நெஞ்சோடு கலந்திடு – பகுதி 32
“பாரு திவ்யா.. அவன் உன் மேல வச்சிருக்குற காதலை பாரு..!! என் தம்பி எந்த அளவுக்கு உன் மேல பைத்தியமா இருந்திருந்தா.. இதெல்லாம் சேர்த்து வச்சிருப்பான்..? நல்லா பாரு..!! இவன் உனக்கு வேணாமா திவ்யா.. உன் மேல உயிரையே வச்சிருக்குற இவன் உனக்கு வேணாமா..?”
தழதழத்த குரலில் சொன்ன சித்ரா அப்படியே மடங்கிப்போய் தரையில் அமர்ந்தாள். கட்டிலில் சாய்ந்து கொண்டாள். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
திவ்யா உண்மையிலேயே திகைத்துப் போனாள். அசோக் அவளை காதலிக்கிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனால்.. ‘எப்போதிருந்து..?’ என்ற உண்மை இப்போதுதான் அவளுடைய புத்தியில் வலுவாக அறைந்தது. விவரம் தெரியாத சின்ன வயதில் இருந்தே இதையெல்லாம் பொறுக்கி எடுத்து பொக்கிஷமாக சேகரித்து வைத்திருக்கிறான் என்றால்..?? திவ்யாவின் மனக்கண்ணில் இப்போது அசோக்கின் காதல் திடீரென அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. மளமளவென மலை அளவு வளர்ந்து அவள் முன்பு பிரம்மாண்டமாக நிற்க, அதை அவள் அண்ணாந்து பார்த்தாள்.
திவ்யாவுடைய கண்கள் இரண்டும் இப்போது கண்ணீரை கசிய ஆரம்பித்தன. சொட்டு சொட்டாய் கண்ணீர் வெளிப்பட்டு அவளுடைய கன்னங்களை நனைத்து ஓட, அவளது உதடுகள் படபடத்தன. பற்களால் அழுத்தி தன் உதடுகளை கடித்து உணர்ச்சியை கட்டுப்படுத்த முயன்றாள். கொட்டிக்கிடந்த பொருட்களை தனது வலது கையால் அப்படியே தடவிப் பார்த்தாள். அவளுடைய விரல்கள் ஐந்தும் அந்தப் பொருட்கள் மீது அலைஅலையாய் ஊர்ந்து சென்றன. ஒவ்வொரு பொருளாக கடந்து சென்ற அவளுடைய கை.. ஒரு பொருளை மட்டும் பற்றி மேலெழும்பியது..!!
அது.. திவ்யாவின் ஒற்றைக் கால் கொலுசு..!! மரம் வளருமென முட்டைகளை புதைத்த அன்று காணாமல் போன கொலுசு..!! ‘அழகா இருக்கு திவ்யா..!!’ என்று அசோக் ஆசையாக சொன்னவாறு, அன்று தடவிப் பார்த்த கொலுசு..!! இதோ அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாளே.. அவளுடன் திவ்யா பேசாமலிருக்க காரணமான சம்பவம் நடந்த அன்றுதான் இந்தக் கொலுசும் காணாமல் போனது..!! திவ்யாவுடைய வலது கையில் நிரந்தரமாகிப் போன ஒரு நெருப்பு சுட்ட தழும்பும், அன்றுதான் முதன்முறையாக கையில் ஏறியது..!!
இப்போது திவ்யா கொலுசை இறுகப் பற்றியிருந்த கையை மெல்ல திருப்பி, அந்த தழும்பை பார்த்தாள். அதை பார்க்க பார்க்க.. அவளுடைய கண்கள் இன்னும் அதிகப்படியான நீரை சிந்தின. சித்ரா இப்போது தலையை நிமிர்த்தி திவ்யாவை பார்த்தாள். அப்புறம் அவள் பார்வை சென்ற இடத்தை கவனித்தவளுக்கு, திவ்யாவுடைய தழும்பு கண்ணில் பட்டது.
சில வினாடிகள் அந்த தழும்பையே பாவமாக பார்த்த சித்ரா, அப்புறம் தன் வலது கையை மெல்ல நீட்டினாள். திவ்யாவுடைய முழங்கைக்கு அருகே தென்பட்ட அந்த தழும்பை தன் கைவிரல்களால் மெல்ல வருடினாள். திவ்யா தன் கையை சித்ராவிடமிருந்து இப்போது விலக்கிக் கொள்ளவில்லை. அண்ணியின் முகத்தை ஏறிட்டாள். அவளோ இப்போது பரிதாபமான குரலில் சொன்னாள்.
“சின்ன வயசுல.. நான் தெரியாம செஞ்ச தப்பால.. உன் கைல சூடு விழுந்துடுச்சு..!! அன்னைக்கு நான் ரொம்ப சின்னப்பொண்ணு.. ஏதோ கேக்கனுமேன்னு பேருக்கு கேட்டேன்.. இப்போ வளர்ந்து பெரியவளாயிட்டேன்.. என் மனசார கேக்குறேன்.. என்னை மன்னிச்சுடு திவ்யா..!! உன் கைல சூடு விழ வச்சதுக்கு என்னை மன்னிச்சுடு..!!”
சித்ரா சொல்லிவிட்டு அழ, திவ்யாவாலும் அவளுடைய உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சி அலைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. அவளுடைய உதடுகள் துடிக்க, கண்களில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்தது. கண்களில் வழியும் நீருடனே அண்ணியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சித்ராவும் திவ்யாவும் அவ்வாறு அருகருகே அமர்ந்து கொண்டு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், மெத்தையில் கிடந்த திவ்யாவின் செல்போன் அலறியது..!!
ஒரே நேரத்தில் திவ்யாவும், சித்ராவும் செல்போனை திரும்பி பார்த்தார்கள். ‘DIVAKAR CALLING.. DIVAKAR CALLING..’ என்று டிஸ்ப்ளே பளிச்சிட்டது..!! இருவரும் ஒரே நேரத்தில் செல்போனை நோக்கி கைநீட்ட, அது திவ்யாவின் கையில் சிக்கியது. இப்போது சித்ரா லேசான பதட்டத்துடன் சொன்னாள்.
“ப்ளீஸ் திவ்யா.. அ..அந்த காலை கட் பண்ணு.. அண்ணி சொல்றதை கேளு.. அந்த ஆள் சகவாசமே நமக்கு வேணாம்..!! நீ, அசோக், நான், உன் அண்ணன்.. நம்ம நாலு பேரும் நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம்..!! ப்ளீஸ் திவ்யா..”
திவ்யா ஒரு சில வினாடிகள் அண்ணியின் முகத்தையும், கையிலிருந்த செல்போனையும் மாறி மாறி பார்த்தாள். கொஞ்ச நேரத்திற்கு அவளுடைய மனதில் ஒரு குழப்பமான போராட்டம். அப்புறம் ஏதோ முடிவுக்கு வந்தவளாய், பட்டென காலை பிக்கப் செய்தாள். கண்களில் வழிந்த நீரை ஒரு கையால் துடைத்துக்கொண்டே,
“ஹலோ..” என்றாள்.
“…………………….” அடுத்த முனையில் திவாகர் ஏதோ கேட்க,
“ம்ம்.. கெளம்பிட்டேன்.. இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வந்துடுவேன்..!!”
திவ்யா சொல்லிவிட்டு காலை கட் செய்ய, சித்ரா இப்போது சுத்தமாய் பேச்சிழந்து போயிருந்தாள். திவ்யாவையே ஒருமாதிரி ஸ்தம்பித்துப்போய் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
திவ்யா எழுந்தாள். ஈர டவலால் முகத்தை துடைத்துக் கொண்டு, லேசாக பவுடர் பூசிக் கொண்டாள். பேக் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டுகொண்டிருக்கும் சித்ராவை ஓரிரு வினாடிகள் கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் அவசரமாய் நடந்து அந்த அறையை விட்டு வெளியேறினாள். சித்ரா நீர்த்திரையிட்ட விழிகளுடன், இறுதி வரை எதுவுமே பேசாமல் செல்லும் திவ்யாவின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அத்தியாயம் 32
குண்டும் குழியுமாக இருந்தது அந்த சாலை. மிதமான வேகத்தில் செல்லும்போதே ஆட்டோ அப்படியும் இப்படியுமாய் குலுங்கியது. திவ்யாவோ ஆட்டோவுக்குள்ளே மனம் கலங்கிப்போனவளாய் அமர்ந்திருந்தாள். அவளுடைய பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்திருந்தது. அவளுடைய மூளையின் ஒவ்வொரு அணுவிலும், குறுக்கும் நெடுக்குமாய் பலவித குழப்ப எண்ணங்கள். அவள் எவ்வளவோ முயன்று மனதை தெளிவாக வைத்துக் கொள்ள நினைத்தும், அது மேலும் மேலும் குழம்பிய குட்டையாகவே மாறிக்கொண்டிருந்தது.
அசோக்கும், திவாகரும் அவளுடைய மனக்கண்ணில் மாறி மாறி தோன்றிக் கொண்டிருந்தார்கள். வசீகரமாக சிரித்தார்கள். ஆளுக்கொரு புறம் நின்று கையசைத்து அழைத்தார்கள். அவள் குழம்பிப்போய் பரிதாபமாக பார்க்க, இருவரும் கைகொட்டி சிரித்தார்கள். சிந்தித்து சிந்தித்து.. அந்த குழப்ப எண்ணங்களில் உழன்று உழன்று.. திவ்யாவுக்கு மூளை தீப்பிடித்துக் கொண்டது மாதிரி இருந்தது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். தலையை இரண்டு புறமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அமைதியாக ஆட்டோ சீட்டில் தலையை சாய்ந்துகொண்டாள்.
“நீ சொன்ன எடம் வந்துருச்சும்மா.. இங்கயா.. இன்னும் போகனுமா..?”
ஆட்டோக்காரரின் குரல் திவ்யாவை நனவுலகுக்கு இழுத்து வந்தது. ஒருகணம் அவள் எங்கே இருக்கிறோம் என்றே குழம்பிப் போனாள். தலையை அப்படியும் இப்படியுமாய் திருப்பி திருப்பி பார்த்தாள். வெளியே இப்போது நன்றாக இருட்டியிருந்தது. ஆட்டோ நின்ற இடம் ஓரளவுக்கு பிடிபட்டதும், ஆட்டோவுக்கு பின்புறமாக இருந்த கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். கொஞ்ச தூரத்திலேயே ஒரு மரத்தின் அடியில் திவாகரின் கார் நிற்பது தெரிந்தது. உடனே அவசரமாய் ஆட்டோக்காரரிடம் சொன்னாள்.
“இங்கதாங்க.. நிறுத்துங்க..”
ஏறும்போதே பேசியபடி மீட்டருக்கு மேலே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கினாள். திரும்பி திவாகரின் காரை நோக்கி நடந்தாள். அவள் காரை நெருங்கியதுமே, காரின் ஒருபக்க கதவு திறந்து கொண்டது. உள்ளே ஏறி அமர்ந்தாள். அமர்ந்ததுமே ஏதோ ஒரு விரும்பத்தகாத நெடி அவளுடைய நாசியை குப்பென தாக்கியது. ‘என்ன ஸ்மெல் இது..? இது.. இது.. சில சமயங்கள் அசோக்கிடம் இருந்து இந்த ஸ்மெல் வருமே..? தி..திவாகர் குடித்திருக்கிறாரா என்ன..?’ அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
“எவ்வளவு நேரம் வெயிட் பண்றது..?” திவாகர் ஒருவித எரிச்சலான குரலில் கேட்டான்.
“ஸா..ஸாரி..” என்றாள் திவ்யா மென்மையாக.
“காலேஜ்ல இருந்து அப்போவே கெளம்பிட்டல..? அப்புறமும் ஏன் லேட்டு..?”
“வீ..வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டாங்க..”
“ம்ம்.. எல்லாம் நம்மள மண்டை காய விடுறதுக்குனே எங்க இருந்தாவது வந்துருவானுக..!! சரி போலாமா..?”
“ம்ம்.. போலாம்..!!”
கார் கிளம்பியது. திவாகருக்கு இன்னும் கோபம் போகவில்லையோ என்று திவ்யாவுக்கு பட்டது. நேற்று நள்ளிரவு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் விட்டதற்கு காலையில் அவனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள். ‘உடம்பு சரியில்லை.. நல்ல தலைவலி..’ என்று சமாளித்துப் பார்த்தும் அவன் சமாதானம் ஆகவில்லை. நன்றாக இவளை திட்டிவிட்டு காலை கட் செய்துவிட்டான்.
அப்புறம் திவ்யா திரும்ப கால் செய்தபோது, திவாகர் எடுக்கவில்லை. திவ்யாவுக்கு ஏனோ மறுபடியும் கால் செய்து அவனிடம் கெஞ்ச தோன்றவில்லை. அவளுடைய மனதில் வேறு சில குழப்பங்கள். அப்படியே விட்டுவிட்டாள். மதியத்துக்கு மேல் அவனே திரும்ப கால் செய்தான். ‘ஈவினிங்காவது சீக்கிரம் வா..!!’ என்றான் கோபம் குறைந்தவன் போல. இப்போது பார்த்தால் மீண்டும் கோபமாக இருக்கிறானோ என்பது மாதிரி இருந்தது அவனது முகம். ஆனால் அவள் அவ்வாறு நினைத்து கொண்டிருக்கும்போதே,
“ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்குற திவ்யா..?” திவாகர் மிகவும் கவலையாக கேட்டான்.
“அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே..?”
“இல்ல.. உன் முகம் ஏதோ வாடிப் போன மாதிரி இருக்குது..!!”
“சேச்சே.. அப்டிலாம் எதுவும் இல்ல திவாகர்.. நான் நார்மலாத்தான் இருக்குறேன்..!!”
“ம்ம்ம்… இந்த ட்ரெஸ் உனக்கு நல்லா இருக்கு திவ்யா..!!”
“தே..தேங்க்ஸ்..”
சொல்லிவிட்டு திவ்யா மெலிதாக புன்னகைக்க, அவனும் இப்போது இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தான். ‘இவன் எந்த நேரத்தில் எந்த மாதிரி பிஹேவ் செய்வான் என்றே புரிந்து கொள்ளவே முடியவில்லையே.. ஏன்..?’ என திவ்யா இப்போது மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த உடையை ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்டாள். பார்த்ததுமே அசோக்கின் நினைவு அவளுடைய மனதுக்குள் பரபரவென பரவ ஆரம்பித்தது.
“ஐயே.. இது எனக்கு பிடிக்கவே இல்ல..”
“ப்ச்.. உன் ஆளுக்கு புடிக்கனுமா வேணாமா..?”
“பு..புடிக்கணும்..”
“அப்போ இதை எடுத்துக்கோ..!!”
அசோக்கின் நினைவு வந்ததும், சற்றுமுன் ஆட்டோவுக்குள் இருந்த அதே மனநிலைக்கே திவ்யா இப்போது மீண்டும் ஆட்பட்டாள். மீண்டும் குறுக்கும் நெடுக்குமாய் அதே குழப்ப எண்ணங்கள். மீண்டும் அதே தலைவலி..!! திவாகர் அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருக்க, திவ்யா கண்களை மூடி மனதை ஆசுவாசப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும். ஏதோ ஒரு குழப்பமான கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த திவ்யா திடீரென விழிப்பு வந்தவளாய் தலையை உதறிக் கொண்டாள். கார் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். சுற்றிலும் கும்மென்று இருள் மண்டிக்கிடந்தது. தெருவிளக்குகள் கூட இல்லாத சாலையில் கார் சீறிக் கொண்டிருந்தது.
“எங்க போயிட்டு இருக்கோம்..?” திவ்யா குழப்பமாக கேட்டாள்.
“என் வீட்டுக்கு..!!”
“வீட்டுக்கா..? வீட்லையா பார்ட்டி..??”
“எஸ்..!!”
“நே..நேத்து ஏதோ ரெஸ்டாரன்ட்ன்னு சொன்னீங்க..?”
“அது என் பிசினஸ் பிரண்ட்சுக்காக.. அது ஈவினிங்கே முடிஞ்சது..!! இது உனக்கு மட்டும்.. ஸ்பெஷலா..!!” திவாகர் சொல்லிவிட்டு இளித்தான்.
“ஓ..!! நான் ரெஸ்டாரன்ட்ன்னு நெனச்சேன்..”
“எங்க இருந்தா என்ன..? அதில்லாம.. நீ இதுவரை என் வீட்டுக்கு வந்ததே இல்லைல..?”
“ம்ஹூம்..”
“இன்னைக்கு வா.. வந்து பாரு.. நீ வாழப்போற வீட்டை..!! நேரா வீட்டுக்கு போறோம்.. ஃபோன் பண்ணி சாப்பாடு ஆர்டர் பண்றோம்.. மொட்டை மாடில கேண்டில் லைட் வெளிச்சத்துல உக்காந்து சாப்பிடுறோம்..!! வாவ்… நெனச்சுப் பாக்கவே ரொம்ப ரொமாண்டிக்கா இருக்குல..?” திவாகர் உற்சாகமாக கேட்க,
“ம்ம்ம்..” திவ்யா சுரத்தே இல்லாத குரலில் சொன்னாள்.
அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்களில் கார் அந்த வீட்டை அடைந்தது. சுற்றிலும் எந்த வீடும் இன்றி இருளுக்குள் தனியாக நின்றிருந்தது திவாகரின் வீடு. திவ்யா நினைத்ததை விட வீடு பெரிதாக பிரமாண்டமாகவே இருந்தது. திவாகர் காரை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்தி பார்க் செய்தான். இறங்கிக் கொண்டார்கள். அந்த ஆறடி உயர க்ரில் கேட்டை திவாகர் திறந்து உள்ளே தள்ளிவிட்டான். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
“வீட்ல யாரும் இல்லையா..?” ஹாலுக்குள் நுழைந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே திவ்யா கேட்டாள்.
“நீ வர்றேன்னு வேலைக்காரங்களுக்குலாம் லீவ் கொடுத்து அனுப்பிச்சுட்டேன்..!!”
திவாகர் சொல்ல, திவ்யாவுக்கு ஏதோ மனதுக்குள் உறுத்தியது. ‘ஏன்.. அவர்கள் இருந்தால் என்ன..?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, திவாகர் கேஷுவலான குரலில் கேட்டான்.
“சரி என்ன சாப்பிடுற..? காபி, டீ ஆர் ஜூஸ்..?” என்று கேட்டவன், திவ்யா பதில் சொல்வதற்கு முன்பே,
“ஜூஸ் சாப்பிடலாம்.. சரியா..?” என்று அவனே பதிலும் சொல்லிக்கொண்டான். மேலும்,
“நானே இன்னைக்கு என் கையால.. என் செல்ல திவ்யாக்குட்டிக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.. ஜஸ்ட் டூ மினிட்ஸ்.. இங்கயே வெயிட் பண்ணு..!!”
என்று கொஞ்சலாக சொல்லிவிட்டு உள்ளறைக்குள் சென்று மறைந்தான். திவ்யாவுக்கு எதுவுமே சொல்ல தோன்றவில்லை. திவாகரை எதிர்த்து எதுவும் பேச தோன்றவில்லை. அமைதியாக சென்று ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டவள், கர்ட்டைனை விலக்கி வெளியில் தெரிந்த இருளை வெறித்தாள்.
ஒரு ஐந்து நிமிடத்தில் திவாகர் மீண்டும் ஹாலுக்குள் பிரவேசித்தான். இப்போது அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு க்ளாஸ்கள் உதித்திருந்தன. சிரித்தவாறே நடந்து வந்து திவ்யாவின் தோளை தொட்டான். அவள் திரும்பி பார்த்ததும் ஒரு க்ளாஸை அவளிடம் நீட்டினான். திவ்யா குழப்பமான குரலில் கேட்டாள்.
“என்னது இது..?”
“ஸ்வீட் லைம்..!!”
“ஐயோ.. லைம் எனக்கு பிடிக்காதே..” திவ்யா முகத்தை சுளித்தவாறே சொல்ல,
“ஆனா.. எனக்கு பிடிக்குமே..?” திவாகர் பல்லை காட்டினான்.
“கமான் திவ்யா.. சாப்பிடு.. நல்லாருக்கும்..” என்று அவளை கட்டாயப்படுத்தினான்.
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :