♥பருவத்திரு மலரே-19♥

ராசு ஊருக்குப் போய்விட்டான். பள்ளி முடிந்து வந்த பாக்யா… உடை மாற்றிக்கொண்டு முத்துவைத் தேடிப்போனாள்.
அவர்களது களத்தில்.. காய்ந்த செங்கற்களை ‘ மால் ‘ வைத்துக் கொண்டிருந்தாள் முத்து.
பாக்யாவைப் பார்த்துச் சிரித்த முத்து. . ”பள்ளிக்கொடம் போய்ட்டு வந்தாச்சா…?” என வெற்றிலைச் சாறு படிந்த வாயுடன்
கேட்டாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

சிரித்த பாக்யா ” அது பள்ளிக்கொடம் இல்ல. . பள்ளிக்கூடம்..” என்றாள்.
”அது என்ன கொடமோ.. படிச்சிருந்தா வாய்ல வரும். .”

”ஆமாடி… அதனாலதான் நீ.. காலவாய்ல வேலை செய்ற..” என இடைபுகுந்தாள் வேலுவின் அம்மா.
அவர்கள் களமும் பக்கத்தில்தான் இருந்தது.
பாக்யாவைப் பார்த்து..”நீயாவது நாலெழுத்து படிச்சு…நல்லா வாழக்கத்துக்கோ.. எங்கள மாதிரி. .. இப்படி மண்ணுலயும். .. சேத்துலயும். . கஷ்டப்படாத..” என்றாள்.
சிரித்தாள் பாக்யா.
முத்து.. மளமளவென.. மால் வைக்கத்தொடங்கினாள்.

வேலுவின் அம்மா ”என்ற பையனும்தான் இருக்கான்.. சோத்துக்கு தண்டமா.. படிடானு அவன பள்ளிக்கொடம் அனுப்பி வெச்சா… திருட்டுத்தனமா.. சினிமாக்கு போயிர்றான். .! என்ன பண்றது அவன் தலைல படிப்பு ஏறல..! இப்ப பாரு.. ஒழுக்கமா வேலைக்கும் போகாம ஊரச்சுத்திட்டு திரியறான். ஒரு பத்தாவது வரைக்கும் படிச்சிருந்தான்னாக்கூட… எங்காவது நல்ல வேலைக்கு தாட்டிருக்கலாம்..”எனச் சொல்ல..
முத்து ” ஆமா.. ஒரு கலக்டர் வேலைக்காவது தாட்டிருக்கலாம் ” எனக் கிண்டல் செய்தாள்.

முத்துவுக்கு உதவிசெய்வது போல.. அருகில் போய்..கேட்டாள் பாக்யா.
”டி வி பாக்க போலாமா..?”
முத்து ரகசியக் குரலில் ”எங்க.?” எனக்கேட்டாள்.
”காளீஸ்க்கா வீட்டுக்கு. .”
” எங்கப்பன் இருக்கானே…” முத்துவுக்கு அப்பா என்றாலே பயம். குடிகார அப்பா. வாரமானால் அவள் வாங்கும் சம்பளப் பணத்தை.. ஒரு பைசா எடுக்காமல் அவரிடம் கொடுத்து விட வேண்டும்.

பாக்யா.. ”காட்டுக்கு போறமாதிரி போய்…குறுக்கு வழில போயிரலாம்..” என்றாள்.
மெதுவாகத் தலையசைத்தாள் முத்து. ” ம்.. நீ வேனா முன்னாடி போய் நில்லு.! கடைசி லைனுதான். . இத வெச்சுட்டு வந்தர்றேன்.”
” ம்…சரி வா..” என ரோட்டுப்பக்கமாக நடந்தாள் பாக்யா.

சொன்னது போலவே சிறிது நேரத்தில் வந்துவிட்டாள் முத்து.
” சீக்கிரம் நட.. என் தம்பி பாத்துட்டான்..” என்றான்.
”பாத்தா என்ன. . உங்கப்பங்கிட்ட சொல்லிருவானா..?”
” ஆமா. .! அவனும் வர்றேம்பான்..”
”வந்தா வரட்டுமே..”
” ஐயோ. .. அவன் வந்தா எங்கப்பனுக்கு தெரிஞ்சிரும்.. அப்றம் நான் தொலஞ்சேன்..”
”ஏன்தான் உங்கப்பனுக்கு இப்படி பயந்து சாகறியோ..?”
”உனக்கென்ன தெரியும். . எங்கப்பனப் பத்தி. உங்கப்பனாட்ட.. எங்கப்பன் ஒன்னும்.. கேனயன் இல்ல. ”
” ஏன்டி எங்கப்பன் கேனயனா.?”
” ஆமா.. உன்னையெல்லாம் அடிக்கறதே இல்ல..! எங்கப்பன் அப்படியா.. என் தோள உறிச்சு.. காக்காய்க்கு போட்றுவான்..”
வேக வேகமாக நடந்து… காட்டுப்பக்கமாகப் போய்.. ஊருக்குள் நுழைந்தனர்.

காளீஸ்வரி அக்கா. . சிரித்த முகத்துடன் வரவேற்றாள். அவள் வீட்டில் முன்பே… இரண்டு பையன்கள் உட்கார்ந்திருந்தனர். டிவியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தனர்.
முத்து அவர்களுடன் பேசினாள்.

வீட்டிற்குள் அழைத்து உட்கார வைத்து… அவளோடு பேசின காளீஸ்வரி… அவன்களிடமிருந்து ரிமோட்டை வாங்கி… படம் போட்டு விட்டாள்.

என்ன காரணத்தாலோ… காளீஸை மிகவும் பிடித்தது.. பாக்யாவுக்கு.
காளீஸ்வரி ஒன்றும். . அழகி இல்லை. ஆனால் நல்ல முக லட்சணம் இருந்தது. குள்ளமான பெண்தான். அவளது பேச்சும். . சிரிப்புமே.. பாக்யாவைப் பெரிதும் கவர்ந்தது.
காபி வைத்துக் கொடுத்தாள் காளீஸ். கொரிப்பதற்கும்.. மிக்சர் கொடுத்தாள்.

ஏழரைமணிவரை.. டி வி பார்த்துக்கொண்டிருந்துவிட்டு. .அஙகிருந்து.. கிளம்பினர்.
வாசலில் உட்கார்ந்திருந்த இரண்டு பேரில் ஒருத்தன்.
”அட.. ஏன் கெளம்பிட்டிங்க..?” எனக்கேட்டான்.
” ம்.. நேரமாகிப் போச்சு. .” என்றாள் முத்து.
”போயிருவீங்களா.. இருட்ல..?”
” ஓ..!”
”எதுக்கும் பாத்துப்போங்க… நாய்.. நரி ஏதாவது வரும்… பயந்துடப்போகுது… பாவம்..” எனக்கிண்டல் செய்தான்.
அதுக்கு முத்து ”நீ கூட வந்தா. அதுக பயப்படாது.. வா..” என்றாள்.
”ஆனா நா பயந்துருவேனே..”
”க்கும். .”

காளீஸ் ”டேய் சும்மாருங்கடா.. புள்ளைங்கள பயமுறுத்தாதிங்க. நீங்க போங்கப்பா… பாத்து போங்க..” எனச் சொல்ல…
இருவரும் விடைபெற்று நடந்தனர்.

சிறிது முன்பாகத்தான் கடை.
அவர்கள் கடையைக் கடந்த போது… பின்னாலிருந்து கூப்பிட்டான் கதிர்.
”அக்கா…”
திரும்பிப் பார்த்தாள் ”நீ எங்கடா வந்த. .?”
”வேலு அண்ணங்கூட வந்தேன்..”
முத்து ”என்ன வாங்கறீங்க..?”
கதிர் ”தெரில.. அந்தண்ணாதான் வாங்குது..”
”அப்படியே எனக்கு ஒரு பாககு வாங்கச்சொல்லுடா..” என்றாள் முத்து.
பாக்யா ”எதுக்குடி.. இத்தன பாக்கு..?”
” போடி..! வாங்கச் சொல்லுடா..அவன..”

பாக்யாவுக்கு சாக்லெட்டும்.. முத்துவுக்கு பாக்கும் வாங்கிவந்து கொடுத்தான் வேலு.
நால்வரும் பேசிச்சிரித்தவாறு வீடு போனபோது..
பாக்யாவின் பெற்றோர் சண்டை பிடித்துக்கொண்டிருந்தனர்.

.சண்டைக்கு என்ன காரணம் எனத்தெரியவில்லை. அவள் கேட்டபோது அம்மாவும் சொல்லவில்லை.
அப்பா.. அம்மா இருவரையும் அதட்டிப் பார்த்தாள்.
அவர்களது வாய்ச் சண்டை ஓய்வதாக இல்லை.
வெறுத்துப்போன பாக்யா. . வெளியே போய்.. மண் குட்டின்மேல் உட்கார்ந்து கொண்டாள்.
முத்துவும். . வேலுவும் அவளுடன் வந்து சேர்ந்துகொண்டனர்.
வேலுவுடன் ஜாடை.. மாடையாகப் பேசி வம்பிழுப்பது அவளுக்கு. . சற்று ஆறுதலாக இருந்தது..!!

அடுத்த நாள்…!
பாக்யா பள்ளி விட்டு வீடு போனபோது.. அவள் அம்மா. . மண்டை உடைந்து. .. கட்டுப்போட்டுப் படுத்திருந்தாள்.
”என்னாச்சுமா..?” எனக்கேட்டாள்.
”உங்கப்பன் அடிச்சிட்டான்..” என முணகலாகச் சொன்னாள். அம்மாவின் கை கூட வீங்கியிருந்தது.
” எப்ப. ..?”
” காலைல…”
” நா ஸ்கூல் போனப்பறமா..?”
” ம்…!”

சாப்பாட்டுச் சட்டியைத் திறந்து பார்த்தாள். நிறையவே சாப்பாடு இருந்தது.
ஒரு தட்டில் போட்டுக்கொண்டு… சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாள்.

அம்மா ” ஏன்டி.. நா காலைல இருந்தே.. சாப்பிடாம இருக்கேன்.. அதப்பத்தி ஒரு வார்த்தை கேட்டியா..?” என்றாள்.
”ஹா..ஹா..” என வாய்விட்டுச் சிரித்தாள். ”சரி.. சோறு திண்ணியா..?”
”ஒரு மனுஷி இப்படி அடிபட்டு கெடக்கறாளே… பாவம்.. என்னாச்சு.. ஏதாச்சுனு.. அக்கறையா..நாலுவார்த்தை பேசாம… நீ பாட்டுக்கு போட்டு திண்ணுட்டுருக்க… ஹ்ம்.. இதே என் பையனா இருந்தா… இப்படி இருப்பானா..?”
” எங்க உன் பையன் இன்னும் வல்லியா..?”
”காணம்லே… இனி வர்றானா இல்லியானு வேற தெரியல..”
” ஏன். ..?”
” அவன ஆத்தா அங்கயே இருக்கச்சொல்லுதுனு போனவாரமே சொன்னான்.”
” இருந்துக்கட்டும்… இப்ப என்ன அவனுக்கு. .?”
” நீ வந்ததனாலதான.. அவனும் வந்தான்…?”
” என் பேச்ச எடுக்காத..! எங்க ரெண்டு பேர அந்தக்கெழவிகிட்ட சிக்கவெச்சுட்டு வந்து… இங்க நீங்க ரெண்டுபேரும்… ஜாலியா இருக்கறது..? வாரத்துல நாலு சினிமா..!”
” பன்னி..! உனக்கு அது மட்டும்தான் தெரியுதா…? நா இப்படி மண்டை ஒடஞ்சு கட்டுப்போட்டு கெடக்கறேனே..அது தெரியலியா..? ஏதோ நீங்க இருக்கறதுனாலதான் சண்டை கம்மியாகிருக்கு…” எனச் சிரித்துக்கொண்டே சொன்னாள் அம்மா.
” தூ..! எப்படி வெக்கமே இல்லாம சிரிக்கற..?” என்றாள்.
” பழகிப் போச்சுடி… பழகிப் போச்சு. .! அடிச்சவன் என்ன பண்ணான் தெரியுமா..? ஆஸ்பத்ரி கூட்டிட்டு போய் கட்டுப்போட்டுட்டு… அப்படியே ஒரு சினிமாக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்தான்.. உங்கப்பன்”
” வெளங்கிரும்..! இப்ப எங்க… உம்புருசன்…?”
” குட்டைக்கு மீன் புடிக்க போனாங்க…”
” வரட்டும் பேசிக்கறேன்…” என்றாள்.

சாப்பிட்டபின்.. உடைமாற்றிக்கொண்டு போய்..முத்துவை அழைத்துக் கொண்டு. .. டி வி பாக்கப் போனாள் பாக்யா.
இன்றும்… அந்தப் பையன்கள் இருந்தனர்..! அதன்பிறகு டி வி பார்ப்பது என்பது… தினந்தோறும் நடக்கும் ஒரு சம்பவமாகிப் போனது.!

ஒரு வாரம் கழித்து. ..!
டி வி பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது சொன்னாள் முத்து.
”காளீஸ் அக்காளுக்கும். . அந்த.. பரத் பையனுக்கும் ஒரு இது..”
” எது..?” பாக்யா.
” அதான். .. தொடுப்பு..”
அதிர்ச்சியடைந்தாள் பாக்யா ”ஏய்.. என்னடி சொல்ற..?”
”அஃக்கா.. ரொம்ப நாளா.. இது நடக்குது..! எப்பப்பாரு அவன் இங்கயேதான் இருப்பான்…”
”ஏய். . அந்தக்காக்கு கல்யாணமாகி பசங்கல்லாம் கூட இருக்காங்க… அந்தண்ணாக்கு தெரிஞ்சா என்னாகும். .?”
”ஒன்னும் ஆகாது.. அந்தண்ணாக்கு எல்லாமே தெரியும். .”
”அடிப்பாவி.. அபாண்டமா பேசாதடி..”
”ஏ… இது அபாண்டம் இல்ல. .! ஊரு பூரா தெரியும். . நீ யாரவேனா கேட்டுப்பாரு…”
”நெஜமாவாடி சொல்ற…?”
”என்ற வெள்ளி மேல சத்தியமா. ..” என்றாள் முத்து.

‘வெள்ளி. ‘ முத்துவின் பால்ய வயது நண்பன் மட்டுமல்ல… அவளது மானசீகக் காதலன்.
முத்து சிறுவயதில் வளர்ந்ததெல்லாம் பாட்டியிடம்தான். அப்போது அவள் சினேகிதனாக இருந்தவன்தான் வெள்ளிங்கிரி. அவனைப் பார்க்க இப்போதும். . மாதம் ஒரு முறையாவது பாட்டிவீட்டிற்குப் போய்விடுவாள் முத்து.
அப்படிப்பட்ட..’ வெள்ளி மேல் சத்தியம் ‘ என்றால் அதைச் சந்தேகிக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் பாக்யாவால்தான் அதை ஜீரனிக்க முடியவில்லை.
” என்னால நம்பவே முடியல..! அந்தக்காளா இப்படி..?”
” ஐய… அந்தக்காள என்னன்னு நெனச்ச..? லேசுப்பட்ட பொம்பளனு நெனைக்காத..! ‘ஆ..ஊ..’ ன்னா.. தற்கொலை பண்ணிக்குவேன்னு அந்தண்ணாவ மெரட்டுவாளாம். நெஜமாவே ஒரு தடவ மருந்து குடிச்சிட்டு. . ஆஸ்பத்ரி போய் நலலாகி வந்துருக்கு தெரியுமா?”
” ச்ச… ஜீரனிக்கவே முடில..! அவனோட வயசென்ன.. அந்தக்கா வயசென்ன…?”
முத்து சொன்ன விசயங்கள் எல்லாம் அவள் மனைதை வெகுவாக பாதித்தன..!
காரணம் இந்த சில தினங்களில்… பாக்யாவைப் பெரிதும் கவர்ந்திருந்தான் பரத்.
அவனா இப்படி. ..???

பாக்யா டி வி பார்க்கப் போவதையே விட்டு விட்டாள். சில நாட்கள் கழித்து. .. ஒரு நாள் மதிய நேரம்… பள்ளத்துக்குப் போனபோது.. வழியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த. . காளீஸ்வரியைப் பார்த்தாள்.
அவளே அழைக்க…. தவிர்க்க முடியாமல் அவளிடம் போனாள்.
” எப்படி பாக்யா இருக்க..?” என காளீஸ் கேட்டாள்.
சிரித்தாள் ”நல்லாருக்கேன்க்கா..”

”இன்னிக்கு ஸ்கூல் லீவா..?”
” ஆமாக்கா..”
”ஆமா ஏன் இப்பெல்லாம் டி வி பாக்க வர்றதே இல்ல. .?”
” எங்கப்பா திட்டுதுக்கா.. படிப்பு கெடுதுனு…”
” அப்படியா… அதுவும் சரிதான்.! உன்ன ஒன்னு கேக்கனும். .”
”என்னக்கா…?”
” இப்படி வா..” என கை பிடித்து மரநிழலுக்கு அழைத்துப் போனாள். முகம். . கழுத்தெல்லாம் முந்தாணையால் துடைத்தாள்.
”என்னைப் பத்தி தப்பா.. யாராவது உன்கிட்ட.. சொன்னாங்களா..? ” எனக் கேட்டாள்.காளீஸ்வரி…!!!

– வரும். ..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments