ஐ ஹேட் யூ, பட் – பகுதி 23

“காட்டுறேன்.. நீ நெனைக்கிற அளவுக்கு நான் கேவலமானவன் இல்லன்னு காட்டுறேன்..!!”

அசோக் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை அவசரமாய் எடுத்தான். ராஜேஷின் நம்பருக்கு கால் செய்தான். அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் ப்ரியா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜேஷ் காலை பிக் செய்து ஹலோ சொல்வதற்கு முன்பே..

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஏய்.. எனக்கு அர்ஜண்டா ஒரு பொண்ணு வேணும்..!!” என்றான் அசோக் அவசரமாய்.

“டேய்.. நான் ராஜேஷ்டா.. உன் அண்ணன்..!!” அடுத்த முனையில் ராஜேஷ் பதறினான்.

“ஆமாம்.. அதுக்கு என்ன..??” அசோக் புரியாமல் கேட்டான்.

“இல்ல.. திடீர்னு கால் பண்ணி அர்ஜண்டா பொண்ணு வேணும்னு சொல்றியே.. அதான்.. வேற யாருக்கும் பண்ண வேண்டிய காலை எனக்கு பண்ணிட்டியோன்னு..!!”

“அடச்சை..!! நான் கல்யாணம் செஞ்சுக்குறதுக்கு சொன்னேன்டா..!!” அசோக் ராஜேஷிடம் சொல்ல, ப்ரியா இப்போது அசோக்கை உஷ்ணமாக முறைத்தாள்.

“அதான்.. நீயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டியே..??”

“ஆமாம்.. அப்படித்தான் சொன்னேன்.. ஆனா நான் பாத்தது ஒன்னும் சரி இல்ல.. எல்லாம் திமிர் புடிச்சவளுகளா இருக்காளுக..!!” அசோக் ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“ஓஹோ..!!”

“நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.. கூடிய சீக்கிரம் எனக்கு ஒரு பொண்ணு பாக்குற..!! நீ யாரை கொண்டு வந்து நிறுத்தினாலும்.. நான் அவ கழுத்துல தாலி கட்டுறேன்.. அது யாரா இருந்தாலும் சரிதான்..!! எல்லாம் உன் இஷ்டந்தான்.. புரியுதா..??”

“சரிடா சரிடா.. புரியுது..!! நான் பாத்துக்குறேன்.. விடு..!!”

அசோக் காலை கட் செய்தான். ப்ரியாவை ஏறிட்டு எகத்தாளமாய் ஒரு பார்வை பார்த்தான். ப்ரியா அசோக் மீது எழுந்த கோவத்தில்.. வேகவேகமாக மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் விம்மி விம்மி சுருங்க.. இவனையே முறைத்து பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள்..!! ஒரு சில வினாடிகள் இருவரும் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க.. அப்புறம் அசோக் ‘ஹ்ம்ம்..’ என்று சலிப்பாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். ப்ரியா அவன் போவதையே ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம்.. அங்கே அசோக்கின் வீட்டில்.. ராஜேஷ் தலையை சொறிந்தவாறு அமர்ந்திருந்தான்..!! தம்பி சொன்ன வார்த்தைகளை நம்புவதற்கு.. அவனுக்கு நிறைய நேரம் பிடித்தது..!! ஒரு வழியாய் நம்பிக்கை வந்ததும்.. என்ன செய்யலாம் என்று யோசித்தான்..!! ‘உடனே வேண்டும் என்று வேறு சொல்கிறானே.. இப்போதுதான் அவனுக்கு நான் அண்ணன் என்ற மரியாதையே வந்திருகிறது.. இந்த வாய்ப்பை விடக்கூடாது.. உடனடியாய் இவனை அமுக்கிப் போட வேண்டும்..’ என்று நினைத்தவன், கையிலிருந்த செல்போனை எடுத்து காண்டாக்ட் லிஸ்டில், அவன் எப்போதோ ஸேவ் செய்து வைத்திருந்த ஒரு நம்பரை இப்போது தேடினான். தேடிய நம்பர் கிடைத்ததும் கால் செய்து காதில் வைத்துக்கொண்டான். அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்படும் வரை காத்திருந்தான். பிக்கப் செய்யப்பட்டதும்..

“ஹலோ.. மிஸ்டர் வரதராஜன்..??” என்றான்.

அத்தியாயம் 14

அசோக்கிற்கு திகில் படங்கள் பார்ப்பதென்றால் அலாதி ப்ரியம்..!! அதுவும் நள்ளிரவில்.. கும்மிருட்டுக்குள்.. தனியாக அமர்ந்து பார்க்கவேண்டும்..!! தனது லேப்டாப்பில்.. ஆங்கில மொழியில் வெளியான பேய்ப்படம் ஒன்றை ஓட விட்டு.. காதுக்கு ஹெட்ஃபோன் கொடுத்து.. கண்களிலும் இதயத்திலும் பயம் நிரம்பி வழிய வழிய.. ஒருவித பதைபதைப்புடன் பார்க்கவேண்டும்.. பார்க்கும்போதே இதயம் படக் படக்கென பதறி துடிக்கவேண்டும்.. அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம்..!!

அன்றும் அந்த மாதிரிதான்.. நேரம் நள்ளிரவு 12 மணியை தாண்டியிருந்தது..!! அசோக் தனது படுக்கையில் கால்களை இறுக்க கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பிருந்த லேப்டாப்பில் புதிதாக வெளியாயிருந்த ஒரு ஆங்கில பேய்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அறையின் இரவு விளக்கு கூட அணைக்கப்பட்டிருக்க, லேப்டாப் மட்டுமே செவ்வக வடிவத்தில் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. படம் முழுக்கவே அவ்வப்போது வந்த பயமுறுத்தும் காட்சிகளால் அசோக் திகிலடைந்து போயிருந்தான். இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்ப்பவர்களை உச்சபட்சமாய் பயமுறுத்தி பார்க்கிற படலம்..!!

இருண்டு போன பேய் பங்களா ஒன்றில் தனியாக மாட்டிக்கொண்ட கதாநாயகன், ஒரு அறைக்குள் இருந்து வினோத ஒலி கிளம்புவதை கேட்கிறான். சுற்றிலும் இருள் மண்டிக்கிடக்க, கையில் இருக்கும் ஒரு சிறிய விளக்குடன் அந்த அறையை நோக்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறான். சிறு ஓசை கூட இல்லாமல் ஒரே நிசப்தமாய் காட்சி நகர, அசோக் அந்த காட்சியுடன் மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிகள் விரிந்து போய் லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருக்க, அவனது இதயம் சுருங்கி விரியும் சப்தத்தை கூட அவனால் தெளிவாக கேட்க முடிந்தது. அப்போதுதான் திடீரென அவனுடைய முதுகுப்பக்கம் கிடந்த செல்போன் வீறிட்டது..!!

“நாக்ரதனா திரனனா தனனா.. தன நாக்ரதனா தன திரனனா திரனா..!!”

‘எந்த நேரமும் பேய் தனது கோர முகத்தை காட்டப்போகிறது..’ என்று திரையையே வெறித்துக் கொண்டிருந்த அசோக், அவனுக்கு பின்பக்கமாக இருந்து செல்போன் திடீரென அலறியதும் அப்படியே குலை நடுங்கிப் போனான். அவனுடைய கட்டுப்பாடின்றியே ‘ஆஆவ்…!!’ என்று கத்திவிட்டான். நாடி நரம்பெல்லாம் இன்ஸ்டண்டாய் ஒரு பய மின்சாரம் ஓட, உடல் உதறல் எடுத்துக் கொண்டது.. குப்பென வியர்த்துப் போனது..!! இருதயம் உச்ச பட்ச வேகத்தில் திடுக் திடுக் என அடித்துக் கொண்டது. மார்பு குபுக் குபுக்கென விரிந்து விரிந்து சுருங்க, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.

செல்போன்தான் அடித்தது என்று அவன் புத்திக்கு புரிந்த பின்னும், மிரண்டு போன அவனது இதயம் தனது துடிப்பின் வேகத்தை குறைக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. அவனுடைய உடலில் எழுந்த பய அதிர்வும் அடங்க சில வினாடிகள் பிடித்தன. கண்களை மூடி சுவாசத்தை சீராக்க முயற்சி செய்தான்.

அவனுடைய மனதும் உடலும் ஓரளவு ஆசுவாசம் அடைந்ததும், ‘இந்த நேரத்துல எந்த எழவெடுத்த நாயி..??’ என்று உலகமாக ஆத்திரத்துடன், இன்னும் நடுங்கும் விரல்களாலேயே அவசரமாய் தன் செல்போனை எட்டி எடுத்தான். எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன் இன்னும் அதிகமான ஆத்திரத்துக்கு உள்ளானான். ப்ரியா கால் செய்திருந்தாள்..!!

‘ச்ச.. பகல்லதான் பத்திரகாளி மாதிரி அந்த ஆட்டம் ஆடுறான்னா.. ராத்திரிலயும் ரத்தக்காட்டேரி மாதிரி.. இப்படி ஃபோன் பண்ணி கிலியை கிளப்புறாளே..?? மனுஷனை நிம்மதியாவே இருக்க விடமாட்டாளா..??’ என்று பற்களை நறநறவென கடித்தான். அந்த ஆத்திரத்துடனே கால் பிக்கப் செய்து காதில் வைத்தான். ப்ரியா ஹலோ சொல்வதற்கு முன்பே இவன் அவளை கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!!

“பிசாசு.. பிசாசு.. பேய்.. காட்டேரி..!!”

“ப்ச்.. ஏண்டா திட்டுற..??” அடுத்த முனையில் ப்ரியா எரிச்சலாக கேட்டாள்.

“பின்ன என்ன.. ஃபோன் பண்றதுக்கு உனக்கு வேற நேரமே கெடைக்கலையா..?? நடுச்சாமத்துல ஜகன்மோகினி மாதிரி..!!”

“எ..எனக்கு உன்கிட்ட பேசணும் போல இருந்தது..!!”

“இந்த நேரத்துலயா..??”

“ஹ்ம்ம்..!!”

“ஏன்..??”

“எனக்கு தூக்கமே வரலை..!!”

“ஓ.. தாலாட்டு பாடணுமா நான்..??” அசோக் எரிச்சலும் கேலியுமாய் கேட்டான்.

“இ..இல்ல..!!”

“அப்புறம்..??”

“எ..என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லணும்..!!” ப்ரியா ஒருமாதிரி பரிதாபமான குரலில் சொல்ல, இப்போது அசோக் சற்றே ஆத்திரம் தணிந்தான்.

“எதுக்கு மன்னிப்பு..??” என்றான் கம்மலான குரலில்.

“நா..நான்.. சத்தியமா உன்னை ஹர்ட் பண்ணனும்னு இன்னைக்கு காலைல அப்படி சொல்லலடா.. எப்போவும் போலதான் வெளையாட்டுக்கு சொன்னேன்..!! நாம பேசிட்டு இருந்த சிச்சுவேஷன் சரி இல்லாததால.. உனக்கு தப்பா தோணிருச்சு..!! நீயே கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு அசோக்.. உன்னைப்போய் நான் அப்படிலாம் நெனைப்பனா.. எவ கட்டிப்பான்லாம்.. ம்ம்ம்..?? உனக்கு என்னடா கொறைச்சல்..?? உன்னை கட்டிக்க பொண்ணுகலாம் நான் நீன்னு போட்டி போடுவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இதை சொல்லத்தான் இந்த நடுராத்திரில கால் பண்ணினியா..??”

“ஆமாம்..!! அப்புறம்.. உன் லீவ் கேன்சல் பண்ணினது கூட நான் வேணும்னு பண்ணல.. எனக்கு வேற வழி தெரியலை அசோக்.. கிரிட்டிக்கல் வொர்க்.. உன்னை விட்ட எனக்கு வேற யார் இருக்கா.. சொல்லு..!! உனக்கு கண்டிப்பா லீவ் வேணும்னா.. பாலாட்ட பேசு.. அவர் ஓகே சொன்னா.. நான் அப்ரூவ் பண்றேன்..!!”

“பரவால.. நான் அவனுக்கு ஃபோன் பண்ணி வர முடியாதுன்னு சொல்லிட்டேன்..!!”

“ஹ்ம்ம்.. எனக்கு இன்னிக்கு பூரா அதே நெனைப்பாவே இருந்தது அசோக்.. நான் சொன்னதை நீ தப்பா எடுத்துக்கிட்டியேன்னு நெனச்சு நெனச்சு.. எந்த வேலையுமே ஓடலை..!! இப்போ படுத்து இவ்வளவு நேரம் ஆகியும் தூக்கமே வரலை.. எவ்வளவு நேரந்தான் சும்மா கண்ணை மூடிட்டே கெடக்குறது..?? அதான்.. உன்கிட்டயே பேசிடலாம்னு தோணுச்சு..!!”

“ஹ்ம்ம்..!!”

“நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு நெனச்சு சொல்லலடா..!! நீ அப்படி தப்பா நெனச்சிருந்தா.. அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்..!! என்னை மன்னிச்சுடு அசோக்.. ப்ளீஸ்..!!”

ப்ரியாவின் குரல் மிகவும் கெஞ்சலாக ஒலித்தது. அவள் இந்த மாதிரி நள்ளிரவு கால் செய்து, தன் மனதில் இருந்ததை தெளிவு படுத்தி மன்னிப்பு கேட்டதில், அசோக் சற்றே நெகிழ்ந்து போனான். அவன் மனதில் இருந்த ஈகோமூட்டம் இப்போது கொஞ்சமாய் விலக, காதல்மதி மெல்ல எட்டிப் பார்த்தது. தானுந்தான் அவள் சாதாரணமாக சொன்னதை சீரியசாக எடுத்துக்கொண்டு, ஓவர் ரியாக்ட் செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனால் மனதில் ஏற்பட்ட அந்த நெகிழ்ச்சியை குரலில் காட்டிக்கொள்ளாமல்,

“பரவால விடு..!!” என்றான் இறுக்கமாக.

“இல்ல.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு..!!”

“ப்ச்.. அதான் விடுன்னு சொல்றேன்ல.. விடு..!!”

என்று அசோக் எரிச்சலாக சொல்ல, ப்ரியா அமைதியானாள். இப்போது அசோக் ஏதோ நினைவுக்கு வந்தவனாய், தன் குரலின் இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு இதமாக கேட்டான்.

“சாப்டியா..??”

“ம்ம்.. சாப்டேன்..!!”

“சரி.. ஃபோனை வச்சுட்டு போய் தூங்கு.. போ..!!”

“எனக்கு தூக்கம் வரலை..!!”

“ம்ம்.. என்ன பண்ணலாம்னு சொல்ற இப்போ..??”

“கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா..??”

“என்ன பேசுறது..??”

“சும்மா.. ஏதாச்சும்..!!”

“ஹ்ம்ம்ம்.. சரி.. பேசு..!!”

“நல்லா தூங்கிட்டு இருந்தியோ.. ஃபோன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டனா..??”

“இல்ல இல்ல.. இன்னும் தூங்கல.. மூவி பாத்துட்டு இருந்தேன்..!!”

“ஓ.. என்ன மூவி..??”

“வுமன் இன் ப்ளாக்னு ஒரு ஹாலிவுட் மூவி..!!”

“யார் நடிச்சது..??”

“ஆக்டர்ஸ் பேர்லாம் தெரியலை..!!”

“ஹ்ம்ம்.. அது ஏன் அப்படி டைட்டில் வச்சிருக்காங்க.. வுமன் இன் ப்ளாக்னு..??”

“ம்ம்ம்..?? படத்துல.. உன்னை மாதிரியே அழகான ஒரு பொண்ணு.. ப்ளாக் ட்ரஸ் போட்டுக்கிட்டு அப்பப்போ வந்துட்டு போவா..!!” சற்றுமுன் அவளை பேய் என்றதை இப்போது அசோக் வேறுவிதமாக சொன்னான்.

“ஓ..!! அதெதுக்கு அப்பப்போ வந்துட்டு போறா.. அடிக்கடி வர வேண்டியதுதான..??” அது புரியாமல் ப்ரியாவோ அப்பாவியாக கேட்டாள்.

“அவ அப்படித்தான்..!!”

அசோக் சொல்லிவிட்டு மனதுக்குள் சிரித்தான். லூசு என்று திட்டினான்.. அதுவும் மனதுக்குள்தான்..!! அப்புறம் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வெறுப்பு அகன்று நட்பு திரும்பியவர்களாய்.. உறக்கம் மறந்து உள்ளம் மலர்ந்தவர்களாய்..!!

இரவு நெடுநேரம் அந்த மாதிரி பேசிக்கொண்டிருந்ததால்.. அன்று நடந்த சண்டையின் காரணமாய் அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த இறுக்கம்.. அடுத்த நாள் அவர்கள் சந்திக்கையில் வெகுவாக குறைந்திருந்தது..!! இயல்பு நிலை ஓரளவிற்கு திரும்பியிருந்தது..!!

அன்று காலை சில்க்போர்ட் சிக்னலில் இருவரும் எதிரெதிரே நின்றுகொண்டிருந்தார்கள்.. அசோக் தனது பைக்கிலும்.. ப்ரியா தனது ஸ்கூட்டியிலும்..!! தூரத்தில் இருந்தே ப்ரியா அசோக்கை கவனித்துவிட்டாள். ஆனால் அசோக் இவளை கவனிக்கவில்லை. முதலில் அசோக்கிற்கு க்ரீன் சிக்னல் விழுந்து, அவன் ரைட் டர்ன் எடுத்து எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் பைக்கை செலுத்தினான். விரைவிலேயே ப்ரியாவிற்கும் சிக்னல் விழ, அவள் அவசரமாய் லெஃப்ட் டர்ன் எடுத்து ஸ்கூட்டியை விரட்டினாள்.

மிதமான வேகத்தில் பைக்கை செலுத்திக் கொண்டிருந்த அசோக், திடீரென தனக்கு பக்கவாட்டில் ‘கீங்.. கீங்..’ என்று அந்த ஹார்ன் சத்தம் கேட்டதும் தலையை திருப்பி பார்த்தான். அசோக்கின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஸ்கூட்டியை செலுத்திக்கொண்டிருந்த ப்ரியா, ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு இவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். ஆச்சரியமான அசோக்கும் இப்போது பதிலுக்கு அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவளிடம் ஏதோ பேசுவதற்காக வாயெடுத்தான். ஆனால் அதற்குள் ப்ரியா..

தனது ஸ்கூட்டியின் ஆக்சிலரேட்டரை சரக்கென முறுக்கி, வண்டியை சாலையில் சீறிப்பாய விட்டாள். அசோக்கை தாண்டி கொஞ்ச தூரம் சென்று, அவர்களுக்கிடையே சில மீட்டர்கள் இடைவெளி வந்ததும், தனது வலது கையை நீட்டி, அவளுடைய கட்டை விரலை கவிழ்த்து இவனுக்கு காட்டினாள். அசோக்கிற்கு சிரிப்பு வந்தது. உடனடியாய் அவனுக்குள்ளும் ஒருவித குழந்தைத்தனமான ஈகோ வந்தது. ‘என்கிட்டயா உன் வேகத்தை காட்டுற.. இருடி.. இதோ வர்றேன்..’ என்று மனதுக்குள் நினைத்தவனாய், தனது பைக்கின் ஆக்சிலரேட்டரை பற்றி திருகினான். ஸ்பீடா மீட்டர் முள் சர்ரென க்ளாக்வைஸில் வட்டம் அடித்து மேலே செல்ல, அவனுடைய பைக் ஜிவ்வென்று முன்னோக்கி பாய்ந்தது.. ப்ரியாவின் ஸ்கூட்டியை மெல்ல மெல்ல நெருங்கியது..!!

அசோக்கின் பாய்ச்சலை ரியர்வ்யூ மிரரில் கவனித்து புன்னகைத்தாள் ப்ரியா. அவளும் அந்த போட்டியை விட மனம் இல்லாதவளாய்.. உச்சபட்ச வேகத்தில் தனது வண்டியை செலுத்தினாள்..!! ஆனால்.. அசோக்கின் வேகம் சற்று கூடுதலாய் இருக்க.. இருவருக்கும் இடையிலான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வந்தது..!! இப்போது இரண்டு வண்டிகளுமே ஒரே நேர்க்கோட்டில் வந்தன.. காற்றை கிழித்தவாறு விர்ரென சீறிப்பாய்ந்தன.. சாலையில் சென்ற வாகனங்களை புயல்வேகத்தில் கடந்து பறந்தன..!! ப்ரியாவை கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து சென்று முன்னேறிய அசோக், ‘ஹேய்…!!!’ என்று முஷ்டியை மடக்கி குழந்தைத்தனமாய் குதுகலித்தான்..!!

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு.. அவர்கள் இருவரும் தங்களது சிறுபிள்ளைத்தனமான ஈகோவை தார்ச்சாலையில் ஓடவிட்டு போட்டியிட்டுக்கொண்டார்கள்..!! இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் முந்துவதும்.. முந்தியதுமே கூக்குரல் இடுவதும்.. அடுத்து வருகிற சிக்னலில் சிக்கி ஒன்றிணைவதும்.. பிறகு சிக்னல் விழுந்ததும் சீறிப் பாய்வதுமாக..!! அந்த மாதிரி ரேஸ் விட்டுக்கொண்டே ஆபீஸ் வந்தடைந்தார்கள்..!!

ஆபீஸ் வளாகத்தை நெருங்கியும் கூட இருவரும் வேகத்தை குறைக்கவில்லை..!! வண்டியில் பறந்து கொண்டே.. இருவரும் கழுத்தில் தொங்கிய ஐடி கார்டை உயர்த்தி காட்ட.. கேட் அவசரமாய் திறந்து கொண்டது..!! இருவருக்கும் பொதுவாய் செக்யூரிட்டி அடித்த சல்யூட்டை கண்டுகொள்ளாமலேயே.. வளாகத்துக்கு உட்புறமான சிமென்ட் சாலையில் ஒன்றாக சீறிப் பாய்ந்தார்கள்..!! பார்க்கிங் ஏரியாவை அடைந்து.. சடன் ப்ரேக் அடித்து.. சரக் சரக்கென.. அடுத்தடுத்து வண்டியை நிறுத்தினார்கள்.. ஹெல்மட் கழற்றி புன்னகைத்தார்கள்.. குறும்பு கொப்பளிக்கும் விழிகளால் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்..!!

“இடியட்..!!” ப்ரியா இதழில் கசிந்த சிரிப்புடனே சொன்னாள்.

“ஸ்டுபிட்..!!” அசோக் உதட்டை பிதுக்கியவாறு கேலியாக சொன்னான்.

அதன்பிறகு ஒரு பத்து நிமிடங்கள் கழித்து.. அவர்கள் டீம் உறுப்பினர்கள் கேஃப்டீரியாவில் காலை உணவிற்காக ஒன்றாக குழுமியிருந்தார்கள். நேத்ரா மட்டும் மிஸ்ஸிங்..!! அனைவரும் ஆளுக்கொரு பண்டத்தை வாங்கி, அதை அவ்வப்போது ஸ்பூனால் விண்டு வாயில் போட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்..!! ப்ரியா வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவதால் எதுவும் தனியாக வாங்கிக்கொள்ளவில்லை.. அடுத்தவர்கள் தட்டில் இருப்பதை அவ்வப்போது எடுத்து கொறித்துக் கொண்டாள்.. அசோக் ஒரு ஜூஸ் மட்டும் வாங்கி உறிஞ்சிக் கொண்டிருந்தான்..!!

அவர்கள் கம்பனியில் ஆண்டுக்கு ஒரு முறை ஆனுவல் டே கொண்டாடுவார்கள்..!! ஆபீஸில் அன்று முழுவதும் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள்..!! ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம் என்று கம்பனியே புதுச்சாயம் பூசிக்கொள்ளும்..!! வருடம் முழுதும் வேலை வேலை என்று திரிபவர்களுக்கு.. அந்த ஒருநாள் மிகவும் இளைப்பாறுதலாய் இருக்கும்..!! அந்த ஆனுவல் டே அடுத்த வாரம் வருகிறது.. அதைப்பற்றித்தான் அவர்கள் இப்போது பேசிக்கொண்டிருந்தார்கள்..!! அசோக் ஹரியிடம் கேட்டான்..

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments