நெஞ்சோடு கலந்திடு – பகுதி 12

சற்றே கோவமாக சொன்ன திவ்யா, சோர்ந்து போயிருந்த அசோக்கின் முகத்தையே கொஞ்ச நேரம் பாவமாக பார்த்தாள். அப்புறம் அவனுடைய வலது கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். லேசாக அழுத்தம் கொடுத்தாள். இப்போது தன் குரலை மிக மென்மையாக மாற்றிக் கொண்டு சொன்னாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“இங்க பாருடா.. இப்படிலாம் நீ ஃபீல் பண்ண வேண்டிய அவசியமே இல்ல..!! நீ எனக்கு நல்லதுன்னு நெனச்சுத்தான அப்படி சொல்ல சொன்ன..? நீ என்ன வேணுன்னேவா அப்படி பண்ணின..?? அப்புறம் ஏன் ஃபீல் பண்ற..?? இனிமே இப்படிலாம் பேசாத அசோக்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!”

அழுது விடும் குரலில் சொன்ன திவ்யா, அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவனுடைய கையை இறுக்கி கட்டிக் கொண்டாள். அசோக்குக்கு உள்ளத்தில் எழுந்த உணர்சிக் கொந்தளிப்பை அடக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘நீ என்ன வேணுன்னேவா அப்படி பண்ணின..??’ என்ற திவ்யாவின் குரல் திரும்ப திரும்ப அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அசோக்கிற்கு இப்போது தன்மீதே ஒருவித வெறுப்பு வந்தது. ‘ச்சே.. என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் இவள்..? அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டேனே..? நட்பின் மூலம் உருவாகியிருந்த இவளது நம்பிக்கையை.. எனது காதலுக்கு திருட்டுத்தனமாக பயன்படுத்திக் கொள்வது என்ன நியாயம்..? என்னுடைய காதல் எனக்கு பெரிதாக இருக்கலாம்..!! ஆனால்..அவள் விரும்பி தேடுகிற வாழ்க்கையை.. இடையில் புகுந்து கெடுக்க.. எனக்கு என்ன உரிமை இருக்கிறது..? ச்சே.. தவறு செய்துவிட்டேன்.. எப்படியாவது இந்த தவறை சரி செய்தாக வேண்டும்..!! அந்த திவாகர் திரும்ப வந்தால்தான் என் மனதில் இருந்து இந்த குற்ற உணர்வு விலகும்..!! வருவானா..?’

அசோக் இப்போது ஒரு கையால் திவ்யாவின் மோவாயை மெல்ல பற்றி, அவளது முகத்தை நிமிர்த்தினான். தெளிவான ஒரு பார்வை பார்த்தான். நம்பிக்கை கொப்பளிக்கும் குரலில் சொன்னான்.

“கவலைப்படாத திவ்யா.. அவர் கண்டிப்பா வருவாரு..!!”

அசோக் அவ்வளவு நம்பிக்கையாக சொல்ல, இப்போது திவ்யாவின் முகமும் அவ்வளவு நேர சோர்வு மறைந்து, மலர்ச்சிக்கு போனது..!!

அத்தியாயம் 14

ஒரு இரண்டு நாட்கள் ஆகியிருக்கும். அசோக் தன் ஆபீசில் இருந்தான். நேரம் மாலை ஐந்து மணியை நெருங்கியிருந்தது. யாருக்கோ மெயில் டைப் செய்து கொண்டிருந்தவனை, அவனுடைய சீனியர் மேனேஜர் சுந்தர் இன்டர்காமில் அழைத்தார். ‘இவர் எதுக்கு இந்த நேரத்தில் தன்னை அழைக்கிறார்..?’ அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!! சிஸ்டத்தை லாக் செய்துவிட்டு அசோக் எழுந்து சென்றான்.

உள்ளே நுழைந்தவனை அவர் வரவேற்று இருக்கையில் அமர சொன்னார். கொஞ்ச நேரத்திற்கு.. ‘வேலை எல்லாம் எப்படி போகிறது..?’, ‘வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா..?’ என்பது மாதிரி பொதுவான கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவர், அப்புறம் அவர் அழைத்து பேச காரணமான அந்த முக்கியமான விஷயத்துக்கு வந்தார்.

“ஜெர்மனில இருந்து ஒரு காண்ட்ராக்ட் சைன் ஆகப்போகுது அசோக்.. புது கிளையன்ட்..!! ராஜன் சொன்னாரா..?” (ராஜன் என்பது அசோக்கின் ப்ராஜக்ட் லீட்)

“ம்ம்.. சொல்லிட்டு இருந்தாரு சுந்தர்..”

“இட்ஸ் ஹ்யூஜ்.. யூரோப்ல நாம இவ்ளோ பெரிய ப்ராஜக்ட் எக்சிக்யூட் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!!”

“ம்ம்..” என்றான் அசோக், இதெல்லாம் எதுக்கு தன்னிடம் சொல்கிறார் என்ற குழப்பத்துடனே.

“இங்க இருந்து ஒரு மூணு பேரை அனுப்பனும் அசோக்.. இட்ஸ் லாங் டெர்ம்..!! அண்ட்… வெரி வெரி டிமாண்டிங் ஸ்கில்ஸ் அண்ட் ஹார்ட் வொர்க் ரெக்வயர்ட்..!! ராஜன் உன்னை ரெகமன்ட் பண்ணினாரு.. நீ என்ன சொல்ற..?”

“ஓ..!!”

அசோக்கிற்கு இப்போது எல்லாம் தெளிவானது. அதே நேரம் பயங்கர ஆச்சரியமாகவும் இருந்தது. லாங் டெர்ம் என்றால்.. இவர் சொல்வதை வைத்து பார்த்தால்.. குறைந்தது மூன்று வருடங்கள்..!! ஜெர்மனி சென்று, கிளையன்ட் கம்பெனியில் வேலை பார்த்து.. அவர்கள் விரும்பிய ப்ராஜக்டை ஸ்மூத்தாக முடித்துக் கொடுக்கும் வேலை..!! எக்கச்சக்கமாய் சம்பாதிக்கும் வாய்ப்பு..!! இந்த மாதிரி ஒரு வாய்ப்புக்காக இங்கு வேலை பார்க்கும் அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கம்பெனியில் இவனை விட சீனியர் ப்ரோக்ராமர்கள் எல்லாம் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால்.. அவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு அசோக்கிடம் அந்த வாய்ப்பு தேடி வந்ததுதான், அவனது ஆச்சரியத்துக்கு காரணம். கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. ஆனால்.. சந்தோஷம் கொள்ள முடியவில்லை. காரணம்.. அந்த மூன்று வருடங்களில்.. வருடத்திற்கு ஒரு முறைதான் இந்தியா வர இயலும்.. வருடத்திற்கு ஒரு முறைதான் திவ்யாவை பார்க்க இயலும்..!!

“என்ன அசோக்.. எதுவும் சொல்லாம உக்காந்திருக்குற..?” அசோக்கின் யோசனையை சுந்தர் கலைத்தார்.

“ஆ..ஆங்.. இட்ஸ் சர்ப்ரைஸிங்.. யு நோ..!! நா..நான் எக்ஸ்பெக்ட் பண்ணல..!!”

“ஹாஹா..!! சர்ப்ரைஸ்..?? ம்ம்ம்ம்.. ஸ்வீட் சர்ப்ரைஸ்தான..??” அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே ,

‘என்னை பந்தாட பிறந்தவளே..
இதயம் ரெண்டாக பிளந்தவளே’

அசோக்கின் செல்போன் அலறியது. அசோக் அவசரமாக பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு எடுத்து பார்த்தான். திவ்யாதான் அழைத்தாள். ‘இவள் எதற்கு இந்த நேரத்தில் கால் செய்கிறாள்..?’ என்று அசோக் புருவத்தை சுருக்கி ஓரிரு வினாடிகள் யோசித்தான். அப்புறம் காலை கட் செய்துவிட்டு சுந்தரின் முகத்தை ஏறிட்டான். அவர் புன்னகை மாறாத முகத்துடன் கேட்டார்.

“ம்ம்.. சொல்லு அசோக்.. ஸ்வீட் சர்ப்ரைஸ்தான..??”

“எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சுந்தர்.. ஆக்சுவலி.. ஐ ஆம்..”

என்று அவன் இழுத்துக்கொண்டிருக்க, மீண்டும் ஸ்ரீநிவாஸ் பாடினார். மீண்டும் திவ்யாதான்..!! இப்போது அந்த சுந்தர் ஒரு மாதிரி அவஸ்தையாக பெருமூச்சு விட்டார். மீண்டும் காலை கட் செய்ய முயன்ற அசோக்கை தடுத்தார்.

“இட்ஸ் ஓகே அசோக்.. ஏதாவது முக்கியமான காலா இருக்கப் போகுது.. வெளில போய் அட்டன்ட் பண்ணு..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. ஐ’ம் டன்..!! ஒன்னும் அவசரமில்ல.. பொறுமையா யோசிச்சு சொல்லு..!! உன் பாஸ்போர்ட்டை அட்மின்ல கொடுத்திடு.. அவங்க விஸா ப்ராசஸ் பண்ணட்டும்.. மொதல்ல விஸா வரட்டும்.. அப்புறம் பாத்துக்கலாம்.. சரியா..??” படபடவென சொன்னவர், கட்டை உயரலை உயர்த்தி காட்ட,

“தேங்க்ஸ் சுந்தர்..!!”

என்றுவிட்டு அசோக் அவருடைய அறையை விட்டு வெளியே வந்தான். கதறிக்கொண்டிருந்த செல்போனின் பிக்கப் பட்டனை அழுத்தி, அதன் பதற்றத்தை நிறுத்தினான். காதில் வைத்துகொண்டவன் சற்றே எரிச்சலான குரலில்தான் கேட்டான்.

“என்ன திவ்யா..?”

“அவர்கிட்ட இருந்து மெயில் வந்திருக்குடா..!!”

அடுத்த முனையில் திவ்யா உற்சாகமாக கத்தினாள். உடனே அசோக்கின் மனதை ஒரு இனம்புரியாத சோகம் வந்து கவ்விக் கொண்டது. அதே நேரம் இத்தனை நாள் அவனை வாட்டி வதைத்த குற்ற உணர்ச்சி, இனிமேல் இருக்கப்போவதில்லை என்ற நிம்மதியும், அவன் மனதில் பரவியதை அவனால் உணர முடிந்தது.

இனி திவ்யா தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வைத்து, எந்த விபரீத விளையாட்டும் விளையாடக் கூடாது என்று முடிவெடுத்தான். முடிந்த அளவுக்கு திவ்யாவின் காதலுக்கும், அவளது நல்வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான். குரலில் ஒரு புத்துணர்ச்சியை வரவழைத்துக்கொண்டு திவ்யாவிடம் பேசினான்.

“வாவ்..!! தேட்ஸ் கிரேட்..!! ம்ம்ம்… எ..என்ன சொல்றார்..?”

“நான் லவ் பண்ணாட்டாலும் அவர் என்னை லவ் பண்ணிட்டேதான் இருப்பாராம்.. அவரால என்னை மறக்கவே முடியாதாம்.. பிரிஞ்சு போயிடலாம்னுதான் முடிவு பண்ணினாராம்.. ஆனா முடியலையாம்..!! ‘ஒரு வாரமா ஒழுங்கா சாப்பிடலை.. தூங்கலை.. உன் நெனைப்பாவே இருக்குன்’னு.. ஒரே பொலம்பல்..!! உருகி உருகி ஒரு கவிதை வேற எழுதி அனுப்பிருக்காரு..!! பாவம் அசோக்.. அவரை நாம ரொம்ப கஷ்டப் படுத்திட்டோம்னு நெனைக்கிறேன்..!!”

“ம்ம்.. கஷ்டப்படாம எதுவும் கெடைக்காது திவ்யா..!! அப்புறம்.. வேற என்ன சொன்னார்..? ”

“இன்னைக்கு நைட்டு ஆன்லைன் வர்றாராம்.. நான் கண்டிப்பா சேட் பண்ண வரணும்னு சொல்லிருக்கார்..!!”

“ம்ம்.. குட்.. கோ அஹெட்.. போய் சேட் பண்ணு..”

“ஓகேடா..!! அப்புறம்.. நான் இன்னொன்னு நெனச்சேன்..”

“என்ன..?”

“இனிமேலும் அவர்கிட்ட எதையும் மறைக்க வேணாம்னு தோணுது அசோக்.. நானும் அவரை லவ் பண்றேன்னு சொல்லிடுறேன்.. சரியா..?” திவ்யா ஆர்வமாக கேட்க, அசோக் அவசரமாக தடுத்தான்.

“ஹேய் ஹேய்.. வெயிட்..!! வேணாம் வேணாம்.. இப்போ எதுவும் சொல்லாத..!!”

“ஏண்டா..?” திவ்யாவின் குரலில் ஒரு ஏமாற்றம்.

“வெறும் ஆன்லைன்ல அவர் சொன்னதை மட்டும் நம்பி எந்த முடிவுக்கும் வந்துட வேணாம் திவ்யா..!! அவரை பத்தி.. அவரோட நிஜ வாழ்க்கை பத்தி.. இன்னும் நல்லா தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் உன் லவ்வை சொல்லலாம்..!!”

“ஓ..!! ஓகே.. அதுவும் கரெக்ட்தான்..!! ம்ம்.. ஆனா.. இன்னைக்கு அவர் ஆன்லைன் வர்றப்போ.. என்னோட முடிவு என்னன்னு கேட்டா.. நான் என்ன சொல்றது..?”

“நல்ல கேள்வி..!! ம்ம்ம்ம்…. சரி… நீ என்ன பண்றேன்னா.. ‘இப்போதைக்கு.. நாம ரெண்டு பேரும் கொஞ்ச நாள் பேசலாம்.. பழகலாம்.. ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா தெரிஞ்சுக்கலாம்.. காதலை பத்தி அப்புறமா டிஸைட் பண்ணிக்கலாம்..’ அப்டின்னு புடிகொடுக்காமவே சொல்லு..!!” அசோக் அவ்வாறு சொன்னதும், அடுத்த முனையில் திவ்யாவுக்கு ஒருவித திருப்தி ஏற்பட்டது.

“வாவ்.. கலக்குறடா அசோக்..!! லவ் அட்வைசர்னா நீதான் லவ் அட்வைசர்..!! இப்படித்தான் இருக்கணும்..!! ம்ம்.. நல்லாருக்கு இந்த டீல்.. அவரும் ஒத்துப்பார்னு நெனைக்கிறேன்..!!”

“கண்டிப்பா ஒத்துப்பார்..!! அப்புறம்.. இன்னொரு விஷயம் திவ்யா.. ”

“என்ன..?”

“நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ..”

“ம்ம்.. சொல்லு..”

“சப்போஸ்.. அவர் உன்மேல லவ் ஃபீலிங்க்சொட ஏதாவது பேசினாரு.. உருகுனாரு.. ரொமாண்டிக்காலாம் ஏதாவது உளர்னாருன்னு வச்சுக்கோ.. ப்ளீஸ் டோன்ட் என்கரேஜ் ஹிம்..!! உடனே வேற டாபிக் மாத்திடு.. இல்லனா வேற ஏதாவது பேசுங்கன்னு நேராவே சொல்லிடு..”

“ம்ம்.. ஓகே..!! ஆனா.. ஏன் அந்த மாதிரி சொல்ற..?”

“காரணம் இருக்கு.. அவர் உன்னை புகழ ஆரம்பிச்சா.. உனக்கு கால் தரையில நிக்காது..!! கால் தரையில நிக்கலைன்னா.. மூளை வேலை செய்யாம போயிடும்.. அதான் சொன்னேன்..!!”

“வெவ்வவ்வவ்வே .!! போடா.. நான் ஒன்னும் அப்டிலாம் கெடயாது..!!”

“நான் வெளையாட்டுக்கு சொல்லல திவ்யா.. சீரியஸா சொல்றேன்..!! இனிமே அவர்கிட்ட பேசுறப்போ ரொம்ப தெளிவா இரு.. உன்னைப் பத்தி அதிக டீடெயில் அவருக்கு கொடுக்காத.. அவரைப் பத்தி நெறைய தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு..!! அவர் எந்த மாதிரி ஆள்னு தெரிஞ்சுக்குறது நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.. அந்த மாதிரி கேள்வியா கேளு.. அதே நேரம் அவருக்கு சந்தேகம் வராத மாதிரி கேளு..!! சரியா..? ”

“ம்ம்.. சரிடா..!!”

சில வினாடிகள் அமைதியாக இருந்த அசோக், அப்புறம் குரலை மிகவும் இறுக்கமாக்கிக்கொண்டு சொன்னான்.

“திவ்யா..”

“ம்ம்..”

“திஸ் இஸ் நாட் எ கேம்.. திஸ் இஸ் யுவர் லைஃப்..!! யு காட் தேட்..?”

“ம்ம்..”

“வெளையாட்டுத்தனமா இருக்காத திவ்யா.. திஸ் இஸ் வெரி வெரி சீரியஸ்..!! நீ ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கணும்.. புரியுதா..?”

“ம்ம்.. புரியுதுடா..!!” இப்போது திவ்யாவின் குரலிலும் ஒருவித சீரியஸ்னஸ் தென்பட்டது.

அத்தியாயம் 15

அன்று இரவு உணவுக்காக அசோக் வீட்டிற்கு வந்ததுமே, திவ்யா அவனை தன் அறைக்கு தனியாக அழைத்து சென்றாள். தனது மெயில் பாக்ஸ் திறந்து, தானும் திவாகரும் பேசிக்கொண்ட சேட் ஹிஸ்டரியை அவனுக்கு எடுத்து காட்டினாள். அசோக்கும் மிக கவனமாக அதை பார்வையிட்டான். திவாகர் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை, தன் மனதுக்குள் ஏற்றிக் கொண்ட அசோக், திவ்யா பேசியவற்றை மட்டும் சற்றே உன்னிப்பாக நோக்கினான். திருத்தங்கள் சொன்னான். வேறு எந்த மாதிரி பேசியிருக்கலாம் என்று ஆலோசனை கூறினான். திவ்யாவும் அசோக் கூறியவற்றை கூர்மையாக கவனித்துக் கொண்டாள்.

அப்புறம் அது தினசரி வாடிக்கை ஆனது..!! திவாகரும் திவ்யாவும் தினசரி சேட் செய்துகொள்வதும், அதை அன்றோ அடுத்த நாளோ.. அசோக்கும், திவ்யாவும் பேசி விவாதிப்பதும் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வாகிப் போனது..!! திவாகரை பற்றி நிறைய விஷயங்கள் அவர்களுக்கு தெரிய வந்தன. தெரிந்த விஷயங்கள் திருப்திகரமானதாகவே இருந்தன..!! திவ்யா சின்ன சின்ன விஷயங்களை கூட அசோக்கிடம் கேட்டு அனுமதி வாங்கிக் கொண்டே செய்தாள். அசோக்தான் தன் காதலை காக்க வந்த கண்கண்ட தெய்வமாக கருதினாள். சில நேரங்களில் இப்படி கூட நடக்கும்..

“டேய்.. நீ கொஞ்ச நேரம் இவர்கிட்ட பேசிட்டு இரேன்.. நான் இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துர்றேன்..”

என்று திவாகரிடம் பாதி சேட் செய்து கொண்டிருக்கையிலேயே, லேப்டாப்பை தூக்கி அசோக்கிடம் கொடுத்துவிட்டு திவ்யா வெளியே சென்றுவிடுவாள். சென்றவள் ஒரு பத்து நிமிடங்கள் கழித்துதான், ஹார்லிக்சோ காம்ப்ளானோ கலந்து, இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு வருவாள். அசோக்கும் அதுவரை.. திவாகர் காதல் மயக்கத்தில் உளறுவதற்கெல்லாம் ‘உம்’ கொட்டிக்கொண்டிருப்பான். அப்புறம் லேப்டாப்பை திவ்யாவிடம் கொடுத்துவிட்டு, அவள் கையில் இருக்கும் கப்பை வாங்கி உறிஞ்சுவான்.

திவ்யாவுக்கு காதல் ஆலோசகனாக இருப்பது அசோக்கிற்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது. தன் இதய வீட்டில் பூத்திருப்பவள், இன்னொருவனை கட்டிக்கொள்ள விரும்புவதும், அதற்கு அவனே ஆலோசனை சொல்லும் சூழ்நிலையாகிப் போனதும்.. அவன் கண் முன்னரே அவர்கள் காதல் மொழி பேசிக்கொள்வதும்.. அனுபவித்துப் பார்த்தாலே அந்த வலி புரியும்..!!

மனதெல்லாம் தாளமுடியாத அளவிற்கு வலி எடுத்தாலும், கலங்கிப்போகாத அளவிற்கு தெளிவாகவே இருந்தது..!! திவ்யாவின் சந்தோஷமான வாழ்க்கையை தவிர தனது காதலுக்கு வேறென்ன உயரிய லட்சியம் இருந்துவிட முடியும் என்ற தெளிவுதான் அது..!! அவள் சந்தோஷமாக இருந்தால்.. அதை விட தன் காதலுக்கு வேறென்ன வேண்டும் என்று தோன்றியது..!!

இந்த மாதிரியே ஒரு இரண்டு வாரங்கள் சென்றன..!! அப்போது ஒரு நாள்..

அசோக்கை பார்ப்பதற்காக அவன் அறைக்கு திவ்யா வந்தாள். அசோக் அப்போது அங்கே இல்லை. செல்வாதான் வெற்று மார்புடன் தரையில் மல்லாக்க படுத்தவாறு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். திவ்யாவை பார்த்ததும், ‘வா..வாம்மா திவ்யா.. வா..’ என்று உளறியவர், பதறியடித்து உள்ளே ஓடிபோய் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே வெளியே வந்தார். திவ்யா பார்வையை வேறு பக்கமாய் திருப்பிக் கொண்டு கேட்டாள்.

“அசோக் இல்லையா செல்வாண்ணா..?”

“கீழ்தான்மா போனான்.. நீ பாக்கலையா..?”

“இல்லையே.. நான் பாக்கலை..”

“ஹவுஸ் ஓனர் கூப்பிட்டு அனுப்பிச்சிருந்தாரு.. பாத்துட்டு வர்றேன்னு போனான்..!! அவன் நம்பருக்கு கால் பண்ணி பாரு..!!”

திவ்யா தன் செல்போன் எடுத்து அசோக் நம்பரை தேடி டயல் செய்தாள்..!! காதில் வைத்துக் கொண்டாள்..!!

‘என்னை பந்தாட பிறந்தவளே..
இதயம் ரெண்டாக பிளந்தவளே’

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments