நெஞ்சோடு கலந்திடு – பகுதி 37 – இறுதி பகுதி

இதெல்லாம் நீ பண்ணனும்னு அவசியம் இல்லடா அசோக்.. காதலுக்கும், கண்டிஷனுக்கும் எந்த கனெக்ஷனும் இல்லைன்னு இப்போ நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்..!! நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு.. எனக்காக எதுவும் நீ மாத்திக்க வேணாம்..!!”

“ம்ஹூம்.. நான் மாத்திப்பேன்..!! என் லவ்வை புரிஞ்சுக்கிட்டு.. என்னை தேடி வந்த என் தேவதைக்காக.. அவளுக்கு புடிச்ச மாதிரி என்னை நான் மாத்திப்பேன்..!! அவ சந்தோஷத்துக்காக என்ன செய்யணுமோ.. எல்லாம் செய்வேன்..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

இப்போது திவ்யா தன் கைகள் இரண்டாலும் அசோக்கின் கன்னங்களை தாங்கிப் பிடித்தாள். அவனையே கண்கொட்டாமல் காதலாக பார்த்தாள்.

“என்ன திவ்யா அப்படி பாக்குற..?” அசோக் புரியாமல் கேட்டான்.

“இல்லடா.. நான் தேடுனது என் உள்ளங்கைக்குள்ளேயே இருந்திருக்கு..!! அது தெரியாம.. நான் உலகம் பூரா போய் தேடிப்பாத்துட்டு வந்துட்டேன்டா அசோக்..!!”

“ஹாஹா.. பைத்தியம்..!!”

“ம்ம்ம்.. பைத்தியந்தான்..!! சரி.. உன் சந்தோஷத்துக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லு.. செய்றேன்..!!”

“ஹாஹா.. நீயா..?? நீ என்ன செய்யப் போற..??”

“என்னவேணாலும்..!! சொல்லு.. என்ன வேணும்..??”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நான் என்ன கேட்கப் போறேன்..?? இறுதிவரை உன் அன்பு.. இப்போதைக்கு ஒரே ஒரு முத்தம்..!!”

“போடா பொறுக்கி.. சுத்தி சுத்தி முத்தத்துலையே வந்து நிக்கிறான்..!!” திவ்யா இப்போது ஒரு போலிக்கோபத்துடன், அசோக்கிடம் இருந்து விலகிக் கொண்டாள்.

“ப்ளீஸ்டி.. ஒன்னே ஒன்னு..!!”

“ஐயையையே..!! இது என்ன.. உன்னை லவ் பண்ணினது ரொம்ப தப்பாப்போச்சே.. சும்மா சும்மா முத்தம் கேக்குற..?? அல்ரெடி ரெண்டு நாள்ல.. இருபத்திரண்டு முத்தம் ஆகிப்போச்சு.. நாம ரொம்ப ஸ்பீடா போறோம்னு எனக்கு தோணுது..!!”

“லூசு.. இதுக்குலாமா அக்கவுன்ட் வச்சுப்ப..?”

“ஏன்..?? உன்னை மாதிரி ஆளுகளுக்குலாம்.. இந்த மாதிரி அக்கவுன்ட் வச்சிக்கிறது நல்லதுதான்..!!”

“ஹாஹா.. சரி சரி..!! உன் அக்கவுண்ட்ல.. ப்ளஸ் ஒன் போட்டுக்கோ.. வா..!!”

“நோ.. நோ..!!”

“ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

அசோக் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே, வானம் தூறல் போட ஆரம்பித்தது. அசோக்கும், திவ்யாவும் அண்ணாந்து வானத்தை பார்த்தார்கள். பொட்டு பொட்டாய் விழ ஆரம்பித்த துளிகள், சில வினாடிகளிலேயே சடசடவென பெருமழையாய் மாறிப் போயின..!!

“அய்யய்யோ.. மழை புடிச்சுக்கிச்சு..!!”

திவ்யா பதறிப்போய் படிக்கட்டை நோக்கி ஓடினாள். நாலைந்து எட்டுகள் வேகமாக எடுத்து வைத்தவள், அப்புறம் அப்படியே நின்று திரும்பி அசோக்கை பார்த்தாள். அசோக் அசையாமல் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான். அதற்குள்ளாகவே பாதி நனைந்து போயிருந்தான். திவ்யா கையசைத்து அவனை அழைத்தாள்.

“வாடா.. மழை ஊத்துது..”

“இல்ல.. நான் வரலை..”

“ஏன்.. என்னாச்சு..??”

“நான் வரலை திவ்யா.. நான் இங்கயே இருக்குறேன்.. நீ வேணா போ..!!”

திவ்யா இப்போது அசோக்கை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் அந்தப்பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் காதல் பார்வையாக மாறியது. ஓரிரு வினாடிகள்தான்யோசித்திருப்பாள். ஓடிச்சென்று அசோக்கை அணைத்துக் கொண்டாள். அசோக்கும் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல, அவளை வாரி தன்னுடன் இறுக்கிக் கொண்டான். திவ்யா இப்போது காதலும், கிறக்கமுமாய் சொன்னாள்.

“இல்ல.. நான் போகலை.. நான் உங்கூடத்தான் இருப்பேன்..!!”

சொல்லிவிட்டு அசோக்கை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். மேலே இருந்து ஜில்லென்று மழை நீர் கொட்டி, இணைந்திருந்த இருவரது உடலையும் நனைத்து, குளிர்விக்க முயன்றது. ஆனால்.. அதற்கு போட்டியாக.. அவர்களது தேகம் இரண்டும் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக உரசி.. அனல் உண்டாக்க ஆக வேண்டிய காரியங்களை செய்தன..!!

இதமும், கதகதப்புமாய்.. இருவரும் உடல்கள் பிண்ணிக்கொள்ள நின்றிருக்க.. அவர்களது இதழ்களும் கூட.. அவர்களையும் அறியாமல்.. ஒன்றை ஒன்று நெருங்கின..!! இரு ஜோடி இதழ்களுக்கும் இடையே இப்போது இரண்டு, மூன்று மில்லிமீட்டர் இடைவெளிதான் இருக்கும்.. அத்தனை நெருக்கம்..!! அசோக் போதையும், கிறக்கமுமாய் கேட்டான்.

“தரவா..?”

“வேணாமா..?”

“தந்தப்புறம் அடிக்க மாட்டியே..?”

“தரலைன்னாத்தான் அடிப்பேன்.. அடி வேணுமா இப்போ..?”

“ஹாஹா.. என்னாச்சு உனக்கு திடீர்னு..?”

“ஏன்.. ஒன்னும் ஆகலையே..?”

“நான் அப்ப பொய் சொல்றேன்றியா..?”

“நீ இப்படி பேசிட்டேதான் இருக்க போறியா..?”

“வேற என்ன பண்ணனும்..?”

“ம்ம்.. பச்சைக்கொழந்தை.. சொல்லித் தரணுமாக்கும்..?”

“ஏன்.. சொல்லித்தந்தா என்ன.. கொறைஞ்சு போயிடுவியாக்கும்..?”

“ஹாஹா.. சொல்லித்தரணுமா.. என் கண்ணனுக்கு..?”

“ஹாஹா.. இன்னும் புரியலையா.. என் கண்மணிக்கு..?”

திவ்யா புரிந்து கொண்டாள். பாய்ந்து சென்று தன் உதடுகளால் அசோக்கின் உதடுகளை கவ்விக் கொண்டாள். சுவைக்க ஆரம்பித்தாள். அவர்களுடைய உதடுகள் ரெண்டும் எசகுபிசகாய் சிக்கிக்கொண்டு சண்டையிட.. அதைப்பார்த்து வெட்கம் கொண்ட அவர்களது விழிகள்.. இப்போது இமைகளை கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து போர்த்திக் கொள்ள ஆரம்பித்தன..!! மொட்டை மாடியில்.. கொட்டும் மழையில்.. முத்தத்துக்காக இதழ்கள் நான்கையும்.. யுத்தம் செய்ய விட்டுவிட்டு.. சித்தம் மொத்தமும்.. பித்தம் ஏறிப்போய்.. நின்றிருந்தனர் அசோக்கும், திவ்யாவும்..!!

(முற்றும்)

அப்பாடா..!! எந்தக்கதையையும் எழுதி முடிச்சு முற்றும் போடுறப்போ, எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும் ஃப்ரண்ட்ஸ்..!! ஆனா.. இந்தக்கதைக்கு முற்றும் போடுறப்போ எனக்கு கெடைச்ச நிம்மதியை வேற எதோடவும் கம்பேர் பண்ண முடியாது..!! அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நிம்மதி எனக்கு..!! அதுக்கான காரணம் எனக்கு மட்டுந்தான் தெரியும்..!! வேணும்னா.. கொஞ்சம் சுருக்கமா சொல்றேன்..!!

இந்தக்கதை ஆரம்பிச்சதுல இருந்தே பல பிரச்னைகள்.. பல இடையூறுகள்.. பல குழப்பங்கள்..!! இந்தக்கதையை என்னால முடிக்க முடியாம.. அப்படியே அந்தரத்துல நின்னுடுமோன்னு பலமுறை பயந்திருக்கேன்..!! வேற எந்தக்கதைக்கும் நான் அப்படி நெனச்சதே இல்ல..!! ஆனா.. இப்போ நல்லபடியா இதை முடிச்சுட்டேன்னு எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நிம்மதியா இருக்கு..!!

சரி அதெல்லாம் விடுங்க.. கதை முடிவு எப்படி இருந்தது.. ஓகேவா..? நிறைவா, சந்தோஷமா முடிக்கணும்னு ஆசைப்பட்டேன்.. எனக்கு திருப்தியாத்தான் இருக்குது..!! உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு.. கண்டிப்பா கமெண்ட்ல சொல்லுங்க.. ப்ளீஸ்..!!

இன்னொரு விஷயம் ஃப்ரண்ட்ஸ்..!! இந்தக்கதைல காமத்தை கலக்க எனக்கு மனசு வரலை.. அதுக்கான காரணமும் எனக்கு மட்டுந்தான் தெரியும்..!! இப்போலாம் என் கதையை நீங்க காமத்துக்காக வாசிக்கலைன்ற நம்பிக்கையும் ஒரு காரணம்..!! இந்தக்கதையை பொறுத்தவரை காமம் ஒரு பெரிய விஷயம் இல்லைதானே..??

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments