♥பருவத்திரு மலரே-40♥

காலை….
பாக்யா தட்டி எழுப்பப் பட்டாள். அவள் கண்விழிக்க…
”பரத்தண்ணாவோட.. அப்பா வந்துருக்கு…” என்றான் கதிர்.

உடனே எழுந்தாள். மெதுவாக எழுந்து எட்டிப் பார்த்தாள்.
பரத்தின் அப்பா.. வெள்ளை வேட்டி… வெள்ளை சட்டையில் நின்றிருந்தார். அவளது அப்பாவோடும்.. ராசுவோடும் சிறிது தூரம் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அவர் போனதும் ராசு வந்தான்.
”அட… ஏன் எந்திரிச்சுட்ட..?” எனக் கேட்டான்.
” எதுக்கு வந்துருக்கு..?” என அவனைப் பார்த்துக் கேட்டாள்.
” ஜவுளி எடுக்க அவங்களும் வர்றாங்களாம்.. அத சொல்லிட்டு போகத்தான் வந்தாரு..”
”ஒத்துகிட்டாங்களா…?”
” ம்…”

மிகவுமே மகிழ்ச்சி பொங்கியது அவளுக்கு.

அப்பறம் அவள் எழுந்து பாத்ரூம் போய் வர… முத்துவும் வந்து நின்றாள்.
”நீயும் போறியா..?” என்று பாக்யாவைக் கேட்டாள் முத்து.
”எங்க…?”
” துணி எடுக்க…?”
”க்கும்.. என்னையெல்லாம் கூட்டிட்டு போகமாட்டாங்க..! நீ வேலை செய்யலியா இன்னிக்கு..?”
” இன்னும் நோம்பி முடியல.. இல்ல.. யாரும் வல்ல..”

அவளது பெற்றோருடன் ராசுவும் கிளம்பினான்.
” நீ இப்படியே வருவதான..?” ராசுவைக் கேட்டாள் பாக்யா.
”இல்ல… நாளைக்கு சாயந்திரம் தான் வருவேன்..”
” ஏன்…?”
”கொஞ்சம் வேலையிருக்கு..”
” என்ன வேலை…?”
” சொல்லியே ஆகனுமா..?”
” நாளான்னிக்கு காலைல கல்யாணம்..”
” கவலையே படாத.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..”
” அதுக்கில்ல…!”
” சரி.. டைமாகுது கெளம்பறோம்..! நல்லா தூங்கி ரெஸ்ட் எடு..” என அவள் கன்னத்தில் தட்டிவிட்டுப் போனான்..!

இப்போது அவள் மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கி விட்டது. இரண்டு வீட்டினரும் சமாதானமாகி இணைந்து விட்டது அவளுக்கு மிகப்பெரும் நிம்மதியைக் கொடுத்தது..!!

அவளது திருமண நாள்…!!
உறவினர்கள் எல்லோரும் முதல் நாள் இரவே வந்து விட்டனர். மறந்தும் கூட யாரும் அவளைத் திட்டத்தவறவில்லை. ஆனால் அவர்கள் திட்டியது எந்த வகையிலும் அவளுக்கு வருத்தமளிக்கவில்லை.

கோமளா… வந்த நிமிடம் முதல் பாக்யாவை விட்டுப் பிரியவே இல்லை. அந்த இரவு காலவாயே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

பெரியதாகப் பந்தல் போடப்பட்டு… வாழைமரங்கள் கட்டப்பட்டு… காலவாய் ஆபீஸ் ரூமிலிருந்து மின்சாரம் இணைக்கப்பட்டு… சீரியல் விளக்குகளும். .. குழல் விளக்குகளும் அலங்கரிக்கபட்டு… சமையலுக்கென… வாடகைப் பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டு… சமையலுக்குத் தனியாக ஆள் வைத்து சமைக்கப்பட்டு……….
இத்தனை ‘ பட்டு ‘க்கள் நடக்குமென அவளே எதிர் பார்த்திருக்கவில்லை.

அந்த இரவு… இரண்டு மணிவரை.. அவள் தூங்கவில்லை. அவளோடு சேர்ந்து கோமளாவும் தூங்கவில்லை.
ராசுகூட இரண்டு மணிக்குமேல்தான் தூங்கப் போனான்.
அவனுடன் அவளது தம்பி… கோமளாவின் தம்பி.. என இன்னும் நான்கைந்து பேர் சேர்ந்து போய்.. களத்தில் படுத்துக்கொண்டனர்.

அவர்களுக்கு படுப்பதற்கு.. செட்டுக்குள் செங்கற்களை மூடி வைப்பதற்கு… வைத்திருந்த..தார்ப்பாயை எடுத்து வந்து விரித்து…. மற்ற…ஏற்பாடுகளும். . செய்து விட்டு.. ராசுவிடம்
”குட்நைட்.. பையா..” என்று சொலலிவிட்டுத்தான் வந்தாள் பாக்யா.
வீட்டுக்குள் அவளும்.. கோமளாவும் மட்டுமே படுத்தனர். கோமளா படுத்தவுடன் தூங்கி விட… அவளும் கண்களை மூடினாள்.

எத்தனை நேரம் என்று தெரியவில்லை. அவள் தூங்கி விழித்தபோது… வீட்டுக்கூரைமேல் மழைத்துளிகள விழும் சத்தம் கேட்டது.
உடனே எழுந்து விட்டாள். மணி பார்த்தாள்.
நாலுமணியாகியிருந்து. வெளியே போக… பந்தலின்கீழ் உட்கார்ந்து..அவளது அம்மா.. பாட்டி..ராசுவின் அம்மா என மூவரும் உட்கார்ந்து வெங்காயம் உளித்துக் கொண்டிருந்தனர். கோமளாவின் அம்மா அவர்கள் பக்கத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

”ஏன் தூங்கலியா..?” எனக் கேட்டாள் பாட்டி.
” மழ வருது..!” என்றாள்.
”மழவந்தா..உனக்கென்ன..? நீ போய் தூங்கு போ..” என்றாள் ராசுவின் அம்மா.
” மாமா. .தம்பியெல்லாம் களத்துல படுத்திருந்தாங்க..?”
” அப்ப நனஞ்சிட்டேதான் படுத்துருப்பாங்க..”
”நா போய் பாக்கறேன்..” என்று விட்டு வெளியே போக.. மழை தூரியவாறுதான் இருந்தது.

அந்த தூரலில்கூட..தூங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். முதலில் போய் ராசுவைத்தான் எழுப்பினாள்.
”மழை வருது பையா.. எந்திரி மேல..”
அவன் புரண்டு படுத்து..”தூரல்தான.. நீ போய் தூங்கு போ..” என்றான்.
”மணி நாலாச்சு..!! போதும் எந்திரி…!!”
” ஏய்… உனக்குத்தான்டி.. கல்யாணம்.. என் தூக்கத்த ஏன் கெடுக்கற… போய்ட்டு..ஒரு அஞ்சு மணிக்கு வந்து எழுப்பு..” என சுருண்டு படுத்தான்.

அவளுக்கு மிகவும் பாவமாகத்தோண்றியது.
”சரி.. வீட்டுக்குள்ள வந்து படுத்துக்க வா..” என அவன் நெஞ்சில் தடவினாள்.
” ப்ச்…போடீ… தொந்தரவு பண்ணாம..!”
”மழை பெய்துடா…நாயீ.. ஒடம்பெல்லாம் பாரு… இப்பவே நனஞ்சாச்சு..”
”எந்திரிச்சுட்டா.. அப்பறம் எனக்கு தூக்கம் வராதுடி..!பசங்கள வேனா எழுப்பி கூட்டிட்டு போ..!”
”நாயீ..” என்று திட்டிவிட்டு.. அவன் பக்கத்தில் படுத்திருந்தவர்களை எழுப்பி விட்டாள். அவன்கள் தூக்கக்கலக்கத்துடன் தள்ளாடிக்கொண்டே.. எழுந்து போக….
அவள் ஓடிப்போய்… செங்கல் செட்டுக்குள் கிடந்த இன்னொரு… தார்ப்பாயை எடுத்து வந்து… ராசுவின் மேல் போட்டு அவனை மூடிவிட்டாள்.
”தேங்க்ஸ்…” என்றான்.
”ஆ… மயிரு…!!” என்றுவிட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் தலையைக் கோதினாள்.
”பையா…”
” ம்…?”
” நா போறேன்…!!”
” நீயும் போய் தூங்கு… ஏழரை மணிக்குதான் முகூர்த்தம்..”
”எனக்கு இனி தூக்கம் வராது..”
” என்னமோ செய்… என்னை துங்கவிடு..”
” முத்தம் வேண்டாமா..?”
” ம்கூம்…”
” ஏன்டா…?”
” அதப்போய்…உன் பரத்துக்கு குடு…”
”அது…நாளைலருந்து..!!” எனச் சிரித்து… அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
அவன் அசையாமல் படுத்திருக்க… அவன் உதட்டில்.. அவளது உதட்டைப் பதித்து அழுத்தி..முத்தமிட்டு விலக…
அவள் கழுத்தில் கை போட்டு அவளைக் கீழே இழுத்தான். அவளது உதடுகளைச் சப்பினான்.
அவன் விட்டு.. ”போ…!” என்றான்.
மறுபடி.. அவளே.. அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு..
”தூங்கு பையா…” என்றுவிட்டு.. எழுந்து வீட்டுக்குப் போக… கோமளாவும் விழித்திருந்தாள்.
அதன்பிறகு… தூங்கவே இல்லை..!!

மழையும் பெரிதாகப் பெய்யவில்லை… மறுபடி… அவளும்.. கோமளாவும் போய்த்தான்… ராசுவை எழுப்பி விட்டார்கள்…!!

பாக்யா… பரத்.. திருமணம்.. எளிய முறையில்… எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் நடந்து முடிந்தது.
பஞ்சாயத்து நடந்ததற்குப் பிறகு… தாழி கட்டும் முன்பாகத்தான் பரத்தின் முகத்தைப் பார்த்தாள் பாக்யா.
அவளது மனம் இன்ப வெள்ளத்தில் தத்தளித்தது.

ஊர் மக்கள் அனைவருமே.. ஜாதி.. பேதமின்றி…அவளது திருமணத்துக்கு வந்திருந்தனர். அதில் எல்லோருமே அவளை ஆசீர்வதித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.. ஆனால்….. ஒருவர்கூட.. அவளைத் திட்டத் தவறவில்லை..!!

படிக்கவேண்டிய வயதில் இப்படி அவசரப்பட்டு… திருமணம் செய்து கொண்டதற்காக…!!

மதியத்திற்கு மேல்.. கோவிலுக்குப் புறப்பட்டார்கள். பாக்யா புடவை மாற்றிக்கொண்டிருக்க… கோமளா அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

” இன்னுமே.. என்னால நம்ப முடியல கோமு..” என்றாள் பாக்யா.
”என்ன…?” என அவளைக் கேட்டாள் கோமளா.
”என் கல்யாணம் இப்படி…நல்ல விதமா முடியும்னு.. ராசு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் எத்தனை பயத்துலருந்தேன் தெரியுமா..?”
” எல்லாம் ராசு பண்ணதுதான்.. எல்லாருகிட்டயும் பேசி… வரவெச்சு… எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது. ..”
”வெளில இருந்தா… அவன கூப்பிடு..”
” யாரு உன் புருஷனவா..?”
” ஏய்.. அவன இல்லடி… ராசுவ..”
”எதுக்குடி…?”
” கூப்பிடேன்…”

கோமளா வெளியே போனாள். பாக்யா புடவை மாற்றி.. தயாராகி விட்டாள்.

கோமளா உள்ளே வந்தாள். ”வர்றான்..”
ராசு வந்து ” என்ன பொறப்பட்டாச்சா..?” என்றான்.
” ம்..! நீயும் வா…!”
” நம்மளுக்கு அதெல்லாம் ஒத்து வராது… போய் நெறைய வரத்த வாங்கிட்டு வா..”
சிரித்தவாறு முன்னால் வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து… அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் பாக்யா.
”தேங்க்ஸ் பையா…”
”ஏய் லூசு… என்னடி இது…” என்றான் ராசு.
கோமளா பதறினாள் ”யேய்.. யாராவது வரப்போறாங்கடி..!”
” ரொம்ப.. ரொம்ப தேங்க்ஸ்டா..” என மனசு நெகிழ்ந்து சொன்னாள் பாக்யா..!!

மாலைவரை…சுமூகமாகத்தான் இருந்தது.
ஆனால் அதன் பிறகு ஒரு பிரச்சினை கிளம்பியது..!

இரவு… அவர்கள் எங்கே..தங்குவது என்கிற பிரச்சினை.!!

பரத்தின் அக்கா… அவனது வீட்டில்தான் பையனும்.. பொண்ணும் தங்க வேண்டும் என்று பிடிவாதமாக நிற்க….
பாக்யா வீட்டினர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
அந்தப் பிரச்சினை நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தது.
ஆளாலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க… அதுவரை அமைதியாக இருந்த பாக்யா… வெளியே போய்… அத்தனை பேர் முன்பாகவும் நின்று…
”யாரும் சண்டை போட வேண்டாம்…நாங்க.. அங்கயே போய் தங்கிக்கிறோம்..” என்று சொல்ல….

ராசு உட்பட… அவளது உறவினர்கள் அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள்.
அவளைத் திட்ட வந்தவர்களையும் அடக்கினான் ராசு. .!
”வாழப் போறவ.. அவ..! அவளே இப்படி சொன்னப்பறம்…இனி நாமெல்லாம் பேசறதுல.. அர்த்தமே இல்ல… விட்றுங்க..!”

அதன் பிறகு… அவளது வீட்டுச் சூழ்நிலையே மாறிப்போனது..!
அதுவரை கலகலப்பாக இருந்த வீடு… அமைதியாகிப் போனது..!

பரத்தின் அக்கா.. அவர்களைப் புறப்படச்சொல்ல.. இருவரும் போய்… புறப்படத்தயாராக…
அவளது சொந்தங்கள் எல்லாம் கிளம்பத் தொடங்கினர்..!!

” உங்க சொந்தக்காரங்க எல்லாம் கோவிச்சுட்டு போறாங்க போலருக்கு..?” என்றான் பரத்.
” போனா போயிட்டு போறாங்க..! அதுக்கென்ன பண்ண முடியும்…?” என்றாள் அவள்.

கோமளாவின் குடும்பம் தவிற.. மற்ற அனைவருமே கிளம்பினர்.
அவளது அப்பாவும்…அம்மாவும்… அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவது கேட்டது.
ராசுவின் அம்மாவைத் தவிற..வேறு யாரும் வந்து… அவளிடம் சொல்லிக்கொள்ளவில்லை.

அவள் புறப்பட்டு வீட்டுக்குள் நின்றிருந்த போதுதான் தெரிந்தது ராசுவும் கிளம்புகிறான் என்று..!!

அதுவரை இயல்பாக இருந்த அவளது மனதில்.. சட்டென ஒரு கலவரம் உருவானது.

அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள்..!
” எல்லாருமே போய்ட்டாங்க நீயாவது இரு தம்பி..!”
”இல்லக்கா..! கோவிச்சுக்காத..!” ராசு.
அவளது அப்பா ”நீ போகக்கூடாது ராசு..! இன்னிக்கு ஒரு நாள் இருந்துட்டு போ..! உனக்கு என்ன வேனுமோ..எல்லாம் நா வாங்கித்தரேன்..!” என்றார்.
”சே.. சே..! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மச்சா..! போயி.. இனி வேலைய பாக்கலாம்…!” என்றான் ராசு.

அம்மா…” அவ சொல்லிட்டான்னெல்லாம் கோவிச்சுட்டு போறியே தம்பி.. அவளப் பத்தி உனக்கே தெரியுமே..! அவள விட்று.. நீ..எங்களுக்காக இரு..!”
” சே.. சே..! அதுக்காகெல்லாம் இல்லக்கா..! நீ அப்படி எதும் நெனச்சுக்காத…” ராசு.

மறுபடி அப்பா ” இதபார் ராசு.. நீ சொன்னேங்கற.. ஒரே காரணத்துக்காகத்தான்.. இத்தனை கடன் பட்டு… எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு… நல்லபடியா இந்த கல்யாணத்த நடத்தி வெச்சோம்..! இல்லேன்னா..ஊர்க்காரரே என்னமோ பண்ணிட்டு போகட்டும்னு விட்றுப்போம்..! இப்ப இத்தனை ஏற்பாடு பண்ணதெல்லாம் நாம…! ஆனா அவன் எங்களுக்கு பையனே இல்லேன்னெல்லாம் சொன்னவங்க… இப்ப வந்து கூப்பிட்டதும்… அவங்க கூட போறதுக்கு நிக்கறா.. இப்பவே பெத்தவங்கள மதிக்காத.. இது எங்க நல்லா வாழப் போகுது..?
அவ எப்படியோ போய்ட்டு போறா… இனி அவளாச்சு… அவ புருசனாச்சு..! ஆனா அவ பேசிட்டானு… நீ போறதெல்லாம் எனக்கு சுத்தமாவே புடிக்கல…”
” என்ன மச்சா…நீங்க மறுபடி…மறுபடி…”

அவளது அம்மா இறுதியாக ஒன்று சொன்னாள்.
”இதபாரு தம்பி… நீ இருந்தா.. நாளைக்கு அவளைப் போய் மறு அழைப்புக்கு கூட்டிட்டு வருவோம்.. நீ போய்ட்டா.. இதோட கடைசி..! நீயே முடிவு பண்ணிக்க…!!”
ராசு ”என்னை மன்னிச்சுருக்கா… இதுக்கு மேல என்னால இருக்க முடியாது.. நா கெளம்பறேன்..” என்க…

அதைக்கேட்டுக்கொண்டிருந்த பாக்யாவின் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது.. மடை திறந்த வெள்ளம் போல…அவளின் கண்களிலிருந்து கண்ணீர் அருவி… வழிய…
பரத் அவள் தோளைத் தொட்டான். ”ஏய்….”

அவளால் தாங்க முடியவில்லை. சட்டென விம்மல் வெடித்தது. அப்படியே மடங்கி உட்கார்ந்து.. முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு கேவினாள்.
அவள் பக்கத்தில் உட்கார்ந்து.. அவளது தோளைத் தொட்ட பரத்தின் கையைத் தட்டிவிட்டாள்.

என்றுமில்லாத அளவு.. குமுறிக் குமுறி.. அழுதாள்.
பரத் மறுபடி தோள் தொட..மறுபடி… அவன் கையைத் தட்டிவிட்டாள்..!

சில நொடிகள்… அங்கேயே நின்றிருந்த பரத் எழுந்து வெளியே போனான்.

நேராக ராசுவிடம் போய்…
” பாக்யா அழுதுட்டிருக்கா.. போய் சமாதானப் படுத்திட்டு போங்க..” என்றான் பரத்.
ராசு ” ஏன். ..?”
”நீங்களும் போறீங்கன்னு அழறா…”
” அவ அழறானு.. ரொம்ப வருத்தப்படாத…. இன்னிக்கு ஒரு நாள்தான் அவ அழுவா.. இனிமே.. காலத்துக்கும் நீதான் அழவேண்டியிருக்கும்..” என்றவன்…. வெளியிலிருந்தே..

” குட்டிமா போய்ட்டு… வரேன்டா…” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

அவன் போன பின்பும்… நீண்ட நேரம் அழுதாள் பாக்யா..!!
அப்பறம்….
நிமிர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு… பரத்திடம் கேட்டாள்.
”போலாமா…?”
அவன் ” ம்…” சொல்ல….

அவனுடன் கிளம்பி வெளியே போனாள்…!
அவளது.. அம்மா. .. அப்பா… பெரியம்மா… பெரியப்பா… கோமளா… என எல்லோரும் பந்தலின் கீழே உட்கார்ந்திருக்க.
… பொதுவாக…
” நான் போய்ட்டு வரேன்…” என்றாள்.

யாருமே பதில் பேசவில்லை.
கோமளா மட்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பரத்தின் கையைப் பிடித்து…
”நட போலாம்…” என்க…

அவனும் பொதுவாக…
”நாங்க போய்ட்டு வரோம்..” என்றான்.

பாக்யாவின் அப்பா…
”பாத்து போங்க…!!” என்று மட்டும் சொல்ல….
தன் புதுக்கணவனுடன் நடந்தாள் பாக்யா….!!!!

{ முதல் தொகுதி… முடிந்தது }

வணக்கம் நண்பர்களே…!!
இந்தக் கதை… 75 % மேற்பட்டவை உண்மைச் சம்பவங்களே…!! கதைக்கோர்வைக்காக மட்டுமே.. என் கற்பனையை பயண்படுத்தியிருக்கிறேன்..!!
மற்றபடி… இதில் வரும் நிகழ்வுகள்…{ பெரும்பாலான வார்த்தைகள் உட்பட..} எல்லாம் பொய்க்கலப்பற்றவையே…!!
கதாபாத்திரங்கள்… ஒருவர்கூட… கற்பனை பாத்திரம் அல்ல… அனைவரும் உண்மையானவர்களே…!!
இந்தக் கதையை இரண்டு தொகுதிகளாகத்தான் கொடுக்க நினைத்திருந்தேன்…!!
ஆனால் இது ஒரு உண்மைக்கதை என்பதால்… இதற்கு மேல் தொடர்வது… இப்போதைக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது…!!
இருப்பினும்…இன்னொரு சந்தர்ப்பத்தில்… நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து… அடுத்த தொகுதியைச் சொல்கிறேன்…..!!!!

மற்றபடி… இந்தக் கதை பற்றின… உங்கள்… உணர்வுகள்… அபிப்ராயங்கள்… கருத்துக்கள்… எதையும் மறைக்காமல்… திறந்த மனதுடன் சொல்லுங்கள்…!!
அது எனது மற்ற கதைகளுக்கு… உதவியாக இருக்கும்…!!!!

— நன்றி…..!!!!

Comments