அசோக் காலிங் அசோக் – பகுதி 9
அழகுவேணி என்றால் எங்கள் ரூமிற்கு அடிக்கடி வருவாளே.. ஜானியின் அத்தை.. அவள்..!!
“ஓ..!! அவன் அத்தையோட போய் செட்டில் ஆகப் போறானா..?”
“ஐயையோ.. அது அவன் அத்தை இல்ல ஜூனி..!! அது ஒரு ஆந்த்ரா ஐட்டம்..!!” சீனியர் சொல்ல, நான் அப்படியே ஷாக்காகிப் போனேன்.
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
யோவ்.. என்னய்யா சொல்ற..? ஐட்டமா..??”
“ஆமாம் ஜூனி.. அத்தைன்னு சொல்லி உன்னை நல்லா ஏமாத்திட்டு இருக்குறான்..!! அவன் அவளோட போய் செட்டில் ஆனப்புறந்தான் எனக்கும் அந்த மேட்டர்லாம் தெரிய வந்துச்சு..!!”
சீனியர் சொல்ல சொல்லத்தான் எனக்கு இப்போது நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. அப்படியானால் அந்த அழுக்குவேணி ஒரு ஐட்டமா..? அதனால்தான் நான் வெளியில் செல்லும் நேரம் பார்த்து ரூமுக்கு விசிட் விடுகிறாளா..? நான் ரூமுக்கு திரும்பும் போதெல்லாம் அவளே வந்து கதவை திறக்கிறாளா..? இந்த ஜானி நாய் அழுக்கு தேய்த்து குளித்துக் கொண்டிருக்கிறதா..? பஜனையை முடித்துவிட்டுத்தான்.. பக்திப்பழம் மாதிரி வந்து அமர்ந்து கொள்கிறானா..?
அட படுபாவி.. என்னுடைய சில்லறை சீக்ரட்டுகளை எல்லாம் நோண்டி நோண்டி தெரிந்து கொள்வானே..? நானும் என் ஓட்டை வாயை திறந்து ஒன்னு விடாமல் கொட்டுவேனே..? இரண்டு வருடமாய்.. இவ்வளவு பெரிய சீக்ரட்டை என்னிடம் இருந்து மறைத்து.. அந்த அழுக்கு மூட்டையுடன் ஆட்டம் போட்டிருக்கிறானே..? இந்த ஜானி எவ்வளவே பெரிய கேடியாக இருக்க வேண்டும்..??
“என்ன ஜூனி.. சைலன்ட் ஆயிட்ட..?” சீனியர் என் யோசனையை கலைத்தார்.
“இல்ல சீனி..!! இந்த ஜானி நாயி.. என்னை எவ்ளோ கேனையனாக்கிருக்கான்னு யோசிச்சுட்டு இருந்தேன்..!!”
“ஐயோ.. அதை விடுப்பா.. நாம லேகா மேட்டருக்கு வருவோம்..!!
“ம்ம்ம்.. சொல்லு..!!”
“நான் சொன்னதை யோசிச்சியா..? இன்னைக்கு முடிவு சொல்றேன்னு சொன்னியே..”
“சீனி.. ஆக்சுவலா நான் உன்மேல ரொம்ப கோவமா இருக்கேன்.. நீ எங்கிட்ட இருந்து நெறைய விஷயத்தை மறைச்சுட்ட..!!”
“என்ன சொல்ற நீ..? நான் என்ன மறைச்சுட்டேன்..!!”
நான் சொல்ல ஆரம்பித்தேன். அன்று மாலை நடந்த விஷயங்களை சொன்னேன்..!! மொத்த மேட்டரையும்.. மொளகா பஜ்ஜி மொதற்கொண்டு ..!! எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட சீனியர், நான் முடித்ததும் சற்றே நக்கலான குரலில் கேட்டார்.
“ஸோ.. மொளகா பஜ்ஜி வாங்கிக்கொடுத்து.. உன் தலைல நல்லா மொளகா அறைச்சுட்டான்னு சொல்லு..”
“என்ன சீனி இப்படி கேவலமா சொல்லிட்ட..?”
“பின்ன என்ன..? அவளும் கதை வுட்ருக்கா.. நீயும் காரசட்னியை நக்கிக்கிட்டே கேட்டுட்டு வந்திருக்க..?” சீனியரின் நக்கலில் நான் சூடானேன்.
“யோவ்.. அவ கதை வுடலை.. நீதான் கதை வுட்ருக்க..!! அந்த திவாகர் பையனை பத்தி நீ எங்கிட்ட எதுவுமே சொல்லலை..!!”
“ஐயோ ஜூனி.. அவன் அப்பா பெரிய ஆளுதான் நான் ஒத்துக்குறேன்..!! ஆனா.. லேகா நீ நெனைக்கிற மாதிரி லேசுப்பட்ட ஆளு இல்ல..!! இவ மேல தப்பு இல்லைன்னா.. எதுக்காக இந்த மேட்டரை இத்தனை நாள் மறைச்சா..? அதை நீ யோசிச்சு பாத்தியா..?”
“அதான் அவ சொல்றாளே.. அந்த இன்சிடண்டை நெனச்சா.. அவளுக்கு கஷ்டமா இருந்ததுன்னு..”
“மண்டை உடைஞ்சு போன அந்தப் பையந்தான கஷ்டப்படணும்..? மண்டையை உடைச்ச இவளுக்கு என்ன கஷ்டம்..?”
“யோவ்.. அவ பொய் சொல்ற மாதிரி எனக்கு தோணலையா சீனி..!! எவ்வளவு பாவமா பேசினா தெரியுமா..?”
“ஆமாமாம்..!! பாய்ஃபிரண்டா இருக்குறப்போ எல்லாம் பாவமாத்தான் பேசுவாளுக.. புருஷனா ஆனப்புறந்தான் பூரிக்கட்டையாலேயே அடிப்பாளுக..!!” சீனியரின் குரலில் அடிபட்ட வலி தெளிவாக தெரிந்தது.
“என்னவோ போயா..!! எனக்கு ஒரே கொழப்பமா இருக்கு.. யாரை நம்புறதுன்னே தெரியலை..!!” நான் நிஜமாகவே குழம்பிப் போனவனாய் புலம்பினேன்.
“என்னைய நம்பு ஜூனி..!!”
“ஒரு வெண்ணையையும் நான் நம்புற மாதிரி இல்ல..!! நீ, லேகா, இந்த ஜானி நாய், அந்த அழுக்குவேணி.. எல்லாம் சேர்ந்து என்னை காமடி பீஸாக்குறீங்க..!!”
ஹையோ ஜூனி.. அவங்க வேணா அப்படி பண்ணலாம்.. நான் அப்படி பண்ணுவேனா..? நான்தான் நீ.. நீதான் நான்னு அடிக்கடி மறந்துடுற நீ..!!”
“ம்ம்ம்ம்ம்ம்.. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நான் இன்னும் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் சீனி..!! ஆனா.. உன்னையும் சும்மா சொல்லக்கூடாது.. நீயும் பயங்கரமான ஆளுய்யா..!!” நான் சற்று கடுப்புடனே சொன்னேன்.
“ஏன் அப்படி சொல்ற..?”
“பின்ன என்ன..? லேகா வாங்கிக் கொடுத்த செல்போனையே யூஸ் பண்ணி.. அவளுக்கே ஆப்பு வைக்க ட்ரை பண்றேல..?”
“ஜூனி.. அவ செல்போன் வாங்கிக் கொடுத்தது.. செலவழிச்சது.. எல்லாமே நீ ஒரு அப்பாவின்றதாலதான்..!! அடி தாங்குவேன்றதாலதான்..!! அதை ஏன் இன்னும் நம்பமாட்டேன்ற..?”
“ம்ம்ம்..!! அது சரி… இன்னொன்னு கேக்கனும்னு நெனச்சேன்.. அவளை கழட்டி வுடு.. கழட்டி வுடுன்னு கெடந்து குதிக்கிறியே.. இதனால உனக்கு என்ன யூஸ்..? நீதான் வாங்குற அடிலாம் வாங்கி முடிச்சுட்டியே..? இப்போ போய் பாஸ்டை சேன்ஜ் பண்றதால உனக்கு என்ன லாபம்..?”
“அதுக்கு காரணம் இருக்கு ஜூனி..!!”
“என்ன..?”
“இப்போலாம் எனக்கு கண்ணை மூடி தூங்குனா.. கையை மடக்கிக்கிட்டு லேகா குத்துறதுதான் கனவா வருது..!!” சீனியர் ரொம்ப ஃபீலிங்காக சொன்னார்.
“ஐயோ.. பாவம்..!!”
“அந்த அளவுக்கு அவ அடிச்ச அடிலாம் என் மூளையை ஆக்ரமிச்சிருக்கு..!! இதுக்குலாம் ஒரே ஒரு சொல்யூஷன்தான் இருக்கு..!!”
“என்னது அது..?” நானும் இப்போது சற்று ஆர்வமானேன்.
“மெம்மரிஸ்..!!”
“மெம்மரிஸா..? என்ன சொல்ற நீ..?”
“ஆமாம் ஜூனி.. மெம்மரிஸ் அப்டின்றது மனுஷ வாழ்க்கைல ரொம்ப ரொம்ப முக்கியம்..!!” அவர் சீரியசான குரலில் சொல்ல,
“இரு இரு.. இந்த டயலாக்கை நான் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு…!!” என்று குழப்பமான குரலில் சொன்னேன்.
“எங்க கேட்டிருக்க..?”
“இப்போதான்யா… ரீசண்டா.. ம்ம்ம்ம்ம்ம்… ஆங்… ஞாபகம் வந்துடுச்சு…!!”
“என்ன..?”
“இந்த ஆள் ரீசண்டா எழுதின ஒரு கதைலதான்யா.. ‘மாங்கல்யம் தந்துனானே..’ ஃபர்ஸ்ட் நைட் ஸீன்ல..”
“அடத்தூ…!! நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்குறேன்.. நீ காமடி பண்ணிட்டு இருக்குற..??” சீனியர் நிஜமாகவே டென்ஷனானார்.
“ஓஹோ..?? அது காமடி.. நீ சொல்றது சீரியஸா..?? சரி சரி.. சொல்லு சொல்லு..!!”
“மெமரிஸ்.. மனுஷ வாழ்க்கைல ரொம்ப ரொம்ப முக்கியம் ஜூனி..”
“சரி.. அப்புறம்..?”
“லிவிங்.. அதாவது ‘வாழ்தல்’ அப்டின்றது.. அந்த செகண்ட் மட்டுந்தான்.. அந்த கணம் மட்டுந்தான்..!! அந்த செகண்ட் போனப்புறம்.. உன்னால அதை ஃபீல் பண்ண முடியாது..!! அது அத்தோட முடிஞ்சு போன ஒரு விஷயம்..!!”
“ஐயையையோ.. கொல்றாண்டா..!!”
“ஆனா… ‘மெமரிஸ்’ அப்டின்றது.. அந்த மாதிரி இல்ல..”
“வேற எந்த மாதிரி..?”
“நூறு வருஷம் நீ வாழ்ந்த வாழ்க்கையை கூட.. மெமரிஸ்குள்ள போட்டு வச்சுக்கலாம்.. எப்போ வேணாலும்.. அதை நெனச்சு நெனச்சு சந்தோஷப் பட்டுக்கலாம்..!!”
“ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதேன்னு.. ஆட்டோக்ராப்ல சேரன் சைக்கிள் ஓட்டுவாரே.. அந்த மாதிரியா..??”
“ஆமாம்..!! அதனால.. மெமரி இஸ் மோர் வேல்யபில் தேன் லிவிங்..!!”
“ஐயையையோ.. தத்துவம்டா.. தத்துவம்டா..!! சீனி.. நான் ஒன்னு கேக்கவா..?”
“கேளு..!!”
“உனக்கு இப்போ எத்தனை வயசாகுது..?”
“நாப்பத்தஞ்சு..!! ஏன் கேக்குற..?”
“இல்ல.. நாப்பத்தஞ்சு வயசுல நான் லூசாகப் போறேன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுயா சீனி..!!
“ப்ச்.. கிண்டல் பண்ணாத ஜூனி..!! நான் சொல்றதுல ஒரு பாயின்ட் இருக்கு..!! நீ இப்போ லேகாவை கழட்டி வுட்டேட்டேன்னு வச்சுக்கோ.. அந்தக்காலத்து அனுஷ்காவோ.. ஒரு காஜல் அகர்வாலோ.. அட்லீஸ்ட் தமன்னாவோ… என் வொய்ஃபா வர ஒரு சான்ஸ் இருக்கு…!!”
“ஓ..!! அப்டி வேற உனக்கு கேடுகெட்ட ஆசைலாம் இருக்கா..??”
“எஸ்..!! அவங்களோட நான் வாழ முடியாட்டாலும்.. வாழ்ந்த மாதிரி ஒரு மெமரி.. எனக்கு அப்டேட் ஆகும்..!! அதை நான் நெனச்சு நெனச்சு சந்தோஷப் பட்டுக்குவேன்..!! சாகப்போற காலத்துல.. எனக்கு அதை விட வேற என்ன வேணும்..??”
“ம்ம்ம்ம்.. இப்போ புரியுதுய்யா.. நீ ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த மெசினை கண்டுபிடிச்சேன்னு..!!”
“ஆனா.. இதுல உனக்கும் பெரிய அட்வான்டேஜ் இருக்கு..!! நான் சொல்றதை கேட்டேன்னா.. நீ ஃப்யூச்சர்ல வாங்கப்போற அடியலாம்.. அவாய்ட் பண்ணலாம்..!!!”
அவர் அப்படி சொன்னதும், நான் ஒரு சில வினாடிகள் சீரியஸாக தின்க் பண்ணினேன். சீனியர் சொல்லுவதும் சரிதான் என்று பட்டது. அவராவது வாழ்ந்து முடித்துவிட்டார். நான் இனிமேல்தான் அவளுடன் வாழவேண்டும். ஐ மீன்.. அடி வாங்க வேண்டும்..!! சீனியர் சொல்வது மாதிரி கேட்டால் அந்த அடி உதைகளை தவிர்க்கலாம் என்று பட்டது. அவருடன் ஒத்துழைப்பதுதான் எனக்கு நல்லது என்று தோன்றியது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னேன்.
“சரி சீனி.. நீ சொல்றதுலாம் எனக்கு புரியுது..!! லேகாவை கழட்டி விடனும்.. அவ்ளோதான.. விடு.. நான் பாத்துக்குறேன்..!!”
“என்ன பண்ணப் போற..?”
“இதுலாம் சப்பை மேட்டர் சீனி.. பொண்ணுகளை கரெக்ட் பண்றதுதான் கஷ்டம்.. கழட்டி விடுறது ரொம்ப ரொம்ப ஈஸி..!! எங்கிட்ட வுடு.. நான் பாத்துக்குறேன்..!! நாளைக்கே அவளை கழட்டி வுடுறேன் பாரு..!!”
“ஓகே ஜூனி..உன் இஷ்டத்துக்கே விடுறேன்.. ஆனா.. டெயிலி நீ என்ன பண்ணினேன்னு.. போன்ல எனக்கு அப்டேட் கொடுக்கணும்..!! நமக்கு இன்னும் மூணு நாள்தான் டைம் இருக்கு.. அதுக்குள்ளே நீ கழட்டி விடனும்.. அதையும் ஞாபகம் வச்சுக்கோ..!!”
“ஓ..!! மூணாவது நாள்தான் அந்த பேராப்பு வரப்போகுதா..??”
“ஆமாம்..!!”
“அது என்னன்னு கொஞ்சம் சொல்லேன்..?”
“ம்ஹூம்.. அதை நான் சொல்ல மாட்டேன்..!! உன் மேல எனக்கு இன்னும் முழுசா நம்பிக்கை வரலை…!! நம்பிக்கை வந்ததும் சொல்றேன்..!!”
“ஓகே சீனி.. விடு..!! வேறென்ன.. நாளைக்கு பேசலாமா..?”
“இரு இரு.. நான் இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்குறேன்…”
“என்ன..?”
“வீடியோ கால்..!!”
“வீடியோ காலா..? என்னய்யா சொல்ற..?”
“இந்த மெசினோட நான் ஒரு கேமரா கனெக்ட் பண்ணிருக்கேன்.. இப்போ நான் அதை ஆன் பண்றேன்.. உன் செல்போன்ல என் மூஞ்சி தெரியுதான்னு பாரு.”
“யோவ்.. ஒரு நிமிஷம் இருய்யா.. இதுக்கு ஏதும் எக்ஸ்ட்ரா சார்ஜ் வராதே..?”
“ஐயையே.. ஏன் ஜூனி இவ்வளவு பிசினாரியா இருக்குற நீ..?”
“யோவ்.. ஏன் சொல்லமாட்ட..?? உனக்கென்ன.. கோடிக்கணக்குல அப்பீஸ் வச்சிருக்குற..? நான் கோல்ட்பில்டர் வாங்க கூட வக்கில்லாம இருக்குறேன்..!!”
“சரி சரி விடு.. ரொம்ப ஃபீல் பண்ணாத..!! இதுக்குலாம் எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகாது.. தைரியமா பாரு..!! ம்ம்ம்.. கேமரா ஆன் பண்ணிட்டேன்.. பாரு..!!”
நான் காதோடு வைத்திருந்த செல்போனை இப்போது கையில் எடுத்து பார்த்தேன். ஸ்பீக்கர் மோட் ஆன் செய்தேன். என் செல்போன் திரை எங்கும் எக்கச்சக்கமாய் புள்ளிகள்..!! பின்பு அந்த புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து, சீனியரின் முகம் தெரிந்தது. சற்றே மங்கலாக..!! அப்புறம் அதுவும் மெல்ல மெல்ல தெள்ளத்தெளிவாக ஆனது..!!
“ஹாய் ஜூனி..!!!!!!!” சொல்லிக்கொண்டே சீனியர் கையசைத்தார்.
“சொல்லு சீனி..”
“நான் தெரியிறேனா..?”
“ம்ம்.. தெரியிற தெரியிற..!! ஏன் சீனி… நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத…”
“என்ன..??”
“உன் தலையை எதும் எறும்புப் புத்துக்குள்ள வுட்டுட்டயா..?”
“ஏன் கேக்குற..?”
“இல்ல.. எறும்பு கறும்புன மாதிரி.. மண்டைலாம் ஒரே முள்முள்ளா இருக்குதேன்னு கேட்டேன்..!!”
“நக்கலா..??? 2035ல இந்த ஹேர்ஸ்டைல்தான் ஜூனி.. ஃபேஷன்..!!”
“ஓஹோ..?? அப்புறம்.. உதடு என்ன.. ஒரு ஓரமா வீங்கிருக்கு..??”
“அதுவா..? அது.. லேட்டஸ்டா லேகாட்ட வாங்கினது..!!” சீனியர் தடித்துப் போன தனது உதட்டை தடவிக் கொண்டே சொன்னார்.
“ம்ம்ம்.. உன் மூஞ்சியை பாத்ததும் உன் மேல நம்பிக்கை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு சீனி..”
“தேங்க்ஸ்.. தேங்க்ஸ்..!! ஓவராலா எப்படி இருக்கு என் மூஞ்சி..?”
“ம்ம்ம்.. சந்தானத்துக்கு சயின்டிஸ்ட் கெட்டப் போட்ட மாதிரி இருக்கு..!!”
“சந்தானமா..? அது யாரு..?”
“நீ மறந்திருப்ப..!! நம்ம ரெண்டு பேருக்கும் அந்த ஆளு படத்தை போட்டுத்தான்.. இந்த ஆளு கதை எழுதிட்டு இருக்குறான்..!!”
“ஓஹோ..??”
“ஓகே சீனி.. உன் மூஞ்சியை பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்.. வேறென்ன..?”
“வேற ஒண்ணுமில்ல ஜூனி..!! நாளைக்கு பேசலாம்.. ஆல் தி பெஸ்ட்..!!”
“ஓகே சீனி.. குட்நைட்..”
“குட்நைட்..!!”
சொல்லிவிட்டு சீனியர் காலை கட் செய்தார். நானும் செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, கட்டிலில் விழுந்தேன். லேகாவை கழட்டி விடுகிறேன் என்று சீனியரிடம் சொல்லியாயிற்று..!! இப்போது அவளை கழட்டி விடவேண்டும்..!! என்ன செய்து கழட்டிவிடுவது..?? குப்புறப் படுத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தோம்… நானும்.. என்னோடு சேர்ந்து ஸ்க்ரூவும்..!!
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :