் பாடல் ஒலிக்க, டெல்லியில் தன்னுடன் கைகோர்த்து சுற்றித் திரிந்த, ஒரு மைதா மாவின் முகம் படக்கென அவன் மூளையில் பளிச்சிட்டது..!! தடுமாறிப் போனான்..!! மனைவி வேறு அருகில் இருப்பதை உணர்ந்ததும்.. டரியல் ஆகிப் போனான்..!! அவசர அவசரமாய்..
“சரி சரி விடு.. உன் இஷ்டப்படி என்னவேணா பண்ணித்தொலை.. இனி உன்னை நான் எதுவும் சொல்ல மாட்டேன்..!!” என்று சமாளித்தான்.
“ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!!”
என்று தனது வழக்கமான பஞ்ச்சை உதிர்த்த அசோக், எதுவும் புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்த செல்வியிடம் திரும்பி,
“நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன் அண்ணி.. நாலு நாளா வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடந்தது ஒரு மாதிரி இருக்கு..!! எனக்கு சாப்பாடு வேணாம்.. இன்னைக்கு நான் வெளிலயே சாப்பிட்டுக்குறேன்..!!”
என்று சொல்லிவிட்டு, சுவற்றில் தொங்கிய பைக் சாவியை எடுத்துக்கொண்டு, அதை சுழற்றியவாறே வீட்டை விட்டு வெளியேறினான். செல்வி அதற்குமேலும் தனது ஆர்வத்தை அடக்க முடியாதவளாய், அவசரமாய் வந்து தன் கணவனுக்கருகே சோபாவில் அமர்ந்தவாறே கேட்டாள்.
“ஏங்க.. அவன் என்னங்க சொல்லிட்டு போறான்.. எனக்கு ஒண்ணுமே புரியலை..!!”
“என்ன புரியலை உனக்கு..?? ‘உன் சமையலை தின்னு தின்னு வெறுத்து போச்சு.. இன்னைக்கு ஒருநாளாவது வெளில சாப்பிட்டு பொழைச்சுக்குறேன்’னு.. நல்லா தெளிவாத்தான சொல்லிட்டு போறான்..??”
“ஐயோ அது இல்லைங்க..!!”
“அப்புறம்..??”
“அதுக்கு முன்னாடி சொன்னது.. ஏதோ ஐ.டில வேலை பாக்குறவங்க மட்டுந்தான்.. பொண்ணுகளோட..” செல்வி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,
“ஆமாம்.. இப்போ ரொம்ப முக்கியம்..?? போடீ.. போய் பூரியை பொறிச்சு எடு.. போ..!!” என இவன் சட்டியில் போட்ட பூரி மாதிரி பொறிந்தான்.
“ஏங்க இப்படி கோவப்படுறீங்க..??” செல்வி பாவமாக கேட்டாள்.
“பின்ன என்ன..?? அவன் ஏதோ என் டேஸ்ட் சரியில்லன்னு நக்கல் அடிச்சுட்டு போறான்.. நீயும் அதை நோண்டி நோண்டி கேட்டுட்டு இருக்குற..?? என் டேஸ்ட்க்கு என்னடி குறைச்சல்..??”
“ஆமாம்.. அதான..?? உங்க டேஸ்ட்க்கு என்ன குறைச்சல்..?? இந்தா.. நம்ம தம்பூ போட்டுருக்குற பூப்போட்ட ஜட்டி கூட உங்க செலக்ஷன்தான்.. எவ்ளோ அழகா இருக்கு..??” செல்வி சீரியசாக சொல்ல, ராஜேஷ் அவளை உக்கிரமாக முறைத்தான்.
“அதை சொல்லலடி.. இதை சொன்னேன்.. இந்த பொண்ணுக்கு என்னடி குறைச்சல்..??” என்றவாறு ராஜேஷ் அந்த கவரை பிரித்து உள்ளே இருந்த போட்டோவை எடுத்து மனைவியிடம் காட்டினான்.
“ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்குறா..!! ஆனா.. நம்ம லக்ஷ்மியை விட கொஞ்சம் கலர் கம்மிதான்.. இல்லைங்க..??”
செல்வியின் ஆசை அவளையும் அறியாமல் அவளது வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட, ராஜேஷ் இப்போது தனது தலையை நாப்பத்தஞ்சு டிக்ரியில் டேப்பராக திருப்பி, முன்பை விட கடுமையாக மனைவியை முறைத்தான். அவனது பார்வையின் அர்த்தம் செல்விக்கு புரிந்து போக, உடனே சமாளிக்க முயன்றாள்.
“இ..இல்லைங்க.. நான் ஏதோ என் மனசுக்கு பட்டதை சொன்னேன்..!! நீங்களாச்சு.. உங்க தம்பியாச்சு.. அவருக்கு புடிச்சிருந்தா கட்டி வைங்க.. எனக்குலாம் ஒன்னும் இல்ல..!!” என்றவாறு சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள்.
“தம்பூ.. நீ வா.. ஹோம் வொர்க் பண்ணனும்.. டைம் ஆச்சு..!! நாளைக்கு ஸ்கூல்.. ஞாபகம் இருக்குல..??”
என்று தம்புச்சாமியை இழுத்துக்கொண்டு, உள்ளறைக்குள் நடந்தாள். மனைவியின் முதுகையே எரிச்சலும், சலிப்புமாய் முறைத்த ராஜேஷ், பிறகு கையிலிருந்த புகைப்படத்தை தூக்கி டீப்பாயில் போட்டான். அந்த புகைப்படத்தில்.. எதோ ஒரு மலையடிவாரத்தின் பின்னணியில்.. மஞ்சள் நிற புடவையை சுற்றிக்கொண்டு.. மயக்குகிற மாதிரி ஒரு பார்வையை வீசியவாறு.. மந்தகாசமாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.. ப்ரியா..!!!
அத்தியாயம் 6
திங்கட்கிழமை ஆபீசுக்கு வந்து சிஸ்டம் திறந்து பார்த்த ப்ரியா, நிஜமாகவே அதிசயித்துப் போனாள். அவளுடைய வேலையை அழகாகவும், நேர்த்தியாகவும் அசோக் முடித்து வைத்திருப்பதை பார்த்து மனம் பூரித்தாள். என்ன செய்திருக்கிறான் என்பதை, எளிதாக புரியும்படியாக அவன் ப்ரிப்பேர் செய்து வைத்திருந்த டாகுமன்ட்டும், அவளுக்கு மிக வசதியாக இருந்தது. அவளே அனைத்தும் செய்து முடித்த மாதிரியாக, எல்லா கோட்-யும் செக்கின் செய்தாள். தன்னுடைய வேலையை முடித்துவிட்டதாக ரவிப்ரசாத்துக்கு, கெத்தாக ஒரு மெயில் அனுப்பினாள். ‘இதெல்லாம் எங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி..!!’ என்கிற ரீதியில். டீமில் உள்ள மற்றவர்களை CC-யில் போட்டுக் கொண்டாள். ‘கலக்குறடி ப்ரியா..!!’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
எழுந்து அசோக்கின் இடத்துக்கு நடந்து சென்றாள். பின்பக்கமாக இருந்து அவனுடைய தோளை ஸ்நேகமாக பற்றினாள். பதட்டத்துடன் திரும்பி பார்த்த அசோக், ப்ரியா என்று தெரிந்ததும் பதட்டம் நீங்கி புன்னகைத்தான்.
“ஹேய்.. மைசூர் ட்ரிப்லாம் எப்படி இருந்தது..??” அவனுடைய கேள்வி ப்ரியாவின் காதில் விழவே இல்லை.
“தேங்க்ஸ்டா.. தேங்க்ஸ் எ லாட்.. இந்த ஹெல்ப்பை நான் மறக்கவே மாட்டேன்..!!!” என்று கண்களில் நீர் துளிர்க்க சொன்னாள்.
மேலும் ஒரு இரண்டு வாரங்கள் ஓடின. க்ளையன்ட்டுக்கு ஃப்ரேம்வொர்க் டெலிவர் செய்து அப்ரூவல் வாங்கி, அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பித்திருந்தனர். யூஸர் இன்டர்ஃபேஸ்-க்கான ப்ரோட்டோடைப் தயார் செய்யும் பணி. ப்ரோட்டோடைப் என்றால், அவர்கள் இறுதியாக உருவாக்கப்போகிற அப்ளிகேஷனின் ஆரம்ப டம்மி வடிவம். ஸ்க்ரீன்களும், அதற்கான லிங்க்குகளும் தயார் செய்யவேண்டும். ஃப்ரேம்வொர்க் வேலையை போல சிக்கலான வேலை கிடையாது. எளிமையான வேலைதான். அதனால் அதிக மென்டல் ப்ரெஷர் இல்லாமலே அனைவரும் ஆபீசுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு நாள் மதியம்..!!
அவர்கள் ஆபீஸ் கேஃப்டீரியா..!! அசோக், ப்ரியா, ஹரி, கவிதா, நேத்ரா ஐந்து பேரும் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். பேச்சு பொதுவாக சென்று கொண்டிருக்கையில், ஹரிதான் முதலில் அந்த விஷயத்தை ஆரம்பித்தான். அசோக்கிடம் கேட்டான்.
“மச்சி.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..??”
“என்னடா..??”
“ரெகயர்மன்ட் கேதரிங்கு ரவியை அனுப்பலயாம்..!!”
“ஹாஹா.. அவனை அனுப்ப மாட்டாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியுன்டா..!! அவன் பேப்பர் போட்டுட்டு.. எட்டு மணி நேரம் ஆபீசுக்குள்ள உக்காந்திருக்குறதே பெரிய விஷயம்.. அவனை நம்பி ஆன்சைட்லாம் எவன் அனுப்புவான்..??”
“ம்ம்..!! அப்போ நம்ம டெவலப்மன்ட் டீம்ல இருந்துதான் யாரையோ அனுப்ப போறாங்க..??”
“ஹ்ம்ம்.. ஆமாம்.. அப்படித்தான் இருக்கும்..!!”
“யாரை அனுப்புவாங்கன்னு நீ நெனைக்கிற..??”
“என்னை கேட்டா..?? எனக்கு எப்படி தெரியும்..??”
“ஆக்சுவலா பாத்தா.. உன்னைத்தான் அனுப்பனும் அசோக்.. நம்ம டீம்ல நீதான் அதுக்கு டிஸர்வ்டான ஆளு.. ஆனா..” என்று இழுத்த ஹரி, திடீரென வேறெங்கேயோ கவனத்தை திருப்பியவன்..
“வந்துட்டான்யா வந்துட்டான்.. கழுகுக்கு மூக்கு வேர்த்தமாதிரி வந்துட்டான்..!! தர்பூஸ் தலையன்..!!”
என்று கத்தினான். தூரமாக.. அப்போதுதான் மதிய உணவுக்காக கேஃப்டீரியாவுக்குள் நுழைந்துகொண்டிருந்த கோவிந்தை பார்த்துத்தான்.. அவன் அவ்வாறு கத்தியது..!!
“யாரைடா சொல்ற..??”
அசோக் பின்பக்கமாக திரும்பி பார்க்க, அவனோடு சேர்ந்து எல்லோரும் வாசலுக்கு பார்வையை வீசினார்கள். கோவிந்த் வருவதை கண்டுகொண்டார்கள்.
“அவன்தான்..!! கோ.. கோ.. கோவிந்த்து..!!”
ஹரி கோவிந்த் மாதிரி கேலியாக திக்கி திக்கி பேசிக்காட்ட, கவிதா அவனுடைய புஜத்தில் பட்டென தட்டினாள். முறைத்த முகத்துடன் கணவனை கடிந்து கொண்டாள்.
“ச்ச.. இதுதான் உங்ககிட்ட எனக்கு சுத்தமா புடிக்கிறது இல்ல..!! அடுத்தவங்களோட டிஸேபிலிட்டியை மென்ஷன் பண்ணி கிண்டல் பண்றது..!! எல்லாருக்கும் பேரு வச்சிருக்குறதை பாரு.. தர்பூஸ் தலையன், ஸ்ப்ரிங்கு மண்டையன், குமுட்டி வாயன்னு..!!”
“ஏன்.. இதுல என்ன இருக்கு..??”
“என்ன இருக்கா..?? இதெல்லாம் தப்பு..!!”
“என்ன தப்பு.. நாம பேசுறது அவன் காதுல விழுந்தாத்தான் தப்பு.. விழலைன்னா எதுவும் தப்பு இல்ல..!!” ஹரி சப்பைக்கட்டு கட்டினான்.
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :