ஆண்மை தவறேல் – பகுதி 2

அசோக் அறையை விட்டு வெளியே வந்தான். அறைக்கு வெளியில் இருந்த வராண்டாவிலும் சரி.. ஹாஸ்டலின் கீழ்த்தளத்திலும் சரி.. கல்லூரிக்கு செல்லும் சாலையிலும் சரி.. எக்ஸாம் ஹாலுக்கு வெளியேயும் சரி.. அவனுடன் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எக்கச்சக்கமாய் அவனுடைய கண்களில் தென்பட்டார்கள்..!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

‘சாகப்போற நேரத்தில் சங்கரா சங்கரா..’ என்பது மாதிரி, கடைசி நேரத்தில் புத்தகத்துடன் முட்டிக்கொண்டு சிலர்..!! ‘ஏய் நீ அதை படிக்கலையா.. நான் படிச்சுட்டேன்பா.. இன்னைக்கு அந்த கொஸ்டின் கண்டிப்பா கேப்பானுக பாரு..’ என்று அருகில் இருப்பவர்களுக்கு கிலி கிளப்பிக்கொண்டு சிலர்..!! ‘ஆல் தி பெஸ்ட் டி.. நல்லாப் பண்ணு..’ என்று கைகள் குலுக்கி வாழ்த்து தெரிவித்தவாறு சிலர்..!!

ஆனால் அவர்கள் யாருமே அசோக்கை கண்டு கொள்ளவில்லை. அசோக்கும் யாரையுமே ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஒரு கையில் கால்குலேட்டரும்.. இன்னொரு கையில் ஸ்கேல், பென்சில், பேனாவும்.. மனதிலோ படித்ததை எல்லாம் அசை போட்டபடியும்.. தலையை குனிந்தவாறே அவர்களுக்கு இடையில் புகுந்து நடந்து சென்றான்.

எக்ஸாம் ஹாலுக்குள் நுழைந்ததுமே அசோக்குடைய கண்கள், அவசரமாய் அவளை தேடின. தேடிப்பார்த்த கண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் இன்னும் வந்திருக்கவில்லை..!! சற்றே சலிப்பாக அசோக் அவனுடைய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

பத்து மணி ஆனதும் வெளியே பெல் அடித்தது. உடனே ஹால் சூப்பர்வைசர் வினாத்தாள்களை எல்லோருக்கும் வழங்க ஆரம்பித்தார். அவளையோ இன்னும் ஆளைக்காணோம்..!! ‘ஏன்னா ஆயிற்று அவளுக்கு.. ஏன் இன்னும் வரவில்லை..?’ அசோக்கை இப்போது ஒருவித கவலையும், பதற்றமும் தொற்றிக் கொண்டது. அந்தப் பதற்றத்துடனே வினாத்தாளை வாங்கி மேலோட்டமாக மேய்ந்தான். ‘எல்லாம் எளிதான வினாக்கள்தான்..!!’

அவன் மனது அவ்வாறு நிம்மதி அடைந்து கொண்டிருக்கும்போதுதான், எக்ஸாம் ஹாலுக்குள் புயல் வீசியது மாதிரி அவள் நுழைந்தாள். காற்றில் பறக்கும் கூந்தலும், துப்பட்டாவுமாய்.. கண்ணைப் பறிக்கும் அழகும், வடிவமுமாய்..!! அவள் வந்ததுமே அந்த அறையில் ஒரு புதுவித நறுமணம் பரவ ஆரம்பித்தது. விடைத்தாள் பார்த்து கவிழ்ந்திருந்த அனைவருமே, விழிகள் சுழற்றி அவளை பார்த்தார்கள். அவள் பெயர் நந்தினி..!!! கல்லூரியில் பலருடைய தூக்கம் கேட்டுப் போனதற்கு முழு முதற் காரணகர்த்தா..!!

தாமதமாக வந்ததற்கு ஹால் சூப்பர்வைசரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டவள், விடைத்தாளையும், வினாத்தாளையும் பெற்றுக் கொண்டு, ‘டக்.. டக்.. டக்..’ என ஹைஹீல்ஸ் ஒலி கிளப்ப, தனது இடத்தை நோக்கி நடந்தாள். ஆண்கள் அனைவரும் தங்களை கடந்து செல்லும் அவளை ஏக்கமாக ஏறிட்டு பார்த்தார்கள். தூரத்தில் அமர்ந்திருந்த அசோக்கும் தன்னை நோக்கி வரும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

முகத்தில் ஒருவித கவர்ச்சிப் புன்னகையுடனே நடந்து வந்தவள்.. அசோக் அமர்ந்திருந்ததற்கு அருகில் இருந்த வரிசையில்.. அவனுக்கு சற்று முன்னதாகவே இருந்த அவளது இடத்தில்.. அமர்ந்து கொண்டாள்..!! அசோக் அதன்பிறகும் ‘ஆ’வென பிளந்த வாயுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சுடிதார் மறைக்காத அவளுடைய செழுமையான முதுகுப் பிரதேசத்தையும்.. அங்கே தவழும் அவளது கார்கூந்தலையும்..!! பார்வையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவனுக்கு தோன்றவே இல்லை.

“ஹலோ சார்.. எக்ஸாமுக்கு எதுவும் படிக்கலையா..?”

ஹால் சூப்பர்வைசர் அசோக்கின் முகத்துக்கு முன்பாக கையை நீட்டி அசைத்து, அவனது கவனத்தை கலைத்தவாறே கேட்டார். அசோக் உடனே அவசரமும், பதற்றமுமாய் சொன்னான்.

“இல்ல இல்ல.. படிச்சிருக்கேன்..!!”

“அப்படினா.. எழுதுங்க..!! எங்கயோ பராக்கு பாத்துட்டு இருக்கீங்க..?”

“ஸா..ஸாரி..!!”

பரிதாபமாக சொன்ன அசோக், தலையை கவிழ்த்துக் கொண்டான். மனதெங்கும் நிறைந்திருந்த நந்தினியை வேண்டா வெறுப்பாக விரட்டிவிட்டு, வினாத்தாள் மீது பார்வையை வீசினான். ஸ்கேல் பென்சில் எடுத்து விடைத்தாளில் மார்ஜின் போட்டான்.

அத்தியாயம் 2

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டு, அசோக் மணிக்கட்டு திருப்பி நேரம் பார்த்தான். இன்னும் பத்து நிமிடங்கள் பாக்கி இருந்தது. மிச்சம் இருக்கிற நேரத்தில், எழுதிய விடைகளை ஒருமுறை சரி பார்க்கலாம் என்று எண்ணினான். அவ்வப்போது திரும்பி நந்தினியின் முதுகை வெறித்தவாறே, எழுதியவற்றை முதல் பக்கத்தில் இருந்து சரி பார்த்தான்.

நந்தினி திடீரென எழுந்து கொண்டாள். கட்டி வைத்திருந்த விடைத்தாளை ஹால் சூப்பர்வைசரிடம் நீட்டினாள். ஹாலுடைய எக்ஸிட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அதை கவனித்த அசோக் இப்போது பரபரப்பானான். அவசரமாய் விடைத்தாள்களை அள்ளி.. நூலால் கட்டி.. சூப்பர்வைசரிடம் ஒப்படைத்துவிட்டு, நந்தினியின் பின்னால் ஓடினான். ஹாலில் இருந்து வெளிப்பட்டதுமே,

“நந்தினி..” என்று அழைத்தான். திரும்பி பார்த்த நந்தினி,

“ஹாய் அசோக்..” என்று எளிறுகள் தெரியுமாறு அழகாக சிரித்தாள்.

“எக்ஸாம் நல்லா பண்ணுனியா..?”

“ம்ம்.. ஏதோ பரவால..!! நீ எப்படி பண்ணுன..?”

“ம்ம்.. நல்லா பண்ணிருக்கேன்..!!”

“ஹாஹா.. உன்கிட்ட போய் கேட்குறேன் பாரு.. நீ நல்லா பண்ணலைன்னாத்தான் ஆச்சரியம்..!! அப்புறம்.. ஊருக்கு என்னைக்கு கெளம்புற..?”

“இன்னைக்கேதான்.. அதான் எக்ஸாம்லாம் முடிஞ்சதுல்ல..?”

“இல்லப்பா.. பாய்ஸ்லாம் நாலஞ்சு நாள் இங்கயே டேரா போட்டு.. நல்லா என்ஜாய் பண்ணிட்டு.. அப்புறமா ஊருக்கு போற மாதிரி ப்ளான் பண்ணிருக்காங்க.. அதான் கேட்டேன்..!!”

“ஓ..!!”

“ஓ’வா..? உனக்கு தெரியாதா..?”

“ம்ஹூம்.. தெரியாது..!! நா..நான் இன்னைக்கே கெளம்புறேன்..!!” அசோக் ஒருமாதிரி பரிதாப குரலில் சொன்னான்.

“ம்ம்ம்.. ஓகே அசோக்..!! ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் கெரியர்.. ஸீ யூ லேட்டர்..!!” புன்னகையுடன் சொன்னவாறு நகர முயன்ற நந்தினியை, அசோக் அவசரமாக தடுத்தான்.

“நந்தினி நந்தினி.. ஒரு நிமிஷம்..!!”

“ம்ம்..?”

“உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” அசோக் தயக்கமாக சொல்ல,

“எ..என்ன பேசணும்..?” நந்தினியின் முகத்தில் இப்போது குழப்ப ரேகைகள்.

“கேண்டீன் போயிடலாமா..?”

“இ..இல்ல அசோக்.. இப்போ எனக்கு டைம் இல்ல..!! என்ன சொல்லனும்னு இங்கயே கொஞ்சம் குயிக்கா சொல்லிடேன்..!!”

“இங்க வேணாம் நந்தினி.. கேண்டீன் போயிடலாம்.. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்..!!”

“ப்ச்.. டைம் இல்ல அசோக்.. நான் போய் திங்க்ஸ்லாம் பேக் பண்ணனும்.. ஊருக்கு கெளம்பனும்..!!”

“ப்ளீஸ் நந்தினி..!! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

அசோக் வெட்கம் இல்லாமல் கெஞ்ச, நந்தினி அவஸ்தையாய் நெளிந்தாள். ‘ப்ச்..’ என்று சலிப்படைந்தாள். அப்புறம் சற்றே கண்டிப்பான குரலில் சொன்னாள்.

“ஓகே.. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்தான்.. சரியா..?”

“ம்ம்ம்.. சரி நந்தினி.. தேங்க்ஸ்..!!”

எக்ஸாம் ஹாலில் இருந்து நடந்தால், இரண்டே நிமிடங்களில் காலேஜ் கேண்டீன் வந்துவிடும். கேண்டீன் சாப்பாடு மஹாமட்டமாக இருக்கும். அதனால் கல்லூரி நாட்களிலேயே காத்தாடும். இப்போது எக்ஸாம் நேரம் வேறு அல்லவா..? டேபிள்களில் ஈ, கொசுவை தவிர வேறெந்த பிராணியையும் காணோம். உள்ளே நுழைந்ததும்,

“என்ன சாப்பிடுற நந்தினி..?” கேட்டான் அசோக்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் அசோக்.. நீ மேட்டரை சொல்லு..!!”

“இல்ல இல்ல.. நீ ஏதாவது சாப்பிடனும்.. ப்ளீஸ்.. எனக்காக..!!”

“ப்ச்..!! சரி.. நீ என்ன சாப்பிடுறியோ அதுவே எனக்கும் ஆர்டர் பண்ணு..!!”

“ஜூஸ் சாப்பிடலாமா..? குக்கூ மில்க்ஷேக்..?? ம்ம்..?? ஓகேவா..?”

“ம்ம்.. ஓகே..!!”

நந்தினி சொல்ல அசோக் உற்சாகமானான். கவுன்ட்டருக்கு சென்று இரண்டு மில்க் ஷேக்குகள் ஆர்டர் செய்து வந்தான். அதுவரை நந்தினி பொறுமை இல்லாமல் காத்திருந்தாள். அவன் திரும்ப வந்து அமர்ந்ததுமே ஆரம்பித்தாள்.

“ம்ம்.. என்ன மேட்டர்னு சீக்கிரம் சொல்லு அசோக்…”

“அ..அது.. அது..”

“ம்ம்ம்..??”

“வே..வேற ஒண்ணுல்ல நந்தினி.. அந்த மேட்டர்தான்..”

“எந்த மேட்டர்..??”

“அதான்.. போ..போன வாரம் உன்கிட்ட சொன்னனே..? எ..என் மனசுல இருக்குறது..”

அசோக் தயங்கி தயங்கி சொல்லி முடிக்க, நந்தினி ஓரிரு வினாடிகள் அவனையே ஒருமாதிரி நம்ப முடியாமல் பார்த்தாள். அப்புறம் ‘ப்ச்..’ என்றவாறு, இமைகளை மெல்ல மூடி, இடதும் வலதுமாய் சலிப்பாக தலையசைத்தாள். நிமிர்ந்து அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவள், சற்றே எரிச்சலான குரலில் சொன்னாள்.

“ஹே.. கமான் அசோக்.. நான்தான் அன்னைக்கே என் முடிவை சொல்லிட்டனே.. இன்னுமா நீ உன் மனசை மாத்திக்கலை..?”

“இல்ல நந்தினி.. ஒரு வாரம் கழிச்சு சொல்றேன்னு சொன்ன..?”

“ஒரு வாரம் கழிச்சு சொல்லு’ன்னு சொன்னது நீ..!! நான் அன்னைக்கே எல்லாம் தெளிவாத்தான் சொன்னேன்..!!”

“சரி.. இந்த ஒரு வாரம் அதைப் பத்தி நீ எதுவும் யோசிக்கலையா..?”

“ப்ச்.. இதுல யோசிக்கிறதுக்குலாம் எதுவும் இல்ல அசோக்.. என் முடிவு எப்போவும் மாறாது.. அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்..!! எனக்கு உன் மேல லவ் இல்லை.. இல்லை.. இல்லை..!!”

நந்தினி முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு சொன்னாள். அசோக்கிற்கு இப்போது அவனுடைய இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும், ஒரு வித வேதனை உணர்வு பரவுவதை தெளிவாக உணர முடிந்தது. அவனுடைய முகமும் இப்போது களையிழந்து வாடிப்போனது. ரொம்பவே பரிதாபமான குரலில் கேட்டான்.

“ஏன் நந்தினி.. உனக்கு என்னை புடிக்கலையா..?”

“ஆமாம்.. புடிக்கலை..!! போதுமா.. ஹேப்பி நவ்..?? கெளம்பட்டுமா நான்..?? ம்ம்..??”

நந்தினி முகத்தில் அறைந்த மாதிரி சொன்னாள். சேரில் இருந்து எழுந்து கொள்ள முயன்றாள். அசோக் எழவில்லை. அப்படியே தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தவன், ஒருவித ஏக்கமான குரலில் கேட்டான்.

“ஏ..ஏன்..??”

“என்ன ஏன்..?” நந்தினி எரிச்சலாக அசோக்கை முறைத்தாள்.

“ஏன் என்னை புடிக்கலை..?” அசோக் பாவமாக கேட்க,

“உஷ்ஷ்ஷ்.. ப்பா..!!!” என்று நந்தினி இப்போது அவஸ்தையாக உஷ்ண மூச்சு விட்டாள்.

“சொல்லு நந்தினி.. ஏன் என்னை புடிக்கலை..?”

“புடிக்கலைன்னு சொன்னா விட மாட்டியா..? ஏன் எதுக்குன்னு காரணம்லாம் சொல்லனுமா..?”

“ஆமாம்..”

“என்னால காரணம்லாம் சொல்ல முடியாது.. புடிக்கலை.. அவ்ளோதான்..!!”

“ப்ளீஸ் நந்தினி.. நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன்.. மனசுல இருக்குற காதல் உண்மையா இருந்தா, அதுவே உன்னை என்கூட சேர்த்து வைக்கும்னு நம்புனேன்..!! என் காதலை நீ வேணான்னு சொல்றதே எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு.. ஆனா.. எதுக்காக என்னை ரிஜக்ட் பண்றன்னு கூட தெரிஞ்சுக்கலைன்னா.. எனக்கு தலையே வெடிச்சுடும்..!!”

“ஓஹோ..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?”

“ஆ..ஆமாம்..”

“சரி.. என்னவா இருக்கும்னு நீயே கொஞ்சம் யோசிச்சு பாரேன்..”

“எனக்கும் அதுதான் புரியலை.. என்னை ஏன் உனக்கு புடிக்கலை..?? எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன்.. தேவையில்லாத எந்த பிரச்னைக்கும் போகமாட்டேன்..!! நல்லா படிக்கிற பையன்.. உனக்கே தெரியும்ல.. நாந்தான யுனிவர்சிட்டி டாப்பர்..?”

“ம்ம்ம்.. தெரியும்..”

“அப்புறம் என்ன..?? நா..நான்.. நான் அழகா இல்லையா..?? நான் என் அம்மா மாதிரின்னு அப்பா அடிக்கடி சொல்வாரு.. என் அம்மா எவ்வளவு அழகுன்னு உனக்கு தெரியுமா நந்தினி..??”

“ஹ்ஹ.. உன் அழகுக்கு என்ன கொறைச்சல்..? ஐஸ்வர்யாராய்க்கு இருக்குற ஒரே காம்படிஷன் நீதான்..” நந்தினியின் நக்கலை கூட புரிந்து கொள்ளாமல் அசோக் தொடர்ந்து பேசினான்.

“வேற என்ன நந்தினி..? பணமா..?? என் அப்பாவுக்கு நான் ஒரே புள்ளை நந்தினி.. எங்களுக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு.. நான்தான் ஒரே வாரிசு தெரியுமா..? என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா.. நீ எந்த குறையும் இல்லாம நல்லா வசதியா வாழலாம்..!!”

“ப்ச்.. அசோக்.. நானும் ஒன்னும்.. இல்லாத வீட்டு பொண்ணு இல்ல..!! கார், பங்களான்னு எங்க வசதிக்கும் எந்த குறைச்சல் இல்ல.. அதுலாம் நான் பெரிய மேட்டரா நெனைக்கலை..!!”

“அப்புறம் என்ன நந்தினி..? வேற என்னதான் காரணம்..??”

“சொன்னா உனக்கு புரியாது அசோக்.. விடு..”

“பரவால.. சொல்லு..”

“இங்க பாரு அசோக்.. நான் சொல்லிருவேன்.. அப்புறம் ஏண்டா கேட்டோம்னு உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்..”

“ஹ்ஹ.. என் மேல லவ்வே இல்லைன்னு சொல்லிட்ட..? அதைவிட என்ன கஷ்டம் இருந்திட போகுது..? சும்மா சொல்லு..!!”

“ஓ.. காட்..!!” நந்தினி அவஸ்தையாக நெளிய,

“ப்ளீஸ் நந்தினி.. சொல்லு..” அசோக் அவளை கட்டாயப் படுத்தினான்.

“ஆஆஹ்.. அதை எப்படி சொல்றது..? எ..எனக்கு.. எனக்கு உன்னை பாத்தா அந்த லவ் ஃபீலிங்கே வரலை..”

“அதான் ஏன்னு கேக்குறேன்..?”

“யூ டோன்ட் லுக் மேன்லி..!! ஓகே..?”

நந்தினி பட்டென சொல்லி விட, அசோக் அதிர்ந்து போனான். நம்பமுடியாமல் நந்தினியின் முகத்தையே திகைப்பாய் பார்த்தான். அவனுடைய வாய் குழறியது.

“ந..நந்தினி..”

“உன் ஃபேஸ்.. உன் ஃபிஸிக்.. உன் நடை.. உன் பேச்சு.. உன்னோட சாஃப்ட் நேச்சர்.. எல்லாத்துலயுமே ஒரு பொம்பளைத்தனம்தான் தெரியுது.. ஒரு மேன்லினஸே இல்ல..!! உ..உன்னைப் பாத்தா எந்தப் பொண்ணுக்குமே லவ் வராது அசோக்..!!”

நந்தினி படபடவென சொல்ல, அசோக் அப்படியே இடிந்து போனான். இப்போது அவனுடைய கண்களில் கொஞ்சம், கொஞ்சமாய் நீர் தேங்க ஆரம்பித்தது. நந்தினியின் முகத்தையே ஏக்கமாக பார்த்தவன், பரிதாபமாக கேட்டான்.

“அ..அப்போ நான் ஆம்பளையே இல்லைன்னு சொல்றியா நந்தினி..?”

“ப்ச்.. நான் அப்படி சொல்லலை.. அந்த மாதிரி நீ நடந்துக்கலைன்னுதான் சொல்றேன்..!!”

நந்தினி வெறுப்பாக சொல்ல, அசோக்கின் கண்களில் இருந்து பொலபொலவென நீர் கொட்ட ஆரம்பித்தது. துடிதுடித்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கண்ணீரை பார்த்ததும், நந்தினி இப்போது சற்று பதறிப் போனாள். தன்னுடைய குரலில் மென்மையை குழைத்துக் கொண்டு சொன்னாள்.

“ஹேய்.. அசோக்.. நான் உன்னை ஹர்ட் பண்றதுக்காக சொல்லலை..!! ப்ளீஸ்.. அண்டர்ஸ்டாண்ட் மீ..!! ப்ச்.. இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.. நீதான் கேட்கலை..!! ப்ளீஸ் அசோக்.. அழாத.. நான் சொன்னது உன்னை ஹர்ட் பண்ணிருந்தா.. ஐம் ரியல்லி வெரி ஸாரி..!!”

“ம்ம்ம்… அதுலாம் ஒண்ணுல்ல..” மூக்கை உறிஞ்சிக்கொண்ட அசோக், புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டான்.

“ஸா..ஸாரி அசோக்..”

“ப..பரவால நந்தினி.. நீ எதுக்கு ஸாரி கேக்குற..? நீ சொன்னதுல எந்த தப்பும் இல்ல..!! நீ ஒன்னும் அதுக்காக ஃபீல் பண்ணாத..!! சரி.. உனக்கு டைமாச்சு.. நீ கெளம்பு..!!”

“அ..அசோக்..”

“கெளம்பு நந்தினி..!! ஐ விஷ் யூ ஆல் சக்சஸ் இன் யுவர் லைஃப்..!! பை..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments