நெஞ்சோடு கலந்திடு – பகுதி 21

“எனக்கு புரியுதுடா..!! ஆனா.. அவர் உண்மைலேயே அந்த மாதிரி ஒரு மென்டாலிட்டில இருக்குறதுக்கு ஒரு பர்சன்ட் சான்ஸ் இருந்தாகூட… அது தேவையில்லாத ரிஸ்க்தான..? சப்போஸ்.. அவர் முட்டாள்த்தனமா ஏதாவது பண்ணிருந்தா.. என்ன ஆகி இருக்கும்னு கொஞ்சம் நெனச்சு பாரு..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ம்ம்ம்..”

“அதில்லாம.. அவர் பெருசா என்ன கேட்டுட்டாரு..? ஜஸ்ட் ஒரு ‘ஐ லவ் யூ’ சொல்ல சொன்னாரு.. அவ்ளோதான..? அதான் பட்டுன்னு சொல்லிட்டேன்..!!”

‘ஜஸ்ட் ஒரு ஐ லவ் யூ’ என்று கேஷுவலாக திவ்யா கூறிய வார்த்தைகள், அசோக்கின் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. ‘எவ்வளவு எளிதாக சொல்கிறாள் இவள்..? ஜஸ்ட் ஒரு ஐ லவ் யூவாம்..? மூன்றே மூன்று வார்த்தைகள்தானே என்று மிகவும் சீப்பாக நினைத்துவிட்டாள் போலிருக்கிறது..!! ஆனால்.. அந்த மூன்று வார்த்தைகளை.. தங்கள் உள்ளத்தில் இருப்பவர்களின் முகத்தை பார்த்து உச்சரிக்க முடியாமல்.. நெஞ்சுக்குள்ளேயே போட்டு மூடி வைத்து.. தினம் தினம் எத்தனை உயிர்கள் வேதனையில் வெந்து சாகின்றன என்பதை இவள் அறிந்திருக்க மாட்டாள்..!! நானும் அத்தகைய ஒரு பரிதாப ஜீவன்தானே..??’

“என்னடா.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..?”

“ம்ம்ம்… எனக்கென்னவோ.. உன்னை ஐ லவ் யூ சொல்ல வைக்கத்தான் இந்த ட்ராமான்னு தோணுது..!!”

“ஹாஹா..!! அப்படியே இருந்துட்டு போகட்டும்.. அதனால என்ன..?? நான் அவரைத்தான லவ் பண்றேன்..? அவர்கிட்ட ஐ லவ் யூ சொன்னதுல என்ன தப்பு..??”

“சொன்னதுல தப்பு இல்ல.. ஆனா.. அவரை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம அவசரப்பட்டு சொல்லிட்டியோன்னு.. எனக்கு ஒரு சின்ன உறுத்தல்..!!”

“என்ன அசோக் நீ.. இன்னும் அவரைப்பத்தி என்ன தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு..?”

“ஆரம்பத்துலயும் அப்டித்தான் நெனச்சிருந்தோம்..? அப்புறம்தான் திடீர்னு அந்த..”

“ட்ரிங்க்ஸ் மேட்டர் சொல்றியா..?”

“ம்ம்..”

“நேத்தே அதைப்பத்தி அவர்கிட்ட பேசிட்டேன் அசோக்..!! பிசினஸ் சம்பந்தமா நெறைய பேரை மீட் பண்றதால.. அவங்ககிட்ட இருந்து இந்தப்பழக்கம் வந்துடுச்சுன்னு புலம்பினார்..!! மேரேஜுக்கு அப்புறம் சுத்தமா ஸ்டாப் பண்ணிடுறதா ப்ராமிஸ் பண்ணிருக்கார்..!!”

“ஓஹோ..?? நீ என்ன சொன்ன..??”

“நான் என்ன சொல்வேன்..?? எனக்கு அது போதும்னு சொல்லிட்டேன்..!! கரெக்ட்தான..??” திவ்யா அப்பாவியாய் கேட்க,

“ஹ்ஹா.. என்ன கேட்ட..?” அசோக் சற்றே ஏளனமாக கேட்டான்.

“நான் அவர்கிட்ட அப்படி சொன்னது கரெக்ட்தானான்னு கேட்டேன்..??”

“ம்ம்ம்.. இனிமே நீ அந்த மாதிரிலாம் எங்கிட்ட ஒப்பீனியன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை திவ்யா..!!”

“ஏன் அப்படி சொல்ற..?”

“ஆமாம்.. அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே.. இனிமே ஒப்பீனியன் கேட்க என்ன இருக்கு..??”

அசோக் சிரித்துக்கொண்டே சொல்ல, திவ்யாவின் முகம் பட்டென சுருங்கிப்போனது. சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்தவள், பின்பு குரல் தழதழக்க கேட்டாள்.

“உ..உனக்கு இன்னும் என் மேல கோவம் போகலைல..?”

அசோக்கிற்கு இப்போது திவ்யாவை பார்க்க பாவமாக இருந்தது. குரலில் மென்மையை குழைத்துக்கொண்டு சொன்னான்.

“ஏய்.. ச்சீய்.. அப்படிலாம் இல்ல…!! எ..எனக்கு.. எனக்கு உன் மேல எப்போவும் கோவமே வராது திவ்யா..!!”

“அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுற..? எனக்கு என்ன ஆனாலும் பரவாலைன்ற மாதிரி..!!”

“லூசு.. நான் அந்த அர்த்தத்துல சொல்லலை..!!”

“அப்புறம்..??”

“அவரைப்பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் உன் காதலை சொல்ற மாதிரிதான நம்ம ப்ளான்..?? அதனாலதான நான் உனக்கு ஐடியாலாம் கொடுத்துட்டு இருந்தேன்..?? இப்போதான் நீ உன் காதலை அவர்கிட்ட சொல்லியாச்சே..?? இனிமே நான் உனக்கு தேவைப்பட மாட்டேன்னு சொல்ல வந்தேன்..!!”

“இப்படிலாம் பேசாதடா..!! நீ எனக்கு எப்போவும் வேணும் அசோக்..!! என் லைப் ஃபுல்லா.. என்னை கைட் பண்ண.. நீ எப்போவும் வேணும்..!!”

“ஹாஹா.. அது எப்படி முடியும் திவ்யா..? எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான..?”

“ஏன்.. அப்புறம் என்ன..?”

“அப்புறம்.. திவாகரை நீ மேரேஜ் பண்ணிக்கிட்டா.. எந்த விஷயமா இருந்தாலும் அவரை கேட்டுத்தான நீ முடிவு பண்ண வேண்டியதா இருக்கும்..?” அசோக் சொல்லி முடிக்கும் முன்பே,

“இல்லை.. நான் உன்னை கேட்டுத்தான் முடிவு பண்ணுவேன்..!!” திவ்யா பட்டென சொன்னாள். அவளுடைய பதிலில் அசோக் சற்றே திணறிப் போனான்.

“தி..திவ்யா.. நீ..”

“ஆமாம் அசோக்.. எனக்கு திவாகரை விட உன் மேலதான் நம்பிக்கை அதிகம்..!! நீ எது செஞ்சாலும் என் நல்லதுக்குத்தான் செய்வேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! நான் திவாகரை கல்யாணம் செய்துகிட்டாலும் சரி.. லைஃப்ல எந்த முக்கியமான முடிவு எடுக்குறதா இருந்தாலும்.. நான் உன்னை கேட்டுத்தான் எடுப்பேன்..!!”

அசோக் இப்போது அப்படியே நெகிழ்ந்து போனான். ‘இவளுக்குத்தான் என் மீது எவ்வளவு நம்பிக்கை..? இந்த நம்பிக்கைதான் எவ்வளவு உன்னதமான விஷயம்..? இந்தமாதிரி ஒரு நம்பிக்கையுடனான நட்பு கிடைக்க நான் எவ்வாளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..? இவள் என் காதல் மனைவியாய் அமையாமல் போனால்தான் என்ன..? காலம் முழுவதும் இந்த நட்பு ஒன்றே போதுமே எனக்கு..?’

அசோக் இப்போது திவ்யாவை பார்த்து ஸ்னேஹமாக புன்னகைத்தான். தனது வலது கையால் அவளது தோளை சுற்றி வளைத்து, தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளுடைய கருவிழிகளை தனது கண்களால் கூர்மையாக பார்த்தவாறே கேட்டான்.

“என்னை அவ்வளவு பிடிக்குமா..?”

“ம்ம்ம்..”

“நான் அவ்வளவு முக்கியமா உனக்கு..?”

“ம்ம்ம்..”

“நான் சொன்னா அதை அப்படியே செய்வியா..?”

“செய்வேன்..!!”

“என்ன வேணாலும்..??”

“என்ன வேணாலும்..!!” திவ்யா உறுதி மிக்க குரலில் சொல்ல,

‘என்னை கொஞ்சம் லவ் பண்ணேன்..’ என சொல்லலாமா என்று அசோக்கிற்கு தோன்றியது. அப்புறம் பட்டென அதை மாற்றிக் கொண்டு,

“உன் அண்ணன் பாக்கெட்ல இருந்து ஒரு தம் சுட்டுட்டு வாயேன்..” என்றான் குறும்பாக.

“போடா.. லூசு..!!! சீரியஸா பேசிட்டு இருக்குறப்போ.. காமடி பண்ற..?”

“காமடி இல்ல திவ்யா.. இப்போதைக்கு அதுதான் என் இம்மீடியட் தேவை..!!”

“ஏன்.. காலைல வரை வெயிட் பண்ண முடியாதோ..?”

“ம்ஹூம்..!! லங்க்ஸ்லாம் கொலை பட்டினில கெடக்குடி.. ப்ளீஸ்..!!”

“ஐயோ.. அவன் ஷர்ட் பாக்கெட்ல வச்சிருப்பான் அசோக்.. எப்படி சுடுறது..? கஷ்டம்..!!”

“இல்ல.. ஷர்ட்டை கழட்டி தலைக்கு பக்கத்துல வச்சுட்டு.. பனியனோடதான் படுத்திருக்கான்.. நைஸா சுட்டுட்டு வந்துடு..!!”

“அதை நீயே போய் எடுத்துக்கலாம்ல..?”

“எடுத்துக்கலாம்.. ஆனா.. எடுக்குறப்போ உன் அண்ணன் எந்திரிச்சுட்டான்னா..? தம்மாதுண்டு தம்முக்காக அம்மாம் பெரிய ரிஸ்க் எடுக்கனுமான்னு பாக்குறேன்..?”

“அந்த தம்மாதுண்டு தம்முக்காகத்தான.. இப்படி நடுராத்திரில நாய் மாதிரி நாக்கை தொங்கப்போட்டு அலையுற..? பேச்சுக்கு மட்டும் கொறைச்சல் இல்ல..!! உனக்கு ரிஸ்க்னா.. அப்புறம் நான் மட்டும் எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்..??”

“என்ன திவ்யா இப்படி சொல்லிட்ட..? நீதான சுடுறதுல சூப்பர் ஸ்டார்..? ஏழு வயசா இருக்குறப்போவே.. வீட்டுல எதை எங்க ஒளிச்சு வச்சிருந்தாலும் நேக்கா தட்டிட்டு வந்துடுவியே..? ரிஸ்க் எடுக்குறதுலாம் உனக்கு ரஸ்க் சாப்புடுறது மாதிரிதான..?”

“போடா.. லூசு..!!!” திவ்யாவுடைய குரலில் கோவத்தை விட, பெருமிதமே எக்கச்சக்கமாய் கொப்பளித்தது.

“ப்ளீஸ் திவ்யா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..”

“ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ.. கெஞ்சாத..!! இரு.. எடுத்துட்டு வர்றேன்..!!”

“தேங்க்ஸ்டி..!!”

திவ்யா உள்ளே நடந்து சென்றாள். அசோக் அங்கேயே அமைதியாக காத்திருக்க, ஓரிரு நிமிடங்களிலேயே திவ்யா திரும்ப வந்தாள். தூரத்தில் வருகையிலேயே கட்டை விரலை உயர்த்தி காட்டி, வெற்றி என்பது போல புன்னகைத்தாள். அசோக்கை நெருங்கியவள், அண்ணனிடம் சுட்ட சிகரெட்டை நீட்டிக்கொண்டே..

“பார்த்து பத்த வையி.. இதையும் தூக்கி வெளில போட்டுடாத..!!”

“அப்போ ஏதோ தூக்க கலக்கம்.. போட்டுட்டேன்.. இப்போதான் தெளிவா இருக்கோம்ல..?”

“சரி சரி.. நீ தம்மடி.. நான் ஆளுங்க வராங்களான்னு பாத்துக்குறேன்..!!”

திவ்யா பாதையின் நடுவே சென்று நின்றுகொண்டு, தலையை இருபுறமும் திருப்பி திருப்பி பார்த்தவாறு காவல் காக்க, அசோக் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்..!!

அத்தியாயம் 23

அடுத்த வாரம் புதன் கிழமை..!! இரவு ஏழரை இருக்கும்..!! அசோக் அந்த பாருக்குள் நுழைந்தான். அவன் அவ்வப்போது செல்லும்.. அவனது ஆபீசுக்கு அருகாமையில் இருக்கும் அதே பார்..!! வழக்கம் போலவே உள்ளே மங்கலான வெளிச்சம்.. கூரையில் இருந்து வழிந்த மந்தமான நீல நிற வெளிச்சம்..!! வழக்கம் போலவே அதிகமும் இல்லாமல், குறைவும் இல்லாமல் கூட்டம்..!! ஆனால்.. வழக்கத்துக்கு மாறாக இன்று ஸ்பீக்கர்களில் தமிழ்ப்பாடல் மிதமான வால்யூமில் கசிந்து கொண்டிருந்தது..!!

‘கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே’

உள்ளே நுழைந்த அசோக், அமர்வதற்கு இடம் தேடி.. அந்த மங்கலான வெளிச்சத்தில் அங்குமிங்கும் பார்வையை வீசிக்கொண்டிருந்தான். டிவி பார்ப்பதற்கு வசதியாக.. ஏதாவது காலி இடம் இருக்குமா என அவனது கண்கள் தேடிக்கொண்டிருந்தன. அப்போதுதான் அந்தக்குரல் அவனுக்கு பின்னால் இருந்து உரக்க ஒலித்தது..!!

“ஹலோ.. மிஸ்டர் அரவிந்த்..!!”

குரல் கேட்டு திரும்பி பார்த்த அசோக், பக்கென அதிர்ந்து போனான்..!! அங்கே.. கால்களை அகலமாக விரித்தவாறு.. சோபாவில் ஹாயாக சாய்ந்தவாறு.. வாயிலிருந்து வழியும் புகையுடன்.. அமர்ந்திருந்தான்.. திவாகர்..!!!! எதிரே கிடந்த சோபா காலியாக இருக்க, அவன் முன்பிருந்த டேபிளில் விஸ்கி கிளாசும், தந்தூரி சிக்கனும்..!! அசோக் திவாகரை சுத்தமாக அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை..!! அவனையே திகைப்பாக பார்த்தான்..!! ‘இவன் இங்கே என்ன செய்கிறான்..? சிகரெட் பழக்கம் கூட இருக்கிறதா இவனுக்கு..?’ அசோக் அப்படி திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

“இங்க எடம் இருக்கு பாருங்க அரவிந்த்.. இங்க வாங்க..!!”

திவாகர் மீண்டும் அழைத்தான். அசோக் இப்போது தடுமாறினான். ‘செல்லலாமா.. வேண்டாமா..’ என ஒரு சில வினாடிகள் தயங்கியவன், திவாகர் திரும்ப திரும்ப அழைக்க.. வேறு வழியில்லாமல் அவனை நோக்கி நடந்தான். அசோக் திவாகருக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொள்ள, திவாகர் இப்போது தன் இதழ்களை அகலமாக விரித்து புன்னகைத்தான்.

“அப்புறம் மிஸ்டர் அரவிந்த்.. எப்படி இருக்கீங்க..?”

“எ..என் பேரு அ..அரவிந்த் இல்ல..” அசோக் தடுமாற்றமாக சொன்னான்.

“அப்புறம்..?”

“அசோக்..”

“அசோக்கா..?? அன்னைக்கு அரவிந்த்னுதான சொன்னீங்க..??”

“இ..இல்லையே.. அ..அசோக்னுதான் சொல்லிருப்பேன்..!!” அசோக் திணறலாய் சமாளிக்க முயல, திவாகர் சிரித்தான்

“ஹாஹா.. சரி விடுங்க..!! I know..!!” .

“What do you know..?”

“I know.. I know everything..!! ஹாஹா..!!”

“இல்ல.. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலை..!!” அசோக் சொல்ல, திவாகர் இப்போது பட்டென ஒருமைக்கு தாவினான்.

“இங்க பாரு.. அன்னைக்கு நீ அரவிந்த்னுதான் சொன்ன.. எனக்கு நல்லா தெரியும்..!! நீ ஏன் அப்படி சொன்னன்னு கூட எனக்கு தெரியும்..!!”

“ஏ..ஏன்..?”

“அப்போத்தான நான் ஏதாவது உளறுவேன்.. அதை அப்படியே போய் திவ்யாட்ட போட்டுக் கொடுக்கலாம்..!! என்ன அசோக்.. கரெக்டா..??”

திவாகர் சொல்லிவிட்டு தனது வெண்பற்கள் தெரியுமாறு அழகாக புன்னகைத்தான். அசோக் திகைத்தான்.

“இ..இல்ல திவாகர்.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..!!” அசோக் பதற்றமாக சொல்ல,

“ரிலாக்ஸ் அசோக்.. ரிலாக்ஸ்..!! நான் உன்னை இப்போ எதுவுமே சொல்லலையே..? ஏன் பதர்ற..? ம்ம்ம்ம்…??? சரி.. அந்த மேட்டரை விடு..!!” என்ற திவாகர், அந்தப்பக்கமாக திரும்பி,

“டேய்.. வேங்கடேசா..” என்று பேரரை அழைத்தான். உடனே அந்த வெங்கடேசன் இவர்கள் டேபிளை நோக்கி ஓடி வந்தான்.

“சொல்லுங்க ஸார்..” என்றான் பணிவாக.

“ஸாருக்கு என்ன வேணும்னு கேட்டு குடு..!!” திவாகர் அசோக்கை நோக்கி கைநீட்டினான்.

“ம்ம்.. சொல்லுங்க ஸார்..” பேரர் அசோக்கிடம் திரும்பினான்.

“ரெண்டு லார்ஜ்..” அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

“ப்ளண்டர்ஸ் ப்ரைட்.. ஒரு ஸ்ப்ரைட்.. ஒரு ஃப்ரஞ்ச் ஃப்ரை..!! கரெக்டா அசோக்..? ம்ம்ம்.. போய்.. அதை கொண்டு வா வெங்கடேசா..!!” திவாகர் அசோக்குக்கு பதிலாய் ஆர்டர் செய்துவிட்டு, அப்புறம் அசோக்கிடம் திரும்பி இளித்தான்.

“உங்களுக்கு..??” என்று அவனிடம் கேட்ட பேரரிடம்,

“எனக்கு போதும்..!!” என்றான்.

பேரர் ஆர்டர் குறித்துக்கொண்டு நகர, திவாகர் அசோக்கிடம் திரும்பினான். கொஞ்ச நேரம் அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தவன், பின்னர் மிக கேஷுவலான குரலில் சொன்னான்.

“ஆறு மணில இருந்து இங்கயே உக்காந்துட்டு இருக்கேன் அசோக்.. அல்ரெடி அஞ்சு லார்ஜ் ஆகிடுச்சு..!!”

“ஓ..!!”

“உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. தெரியுமா..?” திவாகர் சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

“எனக்காகவா..?”

“ம்ம்ம்..!!! நீ வெட்னஸ்டே வெட்னஸ்டேதான் இந்த பாருக்கு வருவியாமே.. வெங்கடேசன் சொன்னான்..!!”

“ஆ..ஆமாம்..!!”

“அதான் ஆறு மணில இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! ஆமாம்.. அது என்ன வெட்னஸ்டே கணக்கு..?”

“அ..அது.. அன்னைக்குத்தான் எனக்கு.. நைட் ஆன்சைட் கால் இருக்காது..!! சீக்கிரம் ஆபீஸ்ல இருந்து கிளம்பிடுவேன்..!!”

“ஓஹோ..!! குட்..!! ம்ம்ம்ம்… சாஃப்ட்வேர் இஞ்சினியர்.. இல்ல..??”

“ஆமாம்..!!”

அசோக் சொல்ல, திவாகர் அவன் முகத்தையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்தான். அப்புறம் தன் தலையை லேசாக கவிழ்த்துக் கொண்டான். கருவிழிகளை மேலே உயர்த்தி அசோக்கையே ஒரு கழுகுப்பார்வை பார்த்தான். குரலை இறுக்கமாக மாற்றிக்கொண்டு, கிசுகிசுப்பாக சொன்னான்.

“ஆனா.. பண்றதெல்லாம் சல்லித்தனமான வேலை..??”

“எ..என்ன சொன்னீங்க..?” அசோக் தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பமுடியாமல் கேட்க,

“நத்திங்.. நத்திங்..!!” திவாகர் வெண்பற்கள் தெரிய சிரித்தான்.

அசோக்கிற்கு அந்த சூழ்நிலை இப்போது ஏனோ அவஸ்தையாக தோன்றியது. திவாகரின் செய்கைகள் அவன் மனதில் லேசாக கிலியை கிளப்பிவிட்டன. ‘எந்த மாதிரியான மனநிலையில் இவன் இருக்கிறான்..? கோபமாக இருக்கிறானா.. இல்லை.. இயல்பாக இருக்கிறானா..? புரியவில்லையே..?? இவன் அழைப்பை ஏற்று இங்கு வந்து அமர்ந்தது தவறோ..? இதனால் ஏதும் பிரச்னை வெடிக்க வாய்ப்புள்ளதோ..? நைஸாக நழுவியிருக்க வேண்டுமோ..? கூடிய சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி விடவேண்டும்..!!’

அதற்குள் பேரர் ஆர்டர் செய்தவைகளை கொண்டு வந்து டேபிளில் பரப்பினான். அசோக் பொறுமையாக விஸ்கியையும், ஸ்ப்ரைட்டையும் ஊற்றி மிக்ஸ் செய்தான். ‘சியர்ஸ்..!!’ என்றவாறு திவாகர் நீட்டிய க்ளாஸுடன், தனது க்ளாஸை இடித்துக் கொண்டான். நிதானமாக விஸ்கியை உறிஞ்ச ஆரம்பித்தான்.

திவாகருக்கு இப்போது தலை நிலைகொள்ளாமல் தள்ளாடியது. கருவிழிகள் கடிகார முள் போல சுழன்றன. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க, ஏழெட்டு குச்சிகள் வீணாக்கினான். அவன் போதையின் உச்சத்தில் இருக்கிறான் என்று அசோக்கிற்கு தெளிவாக தெரிந்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த திவாகர் அப்புறம் மெல்ல ஆரம்பித்தான்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments