அசோக் காலிங் அசோக் – பகுதி 8
“ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ.. அவ ஏன் உன்னை லவ் பண்றா தெரியுமா..?”
“தெரியுமே.. நான் கொஞ்சம் ஹேண்ட்ஸமா..” நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சீனியர் எரிச்சலுடன் இடைமறித்தார்.
“ஜூனியர்.. இந்த மெசின்தான் நான் இப்போ கண்டுபிடிச்சேன்..!! கண்ணாடி இருபத்து நாலு வருஷத்துக்கு முன்னாடிலாம் கண்டு பிடிச்சுட்டாங்க..!!”
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“சரி.. வேற எதுக்கு என்னை லவ் பண்ணுனான்னு சொல்ற..?”
“ஏன்னா நீ ஒரு அப்பாவி.. அவ சொன்னதுக்குலாம் தலையை ஆட்டுவ.. அவ குணத்துக்கு தோதான ஆளுன்னு அவளுக்கு தெரியும்னு..”
“என்ன சொல்ற நீ..?”
“ம்ம்ம்ம்.. நீ எவ்ளோ அடிச்சாலும் தாங்குவன்னு அவளுக்கு தெரியும்.. அதான் உன்னை லவ் பண்றான்னு சொல்றேன்..!!”
“என்னய்யா ரொம்ப பயமுறுத்துற..?”
“பயமுறுத்தலை ஜூனியர்.. உன் லைஃப்ல வரப்போற கஷ்டத்தை சரி பண்ணிக்க.. இது ஒரு நல்ல சான்ஸ்..!! யூஸ் பண்ணிக்கோன்னு சொல்றேன்.. அவளை கழட்டிவிட்டுடுன்னு சொல்றேன்..!!”
“ம்ம்ம்ம்… சரி..!! எனக்கு கொஞ்சம் டைம் கொடு.. நான் கொஞ்சம் யோசிக்கணும்..”
“கொஞ்சம் என்ன.. நெறைய யோசி..!! எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோ.. ஆனா.. நாளைக்குள்ள நம்பிடு..!!” அவர் அந்த மாதிரி சொன்னது எனக்கு காமடியாக இருந்தது. சற்றே கிண்டலான குரலில் கேட்டேன்.
“ஏன் சீனியர்.. லேகா உன்னை அடிக்கிறப்போ.. நெறைய அடி உன் தலைலேயே விழுமோ..?”
“ஆமாம்.. ஏன் கேக்குற..?”
“இல்ல.. எஃபக்ட் தெரியுது..!! எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோன்ற.. அப்புறம் நாளைக்கே நம்பிடுன்ற..!! மூளைல முக்கியமான கேபிள்லாம் கட் ஆன எஃபக்ட்லையே பேசுற நீ..!!”
“ஐயோ ஜூனியர்.. நீதான் அவசரம் புரியாம பேசுற.. இன்னும் நாலு நாள்ல உனக்கு பேராப்பு வரப் போகுது..!! நீ சீக்கிரமா ஒரு முடிவுக்கு வரலை.. என் கதிதான் உனக்கும்..!!”
“ஆமாம்.. இது ஒண்ணை சொல்லிடுயா.. ‘பேராப்பு.. பேராப்பு..’ன்னு..!! சரி சரி விடு.. நான் நாளைக்கு என்னோட முடிவை சொல்றேன்..!!”
“ஓகே..!!”
கால் கட் செய்யப்பட்டதும், நான் படியிறங்கி என் ரூமுக்கு வந்தேன். ஜானி ‘பப்பரக்கா..!!’ என்று படுத்துக் கிடந்தான். தூக்கத்திலும் விடாமல் துடுப்பு போட்டுக் கொண்டிருந்தான். நான் அவனை கடந்து சென்று, என் ரூமுக்குள் நுழைந்து கொண்டேன். கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டேன்.
ராட்சசி என்று லேகாவை பற்றி சீனியர் சொன்ன மேட்டர்களே, ராட்டினம் போல மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தன. அவர் சொன்ன மாதிரி லேகாவை ஒரு அடங்காப்பிடாரியாக கற்பனை செய்து பார்க்கவே, மனம் மறுத்து மறியல் செய்தது. ஆனால்… அவர் சொன்னது மட்டும் உண்மையாக இருந்துவிட்டால்..???? நினைத்துப் பார்க்கவே உடம்பு பயத்தில் நடுங்கியது..!! சில்லிட்டுப் போன மாதிரி சிலிர்ப்பெழுந்து அடங்கியது..!! காலம் முழுதும் காட்டுத்தனமாய் அடி வாங்கவா அவளைக் கட்டிக் கொள்வது..??
அன்று இரவு லேகாவுடன் கடலை வறுக்கும்போதும், மனம் ஒன்றாமல்.. பட்டும் படாமல்.. கடலை கருகாமலே வறுத்தேன்..!!
அடுத்த நாள் லேகாவிடம் அவளுடைய கடந்தகால வாழ்க்கை பற்றி கேட்க நினைத்தேன். காலேஜ் முடிந்ததும், அவளை அழைத்துக் கொண்டு பீச் சென்றேன் (மொளகா பஜ்ஜி வாங்கி கொடுப்பா.. அஞ்சு மணிக்குலாம் போனா சூடா கிடைக்கும்..). ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடமாக தேடிப் பிடித்து (ஹலோ.. இந்த துப்புற வேலைலாம் வச்சுக்காதீங்க.. எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்..!!) நெருக்க்க்க்கமாக அமர்ந்து கொண்டோம். கொஞ்ச நேரம் பொதுவான கதைகள் பேசியவன் மெல்ல மேட்டருக்கு வந்தேன்.
“லேகா.. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்..”
“கேளு.. கிஸ் தவிர வேற என்ன வேணா கேளு..” அவள் கிண்டலான குரலில் சொல்ல,
“ஐயயே.. அதெல்லாம் வேணாம்…” என்று நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அவளோ பயங்கர டென்ஷன் ஆனாள்.
“என்னது.. ஐயயேவா..? என் கிஸ் உனக்கு ஐயயேவா..? அதுக்குள்ளே நான் சலிச்சு போயிட்டானா..?”
“ஹே.. நான் அப்படி சொல்லவே இல்லையே..?”
“இல்ல இல்ல.. நீ அப்படித்தான் சொன்ன..?”
“நான் எங்கே சொன்னேன்..? நீதான் கிஸ் தரமாட்டேன்னு சொன்ன..?”
“நான் தரமாட்டேன்னு சொன்னா.. நீ விட்டுடுவியா..?? பேசாத போ..!!”
அவள் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டதும் இல்லாமல் வேறுபக்கம் வேறு திருப்பிக் கொண்டாள். நான் தலையை சொறிந்தவாறு தேமே என்று அமர்ந்திருந்தேன். இது என்னடா வம்பா போச்சு..? நான் என்ன பேச நினைத்தேன்.. இவள் என்ன செய்கிறாள்..? ஒரு பேச்சுக்கு ஐயயே என்றது ஒரு குத்தமா..? இதுகளை எல்லாம் காதலித்து..?? ச்சை..!!! இன்னைக்கு மொளகா பஜ்ஜி அவ்வளவுதானா..?? ம்ஹூம்.. விடக்கூடாது..!! மெல்ல எனது கையை அவளது தொடையில் வைத்து அழுத்தினேன்.
“ஸாரிடி லேகாக்குட்டி..!!”
“ப்ச்.. ஒன்னும் வேணாம் போ..!!” அவள் என் கையை தட்டிவிட்டாள்.
“சரி.. உன் ஆசை எனக்கு புரியுது..!! கிஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டுட்ட..!! பரவால.. கிஸ் பண்ணிட்டு போ..!!” சொல்லிக்கொண்டே நான் என் உதடுகளை பிதுக்கி அவள் முகத்துக்கு முன் காட்ட, அவளோ என் உதட்டிலேயே பட்டென அறைந்தாள்.
“ஆசையைப் பாரு.. உன் கிஸ்க்காக இங்க யாரும் தவிச்சுப் போய் கெடக்கலை..!! சரி.. நீ என்ன சொல்ல வந்தேன்னு சொல்லு..!!”
“அதுவா..??? அ…அது…”
“ம்ம்ம்.. சொல்லு..!!”
“நீ உன் பழைய காலேஜை விட்டுட்டு ஏன் வந்த..?” நான் பட்டென கேட்டேன்.
“அதான் சொன்னேனே.. ராகிங் ப்ராப்ளம்னு..!!”
“நெஜமாவே ராகிங் ப்ராப்ளம்தானா..?” நான் இப்போது கேள்வியை கொஞ்சம் ஷார்ப்பாக்கினேன்.
“ஆ..ஆமாம்.. ஏன் கேக்குற..?” அவளுடைய பதிலில் இப்போது லேசான தடுமாற்றம்.
“இல்ல.. என் பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சேன்.. அந்த காலேஜ்ல அப்டிலாம் எதுவும் ப்ராப்ளம் இல்லைன்னு கேள்விப்பட்டேன்.. அதான்..!!”
இப்போது லேகா பட்டென அமைதியானாள். என் முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தவள், பின்பு தலையை குனிந்து கொண்டாள். அவளுடைய செய்கையை கண்டு நான் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய மூக்கு விசும்ப ஆரம்பித்தது. கண்ணீர் வராத கண்களை விரல்களால் துடைத்துக் கொண்டாள். அதற்கே நான் உருகிப் போனேன்.
“ஐயையோ.. என்ன லேகா குட்டி.. இதுக்கு போய் அழுவுற..? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டனா..?” கேட்டுக்கொண்டே நான் அவளுடைய கன்னத்தை பற்ற, அவள் என் கையை விலக்கினாள்.
“ப்ச்.. நீ தப்பாலாம் ஒன்னும் கேக்கலை..!! எனக்குத்தான் பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சு..!!”
“ப..பழசா..??? என்னது அது..???” நான் நடுங்கும் குரலில் கேட்டேன்.
“அ..அதை.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை..”
“பரவால்ல லேகா.. சொல்லு..!!”
“நீ எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டியே..?”
“ச்சேச்சே.. நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேண்டா.. சொல்லு..!!”
“எங்க காலேஜ்ல திவாகர்னு ஒரு பையன் இருந்தான் அசோக்..!!” அவள் ஒருமாதிரி சோகமான குரலிலேயே சொன்னாள்.
“சரி..!!” (அவன் மண்டைலதான் மாவுக்கட்டு போட வச்சியா..?)
“ஒண்ணா நம்பர் ரவுடி..!!”
“சரி..!!” (அப்போ நீதான் ரெண்டாம் நம்பரா..?)
“எனக்கும் அவனுக்கும் ஆகாது..!! போன வருஷம் என் பொறந்த நாளுக்கு அவன் என்ன பண்ணினான் தெரியுமா..?”
“என்ன பண்ணினான்..?”
“பர்த்டே கிஃப்டா.. எனக்கு ப்ராவும் ஜட்டியும் பார்சல் அனுப்பிட்டான்..!!”
“ஐயையோ..!! அப்புறம்..??” (அடப்பாவி சீனியர்.. இதை நீ சொல்லவே இல்லையே..?)
“நீயே சொல்லு.. எந்தப் பொண்ணுக்குத்தான் கோவம் வராது..?”
“ம்ம்.. வரும் வரும்..!!” (கோவத்துல நீ என்ன செஞ்ச.. அதை சொல்லு மொதல்ல..)
“அன்னைக்கு அவன் கம்ப்யூட்டர் லேப்ல இருந்தான்.. அவன்கிட்ட போய் ஏன் இப்டி பண்ணினேன்னு கேட்டேன்..!! அதுக்கு அவன்.. ‘அப்டித்தாண்டி அனுப்புவேன்.. நாளைக்கு அதை போட்டுக்கிட்டு காலேஜுக்கு வாடி’ன்னு திமிரா சொல்றான்..!! எனக்கு வந்துச்சே கோவம்..??”
“ஐயையோ.. என்ன பண்ணுன..?”
“கைல கெடைச்ச ஒரு மவுஸை எடுத்து அவன் மேல எறிஞ்சுட்டேன்..!!”
“மவுஸா…????” (இவ என்ன புதுசா ஒரு ஐட்டம் சொல்றா..?)
“யெஸ்.. அது.. அது.. இத்துனூண்டு.. சின்ன மவுஸ்தான் அசோக்..!!”
“ஓஹோ..??” (ஆமாம்.. மவுஸ்னா சின்னதாத்தான் இருக்கும்.. மானிட்டர்தான் கொஞ்சம் பெருசா இருக்கும்..)
“அதுக்கே அவனுக்கு மண்டை பொடைச்சுக்கிச்சு..!!”
“ம்ம்..!!” (பொடைச்சுக்கிச்சா.. பொளந்துக்கிச்சாடி..???)
“அதுக்கு.. அதுக்கு… என்னை காலேஜ்ல இருந்து அனுப்பிட்டாங்க அசோக்..!! அவன் அப்பா அந்த காலேஜ் மேனேஜ்மண்ட்ல பெரிய ஆளு..!! எல்லாரும் சேர்ந்து பாலிட்டிக்ஸ் பண்ணி.. என்னை வெளில அனுப்பிட்டாங்க..!! என் படிப்பை ஸ்பாயில் பண்ணிட்டாங்க..!!”
“அச்சச்சோ…!!” (சீனியர்.. நெறைய மேட்டர் நீ என்கிட்டே இருந்து மறைச்சிருக்க..!!)
“நீ கேட்டதும் எனக்கு பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சு..!! எனக்கு.. எனக்கு.. அழுகை அழுகையா வருது அசோக்..!!”
அவள் விசும்பிக்கொண்டே, என் தோளில் சாய்ந்து கொண்டாள். அப்புறம் என்ன..? ஆம்பளைங்க அழுதாலே எனக்கு தாங்காது..!! இவள் பெண்.. அதிலும் என் காதலி.. அதிலும் எனக்கு எல்லாம் செலவு செய்யும் காதலி..!! உருகிப் போனேன்..!! அவள் தோள் மீது கை போட்டு என்னுடன் இறுக்கிக் கொண்டேன்.
“ச்சே.. ச்சே..!! யாரோ பண்ணின தப்புக்கு நீ ஏண்டா அழுவுற செல்லம்..? கண்ணை தொடைச்சுக்கோ..!! ப்ச்.. கண்ணை தொடைச்சுக்கோன்னு சொல்றேன்ல..? அழக்கூடாது..!!”
அவள் அப்புறமும் கொஞ்ச நேரம் என் தோளில் சாய்ந்து விசும்பிக்கொண்டே கிடந்தாள். நான் அவளை மென்மையாக அணைத்துக்கொண்டு அவளுடைய முதுகை இதமாய் தடவிக் கொடுத்தேன். ஓரிரு நிமிடங்கள்..!! அப்புறம் லேகா பட்டென எழுந்தாள். அதுவரை அங்கே நடந்ததுக்கு சம்பந்தமே இல்லாமல் கேட்டாள்.
“மொளகா பஜ்ஜி சாப்பிடலாமா அசோக்..?”
‘என்ன இது.. திடீரென மொளகா பஜ்ஜி சாப்பிடலாம் என்கிறாள்’ என்று எனக்கு ஒரு அவசர யோசனை வந்தாலும், ‘சரி.. மொளகா பஜ்ஜிதானே சாப்பிடலாம் என்கிறாள்..? இன்னைக்கு தொட்டுக்க காரசட்னி வச்சிருப்பானா..? இல்ல.. புதினா சட்னி வச்சிருப்பானா..?’ என படாரென்று வேறு மாதிரி யோசனையில் மூழ்க ஆரம்பித்தேன். உடனே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.
“பஜ்ஜிதான..? சாப்பிடலாம் லேகாக்குட்டி..!!” என்று இளித்தவாறே சொன்னேன்.
லேகாவுடன் ஊர் சுற்றிவிட்டு, என் ரூமுக்கு வந்து சேர இரவு எட்டு மணி ஆகிவிட்டது. வந்து சேரவும், என் வயிறு கலக்கவும் சரியாக இருந்தது..!! எல்லாம் பீச்சில் சாப்பிட்ட அந்த மொளகா பஜ்ஜி செய்த வேலை..!! அவசர அவசரமாய் பேன்ட் கழட்டிப் போட்டுவிட்டு, லுங்கிக்கு மாறினேன். தம் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு, டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டேன்..!! கொஞ்ச நேரம்… கண்கள் மூடி… சுகமாக… புகை விட்டபடி..!!
“இந்த நிமிடம்.. இந்த நிமிடம்.. இப்படியே உறையாதா……..”
வெளியே இருந்து என்னுடைய செல்போனின் ரிங்டோன் சத்தமாக கேட்டது. ‘ச்சே.. நேரம் கெட்ட நேரத்தில் யார் அது..?’ என்று எரிச்சலாக இருந்தது. ஆனால் எழுந்து செல்லவும் மனமில்லை. ஆனது ஆயி’ப்போச்சு..!!!! இன்னும் அஞ்சு நிமிஷம் என்று தோன்றியது..!!!! ‘யாராக இருக்கும்..?’ என்று ஒரு யோசனை ஓடியது. அப்புறம் ‘யாராக இருந்தால் என்ன..? வெளியே சென்று மிஸ்ட் கால் கொடுத்தால் திரும்ப கால் செய்யப் போகிறார்கள்..!!’ என்று நினைத்தவனாய், சிகரெட் முனையில் வாய் வைத்து, அதன் புகையை அடிவயிறு வரை உள்ளிழுத்தேன்.
திடீரென ரிங்டோன் சத்தம் நின்றது. யாரோ பிக்கப் செய்கிறார்களோ என்று நான் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே, கால்சென்டர் எக்சிகியூட்டிவ் தோரணையில் ஜானியின் குரல் கேட்டது.
“ஹலோ.. சொல்லுங்க ஸார்..!! யார் வேணும் உங்களுக்கு..??”
‘ஐயையோ.. இந்த லூசு எதுக்கு எனக்கு வந்த காலை பிக்கப் பண்ணுது..?’ என்று நான் டாய்லட்டுக்குள் புகைந்தவாறும், புகைத்தவாறும் இருக்க, அவன் செல்போனில் தொடர்ந்து பேசினான்.
“அவர் இப்போ கொஞ்சம் பிஸியா டாய்லட் போயிட்டு இருக்காரு..!!” (அடச்சே.. என் மானத்தை வாங்குறதுக்குனே வந்து தொலைச்சிருக்குது இந்த நாய்..!!)
“நான் அவரோட உயிர் நண்பன் ஸார்.. என்ன மேட்டர்னாலும் எங்கிட்ட நம்பி சொல்லலாம்..!! அவர் டாய்லட்ல இருந்து வெளில வந்ததும் நான் சொல்லிர்றேன்..!!”
“”
“ஹையோ.. பரவால்ல ஸார்.. சொல்லுங்க..!! நீங்க என்ன முக்கியமான விஷயம் பேசினாலும்.. அவர் எப்படியும் எங்கிட்ட சொல்லத்தான் போறாரு.. அதை நீங்களே சொல்லிடுங்களேன்..!! உங்க பேரு என்ன ஸார்..?”
“”
“ஓ..!! உங்க பேரும் அசோக்தானா..?”
ஜானி அங்கு ஆச்சரியமாக கேட்க, எனக்கு இங்கு சிகரெட் புகை குப்பென்று நாசிக்குள் ஏறியது. கண்கள் எரிந்து உடனடியாய் நீர் கொட்ட, ‘லொக்.. லொக்.. லொக்..’ என இருமினேன். அவசர அவசரமாய்.. சிகரெட்டை சிங்க்குக்குள் போட்டுவிட்டு.. தண்ணியை பின்னால் ஊற்றி விட்டு.. டாய்லட் கதவை திறந்து வெளியே வந்தேன்..!!
“என்ன பாஸ்.. இவ்வளவு நெருங்கிட்டோம்.. அந்த முக்கியமான விஷயம் என்னன்னு சொல்ல மாட்டேன்றீங்களே..?” இளித்தவாறு பேசிக்கொண்டிருந்த ஜானியிடம் இருந்து செல்போனை பட்டென பறித்தேன். பறித்த வேகத்தில், பயங்கர கடுப்புடன் அவனை முறைத்தேன்.
“மசுரு.. இப்போ எதுக்குடா எனக்கு வந்த காலை பிக்கப் பண்ணின..?”
“இல்ல மச்சி.. இது கத்தினு கெடந்தது.. நீ வேற கக்கா போயிட்டுருந்த..!! அதான் எடுத்தேன்… யாரு மச்சி இந்த அசோக்..??” அவன் கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் கேட்க,
“த்தா.. மடக்..!! போயிருடா..!! அப்டியே ஏறி மிதிச்சுடுவேன்..!!” நான் கத்தினேன்.
அவன் அப்புறமும் அசட்டுத்தனமாய் ஒருமுறை என்னைப் பார்த்து இளித்துவிட்டு, வெளியேறினான். அவன் சென்றதும் நான் கதவை அறைந்து சாத்தினேன். தாழ்ப்பாள் போட்டேன். அவனை அடித்து துரத்தியதில், ஆத்திரம் சுத்தமாய் குறைந்து போனவனாய், சீனியரிடம் ஜாலியான குரலிலேயே ஆரம்பித்தேன்.
“ஆங்.. சொல்லு சீனி..!!”
“என்னது..?? சீனியா..??” அடுத்த முனையில் சீனியர் ஆச்சரியமான குரலில் கேட்டார்.
“ஆமாம் சீனி.. இனிமே உன்னை சீனினுதான் கூப்பிடனும்னு அவர் சொல்லிருக்காரு..!!”
“யாரு..?”
“இந்தக்கதையை எழுதுற ஸ்க்ரூ..!! சீனியர்னு நீளமா டைப் பண்ண கஷ்டமா இருக்காம்.. அதான் ஷார்ட்டா சீனின்னு கூப்பிட சொல்லிருக்காரு..!!”
“ஓஹோ…? அவரே சொல்லிட்டாரா..? அப்போ நானும் இனிமே உன்னை ஜூனின்னே கூப்பிடுறேன்..!!”
“ஏன்.. உன்கிட்டயும் அந்த ஆளு ஏதாவது சொன்னாரா..?”
“இல்ல இல்ல..!! நீ என்ன விட சின்னப்பையன்.. உன்னை எதுக்கு ‘ர்ர்ர்’ போட்டு ஜூனியர்னு மரியாதையா கூப்பிடனும்..? அதான்.. இனிமே ஜூனின்னே கூப்பிடுறேன்..!!”
“அய்யைய்யைய்யையோ…!! உன் மொக்கைக்கு, அந்த ஆள் மொக்கையே தேவலாம் போல இருக்கு..!! ச்சை…!! சரி.. மேல சொல்லு..!!”
“அதுசரி.. இப்போ எங்கிட்ட பேசுனது யாரு..? ஜானியா..?”
“ஆமாம்.. அந்த நாயியேதான்..!!”
“ஹ்ஹா.. ரொம்ப நாளுக்கப்புறம் அவன் வாய்ஸை கேக்குறேன் ஜூனி.. ரொம்ப ஹேப்பியா இருந்தது..”
“ம்க்கும்.. ரொம்ப முக்கியம்..!! பெரிய பெப்சி உமா வாய்ஸ்.. கேட்டதும் ஹேப்பியா இருக்குதாம்..!! அப்புறம் சீனி. உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்..”
“என்ன..?”
“இந்த ஜானி நாயி.. ஏதாவது தண்ணி லாரிலையோ.. குப்பை லாரிலையோ.. அடிபட்டு சாகுற மாதிரி.. உன்னால பாஸ்டை சேன்ஜ் பண்ண முடியுமா..?” நான் ஆர்வமாக கேட்க,
“ஐயையோ..!! பாவம் ஜூனி அவன்..!!” அடுத்த முனையில் சீனியர் பதறினார்.
“பாவமா அவன்..? படுத்துறான் சீனி..!! லேகாவை கழட்டி விடுறதுக்கு பதிலா.. இவனை நீ கழட்டிவிட சொன்னேன்னு வச்சுக்கோ.. நான் சந்தோஷமா செய்வேன்..!!”
“அவனை விடு.. அவன் இன்னும் கொஞ்ச நாள்ல.. தானா கழண்டுக்குவான்..!!”
“நெஜமாவா சொல்ற..?” அவர் சொன்னதைக்கேட்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
“ஆமாம்.. அந்த அழகுவேணியோட போய் செட்டில் ஆயிடுவான்..!!”
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :