நெஞ்சோடு கலந்திடு – பகுதி 9

“ப்ச்.. திவ்யாடா.. முக்கியமான விஷயம்னு உள்ள கூட்டிட்டு போனாளே.. என்ன சொன்னா..?”

“ஏதோ சொன்னா.. எங்க அவளை ஆளைக் காணோம்..?”

“அவ தூங்குறா.. அவளை விடு..!! அவ என்ன சொன்னான்னு சொல்லு..”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அசோக் சாதத்தை மென்று கொண்டே, தலையை திருப்பி திவ்யாவின் அறையை ஒரு பார்வை பார்த்தான். விளக்குகள் அணைக்கப்பட்டு இருண்டிருந்தது. ‘என் தூக்கத்தை நிரந்தரமாய் பறித்துவிட்டு அவள் நிம்மதியாக தூங்குகிறாளா..?’ அசோக்கின் மனதுக்குள் ஒரு இனம்புரியாத எரிச்சல் பரவியது.

“என்னடா ஆச்சு..? ஏன் கம்முனு உக்காந்திருக்குற.. சொல்லுடா.. என்ன சொன்னா..?”

“ம்ம்.. அவ லவ்வை சொன்னா..!!” அசோக் சற்றே வெறுப்பான குரலில் சொல்ல,

“எ..என்னடா சொல்ற..?” என்று சித்ரா பதறினாள்.

“ஆமாம்.. அவ யாரையோ லவ் பண்ணப் போறாளாம்.. அதை சொல்லிட்டு இருந்தா..!!”

“யாரையோவா..? அப்போ.. நீ இல்லையா..?”

“ம்ஹூம்..!! நான் இல்லை..!!” அசோக் தலையசைக்க,

“அப்பாடா…!!!”

என்று சித்ரா இப்போது ஒரு நீண்டதாய் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அசோக் அவளை வித்தியாசமாய் ஒரு பார்வை பார்த்தான்.

“உனக்கு என்ன இவ்வளவு சந்தோஷம்..?”

“பின்ன இருக்காதா..?? நல்ல வேளை.. என் தம்பி தப்பிச்சான்..!! இப்போத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு..!!”

முகமெல்லாம் பிரகாசமும், குரலெல்லாம் உற்சாகமுமாக சித்ரா சொல்ல, அசோக் கடுப்பானான். சில வினாடிகள் தன் அக்காவின் முகத்தையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மீண்டும் தட்டில் இருந்த உணவை அள்ளி, வாயில் திணித்துக் கொள்ள ஆரம்பித்தான். அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை சித்ரா விடவில்லை. மீண்டும் ஆரம்பித்தாள்.

“ஆமாம்.. யாருடா அந்தப் பையன்..?”

“யாரு..?”

“அதான்.. அவ லவ் பண்ற பையன்..!!”

“ப்ச்.. அதெல்லாம் அவ எங்கிட்ட சொல்லலை..”

“ஏய்.. பொய் சொல்லாதடா.. இவ்வளவு சொல்லிருக்கா.. அதை சொல்லாமலா இருந்திருப்பா..? சொல்லுடா..!!”

“அதான் சொல்லலைன்னு சொல்றேன்ல.. விடேன்..” அசோக்கின் குரலில் இப்போது எரிச்சல் எக்கச்சக்கமாக ஏறியிருந்தது.

“இதை என்னை நம்ப சொல்றியா..?”

“நம்பாட்டா போ..”

“ஹேய்.. கேக்குறேன்ல.. சொல்லுடா..”

“உஷ்ஷ்ஷ்ஷ்… ப்பா…!!!! உன் டார்ச்சர் தாங்க முடியலை..!! சரி… நாளைக்கு சொல்றேன்.. இப்போ என்னை கொஞ்சம் சாப்பிட விடுறியா..?”

“சரி சரி..!! ம்ம்ம்ம்… அந்தப்பையன் பேர் என்னன்னாவது சொல்லேன்..?”

அவ்வளவுதான்..!! ‘எங்க பேர் பொருத்தம் கூட நல்லா இருக்குல..?’ என்ற திவ்யாவின் குதுகல குரல், ஏனோ இப்போது அவனுடைய காதில் வந்து கொடூரமாய் மோதியது. திவ்யா தந்த வேதனையும், அவனது இயலாமையும், அக்காவின் பிடுங்கலும் எல்லாம் ஒன்று சேர.. கோபத்தின் உச்சிக்கே சென்றான். புறங்கையை வீசி, சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை தரையில் விசிறியடித்தான். பறந்து போய் தரையில் விழுந்த தட்டு, ‘டண்டண்டண்டண்’ என்று காதுக்கு ஒவ்வாத ஒரு ஒலியை கிளப்பியது. சாதத்தை வீடெங்கும் தெளித்திருந்தது. சர்ரென்று சுழன்று, பின்பு தரையோடு அடங்கியது..!!

சித்ரா அதிர்ந்து போய் எழுந்தாள். விழிகள் விரிய தன் தம்பியையே நம்ப முடியாமல் பார்த்தாள். அசோக் இவ்வளவு கோபப்பட்டு அவள் பார்ப்பது இதுவே முதல் முறை. அசோக்கும் எழுந்து கொண்டான்.

“அதான்.. நாளைக்கு சொல்றேன்னு சொல்றேன்ல..?”

என்று உஷ்ணமாய் முறைத்தவாறு கத்தினான். ஓரிரு வினாடிகள் அக்காவின் முகத்தையே வெறுப்பாக பார்த்தவன், கையைக் கூட கழுவாமல் அப்படியே வெளியேறினான். சித்ரா அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தாள். அசோக்குடைய காதலின் தீவிரம் ஒரே வினாடியில் அவள் உச்சந்தலைக்கு சென்று உறைக்க.. அவளுடைய உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது..!!

ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டிவியில் இப்போது டாம், ஜெர்ரியை அடிக்கிறேன் பேர்வழி என்று வீட்டில் இருந்த பாத்திரங்களை எல்லாம் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. ஆனால் கார்த்திக் அதற்கு சிரிக்கவில்லை. அதிர்ந்து போனவனாய் சோபாவில் இருந்து எழுந்து நின்றிருந்தான். அசோக் அவசரமாக கதவு திறந்து வெளியேறுவதையே ஒருவித மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அத்தியாயம் 10

அசோக் தன் அறைக்கு திரும்பியபோது, செல்வாவும் வந்திருந்தார். அலமாரியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தார். அசோக் நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தார். அவனிடம் ஏதோ பேச வாயெடுத்தார். அதற்குள் அசோக்..

“எனக்கு மனசு சரியில்லண்ணா.. எதா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்..”

என்று விட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டான். காய்ந்து போயிருந்த கையை கழுவிக்கொண்டான். மெத்தையில் வீழ்ந்தான். உடலை போர்வையால் மூடிக்கொண்டான். விழிகளை இமைகளால் மூடிக்கொண்டான். ஆனால்.. மனதை மூட ஏது மூடி..? உலையிட்ட பானையாய் அவன் உள்ளம் கொதிக்க.. திவ்யாவின் நினைவுகள் பொங்கிக்கொண்டு வெளிவந்தன..!! உள்ளம் விழித்துக்கொண்டு அசுரத்தனமாய் ஆட்டம் போட.. உறக்கம் செத்துப் போயிருந்தது..!! போர்வைக்குள்ளேயே புரண்டு புரண்டு படுத்தான்..!!

எவ்வளவு நேரம் அந்த அவஸ்தையோ..? “அசோக்..” என்று அழைத்தவாறு செல்வா போர்வையை மெல்ல இழுக்க, அசோக் உச்சபட்ச எரிச்சலுக்கு உள்ளானான். படக்கென எழுந்து கொண்டு அவரிடம் சீறினான்.

“என்னண்ணா.. எனக்குத்தான் மனசு சரியில்ல.. யார்கிட்டயும் பேச மூட் இல்லன்னு சொன்னேன்ல..?”

அவன் அவ்வாறு வெறுப்பை உமிழ, செல்வா மிரண்டு போனார். ஒருமாதிரி பரிதாபமாக அவன் முகத்தையே பார்த்தார். அப்புறம் தயங்கி தயங்கி திணறலாக சொன்னார்.

“இ..இல்ல அசோக்.. எனக்கும் ம..மனசே சரியில்ல.. யார்கிட்டயாவது பேசணும் போல இருக்கு.. அதான்..”

இப்போது அசோக் அப்படியே முகம் மாறினான். அவரை பாவமாக பார்த்தான். ‘இவர் என்ன தவறு செய்தார்..? யார் மீதோ உள்ள கோவத்தை இவரிடம் காட்டுகிறேனே..?’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். ‘ஸா..ஸாரிண்ணா.. இருங்க.. வர்றேன்..’ என்று மென்மையாக சொன்னவாறு, போர்வையை உதறிவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. அசோக்கும் செல்வாவும் மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள். நிலவொளியின் மசமசப்பான வெளிச்சத்தை தவிர, சுற்றிலும் இருள் பரவியிருந்தது. வீட்டை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரங்கள், ஜிலுஜிலுவென காற்றை உமிழ்ந்து கொண்டிருந்தன. தெரு நாய் ஒன்று குரைக்கும் சத்தம் எங்கோ தூரமாய் கேட்டது. அசோக் ஒரு சிகரெட் பற்றவைக்க,

“எனக்கும் ஒரு சிகரெட் கொடு அசோக்..”

என்றார் செல்வா இறுக்கமான குரலில். அவரை வித்தியாசமாக பார்த்த அசோக்,

“தம்லாம் அடிப்பீங்களாண்ணா..?” என்றான் சிகரெட் ஒன்றை உருவி அவரிடம் நீட்டிக்கொண்டே .

“ம்ம்.. சின்ன வயசுல திருட்டு தம் அடிச்சிருக்கேன்.. இருபது வயசுல அதெல்லாம் விட்டுட்டேன்.. அப்புறம் இப்போதான் அடிக்கிறேன்..”

செல்வா சிகரெட்டை உதட்டில் பொருத்திக் கொள்ள, அசோக்கே பற்றவைத்தான். இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக புகை விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்புறம் செல்வாதான் மெல்ல ஆரம்பித்தார்.

“எங்கப்பா எங்களை விட்டு போறப்போ.. எனக்கு இருபது வயசு அசோக்.. நான்தான் மூத்தவன்.. எனக்கு ரெண்டு தங்கைங்க.. ஒரு தம்பி.. என் அம்மா..!! எல்லாரையும் விட்டுட்டு அவர் நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு..!!”

“ஓ..!!”

“அப்போல்லாம் எங்கம்மா அடிக்கடி எங்கிட்ட வந்து புலம்புவாங்க.. ‘உன்னை நம்பித்தான் நம்ம குடும்பமே இருக்குயா..’ன்னு அழுவாங்க..!! அதுவரைக்கும் ஊதாரித்தனமா இருந்த நான் அப்புறம் ரொம்ப மாறிட்டேன்.. குடும்பம் முக்கியம்னு நெனச்சேன்.. நல்லா உழைச்சேன்.. சம்பாதிச்சேன்..!!”

“ம்ம்”

“ரெண்டு தங்கச்சிங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன்.. தம்பி அவனே ஒரு பொண்ணை தேடிக்கிட்டான்..!! அம்மாவும் அஞ்சு வருஷம் முன்னாடி சீக்குல படுத்து.. சீக்கிரமே கண்ணை மூடிட்டாங்க..!! எல்லாம் முடிஞ்சு பாத்தா.. நான் மட்டும் தனியா நின்னேன் அசோக்.. என்னைப் பத்தி கவலைப்பட கூட எந்த ஜீவனும் இல்லைன்னு ஆயிடுச்சு..!!”

“ம்ம்” அசோக்கிற்கு இப்போது செல்வாவின் மீது ஒரு இனம்புரியாத பச்சாதாபம் பிறந்தது.

“எனக்குன்னு ஒருத்தி வர மாட்டாளான்னு எனக்கு ரொம்ப ஏக்கமா இருக்கும்.. ஆனா.. இத்தனை வயசுக்கப்புறம் நான் யார்கிட்ட பொண்ணு கேட்டு போறது..? சொல்லு.. எனக்குலாம் எவன் பொண்ணு கொடுப்பான்..? அதான்.. காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்றாங்களேன்னு.. காதலை நம்ப ஆரம்பிச்சேன்..!! என்னையும் எவளாவது காதலிச்சுட மாட்டாளான்னு நெனைப்பு..!! ஆனா.. அந்த காதலும் எனக்கு கெடைக்கலை.. ஏக்கத்தை மறைக்க.. என்ன செய்றதுன்னு தெரியாம.. எல்லாரும் என்னை காதலிக்கிறாங்கன்னு.. உங்ககிட்டலாம் சும்மா சொல்லிட்டு திரிவேன்..!!”

“ம்ம்.. புரியுதுண்ணா..”

“ஆனா.. கண்மணி அந்த மாதிரி இல்ல அசோக்.. அவ பேச்சும் நடவடிக்கையும்.. அவளுக்கு என் மேல விருப்பம் இருக்குன்னு எனக்கே தெளிவா தெரிஞ்சது.. எனக்குன்னு ஒருத்தி வந்துட்டான்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்..!! அவளை உண்மையா காதலிச்சேன்.. ஆனா.. ஆனா அவ.. அப்டிலாம் எதுவும் இல்லைன்னு.. இன்னைக்கு மூஞ்சில அறைஞ்ச மாதிரி சொல்லிட்டா அசோக்.. எனக்கு.. எனக்கு நெஞ்சே வெடிச்சுப் போன மாதிரி ஆயிடுச்சு..!!”

அவர் உடைந்துபோன குரலில் சொல்ல, அசோக் செல்வாவுக்காக அப்படியே உருகிப் போனான். தான் அனுபவிக்கும் அதே வலியை, தனக்கெதிரே நிற்கும் இந்த ஜீவனும் அனுபவிக்கிறது என்பதை அறிந்ததும்.. அவன் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த உள்ளக்குமுறல் வெளியே பொங்கியது. பெரிய குரலில் கத்தினான்.

“ச்சே..!!! இந்தப் பொண்ணுகளே இப்படித்தாண்ணா..!! நம்மளை எல்லாம் அவளுக புரிஞ்சுக்கவே மாட்டாளுக..!! இவளுகளை உருகி உருகி காதலிக்கிற நாமதாண்ணா முட்டாளுக..!!”

அவன் அப்படி கத்தவும், இப்போது செல்வா பட்டென்று முகம் மாறினார். அதிர்ந்து போனவராய் அசோக்கை பார்த்தார். அவனுடைய சீற்றத்தில் இருந்தே, அவனும் ஏதோ கெட்ட செய்தி வைத்திருக்கிறான் என்று ஒரே நொடியில் புரிந்து கொண்டார்.

“அ..அசோக்.. நீ.. அப்போ.. தி..திவ்யா..??” என்றார் திணறலாக.

“ஆமாண்ணா..!! நீங்க சொன்னதெல்லாம் தப்பா போச்சுண்ணா.. அவ என்னை ஏமாத்திட்டா..!! அவ மனசுல நான் இல்லைண்ணா.. அவ மனசுல நான் இல்லை..!!”

சொல்லிவிட்டு அசோக் உடைந்து போய் ‘ஓ..’வென அழ ஆரம்பித்தான். செல்வா பதறிப் போனார். சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு, அவனை ஆறுதலாக தழுவிக் கொண்டார். அசோக் அவர் தோளில் முகம் புதைத்து கண்ணீர் வடிக்க, அவர் அவனது முதுகை தட்டிக்கொடுத்து.. ‘அசோக்.. அசோக்.. அழாதப்பா.. ப்ளீஸ்.. அசோக்..’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments