நெஞ்சோடு கலந்திடு – பகுதி 15
“ம்ம்ம்..?? நான் செலக்ட் பண்ணின ட்ரஸ் அவருக்கு புடிச்சிருந்ததாம்.. நான் சஜஸ்ட் பண்ணின மாதிரி மேக்கப்லாம் போட்டுட்டு போனாள்ல.. அதுவும் அவரை ரொம்ப அட்ராக்ட் பண்ணிச்சாம்..” அசோக் சொல்லிக் கொண்டிருக்க,
“ஹாஹாஹாஹாஹாஹா..” சித்ரா பெரிதாக சிரித்தாள்.
“எதுக்கு சிரிக்கிற இப்போ..?” அசோக் புரியாமல் கேட்டான்.
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“இல்ல.. நீ அவளை பிக்கப் பண்ணலாம்னு பார்த்த.. அவ உன்னை மேக்கப் மேன் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாளடா தம்பி..?? அதை நெனச்சா அக்காவால தாங்க முடியலை..!!”
கிண்டலாக சொன்ன சித்ரா, அசோக்கின் முதுகில் முகத்தை வைத்து, ‘ம்ம்.. ம்ம்.. ம்ம்..’ என்று போலியாக அழுது காட்ட.. அசோக் நொந்து போனான்..!! வெறுப்புடன் கியரை மாற்றி, ஆக்சிலரேட்டரை சர்ரென முறுக்கினான்.
இந்த மாதிரி.. இரண்டு பெண்களின் இம்சைகளும்.. மேலும் இரண்டு, மூன்று வாரங்கள் தொடர்ந்தன. திவாகரும் திவ்யாவும் வாரம் ஒருமுறை நேரில் சந்தித்துக் கொண்டார்கள். தினமும் ஆன்லைனிலும், போனிலும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேசியதை திவ்யா அசோக்கிடம் கொட்டி தீர்ப்பாள். அசோக்கும் எரிச்சலுடன் எல்லாம் கேட்டுக் கொள்வான். எல்லாவற்றையும் அப்படியே சொல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அந்த விஷயங்களை அக்காவிடம்.. அவளுடைய துருவல் தாங்காமல் அசோக் ஒப்பிப்பான்..!! சித்ராவும் எல்லாவற்றையும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு. அப்புறம் அவனையே நோகடிப்பாள்..!!
இப்போதெல்லாம் அசோக் அடிக்கடி மதுவின் துணையை நாட ஆரம்பித்துவிட்டான். சில நேரங்களில்.. ஆபீசில் இருந்து கிளம்புகையிலேயே.. அருகில் இருக்கும் ஒரு பார் சென்று.. ஆல்கஹாலை உள்ளே ஊற்றிவிட்டு.. அப்புறமாய் வீட்டுக்கு செல்வான்..!! அன்றும் அப்படித்தான்.. ஆபீசில் இருந்து கிளம்பியவன்.. பைக்கை அந்த பார் முன்பாக பார்க் செய்தான். உள்ளே நுழைந்தான்..!!
கொஞ்சம் காஸ்ட்லியான பார் அது..!! நீல நிறத்தில் மந்தமான வெளிச்சம் அந்த இடம் முழுவதையும் நனைத்திருந்தது..!! ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் இருந்து.. ஒரு ஆங்கிலப் பாடல் மெலிதாக கசிந்து கொண்டிருந்தது..!! கருப்பு நிற சோபாக்கள்.. அவற்றின் மீது கையில் கோப்பையுடன் ஆட்கள்..!! நாற்பத்திரண்டு அங்குல எல்.ஸி.டி-யில்.. சச்சின் திரும்ப திரும்ப கிளீன் போல்ட் ஆகிக்கொண்டிருந்தார்.. ரீப்ளே..!!
மேட்ச் பார்க்க வசதியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அசோக் அமர்ந்து கொண்டான். மெனு கார்ட் நீட்டிய பேரரிடம்.. அதை வாங்காமலே..
“ப்ளண்டர்ஸ் ப்ரைட்.. டூ லார்ஜ்.. ஒன் ப்ரஞ்ச் ப்ரை..!!”
என்று ஆர்டர் செய்தான். பத்தே நிமிடங்களில் ஆர்டர் செய்தவைகள் எல்லாம் வந்து சேர்ந்தது. மேட்ச் பார்த்துக்கொண்டே.. விஸ்கியை உள்ளே விட்டுக் கொண்டே.. விரல் சிப்சை எடுத்து கடித்துக்கொண்டே..!!
ஒரு அரை மணி நேரம்..!! பில் வந்தது. கிரெடிட் கார்ட் எடுத்து கொடுத்தான். வாங்கி சென்ற பேரர், இரண்டு நிமிடங்கள் கழித்து திரும்ப வந்து, பில் புத்தகத்தை டேபிளில் வைத்து சென்றான். அசோக் அதை திறந்து பார்த்தான். சற்றே எரிச்சலானான். உள்ளே கார்ட் ஸ்வைப் செய்யப்பட்ட ஸ்லிப் இருந்தது. ஆனால் அதில் கையொப்பம் இடுவதற்கு பேனா வைக்க மறந்திருந்தான். அசோக் அந்த பேரரின் முதுகை பார்த்து கத்தினான்.
“ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..!! பேனா..!!” அவன் கத்திக் கொண்டிருக்கும்போதே,
“Wherever you go.. don’t forget your pen..!!”
என்ற அந்த குரல் அவனுக்கு மிக அருகே ஒலித்தது. அதே நேரம் பேனாவுடன் அந்தக்கை அவன் முன்னே நீண்டது..!! பேனாவை வாங்கிக்கொண்டே, அசோக் நிமிர்ந்து பார்த்தான். அங்கே அவன் நின்றிருந்தான். திவாகர்..!!!! மொழுமொழு முகத்துடன்.. உதட்டில் சிரிப்புடன்.. கண்ணுக்கு குளிர் கண்ணாடியுடன்..!!
அசோக் அதிர்ந்து போனான். திவாகரை சந்திப்போம் என்று அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்தில்..!! இவனுக்குத்தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று திவ்யா சொல்லியிருக்கிறாளே..? இவன் என்ன செய்கிறான் இங்கே..? மிகவும் குழம்பிப் போனான்.
ஆனால் திவாகர் மிகவும் கேஷுவலாக இருந்தான். அவனுக்கு இவன்தான் அசோக் என்று தெரியாதே..? இயல்பாக அசோக்கிற்கு எதிரே வந்து அமர்ந்தான். இவனை பார்த்து ஸ்னேஹமாய் புன்னகைத்தான். திவாகரையே கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் குனிந்து கையொப்பம் இட்டான்.
அதற்குள் பேரர் வந்து சேர்ந்திருக்க, திவாகர் அவனிடம் மிகவும் உரிமையாக பேசினான். அடிக்கடி இந்த பாருக்கு வருவான் போலிருக்கிறது. ஸ்டைலாக.. ஆங்கிலத்தில் பேசி.. சில மதுவகைகளை ஆர்டர் செய்தான். பேரர் சென்றதும் அசோக் திவாகரிடம் பேனாவை நீட்டினான். அவன் வாங்கி பாக்கெட்டில் செருகிக் கொண்டான். அப்புறமும் அசோக் அவனையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க,
“தேங்க்ஸ்லாம் சொல்ல மாட்டீங்களா..?” திவாகருடைய குரலில் ஒருவித கேலியும், கடுப்பும் சரி விகிதத்தில் கலந்திருந்தது.
“ஸாரிங்க.. தேங்க்ஸ்..!!” என்றான் அசோக்.
“ம்ம்.. ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?”
“இல்ல.. சொல்லுங்க..”
“வெளில போறப்போ.. பாக்கெட்ல எப்போவும் ஒரு பேனா வச்சுக்குறது ரொம்ப நல்ல பழக்கம்.. அதை ஏன் யாருமே பண்ண மாட்டேன்றீங்கன்னு எனக்கு தெரியலை..!!”
“ம்ம்.. நீங்க சொல்றது சரிதான்.. இனிமே அதை ஃபால்லோ பண்ண ட்ரை பண்றேன்..”
“ஹாஹா..!! நான் என் மனசுல பட்ட ஒரு நல்ல விஷயத்தை சொன்னேன்.. டோன்ட் மிஸ்டேக் மீ..!!” என்று திவாகர் அழகாக சிரிக்க,
“இல்லீங்க.. நான் தப்பா எடுத்துக்கலை..”
அசோக் அமைதியாக சொன்னான். திவாகர் ஒரு சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் இதழ்கள் விரித்து புன்னகைத்தான். படக்கென்று அவனது வலது கையை அசோக்கின் முன்பு நீட்டி..
“பை தி வே.. ஐ’ஆம் திவாகர்..!!” என்றான். அசோக்கும் அவனுடைய கையை பிடித்து குலுக்கினான்.
“ஐ’ஆம் அரவிந்த்..” என்று பொய்யான பெயரை சொன்னான்.
அத்தியாயம் 18
கோயில் குளங்கள் ஒரு ஊருக்கு தனி அழகை கொடுக்கத்தான் செய்கின்றன. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று முன்னோர்கள் சொன்னதனாலோ என்னவோ, புளியங்குள மக்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பே தங்கள் கிராமத்தில் அழகான ஒரு கோயிலை கட்டி முடித்திருந்தார்கள். ஊர்க் கண்மாய்க்கு முன்பாக அனாமத்தாக கிடந்த இடத்தை சுத்தம் செய்து, அவ்விடத்தில் ஆதி பரமேஸ்வரி அம்மனுக்கு ஆலயம் எழுப்பிவிட்டார்கள். ஆண்டு தவறாமல் பொங்கல் வைத்து, விழா எடுத்து, அம்மனை மனம் குளிர செய்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பாக கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் கூட நடத்தினார்கள்.
பங்குனி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டுவார்கள். அடுத்த வாரம் செவ்வாயும், புதனும் திருவிழா..!! திருவிழாவுக்கு முந்தைய அந்த ஒரு வாரமும் ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு என்று ஊர் கோலாகலப்படும். மைக்செட்டு, சீரியல் அலங்காரம், வீதியெங்கும் குழல் விளக்குகள் என.. ஊரே ஒலியும், ஒளியுமாய் இருக்கும்..!! திருவிழா நடக்கும் அந்த இரண்டு நாட்களும், கொண்டாட்டம் இன்னும் உச்சத்தை எட்டும்..!! செவ்வாய் இரவு கரகாட்டமோ, வில்லுப்பாட்டோ, பாட்டு கச்சேரியோ வைத்துக் கொள்வார்கள். புதன் இரவு வள்ளி திருமண நாடகம் என்பது எழுதப்படாத ஒரு விதி..!!
அவர்கள் எடுக்கும் விழா, அம்மனை மகிழ்விக்க உதவியதோ இல்லையோ.. ஊரை ஒன்றுபடுத்த பெரிதும் உதவியது..!! மீசை நரைத்த பெருசுகளும், அரும்பு மீசை சிறுசுகளும், கைகோர்த்துக்கொண்டு அம்மன் காரியம் செய்வார்கள்..!! எவ்வளவுதான் ஒருவொருக்கொருவர் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும்.. தாளாத மனக்கசப்பு இருந்தாலும்.. ஊர்க்காரியம் என்றால் ஒன்று கூடி விடுவார்கள் புளியங்குள மக்கள்..!!
“வாங்கப்பு.. வந்து பந்தக்காலை ஊன்டுங்க.. நீங்க ஊன்டுறதுதான வழக்கம்..?”
என்று ஒரு ஊர்ப்பெரியவர், தனக்கு பிடிக்காத இன்னொரு ஊர்ப்பெரியவரை முகம் ஏறிட்டு பாராமல் அழைப்பார். அந்த இன்னொரு பெரியவரும்..
“அட இதுல என்ன இருக்குப்பா.. யார் ஊன்டுனா என்ன..? சரி வா.. ரெண்டு பெரும் சேர்ந்தே ஊன்டுவோம்..” என்பார்.
இருவரும் சேர்ந்து பந்தல் கால் நடுகையில், அவர்களுடைய கைகள் லேசாக உரசிக் கொள்ளும். நெடு நாட்களுக்கு அப்புறம், ஒருவர் முகத்தை இன்னொருவர் ஏறிட்டு பார்த்துக் கொள்வார்கள். இருவருடைய இதழ்களிலும் ஒரு சிநேகப் புன்னகை படரும். பந்தல் கால் நட்டுவிட்டு, இருவரும் ஒன்றாக.. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, ‘தாயே..!!!’ என்று ஆதி பரமேஸ்வரி அம்மனை வணங்குவார்கள். வெறுப்பையும், மனக்கசப்பையும் தூக்கி எறிந்துவிட்டு, அம்மனின் முன்பு அரிவாள் மீசை முளைத்த குழந்தைகளாய் நிற்பார்கள்..!!
அசோக், திவ்யா, சித்ரா, கார்த்திக்.. இவர்களுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஒரு வருடம் கூட ஊர் திருவிழா தடைப்படவில்லை. எல்லா வருடமும், அதற்கு முந்தைய வருடத்தை விட இன்னும் கோலாகலமாகவே கொண்டாடப்பட்டது. இவர்களும் அந்த சமயத்தில் எங்கிருந்தாலும், ஒருமுறை கூட திருவிழாவை காண தவறியதில்லை. கல்லூரியோ, அலுவலகமோ.. விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு விரைந்து விடுவார்கள்.
அது.. திருவிழாவுக்கு முந்தைய வாரத்தின் வெள்ளிக்கிழமை இரவு..!! பயணத்துக்கு தேவையான வேலைகளை சித்ரா கவனித்துக் கொண்டிருந்தாள். முதலில் அன்று இரவே ஊருக்கு பயணிக்கத்தான் திட்டமிட்டிருந்தார்கள். இரவு ட்ரெயினில் வெயிட்டிங் லிஸ்ட் மூவ் ஆகாததால்.. அடுத்த நாள் காலை பஸ்ஸில் பிரயாணம் செல்லலாம் என்று திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள்.
கார்த்திக்குக்கு பிரயாணத்தின்போது கொறிக்க ஏதாவது நொறுக்குத்தீனி வேண்டும். நேற்றே வெல்ல சீடை பொரித்தெடுத்து ஒரு பொட்டலம் கட்டியாயிற்று. இன்று வீட்டில் மிச்சமிருந்த முந்திரி பருப்புகளை சித்ரா பொன்னிறத்தில் வறுத்தெடுத்து, ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள் அடைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஏதோ ஞாபகம் வந்தவளாய், கையிலிருந்த சல்லடை கரண்டியுடனே சமையலறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலை நோக்கி நடந்தாள்.
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :